ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 45 (232- 236)

 



LT

232 – 236

ஸகாலாதிஷ்டா²னரூபா ஸத்யரூபா ஸமாக்ருதி:

ஸர்வப்ரபஞ்சனிர்மாத்ரீ ஸமனாதிகவர்ஜிதா 45  

232 : ஸகாலாதிஷ்டா²னரூபா  

அனைத்திற்கும் மூல காரணமாக விளங்குபவள் 

233 :  ஸத்ய ரூபா 

சத்தியமே வடிவானவள்  

234: ஸமாக்ருதி 

எல்லோருக்கும் பொதுவானவள் - அதே சமயத்தில் மிகவும் உயர்ந்தவள்   

235.  ஸர்வ ப்ரபஞ்ச நிர்மாத்ரீ  

அனைத்து உலகங்களையும் படைத்தவள் 

236 : ஸமனாதிகவர்ஜிதா 

ஒப்புயர்வற்றவள் 

232. Om Sakalaadhishtaana Roopaayai Namaha

Salutations to the Mother, who is the Substratum of this Universe. She is the Adhistana Devatha for all Directions, and for all the Aadhara chakras in our body. She is the common point of all different methods of worship.

233. Om Sathya Roopaayai Namaha

Salutations to the Mother, who is the Personification of Truth. Truth, is Goddess Lalithambika. Goddess, is sathyam Lalithambika. Reality, is Goddess Lalithambika. God, is real Lalithambika.This is Swami Adwayananda's vak. As, in Lalitha Sahasra Nama, ' Om Sathyaroopaayai Namaha'.



234. Om Samaa Kruthyai Namaha

Salutations to the Mother, who has no change in her Form, she is always the same. There are four classes of beings Svedaja, Udbhija, Andaja, and Jayaruja. Devi resides in these Jivas as Consciousness, according to their Prarabdha karmas. This is Samakruthi. As a witness she gives merits and demerits with out being partial to any one, giving them the fruits of their actions. Devi treats every one equally. She alone removes the veil of ignorance through her grace and Mercy. "The Desire for the realization of the oneness is produced in the minds of the wise men by the Grace of the God, who is the antidote to all fears''.( Avadhuta Gita)

 

 

 

235. Om Sarvaprapancha Nirmathre Namaha

Salutations to the Mother, who has Created all the Universes Perfectly and uniquely. Devi with her Chit shakthi has made the Japa aand Tapa Prapancham, (world) with her Jada shakthi has made Artha Prapancham (world.)



236. Om Samaanaadhika Varjithaayai Namaha

Salutations to the Mother, who has no one in Comparison to her, There is no one equal or higher than her. She is incomparable. No deity is worthy enough for the Poojas and no thing is equal to her. Vedam says 'Ekam eva advetheeyam' It is impossible for any one to describe the exact extent of the Divine Glories of Devi's. There is no limit for her Powers and Glories. What could be expressed of her is nothing when compared to her infinite Glories.

 

* 232 * Sakaladhishtana roopa - She who is the common point of worship of all different methods of worship


* 233 * Sathya roopa - She who is personification of truth


* 234 * Samaa krithi - She who treats everybody equally


* 235 * Sarva prapancha nirmathri - She who has made all the universe


* 236 * Samanadhika varjitha - She who is incomparable

 

Comments

ravi said…
*திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை*

*திருவாரூர் மாவட்டம்*

சிந்தூரம் குங்குமம் செவ்வானம் அவ்வானம்
திகழ வரும் கதிரின் உதயம்

தேசு மிகு மாணிக்கம்
திரு ஏறு கமலம் அச்
செங்கமலம்

அஞ்சு பவழம்
மந்தாரம்

மழை நாளில் வரும் இந்தர கோபம்

அவ்
வண்டூ ரும் மலையில்

நறவம்
மான்மதம்

செங்குருதி போல் மலரும்
மாதுளம்

மாதுளம் சிதறும் முத்தம்

செந்தீயின் வண்ணம் என வேய்சொல்லும் மேனியும்

செப்பரிய அழகு வடிவும்
சிங்கா தனத்திலும்

சிவனார் மனத்திலும்
சீர் கொண்டிலங்கும் எனினும்

எந்தாய் நின் பேர் சொல்லும் ஏழையேன்

அறிவிலும்
என்றென்றும் திகழ அருள்வாய்
இறைவி
எனை ஆண்டருளும்
ஸ்ரீ
லலிதாம்பிகையே!

பிறையார் சடைபித்தன்

பிஞ்ஞகன் சங்கரன்
பிறவாத யாக்கை உடையோன்

பேராயிரங் கொண்ட பெருநாவலன்

சிவன், மால்
பிரமன் அறியாத மறையோன்

கறையார் கழுத்தினன்

கண்ணுதல் கயற்கண்ணி
காதலன்

கங்கை நாடன்
காளத்தி நாதன்

கபாலி கங்காதரன்
கயிலையோன்

மங்கைபாகன்
சிறையார் புனற்றில்லைச் சிற்றம்பலத்தினன்

த்ரியம்பகன் தியாகராசன்
திரிபுரம் எரித்தவன்

குருபரன் ஈசன் எனச்
செப்பும் எம் அப்பனான
இறையோனும்

நீயும் எம் இல்லங்கள் தோறும்
எழுந்தருள வேண்டும் அம்மா ஸ்ரீ லலிதாம்பிகையே!!
ravi said…
சங்கர சுவனன் மஹா வீரன் ... அவனாக ஆசைப்பட்டாலே
ஒழிய அவனை தோல்வி அணுகாது .

விக்ரம என்றால் heroic acts .

புரிகின்ற செயல்கள் யாவும் விசித்திரமானவை மற்ற எவராலும் சாதிக்க முடியாதவை ...

*5 வகையான வீரம் உண்டு*

*1.தியாக வீரம் ...*

தன்னையே பணயம் வைத்து கடலைத் தாண்டினார் ..

ராமருக்காக அவர் நாமத்திற்காக எதையும் தியாகம் செய்பவர் ... கட்டை பிரம்மச்சாரி ...

ஆசை காமம் க்ரோதம் பொறாமை எதுவும் அவரை தன் பக்கம் வசப்
படுத்தியதில்லை

*2 தயா வீரம் ...*

கருணை கொண்ட வீரம் ...

நினைத்திருந்தால் ராவணனை தான் ஒருவனாய் கொன்றிருக்கலாம்

... தயை கொண்டு விட்டு விடுகிறான் ...

விபீஷணனை சேர்க்க வேண்டாம் என்று ராமரிடம் பலரும் சொன்னாலும் அனுமன் அவன் நல்லவன் ... சேர்த்துக்கொள்ளலாம் என்று ராமரிடம் சொல்கிறார் ...

அவர் தயை பின்பு விபீஷணனை லங்கைக்கு ராஜாவாக ஆக்குக்கின்றது

தன்னை விட எந்த வகையிலும் திறமை கொண்டவன் அல்ல சுக்ரீவன் ...

ஆனாலும் கருணையுடன் அவன் கீழே வேலை செய்கிறான் தன் குருவான ஆதவனுக்கு கொடுத்த வாக்கினால்

*3 வித்யா வீரம் ...*

ஞான சமுத்திரம் ஹனுமான்

ஆனால் தன்னை எந்த விதத்திலும் அப்படி காட்டிக்
கொள்ளதாவர்

*4.தான வீரம்* ....

தன் வாழ்க்கை இன்பம் சுகம் எல்லாவற்றையும் தானம் செய்தவர் அனுமார் ...

அவர் தனக்காக வாழ்ந்தார் சில மணித்துளிகள் என்று எந்த ராம காப்பியங்களும் சொல்வதில்லை

*5.ரண வீரம் ..*

பகைவர்கள் அஞ்சும்படி போர் புரிபவன். ...

ராவணன் அனுமனின் ஒரே குத்துக்கு மூர்ச்சையாகி விழுந்தான் ...

போரிடுபவன் சிவனோ என்றே அஞ்சினான் ..

இப்படி 5விதமான வீரம் கொண்டவன் அனுமான் ...

உடம்பு வஜ்ஜிரத்தால் செய்யப்பட்டவை

அனுமான் ...என் கெட்ட, துர்நாற்றம் வீசக்கூடைய, அழுக்கு நிறைந்த எண்ணங்களை நீக்கி

நல்ல ராம சிந்தனையுடன் கூடிய எண்ணங்களை என் மனதில் விதைக்க வேண்டுகிறேன் 🐒
ravi said…
*ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம்*
____________________________

தினம் ஒரு நாமாவளி
__________________________

*1) ஸ்ரீமாதா*

உலகத்தில் துக்கதசையில் மிகவும் கஷ்டமான நேரங்களில் தாயாரை நினைப்பது பிரஸித்தமான விஷயம். ஆயினும் நாம் எடுத்திருக்கும் அனேக ஜன்மங்களில் அனேக தாயார்கள் இருந்தபோதிலும் அவர்கள் நம்முடைய பிறவிப்பிணி என்னும் துக்கங்களைப் போக்கடிக்க முடியாதவர்களாகையால், அந்த ஸாமார்த்தியமுள்ள ஸர்வ உத்தமமான ஜகன்மாதாவைத்தான் 'மாதா' என்று சொல்லமுடியும். தேவி எல்லாவிதமான தாயார்களுக்கும் தாயானவளும் சிறந்தவளும் ஆகையால் 'ஸ்ரீமாதா' என்று அழைக்கப்படுகிறாள். முதல் தத்துவமான ஸ்ருஷ்டி தத்துவம் இங்கே விளக்கப்படுகிறது.

மா' என்பதற்கு அளக்கிறது என்று அர்த்தம். 'லக்ஷ்மியை அளக்கும்படியானவள் என்று பொருள். அளக்கப்படுவதைவிட அதை அளக்கின்றவள் ச்ரேஷ்டமாகையால் அம்பாள் ஸ்ரீ ரூபமான 'மோக்ஷஸ்வரூபி' என்று அர்த்தம்.

ஸ்ரீ என்பதற்கு வேதங்கள் என்ற பொருள் உண்டு. பிரம்மாவுக்கு வேதங்களை அருளியதால் 'ஸ்ரீ மாதா' என்று பெயர் பெறுகிறாள் அம்பிகை.

ஸ்ரீ என்பதற்கு விஷம் என்ற பொருளும் உண்டு. விஷத்தை, மாதா (கண்டத்தில்) தரித்துக் கொண்டிருக்கிறவள். ஸ்ரீகண்டன் என்று பரமசிவனுக்குப் பெயர். அவரோடு இடப்பாகத்தில் கூடி இருப்பதால் அம்பாளுக்கும் அதே பெயர்.

Sathya001
ravi said…
*ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்*
_______________________________

தினம் ஒரு நாமாவளி
_______________________________

*2) ஸ்ரீமஹாராக்ஞீ (श्रीमहाराज्ञी)*

பெரிய மகா ராணியாக இருப்பவள், அதாவது ஸகல ப்ரபஞ்சத்தையும் பரிபாலனம் செய்பவள்.

வேதத்தில் "ஏன ஜாதானி ஜீவந்தி"' அதாவது பரமாத்மாவால்தான் எல்லாமே உயிரோடும் நிலைத்தும் இருக்கிறது என்று சொல்லப்பட்டிருப்பதை காணலாம். அப்படி எல்லாவற்றையும் உயிரோடும் நிலைத்தும் இருக்க செய்து பரிபாலனம் செய்பவள் அம்பிகை. அதனால் ஸ்ரீமஹாராக்ஞீ என்று நாமம் பொருத்தமானது.

இந்த நாமாவளி இரண்டாவதான "ஸ்திதி" தத்துவத்தை விளக்குவதாக அமைகிறது.

இந்த நாமாவளியில் ஸ்ரீவித்தையின் மூன்று பீஜாக்ஷரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஷோடசி (ஸ்ரீம்) மற்றும் மீதமுள்ள இரண்டு எழுத்துக்கள், அ மற்றும் ஹ ஆகியவை. அவை முறையே பிரகாசம் அதாவது ஒளிரும் தன்மை மற்றும் விமர்சம் பிரதிபலிக்கும் தன்மை என்பதாகும்.

ஸ்ரீமஹாராஜ்னி என்ற பெயரில் உள்ள எழுத்துக்களைப் பிரித்தால், அது ஸ்ரீம்+அஹா+ராஜ்னி என்று வரும். பஞ்சதசாக்ஷரி மந்திரத்துடன் ஸ்ரீம் என்ற பீஜம் சேர்ந்தால், அது ஷோடசாக்ஷரியாகிறது. பஞ்சதசீ மந்திரத்தின் விரிவாக்கமே ஷோடசாக்ஷரி வித்தையாகும்.

பஞ்சதசாக்ஷரி மந்திரம் "அ" என்ற அக்ஷரத்தால் பிரகாசம் அடைந்து "ஹ" என்ற அக்ஷரத்தால் பிரதிபலித்து (விமர்சனம்) "ஶ்ரீம்" என்னும் பீஜத்தால் ஷோடசாக்ஷரியாக பூர்ணத்வம் அடையும் ஶ்ரீ வித்தையை விளங்குகிறது இந்த நாமாவளி.

Sathya001

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை