சிவானந்தலஹரி 100 - உம்மையே உயர்வுக்கெல்லாம் உயர்வென அறிகிறார்கள்.!!
ஆன்மீகத் தேடல்ல தெய்வம் தன்னை எங்க வெளிப்படுத்திக்கறதோ, ஒரு குரு, ஒரு கோயில்ல இருக்கிற சுவாமி, ஒரு மந்திரம் ஒரு ஸ்தோத்திரம் எங்க நமக்கு அந்த தெய்வீக அனுபவம் ஏற்படறதோ, அதுவரைக்கும் அந்த தேடல் இருக்கும். அந்தத் தேடல் முடியறதுங்கறதே ஒரு பலஸ்ருதி தானே.. இந்த ஸ்லோகத்தில அதைத்தான் சொல்றார்.
स्तोत्रेणालमहं प्रवच्मि न मृषा देवा विरिञ्चादय्ः
स्तुत्यानं गणनाप्रसङ्गसमये त्वामग्रगण्यं विदुः ।
माहात्म्याग्रविचारणप्रकरणे धानातुषस्तोमव-
द्धूतास्त्वां विदुरुत्तमोत्तमफलं शम्भो भवत्सेवकाः ॥ १००॥
ஸ்தோத்ரேணாலமஹம்ʼ ப்ரவச்மி ந ம்ருʼஷா தே³வா விரிஞ்சாத³ய்꞉
ஸ்துத்யானம்ʼ க³ணனாப்ரஸங்க³ஸமயே த்வாமக்³ரக³ண்யம்ʼ விது³꞉ |
மாஹாத்ம்யாக்³ரவிசாரணப்ரகரணே தா⁴னாதுஷஸ்தோமவ-
த்³தூ⁴தாஸ்த்வாம்ʼ விது³ருத்தமோத்தமப²லம்ʼ ஶம்போ⁴ ப⁴வத்ஸேவகா꞉ ||100||
அர்த்தம் என்னென்னா; ஹே சம்போ,
“ஸ்தோத்ரேணாலம்” – மனதுக்கும் வாக்குக்கும் எட்டாத உன் பெருமையை எவ்வளவு பேசினாலும் முடியாது அதனால இந்த ஸ்தோத்திரத்தை நான் இங்க முடிச்சிக்கறேன்.
“அஹம் ம்ருʼஷா ந ப்ரவச்மி” – நான் இல்லாததை எதுவும் சொல்லவில்லை;
“தே³வா விரிஞ்சாத³ய்꞉” – ப்ரஹ்மா முதலான தேவர்கள்
“ஸ்துத்யானம்ʼ க³ணனாப்ரஸங்க³ஸமயே” – யார் இந்த உலகத்துல ஸ்தோத்திரம் பண்ணுவதற்கு தகுதி உடையவர்கள் என்று தீர்மானம் செய்யும் சமயத்தில்
“த்வாமக்³ரக³ண்யம்ʼ விது³꞉” – நீங்கள் தான் எல்லார்க்கும் மேலான தெய்வம், உங்களத்தான் ஸ்தோத்திரம் பண்ணனும் என்று, “விது:”, – அறிகிறார்கள்,
“பவத்-ஸேவகாஹ”- உம்முடைய அடியார்கள்
“மாஹாத்ம்யாக்³ரவிசாரணப்ரகரணே” – உன்னத பதவிக்குரியவர் யார் என்று விசாரணம் பண்ணும் போது
“தா⁴னாதுஷஸ்தோமவத்” – தானியத்தில் கலந்த உமி கூட்டம் போல மற்ற தேவர்கள்
“தூதாஹ” – தானியத்தில் போரடிக்கும் போது உமி பறந்து போயிடும், அந்த மாதிரி உங்களை தெரிந்த பின்னர் மத்த தேவர்கள் விஷயம் உமி போல தான், நீங்க தானியம் போல. அப்டீங்கறார்,
“த்வாம் உத்தம பலம்” – நீங்கள் தான் எல்லாவற்றுக்கும் மேலான பலமான மோட்சத்தை அருள்வீர்கள் என்று அறிந்து கொள்கிறார்கள், விதுஹு –
இதே கருத்தை இந்த ரெண்டு ஸ்லோகத்தில் வர கருத்தை மாணிக்கவாசகர் ஒரு திருவாசகப் பாட்டுல சொல்கிறார்.
தேவர்கோ அறியாத தேவ தேவன்
செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கும்
மற்றைமூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி
மூதாதை மாதாளும் பாகத் தெந்தையாவர்கோன்
என்னையும்வந் தாண்டு கொண்டான்
யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்
மேவினோம் அவனடியார் அடியா ரோடும்
மேன்மேலுங் குடைந்தாடி யாடு வோமே
இந்த யாமார்க்குங் குடியல்லோம், எமனை அஞ்சோம், இதை மொதல்ல அப்பர் பெருமான் தான் பாடினார்னு நான் நெனைச்சிண்டு இருந்தேன், இத படிக்கும் போது தான் தெரியறது, திருவாசகத்துல மாணிக்கவாசகர் முன்னாலேயே பாடி இருக்கார்னு. இந்த உலகத்துல நான் யாருக்கும் குடிமகன் கிடையாது , நான் பரமேஸ்வரனோட அடியார் கூட்டத்துல சேர்ந்துட்டேன், அப்டீங்கறதே முக்தி தானே, அதுக்கப்பறம் என்ன முக்தி, அது பகவான் பார்த்துப்பார்.
யாதும் அஞ்சோம் – எந்த பயமும் இல்ல
இந்த ஏக பக்தி பண்ணும்போது தான், அந்த பகவான் நம்பள ஆட்கொண்டார்ன்னு தெரிஞ்சிடுதுன்னு பயமே போயிடும், அப்டி இல்லாம பல இடங்கள்ல நம்ப திரும்பி தேடிண்டு இருக்கற வரைக்கும் நமக்கு அந்த அபயம் மனசுல பகவான் குடுத்தா கூட உணர முடியாது, அதனால பயம் இருந்துண்டே இருக்கும்.
அதே மாதிரி பெரிவான்னா மஹாபெரியவாதான், ஒரு எடத்துல மனச வெச்சா நமக்கு அந்த அபயம் கிடைக்கும்.
அப்படி இந்த சிவானந்தலஹரி ஸ்தோத்ரத்தை படிச்சதுக்கு இரண்டு பலன். ஒண்ணுஅந்த தெய்வீகத்தை உணர்வது, ரெண்டாவது அந்த எடத்துலயே ஏகபக்தியா பரமேஸ்வர த்யானத்துல எப்பவும் இருக்கறது, நான் சொன்னா மாதிரி நம்பள மாதிரி இருக்கறவா திரும்ப இந்த ஸ்தோத்ரத்தை படிச்சு அந்த அனுபவம் கிடைக்கறதுக்கு முயற்சி பண்ணனும்.
இந்த 100 ஸ்லோகத்தையும் படிக்கற பெரிய பாக்கியம் எனக்கு கெடச்சது, உங்களோட பகிர்ந்துண்டேன். சிவானந்தலஹரிதான் நமக்கு ஆச்சார்யார் அனுக்கிரஹம் பண்ணார், இதை படிச்சால் நமக்கு பரமேஸ்வரன் அனுக்கிரஹம் கிடைக்கும்.
பரமேச்வரா! நான் துதித்தது போதும். நான் இல்லாததைக் கூறவில்லை. பிரம்மா முதலான தேவர்கள் போற்றத்தக்கவர்களை எண்ணுங்கால் உம்மைத்தான் முதன்மையாக எண்ணி அறிகிறார்கள். உமது அடியார்களும் சிறந்து விளங்கும் பெருமைகளைப்பற்றி ஆராயுங்கால் உமிக்கூட்டத்துடன் கலந்த தான்யங்களில் உமியையகற்றுவதுபோல்; மற்ற வானவர்களை நீக்கி தான்யத்தை ஏற்பதுபோல் உம்மையே உயர்வுக்கெல்லாம் உயர்வென அறிகிறார்கள்.
LS
விஶ்வகர்பா
ஸ்வர்ணகர்பா
அவரதா
வாகதீஶ்வரீ
த்யானகம்யா
அபரிச்சேத்யா
ஞானதா ,ஞானவிக்ரஹா
ஸர்வவேதாந்த ஸம்வேத்யா,
ஸத்யானந்த ஸ்வரூபிணீ
லோபாமுத்ரார்ச்சிதா
லீலாக்லுப்த ப்ரஹ்மாண்ட மண்டலா
அத்ருச்யா
த்ருச்யரஹிதா
=======================================================================
Comments