ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் -9 (a) [39 & 40] "ஏ"

 


ஏகவீராதி³ஸம்ʼஸேவ்யா ஏகப்ராப⁴வஶாலினீ . 9(a)

39. ஏக வீராதி  ஸம் ஸேவ்யா
வீரர்களால் முதன்மையாகப் பூஜிக்கப்படும் ஒப்புயர்வற்ற தாய் . 

40 ஏகப்ராபவ -சாலினீ
ஒப்புயர்வற்ற ஐசுவரியத்தை தருபவள் 

* 39 * Eka veeradhi samsevya - She who is being worshipped by valorous warriors first
* 40 * Eka prabhava salinya - She who has unmatchable riches

39. Om Aykaveeraadi Samsevyaayai* Namaha
Salutations to the Mother,*who is worshipped by*the Ekaveeras. They* are extraordinary people*and have attained*mantra Siddhi and darshan of Devi through pooja and meditation. They are majestic*people with strength of character without any traces of lust or anger. Goddess Lakshmi and Lord Brahma are the Ekaveeras.

40. Om Ayka Praabhavasaalinyai Namaha
Salutations to the Mother, who is the ultimate reality,*equal to none and is the existence supreme, self existent, protects those who surrender to her. So great is her transcendent glory it is only a reflection of that glory that is seen in the cosmic powers of Thrimurthis, Lord Brahma, Lord Vishnu and Lord Siva.* Devi* has* unmatchable riches and unmatchable* powers.

========================================================================


Comments

ravi said…
அம்மா

இரண்டாம் நாள் இன்று

பால் பாயசம் செய்து வைத்தேன் .

பாலின் சுவையிலும் மிகுந்தவளே

தேனிலும் இனிப்பவளே

கற்கண்டிலும் அதிகம் கருணை பொழிபவளே ...

பச்சை கற்பூரம் தட்டிப்போட்டேன்

முந்திரியும் பிஸ்தாவும் திராட்சையும் பாகும் வாக் தேவிகளாய் பாயசத்தில் குதித்தன ...

பாயசம் சஹஸ்ரநாமம் ஆனதே உன் அருளால் ...

சர்க்கரை இன்னும் ஏங்க காமதேனுவின் நெய் கண் கலங்க

அள்ளி அணைத்தே பாயசத்தில் ஆறாய் ஊற்றினேன் ...

அறுசுவையும் உன் அருள் போல் இனிப்பதில்லையே !😢

ஏலக்காய் வாசனை உன் மலர் சுகந்தம் பெறவில்லையே 😢

மணக்கும் நெய் உன் போல் உருக வில்லையே 😢

தித்திக்கும் தேனும் வெல்லமும் உன் போல் கருணை கொள்ள வில்லையே 😢

என்ன செய்தாலும் குறைவு என்றே தோன்ற

மலர்களை உன் பாதங்களில் போட்டேன் ...

மலர்ந்த மலர்கள் இதை விட வேறு பேறு உண்டோ என்றே

எனை வாழ்த்தின உனைப்போல் ...

எல்லாம் கிடைத்த த்ருப்தி உன் பாத பங்கஜம் அள்ளி வழங்கியதே !!😊💐💐
ravi said…
அம்மா

*கிம் வர்ணயாம தவ ரூபம் ?*

மகிஷனை வென்றாய் .... மாவீரம் கண்டோம்

போரில் நடனம் புரிந்தாய் பூமலர் பொழிந்தோம்

சிங்கங்கள் சீறிப் பாய யானைகள் மதம் கொண்டு ஓடின ...

சிதறிய ரத்தங்கள் உன் நெற்றியில் தெளித்தே

உன் அருண ரூபம் தெரிய வைத்ததே !!

வெற்றி கொடிகள் எங்கும் பறக்க

சிம்மாநாதம் வானை பிளக்க

வான் தாரகைகள் யாழ் பிடித்து வாசிக்க

பரமானந்தம் பாதை வகுத்ததே !!

ஒன்பது நாட்கள் உனை கண்டு களிக்க

உடம்பெல்லாம் மயிர்கூச்சம் வருகிறதே!!

அம்மா அம்மா என்றே உன் மடியில் உறங்க

உறக்கம் தனை இரவல் கேட்டேன் நித்ரா தேவியிடம் ...

இமைகள் மூடி விட்டால் காணும் கண்கள் பின் ஏங்காதோ என்றாள்

உண்மை ... விழி மூட மாட்டேன் ...

உன் நிழல் விழும் நேரம் நித்திரைக்கு முத்திரை போட்டேன் ...

திரை போட்ட நெஞ்சம் நிறை கொண்டு விம்மியதே 💐💐💐
ravi said…
*அம்மா*

நான்காம் நாள் இன்று ...

நான்கு வேதங்கள் உன் பாதம் வருடித் தர

உபநிஷதங்கள் வெண் ஸாமரம் வீச

கிரந்தங்கள் கீர்த்தனை செய்ய

ஹோம புகைதனில் நீ புன்னகைக்க

சண்டி தேவியாய் நீ பரிமளிக்க

கீலகம் சொல்லி உனை பாலகன் நான் அழைத்தேன் ...

தேவி நீ கவசமாய் வந்தாய்

அர்கலமாய் அருள் தந்தாய் ..

ராத்திரி ஸூக்தமாய் இமை மூடாமல் காக்கின்றாய்

என்ன சொல்லி புகழ்வேன் எழுத்துக்கள் வறுமை காணும் போதே ?
ravi said…
*அம்மா*

நான்காம் நாள் இன்று ...

நான்கு வேதங்கள் உன் பாதம் வருடித் தர

உபநிஷதங்கள் வெண் ஸாமரம் வீச

கிரந்தங்கள் கீர்த்தனை செய்ய

ஹோம புகைதனில் நீ புன்னகைக்க

சண்டி தேவியாய் நீ பரிமளிக்க

கீலகம் சொல்லி உனை பாலகன் நான் அழைத்தேன் ...

தேவி நீ கவசமாய் வந்தாய்

அர்கலமாய் அருள் தந்தாய் ..

ராத்திரி ஸூக்தமாய் இமை மூடாமல் காக்கின்றாய்

என்ன சொல்லி புகழ்வேன் எழுத்துக்கள் வறுமை காணும் போதே ?
ravi said…
*ஶ்ரீ* யான தாயாரை ஶ்ரீஹி என்று சொல்லுவதற்கு அவர்களின் 6 செயல்களே காரணம் .. ஏன் என்றால் அவர்களின் *ஶ்ருநௌதி* - அடியவர்களின் குறைகளை காது கொடுத்து கேட்பவள், *ஶ்ராவயதி*- பெருமாளையும் கேட்க வைப்பவள் *ஶ்ருணாதி*- அடியவர்களின் பாவங்களை மன்னித்து தூய்மை படுத்துபவள், *ஶ்ரீணாதி*- பக்தியையும், பக்குவத்தையும் அளிப்பவள் , *ஶ்ரீயதே*- எல்லோராலும் ஆஸ்ரயிக்கப்படுபவள் & *ஸ்ரயதே*- அடியவர்களுக்காக பெருமாளிடம் சிபாரிசு செய்து அருள் செய்பவள் என்ற 6 செயல்கள்...
ravi said…
*அம்மா*!!

எதிர்த்து வர பகைவர்கள் இல்லை
என்றாலும்

ஏந்திய சூலத்தை கீழே வைக்காமல்
இருக்கும் மர்மம் என்ன ?

நீயும் தாய் தான் என்றால்

கூர் மழுங்காத சூலம், கொலை உருவான
தோற்றம்,

பொரி பறக்கும் விழிகள்

ஏன் இந்த போர்க்கோலம். ?

கண்ணுக்குள் கண்மணி போல்,

கண்மணிக்குள் பாவையைபோல்,

அகிலத்தை கட்டி காப்பவள் தாய் என்றால்

ஆடு பலி கேட்கிறாயே.
அது ஏன்?

வாயில்லா ஜீவன் வான்முட்ட கதறினால்

அது உனக்கு வீணை மீட்டும் இசையாகுமா?

பீரிடும் ரத்தம் தான் உனக்கு ஆனந்த வெள்ளமாகுமா?

*புன்னகை பொழிய தோன்றினாள் அம்பாள் எதிரே*!!

ஆஹா. !!!!

இப்போது தான் நீ என் தாய்.

காவியமும் ஓவியமும் காணாத காட்சி

கற்பனைக்கும் அற்புதமாம் தாய் குலத்தின் மாட்சி

பின்னி இணைந்து வரும் பேரன்பு செல்வம்.

பேசாமல் பேசிவரும் அன்னை என்னும் தெய்வம்.

இப்படித்தான் என்றும் இருக்க வேண்டும் உன் உருவம்.

இன்றோ ஐந்தாம் நாள் ...

ஐந்தெழுத்து மந்திரத்தை அறுசுவையாய் ஊட்டி விட்டாய் ...

அல்லும் பகலும் சொல்ல வைத்தே சிவ ஸாயுஜ்யம் பெற வைத்தாய் ...

மேனியெல்லாம் சிலிர்க்க

கண்கள் குளமாக கற்பனையிலும் காண முடியாத காட்சி தந்தாய் .

சிவாப்யம் எனும் வார்த்தைக்கு சிவசக்தி
ஸ்வருபம் நான் என்றே பதிலுரைத்தாய்

உன்னைப்போல் தாயும் இல்லை உன் நாமம் போல் சுவைப்பது ஏதும் இல்லை ....
ravi said…
கனகதாரா ஸ்லோகமும் சௌந்தரிய லஹரியும் ... ஒற்றுமை ( 5 வயதும் 31 வயதும்)💐💐💐

5 வயதில் ஆச்சாரியாள் பாடியது இந்த கனகதாரா ஸ்லோகம் ...

அதிக ஆன்மீக அனுபவம் இல்லாத வயது ...

ஆனால் இந்த பாடலின் அர்த்தம் தனது 31 வயதில் பாடிய சௌந்தர்ய லஹரீயில் எதிரொலிக்
கின்றது முதல் ஸ்லோகத்தில்

சௌந்தர்ய லஹரீ யில் முதல் ஸ்லோகம்

*சிவ சக்த்யா யுக்தோ ....*

என்று ஆரம்பிக்கின்றது.

அதாவது சிவனும் சக்தியும் எப்பொழுதும் சேர்ந்தே இருப்பவர்கள் என்று பொருள் படும் ...

கனகதாராவில் முதல் ஸ்லோகம்

*அங்கம் ஹரே:புலக பூஷணமாச்ரயந்தீ*

அதாவது ஹரியின் அங்கத்தில் என்றும் இருப்பவள் மஹாலக்ஷ்மி என்ற பொருள் வரும் ...

கனக தாராவில் 10 வது ஸ்லோகம்

கீர்தேவதேதி கருடத்வஜஸுந்தரீதி

சாகம்பரீதி சசிசேகர வல்லபேதி|

சிருஷ்டிஸ்திதி ப்ரலய கேலிஷ§ ஸம்ஸ்திதாயை

தஸ்யை நம:த்ரிபுவணே குரோஸ் தருண்யை ||

கருடக் கொடியோனான மஹா விஷ்ணுவின் பத்தினி என்று சொல்லப்படுகிற நீயேதான்

வாக்தேவியான ஸரஸ்வதியாகவும்,

தாவர வளத்தைத் தருகிற சாகம்பரியாகவும்,

சந்திர மௌலீசுவரரின் பத்தினியான பார்வதியாகவும், இருக்கிறாய்.

மூன்று லோகங்களுக்கும் குருவான ஒரு பரமாத்மா இருக்கிறது.

அதன் சக்தியே நீ. இருவருக்குமாகச் சேர்ந்து உலக சிருஷ்டி பரிபாலனம், சம்ஹாரம் என்கிற விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்” என்கிறார்.

பராசக்தியான காமாக்ஷியும் காஞ்சி மண்டலத்தில் இதே மாதிரியாகப் பொன் மழை பொழிந்து மஹாலக்ஷ்மிக்கும் தனக்கும் அபேதத்தைக் காட்டியிருக்கிறாள்

தத்யாத் தயாநுபவனோ” என்கிற சுலோகத்தில்

“சாதக பட்சி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி இவர்கள் சம்பத்துக்காக ஏங்குகிறார்கள்.

இவர்களுடைய பூர்வபாவம் மழையே இல்லாத கோடை மாதிரி, இவர்களைத் தகிக்கிறது என்பது வாஸ்தவம்தான்.

ஆனாலும் உன்னிடம் தயை என்கிற காற்று இருக்கிறதல்லவா?

அந்தக் காற்றினால் உன் கடாக்ஷ மேகத்தைத் தள்ளிக் கொண்டு வந்து இவர்களுக்குச் செல்வ மழையைப் பொழியம்மா!” என்கிறார், இந்தச் சுலோகத்தில்.

இப்படி 5 வயதிர்க்கும்
31 வயதிர்க்கும் பொருளை மாற்றாமல் சிதைக்காமல் கிரந்தங்கள் இயற்றியவர் சங்கர பகவத் பாதாள். !!
ravi said…
Heard an old story. Shankar comes in a disguise to Ayodhya and asked Ram for food. Since it’s a pitrupaksh, Already more Brahmans waiting for food. Ram understood this disguise and, washed his feet, then offered him a noble seat. Sita started feeding. It goes on, but Shankar ate everything. Sita was bit disturbed as entire cooking been gone in one thinny stomach. Ram smiled inside and prayed Annapurna, pl come and satisfy your hubby’. There it is. This Kashi lady satisfied that hunger with just a small laddoo. Shanker smiled on Ram and Sita and blessed them but both did not want long life, hence Shankar replied that he and his devotees will spread Ramcharitra as much as possible.. thus came Ramayan to south….
ravi said…
*Devi Is The Primal Force Underlining All Existence*🙏🙏🙏

Devi is the supreme Shakti of the Supreme Being.

