சிவானந்தலஹரி-25 பிரதோஷ வேளையில ஸ்வாமி தரிசனம்!!
ஸ்தவைர்ப்³ரஹ்மாதீ³நாம் ஜயஜயவசோபி⁴ர்நியமிநாம்
க³ணாநாம் கேலீபி⁴ர்மத³கலமஹோக்ஷஸ்ய ககுதி³ ।
ஸ்தி²தம் நீலக்³ரீவம் த்ரிநயநமுமாஶ்லிஷ்டவபுஷம்
கதா³ த்வாம் பஶ்யேயம் கரத்⁴ருʼதம்ருʼக³ம் க²ண்ட³பரஶும் ॥ 25 ||
இது அந்த பிரதோஷ வேளையில ஸ்வாமி தரிசனம்.. ரிஷபாரூடராக .. ‘ உமாஶ்லிஷ்டவபுஷம்’ – உமா தேவியை அணைத்துக் கொண்டு… ‘மத³கலமஹோக்ஷஸ்ய ககுதி³’- கொழுத்து விளங்கும் காளையினுடைய திமில்… ‘ககுதி³’ன்னா திமில்…
அந்த திமில் மேல அமர்ந்திருக்கிறார்…’நீலக்³ரீவம் ‘ – கழுத்து நீலமா இருக்கு. அந்த பிரதோஷ வேளையில ஆலகால விஷத்தை பானம் பண்ணி உலகத்தை… மூவுலகத்தையும், வெளியிலையும், உள்ளும் இருக்கிற உலகங்களை எல்லாம் காப்பாற்றினதுதான் அந்த மஹா பிரதோஷத்துடைய பெருமை.
அதை நினைச்சு பகவான்கிட்ட எல்லாரும் நன்றியோடு ஸ்தோத்ரம் பண்ற அந்த வேளை. அந்த ‘கரத்⁴ருʼதம்ருʼக³ம் க²ண்ட³பரஶும்’ – கையில் மானும், பாதி வெட்டி இருக்கிற கோடாரி, ‘க²ண்ட³பரஶு’ இதையும் வெச்சிண்டிருக்கார். ‘ப்³ரஹ்மாதீ³நாம் ஸ்தவைஹி’ – பிரம்மா முதலிய தேவர்கள் எல்லாரும் அவரை ஸ்தோத்ரம் பண்றா…’நியமிநாம் ஜயஜயவசோபி⁴ஹி’ – நியமமா இருக்கக் கூடிய சிவ பக்தர்களான ரிஷிகள் ‘ஜய ஜய’ அப்படீன்னு அவரை கொண்டாடறா… ‘க³ணாநாம் கேலீபி⁴ஹி’ – ப்ரமத கணங்கள் பரமேசுவரன் முன்னாடி நடனம் ஆடறா… ‘ஹது நயநம் நீலக்³ரீவம் உமாஶ்லிஷ்டவபுஷம்’… ‘கதா³ பஶ்யேயம்’ – நான் எப்போதும் இந்தக் காட்சியை காண்பேன்னு சொல்றா. ஒவ்வொரு பிரதோஷத்துலயும் ஒவ்வொரு கோவில்லையும் நாம இந்த காட்சியை, பார்க்கும்படி மஹாபெரியவா பண்ணியிருக்கா. இது நம்முடைய உள்ளுக்குள்ளேயும் இந்த காட்சி எப்பொழுதும் கிடைக்கக் கூடிய அந்த பாக்யத்தை தரணும்.
பிரதோஷ வேளையில கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ‘சிவசங்கர ஸர்வாத்மன் ஸ்ரீமாதர் ஜகதம்பிகே’… ‘சிவசங்கர ஸர்வாத்மன் ஸ்ரீமாதர் ஜகதம்பிகே’ அப்படீன்னு ஜபிக்க சொல்வார். அது குடும்பத்துல ஆனந்தமும், குழந்தைகளுடைய கல்யாணமும், எல்லாம் நடக்கும்னு அவர் சொல்லி, நானே பார்த்திருக்கேன். என்னுடைய நண்பர்கள், உறவினர்கள்னு எல்லார் சுற்றத்துலயும் இந்த மாதிரி பார்வதி பரமேசுவராளை பிரதோஷ வேளையில பூஜை பண்றது அபார புண்யம் அப்படீங்கிறத நான் பார்த்திருக்கேன். நமக்கும் அந்த பார்வதி பரமேசுவராள்கிட்ட பக்தி வரணும்னு வேண்டிப்போம்.
LS : ஸ்ரீசிவா
சிவ - விச்வஸ்ய பேஷஜி சிவா - ருத்ரஸ்ய பேஷஜி
சிவசக்த்யைக்ய ரூபிணீ –
=======================================================================
Comments