சிவானந்தலஹரி-28- எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை தியானித்து இருப்பதே ஸாயுஜ்ய முக்தி.!!
ஸாரூப்யம் தவ பூஜநே ஶிவ மஹாதே³வேதி ஸங்கீர்தநே
ஸாமீப்யம் ஶிவப⁴க்திது⁴ர்யஜநதாஸாங்க³த்யஸம்பா⁴ஷணே ।
ஸாலோக்யம் ச சராசராத்மகதநுத்⁴யாநே ப⁴வாநீபதே
ஸாயுஜ்யம் மம ஸித்³த⁴மத்ர ப⁴வதி ஸ்வாமிந் க்ருʼதார்தோ²ऽஸ்ம்யஹம் ॥ 28॥
இங்கேயே நான் க்ருதார்த்தனா இருக்கேன். செய்ய வேண்டியதை செய்துவிட்டேன். அடைய வேண்டியதை அடைஞ்சுட்டேன் அப்படீன்னு சந்தோஷமா சொல்றார். எனக்கு ஸித்தி கிடைச்சுடுத்து. முக்தின்னா இறந்த பின்ன தான் முக்தின்னு இல்லை. எனக்கு இங்கேயே முக்தி கிடைச்சுடுத்து. ‘ஸாரூப்யம் தவ பூஜனே’ – உன்னுடைய பூஜை பண்றது தான் ஸாரரூப்யம். விபூதி, ருத்ராக்ஷம் அணிஞ்சுண்டு, தன்னையே சிவமாக பாவிச்சுண்டு, சிவ பூஜை பண்ணா இங்கேயே நமக்கு ஸாரூப்ய முக்தி கிடைச்சுடுத்து. பஞ்சாயதன பூஜையில கூட,
தேஹோ தேவாலய: ப்ரோக்த: ஜீவோ ப்ரஹ்ம: ஸநாதன: |
த்யஜேத் அக்ஞான நிர்மால்யம் ஸோஹம் பாவேந பூஜயேத் ||
ன்னு ஒரு ஸ்லோகம் சொல்வா. நம்முடைய அக்ஞானம்தான் நிர்மால்யம். அதை தூக்கிப் போட்டுடணும். இந்த உடம்பு தேவாலயம். இதுக்குள்ள பகவான் இருக்கார் அப்படிங்கிற எண்ணத்தோட அந்த பூஜையை பண்ணனும். ஒரு குழந்தையை நாம்ம குளிப்பாட்டி அலங்காரம் பண்ணா நமக்கு ஒரு சந்தோஷம் ஏற்படறது.
ஏன்னா நாம எந்த சுகத்தை அனுபவிக்கறோமோ, நமக்கு பிரியமான குழந்தைக்கு அதைப் பண்ணும் போது, நமக்கு சுகம் கிடைக்கறது. அந்த மாதிரி பகவானை பூஜிக்கணும். ஸ்வாமிகள் ஒரு குருவாயூரப்பன் பஞ்சலோக விக்ரகம் வெச்சுண்டு இருந்தார். அதுக்கு பூஜை பண்ணும்போது பார்க்கணும். குழந்தையை கொஞ்சற மாதிரி, கொஞ்சி கொஞ்சி ஆசையா பூஜை பண்ணுவார். அப்படி பண்ணும் போது அவரே குருவாயூரப்பனா ஆயிட்டார். ஆஞ்சன் நம்பூதிரி, ஸ்வாமிகளை பார்க்கும்போதே ‘குருவாயூரப்பா’ ன்னு கூப்பிடுவார். அந்தமாதிரி ‘ஸாரூப்யம்’ பூஜையில இருந்தே கிடைச்சுடறது.
‘ஶிவ மஹாதே³வேதி ஸங்கீர்தனே ஸாமீப்யம்’ – பகவானை சிவா, மஹாதேவா, பரமேஸ்வரா அப்படீன்னு அவருடைய நாமங்களைச் சொல்லி அவரோட புகழைப் பாடும்போது, ‘ஸாமீப்யம்’ – ரொம்ப பக்கத்துல போயிட்ட மாதிரி ஒரு சந்தோஷம் கிடைக்கறது. ஒருத்தரை நினைக்கும் போது தானே அவாளுடைய குணங்களை நினைக்கறோம். அப்போ அவா பக்கத்துல இருக்கிற மாதிரி ஒரு சந்தோஷம் கிடைக்கறது நமக்கு. அந்த நிலை பகவானுடைய சங்கீர்த்தனத்துனாலேயே கிடைக்கும்.
‘ஶிவப⁴க்தி து⁴ர்யஜநதா ஸாங்க³த்ய ஸம்பா⁴ஷணே ஸாலோக்யம்’ – சிவ பக்தி நிறைந்த ஜனங்களோடு கூடி, அவாளோட பேசறதே ஸாலோக்ய முக்தி. பகவான் எந்த கைலாசத்துல இருக்காரோ, அங்க இருந்தா என்ன சந்தோஷம் கிடைக்கும்ங்கிறது சிவபக்தி இருக்கக் கூடிய ஜனங்களோட பழகினாலே நமக்கு அந்த ஸாலோக்ய முக்தி கிடைக்கும்.
‘சராசராத்மக தநுத்⁴யாநே ப⁴வாநீபதே ஸாயுஜ்யம்’ – எங்கும் பகவான் நிறைஞ்சு இருக்கார்… அப்படிங்கிற ‘சராசராத்மக தநுத்⁴யாநே’ – எல்லா அசையும் பொருள், அசையாத பொருள், எல்லா உருவங்களும் பரமேஸ்வரனுடைய ஸ்வரூபம் தான் அப்படீன்னு த்யானம் பண்றது ஸாயுஜ்ய முக்தி. இப்படி இந்த பக்தியை மஹான்கள் define பண்ணும் போது, அதுவே ஆத்ம விசாரம், முக்திக்கு ரொம்ப நெருக்கத்துல இருக்கு. இந்த மாதிரி, மாத்தி மாத்தி இதையே பண்ணிண்டிருந்தோம்னா போரும்.
ஏதோ கொஞ்சம் பணம் இருந்தா பகவானுக்கு ஒரு சேவை பண்ணலாம். ஆனா எது அதைக் காட்டிலும் ரொம்ப உயர்ந்த விஷயம்? இப்படி அவனுடைய ஸ்தோத்திரத்தை பண்ணனும். பூஜையை பண்ணனும். அவனுடைய பக்தர்களோட இருக்கணும். எங்கும் பகவான் இருக்கார் அப்படீன்னு எல்லாத்துலேயும் பரமேஸ்வரனை பார்க்கறதுக்கு மனசை பழக்கணும் அப்படிங்கிற வழி சொல்றார்
பணம் இருந்தா பகவானுக்கு நீ என்ன கொடுக்க முடியும்? அதுக்கும் மேலான… உன் மனசை கொடு. உன் மனசை இந்த காரியங்களிலெல்லாம் செலுத்து. அப்போ உனக்கு உயர்ந்த முக்திக்கு நிகரான உத்தம பக்தி ஏற்படும் அப்படீன்னு இந்த ஸ்லோகத்துல ஆச்சார்யாள் சொல்லித் தர்றார்.
‘கண்டேன் அவர் திருப்பாதம். கண்டறியாதன கண்டேன்’ அப்படீன்னு மஹான்கள் அந்த பகவானுடைய அனுபவத்தை பாடறா இல்லையா? அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை தியானித்து இருப்பதே ஸாயுஜ்ய முக்தி. ஒவ்வொரு முக்தியும்.. ஒண்ணுக்கு மேல ஒண்ணு சொல்வா. இது எல்லாமே பக்தியினால கிடைக்கும் அப்படீன்னு சொல்றார்.
பவானீபதியே! உனது பூஜையின் பயனாக ஸாரூப்யமெனும் (உன் உருவைப் பெறும்) முக்தியையும், ''சிவ, மஹாதேவ'' என்ற நாமங்களை ஸங்கீர்த்தனம் செய்வதன் பயனாக ஸாமீப்யம் (என்ற உன் அண்மையான முக்தி) என்பதையும், சிவபக்தியில் சிறந்து விளங்கும் பக்தர்களுடன் இணைந்து பேசுவதின் பயனாக ஸாலோக்யம் (என்ற உன் உலகில் வாழும் முக்தி) என்பதையும், சராசரப் பஞ்ச வடிவான உனது திருமேனியின் த்யானத்தின் பயனாக (உன் மயமாகவே ஆகும் முக்தியான) ஸாயுஜ்யத்தையும் இப்புவியிலே பெற்று அடைய வேண்டிய அனைத்தையும் அடைந்தவனாகிறேன்.
LS : ஸம்ஸாரபங்க நிர்மக்ந ஸமுத்தரண பண்டிதா : விப்ரரூபா :
விஜ்ஞாநகலநா : ஸர்வாபத் விநிவாரிணீ :
ஸதோதிதா :
ஸதாதுஷ்டா :-
.தரஸ்மேர முகாம்புஜா :
=========================================================================
Comments