சிவானந்தலஹரி-27 ஸாரூப்யம் , ‘ஸாமீப்யம்,‘ஸாலோக்யம்’ ஸாயுஜ்யம்’‘


சிவானந்த லஹரில அடுத்த இரண்டு ஸ்லோகங்கள் பார்ப்போம். 27வது ஸ்லோகம்.

கரஸ்தே² ஹேமாத்³ரௌ கி³ரிஶ நிகடஸ்தே² த⁴நபதௌ

க்³ருʼஹஸ்தே² ஸ்வர்பூ⁴ஜாऽமரஸுரபி⁴சிந்தாமணிக³ணே ।

ஶிரஸ்தே² ஶீதாம்ஶௌ சரணயுக³ளஸ்தே²ऽகி²லஶுபே⁴

கமர்த²ம் தா³ஸ்யேऽஹம் ப⁴வது ப⁴வத³ர்த²ம் மம மந: ॥ 27॥

பகவானுக்கு நம்மால என்ன கொடுத்துட முடியும்? அவர்கிட்ட எல்லாமே இருக்கு, அப்படீன்னு சொல்றது இந்த ஸ்லோகம்.  ‘கரஸ்தே² ஹேமாத்³ரௌ’ – உன்னுடைய கைகள்ல பொன் மலையான மேரு மலையே இருக்கு.  திரிபுர சம்ஹாரத்தின் போது மேருமலையையே வில்லா  எடுத்துண்டு போனார்.  அப்படி தங்க மலை இருக்கு உன் கைல… ‘நிகடஸ்தே² த⁴நபதௌ’.. ‘கி³ரிஶ!’ – மலையில் உறைபவரே!  

உன் பக்கத்துல தனபதியான குபேரன் எப்பவும் நின்னுண்டு இருக்கான்.  உனக்கு தோழன், தாஸன்.  என்ன வேணும்னாலும் அவன் கிட்ட கேட்டுக்கலாம். ‘க்³ருʼஹஸ்தே² ஸ்வர்பூ⁴ஜாऽமர ஸுரபி⁴ சிந்தாமணி க³ணே’ – உன்னோட க்ருஹத்துல, ‘ஸ்வர்பூ⁴ஜா’ – அப்படீன்னா கற்பக விருக்ஷம்.  ‘அமர ஸுரபி⁴’ – அப்படீன்னா காமதேனு.  ‘சிந்தாமணி’ – இதெல்லாம் கேட்டதை கொடுக்கக் கூடிய இரத்தினம், பசு, மரம்.  இதெல்லாம் உன்னுடைய வீட்டுலேயே இருக்கு.

  ‘ஶிரஸ்தே² ஶீதாம்ஶௌ’ – உன்னுடைய தலையில குளுகுளுன்னு சந்திரன் இருக்கு. ‘சரணயுக³ளஸ்தே² அகி²லஶுபே⁴’ – உன்னுடைய திருவடிகளில் எல்லா மங்களங்களும் உறைகின்றன. அந்த திருவடியை தியானம் பண்றவாளுக்கு மங்களங்கள் கிடைக்கும். அப்படி இருக்கறச்சே, ‘கமர்த²ம் தா³ஸ்யேऽஹம்’… ‘கம் அர்த²ம் தா³ஸ்யேऽஹம்’ – 

என்ன ஒரு பொருளை உனக்கு நான் கொடுத்துட முடியும்? பகவானுக்கு ஒரு மண்டகபடி கோவில்ல பண்றோம்னா, நமக்கு பக்தி ஏற்படறதுக்கும், நம்மளுடைய மமகாரம் போறதுக்காகவும், இது என்னோடதுன்னு நினைக்காம, இது பகவானுக்கு ஒப்படைக்கறதுக்காக என்று பண்றோமே தவிர, அவருக்கு அதுனால ஆகப் போறது ஒண்ணும் இல்லை, 

அப்ப என்ன தான் கொடுக்கறது அப்படீன்னு கேட்டா, ‘ப⁴வது ப⁴வத³ர்த²ம் மம மந:’ – என்னுடைய மனம் உன் பொருட்டாக ஆகட்டும். என்னோட மனசையே கொடுக்கறேன் அப்படீங்கறார். பகவானுக்கு நாம ஏதோ கொடுத்துட்டோம்னு நினைக்கறது, சூரியனுக்கு கற்பூர ஹாரத்தி பண்ற மாதிரியும், ஸமுத்திரத்துல போய், ஸமுத்திர ஜலத்தை எடுத்து அர்க்கியம் பண்ற மாதிரியும்தான். அதனால பகவானுக்கு நம்மளுடைய மனசைத் தான் கொடுக்கணும் அப்படிங்கிற தாத்பர்யம்.

இந்த மனசை எப்படி கொடுக்கறது? அப்படி மனசை கொடுத்தா என்ன கிடைக்கும்னா, நம்முடைய மனசை நாம பகவானுக்கு அர்ப்பணம் பண்ணா, நமக்கு முக்தி கிடைக்கும்.  அந்த முக்தில நாலு விதமா சொல்வா. ‘ஸாரூப்யம் – அப்படீன்னா பகவானுடைய அதே உருவமா நம்மளும் ஆயிடறது.  ‘ஸாமீப்யம்’னா பகவான் எங்க இருக்காரோ, அங்க பக்கத்துல நெருங்கி இருக்கறது.  ‘ஸாலோக்யம்’ – அப்படிங்கிறது அவர் எந்த உலகத்துல இருக்காரோ அந்த உலகத்துல நம்மளும் இருக்கறது.

‘ஸாயுஜ்யம்’
– அப்படீன்னா இரண்டற கலக்கறது. இந்த நாலு விதமான முக்தி சொல்வா.

அடுத்த ஸ்லோகத்துல, என்ன காரியம் பண்ணினா மனசு பகவானிடத்தில் இருக்கும்? அப்படி இருந்தா அதுவே முக்தி தான்.  இங்கேயே ஜீவன்முக்தன் ஆயிடலாம் அப்படீன்னு சொல்றார்.

ஸாயுஜ்யம், ,ஸாமீப்யம், ,ஸாலோக்யம்,,, ஸாயுஜ்யம் என்று முக்தி நாலு

விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ பரமேஸ்வர பூஜையால் ஸாரூப்ய முக்தியும், நாம ஸங்கீர்த்தனத்தால்

ஸாமீப்ய முக்தியும், சிவ பக்தர்களின் ஸஹவாசத்தால்(ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்) ஸாலோக்ய முக்தியும், த்யானத்தால் ஸாயுஜ்ய முக்தியும் சித்திக்கின்றன! என்று ஆசார்யாள் சொல்கிறார்.!!

அடுத்த ஸ்லோகத்தில் தங்களையே நினைந்து ,த்யானம் செய்து, சரணமாக அடைந்து

ஹே பரமேஸ்வர! தங்களையே வேண்டிக் கொள்கிறேன். தங்கள் கருணா கடாக்ஷத்துக்கு பல காலமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்!. எனக்குமதை தயைகூர்ந்து அருள வேண்டும் என பரமேஸ்வர அவதாரமான ஆசார்யாள் ஈஸ்வரனிடம் வேண்டுவது இங்கு விந்தை!

ஈதுதான் சுகம் என்ற விஷய ஞானத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும் என வினயத்துடன் வேண்டுகிறார்!!!!

கொஞ்சம் க்னானமிருந்தாலே கர்வம் மேலிடுகிறது சாமானியனுக்கு!

ஆஅனால் வினய ஸம்பத் என்பதை ஆசார்யாளிடம் நாம்கற்க வேண்டும்!!

விஷய சுகம் அனித்யம்! ஆதலால் ப்ரும்ம சுகம் என்பதனை அருள வேண்டும்

என ப்ரார்த்திக்கிறார்!

அந்த பரமேஸ்வரனை பக்தி செய்ய நம் உடல் மனம் ஆவி அனைத்தும் அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். அந்த பரமேஸ்வரனின் கருணை பார்வையை பெற அவரிடம் யாசிக்க வேண்டும். நம் மனதில் பக்தி ரசம் பெருக்கெடுக்க யாசிக்க வேண்டும். உண்மையில் நாம் அனைவரும் அவரிடம் எல்லாம் யாசிக்கும் பேர்வழிகள் தான். அவருக்கு என்று கொடுக்க என்ன இருக்கிறது. எல்லாம் அவருடையது நாம் வெரும் பாதுகாப்பு செய்பவர் மட்டுமே ( trustee)

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வார் நமக்கு பக்தியை பிச்சை அளிக்கும்படி.

நாம் அந்த பக்தி நிலையில் நின்று பரமனை நினைந்து பூஜை செய்து, ஸத்ஸங்கத்துடன்இருந்து, மேலும் மேலும் பக்தி பெருக பிரார்த்திப்போம், ஆசார்யாள் சொன்னது போல் பக்தியின் மூலம் முக்தி பெறுவது திண்ணம்.


என்ன அழகான கருத்து! ஆசார்யாள் எழுதின அத்தனை ஸ்லோகங்களிலும்

வினய ஸம்பத் வெளிப்படுகிறது. நம் வாழ்வில் நாமும் பின்பற்றி உய்வடைவோமாக!!

மலையிலுறைபவனே! உனது கையிலோ பொன்மலை; அருகிலிருப்பவனோ செல்வபதியான குபேரன்; (உன்) வீட்டிலோ கற்பக விருக்ஷம், காமதேனு சிந்தாமணிகள் உள்ளன. சிரத்திலே குளிர்ந்தவனான சந்திரன்; திருவடித்தாமரை களிலோ மங்களமனைத்துமுள்ளன. இப்படியிருக்க உன்னிடமில்லாத எப்பொருளை யளிப்பேன்? ஆகவே, என் மனத்தையே உனக்கு அர்ப்பணம் செய்ததாகட்டும்!

LS : பக்த  ஸௌபாக்ய தாயினீ  : ம்ருத்யு மதனீ : நிஷ் பரிக்ரஹா : 

நிஸ்துலா :

 துர்கா :  துக்க ஹந்த்ரீ : 

ஸூ கப்ரதா : துரா சார - சமனீ  : 

ஸாந்த்ரகருணா: ஸத்கதி ப்ராதா  : 

மஹாதேவீ  : 

மஹாபாதக நாசினீ : 

மஹாபோகா  : 

மஹாஸித்திர்: 

அநுக்ரஹதா  : 

ரஞ்ஜநீ : 

ரமணீ : 

======================================================================

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை