சிவானந்தலஹரி 99-“பரமசிவா காருண்ய ஜலதே”!!
இத2ம் தே யுக்தம் வா பரமசிவ காருண்யஜலதே4க3தெள திர்யக்3 ரூபம் தவ பதசிரோ–தர்சனதி4யா |
ஹரிப்ர2ஹ்மாணௌ தௌ தி3வி பு4வி சரந்தௌ ச்ரமயுதௌகதம் சம்
போ4வாமின் கத2ய மம வேத்3 யோஸி புரத : || 99
கருணைக்கடலே! மங்களத்தையளிக்கும் பரமசிவனே! ஆண்டவனே! உமது அடியையும் முடியையும் காண வேண்டி பிரம்மாவும், திருமாலும் முறையே பறவையாகவும், மிருகமாகவும் உருக்கொண்டு வானத்தேயும் பூமியிலும் அலைந்து (உன்னைக் காணாது) களைத்தவர்களானார்கள் என்பது உலகமறிந்ததே. அப்படி யிருக்க எனக்கு எதிரில் எவ்வாறு காணுவதற்குரியவராக ஆகிறீர்கள்? இது உமக்குப் பொருத்தம் தானா?
சிவானந்தலஹரில கடைசி 2 ஸ்லோகங்கள் இன்னிக்கு பார்ப்போம் . 99வது ஸ்லோகம் :
इदं ते युक्तं वा परमशिव कारुण्यजलधे
गतौ तिर्यग्रूपं तव पदशिरोदर्शनधिया ।
हरिब्रह्माणौ तौ दिवि भुवि चरन्तौ श्रमयुतौ
कथं शम्भो स्वामिन् कथय मम वेद्योऽसि पुरतः ॥ ९९॥
இத³ம்ʼ தே யுக்தம்ʼ வா பரமஶிவ காருண்யஜலதே⁴
க³தௌ திர்யக்³ரூபம்ʼ தவ பத³ஶிரோத³ர்ஶனதி⁴யா |
ஹரிப்³ரஹ்மாணௌ தௌ தி³வி பு⁴வி சரந்தௌ ஶ்ரமயுதௌ
கத²ம்ʼ ஶம்போ⁴ ஸ்வாமின் கத²ய மம வேத்³யோ(அ)ஸி புரத꞉ || 99 ||
இந்த ரெண்டு கடைசி ஸ்லோகங்கள் சிவனந்தலஹரியோட பலச்ருதி போல இருக்கு. இந்த ஸ்லோகத்தில என்ன சொல்றார் – மாலறியா நான்முகனும் காணாமலே அப்பேற்பட்ட நீ எனக்கு கண் முன்னாடி தர்சனம் குடுத்தியே அப்படின்னு சொல்லறார்.இந்த சிவனந்தலஹரி ஸ்தோத்ரத்தை பண்ணதுல ஆசார்யாளுக்கு பரமேஸ்வரனோட தர்சனம் கெடச்சிருக்குன்னு தெரியறது.
நான் அதோட அர்த்தம் சொல்றேன்,
“பரமசிவா காருண்ய ஜலதே” – கருணைக்கடலே
“தவ பத³ஶிரோத³ர்ஶனதி⁴யா” – உன்னுடைய அடியையும் முடியையும் காண வேண்டும் என்ற எண்ணத்தில்
“ஹரிப்³ரஹ்மாணௌ தௌ” – ப்ரஹ்ம்மா விஷ்ணு ஆகிய அந்த இருவரும்
“திர்யக்³ரூபம்ʼ க³தௌ” – பறவையும் மிருகமும் ஆகிய பிராணிகளின் உருவத்தை அடைந்து
“தி³வி பு⁴வி” – ஆகாசத்திலும் பூமியிலும்
“சரந்தௌ ஶ்ரமயுதௌ” – பலவிதமாக தேடி களைப்பைத்தான் அடைந்தார்கள். ஆனாலும் உன்னுடைய தர்சனம் அவாளுக்கு கிடைக்கல.
“ஹே ஶம்போ” – மங்களத்தை அளிப்பவரே
“ஸ்வாமின்” – என் ஆண்டவனே
“மம புரதஹ” – என் முன்பு இவ்வளவு எளிதாக
“வேத்யஹா” – கண்ணால பார்க்கும்படியாக கண்டுகொள்ளும் படியாக இருக்கிறீரே
“இதம் தே யுக்தம் வா” – இது பொருத்தம் தானா அப்படீங்கறார்
இந்த மாதிரி ஒரு ஸ்தோத்ரத்தை படிச்சா நமக்கு என்ன கிடைக்கும்னா, ஒரு தெளிவு கிடைக்கும், மனசு ஒரு முகப்படும். Focus and Clarity வரும், அப்போ அந்த தெய்வத்தோட தர்சனம் கிடைக்கும். ஆச்சார்யாள் மாதிரி ஞானிகளுக்கு இந்த ஸ்தோத்ரத்தை பண்ண உடனே அந்த தெளிவு கிடைச்சிடுத்து.
நமக்கு இந்த மாதிரி ஒரு ஸ்தோத்ரத்தை படிக்கும்போது கொஞ்சம் அந்த லவலேசம் பரமேஸ்வரனுடைய அனுகிரஹத்துடைய அனுபவம் கிடைக்கும். நம்ப திரும்ப இந்த மாதிரி ஸ்தோத்திரங்களை படிச்சு அந்த அநுபவத்தை துளிதுளியா சேர்த்துண்டு அதை நமக்குள்ள தக்க வெச்சுக்கணும்.
அடுத்த ஸ்லோகத்தில ஆச்சார்யாள், எனக்கு இனிமேல் என்ன சொல்றதுக்கு இருக்கு, நான் இந்த ஸ்தோத்ரத்தை இங்கயே முடிச்சிக்கறேன்னு சொல்றார். ஆனா அது நமக்கு கிடையாது. வயிறார சாப்ட்டோம்னாலும், ஆனா மறுபடியும் பசிக்கறது, திரும்பவும் சாப்படறோம் இல்லையா.
அது மாதிரி பகவானை வாயாற பாடி தலையாற கும்பிட்டு அப்படீன்னு ம ஹான்கள் சொல்றா. அப்படி பண்ணா கூட அந்த வேளைக்கு ஒரு திருப்தி வரணும். அந்த வாட்டி வாயாற பாடும்போது ஒரு திருப்தி வரணும், திருப்தி ஏற்படற வரைக்கும், ப்ரதக்ஷிணம் பண்ணனும், நமஸ்காரம் பண்ணனும் , பூஜை பண்ணனும். கணக்கே கிடையாது இதுக்கு. அப்படி பண்ண பின்ன நம்ப உலக விஷயத்துல ஈடுபடறோம், அப்போ அந்த அனுபவம் கொறஞ்சிடறது. அப்போ திரும்பவும் ஒரு வாட்டி மறுநாளும் அந்த பாகவனோட கார்யங்கள்ல ஈடுபடனும்.
இத³ம்ʼ தே யுக்தம்ʼ வா பரமஶிவ காருண்யஜலதே⁴
க³தௌ திர்யக்³ரூபம்ʼ தவ பத³ஶிரோத³ர்ஶனதி⁴யா |
ஹரிப்³ரஹ்மாணௌ தௌ தி³வி பு⁴வி சரந்தௌ ஶ்ரமயுதௌ
கத²ம்ʼ ஶம்போ⁴ ஸ்வாமின் கத²ய மம வேத்³யோ(அ)ஸி புரத꞉ || 99 ||
இது ஒரு பலச்ருதி. சுவாமியோட தரிசனம்.. அவருடைய அனுக்கிரகம் அனுபவம்..
அடுத்த ஸ்லோகத்தில, பரமேஸ்வரா நீ தான் எல்லாத்துக்கும் மேலான தெய்வம் அப்படின்னு உணர்ந்துகொண்டேன் அப்படின்னு சொல்றார்.அது ஒரு பலஸ்ருதி.
பக்தி பண்ணும் போது “ஏகபக்திர் விஷிஷ்யதே”. அப்படின்னு எந்த ஒரு தெய்வத்துகிட்ட நம்ம மனசு வெக்கறோமோ, அந்த தெய்வத்தால நம்ம ஆட்கொள்ளப்பட்டால் அதுக்கப்புறம் வேற ஒரு இடத்துல மனசு போகாது. அப்படி அந்த ஏக பக்தி ஏற்படுவதும் ஒரு அனுக்கிரஹம், ஒரு பலஸ்ருதி.
அந்த ஸ்லோகத்தை பார்ப்போம்.
LS
த்ர்யக்ஷரீ
திவ்யகந்தாட்யா
ஸிந்தூர திலகாஞ்சிதா
உமா
ஶைலேந்ர தனயா
கௌரீ
கந்தர்வ ஸேவிதா
=====================================================================
Comments