பச்சைப்புடவைக்காரி - சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 24 - 249
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 24 (249) 👍👍👍💥💥💥 சீதையைக் காணல் இருளிடை ஒளிவிடும் மின் என, அரக்கியர் சூழ்ந் திருந்த இடத்தில் கவலையில் ஆழ்ந்த நங்கையைக் கண்டான். அதனைக் கண்டு தேவர் ஆரவாரித்தனர். வெற்றி வாசல் வழிதிறந்து காட்டியது. இராமன் அறிவித்த பேரழகு முழுவதும் எங்கும் பெயராது அங்குக் குடியிருந் தமையைக் கண்டான். சித்திரத்தில் தீட்டிய அழகு வடிவத்தைச் சிந்தனை முகத்தில் தேக்கிய வடிவத்தில் கண்டான். புகையுண்ட ஒவியமாக அவள் காணப்பட்டாள். ‘ஆவியந்துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்; தூவி அன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்; தேவு தெண்கடல் அமிழ்துகொண்டு அனங்கவேள் செய்த ஒவியம் புகைஉண்டதே ஒதுக்கின்ற உருவாள்' அரக்கியர் மத்தியில் அவள் நொடிந்து இருந்தது, கற்களிடையே உணங்கிய ...