Posts

நாராயணீயம் உதயம் 10

Image
நாராயணீயம் உதயம் 10 அந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டு, அவரது தேஜோமய திவ்ய ஸ்வரூபத்தை தியானித்து, கண்ணா என பக்தியுடன் கதறினார்.  அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன.  குருவாயூரப்பன் அவருக்கு செவி சாய்த்தானா?  பட்டத்ரி அந்த மண்டபத்தில் உட்கார்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை.  அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது.  பட்டத்ரிக்கோ வாத ரோகம் இருந்ததால் தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை.  அப்போது பட்டத்ரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு,  "ஏ கண்ணா! கிருஷ்ணா!" பரந்தாமா! என்று கதறுகிறார்.  உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால் எப்படி நாராயணீயம் எழுத முடியும்.  அதனால் நீ எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத் தா என்று அழுது கண்ணீர் மல்குகிறார்.  அதற்கு குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை. வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம், "நீ ஒன்றுமே செய்ய வேண்டாம். என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவ...

நாராயணீயம் உதயம் 9

Image
நாராயணீயம் உதயம் 9 அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர்.  அவரை அழைத்து வந்தவர்கள் அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர்.  பகவானே ஸ்நானம் செய்த குளமா?  இதில் ஸ்நானம் செய்ய நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று அவர் மனம் துடித்தது.  புது வஸ்த்ரம் உடுத்தினர். அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி, பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர்.  தினமும் காலையில் மூன்று மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்கு வைகுண்டத்திலிருந்து அந்தர்யாமியாக (கண்ணுக்குத் தெரியாமல்) வந்து குருவாயூரப்பனை தொழுது செல்லும் முப்பத்து முக்கோடி தேவர்கள், பாகவதோத்தமர்களான வியாஸர், பிரகலாதன், நாரதர், குரு, வாயு, துருவன், அம்பரீஷன், அஷ்டதிக் பக்தர்கள் அனைவரும் அவனைத் தொழ வந்திருந்தனர்.  அவர்களில் ஒருவராக இவரும் உள்ளே நுழைந்தார். இவரைக் கண்ட தேவர்கள், இவரால் நாராயணீயம் என்னும் மாபெரும் க்ரந்தம் ஒன்று உருவாகப் போகிறது என்பதை உணர்ந்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர். குருவாயூரப்...

நாராயணீயம் உதயம் 8

Image
நாராயணீயம் உதயம் 8 ஜோசியர் கூறியதன் உட்பொருளைப் புரிந்து கொண்டார் பட்டத்ரி.  அவர் மிகவும் சந்தோஷப்பட்டுக் கூறலானார்.   நாம் இன்றே குருவாயூர் செல்ல வேண்டும்.  அதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்யுங்கள் என்றார்.  இதைக்கேட்ட வேலைக்காரன் நான் கூட வர முடியாது. குருவாயூர் போன்ற புண்ணிய சேக்ஷத்ரத்தை நீங்கள் அசுத்தம் செய்வதை நான் விரும்பவில்லை.  நீங்கள் உங்கள் வியாதி குணமாக வேண்டும் என்பதற்காக இதைச் செய்யலாம்.  ஆனால் இதற்கு உடன்பட என்னால் முடியாது என்று மிகவும் கோபமாகக் கூறினான்.  அவனை சாந்தப்படுத்திய பட்டத்ரி அப்பா அதற்கு அர்த்தம் அதுவல்ல.  மத்ஸ்யம் தொட்டுப் பாடணும் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?  சாதாரண மீன் என்று நீ ஏன் நினைத்துக் கொள்கிறாய்?  பகவான் குருவாயூரப்பனின் அவதாரங்களில் முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம் அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான் மத்ஸ்யம் தொட்டு என்றால் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரம் முழுவதையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார்.  அதனால் ...

நாராயணீயம் உதயம் 7

Image
நாராயணீயம் உதயம் 7 திருச்சூர் அருகில் குருவாயூர் என்றொரு பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது.  கிருஷ்ணன் பிரத்யக்ஷ பேசும் தெய்வமாக விளங்குகின்ற சேக்ஷத்ரம்.   குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்த தெய்வம், பெரும் அதிசயங்கள் நிகழ்ந்த சேக்ஷத்ரம்.  கிருஷ்ணரே ஸ்நானம் செய்த புண்ணியக் குளமான நாராயண சரஸ் உள்ள சேக்ஷத்ரம்.  அப்பேர்ப்பட்ட குருவாயூருக்கு இவரை நேரே அழைத்துச் செல்.  அங்கு கோயிலுக்கு அருகில் உள்ள நாராயண சரஸ் என்னும் தீர்த்தத்தில் நீராட வைத்து பின் புது வஸ்திரம் அணிவித்து கொடிக்கம்பமாகிய ஜ்வஜஸ்தம்பம் தாண்டி உள்ளே நுழையும் இடத்தில் பகவானுக்கு வலது பக்கம் நமக்கு இடது பக்கம் உள்ள திண்ணையில் அவரை உட்கார வைத்து மத்ஸ்யம் நாக்கில் வைத்துக்கொண்டு  பாட சொல் என்று கூறினார்.  ( மத்ஸ்யம் என்றால் மீன் .. ) இதைக் கேட்ட அந்த வேலைக்காரன் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து விட்டான்.  அவனைக் கண்ட பட்டத்ரி என்னப்பா ஆயிற்று? எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று சொன்னாரா? என்று மிகவும் ஆவலுடன் கேட்டார். அதற்கு அவன், ஐயா, அவர் உங்களுக்கு...

நாராயணீயம் உதயம் 6

Image
நாராயணீயம் உதயம் 6  பட்டத்திரியும் நோயின் காரணமாக அவர் வீட்டுக்குச் செல்ல முடியாது.  அவரும் வர மாட்டார். என்ன செய்வது என்று யோசித்தார்.  அவர் தம் குடும்பத்தினரிடம் தன்னை அழைத்துக் கொண்டு செல்லும்படி கேட்டதற்கு, வைத்தியருக்கு செலவு செய்ததே போதும். இன்னும் ஜோதிடருக்கு வேறு செலவா? நீங்கள் இப்படியே இருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி விட்டனர்.  ஆனால் நாளுக்கு நாள் அவரது ரோகத்தின் வீரியம் அதிகரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களில் ஒருவன்.  சிறு வயது முதலே அந்த வீட்டில் வேலை செய்வதாலும், பரம்பரை பரம்பரையாக அவர்களைத் தெரியும் என்பதாலும் அவனுக்கு பட்டத்ரி மீது மிகுந்த பாசம் உண்டு.  பட்டத்ரி அவன் மனம் நம் எஜமானர் இப்படி கஷ்டப்படுகிறாரே!  அவருக்காக நாம் சென்று அவரது ஜாதகத்தைக் காட்டி பார்த்துக் கொண்டு வரலாம். என்று நினைத்தான்.  அதை மெதுவாக அவரிடமும் கூறினான்.... ஐயா, நான் வேண்டுமானால் உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் ஜோசியர்கிட்ட காட்டி கேட்டுக் கொண்டு வருகிறேன் என்றான்...

நாராயணீயம் உதயம் 5

Image
நாராயணீயம் உதயம் 5  இப்பொழுது பட்டத்ரி சிந்திக்க ஆரம்பித்தார்.  நாம் நல்ல சிந்தனையோடுதானே நம் குருவிடம் இருந்து இந்த வியாதியை வாங்கிக் கொண்டோம்.  ஆனாலும் ஏன் குணமாகவில்லை?!  அதற்கு ஒரே காரணம் நாம் குருவிடம் கர்வமாகப் பேசி விட்டோம்.  வியாதி போகாததற்கு உங்கள் ஆசாரம் தான் காரணம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. வைத்தியரிடம் சென்றால் தீர்ந்து விடும். ஒரு வாரத்தில் வந்து உங்களை நமஸ்கரிக்கின்றேன் என்று கூறி விட்டேன்.  பகவானிடம் கூட கர்வமாகப் பேசலாம். ஆனால் குருவிடம் கர்வமாகப் பேசக் கூடாது.  நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது.  நான் மாபெரும் அபச்சாரம் அல்லவா செய்திருக்கிறேன்?  அதனால்தான் என்ரோகம் இன்னும் தீரவில்லை.  ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியப் பங்கு வகிப்பவர்களில் குருவே முதலிடம் பெறுகிறார்.  குரு சொன்னதைக் கேட்காத சீடர்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார்கள். மகாபலி சக்கரவர்த்தி யாகம் செய்தபோது அவரது குரு சுக்ராச்சாரியார் எவ்வளவு சொல்ல...

நாராயணீயம் உதயம் 4

Image
நாராயணீயம் உதயம் 4 உடனே குரு தன் மற்ற சீடர்களிடம், இவனைக் கொண்டு போய் இவனது வீட்டில் சொல்லி விட்டுவிட்டு வாருங்கள்.  ஏனென்றால் படிக்கச் சென்ற குழந்தை ரோகத்துடன் வந்தால் அந்த பெற்றோர் மனம் எவ்வளவு பாடுபடும்?  குரு எவ்வளவு சொல்லியும் கேளாமல் குருவை நிர்பந்தப்படுத்தி அவரின் ரோகத்தை இவன்தான் வாங்கிக் கொண்டு விட்டான் என்று கூறுங்கள்.  அவர்கள் என்னை தப்பாக நினைக்கக் கூடாது என்றார்.  பட்டத்ரியை ஒரு பல்லக்கில் வைத்து தூக்கிக் கொண்டு வந்து அவரது வீட்டில் விட்டனர் சிஷ்யர்கள்.  வீட்டுக்கு வந்த பட்டத்ரியைப் பார்த்த குடும்பத்தினருக்கு குரு மீது மிகுந்த கோபம்.  இவன்தான் கேட்டான் என்றால் அந்த குரு எப்படி ரோகத்தைத் தன் சீடனுக்குக் கொடுக்கலாம்.  மற்ற சீடர்களுக்கு இல்லாத அக்கறை இவனுக்கு ஏன்?  படிக்கச் சென்ற பிள்ளை இப்படி ரோகத்துடன் வந்து விட்டானே!  இவனை எப்படி குணமாக்குவது. எந்த வைத்தியரைப் பார்ப்பது என்று மனச் சஞ்சலம் அடைந்தனர். இவரை அழைத்துக் கொண்டு பிரபல வைத்தியர்களிடம் சென்றனர். ...

நாராயணீயம் உதயம் 3

Image
நாராயணீயம் உதயம் 3 ஆனால் பட்டத்ரி அதெல்லாம் இல்லை.  நீங்கள் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று அவரை வற்புறுத்தினார்.  அதற்கு குரு நீ வியாதியால் கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.  நீ என்னை விடச் சிறியவன். உன் ஆச்சார்ய பக்தியைக் கண்டு என் மனம் மகிழ்கிறது.  உன்னைப் போல் ஒரு சிஷ்யன் கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன்.  இருந்தாலும் இது தர்மம் கிடையாது. ஆகையால் நீ கிளம்பு என்று கூறுகிறார்.  அதற்கு பட்டத்ரி குருவே, எனக்கும் உங்களுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது.  நான் உங்களை விட வயதில் சிறியவன். அதனால் இந்த ரோகத்தைத் தாங்கும் சக்தி உங்களை விட எனக்கு அதிகம் இருக்கும்.  அது மட்டுமில்லை, நீங்கள் இந்த வியாதியை எனக்குக் கொடுத்தாலும் கூட நான் இதனால் கஷ்டப்பட மாட்டேன்,  ஏனென்றால் நீங்கள் ஆச்சார ஸ்ரேஷ்டராக இருக்கிறீர்கள். நீங்கள் வைத்தியரிடம் செல்வது கிடையாது.  இதற்கு எந்த மருந்து, மாத்திரையும் எடுத்துக் கொள்வது கிடையாது.  ஆனால் நான் அப்படி இல்லை. நான் கேரள மாநி...

நாராயணீயம் உதயம் 2

Image
நாராயணீயம் உதயம் 2 பட்டத்ரி குருவிடம், குருவே, நீங்கள் சொன்னது போலவே நான் செய்கிறேன்.  ஆயினும் நான் தங்களுக்கு ஏதாவது குரு தக்ஷணை தர விரும்புகிறேன் என்று கேட்டார்.  இதைக் கேட்ட குரு, உன்னால் எனக்கு என்ன தர முடியும் என்று சொல், அதை வாங்கிக் கொள்ள முடியுமா முடியாதா என்று நான் சொல்லுகிறேன் என்று கூறினார்.  பட்டத்ரியின் விடாப்பிடியான வேண்டுகோளுக்கு ஒரு காரணம் இருந்தது.  அவரது குருவான அச்யுதபிஷாரடிக்கு வாதரோகம் இருந்தது. அவரால் தன் கை கால்களை நகர்த்தக் கூட முடியாது. அப்படிப்பட்ட நிலையிலும் அவர் தன் சீடர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தார்.  இதனை தினமும் கண்ணுற்ற பட்டத்ரிக்கு இவரது நோயை நாம் ஏன் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது.  இவர் குருகுலம் சேர்ந்த முதல் நாளிலிருந்தே நம் குரு இவ்வளவு கஷ்டப்பட்டு நமக்குப் பாடம் நடத்துகிறாரே! நாம் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது.  இப்பொழுது அதைக் கேட்டே விட்டார். குருவே, நீங்கள் உங்கள் வாத நோயை எனக்கு ஆவாகனம் செய்து கொடுங்கள் வாத ரோக நிவர்த்தி என்ற ...

நாராயணீயம் உதயம் 1

Image
நாராயணீயம் உதயம் 1 நாம் குருவாயூரப்பனை தரிசனம் செய்ய பக்தியுடன் செல்லும்போது இடது பக்கம் உள்ள திண்ணையில் ஒரு செப்புப் பட்டயம் இருக்கிறது.  அதில் மலையாளத்திலும், தமிழிலும், நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம் என்று எழுதப்பட்டுள்ளது.  அந்த இடத்தில் தான் பட்டத்ரி நூறு நாட்கள் அமர்ந்து நாராயணிய நாயகனான குருவாயூரப்பனின் பெருமையை, ஸ்ரீமத் பாகவதத்தின் சாரமான நாராயணியம் என்பதாக எழுதினார்.  உடனே நம் மனது குருவாயூரப்பனில் இருந்து அந்த பட்டத்ரி மண்டபத்தை நோக்கி நகர்கிறது.  நம் மனதில் பல கேள்விகள் எழுப்புகின்றன... பட்டத்ரி யார்? எதற்காக இதனை எழுதினார்?  நாராயண பட்டத்ரி 1560 ஆம் ஆண்டு பாரதப் புழா ஆற்றின் வடகரையில் திருநாவா என்ற விஷ்ணு ஸேத்திரத்திற்கு சமீபத்தில் மேல்புத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தகப்பனார் மாத்ருதத்தர் இவருக்கு சிறு வயதில் கல்வி கற்றுக் கொடுத்தார்  பிறகு இவர் ரிக் வேதத்தை *மாதவாச்சாரியார் என்பவரிடமும் தர்க்க சாஸ்திரத்தை *தாமோதராச்சாரியாரிடமும்* கற்றுத் தேர்ந்தார்.  இவர் வ்யாகரணம் என்று சொல்லப்படுக...

பால் பாயசம்

Image
பால் பாயசம்  அவனோ ஒரு பிச்சைக்காரன்... மனைவியுடன் தினமும் எல்லா இடங்களுக்கும் சென்று பிச்சை எடுப்பான் ... கொஞ்சம் குருவாயூரப்பனுக்கும் அதில் பங்கு உண்டு ....  குருவாயூரப்பா யார் யாரையோ செல்வந்தனாக்குகிறாய்  ... யார் யாரையோ பெரும் புகழ் பெற்றவனாக மாற்றுகிறாய் ...  இப்படியே வாழக்கை முடியும் வரை நான் பிச்சை எடுத்துக்கொண்டுதான் இருக்க வேண்டுமா ?  உன்னால் எல்லாம் முடியுமே ... என்னை கொஞ்சம் மாற்றேன்... உனக்கும் வித விதமாக பிரசாதம் படைக்க ஆசை ... உன்னை இன்னும் பல நகைகள் போட்டு அலங்கரிக்க ஆசை ...  கண்ணா மணிவண்ணா ...பண ஆசையால் கேட்கவில்லை ... உன் கோயிலுக்கு நானும் ஏதாவது பெரியதாய் செய்ய வேண்டும் ...  கிருஷ்ணா எனக்கு ஒரு வாய்ப்பு கொடேன் ... உன் அருள் இன்றி உனக்கு என்ன செய்ய முடியும் ?  கோவிந்தா உன்னிடம் மட்டுமே நான் பிச்சை எடுக்க வேண்டும் .. இந்த அழிந்து போகும் மனிதர்களிடம் இல்லை .... குருவாயூரப்பன் கொஞ்சமாக செவி சாய்த்தான் ... யாரோ அன்று வாங்கிய லாட்டரி சீட்டு அவனிடம் வந்து சேர்ந்தது ..  கேரளா லாட்டரி சீட்டு .....

யாழை பழித்த மென் மொழியாள்

Image
யாழை பழித்த  மென் மொழியாள் எல்லோரும் அங்கே குவிந்தனர் ... அம்பாளின் தாம்பூலம் தங்களுக்கும் ஒரு சொட்டேனும் கிடைக்காதா என்றே எங்கினர் ...  யுகங்கள் பல காத்திருந்தாலும் கிடைக்கக்கூடிய வஸ்துவா அது ...? அவளே கருணை கொண்டு அருளினால் தான் உண்டு ...  ஜோராராக ஈசனின் மடியில் அமர்ந்து கொண்டு வேத கோஷங்கள் முழங்க , துந்துபி நாதங்கள் ஒலிக்க , நந்தி தேவர் மேள தாளங்கள் வசிக்க , முருகனும் கணபதியும் , மணி கண்டனும் , பால திரிபுர சுந்தரியும் சேர்ந்து நடனம் புரிய , திருமால் தாளம் போட , ஈசன் ஒரு மாறுதலுக்கு நடனம் ஆடாமல் குழந்தைகளின் நடனத்தை ரசித்திருக்க தேவர்கள் , ரிஷிகள் எல்லோரும் அம்பாள் தன் திருவாயை திறந்து தாம்பூலம் தர மாட்டாளா ,ஓர் இரு வார்த்தைகள் பேச மாட்டாளா என்று தவம் இருக்க ,  மகாலட்சுமி பாதம் பிடித்து விட , கலைவாணி தன் அழகிய வீணை எடுத்து காம்போதி ராகத்தில் வாசிக்கத் தொடங்கினாள் ... பிரம்மன் சொக்கிப்போனானன் ... வாணீ யின் கீதம் எல்லா உலகங்களுக்கும் பரவியது ...  கேட்டவர் சொக்கினர் .. சொக்கினவர்கள் சுழன்றனர் ... சுழன்றவர்கள் சொர்க்கத்தில் மிதந்தனர் ......

மஹிஷனாகிய நாம்

Image
மஹிஷனாகிய நாம்   9 வது நாளாக யுத்தம் ... கடுமையான பாணங்கள் ... இரண்டு பக்கமும் ஏகப்பட்ட இழப்புக்கள் ...  புன்னகை அன்று ஏனோ துர்கா மறைத்து வைத்திருந்தாள் ...  ஒளி பாயும் காந்த கண்களில் கோபம் , ஆக்ரோஷம் கொடி கட்டி பறந்தது ... பற்கள் நர நர வென்று கடித்துக்கொண்டன ...  மூன்றாவது கண்ணுக்கும் அன்று விடுமுறை இல்லை ...  கருணையின் மறு உருவானவள் அன்று ஏனோ எந்த கருணைக்கும் தனக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை என்பதைப்போல இருந்தாள் ...  இப்படி அன்னையை யாருமே பார்த்ததில்லை ... எரிமலை வெடித்தது .. மேகங்கள் இடித்துக்கொண்டன ... மழை கடலாக மாறி பெய்தது ... காற்று மலைகளை பெயர்த்துக்கொண்டு வந்தன .. இப்படி கோபம் நீடித்தால் யுகங்கள் தோன்றாதே , உயிர்கள் எல்லாம் மாய்ந்து விடுமே என்றே எல்லோரும் கவலைப்பட்டனர் ...  மஹிஷன் அன்று வித வித மான ரூபங்களில் வந்து அன்னையை தாக்கினான் ... எல்லாமே பொடி பொடியாக்கினாள் தேவி ..  கடைசியில் மஹிஷனாக வந்தான் ... கொடூரமான கண்கள் ... நீண்ட நாக்கு ... முட்டும் கொம்புகள் ... மூர்க்கத்தனமாக போரிட்டான் .....