சிவானந்தலஹரி-20 -மனமாகிய குரங்கு !!
அடுத்த ஸ்லோகத்துல
ஸதா³ மோஹாடவ்யாம் சரதி யுவதீநாம் குசகி³ரௌ
நடத்யாசாசாகா²ஸ்வடதி ஜ²டிதி ஸ்வைரமபி⁴த: ।
கபாலின் பி⁴க்ஷோ மே ஹ்ருʼத³யகபிமத்யந்தசபலம்
த்³ருʼட⁴ம் ப⁴க்த்யா ப³த்³த்⁴வா சிவ ப⁴வத³தீ⁴னம் குரு விபோ⁴ ॥
சிவ – சிவனே விபோ – எங்கும் நிறைந்தவனே. ஸதா³ மோஹாடவ்யாம் சரதி – எப்பொழுதும் மோகம் என்ற, மதிமயக்கம் என்ற காட்டில் என்னுடைய மனமாகிய குரங்கு சரதி – திரியறது யுவதீநாம் குசகி³ரௌ நடதி – பெண்களுடைய ஸ்தனங்கள் என்ற மலைகள்ல நடனமாடறது.
ஆசாசாகா²ஸ்வடதி – ஆசைங்கிற கிளைகள்ல ஜ²டிதி ஸ்வைரமபி⁴த: – இஷ்டப்படி இங்கேயும் அங்கேயும் குதிக்கிறது. இப்படி இருக்கிற என் மனசுங்கிற குரங்கை, ஒரு குரங்கு பனைமரத்துல ஏறி கள்ளை குடிச்சிட்டு கீழ இறங்கிவரும்போது அதை ஒரு தேளும் கடிச்சிடுத்துன்னா என்னம்மா இருக்குமோ, அந்த மாதிரி நம்ம மனசு இருக்கு.
நம் மனசு ஏற்கனவே குரங்கு போல சஞ்சலமானது. அதுல காமமாகிய கள்ளையும் குடிச்சு க்ரோதமாகிய தேளும் கடிச்சா எப்படி இருக்குமோ அந்த மாதிரி நாம behave பண்ணிண்டு இருக்கோம். இந்த மனசை எப்படித் தான் மீட்கறது?
எப்படித் தான் பகவான் கிட்ட போறதுன்னா கபாலின் பி⁴க்ஷோ – ஒரு கபாலத்தை வெச்சிண்டிருக்கிற பிக்ஷு ரூபத்துல பகவான் வந்து தர்சனம் கொடுக்கிறார். நாம பகவான்கிட்ட போய் அது இது வேணும்னு பிச்சை கேட்கறோம். ஆனா அந்த பகவானே நம்ம கிட்ட பிக்ஷு ரூபத்துல வரும்போது என்ன பண்ணலாம்னா மே ஹ்ருʼத³யகபிமத்யந்தசபலம் – இப்படி ஓரேடியா சலிசிண்டி இருக்கற என்னுடைய மனமாகிய குரங்கை, உன்கிட்ட கொடுத்துடறே என்கிறார்.
பிக்ஷைகாரனுக்கு ஏதாவது கொடுக்கணும். இவர் சொல்றார். நீ வந்து அங்க இங்க பிக்ஷைக்கு போற. நீ ஒரு குரங்கையும் கூட்டிண்டு போனேன்னா இன்னும் யாராவது 2காசு கூடப் போடுவா. அதுனால த்³ருʼட⁴ம் ப⁴க்த்யா ப³த்³த்⁴வா – என் மனக்குரங்கை உன்கிட்ட கொடுக்கிறேன். நீ பக்திங்கிற கயிறாய் கொண்டு இதை நன்னா கட்டிபோட்டு வெச்சுக்கோ சிவ ப⁴வத³தீ⁴னம் குரு விபோ⁴ – உன்னுடைய அதீனமாக என்னுடைய மனசை ஆக்கிக்கொள் ன்னு ஒரு அழகான ஒரு பிரார்த்தனை.
மனசை பகவான் கிட்ட ஒப்படைச்சா தான் நாம இதுலேயிருந்து மீள முடியும்ங்கிறதுக்கு அழகான ஒரு ஸ்லோகம்.
முன்னமேயே இதை சொல்லியிருக்கேன். ஸ்வாமிகள் கிட்ட அவருடைய சமஸ்க்ருத வாத்யார் சுந்தர காண்ட ப்ரவசனத்தின் போது இந்த சிவானந்த லஹரி ஸ்லோகத்தை எங்கேயாவது பொருத்தமா சொல்லுன்னு கேட்டார். ஸ்வாமிகள் எங்கே சொன்னார்னா
ஹனுமார் சீதாதேவியை பார்த்து அவருக்கு நம்பிக்கை ஏற்படும்படியா பேசிண்டே வரார். அப்ப சீதாதேவி, “ராமலக்ஷ்மணா எப்படி இருப்பா. நீ அவாளை பார்த்திருக்கேன்னு சொல்றியே. அவாளோட அங்க அடையாளங்களை நீ சொல்லுன்னு கேட்கறா.அப்பா ஹனுமார் ஆரம்பிக்கறார்
रामः कमलपत्त्राक्ष: सर्वसत्त्वमनोहरः। रूपदाक्षिण्यसम्पन्नः प्रसूतो जनकात्मजे।।
ராம: கமல பத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மனோஹர: |
ரூப தாக்ஷிண்ய ஸம்பன்ன: ப்ரஸுதோ ஜனஹாத்மஜே ||
ராமர் தாமரைப் போன்ற கண்ணழகு படைத்தவர் ஸர்வ ஸத்வ மனோஹர: – எல்லா பிராணிகளுடைய மனதையும் அபகரிக்கக் கூடிய அவருடைய அந்த கண்ணழகுன்னு சொல்றார். இந்த இடத்துல ஸ்வாமிகள் சொல்வார் –
ஹனுமார் சீதாதேவி கிட்டசொல்றாராம். நாங்கள் எல்லாம் வானரா. எங்களை மனசுக்கு ஒப்பிடுவா. ஒரு க்ஷணம் கூட மனசு ஒரு இடத்துல நிக்காதவா. எங்களை எல்லாம் இந்தமாதிரி ராமகாரியத்துல ஈடுபடுத்தி இன்னிக்கு வந்து நான் உங்களை தர்சனம் பண்ணினேன்னா அந்த ராமனுடைய கண்ணழகுல மயங்கி அவன் பேச்சை கேட்டு நாங்க அவனுடைய காரியத்தை பண்றோம்’ னு அந்த இடத்துல இந்த சிவானந்த லஹரி ஸ்லோகத்தை சொல்லி ஆதீனம்ன்னு ராமர் எங்களையெல்லாம் அடிமை ஆக்கிண்ட்டார். அவருடைய கண்ணழகுனாலன்னு சொன்னாராம்.
ஸ்வாமிகளோட சமஸ்க்ருத பண்டிட் ரொம்ப அதை கொண்டாடினார்னு சொல்வார். “நான் வர்றவாகிட்ட எல்லாம் இதையொரு test மாதிரி பண்ணிண்டிருக்கேன். இவ்ளோ பொருத்தமா யாரும் சொன்னது இல்லை. சந்தோஷம்பா. உன்னோட வாத்யார்னு சொல்லிக்கறதுல நான் பெருமைபடறே” ன்னு அந்த சிரோன்மணி சொன்னாராம். இந்த ஸ்லோகத்தை இன்னிக்கு பார்த்தோம்.அடுத்த 21 வது ஸ்லோகம் நாளைக்கு பார்ப்போம்.
சிவனே! எங்கும் நிறைந்தவனே! எனது மனமெனும் குரங்கு மயக்கமெனும் பெருங்காட்டில் இடைவிடாது அலைகிறது. பருவ நங்கைகளது நகில்களாகிய மலையில் நடனமாடுகிறது. துராசைகளாகிய கிளைகளில் வேகமாக தாவித் திரிகிறது. நீர் கபாலத்தை கையிலேந்தி பிச்சை எடுப்பவர். ஆகவே அங்கு மிங்கும் ஓடும் எனது மனதாகிய குரங்கை, உன்னிடம் உள்ள பக்தி என்னும் கயிற்றைக் கொண்டு உறுதியாகக்கட்டி உனக்குட்பட்டதாக செய்து கொள்வாயாக. (வெறுமே மண்டையோட்டை நீட்டி பிச்சைக் கேளாமல் என் மனக் குரங்கை ஆட்டும் குரங்காட்டியாக இருப்பாயாக!)
Oh Siva , who holds a skull in Your hand , Oh Mendicant ! My mind , like a restless monkey , constantly roams in the dense forest of delusions , scaling the mountains of Young women's breasts , dancing among the branches of desires and wandering freely and swiftly in all directions . Please , firmly bind this fickle monkey of my heart with the rope of devotion and bring it under Your control , Oh all pervading One ! Oh Embodiment of auspiciousness !
LS :
அந்தர்முக ஸமாராத்யா ;
ஸ்துதிமதீ ,
மாநவதீ,
மங்கலாக்ருதி,
பராமோதா,
மனோமயீ
===========================================================



Comments