பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் கம்பனின் கவித்துவம் (261) 👍👍👍💥💥💥 கம்பராமாயணத்தின் எதிர்நிலைத் தலைவன் இராவணன் - இலங்கை அரசன். இராமனுக்கு இணையான வலிமையும் வீரமும் பொருந்திய இராவணனின் பெருமையையும் பெண்ணாசையால் அவன் அவற்றை இழந்த சிறுமையையும் ஒரே பாடலில் உணர்த்தி விடுகிறார் கம்பர். வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்ததோளும் நாரத முனிவற்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும் தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்தவாளும் வீரமும் களத்தே போட்டு வெறுங் கையே மீண்டு போனான். (கம்ப. 7272) கம்பரின் காப்பியச் சிறப்பிற்கு ஒரு மிகச்சிறந்த அடிப்படை கம்பரின் பாத்திரப் படைப்பு ஆகும். நூற்றுக்கணக்கான பாத்திரங்கள், வெவ்வேறு பண்பியல்புகள், முரண்பட்ட மனநிலைகள், மானிடர், குரக்கினத்தார், அரக்கர், பறவை எனும் பல்வேறு வகையினர், அவர்களின் இன்ப...
Comments