சிவானந்தலஹரி-24 கைலாசக் காட்சியினுடைய பெருமை.!!
24 வது ஸ்லோகமும் 25 வது ஸ்லோகமும் பார்ப்போம். அந்த 25 வது ஸ்லோகத்துல பிரதோஷ வேளையில ஸ்வாமி எப்படி தரிசனம் தருவாரோ அந்த காட்சியினுடைய வர்ணனை. இந்த 24 லுல கைலாசக் காட்சியினுடைய பெருமை.
கதா³ வா கைலாஸே கநகமணிஸௌதே⁴ ஸஹக³ணை-
ர்வஸந் ஶம்போ⁴ரக்³ரே ஸ்பு²டக⁴டிதமூர்தா⁴ஞ்ஜலிபுட: ।
விபோ⁴ ஸாம்ப³ ஸ்வாமிந் பரமஶிவ பாஹீதி நிக³த³ந்
விதா⁴த்ரூʼணாம் கல்பாந் க்ஷணமிவ விநேஷ்யாமி ஸுக²த: ॥ 24 ||
அப்படீன்னு ஒரு அழகான ஸ்லோகம்.
‘கதா³ வா கைலாஸே’ – எப்போது கைலாச பர்வதத்தில்… ‘கநகமணிஸௌதே⁴’ – கனகம்… தங்கமும், மணிகளும் இழைக்கப் பட்ட ஒரு உப்பரிகையில… ‘வஸந்’ – இருந்துகொண்டு… ‘ஸஹக³ணைஹி வஸந்’ – ப்ரமத கணங்கள்… பரமேசுவரனுடைய பூத கணங்களோடு இருந்துகொண்டு, பரமேசுவரனுக்கு முன்னாடி… ‘ஶம்போ⁴ரக்³ரே ஸ்பு²டக⁴டிதமூர்தா⁴ஞ்ஜலிபுட:’ – இரண்டு கைகளையும் தலைமேல கூப்பிண்டு…
‘விபோ⁴ ஸாம்ப³ ஸ்வாமிந் பரமஶிவ பாஹீதி நிக³த³ந்’ – ‘விபோ⁴’ங்கிற நாமாவளி சிவானந்தலஹரியில நிறைய வாட்டி வர்றது. ‘விபோ⁴’ன்னா எங்கும் நிறைந்தவர்னு அர்த்தம். ‘ஸாம்ப³’ன்னா அம்பிகையோடு கூடினவர்னு அர்த்தம்.
‘ஸ்வாமிந்’னா என்னுடைய தலைவரேன்னு அர்த்தம். ‘பரமஶிவ’ – அப்படீன்னா பரம மங்களங்களை பண்ணுபவரே… ‘பாஹீ’ – எங்களை காப்பாற்றும் என்று ‘நிக³த³ந்’ – என்று சொல்லிக் கொண்டு… ‘விதா⁴த்ரூʼணாம் கல்பாந்’ – விதா⁴தா ன்னா பிரம்மா. பிரம்மாவினுடைய கல்பங்கள், எத்தனையோ infinity காலம்னு சொல்லணும். அவ்வளவு காலத்தையும்… ‘க்ஷணமிவ விநேஷ்யாமி ஸுக²த:’ – இந்த மாதிரி கைலாசக் காட்சி கிடைச்சு, பகவானுடைய சன்னிதியில நின்னுண்டு… ‘விபோ⁴ ஸாம்ப³ ஸ்வாமிந் பரமஶிவ பாஹீதி’ அப்படீன்னு சொல்லிண்டிருந்தா, அப்படி கல்ப காலங்கள் போனாக் கூட தெரியாது. ஏன்னா பரமேசுவரன் காலகாலன். அவனுடைய சன்னிதியில காலம் போறதே தெரியாது.
இந்த ஸ்லோகத்தை படிக்கும் போது மஹாபெரியவா, அவருடைய கணங்களோட இருக்கும்போது அவா முன்னாடி போயி அவாளை தரிசனம் பண்ணா என்ன ஆனந்தமா இருக்குமோ, அந்த ஆனந்தம்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.
சில புண்ணிய சாலிகள் கைலாச யாத்திரை பண்ணி, அந்த பரிக்ரமா ன்னு சொல்லி கைலாசத்தை சுத்தி கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் distanceஅ, அந்த கைலாச மலையையே பிரதக்ஷணம் பண்ணி , அந்த கைலாச மலை அடிவாரத்துல. அடிவாரம்னா கொஞ்சம் தள்ளி, மானசரோவர்னு ஒரு ஏரி இருக்கு. அந்த ஏரியில ஸ்நானம் பண்ணி, அந்த கைலாச தரிசனம் பண்றா. அந்த காலை வேளையில சூரியன் கைலாசத்து மேல படும்போது தங்க மலை மாதிரி அது ஜ்வலிக்கறது. அந்த காட்சி ‘பொன்னார் மேனியன்’ ன்னு சொல்றா. அப்படி சில பாக்யசாலிகளுக்கு அந்த தரிசனமும் கிடைக்கறது. பக்தி இருந்தா அந்த கைலாசக் காட்சி இங்கும் கிடைக்கும். அந்த சிவ பக்தி நமக்கு வேணும்னு பெரியவாகிட்ட வேண்டிப்போம்.
எப்போது சிவகணங்ளோடு சேர்ந்து யான் சிரமேல் கைகூப்பி, பொன்னும் இரத்தினமும் நிறைந்த வெள்ளி மலை தனில் இன்பத்திற்கு காரணமான கல்லானை முன்னே நின்று, ஜகன்மாதாவுடன் கூடி எங்கும் நிறைந்து விளங்கும் இறைவா! என்னைக் காத்தருள்வீராக எனச் சொல்லியவாறு ப்ரும்ம கல்பமான நீண்டகாலத்தையும் நொடிப்பொழுது போல கடத்துவேனோ!
When will I dwell on Mount Kailasa , standing before Sambhu , in a mansion adorned with gold and precious gems , alongside Siva's attendants , with hands folded above my head? There in the presence of all pervading Bhagavan the One united with Parvati , the supreme source of auspiciousness , I will utter " O Siva , protect me . I will pass countless ages of Brahma's kalpa-s as if they were but a fleeting moment , filled with bliss .
Comments