ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 37 ( 194-197)
லக்³னசாமரஹஸ்தஶ்ரீஶாரதா³பரிவீஜிதா ।
லஜ்ஜாபத³ஸமாராத்⁴யா லம்படா லகுலேஶ்வரீ ॥ 37 ॥
194 : லக்³னசாமரஹஸ்தஶ்ரீஶாரதா³பரிவீஜிதா ।
லக்ஷ்மியும் சரஸ்வதியும் சாமரங் கைக்கொண்டு வீசப் பெற்றவள் . அவளை வணங்குபவர் செல்வம் , வீரம் , கல்வி எதிலுமே ஒரு குறையும் இல்லாமல் சந்தோஷமாக, மன நிம்மதியுடன் வாழ்வார்கள் . எல்லோராலும் , குறிப்பாக சிறந்த உபாசர்களாலும் என்றுமே ஆராதிக்கப்படுபவள் .
195 : லஜ்ஜாபத³ஸமாராத்⁴யா –
உலக சிற்றின்பங்களை துறந்தவர்கள் அவளை அணுகுவது சுலபம் .
196. லம்படா
பிருதிவி தத்துவத்தில் தன்னை மறைத்துக் கொண்டவள் .
197. லகுலேஶ்வரீ
உலகம் லயிக்கும் மோக்ஷஸ்வரூபிணீ .
194. Om Lagnachaamaraa Hasthasreesaradaa Pariveejithaayai Namaha
Salutations to the Mother, who is fanned by Goddess Lakshmi
on the left side and Goddess Saraswathi on the right side. Both of them hold
ven chamaras (fans with silver handles), and wait on her ready to take her
Orders .
As, in Lalitha sahasranama,
sachaamararamaavaanisavyadakshinasevithaa'.
195.
Om Lajjapada Samaaraadhyaayai Namaha
Salutations to the Mother, who is Adored by the Manas, seat of shyness. She is worshiped in Bahir yagam by women who are shy.
196. Om Lampataayai Namaha
Salutations to the Mother, who is Avidya Swaroopini. Lam is Earth Beeja and Pata is Avidya. Devi keeps control of the Ajnana hiding in the World. Maya shakthi who makes the false things look true is also under the control of Devi. There are obstacles in performing Good karma and poojas. Ishwara is Tamasic and is not ready to give the fruits easily, this is also one of the Leelas of Devi because this Tamasic Guna is given to Lord Eeshwara by Devi.
197. Om Lakuleshwaryai Namaha
Salutations to the Mother, who is Eeshwari for all the Adhara chakras , Moolaadhaara,Swadhistana, Manipura, Anahatha, Visuddhi, Aajnaa, and Sahasraara. In creation, from the Tatwa Hreem, Akasha comes out. From Akasha Vayu comes out, from Vayu, Fire comes out. From Fire, Water comes out, and from Water Earth comes out. The reverse happens when Layam, Destruction takes place. Earth goes back to Water, Water goes back to Fire, Fire goes back to Vayu and Vayu goes back to the Akasha. Devi has the powers for all these to happen. So she is SadBrahma Sadroopadhaarini.
* 194 *
Lagna-chamara-hastha-sri-saradha-parivijitha - She who is served by Lakshmi and
Sarawathi (actually fanned by them using chamara)
* 195 * Lajjapada samaradhya - She who is most
fit to be worshipped by those who shy of (shun) this world
* 196 * Lampata - She who has hidden herself
from the earthly principles
* 197 * Lakuleshwari - She in whom the
communities in the world merge
Comments
Always try to be naughty...
Have a wonderful celebration!
கண்ணதாசனின் திறமைகளில் ஒன்று .....நல்ல நல்ல நூல்கள் சொல்லும் கருத்துக்களை தன் பாடல் வரிகளாக மாற்றிக்கொள்வார் ... ஒரிஜினல் யை விட அழகாக வரிகள் அமைந்து விடும் ...
உதாரணத்திற்கு இந்த பாடலை இன்று பார்ப்போம்
படம் : கருப்புப்பணம்
பாடல் : எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
பாடியவர் : சீர்காழி
இந்த படம் கண்ணதாசனின் சொந்த தயாரிப்பு .
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
...சரி இதற்கும் அபிராமி அந்தாதி பாடல்களுக்கும் என்ன சம்பந்தம் ?
ஒரு முறை கண்ணதாசன் தன் நண்பர் வீட்டுக்கு விருந்து உண்ண போனார்
அங்கே அந்த வீட்டில் ஒரு சிறுமி அபிராமி அந்தாதி சொல்லிக்கொண்டிருந்தாள்
அந்த சிறுமி 54 வது பாடலை பாடிக்
கொண்டிருக்கும் போது வீட்டின் உள்ளே நுழைந்தார் கண்ண தாசன்
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல்,
நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால்
ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.!
பாடல் அவரை மிகவும் கவர்ந்தது ...
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு......
இதன் அர்த்தம்
அபிராமியை மனதார நம்பி வழிபடுபவர்கள் என்றும்
பொருள் இல்லை என்று சொல்லி பிறரிடம் சென்று கையேந்த மாட்டார்கள் ..
பிறர் சொல்லும் இழிச் சொற்களை கேட்கும் நிலமை என்றும் அவர்களுக்கு உருவாகாது
அதே போல்
உயர்ந்த தவத்தைக் கல்லாத இழி
குணத்தவர்களிடம் தோழமை அவர்களுக்கு என்றும் வாய்க்காது
இதிலிருந்து எடுத்த வரிகள்
" *இல்லாமை* ...."
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் -
இங்கு
*இல்லாமை* இல்லாத நிலை வேண்டும்"
அதையே வரிகளாக அமைத்து பாடல் இயற்றினார் ...
தனக்கு என்று பாடிய பாடலில் இருந்து ஓர் வரி திருடிக்கொண்ட கண்ணதாசனை அபிராமி சபிக்க வில்லை ...
கண்ணதாசனை கொண்டே ஆதி பராசக்தியில் அபிராமி அந்தாதியில் வரும் 24வது பாடலை பாட வைத்து
படத்தை அதிக வசூல் செய்ய வைத்து
அந்த படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் இல்லாமையை இல்லாது ஒழித்தாள் அபிராமி !!
In this world, empty of essence or true joy , which has let me far from contemplating my real Self , I'm roaming lost and blind with a dull intellect.
it befits You to protect me with supreme compassion.
Who else is more wretched than I for You to shelter ?
And who , other than You , so skilled in protecting the helpless , could be my refuge in all three worlds , O Pasupati ?
*Shivananda Lahari 13💐*
பஞ்சம் இல்லா தஞ்சம் தரும் கஞ்சமோ🪷 நீ
புஜங்கள் எல்லாம் அபய வரத முத்திரைகள் காட்டும் அம்புஜமோ 🪷நீ
விந்தை என்றே வியக்க வைக்கும் அரவிந்தமோ🪷 நீ
ஜோராக ஆட்சி செய்யும் சரோஜமோ🪷 நீ
நளினமாய் நடை போடும் நளினமோ 🪷 நீ
எரும்புக்கும் கரும்பாய் இனிக்கும் அரும்போ 🪷நீ
சண்ட முண்டர்களை வதம் செய்த முண்டகமோ🪷 நீ
ராஜீவ 🪷கண்களை கொண்ட ராஜாத்தியோ நீ
சடுதியில் வந்தே சங்கடம் தீர்க்கும் சரோஜா🪷 வோ நீ
நல்லதே செய்யும் நளினியோ 🪷நீ
பஞ்சும் அஞ்சும் சிவந்த திருவடிகள் கொண்ட பத்மமோ🪷 நீ
கமலங்கள் 🪷 ஆதவன் வரவை நாடி ஏங்கி நிற்கும் மொட்டுக்களாய் ...🌷🌷🌷
ஜலஜா உன் வரவை தினம் தினம் நாடி மொட்டாய் 🌷 இருக்கும்
தட்டாரப் பூச்சி அன்றோ நான் !!
அருமை 🙏❤️🙏
------------------------------------------
💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐
*இச்சுப வாழ்வில் நீவிர்*,
அன்பால் அரவணைத்துச்,
சுக- துக்கத்தைப் பகிர்ந்தெடுத்துப்,
பாசத்தால் விட்டுக்கொடுத்து,
நேசத்தால் நெகிழ வைத்தீர்!
சுதந்திரம் பரஸ்பரம் கொடுத்து,
நிரந்தர நம்பிக்கை சேர்த்து,
உறுதுணையாய் நின்று,
உதாரணமாய்த் திகழ்ந்தீர்!
பிழைகளைப் பொறுத்து,
குறைகளை அனுசரித்து,
வேற்றுமை தவிர்த்து,
ஒற்றுமை கடைப்பிடித்தீர்!
இச்சுகமான வாழ்க்கையில்,
இதமான பொக்கிஷமாய்.....
*அ* ன்பான உறவுகள்
அமைந்தது வரமாக.
*ஆ* னந்தமான தருணங்கள்
ஆனது சுகமாக.
*இ* ன்பமான நிகழ்வுகள்
இணைந்தது இதமாக.
*ஈ* கையின் நன்மையும்
ஈன்றது சிறப்பாக.
*உ* ள்ளத்தில் உன்னதமானவரே,
*ஊ* க்கத்துடன் உற்சாகமானவரே!
*எ* ண்ணத்தில் சிறந்தவரே!
*ஏ* ற்றத்தில் உயர்ந்தவரே!
*ஐ* ஸ்வர்யம் என்றும் இல்லத்தில் நிறைந்திட,
*ஒ* ற்றுமை *ஓ* ங்கிட,
*ஒள* ஷதமில்லா ஆரோக்கியத்துடன்,
*உயிர் எழுத்துக்களின் உயிர் நாடி* போல்,
மலரும் மணமும் போல்,
இணைபிரியாமல் வாழ்ந்து,
உள்ளம் பூரித்து, முகம் மலர்ந்து,
சொந்த பந்தங்களுடன் குதூகலித்து,
*ஆல் போல் தழைத்து*,
*அருகு போல் வேரூன்றி*,
*மூங்கில் போல் சுற்றம் சூழ*,......
இனிய மண நாள் காணும்,
*ரவி மற்றும் லக்ஷ்மிக்கு*
இன்று போல் என்றும்,
இன்பம் பொங்கிட,
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!
எல்லையற்ற என் அன்பார்ந்த வாழ்த்தையும் சேர்க்கிறேன்!
*அன்புடன் வாழீர் பல்லாண்டு*!
------அன்புடன் *மஹா*.
💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐
அம்மா உன் கண்களை செதுக்கிய பிரம்மன்
ஒர் கண்ணில் தன் மனைவியை குடி வைத்தானோ ?
கவித்துவம் ஞானத்வம் மழை போல் கொட்டுகிறதே !!
இன்னோர் கண்ணில் மாதவன் சீர் செய்து தன் ஸ்ரீ தனை வைத்தானோ ?
பொருள் செல்வம் கலை செல்வம் கடலாய் பொங்குகிறதே !
கண்கள் இரண்டும் இணை இல்லா ஆட்சி செய்ய
எழும் ஆசைகள் மூன்றாம் கண்ணால் முடிவு பெறாதோ ?
பெண்ணாய் கண்ணாய் பொன்னாய் பொருளாய் பூவாய் பண்ணாய் பாடலில் அமர்ந்தாயோ ?
தன்னால் வரும் ஆசைகள் தாய் உன்னை வணங்க
மண்ணாய் போகாதோ மாய பிடி தளராதோ ?
என்னால் ஏது பயன் உண்டு தாயே ?
உன்னால் பயன் அன்றி வேறு எது உண்டு அம்மா ?💐💐💐
பாப்பா பாட்டு பாடிய பாரதீ யை ஒரு கோடாகவும் அந்தத் தீ யை சுகமாகத் தழுவும் தாசனை இன்னொரு கோடாகவும் இருகோடுகளாக இன்புற்று அனுபவிக்கலாம்.
பாரதியின் எதிர்பார்ப்பு வார்ப்புகள்தான் அவனது கவிதையே.
அதை நாகேஷ் மூலம் சமூக நடப்பு கசப்புக்களை இனிப்பாக சுவைக்கத் தந்த பெருமை இயக்குநர் சிகரத்தையே சாரும் என்பது தவறு. இயக்குநர் சிகரத்தை மட்டுமே சாரும் என்பதே சரி.
இந்த அர்த்தத்திற்கா நான் கவிதைகள் புனைந்தேன் என்று அவனையே நொந்து கொள்ள வைத்த பெருமை நம்மையே சாரும்.
அவன் பாடிய பாட்டை மீண்டும் கேட்க வந்து அதிலிருந்து மீண்டு ஓட அதற்கான வரிகளை தாசன் அமைத்துக் கொடுத்தான்.
என்ன ஒரு வேற்றுமை ஒற்றுமை விந்தை.
உங்களுக்கா புரியாது.
தமிழ்ப் புலவருக்குப் போய் அ ஆவன்னா கற்றுத்தர முயற்சிக்கிறேனே. என் அறிவீனத்தை என்ன சொல்லிப் பாட?
அம்மா உன் கண்களை செதுக்கிய பிரம்மன்
ஒர் கண்ணில் தன் மனைவியை குடி வைத்தானோ ?
கவித்துவம் ஞானத்வம் மழை போல் கொட்டுகிறதே !!
இன்னோர் கண்ணில் மாதவன் சீர் செய்து தன் ஸ்ரீ தனை வைத்தானோ ?
பொருள் செல்வம் கலை செல்வம் கடலாய் பொங்குகிறதே !
கண்கள் இரண்டும் இணை இல்லா ஆட்சி செய்ய
எழும் ஆசைகள் மூன்றாம் கண்ணால் முடிவு பெறாதோ ?
பெண்ணாய் கண்ணாய் பொன்னாய் பொருளாய் பூவாய் பண்ணாய் பாடலில் அமர்ந்தாயோ ?
தன்னால் வரும் ஆசைகள் தாய் உன்னை வணங்க
மண்ணாய் போகாதோ மாய பிடி தளராதோ ?
என்னால் ஏது பயன் உண்டு தாயே ?
உன்னால் பயன் அன்றி வேறு எது உண்டு அம்மா ?💐💐💐
கண்ணதாசன் பள்ளிக்கூடம் சென்று படிக்காதவர்
ஆனால் அவர் படிக்காத கிரந்தங்கள் எதுவும் இல்லை என்று சொல்லலாம் ...
சௌந்தர்ய லஹரீ , சிவானந்த லஹரீ இவைகளை அழகான தமிழில் அலசியவர் ..
அம்பிகையின் அழகு தரிசனம் என்று சௌந்தர்ய லஹரீயில் வரும் 100 பாடல்களுக்கு தமிழில் அவர் நடையில் , விளக்கம் பாடலாக வடித்துள்ளார்
அதே மாதிரி சிவானந்த லஹரீ ...
இதில் ஆதி சங்கரர் ஒரு பாடலில்
எல்லாம் நீ யாக இருக்கும் போது எதுவும் உனதாக இருக்கும் போது
நான் எதை உனக்குத் தருவேன் ..
என் மனதை மட்டுமே உனக்கு என்னால் தரமுடியும் என்கிறார் ...
இதை உள் வாங்கி திருவிளையாடல் படத்தில்
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற வரியை அமைத்தார்
அதே போல் சிவானந்த லஹரீயில் 66 வது பாடலில் ஆதி சங்கர் தன்னை ஒரு பொம்மை என்கிறார் ...
ஆட்டுவிப்பது நீ அன்றோ சம்போ என்கிறார் ..
இதையே பாபநாசம் சிவன்
நானொரு விளையாட்டு பொம்மையா? என்ற பாடல் மூலம் விளக்கினார் ...
வீணை பாலசந்தர் ஜேசுதாஸை முதல் முதலாக தான் சொந்தமாக தயாரித்த தமிழ் படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தார் ...
ஜேசுதாஸ் பாடிய முதல் தமிழ் சினிமா பாடல் :
நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை
கண்ணதாசனுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் லக்ஷ்மணன்
அவருக்கு உதவி தேவை பட இந்த பாடலில் சில வரிகளை மாற்றிக் கொடுத்தார் கண்ணதாசன்
பாடல் பட்டி தொட்டியெல்லாம் கேட்டது ..
இறைவனின் அடியவர்க்கு சேவை செய்தால் ஆண்டவன் மிகவும் த்ருப்தி அடைவான் என்பது கண்ணதாசனின் பெரிய புராண வரிகள்
க்ரீடா3ர்த்த2ம் ஸ்ருஜஸி ப்ரபஞ்ச-மகி2லம் க்ரீடா3ம்ருகா3ஸ்தே ஜனா: யத்கர்மாசரிதம் மயா ச ப4வத: ப்ரீத்யை பவத்யேவ தத் |சம்போ4 ஸ்வஸ்ய குதூஹலஸ்ய கரணம் மச்சேஷ்டிதம் நிச்சிதம் தஸ்மான்-மாமக-ரக்ஷணம் பசுபதே கர்த்தவ்ய-மேவ த்வயா || 66
சம்பவே! இவ்வுலகனைத்தையும் உமது விளையாட்டுக்காகப்படைக்கிறீர்.
ஸகல பிராணிகளும் உம் விளையாட்டிற்காக உள்ள பொம்மைகள்.
(அவர்களில் ஒருவனான) நான் செய்வதனைத்தும் கூட உமது ப்ரீதிக்காகவே ஆகிறது.
உமது அடியார்களின் சந்தோஷத்திற்காகவே என்னை ஆட்டுவிப்பதும் காரணமாகிறது.
ஆகவே, (வளர்ப்புப் பிராணிபோன்ற) என்னைக் காத்தல் உமது கடமையாகிறது🪷🙏
அம்மா உன் கண்கள் கடல் போன்றவை,
அழிவில்லா அருள் ஊற்றமாய்
ஒர் கண்ணில் வைரஞ் சிதறி மதிக்க,
மறுகண்ணில் பசுமை பொழிந்து நிற்கிறாய்
நின் திரு மூன்றாம் கண்ணின் ஒளியில்,
மறையும் மாயைகள் கரைந்து விடுமே!
பெண்ணாய், கண்கட் கோபமாய் நின்று,
பன்னெடுங் காலம் பக்திக்கு பதியாய்
நினைவும் நினைவோ என் வாழ்க்கை தாயே,
உன் பாதம் வணங்கிட நினைவது போதும்
🙏🙏🙏🙏