When Vishnu and Mahadev destroyed various asuras, the power of Devi was behind them…

Devi is the creator of the universe.

She is the universal Mother.

Durga, Kali, Bhagwati, Bhavani, Ambal, Ambika, Jagadamba, Kameswari, Ganga, Uma, Chandi, Chamundi, Lalita, Gauri, Kundalini, Tara, Rajeswari, Tripurasundari, are all Her forms.

She is worshipped during the nine days of Navaratri as Durga, Lakshmi, and Saraswati
ravi said…
Devi is the mother of all.

The pious and the wicked, the rich and the poor, the saint and the sinner – all are Her children.

Devi is the mother of nature. She is nature Itself. The whole world is Her body.

Mountains are Her bones. Rivers are Her veins. The ocean is Her bladder.

Sun, moon are Her eyes. Wind is Her breath. Agni is Her mouth.

She runs this world show. Shakti is symbolically female; but it is neither male nor female.

It is only a Force that manifests Itself in various forms.

The five elements and their combinations are the external manifestations of the Mother. Intelligence, discrimination, psychic power, and will are Her internal manifestations. Humanity is Her visible form.
ravi said…
She lies dormant in the Muladhar chakra in the form of serpentine power or coiled-up energy known as the kundalini shakti. She is at the centre of life in the universe.

She is the primal force of life that underlies all existence.
ravi said…
She vitalises the body through Sushumna Nadi and nerves…

She vitalises the universe through Her energy.

She is the energy in the sun, fragrance in flowers, beauty in the landscape, Gayatri or blessed Mother in the Vedas, colour in the rainbow, intelligence in mind, potency in homoeopathic pills, power in Makaradhvaja and gold oxide, will and vichar shakti in sages, devotion in bhaktas, samyam and samadhi in yogis. Vidya, shanti, lust, anger, greed, egoism, pride are all Her forms.

Her manifestations are countless
ravi said…
*Shiv and Shakti*

The Supreme Lord is represented as Shiv, and His power is represented as His wife – Shakti, Durga, or Kali. Mother Durga is the energy aspect of the Lord.

Without Durga, Shiv has no expression, and without Shiv, Durga has no existence.

Shiv is the soul of Durga. Durga is identical with Shiv.

Shiv is only the silent witness. He is motionless, absolutely changeless…

Shiv is omnipotent, impersonal, and inactive.

He is pure consciousness. Shakti is dynamic.

The power, active aspect, of the imminent God is Shakti.

Shakti is the embodiment of power.
ravi said…
*அம்மா*!!

எதிர்த்து வர பகைவர்கள் இல்லை
என்றாலும்

ஏந்திய சூலத்தை கீழே வைக்காமல்
இருக்கும் மர்மம் என்ன ?

நீயும் தாய் தான் என்றால்

கூர் மழுங்காத சூலம், கொலை உருவான
தோற்றம்,

பொரி பறக்கும் விழிகள்

ஏன் இந்த போர்க்கோலம். ?

கண்ணுக்குள் கண்மணி போல்,

கண்மணிக்குள் பாவையைபோல்,

அகிலத்தை கட்டி காப்பவள் தாய் என்றால்

ஆடு பலி கேட்கிறாயே.
அது ஏன்?

வாயில்லா ஜீவன் வான்முட்ட கதறினால்

அது உனக்கு வீணை மீட்டும் இசையாகுமா?

பீரிடும் ரத்தம் தான் உனக்கு ஆனந்த வெள்ளமாகுமா?

*புன்னகை பொழிய தோன்றினாள் அம்பாள் எதிரே*!!

ஆஹா. !!!!

இப்போது தான் நீ என் தாய்.

காவியமும் ஓவியமும் காணாத காட்சி

கற்பனைக்கும் அற்புதமாம் தாய் குலத்தின் மாட்சி

பின்னி இணைந்து வரும் பேரன்பு செல்வம்.

பேசாமல் பேசிவரும் அன்னை என்னும் தெய்வம்.

இப்படித்தான் என்றும் இருக்க வேண்டும் உன் உருவம்.

இன்றோ ஐந்தாம் நாள் ...

ஐந்தெழுத்து மந்திரத்தை அறுசுவையாய் ஊட்டி விட்டாய் ...

அல்லும் பகலும் சொல்ல வைத்தே சிவ ஸாயுஜ்யம் பெற வைத்தாய் ...

மேனியெல்லாம் சிலிர்க்க

கண்கள் குளமாக கற்பனையிலும் காண முடியாத காட்சி தந்தாய் .

சிவாப்யம் எனும் வார்த்தைக்கு சிவசக்தி
ஸ்வருபம் நான் என்றே பதிலுரைத்தாய்

உன்னைப்போல் தாயும் இல்லை உன் நாமம் போல் சுவைப்பது ஏதும் இல்லை ....
ravi said…
*அம்மா*

பனி நிறைந்த கண்ணாடியில் கண்கள் வரைந்தேன் கண்ணீர் வழிந்து ஓடியது

எனை ப்போலவே நடித்து காட்டிய என் நிழலை ரசித்துக் கொண்டிருந்தேன்

எந்தக்கிளி ஏமாற்றி சென்றதோ தாடியுடன் இருந்தது அந்த ஆலமரம்

வாயை கிழித்த பின்னும் தொடர்ந்து என்னுடன் பேசியது கையில் இருந்த கடிதம்

உன் நாமம் எனும் பெரும் கடலை அசைத்துக்
கொண்டிருந்ததே மீன் குஞ்சான என் துடுப்பு !!

வாழ்க்கை எனும் குழல் எடுத்து ஊதுகிறாய்

அதில் நடமாடுகிறது என் முடிவு எனும் நெருப்பு !!

பெயருக்கும் நிலைமைக்கும் சம்பந்தம் இருப்பதில்லையே

வறுமையினால் எதிர்வீட்டு லக்ஷ்மியும் சரஸ்வதியும் படிப்பை நிறுத்தியது ஏன் ?

என் வீட்டு குபேர மூலையில் நான் வாங்கிய கடன் கணக்கு !!

விழுந்த பின்னும் பறந்து பார்க்கும் பறவையின் இறகோ நான் ?

மயிலிறகு பள்ளி நினைவுகளை குட்டிபோடுவதை போல் உன் நினைவில் வாடுகிறேன் !!

யானைக்கு இனிக்கும் கரும்பு இந்த எறும்புக்கும் இனிக்குமன்றோ !💐💐💐
ravi said…
அம்மா இன்று ஆறாம் நாள் ...

ஆறுமுகனை தந்தவள் நீ

யானை முகனை பெற்றவள் நீ ...

ஆராமுதாய் ஆல கண்டனை

நீல கண்டனாக்கியவள் நீ

விஷ்ணு மாயையாய் யோக நித்ராவில் அரங்கனை ஆழச் செய்தவள் நீ ...

வாக் தேவியாய் வைரம் எனச் ஜொலிப்பவள் நீ.

கமலங்களை கண்களிலே பூக்க செய்பவள் நீ ...

சூரிய சந்திரனாய் பகல் இரவு காப்பவள் நீ ...

முத்துக்கள் எல்லாம் ஒன்று சேர புன்னகைப்பவள் நீ

உன் திருவடிகளில் சொர்க்கம் இருக்க

தேடுகிறோம் வெளி உலகில் ...

திகட்டாத காரூண்யம் முகம் எங்கும் தெறிக்க

ஓடுகிறோம் உன் பெயர் சொல்லி உயிர் வாழும் ஊமத்தை பூக்களிடம்

உன் நாமம் தினம் உரைத்தால் ஓராயிரம் வழி பிறந்திடுமே ...

பழி சுமந்து வாழ்ந்து என்ன பயன் ...?

உன் விழி நாடாத போது !!💐💐💐
ravi said…
மிகவும் அருமை....வரிகளை பூர்த்தி செய்யுங்களேன்.... தாய்ப்பறவை சொன்னது...இவை அனைத்தும் அந்த லோகமாதாவின் விளையாட்டு...அவள் நினைத்தால் அனைத்தும் அற்புதங்களே... அமைதி கொள்...🙏🙏
ravi said…
Sir, gone thru, picturez nicely designed and questions cleverly coined, thanks, *no corrections*👏👏👏
ravi said…
ஆழ்ந்த கருத்து பொதிந்த கவிதை🙏🙏
ravi said…
அம்மா

7வது நாள் இன்று ...

ஏழு ஸ்வரங்கள் யாழ் எடுத்து உன் நாமம் வாசிக்க

ராகங்கள் ஆயிரம் உண்டானதே 🎼🎼🎼

வாசலிலே தாரகைகள் நெய்த தோரணம் 🌟⭐☀️

வண்ண வண்ண நிறங்கள் அங்கே வானவில்🌈 கொண்டு வந்த பாரிஜாத பூக்கள்

மின்னும் வானத்தில் துள்ளும் இடி மின்னல் ⚡✨

துவளும் மேகத்தில் சுவைக்கும் நீர் கொண்டு

வெண்ணிலவு வேதம் உரைத்து நின்றதே!

அன்று மலர்ந்த அல்லி பூக்கள் துள்ளி விளையாட

வேண்டி நின்ற மழை தனில் மயில்கள் பாண்டி விளையாட ,

பாண்டிய நாட்டு அரசியே

உன் அரிசி போன்ற பற்கள் சிந்தும் புன்னகை

உணவருந்திய சுகம் தந்ததே 🙏🙏🙏
ravi said…
Will spend time effectively and read yours and I’m not qualified enough to comment on your write ups 🙏Will just enjoy reading them
ravi said…
Gita Shloka (Chapter 7 and Shloka 11)

Sanskrit Version:

बलं बलवतामस्मि कामरागविवर्जितम्।
धर्माविरुद्धो भूतेषु कामोऽस्मि भरतर्षभ।।7.11।।

English Version:

balama balavataamasmi
kaamaraagavivarjitam |
DharmovirudDho Bhuteshu
kamosmi BharatarShabha ||

Shloka Meaning

And I am the strength of the strong devoid of desire and passion; and in all beings I am desire
not contrary to Dharma.

Strength is the glory of man, but it should be free from desire and passion. Strength should not be abused to satisfy sensual desires and greedy acquisition of worldly possessions. It should be expressed in doin good and benevolent acts, in worship of the Divine, and the
pursuit of spiritual illumination. Whether it is intellectual or physical strength, if it is employed for selfish purposes to serve the lower impulses, it is wretched.

In such cases, it is only demonical might, an asuric force, leading to self destruction. The might of Ravana was impure by Kama,
and it leads to his destruction and that of his people. So purity in strength, nobility in might, is what the Lord wants people
to cultivate. His presence is felt in such strength.
Jai Shri Krishna 🌺
ravi said…
Gita Shloka (Chapter 7 and Shloka 10)

Sanskrit Version:

बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनम्।
बुद्धिर्बुद्धिमतामस्मि तेजस्तेजस्विनामहम्।।7.10।।

English Version:

bIjam maam sarBhutanaam
viDhi paarTha sanatanam |
buDhirbuddhimataamasmi
tejastejasvinaamaham ||

Shloka Meaning

O Arjuna! Know me as the seed of all beings, eternal. I am the intelligence of the wise, I am the splendour of the splendid.

Bijam. The Lord declares that he is the eed, the cause of all beings. From Him, the seed, all beings have come, and unto Him they return. The tree is only another form of the seed. The life force of the whole tree is already involved in the seed. The seed manifests its
life force in the new form of the tree. Even so, the Lord is the seed of all beings. It is He who is manifesting himself in different forms. The essence is He is in every thing. Thus knowing the wise man transcends all separateness that appears to exist between one
thing nd another. Whoever he may be, whatever caste or creed he may belong, high or low, the seed for him is the God himself. He is the cause of all. He is the father of all.

So all beings in essence are God, for there is nothing else but he in the whole universe. He is the cause, and he is also the effect, and the effect is actually the cause in a different form. Knowing this, let no man imagine himself to be weak, neglected, forlorn and wretched.
He is God Himself, By ignorance, he has misunderstood himself to be a limited body and a limited personality. Inspired by the words of the Lord let man throw away the veil of ignorance, and know himself as he really is (i.e.) the Supreme Brahman.

The inspiring message of Gitacharya is that He is himself the seed and cause of all beings. He is present in all.
This should give tremendous courage to all because it affirms the divine birth right of each individual. Even the lowest would
acquire Himalayan strength when he contemplates the truth. There is nothing low or wretched. The teacher of Gita says,
'I am the underlying principle behind you. It is from Me you have come.'

Such words would lift up the sinking hearts of thousands of house holders caught in the whirlpool of samsara.
What if the wave is small or big? It has behind it the mighty ocean. It subsists and is sustained by the infinite ocean.
So let no man consider himself weak, mean and downtrodden. Let him contemplate the mighty ocean of purity and blessedness with
which he is one, even as the ripple is one with the sea.

The source of every man is not either his father or grand father, but the supreme Paramatma.

Generally man claims his lineage from some ancient sage. The Lord here wants him to go a step higher and realise that He
is the seed out of which he has grown. He is the Mahapurusha.

Jai shri Krishna 🌺
ravi said…
Gita Shloka (Chapter 7 and Shloka 9)

Sanskrit Version:

पुण्यो गन्धः पृथिव्यां च तेजश्चास्मि विभावसौ।
जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु।।7.9।।

English Version:
puNyo ganDhah: prthivyam cha |
tejaschaasmi vaBhavasau
jIvanam sarva Bhuteshu
tapaschaasmi tapasvishu ||


Shloka Meaning

And,I am the sweet fragrance in the earth, brilliance in fire, life in all beings, and austerity in ascetics.

We cannot imagine the earth without smell, fire without brightness, living beings without life,
ascetics without austerity. So, the essence, the ruling principle, the characteristic quality of
every thing is the Lord Himself.
Jai Shri Krishna 🌺
ravi said…
*Tearful farewell to Sri Maa Durga* 🙏

You came from nowhere conquered all evils with human faces .

But their bloodstains mushrooms more such evils for you to kill them .

Maa , Can you not uproot all evils , corrupt minds and endangerous evils that hit the headlines every now and then ?

Maa , we have unshakeable faith in You but when we are shaken up we don't hear your vibes ...

You have an answer for your silence but we have a question to ask ...

You are mahamaya perhaps your maya covers us up with illusory material bondage , lust , kama , enmity ...

Please disconnect us from material world and let dharma lives in peace everywhere ...

See the change you want to make .

We become that change with your grace .

Come back soon and stay put with us now and for ever ..

This is my simple prayer certainly not an expensive boon for You , Maa !!👍👍🙏🙏🙏
ravi said…
*இன்றைய நாள்* 🏅🏅🏅

திரு முகம் கொண்ட ராமன் தச முகனை கொன்ற நாள் ...

பெண்ணாசை கொண்டவன்

மனசாட்சியை கொன்றவன்

மண்ணுக்குள் சென்ற நாள்

எருமை புத்தி கொண்டவனை துர்க்கை எரித்து சாம்பல் ஆக்கிய நாள் ...

மந்தம் கொண்டவர்கள் அண்டம் படைத்தவளை உணர்வார்களோ ?

வன்னி மரத்தடியில் விஜயன் ஆயுதபூஜை செய்தே

கண்ணன் சொன்ன பாதையில் சென்ற நாள்

மத்வாச்சாரியார் உடுப்பியில் உதித்த நாள்

ஒன்பது நாட்கள் ஏகாந்தமாய் இருந்த அன்னை தன் புகுந்த வீடு செல்லும் நாள்

வெற்றி வெற்றி என்றே வெற்றி ஒன்றே தரும் நாள்

சுற்றி வரும் பகைவர் தம்மை தோள் நடுங்க வைக்கும் நாள்..

தெய்வம் உண்டு தெய்வம் உண்டு என்று சொல்லும் நாள்

தெய்வ பக்தி உள்ளவருக்கு கை கொடுக்கும் நாள்

அன்னை சுத்தம் செய்து வைத்த மனம் என்றும் மணம் வீசப்போகும் நல்ல நாள் 💐💐💐
ravi said…
The most important prayer and wishes are , hey maa , let there be no kolkata ugly incidents in future . Let us treat every single woman all over the world with respect and dignity like our mothers and sisters .. 👍
ravi said…
*அம்மா* 💐💐💐

பத்தாம் நாள் இன்று ...

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும்

யான்
எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய்,

எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெம் காலும்

அன்பர்
கண்ணும் கருத்து நிறைந்தாய்.

செம்பஞ்சுக் குழம்பைப் பூசி

அழகு திகழ்கின்ற, செம்மையான,

உன் திருவடிகளாகிய தாமரைகள்

என்னுடைய நெஞ்சமாகிய நீர் நிலையில் மலரும் இன்பம் தந்தாய்

சதகண்டம் என்ற ஆயுதத்தால் முண்டாசுரனை வீழ்த்தியவளே,

யானை முகத்தினனான கஜாசுரனின் தும்பிக்கையைத் துண்டித்தவளே,

எதிரிகளான யானைகளின் கழுத்தைத் துண்டித்து எறிவதில் திறமை மிக்கவளே,

தண்டாயுதம் போன்ற தன் தோள்களின் வலிமையால் முண்டாசுரனின் சேனாதிபதியைக் கண்டதுண்டமாக வெட்டியெறிந்தவளே,

மஹிஷாசுரனை அழித்தவளே,

அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே,

மலைமகளே, உனக்கு வெற்றி வெற்றி வெற்றி உனை வணங்கும் எங்கள் எல்லோர்க்கும் என்றும் வெற்றி எதிலும் வெற்றி
ravi said…
🪷🌟🪷🌟🪷🌟🪷🌟🪷🌟

*_தினம் ஒரு கீதை_*

*ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம் | மாஸாநாம் மார்க'ஸீ'ர்ஷோsஹம்ருதூநாம் குஸுமாகர: ||10-35/|*

10-35: நான் சாம வேதத்தில் பிருஹத் சாமம்.

நான் சந்தஸ்களில் காயத்திரி.

நான் மாதங்களில் மார்கழி.

நான் பருவங்களில் வசந்த காலம்.

*_ஸ்ரீமத் பகவத் கீதை_*

*𝐒𝐫𝐢 𝐌𝐚𝐡𝐚𝐯𝐢𝐬𝐡𝐧𝐮 𝐈𝐧𝐟𝐨*

🪷🌟🪷🌟🪷🌟🪷🌟🪷🌟
ravi said…
🪷🌟🪷🌟🪷🌟🪷🌟🪷🌟

*_தினம் ஒரு கீதை_*

*ஆதி'த்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந் மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸு'ஸீ ||10-21||*

10-21: பன்னிரெண்டு ஆதித்யர்களில் நான் விஷ்ணுவாக இருக்கிறேன். ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற சூரியனாக நான் இருக்கிறேன். நான் நாற்பத்தொன்பது மருத்தேவதைகளுக்குள் மரீசியாக இருக்கிறேன். இரவில் பிரகாசிக்கின்றவற்றில் நான் சந்திரனாக இருக்கிறேன்.

குறிப்பு: ஸ்ரீமந் நாராயணனே இங்கு விஷ்ணுவாக இருக்கிறார். மற்ற 11 ஆதித்யர்களுக்கும் அந்தர்யாமியாக இருந்து இயக்கிக் கொண்டு இருக்கிறார்.

*_ஸ்ரீமத் பகவத் கீதை_*

*𝐒𝐫𝐢 𝐌𝐚𝐡𝐚𝐯𝐢𝐬𝐡𝐧𝐮 𝐈𝐧𝐟𝐨*

🪷🌟🪷🌟🪷🌟🪷🌟🪷🌟
ravi said…
*அமானவன்*
------------
'அமானவன்'...இப்படி ஒரு பெயர் கேள்விப்பட்டதில்லையே...! இது கடவுளின் பெயரா... இல்லை ஏதாவது புராணப் பாத்திரமா...!

இவனை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதுவும் இறப்புக்கு பின்னரே பார்க்க முடியும். இவனது இருப்பிடம் வைகுண்டம்.

அங்கு பெருமாளின் இருப்பிடத்திற்கு முன்னால் துவார பாலகர்கள் இருப்பார்கள்.

பெருமாள் கோயிலில் ஜெயன், விஜயன் என்ற பெயரில் சிலை வடிவாக பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு சற்று முன்னால் அமானவன் நின்றிருப்பான்.

சரி...இவனுக்கு அங்கு என்ன வேலை!

நீங்கள் தினமும் காலையில் எழும்போதே சுவாமி படத்தின் முன் விழித்திருக்கலாம்.

'ஹரி.. ஹரி..., நாராயணா... கோவிந்தா...பத்மநாபா' என்றெல்லாம் பெருமாளின் பெயர்களைச் சொல்லியபடியே எழலாம்.

எந்நேரமும் பிறரது நலம் பற்றி சிந்தித்திருக்கலாம்.

என்ன கஷ்டம்
வந்தாலும், “பெருமாளே! எனக்கு எல்லாம் நீயே.. இந்தக் கஷ்டத்தையும் நீ தந்த பரிசாக ஏற்கிறேன்'' பாசிட்டிவ்' ஆக நினைக்கலாம். புரட்டாசி சனி விரதம் இருந்திருக்கலாம்.

இப்படிப்பட்ட நல்லவர்கள் இறந்த பிறகு, வைகுண்ட வாசலுக்கு செல்வார்கள்.

அங்கே அமானவன் காத்திருப்பான்.

அவர்களைக் கண்டதும், கையைப் பிடித்து அழைத்துச் செல்வான்.

இவனுடன் வருவோரை துவார பாலகர்கள் தடுக்க மாட்டார்கள்.

பெருமாள் முன் நிறுத்தி மகாலட்சுமி தாயாரோடு பெருமாளைத் தரிசிக்க செய்வான்.

இவனுக்கு ஏன் அமானவன் என பெயர் வந்தது?

'மானவன்' என்றால் 'மனிதன்'. 'அமானவன்' என்றால் மனிதன் அல்லாதவன். அதாவது தேவபுருஷன். புண்ணியம் செய்தவர்களை பெருமாளிடம் அழைத்துச் செல்வது இவனது புண்ணிய பணி.

'அமானவன் கரத்தாலே தீண்டல் கடன்' என்கிறார் வைணவ ஆச்சாரியார் மணவாள மாமுனிகள்.

அதாவது, 'அமானவன் என்னை கைப்பிடித்து பெருமாளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்' என்கிறார்.

நம் கைகளையும் அமானவன் பிடிக்க இன்றே நல்லதை செய்யத் தொடங்குவோம்...

கோவிந்தா ஹரி கோவிந்தா !
☸️💐☸️💐☸️💐☸️💐

> மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி விஷ்ணு பக்தி குழுவில் இணையுங்கள்
👇👇
https://chat.whatsapp.com/I5QQikM3D9iGDpPzAmqCVo
ravi said…
*அம்மா*

அதி சுந்தரீ நீயே என்றே வேதங்கள் கோஷ மிட

அண்டங்கள் அனைத்தும் சௌந்தர்ய லஹரீ நீயே என்று ஆர்பரிக்க

உன் குணங்கள் கண்டே கல்யாண குண சாலினீ என்றே தேவர்கள் தேவாரம் இசைக்க

அசுரர்கள் அனைவரும் மனம் திருந்தியே

தர்மம் பக்கம் துணை இருக்க

தீராத வியாதிகள் உன் நாமம் உரைக்க ஓய்ந்து போனதே

எவ்வினை வரினும் என் வினை தனை

நல்வினை யாக்கி செய்வினை
ஏதும் இருப்பினும்

பொய் வினையாக்கி

பொன்னார் மேனியனின் ஸாயுத்தியம் தந்தாய் ...

பூ மகளே உனை மறந்தால் தானே நினைப்பதற்கு !!💐💐💐💐
ravi said…
*அம்மா*

ஆனந்தம் கூத்தாட கனக சபையில் ஆடல் அரசனைக் கண்டு மையல் கொள்கிறாய்

சித் சபையில் சிவகாமியாய்

கனக சபையில் நடேஸ்வரியாய்

நிருத்த சபையில் பாகம் பிரியாளாய்

தேவ சபையில் வேதங்களாய் தேவாரம் இசைக்கிறாய்

ராஜ சபையில் ராஜாத்தியாய்

சுந்தரஸ்வரனை ஆளுகிறாய்

கனக சபையில் கனகதாரா சொல்கிறோம்

வெள்ளி சபையில் விளக்கேற்றி வேதவல்லீ உனை வேண்டுகிறோம் 💐

சித்திர சபையில் சிவகாமி உன் புகழ் பாடுகிறோம் 💐

தாமிர சபையில் தாமரை மேனியளே

உனை தங்க பேழையில் வைத்தே தாலாட்டுகிறோம்

எல்லா சபையிலும் உனையே நினைத்திருக்க சபேசன் பத்தினியே

சங்கடங்கள் என்ற வார்த்தை அகராதியில் இனி வாழமோ ? 💐💐💐
ravi said…
BP அதிகமாக இருந்தால் அது பெரும் பாக்கியம் அன்றோ !! -

------பெரியவா

என்ன ராஜாமணி உங்க அப்பா சீதா ராமையர் எப்படி இருக்கா நீ எப்படி இருக்கே

பெரியவா அணுகிரஹத்தில் மிகவும் நன்றாக இருக்கிறேன் ..

உன் முகம் நீ சொல்வதை ஆமோதிக்க வில்லையே என்ன குறை ?

பெரியவா எவ்வளவோ முயற்சி செய்தும் என் BP குறையவே மாட்டேன்கிறது

சிரித்து க்கொண்டே ... ஏன் குறையனும் இன்னும் அதிகமாக ஆக வேண்டும் என்று பிராத்தனை செய்து கொள்

பெரியவா சொன்னது ராஜாமணிக்கு புரியவில்லை ...
நமக்கும் தான் ...

பெரியவா ... தலையை சொறிந்தார் ராஜாமணி ... பெரியவா சரியாக காதில் வாங்கி கொள்ள வில்லையோ என்று எண்ணி இன்னும் சத்தமாக சொன்னார் ... என் BP அதிகம்

மீண்டும் பெரியவா அதையே திருப்பி சொன்னார் நீ பாக்கியசாலி தான்

ராஜாமணிக்கு குழப்பம் இன்னும் அதிகமானது .. மடத்து சிப்பந்திகளுக்கும் புரியவில்லை

பெரியவா விளக்கினார்

நான் சொல்வது Bhagavan 's Protection ... இந்த BP எல்லோருக்கும் அதிகமாக கிடைக்க வேண்டும் இருக்க வேண்டும் ... கவலைப் படாதே உன் blood pressure , bhagavan 's protection ஆல் சரியாகி விடும்

ராஜாமணியின் குழப்பம் தீர்ந்தது அவர் blood pressure நார்மல் ஆனது என்று சொல்லவும் வேண்டுமோ ?
ravi said…
🪷🌟🪷🌟🪷🌟🪷🌟🪷🌟

*_தினம் ஒரு கீதை_*

ஸ்ரீமந் நாராயணனிடம் அனைத்தும் இருக்கின்றன.

அனைத்தின் உள்ளேயும் ஸ்ரீமந் நாராயணன் இருக்கிறான்.

அதாவது எங்கும், எதிலும் உள்ளும், புறமும் ஸ்ரீமந் நாராயணன் இருக்கின்ற விஸ்வரூ பத்தை கருணையுடன் அர்ச்சுனனுக்கு காட்டுவதால் இது விஸ்வரூப தரிசனம் எனப்படுகிறது.

ஸ்லோகம்-1

*அர்ஜுந உவாச*

*மத³நுக்ரஹாய பரமம் குஹ்யமத்யாத்மஸம்ஜ்ஞிதம் | யத்தவயோக்தம் வசஸ்தேந மோஹோயம் விக தோ மம || 11-1||*

10-18 ஸ்ரீஅர்ச்சுனன் கூறுகிறார்: என் மீது கருணை காட்டி உம்மைப் பற்றிய பரம ரகசியத்தை எனக்கு அருளினீர்கள். அதனால், என் மோகம் விலகி விட்டது.

*_ஸ்ரீமத் பகவத் கீதை_*

🪷🌟🪷🌟🪷🌟🪷🌟🪷🌟
ravi said…
அம்மா

கரையோரம் அமர்ந்திருந்தேன் கடலோரம் வருகின்ற லஹரீ காண

மணலோரம் வந்து சேர்ந்த சிதைந்த இரு பாதங்களும்

உடைந்து போன கரங்களும்
எனைப் பார்த்து சிரித்தன...

கண்ணில் முட்டி மோதி வந்த கண்ணீர் கடல் உப்பின் உறவு என்றே கடலில் கலந்து போயினவே

ஒன்பது நாட்கள் நீயே உயிர் என்றோம் ...

உணர்வு என்றோம்

தொட்டு வணங்கிய பாதங்கள் தொடுவார் இன்றி கடலில் மிதக்கின்றதே !!

அம்மா இது தான் வாழ்க்கை என்றால் வேண்டேன் இனி ஓர் பிறவி ...

அழிவு இல்லை உனக்கே என்றே தெரிந்தாலும்

உள்ளம் அழுவது ஏன் ...

உணர்ச்சிகள் உதிரம் கொட்டுவது ஏன் ?

பொம்மை தான் நான் கண்டது எனினும்

என் இதயம் நிற்கத் துடிப்பது ஏன்

என் உயிரில் கலந்தவளே என் மூச்சில் உறைபவளே...

வேண்டாம் இந்த மாயை ...

என் உள்ளத்தில் உனை செதுக்கி வைத்தேன்

உள்ளம் இனி உடையாமல் இருக்கவே !! 👍👍👍💐💐💐
ravi said…
Sometimes .... I wish

Sometimes, I wish I could go back in time...

Not to change the past, but to relive those little moments I overlooked.

Sometimes, I wish I could be a child again...

Not to escape life's duties, but to feel my mother's hand guiding mine as we walked.

Sometimes, I wish I could revisit my school days...

Not to ace exams, but to cherish the simple joy of laughing and playing with friends during lunch breaks.

Sometimes, I wish I could be in college again...

Not to challenge the world, but to treasure the late-night conversations about dreams and ambitions.

Sometimes, I wish I could return to the early days of my career...

Not for the excitement of new opportunities, but to truly appreciate the mentors who shaped my journey.

Sometimes, I wish I could hold my children when they were small...

Not because they've grown too fast, but to relive the magic in their eyes when they learnt something new.

Sometimes, I wish I could pause life in moments with loved ones...

Sometimes, I wish I could hold my children when they were small

Not because I fear ageing, but to give them my undivided attention, before time slips away.

🙏
ravi said…
🪷🌟🪷🌟🪷🌟🪷🌟🪷🌟

*_தினம் ஒரு கீதை_*

*மந்யஸே யதி தச்ச'க்யம் மயா தீரஷ்டுமிதி ப்ரபோ யோகேஸ் வர ததோ மே த்வம் தர்ஸ'யாத்மாநமவ்யயம் ||*

11-4 ப்ரபோ -இறைவா! உமது விஸ்வரூபத்தை நான் பார்க்க நீர் விரும்பினால், யோகேஸ்வரா எல்லா யோக சக்திகளின் ஈஸ்வரா !

உம்முடைய அழிவற்ற எல்லையற்ற விஸ்வ ரூபத்தை எனக்குக் காட்டி அருளுவீராக,

*_ஸ்ரீமத் பகவத் கீதை_*

🪷🌟🪷🌟🪷🌟🪷🌟🪷🌟
ravi said…
மரகதத் தமால மலர் மொட்டுகளை மொய்க்கின்ற
பொன்னிறக் கருவண்டுபோல்

மாதவன் மார்பினில் வாசம்
புரிந்தங்கு

மெய்சிலிர்ப் பேற்றும் விழிகள்
பரவும்

பல் வடிவத்தின் செல்வவள மாகிடும்

திருமகளின் அழகுவிழிகள்
பரிவோடு தந்த

இரு விழிகளின் கடைநோக்கு
மங்களமெ னக்கருள்கவே🙏🙏🙏
ravi said…
*அம்மா !*

உயிர் என்றே உனை நினைத்தேன்.

உயிரே நீ தான் என உணர்ந்தேன் 👍

உயிரில் உயிராய் கலந்தவளே ... !!

உயிரில் உணர்வாய் சிரிப்பவளே 😊!!

என் உயிர் உனதென்றே ஆனபின்

என் உயிர் நான் தேடுதல் புரிவது மடமை அன்றோ ?

உயிருக்கு உடல் கொடுத்தாய் உணர்ச்சிக்கு உருவம் தந்தாய் ..

உள் எழும் வார்த்தைக்கு வடிவம் தந்தாய்

உன்னுடன் என்னை சேர்த்துக்
கொண்டாய் ...

உனை அன்றி வேறு தெய்வம் நினைவில் நிற்பதில்லை ...

உனையே தொழும் வேளையில்
தோல்விகள் வியாதிகள் எங்கும் கண்ணில் படுவதில்லை

உயிரினும் மேலாய் உனை நினைக்கிறேன் ...

உயிரினும் இனிப்பாய் நாவில் வந்து நாமச் சுவை பிழிகிறாய் ...

என்னவென்று சொல்வேன் ... ?

என் உயிரும் இரவல் என்பதால்

உனக்கு கொடுக்க ஏதும் இல்லாமல் தவிக்கிறேன் !!
ravi said…
I am going through Shri Ramacharitamanasa of Gosvami Tulsidasa ...

Tulisidasa was a great devotee of lord shiva . Even in hanuman chalisa he praises sankara in disguise as gowrisa ...

In this story line he first invokes lord Ganesha and Saraswathi for knowledge and wisdom .

Secondly he invokes Shiva and Parvathi .

I am impressed by the way he narrates about them .

Thought of sharing with you all ...

Shiva and Parvathi are described as the personifications of faith and belief . ( Recall abhirami anthathi where in bhatter says

சொல்லும் பொருளும் என நடமாடும்

துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே

நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே!!)

சொல் இன்றி பொருள் இல்லை பொருள் இன்றி சொல் இல்லை ... சிவனும் பார்வதியும் இணை பிரியாத தம்பதிகள் )

Parvathi is the embodiment of faith ( Sraddha) and Shiva that of belief ( visvasa)

They are invoked because without faith and belief even the greatest seekers cannot recognize and realize God , seated in their own heart.

Faith and belief are two remarkable virtues .

As we all know , the existence of God is a constant topic for debate.

For those who are anchored in faith and belief , no proof of His existence is required .

And when there is no faith , no amount of proof is enough .

*What is the difference between Faith & Belief ?*

The sanskrit term of faith "Sraddha", is a feminine noun and that for belief " Visvasa" is a masculine one .

Parvathi represents faith -" Sraddha " and Shiva represents belief - " Visvasa " which is a masculine noun .

Faith without Belief and Vice versa are meaningless .

This is again proving Shiva and Sakthi are united and one swaroopam only .

Though they are both the two sides of the same coin, they can still see each other in love and bless us in abundance . 🙏
ravi said…
ஶ்ரீலலிதாவை வணங்கினால் எல்லோரையும் வணங்கிய பலன் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள். அதனால்தான் ஶ்ரீவித்யை போன்ற மந்திரமோ, ஶ்ரீலலிதை போன்ற தெய்வமோ, ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் போன்ற ஸ்தோத்திரமோ அன்றி வேறில்லை என்கின்றன ஞான நூல்கள்.

ஜகன்மாதாவான லலிதாம்பிகை உலக உயிர்கள் இன்புற்று வாழும் பொருட்டுத் தன்னுடைய நாமாவளிகளில் சிறந்தவற்றை வெளிப்படுத்த விரும்பினாள். அவளின் விருப்பத்தைப் புரிந்துகொண்ட வாக் தேவியரான மோதினீ, சர்வேஸ்வரி, கௌலினீ, வஸீனி, விமலா, அருணா, ஜயினீ, காமேஸ்வரி போன்றோர் தொடர்ந்து பாட, அம்பிகையின் சகஸ்ரநாம துதிப்பாடல் வெளியானது. அம்பிகையின் அனந்த கோடி திருநாமங்களில் ஶ்ரீலலிதா என்ற பெயரே அம்பிகைக்கு உவப்பானது என்பதால் அந்த பெயரிலேயே அவள் திருநாமங்கள் 1000 கூறும் பாடலும் உருவானது.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மலர்கள்
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மலர்களைப் பற்றிப் பேசும் அன்னையின் நாமங்களைப் ஏறக்குறைய பதினாறு நாமங்கள் பூக்களின் தொடர்பு பற்றி இருக்கின்றன. இவற்றில் ஐந்து நாமங்கள் தாமரை மலரினைப் பற்றி பேசுகின்றன. பன்னிரண்டு வகையான மலர்களைப் பற்றிய குறிப்பு வருகின்றது. சைதன்யம் என்னும் பேரறிவு பூவிற்கு உருவகமாகச் சொல்லப் பட்டுள்ளது.

சம்பகாசோ(h)க-புன்னாக ஸௌகந்தி கலஸத்கசா (13)
செம்பகம் அசோகு புன்னாக சௌகந்திக இவைகளினால் சோபிக்கின்ற கூந்தலை உடையவள்
நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா (19)
புதிதாக மலர்ந்திருக்கும் சம்பக பூவினை ஒத்த மூக்கினால் அதிகமான சோபையை உடையவள்.
கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா(21)
கதம்பத்தின் துளிர்களை தன காதுகளில் தரித்திருக்கும் மநோஹரமான ரூபத்தை உடையவள்
மஹாபத்மாடவீஸம்ஸ்தா (59)*
பெரிய தாமரைப் பூக்களுடைய காட்டில் இருப்பவள்
ஸஹஸ்ராராம்புஜாரூடா (105)
ஆயிரம் இதழ் தாமரை மேல் அருள்பவள்
பத்மநயநா (247)
தாமரைப் பூ போன்ற கண்களையுடையவள்
பத்மாஸநா (278)
தாமரைப் பூ ஆசனத்தை உடையவள்
ராஜீவலோசநா (308)
ராஜீவம் என்ற பதத்திற்கு மான் மீன் தாமரை என்ற அர்த்தங்களுண்டு. இவைகளைப் போன்ற கண்களை உடையவள் என்று பொருள் ராஜீவ பதத்திற்கு ராஜாவை அண்டியிருப்பவள் என்ற அர்த்தமும் உண்டு. தன் புருஷனான ராஜராஜேஸ்வரரை (மஹா கமேஸ்வரரை ) அணிடியிருக்கும் பக்தர்களை அனுகூலகமகப் பார்ப்பவள் என்றும் பொருள்
கதம்ப குஸுமப்ரியா (323)
கதம்ப மலர்களில் ப்ரியமிருப்பவள்
சாம்பேய குஸுமப்ரியா (435)*
சம்பகப் பூவில் ப்ரியமுடையவள்
தாடிமீ குஸுமப்ரபா (560)
மாதுளம்பூவின் காந்தியினைப் போன்ற காந்தியினை உடையவள்
ஜபாபுஷ்ப நிபாக்ருதி(766)
செம்பருத்திப் பூவிற்கு இணையான நிறத்தினை உடைய மேனியை உடையவள்
பாடலீகுஸுமப்ரியா(773)
பாதிரிப் பூக்களில் பிரியமுடையவள்
மந்தார குஸுமப்ரியா (776)*
மந்தாரப் பூக்களில் பிரியமுடையவள் மந்தாரம் என்பது தேவ லோகத்தின் ஐந்து மரங்களில் ஒன்று
சைதந்ய குஸுமப்ரியா(919)
(சித்) சைதன்யமாகிற புஷ்பத்தில் பிரியமுடையவள்
பந்தூக குஸும ப்ரக்யா (964)*
பந்தூக புஷ்பத்தின் காந்தி போன்ற காந்தியை உடையவள் பந்தூகம் என்பது வங்க தேசத்தில் பிரசித்தமான ஒரு மரம். அதன் புஷ்பானது அதிக சிவப்பு நிறத்தை உடையது.

