சிவானந்தலஹரி-18 உன் கருணை நிறைந்த பார்வையினால் என்னைக் காத்தருள்வாய்!!
த்வமேகோ லோகாநாம் பரமப²லதோ³ தி³வ்யபத³வீம்
வஹந்தஸ்த்வன்மூலாம் புனரபி ப⁴ஜந்தே ஹரிமுகா:² ।
கியத்³வா தா³க்ஷிண்யம் தவ சிவ மதா³சா ச கியதீ
கதா³ வா மத்³ரக்ஷாம் வஹஸி கருணாபூரிதத்³ருʼசா ॥
ன்னு ஸ்லோகம். என்ன அர்த்தம்னா பரமேஸ்வரா! த்வமேகோ லோகாநாம் பரமப²லதோ³ – இந்த உலகத்துல எல்லாருக்கும் நீ ஒருவர் தான் பரமபலம்னா மோக்ஷம். அந்த மோக்ஷ பதத்தை உங்க ஒருத்தரால தான் கொடுக்க முடியும்.
ஆனா மத்த பலங்கள் எல்லாமும் நீங்க தான் கொடுக்கறேள் த்வன்மூலாம் – உன்னுடைய அனுக்ரஹத்துனால தி³வ்யபத³வீம் வஹந்த: – தெய்வ பதவிகளை பெற்றவர். விஷ்ணு முதலியவர்கள் ஹரிமுகா:² – விஷ்ணு பதவி வரைக்கும் எல்லா பதவியையும் சிவன் கொடுத்தது தான்.
அந்த பதவி வரைக்கும் எல்லா பதவியில இருக்கிறவர்களும் புனரபி ப⁴ஜந்தே – மீண்டும் மீண்டும் உன்னை பஜித்து கொண்டிருகிறார்கள். அந்த பதவி நிலைச்சு இருக்கணும். இன்னும் மேல பதவி கிடைக்கணும்னு உயர்வை நாடி ஜனங்கள் உன்னை பஜிக்கறா. நீ கேட்டதெலாம் கொடுக்கற.
ஆசைக்கோர் அளவில்லைன்னு அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர்! – இந்த பூமிக்கே நீ ராஜான்னு சொன்னா,கடலுக்கு யார் ராஜா? நான் கடல் மேல் படை எடுக்கப் போறேம்பா அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பெரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்! –
குபேரனுடைய செல்வம் எல்லாம் உனக்கு கொடுப்பேன்னு சொன்னா கூட ஆனா இரும்பை தங்கமாக்கற ரசவாத வித்தை என்ன?அதை கத்துக்கறேன்பாளாம். அப்படி மனசோட ஆசைக்கு அளவே கிடையாது. கியத்³வா தா³க்ஷிண்யம் தவ சிவ மதா³சா ச கியதீ –
நீ தாட்சண்யம் பண்ற. எனக்கும் என்னுடைய ஆசை அளவில்லாம இருக்கு. உன்னுடைய தாட்சண்யமும் அளவில்லாம இருக்கு. அதனால கேட்கற பதவியெல்லாம் கொடுக்கற. சுகங்கள் எல்லாம் கொடுக்கற. ஆனா நிஜமா என்கிட்ட தாட்சண்யம் பண்றதா இருந்தா கதா³ வா மத்³ரக்ஷாம் வஹஸி கருணாபூரிதத்³ருʼசா – உன்னுடைய கருணை நிறைந்த கடாக்ஷத்தை என் மேல காண்பிச்சு என்னை எப்ப நீங்க காப்பாத்தப் போறேள்? ன்னு கேட்கறார்.
ஆடினது போதுமென்று ஓய்வளிக்க உன்னையல்லால் வேறே கதியில்லை அம்மா. உலகெலாம் ஈன்ற அன்னைன்னு கல்யாணியில பாபநாசம் சிவன் பாடல் இருக்கு. அந்த மாதிரி பதவிகள் எல்லாம் இருக்கு. சுகமெல்லாம் இருக்கு. ஆனா எல்லாம் ஒய்ஞ்ச நிலைமை சிவனேன்னு இருக்கறது. அந்த நிலைமையை கொடுக்கக் கூடியவர் பரமேஸ்வரன் த்வமேகோ லோகாநாம் பரமப²லதோ³ – அந்த உயர்ந்த பலனை உங்களால கொடுக்க முடியும். அது மோக்ஷம், ஞானம், ஜீவன் முக்தி. அந்த பலனை, ஞான வைராக்யத்தை எப்ப தரப் போறேன்னு ஒரு ஸ்லோகம். அந்த தாட்சண்யத்தை பண்ணுங்கோன்னு வேண்டிக்கறார்.
சிவனே! நீர் ஒருவர்தான் மாந்தர்களுக்கு நற்பயனை யளிக்கவல்லவர். அங்ஙனம் நின் மூலம் உயர்பதவிகளைப் பெற்ற விஷ்ணு முதலானோரும் மேன் மேலும் உன்னையே சேவிக்கின்றனர். உனது கருணை எத்தகையது? எனது ஆசையும் எத்தகையது என்று உன் கருணை நிறைந்த பார்வையினால் என்னைக் காத்தருள்வாய்?
விப்ரரூபா :
விஜ்ஞாநகலநா :
ஸர்வாபத் விநிவாரிணீ ;
ஸதோதிதா
========================================================================



Comments
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
அம்மா !
எல்லா உயிர்களிலும் சத்தாக இருக்கிறாய் ...
உணராதவர்கள் உயிர் வாழும் பிணங்கள் அன்றோ
தாவரங்களை , மரங்களை, செடி கொடிகளை, பறப்பன ,ஊர்வன , மிதப்பன இவையனைத்தையும் கேட்டேன் ...
வாழ்வது உன் அருளால் மட்டுமே என்றன ...
விலங்குகளையும் விடாமல் கேட்டேன் ... உன் சாரம் இன்றி வாசம் செய்ய மாட்டோம் என்றன
மனிதனை கேட்டேன் ...
வீரம் அனைத்தும் தனதே என்றான் ...
உயிர் வாழ்வது தனது கடமை என்றான் ...
சிரித்தேன் ...
ஆறறிவு ஏன் தந்தாய் எங்களுக்கே ?
ஐந்தறிவு , நான்கறிவு மூன்றறிவு இரண்டறிவு ஓர் அறிவு உள்ள உயிர்கள் இடத்தே பாடம் கற்றுக்கொள்ளவோ அம்மா ?
அன்னை சிரித்தாள் ..
தான் என்ற கர்வம் உள்ளவரை பருவம் மறையும் வரை என்னை அறிந்து கொள்ளான் என்றாள் நான்மாட கூடல் அழகி 🪷🪷🪷
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
அம்மா ...
ஞானம் ஓர் உருவம் எடுத்து வந்ததோ வேழம் என்றே பேர் கொண்டதோ ... !
பவழங்கள் அணி வகுத்து வந்ததோ !
உன் இதழ்கள் தனில் தஞ்சம் என்று புகுந்ததோ !
அன்னங்கள் அழகு நடை புரிந்தே
நீ அணியும் கால் கொலுசுவிடம் தோழமை கொண்டதோ ... !!
ஒளிர் விடும் உன் நக காந்தி உதிக்கும் சூரியனுக்கு ஒளி தந்து மகழ்ந்ததோ ..
காது வரை நீண்ட உன் கண்கள் நிலவுக்கு குளிமை கற்று தந்ததோ!
புத்தி தந்து ஞானம் தந்து கருணை தந்து காட்சியும் தந்தே
என்னை கடனாளி ஆக்கியது ஏனோ இன்று வரை புரிந்திலேன் 🙏