ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 14 (ல) (64 to 68)
LT 14
64-68
லாகினீ லலனாரூபா லஸத்³தா³டி³மபாடலா ।
64. லாகினீ
எல்லோராலும் சுலபமாக அணுகக்கூடியவள் . அவளை உண்மையான அன்பினாலும் , உயர்ந்த எண்ணங்கள் மூலமும் , சுத்தமான பக்தியாலும் சுலபமாக அணுகி விடலாம் .
65. லலனாரூபா
ஸ்திரீகளின் வடிவில் பிரத்தியக்ஷமாய்க் காணப் படுபவள் . எந்த எந்த பெண்களிடம் தாயின் கருணையும் , அன்பும் , ஒழுக்கமும் இருக்கின்றதோ அவர்கள் எல்லாருமே சக்தியின் வடிவங்கள் தான் .
66. லஸத் தரடிம பாடலா
மலர்ந்த மாதுளம் பூவையும் பாதிரிப்பூவையும் போன்ற வண்ணத்த்தினள் .
67. லலந்திகா லஸத்பாலா
பிரகாசிக்கும் திலகத்தை தனது அழகிய நெற்றியில் ஏந்தி புன்னகை பொளியும் முகத்துடன் என்றும் கருணையுடன் இருப்பவள் .
68. லலாட நயனார்ச்சிதா
நெற்றிகண்ணுடைய ஈசனால் ஆராதிக்கப்படுபவள் . இப்படியும் எடுத்துக்கொள்ளலாம் - ஞானக்கண் படைத்த யோகிகளால் பூஜிக்கப்படுபவள் .
64.Om Lakinyai Namaha :
Salutations
to the Mother, who is in the form of Lakini.
She
is in the ten petalled Lotus in the navel, is three-faced, tusked, red
coloured, bearing in her hands the dart thunder bolt, club, and abhaya a weapon
and most terrible is attended by Damari and other Shakthis, awesome to the
ignorant with terror, presiding over flesh, fond of sweetmeat, doing good to
all.
65. Om Lalanaa Roopaayai
Namaha:
Salutations to the Mother, who is in the female form. Who can be seen as Goddess in all Women
66.Om Lasaddadima
Paatalaayai Namaha
Salutations to the Mother, who has the Complexion of a blooming Pomogranate, and Padhiri flowers. There are many varieties in Padhiri flowers, white, white and yellow, and outer red and white mixed. Her complexion can also be compared to the redness of flowers like Hibiscus, Sevalli, Virushi.
67.Om
Lalanthikaa Lasathphaalaayai Namaha
Salutations to the Mother, whose ornament worn on the parting of her fore head called Netri Chutti makes her look alluring. It is called Lalanthika, made of priceless Gems surrounded by Pearls.
68. Om
Lalatanayana Archithaayai Namah
Salutations to the Mother, which is worshipped by the three eyed Lord Siva. Yogins and Jnanis with insight, focus their attention in Aajna chakra with kechari mudra and worship Devi.
64 * Laakhini
- She who is easily approachable
65 Lalana roopa - She who can be seen as goddess
in all women
66 * Lasadh dharadima patala - She who is the
colour of opened pomegranate flower
67 *
Lalanthika –lasadh bala - She who has a shining forehead with the beautiful
thilaka (dot)
68 * Lalada nayanarchidha - She who is
worshipped by Rudra who has an eye in the forehead or She who is worshipped by
those yogis with insight
====================================================================
Comments
This inspiring movie once again demonstrates the age is just a number .. also tells us never ever give up ...
Old age isn’t meant for only retirement—the film’s message is loud and clear. Now, where have I seen this before? Kher’s 2022 film Uunchai, in which Amitabh Bachchan’s character wants to climb Mount Everest. Here, the triathlon is his Everest.
One day, a foul-mouthed man on the cusp of 70 realises that he doesn’t have any achievement in his lifelog that will keep him alive for posterity.
A national-level swimmer who didn’t strive enough to change the colour of his bronze medal, Vijay Mathew (Anupam Kher) is an ordinary old man seeking a sliver of gold dust.
Having lost his supportive wife to cancer, he is withering from the inside and appears grumpy from the outside.
Still, he hasn’t given up on the magic of life and doesn’t want those around him to undermine his leap of faith when an opportunity presents itself.
Vijay decides to participate in a tough triathlon contest to make it to record books and give something back to his friends who stood by him.
Finally ... See the movie . We are grown with many dreams ... Many remained as dreams and a few clicked . Life is too short to convert all dreams into a reality and at the same time nothing is short to live for the moment and enjoy without any hangovers ... That is life and that is ageing ... 👍
அம்பு படுக்கையில் ஊண் உறக்கம் இன்றி சமாதி நிலையில் இருந்தார் பீஷ்ம பிதாமகர் ....
எங்கும் பிண வாடை , பிரவாகம் எடுத்து ஓடும் ரத்தம் ,
அங்கங்கள் வெட்டப்பட்டு துடித்துக்
கொண்டிருந்தன ஆங்காங்கே
யுத்தம் முடிந்து கிருஷ்ணன் உட்பட பிதாமகரை பார்க்க அங்கே வந்தனர்
யுதிஷ்டிரன் மனதில் பல கேள்விகள் ... யாரிடம் கேட்பது ... கிருஷ்ணனிடமே கேட்கத் தெரியவில்லை ...
பிதாமாகரிடம் கேட்கலாம் என்று நினைக்கும் போது இவருக்கு பதில் தெரிந்து இருந்தால் இவர் ஏன் அதர்மம் பக்கம் இருந்து சண்டை போட்டிருப்பார் ? மனதில் ஒரே குழப்பம் ....
கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே பிதாமகரிடம் சொன்னான்
"கங்கை மைந்தரே! தர்மன் உங்களிடம் பல கேள்விகள் கேட்க விரும்புகிறான் ... தயை கூர்ந்து பதில் சொல்லுங்கள் !"
பீஷ்மர் சிரித்தார் ... கண்ணா எனக்கு என்ன தகுதி இருக்கு ...?
அதர்மத்தை வளர்த்தேன் ... திரௌபதியை காக்க மறந்தேன் ..
இந்த ரத்தம் துரியோதனனின் உப்பில் வளர்ந்தது கண்ணா ...
கண்ணன் சொன்னான் ...
பீஷ்மரே அர்ஜுனன் உங்கள் உடம்பில் ஒரு இடமும் பாக்கி விடாமல் அம்பு போட்டுள்ளான் ...
உங்கள் பழைய ரத்தம் எல்லாம் சுண்டி வறண்டு விட்டது ...
கங்கையின் நீரால் நீங்கள் பல மடங்கு உயர்ந்து உள்ளீர்கள் ...
அம்பினால் வரும் வலி உங்கள் சொல்லினால் மறைந்து போகும் ...
படுத்திருக்கும் அம்பு மெத்தை நீங்கள் சொல்லப்போகும் விஷயங்களால் பஞ்சு மெத்தையாக மாறி விடும் !!
இங்கே துர்நாற்றம் மறைந்து தேவலோக சுகந்தம் வீசும் ... !!
ரத்தம் ஓடும் இடங்களில் பாலும் தேனும் பகிர்ந்து ஓடும் !!
வெட்டுப்பட்ட அங்கங்கள் தங்கங்களாகி ஜொலிக்கும்
கண்ணா உன் கருணை தான் என்னே !
உனை சொல்லும் பாக்கியம் எனிலும் உயர்ந்தோனுக்கும் கிட்டுமோ ?
பீஷ்மர் எந்த உபாதைகளும் இல்லாமல் பரமாத்மாவின் ஆயிரம் நாமங்களை சொல்ல ஆரம்பித்தார் ...
அண்ட சராசரங்களும் அங்கே அணி வகுத்துக் கேட்டன !!
போர்க்களம் கண்ணனால் பூ மெத்தை ஆனது ...
இறந்த உடல்கள் உயிர் பெற்றே எழுந்து நின்று கேட்டன பீஷ்மர் சொல்லும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை 🙏👍
அனைவர்க்கும் அமுதம் படைத்து குமுதம் என மலர்பவளே !
தாமதம் இன்றி சமுத்திரம் போல் பொக்கிஷங்களை அள்ளித் தருபவளே!!
பாற்கடலோ, சிந்தாமணி கோபுரமோ ரத்தின கம்பளமோ
கடம்ப வன எழிலோ கற்பக விருக்ஷமோ , காமதேனுவோ ...
உனை என்னவென்று அழைப்பேன் ...
உள்ளம் உவகை கொண்டே உன் நினைவில் ரீங்காரம் புரிகின்றதே ...
மதுரம் கண்ட மகிழ்ச்சியோ ...
உன் அதுரம் தந்த சின்னமோ ?
நெஞ்சம் மாறியதே ஓர் பட்டாம் பூச்சியாய் ...
நெரிசல்கள் மறைந்ததே உன் வழி கிடைத்ததால் !!💐💐💐
*ஜெய் ஸ்ரீகிருஷ்ணா* 🙏
*அகலிகை கல்லாய் இருந்து ராமனின் காலடி பட்டு சாப விமோட்சனம் அடைந்தாள். அப்போது ராமன் கால் கட்டை விரலை பிடித்து இழுத்து ராமனை நிறுத்தியது ஒரு புல்*.
கௌதமரை அழைக்க சொன்னது. ஏன் என்று ராமன் கேட்க...
"மனைவி தவறு செய்தாள், சாபம் பெற்றாள். நான் என்ன குற்றம் செய்தேன், ஏன் இந்த கல்லாய் போன அகலிகையின் அடியில் மாட்டி இத்தனை வருடம் வளர்ச்சி இன்றி கிடக்கிறேன்? எனக்கு பதில் சொல்ல சொல்லு ராமா" என்றது புல்..
உடனே ராமன்... "அன்று என்ன நடந்தது என்று உனக்கு தெரியுமா? சொல்" என்றார். "
“இந்திரன் வந்து கோழி போல் கூவினான். விடிந்து விட்டது என்று கௌதமர் நீராட போனார். உடனே இந்திரன் கௌதமர் உருவில் மாறி, அகலிகையை அழைத்தான். அவளை அணைத்தான். அகலிகை புரியாது விழித்தாள். கௌதமன் சத்தம் கேட்டதும் இந்திரன் ஓடிவிட்டான். தொட்டது யார் என்று தெரியவில்லையா உனக்கு என்று கோவம் கொண்ட கௌதமன் அகலிகையை கல்லாய் போக சபித்தான்" என்று சொல்லி முடித்தது புல்.
ராமன் சொன்னான் புல்லிடம் "இன்று என் விரலை பிடித்து இழுக்க முடிந்த உன்னால் அன்று கௌதமனை நீராட போகாமல் தடுக்க முடியவில்லையா?? தவறான எண்ணம் கொண்ட இந்திரனை வீழ்த்த முடியவில்லையா??
உன் கண் முன் குற்றம் நடந்தும் பார்த்து மவுனமாய் இருந்ததுக்கான தண்டனைதான் இக்கோலம். என்னை போக விடு" என்று அம்பால் நீக்கினார்.
புல் சுருங்கிற்று. அன்று முதல் இன்று வரை யார் தொட்டாலும் ராமனோ என்று எண்ணி வெட்கத்தால் குவியுமாம் தொட்டாற்சிணுங்கி...
*ராம ராம ராம*
*சீதாராம்*..🙏
ஸர்வம் ஸ்ரீராம மயம் 🙏
ஓம் நமோ நாராயணாய 🙏
This is an interesting question.
The Vedas consist of hymns to various deities, and in each of these hymns (sūktas) the deity who is being praised is declared to be the “Supreme”.
Henotheism (Greek "one god") is a term coined by Max Müller, to mean devotion to a single primary god while accepting the existence or possible existence of other deities.
Müller stated that henotheism means "monotheism in principle and polytheism in fact".
23% of the hymns in the Rig Veda are dedicated to Indra 20% to Agni (Fire) and 11% to Soma Pavamana.
So in terms of quantity Indra is the Supreme God followed by Agni and Soma in popularity.
*INDRA*
Rig Veda 1:8:5. Mighty is Indra, yea supreme; greatness be his, the wielder of the thunderbolt: His power extends beyond the heavens
Rig Veda.1:9:5; Bestow upon us your bounty manifold, O Indra, most praise-worthy, for power supreme is yours alone.
Rig Veda 1:80:15. There is not, in our knowledge, one who surpasses Indra in his might:
*AGNI*
Rig Veda 1:98:1. Still in Vaisvanara's grace may we continue: yea, he (Agni) is King supreme over all things living.
*SOMA*
Rig Veda 9:97:24. He who beholds mankind, made pure with filters, the King supreme of Deities and mortals, from days of old is Treasure-Lord of riches: he, Indu, cherishes fair well-kept Order.🙏
அனைவர்க்கும் அமுதம் படைத்து குமுதம் என மலர்பவளே !
தாமதம் இன்றி சமுத்திரம் போல் பொக்கிஷங்களை அள்ளித் தருபவளே!!
பாற்கடலோ, சிந்தாமணி கோபுரமோ ரத்தின கம்பளமோ
கடம்ப வன எழிலோ கற்பக விருக்ஷமோ , காமதேனுவோ ...
உனை என்னவென்று அழைப்பேன் ...
உள்ளம் உவகை கொண்டே உன் நினைவில் ரீங்காரம் புரிகின்றதே ...
மதுரம் கண்ட மகிழ்ச்சியோ ...
உன் அதுரம் தந்த சின்னமோ ?
நெஞ்சம் மாறியதே ஓர் பட்டாம் பூச்சியாய் ...
நெரிசல்கள் மறைந்ததே உன் வழி கிடைத்ததால் !!💐💐💐
கடல் கரையில்
மணல் எடுத்து சிவலிங்கம் ஒன்று வடித்தேன் ...
காத்திருந்த அலைகள் கண் மூடும் முன் கலைத்து விட்டன
ஏகாம்பரரை நீ வடித்தாய்
மண்ணில் சீதை தான் வடித்தாள் அன்று ...
சிந்தனைகள் எனக்கு மட்டும் சிதறுவதேன்?
ஓடும் கண்ணீர் கடல் அளவை அதிகம் செய்யவோ ?
ஆடும் மனம் அலைகள் போல் அலை பாயவோ ?
தேடும் உள்ளம் பள்ளம் பல தோண்டவோ?
அக்கறை உன் ஆயுதம் என்றால் என் கறை ஏன் மறையவில்லை ?
சொல்லின் செல்வி நீ என்றால் சொற்கள் வேறு வேறு வழிகள் காண்பதேன் ?
ஆடும் நாயகி நீ என்றால் ஆடாமல் அசையாமல் மனம் நிற்காததேன் ?
அனைத்தும் நீ என்றால்
கட்டும் சிவலிங்கம் அலையில் கரைவதேன் ?
*கேள்விக்கு பதில் சொன்னாள் கேள்வியின் நாயகி*
பக்தி வேண்டும் அதில் சக்தி காண்பாய் ...
சரண் புக வேண்டும் அதில் சமரசம் ஒன்றும் இல்லை ...
நம்பிக்கை வேண்டும் அங்கே உன் உறுதி கொடி கட்டிப் பறக்க வேண்டும் ... 🚩
உள்ளம் சிவமயமாக வேண்டும் !
அங்கே சிவானந்தம் ஆறாய் ஓட வேண்டும் !
பள்ளங்கள் கொண்ட உன் மனம் மடுவென நிறையவேண்டும்
தானாக வளரும் அங்கே சிவலிங்கம்
மண்ணும் தேவையில்லை பொன்னும் தேவை இல்லை ...
இந்த பெண்ணும் அங்கே வந்திடுவாள் ... !!
முயன்று பார் முணுமுணுக்க மாட்டாய் இனி என்றாள் 🙏
உன் பதி
பிட்டுக்கு மண் சுமந்தான்
கங்கை தனை தலை சுமந்தான்
உமை உனை தன் இடம் சுமந்தான்
பூதகனத்தலைவன் நாட்டியத்தில் முதல்வன்
கைலயங்கிரி இறைவன்
கைலை வாழும் சிவன் அவன்
அவன் ஆட உமை நீ சேர
ஆனந்த தாண்டவம் அரங்கேற
உலகாளும் அவன் ஆட அண்டசராசரம் அசைந்தாட
நரம்பினை வீணை கம்பியாக்கி
இசையினை மீட்டிய ராவணனின்
பக்திக்கு
வரம் பல தந்து
அருளிய நந்தி வாகனன் !!
மலைமகன்! கலைமகன் !
என்னுடலின்
ஒவ்வொரு அணுவிலும் கலந்தவன்
வேதங்கள் நாத கானம் பொழிய
நடேஸ்வரீ உனைக் கண்டேன் நடராஜன் ரூபத்தில் இன்றே !!💐💐💐
ஆனந்தம் சந்தோஷம் நிம்மதி மூன்றும் சூழ்ந்து அவர் அம்பு படுக்கையை பூக்கள் கொஞ்சும் மெத்தையாய் ஆக்கியது ..
வானத்தில் மேகக்கூட்டங்கள் இல்லை பாரிஜாத பூக்கள் நிறைந்து இருந்தது ....
எல்லா இன்பங்களும் தரும் விஷ்ணு சஹஸ்ரநாமம் குழந்தையாய் பீஷ்மரிடம் சொன்னது
"தாத்தா உன் மூலம் நான் வந்தேன் ... உலகத்தில் உள்ளோருக்கு கவசமாய் இருந்து காப்பேன் ...
இனி எவருக்கும் எந்த துன்பமும் வராது ...
வாரி அணைத்து க்கொண்டார் அந்த மழலையை ...
கண்களில் நீர் பொங்க " பரமாத்மா உன் அருள் இன்றி முடியுமோ எதுவும்
உன் மனமின்றி நடக்குமோ ஏதும் ... "
என் மூலம் நடத்திய இந்த நாடகம் இனி பிரபஞ்சம் எங்கும் இனிதே நிறைவேற நீ தான் அருள் செய்ய வேண்டும் .
இதைச் சொல்வோர் கேட்போர் நினைப்போர் எழுதுவோர் எல்லோரும் மன அமைதி பெறவேண்டும் ...
வியாதிகள் நெருங்கா வரம் நீ தரவேண்டும் ...
ஏ கிருஷ்ணா!
நீ மர பிரபு அல்ல அமர பிரபு ...
நான் போய் விட்டாலும் நீ இருப்பாய் என்றும் ..
எல்லோரையும் காப்பாற்று ..
தர்மம் செழிக்கட்டும் ...
கண்ணன் சிரித்தான் ...
"பீஷ்மரே விஷ்ணு சஹஸ்ரநாமம் மட்டுமே எல்லாம் என்று நினைக்காதீர்கள் இதற்கும் மேலும் ஓர் வைடூரியம் உள்ளது அதைப்பற்றியும் தாங்கள் சொல்ல வேண்டும் ....
கண்ணா!
விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் காட்டிலும் உயர்ந்த வஸ்து வைடூரியம் உண்டா ?
அது நான் அறிந்ததா ...?
புரியவில்லையே கண்ணா ... !
அது தங்க பேழைக்குள் பேழைக்குள் பேழைக்குள் இருப்பதால் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை
இருப்பினும் சொல்லும் திறன் நான் உங்களுக்குத் தருகிறேன் ..
அனைவரும் பீஷ்ம பிதாமகரையேப் பார்த்துக் கொண்டிருந்தனர் ஆவலுடன் நம்மைப் போல்
தொடரும் ...💐💐💐
என்ன அந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷம் ...?
எனக்குத் தெரியும் என்கிறாய் ... எனக்கு தெரிந்தெல்லாம் பரமாத்மா நீ ஒருவன் தான் !
கிருஷ்ணன் சிரித்தான் ...
பீஷ்ம பிதாமகரே... உங்கள் தாயை ஒருவர் தாங்கி பிடித்துக்
கொண்டால் அவரை என்ன சொல்வீர்கள் ?
*கண்ணா!*
அவர் பாதங்களை என் சிரசில் வைத்துக்கொண்டு கொண்டாடுவேன் ..
என் தாயினும் மேலாக அவரை பூஜிப்பேன் ...
அவரே உலகம் அனைத்திலும் சிறந்த பொக்கிஷம் என்று
சூளுரைப்பேன் !!
அப்படியா அப்படி தாங்கியவர் என்னை விட உயந்தவராக இருக்க முடியுமா ?
கண்ணா!! தாயினும் உயர்ந்த தெய்வம் வேறு இல்லை
அந்த தாயை தாங்கி பிடிப்பவனைப் போல் வேறு உத்தமன் இல்லை ...
இது என் கேள்விக்கு பதில் இல்லை ...
என்னை விட உங்கள் தாயை தாங்கி பிடிப்பவன் பெரியவனா ?
ஆமாம் கண்ணா ... அதில் எந்த சந்தேகமும் இல்லை ... அவனே மிகப்பெரியவன்
பீஷ்மரே இன்னுமா புரியவில்லை நான் யாரைப்பற்றி சொல்கிறேன் என்று ...
பீஷ்மருக்கு புரிந்தது ... நமக்கு ?
*தொடரும்* .....
அடடா கங்காதரனை எப்படி மறந்து போனேன் ... ??
சிவ பரம்பொருள் நினைவு வராமல் வாழ்க்கை முடிந்து போனால் அது ஒரு வாழ்வா ?
கிருஷ்ணர் சிரித்தார் ...
பீஷ்மரே இப்போது சொல்லுங்கள்
அந்த சிவ பரம் பொருளைப் பற்றி பேசாமல் என் நாமங்கள் எப்படி பூரணத்துவம் அடைய முடியும் ?
உண்மை!!
கிருஷ்ணா போரில் எனக்கு நீ தெரியவில்லை அர்ஜுனன் தெரியவில்லை வேறு யாருமே தெரியவில்லை ...
கண்ணெதிரே ஒரு வாலிபன் பலம் கொண்ட தோள்கள் ,
பவித்திரமான முகம் ...
கண்களில் கோபம் உற்று கவனித்தால் அங்கே கருணையும் தெரிந்தது ...
முகம் வெண்மை நெற்றியில் மூன்று வெள்ளை கோடுகள் ...
நெற்றியில் ஓர் கண் ....
நெஞ்சிலே தவழும் பாம்புகள் கரத்தில் திரி சூலம் ...
அவன் தான் கௌரவப்
படைகளை சிதற வைத்து கொல்கிறான் ...
அர்ஜுனனின் காண்டீபம் அவன் சொற்படி கேட்கிறது ...
அர்ஜுனன் விடும் அம்புகள் அவனை நமஸ்கரித்து எங்களை நாடி வந்தன ....
போர் மும்முரத்தில் நான் இதை அதிகம் அலசி பார்க்க வில்லை ...
இப்பொழுது புரிகிறது ...
தேரில் நீ அமர்ந்து இருந்தாய் ...
போரில் அவன் மட்டுமே தெரிந்தான் ...
நேரில் நீ தெரிந்தாய் ...
உன் பேரில் அவன் சிரித்தான் ...
ஆமாம் பீஷ்மரே யாருமே இந்த போரில் நான் தான் சிறப்பாக போரிட்டேன் என்று சொல்ல முடியாது ...
*கண்ணா* !
அந்த சிவ பரம் பொருளை முழுவதும் அறிந்தோர் உணர்ந்தோர், தெரிந்தோர் யாரும் இல்லை உன்னைத் தவிர ....
அந்த புண்ணியம் உனக்கே சேரட்டும் ...
நான் சொல்வதை விட நீ சொன்னால் தான் எல்லோராலும் முழுமையாய் சிவானந்ததை அறிய முடியும் ...
நீயே சொல் கண்ணா ... !!
கண்ணன் போரில் சொன்னது கீதை போர் முடிவில் சொன்னது சிவ போதை ...... 🏅🙏🙏
---தொடரும்
ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணகீர்த்தனம் பக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலசம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணத்தகல்பகம் சுப்ரபாஞ்ஜிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
துரகவாகனம் சுந்தரானனம்
வரகதாயுதம் வேதவர்நிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
த்ருபவனார்ச்சிதம் தேவதாத்மகம்
த்ரினயனாம்ப்ரபும் திவ்யதேஷிகம்
த்ருதஷபூஜிதம் சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
பவபயாப்பகம் ப்ஹாவுகாவஹம்
புவனமோஹனம் பூதிபூஷனம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா.
கலம்ருதுஸ்மிதம் சுந்தராணனம்
கலபகோமளம் காத்ரமோஹனம்
கலபகேஷரி வஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
ஸ்ருதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ஷ்ருத்திவிபூஷனம் சாதுஜீவனம்
ஷ்ருதிமனோஹரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
உன் மந்தஸ்மிதம் நீயே கதி என் போர்க்கு அமுதமாகிறது !
உன் அட்டஹாஸம் தானவர்களுக்கு வயிறு கலக்கும் நிலை ஆகிறது !
உன் மிஷத்தாஸம் இறந்த உடலுக்கும் உயிரோட்டம் தருகிறது !
உன் புன்னகை பொன் நகைகள் உலகில் இல்லாமல் செய்கிறது !
உன் சிரிப்பு சக்கரைப்
பொங்கலில் தேன் அடைகளை சேர்க்கின்றது !
உன் மகிழ்ச்சி இகழ்ச்சி செய்வோர் இல்லை என்றே ஆக்கிறது !
உன் புகழ்ச்சி உலகம் அனைத்தும் என் சொந்தம் என்றே உணரச் செய்கிறது!!💐💐💐
கோடிகொண்டு நாடினாலும் குருவுமின்றி பயனிலை;
பூசனைக்கு வைத்தகல்லில் பூவும் நீரும் சாற்றுமுன்
பூவுலகின் காவலனாம் குருவடியிற் சரணம்கொள்!
இந்தவூரில் இல்லையென்று எங்குதேடி ஓடினாலும்
அந்தவூரில் அரனரியும் ஆகுபொருள் ஒன்றுதாம்
திறமளிக்கும் திவ்யபாதம் வேதஞான குருபரன்
சுமையகற்றி சுகமளிக்கும் ஸ்ரீசரணர் பாதம்தான்!
சுப சுப்ரபாதம் 🌹🌹🌹
சுப தினம் 💐💐💐
ஹரி ஓம் 🙏🙏🙏🙏🙏