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் திருநாமம் ஒவ்வொன்றும் ஆழ்ந்த பொருளும் அளவிட முடியாத சக்தியும் கொண்டவை. அற்புதமான இந்தத் துதிப்பாடல், ஹயக்ரீவரால் அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டு, அவர் மூலம் பூவுலகுக்கு வந்துசேர்ந்தது என்கிறது புராணம்.

இந்த லலிதா சஹஸ்ரநாமத்தை தினமும் ஓதுவோருக்கு இகபர சுகங்கள் யாவுமே கிட்டும் என்கின்றன புராணங்கள். சகல யோகங்களும் சௌபாக்கியங்களும் கிட்டும். குறிப்பாக குழந்தைப்பேறு, திருமண வரம், தோஷ நிவர்த்தி, உத்தியோக-வியாபார அபிவிருத்தி, ஆனந்தமான இல்லற வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் அதிகார பலமும் தொழில் வளமும் கிடைக்கும். சர்வ லோகங்களையும் ஆளும் பட்டமகிஷியான ஶ்ரீலலிதா பதவி உயர்வும் எதிர்காலமும் வழங்கக் கூடியவள். நிதி அதிகாரத்தை அதிகரிக்கும் இவள், தீய சக்திகளை விலக்கி நன்மைகளை அளிக்கக் கூடியவள். மனமொன்றி இவள் திருநாமங்களை தினந்தோறும் சொல்லி வாருங்கள்; சகல நன்மைகளும் பெறுங்கள்.

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 💐🙏
ravi said…
*அம்மா* !

நெஞ்சத்தில் உனை குடி வைக்க ஆசை

நெஞ்சம் நிறைய அழைக்கிறேன் வருவாயோ ?

அறிவேன் வந்து தங்கும் இடம் தனில்

சுகந்தம் வழிந்து ஓட வேண்டும் ...

விளக்கேற்றி அகர்பத்தி அரவணைக்க வேண்டும் ...

மஞ்சள் குங்குமம் மங்களமாய் திகழ வேண்டும்

வாசலிலே மாவிலை தோரணம் வரவேற்க வேண்டும் !!

வாக் தேவிகள் உனக்கு முன்னே அங்கிருக்க வேண்டும் !!

வேதங்கள் வந்து வெண் சாமரம் வீசவேண்டும் ...

வேழமுகம் உனை சுமந்து வரவேண்டும்

வரும் வழி எங்கும் பாலும் தேனும் ஆறாய் ஓட வேண்டும் ...

அதிலே பன்னீரும் பச்சை கற்பூரமும் மேலாடையாய் ஆக வேண்டும்

சிலந்திகள் வாழும் என் நெஞ்சமதில்

அறியாமை அறிந்தே வசிக்கும் உள்ளத்தில்

இல்லாமை ஏராளம் ... துர்நாற்றம் தாராளம்

தூர் எடுத்து எடுத்து களைத்துப்
போனேன் ...

முடியும் காரியம் அல்ல அன்றே உள் மனம் சொல்ல துவண்டு போனேன்

இமை மட்டும் மூட இதயம் மட்டும் ஓட நித்திரையில் சித்திரை கண்டேன்

அத்திரை அகல

கண்டேன்
நெஞ்சமதில் உனை இன்றே ...

வியந்து போனேன் ... !!

துப்புரவு நீ செய்தாய்

தூசி நீ துடைத்தாய்

துர்நாற்றம் தொலை தூரம் ஓடச் செய்தாய் ..

ஓம்காரத்தை என் நாவில் வைத்தாய்

கல்லாமை தனை இல்லாமை செய்தாய் ...

*அம்மா* ....

உள்ளே இருக்கும் வாக் தேவிகள் உன் நாமம் சொல்ல

வெளி இருக்கும் நான் வேதமாகவே மாறிப்போனேன் !!💐💐💐
ravi said…
*அம்மா*

உன் சிலை ஒன்று வடித்தேன் ... அது என் கலை என்று கற்றதால் ...

மலை அரசி உனக்கு என் எண்ணங்கள் கொண்டு உருவம் தந்தேன்...

அலை அலையாய் வந்த நாமங்கள்

உன் மேனிதனில் சேலையாய் வேலை செய்ததே

வலை பிண்ணும் வாழ்க்கை இதனில்

தலை சுற்றும் துன்பங்கள்

விலை பேசும் வேதனைகள்

உலைக்குள் செல்லவே உன்னிடம் வேண்டி நின்றேன்

கண் திறக்க போகிறேன் உன் கட்டவிழ்க்கப் போகிறேன் ...

அழகான உன் முகத்தில் மதுரை மூக்குத்தி போட்டேன்

காது இரண்டில் அகிலா அணியும் தாடங்கள் போட்டேன் ...

உதடுகள் சிவந்திருக்க கற்பூர வீடிகா தந்தேன்

கஸ்தூரி மஞ்சள் தனை கழுத்தெங்கும் தடவி விட்டேன் ...

இமை மூடா கண்களுக்கு
அஞ்சனம் இட்டேன் ...

அன்பெனும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்

அதில் ஆசை எனும் நெய்யை ஊற்றி வைத்தேன்

மெல்ல கண் திறந்து பாரம்மா ...

உன் காரூண்யம் பிரவாகம் எடுக்கட்டும்

கருணை மழை என பெய்யட்டும்

இல்லாமை இல்லாத நிலை வரட்டும் !!💐💐💐
ravi said…
*அம்மா*!

உன் லஹரீ கேட்டேன் ...

லகார ரூபிணியே

லயித்து போனேன் இதுதான் சொர்க்கம் என்றே !!

உன் நாமம் ஆயிரம் சொன்னேன் ...

திகட்டாத இனிப்பை முதல் முறை சுவைத்தேன்

இதுவே சுகம் என்று உணர்ந்தேன் !

இன்னும் வேண்டும் என்றே மனம் ஏங்க

அள்ளி க்கொடுத்தாய் இன்னும் முன்னூறு நாமங்களை ...

இதுவே முன்னேறும் பாதை என்றே புரிய வைத்தாய் !

உன் மஹாத்மீயம் சொல்ல வைத்தாய் மத்தியமாய் நீ அமர்ந்து கொண்டே ...

சொல்லும் போதே சொக்க வைத்தாய் கவசம் கீலகமாய் அணிய வைத்தாய்

உன் அஷ்டோத்திரம் சொன்னேன் ...

அஷ்டக்
கோணலாய் இருந்த என் வாழ்க்கை

நேர் கோடில் வந்த அதிசயம் கண்டே மலைத்துப்
போனேன்!!

சொல்ல சொல்ல இனிக்கின்றதே

சொர்க்கம் கண்ணில் தெரிகின்றதே

சுவைகள் பல கிரங்கங்கள் போல் எனை சுற்றி சுற்றி வருகின்றதே

இதுதான் உன் வரம் என்றால் இன்னும் எடுப்பேன்

உன் அருளால் பல பிறவிகள் அம்மா !!
ravi said…
Shriram

26th OCTOBER

*The Flood of God’s Grace*

When sowing, only pure, unrotten seed is selected. Devotion with some ulterior, mundane object in view is like rotten seed. Pure seed has to be carefully developed, evolved. One may begin by sowing available rotten seed; similarly, one may start devotion with some mundane aim in view. As one proceeds, one may realize the importance of undertaking devotion for its own sake. God should be prayed for this purpose. After sowing, there should be opportune rain. This is not in our control, but God arranges for it. Now if the field is hollow, water may accumulate there, and must be drained, lest excess of it decay the roots. The excess water may be drained into the adjacent field, in all likelihood with advantage to it. To breach the bund and let the water to the needy corresponds, in the case of God’s grace, to benefaction. With spiritual progress, the _sadhaka_ often gets certain occult faculties; for instance, what he says comes true, he can make out what passes in another’s mind, can go to another place unseen by others, and so on. At such times he must avoid the temptation to use such faculties for selfish purposes; he has to be specially alert in this regard. If used at all, they must be employed only to relieve others’ distress, never for any selfish end.

It would obviously be wise not to base one’s happiness on other persons or things or circumstances. This has to be learnt by practice. However, the mind cannot remain vacant; it must be provided with some occupation. God is that occupation. Because God is eternal, complete in Himself, and blissful, these qualities automatically percolate into the mind that keeps contemplating on Him. One can only imagine how sweet life must be to a mind so soaked in Him. Have an abiding consciousness that you and all that exists belong to Him; then life becomes such enjoyable fun!

The grace of God will be experienced if _nama_ is chanted with a pure heart. A _sadhaka_ should do his duty conscientiously, and live happily, leaving everything else to God, or to _sadguru_.

A thing comes or is lost as destined. Why should we then vainly feel miserable or joyful? When we know that everything belongs to God, we can leave everything to His care, and be carefree, joyful.

* * * * *
ravi said…
Shriram

25th OCTOBER

*Genuine Yearning and Utter Surrender*

God is not attained merely by eschewing carnal pleasures, not by abandoning the family, not by resorting to a forest, nor by living amongst people. Truly speaking, God is not attainable by any particular physical act or procedure. We find saints who live as ordinary householders; there are others who live as recluses.

The chief requirement is genuine yearning; such yearning is fifty per cent of the battle; it is the foundation for the edifice to follow. With this, the next part of the task becomes easier. If the yearning is there, it is not essential that sensual pleasures be discarded. One must genuinely feel that he belongs to Rama, and surrender oneself utterly to Him; that is, in the heart of hearts, genuinely and wholly live for Him. Do you think this will interfere with your _prapancha_?

In employment, does one always find a kind and considerate superior? Do we not serve him, without demur, physically, though at heart we may not like him? So, we should determine mentally to belong to Rama, though physically we may toil, willy-nilly, for _prapancha_; it will turn out even better than otherwise expected, because Rama Himself, in Whose name we do it, feels it incumbent to ensure that it does not bring Him discredit. Bibheeshana approached Rama in a truly humble spirit. Coming as he did from the enemy’s camp, and being the very brother of the opponent, he was naturally a suspect, and Rama’s counsellors all advised putting him to death. But Rama put forward the decisive argument: “He has come in complete surrender, and it is therefore my duty to protect him.” And He not only spared his life, but, further, gave him the kingdom of Lanka. That is why I say that Rama protects those who approach Him in sincere surrender.

You are so many coming to me, but has a single one of you asked me to take you to Rama? Am I here to provide you with mundane favours? Is not your approach similar to that of a thief who goes to visit Maruti in the temple and vows to crown it with a gold pinnacle if he has a good ‘scoop’ that night? What you should pray for is, ‘God, give me complete contentment in whatever condition you choose to keep me in; let me wish to ask for nothing.’

* * * * *
ravi said…
One of my close friends was asking me the essence of Soundarya Lahari and Shivananda Lahari . My answers are as follows

*Soundarya Lahari*

Verses are composed in prasanna kambeera
Each word is profound and pregnant with lot of meaning like depth of ocean . Ocean appears calm on surface . But inside it has volcano . Likewise SL is a praise of HER swaroopam but inside each verse is a Veda or Upanishad... Sri vidya n Panchathasaksari mantras ... It is a boon if we practice to chant flawlessly every day .. No substitute to this epic

Shivananda Lahari

It is subtle version of Soundarya Lahari . It is showing the way to reach god through devotion and total surrendering .

It is the combination of smaranam , mananam nithi thiyaanam contemplation...

Both are treasures and a boon from Adishankara to chant to reach the ultimate !!💐
ravi said…
*நிர்வாண ஷட்கம்* 👇🏻

நிர்வாணம் என்றால் எல்லாம் திறந்த நிலை - *கர்மம் , மாயை , இன்பம் , துன்பம் , பிறவி எல்லாம் இல்லாத நிலையை எய்துவது தான் நிர்வாண நிலை .*

*ஷட்கம்* என்றால் ஆறு - ஷட் என்றால் ஆறு தானே ????

நம்மை சிவமாக மாற்றும் நிர்வாண ஷட்கம்
--------------------------------------------------------------------------

(இது ஆதி சங்கரர் இயற்றிய நிர்வாண ஷட்கம் . இதை படித்து பொருளை உணர்ந்தால் இது நம்மை முழுமை யாக புரட்டி போட்டு விடும் .

ஒவ்வொரு வரிகளும், அவசியம் ஒவொருவரும் படியுங்கள்.

உங்களுக்கே நீங்கள் யார் என்று முழுமையாக தெரிந்து விடும்.

*சிவோஹம்* = சிவோ + அஹம்
= சிவம் என் அகத்துள் = அந்தர்யாமி ! உள்ளே உறைந்து இருப்பது.

" *சிவோஹம்* " என்று சொல்வது ஏதோ.. "நான் தான் சிவம்" என்பது பொருள் அல்ல!

இதன் பொருள் ஞான நிலையான கடை நிலையை அடைந்த பின்னரே ஏற்படுவது. முதல் நிலையில் அல்ல.

ravi said…
சிவம் என் அகத்துள் வந்து பொங்கு வதால்,நான் சிவ மகிழ்ச்சியில், சிவ சொரூபத்தில்
மிளிர்கிறேன் - அதான் உண்மை யான பொருள்...!

முடியை வளர்த்து கொண்டு, யாரோ சாமியார் பின்னாடி திரிந்து கொண்டு, சில புத்தகங்களை படித்து கொண்டு, இரண்டே வாரம் தியான யோகம் பழகிட்டு, அஹம் பிரம்மாஸ்மி, நான் கடவுள், நானே
சிவம்-ன்னு சொல்லறவங்க சில பேரு..!

"நான்" என்பது எங்கே அழிகிறதோ, அங்கே தானே "சிவம்" வரும்...?

நான் மறையை கற்றவனா ஞானி?
" *நான்* " எனபது மறையக் கற்றவனே ஞானி!

சிவோஹம் = #சிவோ + #அஹம்

இங்கே "அஹம்" என்பது = "ஆன்மாவைக்"
குறிப்பது!

இங்கே "சிவம்" என்பது = "ஆன்மாவின் ஆன்மாவைக்" குறிப்பது! = அந்தராத்மா =
பரமாத்மா!

என் ஆத்மா, அந்தராத்மா என்னும் சிவத்தில்
நிறைந்து தளும்பு கிறது...! சிவோஹம்...!

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
= சிவோஹம்! சிவோஹம்!

நெஞ்சு நிறையப் புகுந்தான்...! = சிவோஹம்!
சிவோஹம்!

அந்தர்யாமியாய் அகத்துளே நின்றான்! =
சிவோஹம்! சிவோஹம்!

அந்தர்யாமியாய் நெஞ்சு நிறைதல் = இது தான்
"சிவோ அஹம்" என்பதற்கு உண்மையான
பொருள்!

இது ஆதி சங்கரர், சிறுவனாக
இருக்கும் போது எழுதியது !

தன் கேள்வி களுக்கான பதிலைத் தேடி,
குருவைத் தேடி அலைந்த போது எழுதியது...!
மொத்தம் ஆறே பாட்டு தான்!

வீட்டை துறந்து தன் குருவை தேடி பயணித்த இளம் சங்கரர், இமாலயத்தின் அடியில் பத்ரி நாத்தை அடைந்த போது அவருக்கு 8 வயது.

அங்கே அவர் கோவிந்த பகவத் பாதரைச் சந்தித்து அவரது பாதார விந்தங்களில் வீழ்ந்து தன் பணிவைச் சமர்ப்பித்தார்.

அப்போது "நீ யாரப்பா?" என்று கோவிந்த பகவத் பாதர் கேட்ட ஒரு கேள்விக்கு, சங்கரர் இந்த சீடனே ஒரு குருவோ என்று தோற்ற மயக்கத்தை உண்டாக்கிய வகையில் ஆறு ச்லோகங்களை கூறுகிறார்.

அவையே " *நிர்வாண ஷட்கம்"* என்று பெயர் பெற்றன.

ravi said…

நிர்வாணம் என்றால் எல்லாம் திறந்த நிலை - *கர்மம் , மாயை , இன்பம் , துன்பம் , பிறவி எல்லாம் இல்லாத நிலையை எய்துவது தான் நிர்வாண நிலை .*

*ஷட்கம்* என்றால் ஆறு - ஷட் என்றால் ஆறு தானே ????

நம்மை சிவமாக மாற்றும் நிர்வாண ஷட்கம்
--------------------------------------------------------------------------

(இது ஆதி சங்கரர் இயற்றிய நிர்வாண ஷட்கம் . இதை படித்து பொருளை உணர்ந்தால் இது நம்மை முழுமை யாக புரட்டி போட்டு விடும் .

ஒவ்வொரு வரிகளும், அவசியம் ஒவொருவரும் படியுங்கள்.

உங்களுக்கே நீங்கள் யார் என்று முழுமையாக தெரிந்து விடும்.

*சிவோஹம்* = சிவோ + அஹம்
= சிவம் என் அகத்துள் = அந்தர்யாமி ! உள்ளே உறைந்து இருப்பது.

" *சிவோஹம்* " என்று சொல்வது ஏதோ.. "நான் தான் சிவம்" என்பது பொருள் அல்ல!

இதன் பொருள் ஞான நிலையான கடை நிலையை அடைந்த பின்னரே ஏற்படுவது. முதல் நிலையில் அல்ல.

சிவம் என் அகத்துள் வந்து பொங்கு வதால்,நான் சிவ மகிழ்ச்சியில், சிவ சொரூபத்தில்
மிளிர்கிறேன் - அதான் உண்மை யான பொருள்...!

ravi said…
கலைகள் பலவாகித்
தலையில் பிறைசூடித்
தவமும் பலனாகித் - திகழ்வோரை

கருணை மிகவாகிப் பணியும் அடியார்கள் அடையும் வரமாகி - அருள்வோரை

விளைமுவ் வுலகாகி உள்
முள்ளுறைவாகி
நினைவில் புதிராகி - நிறைவோரை

விடைகள் புலனாகி விளையும் சிவகாம வெளியை இதனாலே- பணிவேனே !!

மறைமும் முடிவாய் மூவுடலின் விடிவாகி

மனதுள் வதி மூன்று - விழியோனே !

முடிகள் சடையாகிப் பிரள விட நாகம்
இடையில் கலைமானுன் -கரநேயா !

அமரர் பதியாகி தமையுள் ஒளியாகி
அருளும் உயிர்நேயர் - தலைவோனே !

உமையின் மணவாளன் ஒளிரும் நடிகோனை உனையென் மனதார - நினைவேனே !
ravi said…
*அம்மா*!!

உன் அருமை நான் அறியேன்

உன் பெருமை நான் உணறேன்

உன் பொறுமை நான் புரியலேன்

என் வறுமை உன் பக்தியில்

என் சிறுமை உனை உணர்வதில்

கருமை கொண்ட எண்ணங்கள் எருமை கண்ட புத்தியில் ஏறி நின்றே கூச்சல் போட

என்றோ வேண்டிய தேவர்கள் கேட்ட வரம் மனதில் கொண்டு இன்று காக்க வருபவளே !

என்றும் உன் துணை வேண்டும் ...

நாளை வரும் உயிர்களும் நலமாய் வாழவேண்டும் ...

நல்லோர் யாரும் இல்லை எனினும் புல்லோர்கள் புவி ஆளினும்

கல்லாமை ஒன்றையே கற்றவர்கள் இருப்பினும்

உற்றவள் நீ ஒருத்தியே ...

யாதும் பெற்றவள் என்பதை மறந்து போகாதே !! 👍🙏
ravi said…
*தேவியின் மந்திர வடிவம்* 🏅🏅🏅

-பஞ்சதசாக்ஷரரீ 💐

*அம்மா*💐

ப்ரணவம் ஓம் எனும் ஓங்காரம் !!

அதில் அகாரமாய் உகாரமாய் மகாரமாய் கலந்திருப்பவள் என்றும் நமக்கு ஆதாரம் !!

மூலாதாரத்தில் அகாரம் அருள் பொழிய

இதயத்தில் உகாரம் உமையை அழைத்து வர

புருவ மத்தியில் மகாரம் மங்களம் பொழிந்திருக்க

வாக்பவ கூடம் எங்கும் வாணீயாய் மலை அரசி அமர்ந்திருக்க

மத்ய கூடத்தில் மனோன்மணியாய் மங்கை அவள் சிரித்திருக்க

சக்தி கூடம் கண்டேன்

சரண் அவள் பாதங்கள் என்றே சாஷ்டாங்கமாய் விழுந்து கிடந்தேன் ..

இனி நீ வீழ்வதில்லை என்றாள் அன்னை !!

வீரம் தோளில் புடைக்க

வெற்றி நாவில் குதிக்க

சுற்றி நின்ற பகைவர் கூட்டம் நூல் அறுந்த பட்டம் போல் பறந்ததே !!!💐💐💐
ravi said…
ஏழ்மையில் வைத்தால்தான் எண்ணுவான் என்றெண்ணி

தாழ்மையில் வைத்தாயோ தமிழ்வேலே சங்கரா

எமையென்றும்
ஆளுமை செய்கிறாய்

அதன் பொருட்டு அவச்சொல் வீழுமே உம்செவியில்

வீழாதபடி
எங்கள் வினையறுவே.

ஆசையெனும் ஆழ்குழியில் அறிந்தறியா வீழு முன்

ஆசியெனும் அருட்கரத்தால் அடியேனை காத்து

பின் மாசு மருள் மாயத்துள் மயங்கிச் செல்லாது

வீசுகின்ற வேலொளியால்
விளங்க செய்வாயே.

காசு பணம் தேவையெல்லாம் கருதும் முன் கைவந்து வீசுகின்ற எம் வியர்வையாலே விளைந்ததாக அமைய வைத்து
ஓசையின்றி வாழ்ந்தாலும் உலகத்தார் உளமகிழ்ந்து பேசும்படி செய்ய வேண்டும்.

பெருந்தகையே அருள வேண்டும்.
கூசும்படி வாழவேண்டும் குழந்தைமனம்
எமக்கு வேண்டும்.

காசினித்து அழகையெல்லாம் கண்டு ரசித்து வாழவேண்டும்.

வாசித்து தமிழ்ச்சுவையை வயிறார உண்ண வேண்டும்.

உன் பிள்ளைகள் எங்களுக்கு
என்றும் உன் ஆசி வேண்டும்.

ஹர ஹர சங்கர!!!
ஜய ஜய சங்கர!!!
ravi said…
கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே

லக்ஷ்மியே வந்தருள்கவே

கனகதா ரை
என்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே

உலகாளும் வாய்ப்பையும் இந்திரப் பதவியையும்
வேடிக்கையாய்க் கொடுக்கும்
முரணை
வெற்றிக்கொண்ட

விஷ்ணுவிற்குப்
பெரும்
ஆனந்தம் தந்து நிற்கும்

நீலோத்பல மலரின் உட்புறப் பகுதிபோல்

நளினமாய்த் தோன்றி நிற்கும்
நிலமகளின் கடைநோக்கில்

ஒருபாதி என்மீது
கணமேனும் பொழியட்டுமே (7)
ravi said…
வெள்ளை நிற மல்லிகையோ

வேறு எந்த மா மலரோ

வள்ளல் அவள் இணையடிக்கு வாய்த்ததும் எம் மலரோ ?

வெள்ளை நிறப்பூவும் அல்ல

வேறு எந்த மலரும் அல்ல !!

உள்ள கமலமடி🪷

உத்தமி அவள் வேண்டுவது !!
ravi said…
*அம்மா*

பர்வத ராஜனுக்கு மகளாய் வந்தாய் ... பாரெங்கும் ஆட்சி செய்தாய்

பிரம்ம சாரிணீயாய் வந்தே பிரம்மம் ஒன்றே என புரியவைத்தாய்

சந்திரகண்டா வாய் வந்தே அமுதம் பொழிகிறாய்

கூஷ்மாண்டாவாய் வந்தே என்னுள் கூத்தனுடன் நடம் புரிகிறாய்

ஸ்கந்த மாதாவாய் வந்தே சுகந்தம் தருகிறாய்

காத்யாயிணீ யாய் வந்தே காந்தம் என இழுக்கிறாய்

கால ராத்ரீயாய் வந்தே காலனை எட்டா தூரம் ஓட வைக்கிறாய்

மஹா கௌரீயாய் வந்தே மனதை சுத்தம் செய்கிறாய்

ஸித்தி ப்ரதாவாய் வந்தே ஸித்தி தந்து முக்தி தருகிறாய்

எங்கும் நீயே என் கண்களுக்கு

இமை மூடா வரம் வேண்டும்

மூடும் நேரமும் உனையே பார்த்திருக்க !!!💐💐💐
ravi said…
*அம்மா* .... 🪷

நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை

என்றும் போல் நீ உள்ளாய்

எழிலாய் ஏற்றமாய் இரக்கத்தின் உச்சமாய் !!

அன்பில் வாழும் நெஞ்சங்கள் பிரசவிக்கும் ஆயிரம் பாடல்கள் ...

ஆயிரம் பாடல்களும் உன் நாமங்கள் ... தேனிலும் அதி சுவை கொண்டவை 💐

என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் ...

பொன்னிலே பூவை அள்ளும் உன் புன்னகை ஒன்றில் புவி தனை மறந்தேன் !!

உன் கண்ணிலே காந்தம் வைத்து உன் கவிதை பாடச் சொன்னாய்

உண்மையில் உன் சொந்தம் யுகம் யுகம் கண்டதம்மா

உள்ளம் பூரிக்க ஏற்றி வைப்போம் தீபம் இன்று என்றும் நீ மகிழ்ந்திருக்க !!💐💐💐🪔🪔🪔🪔🪔
ravi said…
சங்கரம் லோக சங்கரம்!!!

துடிக்கின்ற இதய துடிப்பில் நீர்...

பேசாத தனிமையில் மௌனமாய் நீர்...

பேச நினைத்த வார்த்தைகளில் நீர்...

கண்மூடிய இரவுகளில் கனவாக நீர்...

விழித்தெழும் காலை பொழுதுகளில்
நிஜமாய் நீர்...

விழி பார்க்கும் திசை யாவும் நீர்...

ஊற்று நீரை போல்
பெருகி வரும் கண்ணீர் துளிகளில் நீர்...

தேடலில் நீர்...

தொட்டும் தொடாமலும் தவழ்ந்து செல்லும்
காற்றிலும் நீர்...

நினைவுகளில் நீர்...

முகம் பார்க்கையில்
கண்ணாடி பிம்பமாய் நீர்...

எங்கெங்கு காணினும் சங்கரனே..
ஹர ஹர சங்கர!!!
ஜய ஜய சங்கர!!!
ravi said…
தீபாவளி திருநாளில் தெருவெல்லாம் தீபங்கள் 🪔🪔🪔🪔🪔

தேய்ந்து போன நெஞ்சமதில் தேயாத நேசங்கள்

ஒரு நரகாசுரனை கொன்று ஒருமுறை தான் வருடமதில் கொண்டாடு
கிறோம்!!🪔

பல நரகாசுரர்கள் வீதி வலம் வர வீடெங்கும் கோலம் போடுகிறோம் ...

அழிவது அதர்மம் என்றால் அனுதினமும் அசுரர்களை கொல்ல வேண்டாமோ ... ?

புத்தாடை நடை உடுத்தி

பூச்செண்டு மணம் பரப்பி

பட்டாசுகள் பல வெடித்து

பலகாரங்கள் உள் அனுப்பி

மனம் தனில் நல்ல குணம் நிரப்பி

நாடெங்கும் நலம் பெறுக நல்லாசி வேண்டிடுவோம் யாதுமான காளியிடம்...

வரங்கள் தந்திட தடை இல்லை அவளிடம்
ravi said…
*அம்மா*

உன் சிலை ஒன்று வடித்தேன் ... அது என் கலை என்று கற்றதால் ...

மலை அரசி உனக்கு என் எண்ணங்கள் கொண்டு உருவம் தந்தேன்...

அலை அலையாய் வந்த நாமங்கள்

உன் மேனிதனில் சேலையாய் வேலை செய்ததே

வலை பிண்ணும் வாழ்க்கை இதனில்

தலை சுற்றும் துன்பங்கள்

விலை பேசும் வேதனைகள்

உலைக்குள் செல்லவே உன்னிடம் வேண்டி நின்றேன்

கண் திறக்க போகிறேன் உன் கட்டவிழ்க்கப் போகிறேன் ...

அழகான உன் முகத்தில் மதுரை மூக்குத்தி போட்டேன்

காது இரண்டில் அகிலா அணியும் தாடங்கள் போட்டேன் ...

உதடுகள் சிவந்திருக்க கற்பூர வீடிகா தந்தேன்

கஸ்தூரி மஞ்சள் தனை கழுத்தெங்கும் தடவி விட்டேன் ...

இமை மூடா கண்களுக்கு
அஞ்சனம் இட்டேன் ...

அன்பெனும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்

அதில் ஆசை எனும் நெய்யை ஊற்றி வைத்தேன்

மெல்ல கண் திறந்து பாரம்மா ...

உன் காரூண்யம் பிரவாகம் எடுக்கட்டும்

கருணை மழை என பெய்யட்டும்

இல்லாமை இல்லாத நிலை வரட்டும் !!💐💐💐
ravi said…
*Deepavali Message*

*Wisdom is to know Where to Stop*

I really enjoy "Kaun Banega Crorepati," a show that blends intelligence and entertainment. It adds to my knowledge, and I feel very happy whenever my answers are correct.

In a recent episode, Neeraj Saxena was the fastest to answer in the "Fastest Finger" round and took the hot seat.

He sat very calmly, without shouting, dancing, crying, raising his hands, or hugging Amitabh. Neeraj is a scientist, a Ph.D., and a Vice-Chancellor of a university in Kolkata. He has a pleasant and simple personality. He considers himself fortunate to have worked with Dr. A.P.J. Abdul Kalam and mentioned that initially, he thought only about himself, but under Kalam's influence, he began thinking about others and the nation as well.

Neeraj started playing. He used the audience poll once, but since he had the "Double Dip" lifeline, he got the chance to use it again. He answered all the questions with ease, and his intelligence was impressive. He won ₹3,20,000 and an equivalent bonus amount, and then there was a break.

After the break, Amitabh announced, "Let's proceed, Dr. Sahab. Here comes the eleventh question..." Just then, Neeraj said, "Sir, I would like to quit."

Amitabh was surprised. Someone playing so well, with three lifelines still left, and a good chance to win a crore (₹1,00,00,000), was quitting? He asked, "This has never happened before..."

Neeraj calmly replied, "Other players are waiting, and they are younger than me. They should also get a chance. I have already won a lot of money. I feel 'what I have is enough.' I do not desire more."

Amitabh was stunned, and there was a moment of silence. Then, everyone stood up and applauded him for a long time.

Amitabh said, "We have learned a lot today. It is rare to see a person like this."

To be honest, it is the first time I have seen someone with such an opportunity before them, who thinks about others getting a chance and considers what they have as more than enough. I mentally saluted him.

Today, people are only chasing money. No matter how much they earn, there is no satisfaction, and the greed never ends. They are losing out on family, sleep, happiness, love, and friendship while chasing money.

In such times, people like Dr. Neeraj Saxena come as a reminder. In this age, satisfied and selfless people are hard to find.

After he quit the game, a girl took the hot seat and shared her story: "My father threw us out, including my mother, just because we are three daughters. Now, we live in an orphanage..."

I thought, if Neeraj had not quit, being the last day, no one else would have gotten a chance. Because of his sacrifice, this poor girl got an opportunity to earn some money.

In today's world, people are not ready to give up even a single penny from their inheritance. We see fights and even murders over it. Selfishness is rampant. But this example is an exception.

God resides in humans like Neeraj, who think about others and the country. I will never forget this great person in my life. I am happy to have had the chance to write about such a unique personality today.

*When your needs are fulfilled, you should stop and give others a chance.*

Yes, One should retire at 58 or 60. If possible, start doing free seva for the betterment of the society, not for money!

*Keep yourself fit and make the family and society better!*

🙏
ravi said…
அகம் என்பதில்லை- நான் அறிவென்பதில்லை

அகங்காரம் இல்லை - நான் அகங்காரம் இல்லை !!

ஐம்புலனும் இல்லை நான் ஆகாயம் இல்லை

தீயும் நானில்லை நிலம் வாயு நானில்லை !!

பேரானந்தம்!! நானே சிவம்

நானே சிவம்
நானே சிவம்

நானே சிவம்
நானே சிவம்

ப்ராணன் நானில்லை பஞ்ச கோசங்கள் இல்லை !!

தாழேழும் இல்லை
பஞ்ச வாயு நானில்லை !!

கரமென்பதில்லை- நான் குதமென்பதில்லை

பதமென்பதில்லை என் பேச்சும் நானில்லை !!

பேரானந்தம்!! நானே சிவம்

நானே சிவம்
நானே சிவம்

நானே சிவம்
நானே சிவம்

விருப்பென்பதில்லை

ஒரு வெறுப்பென்பதில்லை

பேராசை இல்லை பெரும் கர்வம் இல்லை !!

தர்மங்கள் இல்லை
காம மோட்சங்கள் இல்லை

பொருளேதும் இல்லை பொறாமை இல்லை !!

பேரானந்தம்!! நானே சிவம்

நானே சிவம்
நானே சிவம்

நானே சிவம்
நானே சிவம்

பாவங்கள் இல்லை நான் புண்ணியங்கள் இல்லை

சோகங்கள் இல்லை - சுக போகங்கள் இல்லை !!

மந்திரங்கள் இல்லை- நான்

புண்ணிய தீர்த்தங்கள் இல்லை

வேதங்கள் இல்லை நான் யாகங்கள் இல்லை !!

பேரானந்தம்!!
நானே சிவம்

நானே சிவம்
நானே சிவம்

நானே சிவம்
நானே சிவம்

சாதிகள் இல்லை குரு மாணாக்கன் இல்லை

நாதியாய் உறவோர் நண்பர்கள் இல்லை!!

பிறப்பொன்றும் இல்லை

எனைப் பெற்றோரும் இல்லை

இறப்புக்கு என்று பயமேது மில்லை !!

பேரானந்தம்!! நானே சிவம்

நானே சிவம்
நானே சிவம்

நானே சிவம்
நானே சிவம்

மாற்றங்கள் இல்லா உருவில்லா அருவன் !

எல்லோரும் ஆகி எங்கெங்கும் பரவி

பற்றொன்றும் இல்லா சிவம் எனும் ஒருவன்

பேரானந்தம்!! நானே சிவம்

நானே சிவம்
நானே சிவம்

நானே சிவம்
நானே சிவம்
ravi said…
*அம்மா*!!

தீபாவளித் திருநாளில் தீபங்கள் ஏற்றி வைத்தேன் .. 🪔🪔🪔

ஏற்றி வைத்த தீபம் ஒன்று எனை பார்த்து சிரித்ததே ..

ஏன் இந்த சிரிப்பு என்றேன் ...

மத்தாப்பு கம்பிகளில் புகை வர்ணம் கண்டேன்

தன்னை சுற்றும் சக்கரத்தில் பொரி வண்ணம் கண்டேன் ...

புஷ்வானம் பூ சொரியக்கண்டேன்

புத்தாடை பூரிப்பு அடையக்கண்டேன் .

இனிப்புச்சுவை கரும்பாய் இனிக்கக் கண்டேன்

குறை ஒன்று கண்டேன்

நிறை இல்லை என் மனதில் ...

தீபம் பேசி முடித்தது

என்ன குறை கண்டாய்?

சொன்னால் சுகம் பெறுவேன் என்றேன் !!

தினமும் தீபாவளி வந்திடவே

அவள் நாமம் சொன்னால்

வானம் மின்னாதோ தாரகைகள் தங்கம் சொரியாதோ ...

இடி வந்து வெடி வைக்க

இனிக்கும் அவள் நாமங்கள் இனிப்புக்கு இனிப்பு ஊட்டாதோ ?

உண்மை ...

காசை கரியாக்கும் புகை தனில் அவள் சிகை தனை மறந்து போனேன் ...

சுவைக்கும் இனிப்புதனில் திகட்டாத இனிப்பை தேட மறந்தேன் ...

ஞானத்தை மறந்து விட்டு அஞ்ஞானம் தனில் தீபம் ஏற்றி வைத்தேன் ...

தீ சுட்ட புண்ணை போல் வாடுகிறேன் ..

தெரிந்தும் அவள் நாமம் தெரியாமல் போனேன்

பிழை இல்லை ... எல்லாம் அவள் செயலே என்றே உணர்ந்து விட்டால்

தினமும் தீபாவளி தான் வாழ்க்கை என்றே கண் சிமிட்டி சொல்லியது நான் ஏற்றி வைத்த தீபம் 🪔
ravi said…
தினம் ஒரு(தெய்வத்தின்)குரல்
யாருமே இன்னொருவரிடம் தோற்றுப்போனால் அவமானம்தான் கொள்வார். ஆனால் இதற்கு ஒரு விதி விலக்கு உண்டு. சொந்தப் பிள்ளையிடம் தோற்றுப்போனால் மட்டும் அவமானத்துக்குப் பதில் பெருமையாகவே இருக்கும். ‘புத்ராத் இச்சேத்பராஜயம்’ என்று இதையே சொல்வார்கள். இதற்கு அநுசரணையாக, பரமேசுவரனும் கூடத் தன்னாலேயே வதைக்க முடியாத தாரகாதி அசுரர்களை, தன் குமாரனான சுப்பிரமணியன் சம்ஹாரம் செய்ததில் பெருமையே கொண்டார். இதற்கு முன்னால் தக்ஷிணாமூர்த்தியாக, மூல குருமூர்த்தியாக இருந்த அவரே சுப்பிரமணியஸ்வாமியிடம் பிரணவ உபதேசம் வாங்கிக்கொண்டு, தன்னைவிட ஒருபடி பிள்ளையை உயர்த்திக்காட்டிப் பெருமை அடைந்தார். இப்படியாக ஈஸ்வரன் ஞானம், வீரம் இரண்டிலும் தன்னைவிடத் தானே அதிகப் பிரகாசமான ரூபமெடுத்துக்கொண்டு சுப்பிரமணியராக வந்ததற்குக் காரணம் அம்பாளின் சேர்க்கைதான். காமன் எரிந்தபின் அவள் கரும்பு வில்லும், மலர் அம்பும் தரித்துக் காமேசுவரியாகி, இவரைத் தன்னிடம் அன்பு கொள்ள வைத்ததுதான் இத்தனைக்கும் காரணம்.

இந்தப் புராணக் கதைக்கு திருஷ்டாந்தமாகவே, இன்றைக்கும் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் ஆலயத்துக்கும், காமாக்ஷியம்மன் ஆலயத்துக்கும் நடு மத்தியில் குமரக்கோட்டம் என்கிற சுப்பிரமணியர் ஆலயம் இருக்கிறது. ஸோமாஸ்கந்த மூர்த்தத்தில் எப்படி ஈஸ்வரனுக்கும் உமாதேவிக்கும் நடுவில், ஸ்கந்தர் இருக்கிறாரோ, அப்படியே காஞ்சியில் காமாக்ஷியின் காமக்கோட்டம் அல்லது காமகோடிக்கும் ஏகாம்பரேசுவரரின் ஆலயமான ருத்ரகோடிக்கும் மத்தியில் குமரக்கோட்டம் இருக்கிறது.

தக்ஷிணாமூர்த்தியைக் கல்யாணசுந்தரராகக் காமாக்ஷி மாற்றினாளே, அது எதற்காக? தாரகாதிகளின் வதத்துக்காக மட்டுமல்ல. ஜனன மரணங்களிலிருந்து விடுபடுவதற்காகவே பல ஜீவர்கள் ஜனனம் எடுக்க வேண்டும். அவர்களின் கஷ்டங்களையும், அஞ்ஞானத்தையும் போக்குவதற்காகக் கருணாமூர்த்தியான ஒரு கடவுள் வேண்டும். தக்ஷிணா மூர்த்திக்கு மாயா பிரபஞ்சத்தையோ, அதிலிலுள்ள பிரஜைகளையோ அவர்களுடைய கஷ்டங்களையோ பற்றிச் சிந்தையே இல்லை. ஞான சாகரமாக இருந்த அவரைத் கிருபா சமுத்திரமாக்கி ஜீவராசிகளின் துயர் தீர்க்கவைக்கவே, அம்பிகை, காமேசுவரியாகி அவரைக் கல்யாண சுந்தரராக்கினாள். இவளே இந்த லோக அநுக்கிரகத்தைச் செய்கிற யோக்கியதை வாய்ந்தவள்தான். அவரை இவள் அநுக்கிரகம் செய்ய வைப்பதாகச் சொன்னாலும், வாஸ்தவத்தில் செய்பவள் இவளேதான். சும்மா இருப்பதுதான் அவர் சுபாவம். செயல் என்று வந்துவிட்டாலே அது இவளுக்கு உரியதுதான். இருந்தாலும் ஒரு லீலையாக அவர் செய்வதுபோல் காட்டினாள். அவ்வளவுதான். லோகத்தில் ஸ்திரீ தர்மம் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுவதற்காகத் தனக்குப் பதில் ஒருத்தனை ஏற்படுத்திக்கொண்டு, அவனுக்கே பெருமையை எல்லாம் சேர்த்தாள்.

பரமேசுவரனிடம் தம்மீது மோகத்தை உண்டாக்கினாள் காமாக்ஷி. எதற்காக? மநுஷ்யர்களின் மோகத்தை அவர் அடக்கி, அவர்களுக்கு ஜனன நிவிருத்தி தரவேண்டும் என்பதற்காகவே. கலப்பில்லாத ஞான மயமாக இருக்கிற ஈஸ்வரனை லோக க்ஷேமத்துக்காக மோகிக்க வைத்த சிவகாம சுந்தரி அவள். ‘இப்படிப்பட்ட நீயே மோகத்தில் மூழ்கிக் கிடக்கிறவர்களைக் கைதூக்கி மோக்ஷம் தருகிறாயே, என்ன ஆச்சரியம்!’ என்று பாடுகிறார் மூகர்.
ravi said…
முருகா

அழகென்ற சொல்லுக்கு அகராதியில் வருவது உன் பெயர் அன்றோ

கருணை எனும் சொல்லிற்கு கந்தன் எனும் நாமம் சொந்தம் அன்றோ ?

உன் புகழுக்கு எல்லை கண்டோர் இன்னும் பிறக்க வில்லை

உன் அருளுக்கு மாற்றுத் தெய்வம் உளதோ இல்லை

உன் திருக்கை வேல் வெற்றி தவிர வேறு கண்டதில்லை

வேதங்கள் உன் கடை இன்றி மலர்வதில்லை

சேவலும் மயிலும் உனைக்கண்டு ஆடும் நடனம் அந்த கூத்தனும் ஆடுவதில்லை

உன் நாமம் சொல்வோர்க்கு வினைகள் அனைத்தும் ஓடுவதில் வியப்பில்லை 🦚🐓🦯
ravi said…
முத்தமிழில் உதித்தவனே மூன்றாம் கண்ணில் பிறந்தவனே

முன்னவனுக்கு பின்னோனே பின்னவனுக்கு முன்னோனே

பிரணவம் தனில் உறைபவனே

உத்தமர்களின் சித்தம் நிறைந்தவனே

யார் படை தோற்கும் என்றே ஆறுபடை அமர்ந்தாயோ

ஆறுதலை கேட்போர்க்கு மாறுதலை தருவாயோ

குருவாய் வருபவனே

குகன் என்ற நாமம் கொண்டவனே

சஷ்டியில் விரதம் இருந்தால் சக்தியின் பாலகனே சந்தங்கள் நீ தருவாய் ...

தமிழில் உனை புகழ்ந்தால் திருவும் புகழும் அள்ளித் தருவாய் ...

திருப்புகழில் உனை துதித்தால் சிங்கார மயில் என ஆடிவருவாய் ...

கண் கொஞ்சம் அசந்து விட்டால் சேவலாய் வந்தே எழுப்பிடுவாய்

வேல் மாறல் சொல்லி விட்டால் வினை முழுதும் அழித்திடுவாய் ...

அனுபூதி நீ தந்தே அணைத்து க் கொள்வாய் உன்னில் என்னை
ravi said…
கையைச், சக்தி தனக்கே கருவி யாக்கு – அது
சாதனைகள் யாவினையுங் கூடும்

கண்ணைச், சக்தி தனக்கே கருவி யாக்கு – அது
சக்தி வழியதனைக் காணும் –

செவி, சக்தி தனக்கே கருவியாக்கு – சிவ
சக்தி சொலும் மொழியது கேட்கும்

வாய், சக்தி தனக்கே கருவியாக்கு – சிவ
சக்தி புகழினையது முழங்கும் –

பாட்டினிலே சொல்வதும் அவள்சொல் லாகும்!

பயனின்றி உரைப்பாளோ?

பாராய், நெஞ்சே!
கேட்டது நீ பெற்றிடுவாய்,

ஐய மில்லை,
கேடில்லை, தெய்வமுண்டு வெற்றியுண்டு,

மீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதி சக்தி,
வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி,

நாட்டினிலே ஜனகனைப்போல் நமையும் செய்தாள்,

நமோ நம ஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே!
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின் )குரல்
ஸ்கந்த சரித்திரத்திலே இது விவாஹம். அந்தச் சரித்திரத்திலே ஸந்நியாஸமும் உண்டு. ஆனால் விசித்ரமாக, ஸுப்ரம்மண்ய ஸ்வாமி விவாஹத்துக்கு முந்தி ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டவர்! க்ருஹஸ்தாச்ரமத்துக்கு முந்தி ஸந்நியாஸாச்ரமம்! முதலில் ஸந்நியாஸம், அப்புறம் மஹாசக்திமானாக யுத்தம் செய்து சத்ரு ஸம்ஹாரம், அதற்கும் அப்புறம் அண்ணாவின் அநுக்ரஹ சக்தியைக் கொண்டு கல்யாணம் என்று ஸ்கந்த சரித்ரம் வேடிக்கையாக, புதுமையாகப் போகிறது.

அவர் ஸந்நியாஸியான நிலைதான் தண்டாயுதபாணி. “பழம் நீ-பழநி”க் கதை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். வாஸ்தவத்தில் அது தண்டாயுதமில்லை. தண்டம்தான். நாங்கள் வைத்துக் கொண்டிருக்கிற, ஆயுதமாயில்லாத, மூங்கில் கழிதான். தண்டாயுதம் என்று ஆயுதமாக இருக்கப்பட்டது ஸேநா நாயகனின் ஆயுதம். லலிதாம்பாளுடைய ஸேநாநாயகிக்கு தண்டினி என்றே பேர். அப்படிப்பட்ட ஆயுத தண்டத்தை வீசிச் சண்டை போடுவதற்கு முந்தியே மனஸை அடக்கி வைப்பதற்கு அறிகுறியான சாந்தி தண்டத்தைப் பிடித்துக் கொண்டு பழநி மலை உச்சியில் நின்றவர் தண்டபாணி. நமக்கு வேண்டுமானால் மனஸை அடக்குவதுதான் மஹாயுத்தமாயிருப்பதால் இந்த தண்டமும் ஆயுதமாயிருக்கலாம். அவருக்கு அது ஒரு அலங்காரம்தான். நமக்கு reminder-ஆக (ஞாபகமூட்டியாக) அவர் வைத்துக் கொண்டிருப்பதுதான்.

எந்த ஸ்வாமிக்குமில்லாத பரமஞானமான துறவறக்கோலம்! இப்படி அதிபால்யத்தில் மொட்டை அடித்துக் கொண்டு, ஒரு சின்ன கோவணத்தைக் கட்டிக் கொண்டு தண்டமும் கையுமாக வேறே ஸ்வாமி உண்டா? அழகுக்கு ஈடில்லாதவர், சக்தியில் ஈடில்லாதவர், ஸ்தானத்தில் ஈடில்லாமல். தேவ நாயகனாக அவதரித்தவர் ஆறு நாள் பால்ய லீலைக்குள்ளேயே இப்படி ஆண்டி ஆகி, “ஞானபண்டித ஸ்வாமீ!” என்று பாடி மனஸ் உருகும்படியான சாந்தி ஸ்வரூபமாக நிற்கிறாரென்றால், அதற்கு யார் காரணம்?

விக்நேச்வரர்தான்!

இவர் அப்பா-அம்மாவைப் பிரதக்ஷிணம் பண்ணிப் பழத்தை அடித்துக் கொண்டு போனதால்தான் அவர் தோற்றுப் போய் ஆண்டியாகி விட்டார்.

லோகத்துக்கெல்லாம் பரம சாந்திக்கும் ஞானத்துக்கும் மூர்த்தியாக அவரை இப்படி ஆக்கின ‘க்ரெடிட்’ பிள்ளையாருக்குத்தான்!

அப்புறம் தாயார்-தகப்பனார் போய் ஸமாதானம் பண்ணினார்கள். இதெல்லாம் ஒரு நாடகந்தானே? கோவணாண்டியும் தடபுடலாக யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு கமான்டர்-இன்-சீஃபாகக் கிளம்பினார். ஆனாலும் தாம் ஆண்டியாயிருந்த அவஸரம் [கோலம்] லோகத்தில் என்றைக்கும் இந்த்ரிய நிக்ரஹத்தையும், ஞானத்தையும், சாந்தத்தையும் ‘வைப்ரேட்’ செய்து கொண்டிருக்கட்டுமென்று கிருபை கூர்ந்து அந்த அவஸரம் என்றைக்கும் பிம்பரூபத்தில் ஜீவகலையோடு இருக்கும்படியாக “சார்ஜ்” பண்ணிவிட்டுக் கிளம்பினார்.

தேவஸேநா நாயகன் என்ற உச்சமான அப்பாயின்மென்டுடனேயே ஸுப்ரஹ்மண்யர் பிறந்தது;அவர் வள்ளி கல்யாண மூர்த்தி என்ற கோலத்தில் தம்பதியாக, நமக்கு ஒரு கருணைத் தாயாரைச் சேர்த்துக் கொண்ட பிரபுத் தகப்பனாராக ஆனது; ஞான வைராக்ய ஸ்வாமியாகப் பழநியில் நித்ய ஸாந்நித்யம் கொண்டது ஆகிய மூன்று முக்கியமான ஸம்பவங்களிலும் விக்நேச்வரரின் நெருங்கிய ஸம்பந்தமிருக்கிறது.

அதனால்தான் அந்தத் தம்பிக்கு இவர் தமையன் என்று தெரிவிக்கவே ஸ்பெஷலாக ஒரு நாமா இருக்கணுமென்று ‘ஸ்கந்த பூர்வஜன்’ என்று ஷோடச நாமாவளியில் கொடுத்திருக்கிறது.

பூர்வஜர் என்றால் முன்னவர், முதலில் தோன்றியவர் – ஆதி. இந்தப் பேரோ பதினாறில் கடைசியாக, அந்தமாக, வருகிறது. ஆதியையும் அந்தத்தையும் சேர்த்து ஸம்பூர்ணத்வத்தைக் காட்டுவதாகத் தோன்றுகிறது.
ravi said…
3rd day

பூக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தே பூக்கோலம் போட்டதம்மா !

தேர் எல்லாம் ஒன்று சேர்ந்து தேரோட்டம் கண்டதம்மா !

நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து தோரணங்கள் கட்டியதம்மா !

நிலவும் கதிரும் தெருவெங்கும் வெளிச்சம் தந்தம்மா !

இடியும் மின்னலும் ஒட்டியாணம் போட்டுக்
கொண்டதம்மா!

ஆறுமுகன் வரும் சேதி கேட்டு அகமும் புறமும் ஆனந்தம் நிரம்பி வழிந்ததம்மா !

தானவர்கள் ஓடும் சத்தம் கேட்டு தாரகைகள் சிரித்ததம்மா !

குழந்தை வேலன் வேல் பிடித்து வினை களைந்து

கொலுசு கொக்கரிக்க

மார்பில் மணிகள் தத்தளிக்க

நெற்றி எங்கும் திருநீறு மணமணக்க

சிரித்து வரும் நேரமதில்

மனம்
என்றும் இல்லா ஆனந்தம் கண்டதம்மா ...

மணம் வீசும் அவன் பிஞ்சு பாதங்கள் என் தலை மீது

தத்தித் தாங்கிட தக தரிகிடதோம்

தித் தாங்கிட தக தரிகிடதோம்
தகதித் தாங்கிட தக தரிகிடதோம்

என்றே நடம் புரிகிறதம்மா !!💐💐💐

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை