சிவானந்தலஹரி 98-கவிதை எனும் காரிகை !!


அடுத்த ஸ்லோகம் பார்வதியின் பதியே, பரமேஸ்வரா! சமஸ்த ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பத்தவளும், எளிதில் அர்த்தத்தைப் போதிக்கும் சுலபமான பாதங்கள் கூடியதும், மெல்ல மெல்லத் அடி வைத்து அழகாக நடப்பவழும் , லக்ஷனங்களுடன் கூடிய ஆர்யா முதலிய வருத்தங்களை உடையதும், நல்ல நிறம் கொண்டவலும், காவ்யா லக்ஷனங்கள் கொண்டவளும் ஶ்ருங்காரரசம் உடையவளும் சிறந்த நற்குணங்கள் கொண்டவள் ஆனேன் கவிதை என்ற பெண்மணியை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என கவிதை நயம் பொங்க, ச்லேடையாக சொல்லி சிவானந்தளஹரி எண்டர் என்ற பக்தி வெள்ளத்தை ஈசன் பாதங்களில் சமர்ப்பணம் செய்கிறார் !

உன்னதமான பக்தி வெளிப்பாடு !

எனக்கு மிகவும் பிடித்த ஸ்தோத்திரம் இது. பிரதி பிரதோஷ காலத்திலும் சொல்வேன் . அப்படி ஒரு மஹா பிரதோஷ காலத்தில் பெரியவா சந்நிதியில் சொல்லும் பாக்யம் கிடைத்தது ! அவர் அருளும் கிடைத்தது ! வாழ் நாள் முழுதும் நினைவில் நிலைத்து நிற்கும் ஒர் அனுபவம்

ஸர்வாலங்காரயுக்தாம் ஸரலபத3யுதாம் ஸாது4வருத்தாம் ஸுவர்ணாம்       ஸத்3 பி4ஸ்ஸம்ஸ்தூயமானாம் ஸரஸ-குணயுதாம் லக்ஷிதாம்                                                            லக்ஷணாட்4யாம்|உத்3யத்3பூஷா-விசேஷா-முபக3த-விநயாம் த்3யோதமானார்த2ரேகா3ம்       

           கல்யாணீம் தே3வ கௌ3ரீ-ப்ரிய மம கவிதா - கன்யகாம் த்வம்                                                              க்3ருஹாண ||      98       

கௌரீ மணாளனான மஹாதேவா! எனது இக்கவிதைக் கன்னிகையை (நீர்) ஏற்றுக்கொள்ள வேண்டும். (பாணிக்கிரஹணம் புரிந்துகொள்ள வேண்டும்.) இனி இச்சுலோகம் கன்னிகையைக் குறிப்பதாயும், கவிதையைக் குறிப்பதாயும் இருபொருள்பட அமைந்துள்ளது.  

கன்னிகையைக் குறிக்கும் பொருள் வருமாறு:       இவள் எல்லா அலங்காரங்களுடனும் (நகைகளுடன்) கூடியவள்; சீரிய ஒழுக்கம் படைத்தவள்; நல்ல நிறம் கொண்டவள்; ஸாமுத்திரிகா லக்ஷணங்கள் கொண்ட உத்தமி; பிரகாசமான பூஷணங்களால் சிறப்புற்றவள்; வினயம் உடையவள்; தனரேகை ஒளிர்பவள்; மங்கள வடிவினள். (கல்யாணம் புரிய உகந்த கல்யாணி.) 

கவிதையைக் குறிக்கும் பொருள்:       இக்கவிதைப் பெண் (உவமை முதலான) எல்லா அலங்காரமும் (அணியும்) கூடியவள்; எளிய சொற்களால் ஆக்கப்பட்டவள்; நல்ல விருத்தத்தில் அமைந் தவள்; நல்ல எழுத்துக்களால் உருவானவள்; நல்லோரால் போற்றப்படுபவள்; பலவித (நவ) ரஸங்களும், சிறப்பியல்புகளும் கொண்டவள்; பக்தியால் லக்ஷ்யத்தை உடையவள்; தர்மோபதேசத்துடன் கூடியவள்; அர்த்தத் தொடர்ச்சியால் பிரகாசிப்பவள்; மங்களத்தை அளிப்பவள். 


LS 

கேவலா

குஹ்யா,

கைவல்ய பததாயினீ

த்ரிபுரா

த்ரிஜகத்வந்த்யா

த்ரிமூர்த்தி

த்ரிதஶேஶ்வரீ :

====================================================================


Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை