ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 30 ( 159- 163)

 

LT 30 (a) 

159-160

கல்பவல்லீஸமபுஜா கஸ்தூரீதிலகாஞ்சிதா

159: கல்பவல்லீஸமபுஜா

கற்பகக் கோடி போன்ற புஜங்களை உடையவள் . 

160. கஸ்தூரீ -திலகாஞ்சிதா

வாசனை மிக்க , மங்களகரமான கஸ்தூரிப்  பொட்டணிந்தவள் . 

159. Om Kalpavalli Samabhujaayai Namaha

Salutations to the Mother, whose Arms are Beautiful like the Karpaga Creeper found in Deva Indra's Garden. Those Adorable Arms also dispel our Prarabddha karma.

160. Om Kasthuri Thilakaanchithaayai Namaha

Salutations to the Mother, whose Vermillion (thilakam) on the forehead is made of Kasthuri and Musk.

* 159 * Kalpa valli sama bhuja - She who has arms as beautiful as the kalpaga creeper

* 160 * Kasthuri thilakanchitha - She who wears thilaka with musk (dot in the forehead)

 

 

LT 30 (b) 

161 -163



ஹகாரார்தா² ஹம்ஸக³திர்ஹாடகாபரணோஜ்ஜ்வலா 

 

---------------------------------- ------------------------------------------------------------

 

161. ஹகாரார்தா²

பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் ஒன்பதாவது  எழுத்தாகிய "ஹகாரத்தின்வடிவினள் . 

162. ஹம்ஸக³திர்

 அன்னத்தைப் போன்ற நடை உடையவள் , மென்மையானவள் . 

163. ஹாடகாபரணோஜ்ஜ்வலா 

பொன் ஆபரணங்களைப் பூண்டு பிரகாசிப்பவள் .

161. Om Hakaraarthaayai Namaha

Salutations to the Mother, who is the inner meaning of the Alphabet 'HA'. It is Fourth Letter in the kamaraja koota, and the Ninth Letter in the Panchadasi Mantra. Ha, pertains to Akasha Beeja among the Pancha Bhoothas, Devi is the basis for Akasha Bhootha.

162. Om Hamsa Gathyai Namaha

Salutations to the mother, who has the Gait of a Swan. It means one who is Attained by Realized Souls. Breathing out is Exhalation, and it is called Ham. Breathing in is called Inhalation, and it is called Sa. This is the life force. This process of breathing simultaneously with Ha and Sa is Swasa kriya and it is called Ajapa Gayathri. ' Eem,' is the manifestation of Devi. Ha is the sun and Sa is the moon. Devi is the day and night for both sun and the moon.

 

The yogins who expierence her as the Seif, Atma swaroopini are also called Hamsagathi. According to their merits and demerits, the Jivas get their Salvation, this is called Hamsam, Gathi is Attained in the end this is called Moksham. Devi is the Moksha Roopam for the Jivas. Devi's feet with the tinkling Anklets are also called Hamsagathi.

 

163. Om Haatakaa Bharanojwalaayai Namaha

Salutations to the Mother, who shines brilliantly with her Gold Ornaments. She shines in the Mangalyam of Suvasini women. Devi with her natural red hue of the Kaarana Sareera, shines resplendently with her ornaments in her kaarya Roopa, form. Haataka is the golden Brahma Roopam. She shines like an Ornament for that Brahma Roopam.

* 161 * Hakarartha - "She whose meaning is the alphabet ‘ha’-This alphabet ‘ka’ represents money, valour etc- This is also the ninth letter of the Pancha dasakshari manthra"

* 162 * Hamsa gathi - She whose gait is like a swan Or She who is attainable only by realized souls

* 163 * Haataka abharnojjwala - She who shines wearing gold ornaments

============================================================

Comments

ravi said…
*20 திருவெம்பாவை*

*போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்*

*போற்றி அருளுக நின் அந்தமாம்* *செந்தளிர்கள்*
*போற்றி*💐💐💐

*ஏ பசுபதே* ⚡

எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாதமலர்களை🪷 வணங்குகிறோம். 👣

எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை பணிகின்றோம்.👣

எல்லா உயிர்களையும் படைக்கின்ற உன் பொற் பாதங்களை சரணடைகின்றோம்.👣
எல்லா உயிர்களுக்கும் வாழும் காலத்தில் இன்பமான வாழ்வு தரும் மலரடிகளை பிரார்த்திக்கிறோம்.👣

உயிர்களை அழித்து இறுதிக்காலத்தை தருகின்ற இணையற்ற காலடிகளைப் போற்றுகின்றோம்.👣

திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் காண்பதில் பெருமிதமடைகின்றோம்.👣

எங்களுக்கு பிறப்பற்ற நிலை தரும் பொன் போன்ற திருவடிகளை பற்றுகின்றோம். 👣

உன்னோடு ஐக்கியமாகி,

உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.
ravi said…
*20 திருப்பாவை*

*முப்பத்து மூவர் அமரர்க்கு* *முன்சென்று*
*கப்பம் தவிர்க்கும் கலியே!* *துயிலெழாய்!*💐💐💐

முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தும் முன் நின்று வருபவன் கண்ணா நீ அன்றோ ?

ஆற்றல் உண்டோ கண்ணா உன் போல் எவர்க்கும் இங்கே ?

போற்றல் ஒன்றே வரம் எனக்
கொண்டுள்ளோம் !!

தேற்றல் நீயின்றி யார் தருவார் ... ?

தூற்றல் வந்தினும் நீ எழும் வரை காத்திருப்போம் !!

பொற்கலசம் என மேனி கொண்டவளே !!

பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட உன் உடன் பிறப்புக்களோ ?

லக்ஷ்மியே நீ என்றால் கோவிந்தன் துயில் கலைய ஏன் இந்த தாமதம் ... ??

உறங்குவது போல் நடிப்பது நீ கற்காத ஒன்று ... !!

கற்பகமே அந்த அழகனை காண கண் திறவாய் 💐💐💐
ravi said…
*19 திருவெம்பாவை*

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று

ஏ விபோ

கன்னிப்பெண்கள் நாங்கள் ..

காதலன் கரம் பிடிக்க நோன்பு நோற்கின்றோம்

கண் நிறைந்தவன் கண் போல் காப்பவன்

அழகன் அறிவில் ஆன்மீகத்தில்

எங்களைத் தழுவுவோர்

உன் பக்தர்களாக மட்டுமே இருக்க வேண்டும்.

எங்கள் கைகள் உனக்கு மட்டுமே பணி செய்வதற்கு

அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்

எங்கள் பார்வையில்

உனக்கு பணி செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும்.

பிற தீமைகள் எதுவும் பார்வையில் படல் கூடாது.

இப்பரிசை நீ

எங் களுக்கு தருவாயானால்,

சூரியன் எங்கே உதித் தால் எங்களுக்கென்ன?
ravi said…
19 திருப்பாவை

*குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்*

குத்து விளக்கெரிய,
கூடமெல்லாம் வளையல்கள் சிதறிக்கிடக்க

யானைத்தந்தங்கள் கட்டிலைத் தாங்க

ஓடி வந்த மலர்க்கூட்டம் ஒவ்வொன்றாய் தரையில் கும்மி அடிக்க

மிருதுவான பஞ்சனைகள் சோம்பல் முறிக்க

அழகிய கூந்தலில் கண்ணன் புதைந்திருக்க

பொய் கோபம் கொண்டு அவன் எங்கே எங்கே என்றே நீ ஏங்கி நிற்க

கண நேரம் கேட்கிறோம் கண்ணன் முகம் பார்க்க ...

நெஞ்சத்தில் நிறைந்தவனை எங்கள் நேயத்தில் நிலை நிறுத்துவாயோ ?

உன் அழகுக்கும் அறிவுக்கும் எங்கள் வேண்டுதல் பெரிதல்லவே ?!
ravi said…
*சுயமரியாதை vs தொழில் மரியாதை*

ஒரு செருப்புக் கடைக்கு ஓர் பெண் சென்றாள்

அங்கே சற்றே முதியவர் அவளுக்கு பலவகை செருப்புகளைக் காட்டினார் ..

ஓவ்வொரு செருப்பாக அணிவித்துக் காட்டினார்

அந்த பெண்னுக்கு சங்கடமாக இருந்தது ...

வயதில் பெரியவர் தன் கால்களை தொட்டு பணி செய்வது ...

நானே போட்டு பார்க்கிறேனே என்று சொன்னாள் ...

முதியவர் விடவில்லை

உடனே அவள் சொன்னாள்

நானும் மனிதன் நீங்களும் மனிதன்..

மேலும் நீங்கள் வயதில் மூத்தவர்

என் கால்களைத் தொடுவது மிகவும் சங்கடமாக உள்ளது

பெரியவர் பெருந்
தன்மையுடன் சொன்னார்

"அம்மா! நீங்கள் கடைக்கு வெளியே இருந்தால் கோடி பணம் கொடுத்தாலும் உங்கள் கால்களைத் தொட மாட்டேன் அது என் சுய மரியாதை .

இந்த கடைக்குள் நீங்கள் கோடி பணம் கொடுத்தாலும்

என் சேவையை நிறுத்த மாட்டேன் .. அது என் தொழில் மரியாதை ....

நமக்குத்தான் இரண்டிற்கும் வித்தியாசம் புரிவதில்லை 👍
ravi said…
அழகின் அர்த்தம் ஆறுமுகம் வந்தபின்பே அறிந்தோம்

ஏறுமுகம் வாழ்வில் எட்டிப்பார்க்க வேலும் மயிலும் கொண்டு வந்த பரிசு இது என்றே உணர்ந்தோம்

ஆறுதலை கொண்டவன் குன்றெங்கும் ஆடுகிறான்

அவன் ஒருவனே ஆறுதலைத் தருவான் என்றே ஞானம் பெற்றோம்

மாதங்கள் பன்னிரெண்டு அவன் கரங்கள் பன்னிரெண்டு ... கவசம் என காக்கும் வரும் மாதங்கள் அனைத்தும்

365 நாட்கள் ... இச்சா கிரியா ஞான சக்தி என மூன்று சக்தி கொண்டவன் ஆறுமுகம் கொண்டவன் ஐந்தெழுத்தில் உதித்தவன் ..

அவனிருக்க பயம் எனும் வார்த்தை தோன்றிடுமோ நம் வாழ்வு தனில் ?
ravi said…
வியாசர் மிகவும் கவலையில் இருந்தார் ...

போரில் சண்டைப்போட்டவர்கள் அனைவருமே அவர் பேரக் குழந்தைகள் ...

ஆனால் அவர் கவலை அதுவல்ல ...

அதற்கும் மேல் ...

18 புராணங்கள் , வேதங்கள் , உபநிஷதங்கள் , வியாக்கியானம் , பாஷ்யங்கள் இவ்வளவு எழுதியும்

த்ருப்தி இல்லை நிம்மதி இல்லை நிறைவு இல்லை ....

அங்கே சனத்குமாரர்கள் வந்தனர்

நாரதரும் வந்தார் ..

வியாசரின்
விஷாத யோகத்தைக்கண்டு மனம் வருந்தினர் ...

சதானந்தர் சொன்னார் ...

வியாச முனியே ... உங்கள் வருத்தம் நான் அறிவேன் ...

ஒரு உதாரணம் சொல்லி புரிய வைக்க முயற்சி செய்கிறேன்

மரங்களும் கனிகளும் ஒரே இடத்தில் உருவானவைகள் தான் ...

ஆனால் கனியை தவிர வேறு எதை தின்றாலும் அது இனிப்பையோ ரஸத்தையோ தராது ...

ரஸம் , கனி என்று இங்கே நான் சொல்வது இறைவனின் பெருமைகள் , அவன் லீலைகள் , அவன் கருணைகள் ...

அதை விடுத்து வெறும் நிகழ்ச்சிகளை தொகுத்து கொடுத்து உள்ளீர்கள்

இதனால் அவைகள் சுவை இல்லாமல் இருக்கின்றன

உங்களுக்கும் மன நிறைவு இல்லை ...

நாரதர் சொன்னார் ...

பகவானையே பாகவதமாக பாடுங்கள் ...

அதுவே சுவை சுகந்தம் , ஆனந்தம் , பரமானந்தம் ...

வியாசருக்கு புரிந்தது ...

மனதை இறைவனுக்கு அற்பணிக்காமல் ஆயிரம் கற்பூரங்களை எரித்து என்ன பயன் ?

ஆயிரம் பேர்களுக்கு அன்னமிட்டு என்ன பயன் ?

மனதில் கொஞ்சம் இடம் கொடுத்தால் போதுமே இறைவனுக்கு

அவன் முழு மனதையும் திருடிக்
கொள்வானே....

இது தெரியாமல் இரவும் பகலும் அறியாமல்

எழுதி என்ன பயன் ?
பேசி என்ன பயன் ?

வியாசர் புரிந்துகொண்டார் ஆனால் நாம் ??
🪷🪷🪷
ravi said…
*ராமேஸ்வரம் என்பதன் அர்த்தம் என்ன ?*

---- மஹா பெரியவா

அந்தக்காலத்தில் ஊர்களுக்கு காரணம் இல்லாமல் இந்த காலத்தைப்போல் பேர் வைக்க மாட்டார்கள் ...

அந்த வகையில் ராமேஸ்வரம் என்பதன் தாத்பரியம் தெரியுமோ ?

எல்லோரும் தலையை சொரிந்து கொண்டனர் ...

பெரியவா சிரித்துக்கொண்டே சொன்னார் ...

இந்த பெயர் ஹரியும் ஹரனும் ஒருவரே என்பதை குறிக்கும் ..

மெதுவாக கூட்டத்தில் இருந்து ஒருவர் தயங்கி தயங்கி வினா ஒன்றை எழுப்பினார் ...

பெரியவா க்ஷமிக்கணும் ...

இங்கே ராமர் சிவனுக்கு பூஜை பண்ணினார் ...

ஹரியை விட ஹரன் தானே பெரியவர்

எப்படி இருவரும் ஒன்றாக முடியும் ?

பெரியவா சொன்னார் ...

ராமேஸ்வரம் ... இதை இரண்டு விதமாய் பிரிக்கலாம்

1. ராமனுக்கு ஈஸ்வரன்
2. ராமனே ஈஸ்வரன்

முதல் வகையில் நீங்கள் சொல்வது உண்மை ...

ராமனுக்கே பரமேஸ்வரன் ஈஸ்வரனாக இருக்குமிடம் இது

ஆனால் இன்னும் பரந்த விசாலமான கோணத்தில் பார்த்தால் ராமனே இங்கு ஈஸ்வரனாக இருக்கிறார் ...

ராமனுக்கும் பரமேஸ்வரனுக்கும் எந்தவித பாகுபாடும் இல்லை .

எப்படி ராமா என்ற எழுத்தில் *ரா* நாராயணனையும் *ம* சிவனையும் குறிப்பிடுகிறதோ

அது போல் இங்கே ராமன் ஈஸ்வரனாகி தனக்குத்தானே பூஜை செய்து கொள்கிறான் ...

நாம் பார்க்கும் பார்வை விசாலமாக இருக்க வேண்டும் ...

இருந்தால் எண்ணற்ற தெய்வங்கள் இருந்தாலும் நமக்கு பிரம்மம் தனில் ஏக பக்தி உண்டாகும் ...

இல்லையென்றால் நாம் அடிக்கடி இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று சண்டை போட்டுக்கொண்டே இருப்போம் ...

கூட்டம் பெரியவா தான் *ஹரிஹரன்* என்று புரிந்துகொண்டு பெரிய கரகோஷத்தை தந்தது 🙏🙏🙏
ravi said…
சிவ சிவ
உணர்த்தாமல் உணராது,

உணர்ந்தபின் சிதறாது,

எமனே வந்தாலும் பதறாது,

எது போனாலும் கலங்காது,

நம்முள் சிவமும் பிரியாது,

இனியும் பிறவி கிடையாது,

எக்காலமும் நம் "சிவம்" அழியாது !!!
👣👣👣🪷🪷🪷
ravi said…
ராமர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது ...

குறை என்று சொல்லி வருவோர் எவரும் இல்லை ..

அதனால் எவர் வாழ்விலும் கறை படியவில்லை..

கரை சேர்க்க ராமன் இருக்க

வரை இன்றி நாட்டில் வளம் இருக்க

புரையும் நரையும் இல்லா வாழ்க்கை கண்டனர் அயோத்தி வாசிகள்

ஒரு நாள் ராமன் தீவிர ஆலோசனையில் இருக்க

ஒரு தெருநாய் அரண்மனை வாசலில் ஓயாமல் குரைத்தது ....

ராமனின் கவனம் சிதற

காவலாளிகள் நாயை விரட்ட

அது இன்னும் பலமாக கத்தியது ...

லக்ஷ்மணன் நாயிடம் வந்து வினவ

ராமனை வெளி வரச் சொல் என்று வலியால் துடித்து சொன்னது

ராமன் ஓடி வந்தான் தெருவிற்கு ...

என்ன என்று விசாரிக்க நாய் கூறியது ...

இதோ இந்த சந்நியாசி கல்லால் என் காலை உடைத்து விட்டான் .. காலையில் வந்து முறையிட நேரமில்லை வலி உயிர் போகிறது என்றது ...

உடனே ராமன் அந்த சந்நியாசியை விசாரிக்க அவன் சொன்னான் ..

பல நேரம், நாட்கள் பட்னி கிடந்தேன்

இன்று உணவு கொஞ்சம் கிடைத்தது ...

பசியின் கொடுமையால் அவசர அவசரமாய் உண்ண ஆரம்பித்தேன் ...

இந்த நாய் அதற்குத் தடையாய் இருந்தது அதனால் அதன் மீது கல்லெறிந்தேன் ...

ராமன் சொன்னான் ...

ஐந்தறிவு கொண்ட இந்த நாய்க்கு தன் உணவை சமைக்கத் தெரியாது கேட்கத் தெரியாது ...

அதற்கும் பசி... பாவம் என்ன பண்ணும். ?

உனக்கு தண்டனை கொடுக்கும் பொறுப்பை அந்த நாயிடமே விட்டு விடுகிறேன்

நாயும் சந்தோஷத்துடன் அரசே இவனை ஒரு சிவாலயத்தில் வேலை செய்யும் சிப்பந்தியாக்குங்கள்

அதுவே நான் கொடுக்கும் தண்டனை என்றது

ராமர் உட்பட எல்லோரும் சிரித்தனர் ..

இது ஒரு பெரிய பாக்கியம் அல்லவா எப்படி தண்டனை ஆக முடியும் ?

அந்த நாய் சொன்னது ...

சிவாலயத்தில் ரொம்பவும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் ...

ஒழுக்கம் கொஞ்சம் குறைந்தாலும் அவர்கள் அடுத்த ஜென்மத்தில் நாயாக பிறப்பார்கள் ... 🐶

நான் போன ஜென்மத்தில் சிவாலயத்தில் பணி புரிபவனாய் இருந்தேன் ...

ஒழுக்கம், பக்தி இல்லாமல் வேலை செய்தேன் ...

பலன் வினையாக மாறியது ...

எல்லா உயிர்களிலும் ஈசன் இருக்கிறான் என்று உணராமல் வாழ்ந்தேன் ..

பசி என்று வருபவர்களை நிந்தித்தேன் காயப்படுத்தினேன்

.. விளைவு நாயாக இந்த ஜென்மத்தில் தெருத் தெருவாய் அலைகிறேன் ....

இந்த சந்நியாசி ஒழுக்கமாக சிவாலயத்தில் நடந்து கொண்டால்

உன் அருளால் ராமா ...சிவ பதவி கிடைக்கும்

இல்லை எனில் அவனும் என்னைப்போல் நாயாக அலைவான் .. 🐶

ராமர் அந்த நாயை தடவிக்கொடுத்து அதற்கும் சிவ பதவி கிடைக்க ஏற்பாடு செய்தார் .... 🐶
ravi said…
*திருப்பாவை பாடல் 22*

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய்

வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
---------

கண்ணா!

எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும்,

இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான

அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும்,

சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள்.

கர்வம் ஏதும் இல்லா நாங்களும் உன் அருகில் நிற்கிறோம்

எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும்,

தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும்,

உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா?

சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால்,

எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!!!💐💐💐
ravi said…
*திருப்பள்ளியெழுச்சி பாடல் 2*🙏

அருணன் இந்திரன் திசை அணுகினன்

இருள் போய்
அகன்றது உதயம்.....

---------🌞

அருணன் வந்து விட்டேன் அண்ணலே...

வருணன் தெரு சுத்தம் செய்து விட்டான்

சூரியன் இருளை நீக்கி விட்டான் ...

உன் கருணை கதிர்கள் எங்கள் மீதே விழ

ஓடி மறைந்தன கோள்கள் , வால்கள் இல்லா குரங்குகள் போல்

ஏழரை என்று சொல்லி வந்தான் சனீஸ்வரன் ...

நாலரை கொடுத்து எட்டுத்திக்கும் ஓடவிட்டாய் ...

உயிர் எடுப்பேன் என்றே வந்தான் எமன் ...

சிவமாக நீ என்னுடன் இருக்க

சவமாக திரும்பி சென்றான் வெறும் கையுடன்

உனது கண்களைப் போன்ற தாமரைகள் தடாகங்களில் மலர்ந்து விட் டன.

வண்டினங்கள் அவற்றில் தேன்குடிக்க திரளாக வந்து கொண்டிருக்கின்றன.

தேனுமதே சிவ பிரானே ...

துன்பங்கள் கிலோ என்ன விலை என்றே எங்களை கேட்க வைத்தாய் ...

நீ கண் விழித்துக்
கொள்வாயோ

கண்மூடி வாழும் உயிரினங்கள் கண் திறந்து
உணர்ந்திடவே !!
ravi said…
*முருகா*!

நீ அருகே நிற்க அடியேனும் விழித்திருக்க

என் மனை நுழைந்தார் ஐம்பெரும் கள்வர்

இடர் தரத் துணிந்தார் அந்தோ !

நின் பெயர் துதிக்கும் ஆசை நெஞ்சிலே இருந்தும் ,

ஏனோ பன்முறை நழுவ விட்டேன் ,

பதமலர் மறந்து நின்றேன் !!

மறதியும் பிழையும் என்னை வருத்திய திருட்டும் எல்லாம்

முருகா!

நின் சூழ்ச்சி எனும் உண்மை தனை இன்று கண்டேன் !

தந்திர வலையை வீசித் தனயனைத் திகைக்க வைத்தாய் !

சுந்தரா , உணர்ந்தேன் ;

உன்றன் ஆடலை அறிந்து கொண்டேன் !

கொடுத்திலை, அதனால் நானும் கொடுத்திலன் ;

உணவு நாடிப் படைத்திலை,

எனவே ஏழை படைத்திட சோறு உண்டோ ?

நினைவுறும் இன்ப துன்பம் , நெடும்பழி ,
இனிய கீர்த்தி ,

என முரண் எய்தி நிற்கும் இயல்பெலாம் உனக்கே சொந்தம் !

ஆயினும் தந்தை நீயே

அவனியில் பேதம் செய்யும் மாயமும் ஏதோ ?

உன் திருவிளையாடல் மாண்போ ?

முன்னமே நன்மை தீமை அளவினை முடிவு பண்ணி

என் மனம் அமைத்தாய்;

உன்றன் இச்சை போல் அச்சில் வார்த்தாய் !

அருள்விழிச் சாடை காட்டி அனுமதி அளித்தாய் ;

நீ போய் இருநில இன்பமெல்லாம் அனுபவித்திடு என்றாய் !

பவசம்சாரம் ஆகிடும் உருளையில் சிக்கி

வேகமாய் சுழலகின்றேன்;

மீளவும் வழியைக் காணேன் !

பொய்யினை மெய்மை என்றும் நஞ்சினைப் புதுத்தேன் என்றும்

மையலில் மயங்கி வீழ்ந்து வாழ்விலா பேதை ஆனேன் !!
ravi said…
*தேவீ மஹாத்மீயம்* vs *சௌந்தர்யலஹரீ*

தேவீ மஹாத்மியத்தில் 5வது அத்தியாயத்தில் *சௌசிகீ* எனப்படும்

ஸ்ரீ துர்க்கை சும்ப நிசும்பர்களுக்கு சொல்கிறாள் ...

"தனியாக இருக்கும் என்னிடம் போரிட்டு யார் வெல்கிறார்களோ அவரை நான் திருமணம் செய்து கொள்வேன் "

நிசும்ப வதம் ஆனவுடன் சும்பன் மயக்கம் தெளிந்து அன்னையிடம் போரிட வருகிறான் ...

வந்தவன் கேலியாக சொல்கிறான்

"ஏ துஷ்ட துர்கையே !

வலிமையின் பெருமையால் கொப்பளிக்கப்பட்டவளே,

உன் பெருமையை (இங்கு) காட்டாதே.

நீ மிகவும் கர்வம் கொண்டவள்

மற்றவர்களை ( நவ கன்னிகைகள் ) கொண்டு சண்டை போடுகிறாய் ...

நீ அன்று சொன்னது என்ன இன்று நீ செய்வது என்ன .?

தனி ஆளாக எவருடைய உதவியும் இல்லாமல் போரிட உனக்கு தையிரியம் இல்லை
...

தேவி பதில் உரைக்கிறாள்

இந்த உலகத்தில் நான் தனியாக இருக்கிறேன். என்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? கேடுகெட்டவனே, என் சொந்த சக்திகளாகிய இந்த தெய்வங்கள் என் சுயத்திற்குள் நுழைவதைப் பார்!'

இங்கே எனது சக்தியால் நான் முன்வைத்த பல வடிவங்கள் - அவை என்னால் திரும்பப் பெறப்பட்டு, (இப்போது) நான் தனியாக நிற்கிறேன். போரில் உறுதியாக இரு.'

இதில் நாம் அறிவது என்ன வென்றால்

அம்பாள் பரபிரம்மம் ... எல்லாமே அவள் அம்சங்கள் ...

அவளுக்கு மீறி எந்த சக்தியும் இல்லை ...

இதைத்தான் ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரீயில் 97 வது ஸ்லோகத்தில் இப்படி சொல்கிறார்

பரப்பிரம்மத்துடன் இணைந்த பராசக்தியே !

வேதத்தை அறிந்தவர்கள் – உன்னையே – பிரம்மாவின் பத்தினியான வாக் தேவதையாக கூறுகிறார்கள். –

உன்னையே ஹரியினுடைய பத்தினியான லக்ஷ்மியாகவும்,

சிவனுடைய பத்தினியான பார்வதியாகவும் – கூறுகிறார்கள்.

நீயே இம்மூவருக்கும் அப்பாற்பட்டவளாக அடைவதற்கு அரியதும்

எல்லையில்லாத மகிமை உடையவளாக – *மகாமாயை* எனப் பட்டவளாக உலகு அனைத்தையும் ஆட்டி வைக்கிறாய்.

எவ்வளவு ஒத்துப்போகும் எண்ணங்கள் ...

ஆதி சங்கரரின் படைப்புக்களில் *சௌந்தர்யலஹரீ* *தேவி மஹாத்மீயத்திற்கு*
இணையான புண்ணிய கிரந்தம் என்றால் அது மிகை ஆகாது ... 🙏
ravi said…
Investments in Stocks or in Divinity ... Which one is the best yielding ?

*Stocks*

1.Depends on the market's sentiments ( demand n supply )

2.Stock market rigging is very common

3.Gains will give pleasures but losses will take the life

4.Tax incidence is high on sale or liquidation

5 Highly volatile market gets vibrated on all adverse happenings around the globe .

6.Impairment of your money and time in the long run and yields multiply into ego and possessiveness

*Investment of your time and money in Spirituality / Divinity*

1.Sentiments are always positive and vibrant

2.No rigging but pure bhakthi and saranagathi

3.No loss of any sort but only gains for the body and soul

4.Tax free on your investments of time and money

5.Generates positive vibes and leads to get involved in Sastangs and ultimately mukthi

6.No impairment on your investment of time and money instead yields multiply into manifolds .

*Key takeaways ....*

Spiritual mentality will follow you even in your next birth if any but no such carry forwards on material wealth you amassed in this birth
🙏🙏🙏
ravi said…
*முருகா* .....

பன்னிரண்டு கண்கள் கொண்டும்

பாரா முகம் ஏன் கொண்டாய் ... ?

ஆறுமுகம் இருந்தும் ஆறுதலை ஏன் தர மறுத்தாய் ?

எத்தனை கவி பாடினாலும் உருகா மனம் ஏன் கொண்டாய் ?

அட்டூழியம் செய்த சூரனை ஏன் அருள் செய்து ஆட்க்கொண்டாய்

நானிருக்க பயம் ஏன் என்றாய் ...

நீ இருந்தும் இழிவுகள் நடப்பதேன் ?

உன் சொல்லிற்கும் செயலுக்கும் இருக்கும் தொடர்பை ஏன் துண்டித்தாய் ?

கேள்வி கேட்போர் யாருமில்லை என்றோ பதில் தர மறுக்கின்றாய் ?

புன் சிரிப்பில் மயக்கியது போதும்

செந்நெருப்பில் வாடுகின்றோம் செந்நீரில் குளிக்கின்றோம் ...

உன் செவ்வாய் இதழில் சொர்க்கம் கண்டோம் ...

சக்தி வேல் கண்டு பக்தி கொண்டோம் ...

ஆறுபடை வீடு கண்டே மயிலாய் தோகை விரித்தோம் ...

சேவலாய் எழுப்புகிறோம் ...

தூங்கியது போதும் ...

சூரர் பலர் சாக வில்லை ...
சிங்க முகம் மாறவில்லை ...

சீர் தூக்கி பார்க்கிறோம்

உன் நீதி தவறுவதில்லை ... உனை நம்பினோம் நாங்கள் என்றும் வீழ்வதில்லை 👍
ravi said…
*திருப்பாவை பாடல் 22*

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய்

வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
---------

கண்ணா!

எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும்,

இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான

அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும்,

சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள்.

கர்வம் ஏதும் இல்லா நாங்களும் உன் அருகில் நிற்கிறோம்

எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும்,

தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும்,

உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா?

சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால்,

எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!!!💐💐💐
ravi said…
*திருப்பள்ளியெழுச்சி பாடல் 2*🙏

அருணன் இந்திரன் திசை அணுகினன்

இருள் போய்
அகன்றது உதயம்.....

---------🌞

அருணன் வந்து விட்டேன் அண்ணலே...

வருணன் தெரு சுத்தம் செய்து விட்டான்

சூரியன் இருளை நீக்கி விட்டான் ...

உன் கருணை கதிர்கள் எங்கள் மீதே விழ

ஓடி மறைந்தன கோள்கள் , வால்கள் இல்லா குரங்குகள் போல்

ஏழரை என்று சொல்லி வந்தான் சனீஸ்வரன் ...

நாலரை கொடுத்து எட்டுத்திக்கும் ஓடவிட்டாய் ...

உயிர் எடுப்பேன் என்றே வந்தான் எமன் ...

சிவமாக நீ என்னுடன் இருக்க

சவமாக திரும்பி சென்றான் வெறும் கையுடன்

உனது கண்களைப் போன்ற தாமரைகள் தடாகங்களில் மலர்ந்து விட் டன.

வண்டினங்கள் அவற்றில் தேன்குடிக்க திரளாக வந்து கொண்டிருக்கின்றன.

தேனுமதே சிவ பிரானே ...

துன்பங்கள் கிலோ என்ன விலை என்றே எங்களை கேட்க வைத்தாய் ...

நீ கண் விழித்துக்
கொள்வாயோ

கண்மூடி வாழும் உயிரினங்கள் கண் திறந்து
உணர்ந்திடவே !!
ravi said…
BG 2.8

*சரணாகதி*

ந ஹி ப்ரபஷ்யாமி மமாபனுத்யாத்

யச்சோகமுச்சோஷணமிந்த்ரியாணாம் |
அவாப்ய பூமாவஸபத்னமருத்தம்

ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம் || 8||

என்னால் எதுவும் முடியாது கிருஷ்ணா ... உனையே சரணாகதி என்று வந்துவிட்டேன் எது எனக்கு சரியான பாதை என்று நீ தான் காட்ட வேண்டும் ....

இதை கேட்டு கிருஷ்ணர் சிரித்தார் ...

கிருஷ்ணா ஏன் சிரிக்கின்றாய் ? என் நிலைமையை கண்டா இல்லை நான் பேசுவதை கேட்டா ?

அர்ஜுனா உனக்கு ஞாபகம் இருக்கா

ஒருமுறை நாம் ஓர் குளத்தின் அருகே அமர்ந்து உரையாடிக்
கொண்டிருந்தோம்..

அப்பொழுது அந்த குளத்தில் இருந்த ஒரு மீன் என் கால்களையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது ..

அதைப் பிடித்து ஒரு குவளையில் நீருடன் போட்டு உன்னிடம் சொன்னேன்

இந்த மீனை மீன்களை வலை அல்லது தூண்டில் போட்டு பிடிக்காத குளத்தில் விட்டு விட்டு வா என்றேன் .

நீ கேட்டாய் இந்த மீனுக்கு மட்டும் என்ன தனி மரியாதை என்று

அர்ஜுனா குளத்தில் எவ்வளவோ மீன்கள் இருந்தும் இந்த ஒரு மீன் மட்டும் என்னிடம் சரணாகதி அடைந்தது .. அதனை காப்பாற்றும் கடமை என்னுடையது என்று

நீ என்னை சரணடைந்து விட்டேன் என்று சொல்லும் போது அந்த மீனின் ஞாபகம் வந்தது ...

கண்ணா ... ஒவ்வொரு காரியமும் நடக்கும் முன் நீ அதை புரிந்துகொள்ள ஓர் முன்னோட்டம் தருகிறாய் ...

புரிந்து கொள்ளும் பக்குவம் எங்களுக்குத்தான் இல்லை கண்ணா !!

சிரித்தான் கண்ணன் ....

அந்த சிரிப்பில் *மஹாமாயா* துள்ளி குதித்தாள் வெளியே !!
ravi said…
There are many ships that sail in the Sea of Life:

Friendship, Partnership, Companionship, Relationship, Hardship.

When the storms come to set you adrift, Remember, there is one ship You can use as an anchor – *Worship* ."
ravi said…
*திருப்பள்ளியெழுச்சி பாடல் 5*🙏🙏🙏
*பூதங்கள் தோறும் நின்றாய்*

======💐💐💐

ஐம்பூதங்களும் நீயே

ஐந்தெழுத்தும் நீயே

ஐம்புலன்கள் ஆள்வதும் நீயே

ஐயம் தீர்ப்பதும் நீயே

உனை நேரில் கண்டோர் உளரோ ?

உன் உருவம் நெஞ்சில் பதித்தோர் இலரோ ?

உன்னில் தன்னை காண்போர் சிலரோ

உண்மை நீயே என்றே உணர்வோர் அன்று அலர்ந்த மலரோ

எங்கள் முன் நீ வருவது கனவோ

நீ இன்னும் உறங்குவது எழிலோ ?
ravi said…
*திருப்பாவை பாடல் 25* 🪷🪷🪷

*ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்*

*ஒருத்தி மகனாய் ஒளித்து வளர*

=====

தேவகிக்குப் பிறந்தாய் ...
யசோதையிடம் வளர்ந்தாய்

ராதையிடம் மலர்ந்தாய்
ருக்மணியை மணந்தாய்

கோபிகளுடன் அலைந்தாய் கோமாதாக்களுடன் வளர்ந்தாய் ... !!

ஒரே இரவில் உருமறினாய் ..!!

ஒரு களவம் மண்ணில் அண்டங்கள் சுழல வைத்தாய் !!

பயம் எனும் நெருப்பை கம்சன் மடியில் சுமக்க வைத்தாய் ...

பரம் எனும் பரிசை பாசமுடன் அள்ளி தருகிறாய் எங்களுக்கே !!

உனை பாராட்ட வார்த்தைகள் தருவாய் கண்ணா

உன் அருள் இன்றி வாயில் உதித்திடுமோ தேனிலும் இனிய உன் நாமங்கள் ??
ravi said…
Highly nostalgic n emotional....

*Patience*

A New York City taxi driver arrives at the final stop for his shift. He honked. After waiting a few minutes, he honked again. Because it was his last stop, he considered pulling away. Instead, he put the car in park and walked up to the door.

He knocked.

He heard an elderly voice, “Just a minute.”

He then heard the shuffling of bags moving across the floor. Then the door opened.

It was a small woman in her 90’s with a soft smile wearing a print dress and a pillbox hat with a veil pinned on it. As she answered, the taxi driver caught a glimpse inside the house. It looked as if no one had lived there for years. All the furniture was covered in sheets, no clocks on the wall, and no knickknacks on the counters.

“Could you carry my bag?“ the lady asked.

The cab driver walked her slowly down the steps of the front porch to the cab.

Once in the cab, the lady handed the driver an address and asked, “Could you drive through downtown?”

“It’s not the shortest way,” The driver answered.

“I’m in no hurry. I don’t mind,” she said. “I’m on my way to hospice…”

The driver and passenger shared a quick glimpse in the rearview mirror, enough for her to see his concern and continue:

“I don’t have any family left. The doctor says I don’t have very long.”

The driver quietly reached over and shut off the meter then asked, “What route would you like me to take?”

For the next two hours, they drove through the city. She showed the driver where she once worked, the neighborhood where she and her husband first lived, a furniture warehouse that had once been a ballroom when she was a girl. There were a few parts of town she asked the driver to slow down and she would sit, staring into the darkness, saying nothing.

After a couple hours, she suddenly said, “I’m tired. Let’s go now.”

They drove in silence to the address she had given him. When they arrived, two orderlies came out to the cab as soon as they pulled up. They must have been expecting her.

The driver opened the trunk to take out the suitcase. As he shut the trunk, she was already in a wheelchair.

“How much do I owe you?” She asked, reaching into her purse.

“Nothing,” said the driver.

“You have to make a living,” she answered.

“There are other passengers,” he responded.

Almost without thinking, the driver bent and gave the lady a hug. She held on tightly.

“You gave an old woman a little moment of joy,” she said. “Thank you.”

The driver gave a final squeeze of the lady’s hand and the two turned to go their separate ways. As he got in the car and glanced over to her, the door was shut.

He didn’t pick up any more passengers That night. In fact, he could hardly speak.

What if that woman had gotten an angry or impatient driver? What if she got someone who refused to get out and go to her door? Refused to take the time driving around the city?

The taxi driver couldn’t shake the feeling that this single moment may be one of the most important moments of his life.

*THE CHALLENGE*
*Be patient in conversation.*

We can treat our interactions as just that — an interaction — when, in fact, there may be an inportant moment waiting to be discovered.

The woman is not the only one to benefit that day. One could argue that the cab driver got the most from their experience. A life to live with that memory and that feeling of what he did, the significance of the moment, and knowledge of how precious life is. I’m sure all this and more stuck with him every day after.

Not every interaction has this level of potential. But we’ll never know unless we try.

_Take a few moments today to find more patience with the people in your life. This might be listening more intently to your spouse, enjoying a conversation with your kids, taking time to check in with a neighbor, or listening to a coworker’s struggle with something outside of work. Whatever it is, give it your attention._

_*Look for the lesson, the opportunity to give encouragement, or, often the most important, simply be present with that person. It might mean the world to them.*_

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை