பச்சைப்புடவைக்காரி -மலைய கோயில் - மிட்டாய் முருகன் 370 -52 வது படை

                    ச்சைப்புடவைக்காரி

               என் எண்ணங்கள்

       பகையை வெல்லும்   52  வது  படை 

மலைய கோயில் -மிட்டாய் முருகன் 

370 👍👍👍💥💥

💥

1👍👍👍


புதுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கிறது, மலையக்கோயில். 

பார்ப்பதற்குச் சிறியதாகத் தோன்றினாலும், கீர்த்தியில் மிகப்பெரியதாகவும் மிகவும் ரம்மியமாகவும் காட்சியளிக்கிறது 

மலையக்கோயில் மலை. 

மலையின் மீதுள்ள கோயில் *மேல்கோயில்* என்றும், மலையின் கீழுள்ள கோயில் *கீழ்க்கோயில்*’ என்றும் அழைக்கப்படுகிறது. 

மலை மேல் முருகப் பெருமானும் மலையடிவாரத்தில் சிவபெருமானும் அருள்புரிகிறார்கள். 💐💐💐👌👌👌



2🙏🙏🙏

மலையின் அடிவாரத்தில் கிழக்குப் பக்கத்தில் ஒன்றும், தெற்குப்பக்கத்தில் ஒன்றுமாக இரண்டு குடவரைக் கோயில்கள் உள்ளன. 

கிழக்குக் குடவரைக் கோயில் ஒரே கருவறையையும் அந்தக் கருவறையின் நடுவில் ஆவுடையாருடன் கூடிய லிங்கம் மலைப்பாறையிலேயே செதுக்கப்பட்டிருக்கிறது.👏👏👏



3👍👍👍

மலையேறியதும் அர்த்தமண்டபத்தில் விநாயகர், உற்சவராக முருகப்பெருமான் ஆகியோர் காட்சியளிக்கிறார்கள். 

கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார் முருகப் பெருமான். 

சுவாமிக்குத் தென்பக்கத்தில் இடும்பர் சந்நதி இருக்கிறது.  🙏🙏🙏


4😊😊😊

முருகன் சந்நதிக்கு அருகே  சுனை ஒன்று உள்ளது. 

இதை சரவணப்பொய்கை  என்றும் கூறுகின்றனர். இந்தச் சுனை நீர் கொண்டுதான் சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. 

இந்த தீர்த்தத்தை பக்தர்களுக்கு வழங்குகின்றனர். 

பக்தர்கள் இதைப் பருனால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

வேண்டிய வரங்கள் யாவற்றையும் அருள்கிறார் முருகப்பெருமான்




அறுபடை வீடுகளில் மூன்றாம் வீட்டை கொண்டவர் பழநி முருகன். 

அவரை தரிசிக்க திண்டுக்கல் வழியாக செல்வோர் எவரும் *குழந்தை வேலப்பரை* கவனிக்காமல் செல்வதில்லை. 

தினமும் சேவல், அன்னம், மயில் எனப் பலவித வாகனங்களில் குழந்தை வேலப்பர் வீதி உலா வருவார். 


முக்கிய நிகழ்வான தேரோட்டம்  


எங்கும் இல்லாத சிறப்பாக பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரின் இருபுறமும் வடகயிறு கட்டப் பட்டிருக்கும். வழக்கமாக முன்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் வடக்கயிறைப் பிடித்து தேரை பக்தர்கள் இழுக்கத் தொடங்குவர். 

மலைப்பகுதியில் சரிவான சாலை வந்தவுடன் தேரின் பின்னால் இருக்கும் வடக்கயிறை பிடித்து இழுத்து மெதுவாக கீழே தேரை இறக்குவர். 

பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.👍👍👍

*மிட்டாய் முருகன்*' என செல்லமாக அழைக்கப்படும் இந்த குழந்தை வேலப்பரும், அருகேயுள்ள மலையின் வரலாறும் ஆன்மிக நாட்டமுள்ளோரை ஆர்வப்படுத்தக் கூடியது என்றே கூறலாம்.👌👌👌



8. 

குழந்தையான வேலப்பர் அல்லவா? 

எனவே திருமணம், குழந்தை வரம் என எந்த வேண்டுதலோடும் வருபவர்கள் வேலப்பருக்கு 'மிட்டாய்'யை நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர். 

முருகனுக்கு உகந்த செவ்வாயன்று, செந்நிற வஸ்திரம், செவ்வரளி மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வைப்பர். மிட்டாய் அல்லது சாக்லேட் சமர்பித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என நம்புகின்றனர். 

அருணகிரிநாதர் வணங்கிய தலம் என்ற பெருமை கொண்டது இக்கோயில்.👏👏👏



9😊😊😊


கோயிலுக்கு பின்புறம் பழநி மலையைப் போன்றே மூலிகை மரங்கள் நிறைந்த மலை ஒன்று இருக்கிறது. இங்கும் ஒரு கோயில் உள்ளது. 

மலைமீது தான் பழநி முருகனைப் போல குழந்தை வேலப்பர் இருந்ததாக கூறுகின்றனர். 

பழங்கால சிலை ஒன்று மலைக் கோயிலில் இருந்துள்ளது. 

சிதிலமடைந்த அச்சிலை சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை கும்பாபிேஷகம் நடக்கவில்லை.😰


10🙏🙏🙏

பழநி மலைக்கு இணையாக, அதேபோன்ற அமைப்புடன் உள்ளது இதன் தனிச் சிறப்பு. 

மலைமேல் செல்லும் பாதை மோசமாக இருக்கிறது. 

இம்மலையை மேற்கிலிருந்து பார்த்தால் பழநி மலைப் போலவும், தெற்கிலிருந்து பார்த்தால் சிவலிங்கம் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் திருவண்ணாமலை போன்றும் தெரியும்.

மலையைச் சுற்றிலும் ஏராளமான மூலிகை மரங்கள், செடிகள் நிறைந்துள்ளன. 

அவற்றில் பல ஆக்கிரமித்துள்ளவர்களால் அகற்றப்பட்டுள்ளன.

மலையைச் சுற்றிலும் குகைகள் பல உள்ளன. அனைத்தும் இயற்கையாலோ அல்லது மனிதர்களாலோ அடைக்கப்பட்டுள்ளது. இவை சித்தர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை காட்டுகின்றன. 

பழநி வரும் 90 சதவீத பக்தர்கள் கீழே உள்ள குழந்தை வேலப்பர் கோயிலுக்குச் செல்கின்றனரே தவிர, பல ரகசியங்களை கொண்ட மூலிகை மலைக்கு செல்வதில்லை.

*கிரிவலம்*

மலையைச் சுற்றியுள்ள இடத்தில் பல ஆக்கிரமிப்புகள் இருந்தன. இவற்றை 'விழுதுகள்' எனும் தொண்டு நிறுவனத்தினர் சட்டரீதியாக போராடி மீட்டுள்ளனர். 

தற்போது கிரிவலம் அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆன்மிக விரும்பிகள், தன்னார்வலர்கள் இணைந்து நிதியை தயார் செய்து விழுதுகள் அமைப்பின் மூலம் சரிசெய்து வருகின்றனர். 

கிரிவலம் அமைந்தபின், இங்குள்ள மூலிகை மரங்களின் காற்றே பல நோய்களை தீர்க்க வல்லமையுடையதை பொதுமக்கள் உணர்வர்.💐💐💐



11👏👏👏

கிரிவலம் அமைத்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரிய வகை மரஞ்செடி கொடிகளை சேகரித்து சுற்றிலும் நடுவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. 

அங்கு பறவைகள் தணணீர் அருந்துவதற்காக தண்ணீர் தேக்க 2 சிறிய குட்டைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. கிரிவலப் பாதையை முறையாக சீர்செய்தால் பழநி மலை, சித்தர் நத்தம் சிவன்மலை போல இதுவும் பக்தர்களின் ஆன்மிக தலங்களில் இதுவும் முக்கிய இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.👍👍👍


இம்மலையும் பழநி மலைக்கு இணையான காலத்தைச் சேர்ந்தது. மேற்கே பழநி மலையை நோக்கியவாறு முருகன் குழந்தை வேலப்பராக நிற்கிறார். 

20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கி இருந்த அகதிகள் மலையின் மீது இருந்த சிலையை சேதப்படுத்தி விட்டனர். 

அதை புதுப்பித்தபின்னும் கும்பாபிேஷகம் நடக்கவில்லை. 

பக்தர்கள் சென்று வர படிப்பாதை அமைக்க வேண்டும். 

பழநி போல் இங்கும் கால பூஜைகள் நடத்த வேண்டும். சமூக விரோத செயல்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்க வேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 🙏🙏🙏




அம்மா இன்று  படை வீடு ... குழந்தை வேலப்பர் அருமை ... முருகன் எங்களில் ஒருவர் , குழந்தைகளில் ஒருவர் , தருவதில் தன்னகிரில்லாதவர் என்றும் புரிய வைத்தாய் தாயே !! 


*உண்மை ரவி ...* 

காலப்போக்கில் நான் கொடுத்த எல்லா பொக்கிஷங்களும் தொலைந்து போகலாம் ... 

இன்று மிஞ்சி இருக்கும் பசுமையும் மடிந்து போகலாம் 

ஆனால் குன்றுகள் என்றும் நிலையானவை 

அங்கே என் முருகன் இருந்துகொண்டு ஆன்மீக உள்ளங்களை வாழ்வித்துக்கொண்டுதான் இருப்பான் . 🏆🏆🏆


*641 த்யானகம்யா*  -  த்யானம் செய்த பலனாக அடையப்படுபவள் அம்பாள்.  

ஆத்ம சக்தியை உணர அத்தியாவசியம்  த்யானம்.    ஸ்வேதஸ்வதர உபநிஷத் (I.ii.3)  “ரிஷிகள் ஆழ்ந்த  த்யானத்தில்  ஈடுபட்டு பிரம்மாண்டமான பர  ஒளி மயமான ஒரு சக்தி  பிரபஞ்சத்தை உருவாக்குவதை  அறிந்தனர்.

பரமாத்மாவை  மாயை திரையாக பிரபஞ்சம் பூரா சூழ்ந்து கொண்டிருப்பதை  அறிந்தனர்.  .👌👌👌



*642 அபரிச்சேத்யா*- 

ஓரிடத்தில் இருப்பவள் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாதவள் அம்பாள். 

எங்கும் நிறைந்தவள்.  பிரம்மத்தின் உருவம். அவளை  தியானத்தில் அறியலாம்.

*643 ஜ்ஞானதா* -   

தியானத்தின் மூலம் ஞானத்தை அள்ளி  வாரி  வழங்குபவள் அம்பாள். 

தன்னை,  பிரம்மத்தை அறிய புலன்களுக்கு அப்பாற்பட்ட  அறிவைத்  தருபவள்.   

சிவ சூத்ரம்  (I.2) '' ஞானம்  பந்தா'' என்பது  குறைந்த  ஞானம் ஒரு எல்லைக்குள், கட்டுப்பாட்டுக்குள்  உள்ளதை  தான்  குறிக்கும்.  கட்டுப்பாட்டில் இருப்பது. ப்ரம்மஞானம் எல்லையற்றது.👌👌👌



==========








Comments

ravi said…

மரபின் மைந்தன்


சஷ்டி நாயகன் சண்முகன்-6-காதல் முருகன்

"
ravi said…
யானை தன் அணங்கு வாழ்க! மாறிலா வள்ளி வாழ்க!" என்று கந்த புராணத்தின் நிறைவில் முருகன் வாழ்த்தில் வரும்.

அசுரர்களிடமிருந்து தேவர் குலத்தை மீட்ட முருகனுக்கு இந்திரன் தன் மகளாகிய தெய்வானையை மணமுடித்துத் தந்தான். வேட்டுவர் குலத் தலைவன் நம்பிராஜன் மகளாக வளர்ந்த வள்ளியை வேலன் தேடிப்போய் மணமுடித்தான்.

ravi said…
இருவருமே திருமாலின் புதல்வியர் என்றும் வெவ்வேறு இடங்களில் என்றும் கந்த புராணத்திலேயே செய்தி உண்டு. மாமன் மகள்கள் !!

ravi said…
அருளாளர்கள் முருகன் மேல் இயற்றிய பனுவல்களில் வள்ளிக்கு கூடுதல்முக்கியத்துவம் தரப்படுவதைக் காணலாம். மானின் வயிற்றில் மானிடப் பெண்ணாய் அவதரித்த வள்ளியம்மை வரலாறு ஒரு தத்துவத்தைஉணர்த்துகிறது. தன்னை மறந்திருக்கும் உயிர்களை முருகன் வலியத் தேடிப்போய் ஆட்கொள்வான் என்பதே அந்தத் தத்துவம்.

ravi said…
அதனால்தான், முதன்முதலில் வள்ளியை நாரதர் சொன்னவண்ணம் சென்று பார்த்த கந்தன் பழம்பொருள் மீண்டும் கிடைத்ததுபோல் மகிழ்ந்தான் என்கிறார்
கச்சியப்பர்.

ravi said…
"மண்டலம் புகழுந் தொல்சீர் வள்ளியஞ் சிலம்பின் மேல்போய்ப்
பிண்டியந் தினையின் பைங்கூழ்ப் பெரும்புனத் திறைவி தன்னைக்
கண்டனன் குமரன் அம்மா கருதிய எல்லை தன்னில்
பண்டொரு புடையில் வைத்த பழம்பொருள் கிடைத்த வாபோல்."


"
ravi said…
வள்ளிக்கு வாய்த்தவனே!மயிலேறிய மாணிக்கமே" என்னும் அருணகிரியார்,
வள்ளிமேல் இருக்கும் காதலால் முருகன் அவளுடைய திருவடிகளைத் தொழுவான் என்பதை பகிரங்கமாகப் பறை சாற்றுகிறார் .

"பணியா எனவள்ளி பதம் பணியும்
தணியா அதி மோக தயாபரனே"
என்றும்

"பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா"

என்றும் பாடுகிறார்.
ravi said…
அதற்காக அருணகிரியாரிடம்" நீங்கள் தெய்வானையம்மைக்கு ஏன் முக்கியத்துவம் தரவில்லை என்று கேட்க முடியாது. "முதல் பாடலிலேயே அம்மையைத் தானே பாடினேன்" என்று
சொல்லித் தப்பித்து விடுவார்
ravi said…
முத்தைத் திரு பத்தித் திருநகை
அத்தி" எனச்சொல்லித்தான் அருணகிரியார் திருப்புகழையே தொடங்குகிறார்.

இனி, கந்தபுராணத்தின்படி முதியவர் வேடத்தில் வந்து முருகனாகக் காட்சி கொடுத்து வள்ளியையும் மையல் கொய்யச் செய்து மறுநாள் வருவதாய் பன்னிருகைப் பரமன் புறப்பட்டுப் போய்விடுகிறான்.பிரிவாற்றாத வள்ளியை அனைவரும் உறங்கிய நேரம் பார்த்து ,தோழி முருகனிடம் கொண்டு சேர்க்க அழைத்துச் செல்கிறாள்.முருகனும் வள்ளியைப் பிரிந்திருக்க ஏலாது அங்கே வந்து தவிக்கிறான்.


ravi said…
தாய்துயில் அறிந்து தங்கள் தமர்துயில் அறிந்து துஞ்சா
நாய்துயில் அறிந்து மற்றந் நகர்துயில் அறிந்து வெய்ய
பேய்துயில் கொள்ளும் யாமப் பெரும்பொழு ததனிற் பாங்கி
வாய்தலிற் கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென் றுய்த்தாள்

ravi said…
முருகன் உடன்போக்கு முறையில் அழைத்துச் செல்ல முற்படுகையில் நாரதர் தடுத்து நன்மணம் முடிக்கச் சொல்வதாகவும்,அதேநேரம் மகளைக் காணாமல் தவிக்கும் தாய் தந்தைக்குச் சொல்ல எல்லோரும் வந்து முருகனே தங்கள் மகளை மணக்க வந்தவன் என்றறிகிறார்கள்.

ravi said…
வந்தவன் முருகன் என்பதை அறியும் வரை பெற்றோரும் உற்றோரும் படும் தவிப்பை கச்சியப்பர் பதிவு செய்கிறார். அதனை சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் விரிவாக தன் காவடிச் சிந்தில் பாடுகிறார்.



ravi said…
பாதிராத்திரி வேளையில் வீட்டுப்
பக்கத்தில் வந்து மேவிப் - பஞ்ச
பாதகன் ஒரு பாவி - சிறு
பாவையை மெள்ளக் கூவிக் - கையைப்
பற்றிக் கூட்டிக்கொண் டேகி னான்; பதை
பதைக்குதே என்றன் ஆவி

தேடினும்கிடை யாத தாகிய
திரவியக் கரு கூலம் - போலே
செனித்தபெண் ணுக்குச் சீலம் - வேறே
திரும்பின தென்ன காலம்? - கொங்கை
திரண்டி டாமுன்னம் மருண்டி டற்கெவன்
செய்தானோ இந்த்ர சாலம்?

காடுசேர்கையில் கரடி வேங்கைகள்
காட்டுமே ஆர வாரம், - அதைக்
காதில் கேட்கவி சாரம் - வைத்துக்
கலங்குவாள்; அந்த நேரம் - என்றன்
காதலி தன்னை ஆதரித் துயிர்
காப்பது வேலன் பாரம்.

ravi said…
இதனை முருகன் மேல் காதல்கொண்ட பெண்ணின் தாய் நிலையில் இருந்து பாடினாலும் இதனை வள்ளியின் நற்றாயோடும் செவிலித்தாயோடும் பொருத்திப் பார்க்க இந்தச் சிந்தின் சில பத்திகள் இடம் கொடுக்கின்றன.

ravi said…
குன்று தோறும் இருப்பவன் குமரன் என்பதற்கு ஒரு புதிய விளக்கத்தை திரிகூட ராசப்பக் கவிராயர் வழங்குகிறார்.குறவர்கள் வேறு குலத்தின் பெண் கொள்ளவோ கொடுக்கவோ மாட்டார்கள். விதிவிலக்காக முருகனுக்குக் கொடுத்தார்களாம்.சும்மா கொடுக்கவில்லை.
ravi said…
முருகன் வள்ளியை யானையிடமிருந்து காத்த வீரத்தைப் பாராட்டியும் வேங்கை மரமாய் வள்ளிக்கு நிழல் கொடுத்த காதலை மெச்சியும்தான் கொடுத்தார்களாம். அதுமட்டுமா?
தங்கள் ஆளுகையிலிருக்கும் அத்தனை மலைகளையும் மாப்பிள்ளைக்கு சீதனமாய் கொடுத்து விட்டார்களாம்.


ravi said…
ஒருகுலத்திற் பெண்கள்கொடோம்
ஒருகுலத்திற் கொள்ளோம்
உறவுபிடித்தாலும்விடோம் குறவர்குலம்நாங்கள்
வெருவவரும் தினைப்புனத்தில் பெருமிருகம் விலக்கி
வேங்கையாய் நிழல்பரப்பும் பாங்குதனைக் குறித்தே
அருளிலஞ்சி வேலர்தமக்கு ஒருமகளைக் கொடுத்தோம்
ஆதினத்து மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம்"

ravi said…
இப்படி காலந்தோறும் தமிழ்க்கவிஞர்களால் உறவோடும் உரிமையோடும் கொண்டாடப்படும் கந்தன் புகழ்போற்றும் கந்தபுராணத்தை வாசிப்பதால் .வாசிக்க முயல்வதால் அல்லது பிறர் வாசிக்கக் கேட்பதால்என்ன பயன்? கச்சியப்பரே சொல்கிறார் கேளுங்கள்.


ravi said…
பொய்யற்ற கீரன் முதலாம்புல வோர்பு கழ்ந்த
ஐயற் கெனது சிறுசொல்லும் ஒப்பாகும் இப்பார்
செய்யுற் றவன்மால் உமைபூசைகொள் தேவ தேவன்
வையத்த வர்செய் வழிபாடு மகிழும் அன்றே

வற்றா அருள்சேர் குமரேசன்வண் காதை தன்னைச்
சொற்றாரும் ஆராய்ந் திடுவாருந் துகளு றாமே
கற்றாருங் கற்பான் முயல்வாருங் கசிந்து கேட்கல்
உற்றாரும் வீடு நெறிப்பாலின் உறுவர் அன்றே


(எப்போதும் உடனிருப்பான்)





ravi said…
ஜாலங்காட்டி நடக்குது ஜன
நாயக சமையல்-பல
காய்கறிகள் கலந்துபோட்டு
கூட்டணி அவியல்
கேழ்வரகின் நெய்பிசைந்து
கசகச துகையல்
கடுகுபோல படபடக்கும்
கோபத்தின் பொரியல்

உப்புபோலத் தொட்டுக்கிட
ஜாதி ஒழிப்பு-அட
ஊறுகாயப் போல்பழசு
ஊழல் ஒழிப்பு
அப்பளம் போல் நொறுங்குதுங்க
மக்கள் நெனப்பு-கறி
வேப்பிலையப் போலொதுங்கும்
ஏழை பொழப்பு

ravi said…
ஆறிப்போன வாக்குறுதி
சோறுவைக்கலாம்
வேகாத பருப்பக்கூட
வேக வைக்கலாம்
ஊசிப்போன கொள்கையோட
கூட்டு வைக்கலாம்
ஊருக்கெல்லாம் இலையின்கீழ
நோட்டு வைக்கலாம்

பந்தியெல்லாம் பதைபதைக்க
குழம்ப ஊத்தறான்
பாவிமக்க குழம்பத்தானே
தேர்தல் வைக்கறான்
முந்தாநாள் வச்சரசம்
மொண்டு ஊத்தறான்
முணுமுணுத்தா எலயவிட்டு
மடியில் ஊத்துறான்

ravi said…
பாரத விலாஸிலிப்போ
பந்தி போடலாம்
பாயசத்தில் முந்திரிபோல்
பண்பைத் தேடலாம்
மானமில்லா மக்களெல்லாம்
பாயில் அமரலாம்
கோபம் ரோஷம் உள்ளவங்க'
கையக் கழுவலாம்

தின்ன எலையை கழுவிக் கழுவி
திரும்பப் போடுறான்-அவன்
தின்னு முடிச்ச மிச்சத்தைத்தான்
தேசம் என்கிறான்
இன்னயநாள் வரை நடந்த
பந்தி எத்தினி?-அட
இலையில் அமரும் இந்தியன்தான்
என்றும் பட்டினி!!
ravi said…

ஆன்மிக பலன்ஆன்மிக தொடர்கள்
‘உன் புருஷன் ஜெயிப்பான், என் கனவு பலிக்கும்!


மகாபாரதம் - 69

லட்சுமணன் சீதையின் இடத்தை விட்டு நகர்ந்த நேரம், ராவணன் பர்ணசாலைப் பகுதியில் பிரவேசித்தான். வாசலில் நின்று ‘பவதி பிட்சாம் தேஹி...’ என்று குரல் கொடுத்தான். சீதை வெளியே வந்து பழங்களையும், கிழங்குகளையும் தட்டில் எடுத்து வந்து அவனுக்குக் கொடுப்பதற்கு தயாரானாள். ஒரு சந்நியாசியைப்போல மாறுவேடத்தில் வந்திருந்த ராவணன், சீதையின் அழகைப் பார்த்து திகைத்தான். சட்டென்று, தன் வேடத்தை உதறி சுய ரூபத்தோடு காட்சியளித்தான்.

‘‘
ravi said…
என் பெயர் ராவணன். நான் லங்கா நகரத்தின் மன்னன். அரக்க குலத்தோன். உன் அழகு என்னை மயக்குகிறது. எனக்கு மனைவியாகி விடு. இந்தக் காட்டில் எதற்கு அனாதைபோல இருக்கிறாய்? நான் உன்னை மிகச்சிறந்த மகாராணியாக, என் பட்டமகிஷியாக ஆக்குகிறேன்,’’ என்று ஆசை வார்த்தைகள் சொல்ல, அவள் ‘ச்சீ... தூ...’ என்று சொல்லிவிட்டு அவன் பார்வையிலிருந்து தப்பிப்பதற்காக பர்ணசாலைக்குள் ஓடினாள். ராவணன் பர்ணசாலைக்குள் புகுந்து அவளுடைய கைகளை நீட்டி மறித்தான். சீதை மூர்ச்சையானாள்.

ravi said…
அவள் கூந்தலைப்பற்றி இழுத்துக்கொண்டு தன்னுடைய விமானத்தில் வைத்து விமானத்தில் ஏறி வானத்தில் ராவணன் பறந்தான். ராமச்சந்திரமூர்த்தியின் பத்தினியான சீதா, ராவணனுடைய விமானத்தில் மூர்ச்சையடைந்து கிடப்பதை, அப்போது வானில் பறந்துகொண்டிருந்த ஜடாயு பார்த்து, அவளை ராவணன் அபகரித்துப் போகிறான் என்பதை உணர்ந்து ராவணனைத் தடுத்தார். ‘‘இதென்ன நீச காரியம்!

ravi said…
ஒரு மன்னன் செய்ய வேண்டியதா இது? புருஷன் இல்லாமல் தனியாக இருக்கின்ற பெண்மணியின் முன்பு வேடமிட்டுக் கொண்டு வந்து, பிறகு வளைத்து எடுத்துக் கொண்டு போகிறாயே, என்ன நியாயம் இது?’ என்று சொல்லி, அவன் விமானத்தை பறக்க விடாமல் தடுத்தார். விமானம் தாழப் பறந்தது. தன் அலகாலும், நகங்களாலும் அவனுடைய உடம்புகளில் பலத்த காயங்களை ஏற்படுத்தினார்.

ravi said…
ராவணனுடைய உடம்பு முழுவதும் ரத்தம் வடிந்தது. அவன் வலி தாங்காமல், கடும் கோபத்துடன், இடுப்பிலிருந்த கத்தியை உருவி ஜடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்தினான். ஜடாயு கீழேவிழ, விமானம் தொடர்ந்து பறந்தது, கடல் கடந்து இலங்கையில் இறங்கிற்று. ஸ்ரீராமர் வேகமாக திரும்பிக் கொண்டிருக்கிறபோது எதிரே லட்சுமணன் வருவதைப் பார்த்து கோபமானார்.

ravi said…
என்ன முட்டாள்தனம் இது! ஏன் சீதையை விட்டுவிட்டு வந்தாய்? இது அரக்கர்களின் காடல்லவா, இது தெரிந்தும் இப்படி செய்திருக்கிறாயே! என்று சற்றே கடுமையாகச் சொல்ல, சீதை தன்னை நோக்கி வீசிய கடும் சொற்களை லட்சுமணன் விவரித்தான். ஸ்ரீராமர் துக்கமானார். வழியிலே பெரிய பறவை படுத்திருப்பதைப் பார்த்து அது ராட்சஸனோ என்று வில்லை வளைத்தார்.

ravi said…
ஹே ராமா’ என்று அந்தப் பறவை குரல் கொடுப்பதைப் பார்த்து அருகே போனார். ‘‘என் பெயர் ஜடாயு. நான் உன் தகப்பன் தசரதனுடைய சிறந்த நண்பன். உன்னுடைய மனைவியை ராவணன் தன்னுடைய புஷ்பக விமானத்தில் தூக்கிப் போனான். நான் அவனை தடுத்து நிறுத்தி அவனுக்கு காயங்கள் ஏற்படுத்தினேன். அவன் தன்னுடைய அற்புதமான வாளால் என் சிறகை வெட்டி எறிந்தான். நான் இங்கு விழுந்து கிடக்கிறேன்,’’ என்று சொல்ல, ராவணனுடைய இடம் எங்கிருக்கிறது என்று லட்சுமணன் வினவ, தென்திசை நோக்கி தன் முகத்தை வைத்து சூசகமாக அந்த திசையை காட்டி ஜடாயு உயிர்விட்டார்.

ravi said…
தந்தைக்கு நிகரான ஜடாயுவிற்கு ஈமச் சடங்குகள் செய்துவிட்டு அவர்கள் இருவரும் பர்ணசாலையை நோக்கி ஓடினார்கள். பர்ணசாலை கலைந்து கிடந்தது. பண்டங்கள், பழங்கள், கிழங்குகள் எல்லாம் சிதறிக் கிடந்தன. ஒரு சிறிய போராட்டம் அங்கு நடந்திருப்பது தெரிந்திருந்தது. சீதையை காணோம். சீதையை நாலாபக்கமும் ராமரும், லட்சுமணரும் தேடினார்கள்.

ravi said…
மார்க்கண்டேயர் சற்று நிறுத்தினார். ‘‘தர்மா ராமருடைய நிலையைப் பார்த்தாயா? முதல்நாள் பட்டாபிஷேகம் என்று சொல்லி, மறுநாள் வனவாசம் என்றும் சொல்லி அவரை வனத்திற்கு மனைவியோடும், தம்பியோடும் போகச்செய்து, பரதன் பின்தொடர்ந்தது போல மற்றவரும் பின் தொடர்வார்கள் என்று பயத்தால் அவர்கள் இன்னும் தென்திசை நோக்கி தண்டகாரண்யத்தில் நுழைய, அரக்கர்களை வதம் செய்து கோதாவரிக் கரையில் அமைதியாக இருக்க, அந்த இடத்தில் சூர்பணகையின் நடவடிக்கையும், அதனால் ராவணனுடைய வருகையும், மாரீசனுடைய வதமும் நிகழ்ந்து ராவணனால் சீதை சிறைப்பிடிக்கப்பட்டுப்போன நேரத்தில் ராமருடைய மனம் எத்தனை பாடுபட்டு இருக்கும்!

ravi said…
தென்திசை நோக்கி என்று சொன்னால் எந்த திசை, எவ்வளவு தூரம், எப்படிப் போகவேண்டும் என்று எதுவும் தெரியாமல் பித்துப்பிடித்த நிலையில் ராமர் மரங்களையும், செடிகொடிகளையும் பார்த்து, ‘மரமே சீதையை பார்த்தாயா, செடி கொடிகளே, காலையில் பூ பறித்தாளே அவளை கவனித்தீர்களா? யார் அவளை தூக்கிப் போனார்கள் என்று நீ பார்க்கவில்லையா...?’’ என்று தன் நிலை மறந்து அழுததாக செய்தி உண்டு.

ravi said…
ராமன் அவதார புருஷன். ஆனாலும், தான் மானுடன் என்பதாகவே நினைப்பில் ஒரு மானுடனைப் போல கழிவிரக்கத்தில் மனைவியை இழந்த துக்கத்தில் புலம்பியிருக்கிறார். இதைக் கேட்கும்போது உன்னுடைய துக்கம் ஞாபகம் வருகிறதா? ராமனுடையதை ஒப்பிடும்போது உன் துக்கத்திற்கு ஏதேனும் அர்த்தம் உண்டா?” என்று கேட்க, தருமர் வாய்புதைத்துக் கொண்டார். பீமனும், அர்ஜுனனும், நகுல சகாதேவனும், திரௌபதியும் கண்ணீர் உகுத்தார்கள். கைகூப்பி ஸ்ரீராமரைத் துதித்தார்கள்.

ravi said…
மார்க்கண்டேயர் ராமாயணத்தை தொடர்ந்தார்... ‘‘ராம, லட்சுமணர் சீதையைத் தேடி வனம் வனமாகப்போக, ஒருசமயம் உருவமில்லா உருவம் அவர்களை மறித்து நின்றது. விழுங்க வாய் திறந்தது. லட்சுமணன் அந்த அரக்கன் பிரபந்தனின் உடம்பில் ஏறிக் கொண்டான். அதன் கைகள் லட்சுமணனை பற்றிக் கொண்டன. ராமர் தானும் முன்னேறி தன் வலது கையைக் கொடுத்தார். அது ராமரையும் கோத்துக் கொண்டது. ‘‘நல்லது. இப்பொழுது அவன் கைகளை விட்டு விடுவோம்” என்று ராமர் சொல்ல, இருவரும் பிரபந்தனின் கைகளை வெட்டினார்கள். ராமர் தன் வில்லால் அம்பு தொடுத்து அவனுடைய விலா எலும்புகளை அடித்து நொறுக்கினார்.

ravi said…
அவ்விதமே லட்சுமணனும் செய்தார். அந்த மாமிச பிண்டம் இரண்டாகப் பிளந்தது. உள்ளிருந்து தேஜஸ்மிக்க ஒரு கந்தர்வன் தோன்றினான். ‘‘என் பெயர் முத்கலர். ஒரு அந்தணனுடைய சாபத்தினால் இப்படி அரக்க உருவம் பெற்றேன். உன்னுடைய மனைவியை ராவணன் தென்திசை நோக்கி அழைத்துப் போகிறான். விமானத்தில் கவர்ந்து போகிறான். அவனைக் கொல்லவேண்டுமென்றால் அவன் இடத்திற்குப் போகவேண்டுமென்றால் ரிஷ்யமுக பர்வதத்தில் இருக்கின்ற சுக்ரீவனை நாடிப்போ.

ravi said…
சுக்ரீவன் நிச்சயம் உனக்கு உதவி செய்வான். சுக்ரீவன் வானரப்படைகளின் தலைவன். அங்கு ஒரு பிணக்கு இருக்கிறது. அந்த பிணக்கு தீர்ந்து சுக்ரீவன் உனக்கு உதவி செய்வான்,’’ என்று சொல்லி ராமரை நமஸ்கரித்து விண்ணுலகம் போனான். ராமர் ஆச்சரியத்தோடு இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்ற எண்ணத்தில் மிகவேகமாக பம்பா நதிக்கரையை அடைந்தார். கரையின்மேலே ரிஷ்யசிருங்க பர்வதத்தில் ஏற, அங்கு ஒரு அந்தணர் ராமர் முன் கைகூப்பினார். மண்டியிட்டார்.

ravi said…
அந்தணர் மண்டியிடுவதாவது என்று ராமர் திகைத்தபோது, அனுமன் சுயரூபம் பெற்று ராமரை வணங்கி எழுந்தார். ‘‘உங்கள் வருகை நல்வரவு. நான் உங்களை எங்கள் மன்னனாகிய சுக்ரீவனிடம் அழைத்துப் போகிறேன். அவருக்கும் அவருடைய சகோதரன் வாலிக்கும் ஒரு பிணக்கு இருக்கிறது. அதனால் இடைவிடாது சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த ரிஷ்யமுக பர்வதத்தில் அவருடைய சகோதரரான வாலி இங்கு வரமுடியாது.

ravi said…
வந்தால் தலை வெடித்துவிடும் என்ற சாபம் உண்டு. அதனால் சுக்ரீவன் இந்த இடத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார். செய்யாத தவறுக்கு தண்டிக்கப்பட்டு விட்டோமே என்று வருத்தப்படுகிறார். அவரைக் கொல்வதற்காக வாலி கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். அந்த துக்கத்தில் சுக்ரீவன் இருக்கிறார்,’’ என்று சொல்ல, ராமர் பயந்து ஒடுங்கியிருந்த சுக்ரீவனைச் சந்தித்தார்.

ravi said…
தன்னுடைய மனைவியை வாலி அபகரித்துக் கொண்டார் என்றும், தான் வாலி இறந்து விட்டான் என்று நினைத்து குகையை மூட, உள்ளுக்குள்ளே ராட்சஸனோடு சண்டை போட்டு பிறகு குகையை உடைத்துக் கொண்டு வெளியே வந்து தான் குகையை மூடியது பிசகு என்று சொல்லி தன்னை கொல்வதற்கு தமையனான வாலி முயற்சி செய்வதாய் துக்கத்தோடு சொல்ல, ‘கவலைப்படாதே நான் இருக்கிறேன்’ என்று ராமர் அவனுக்கு ஆறுதல் அளித்தார்.

ravi said…
சுக்ரீவன் என்ன செய்வதென்று கேட்க, மறுபடியும் போய் வாலியை போருக்கு அழை. நான் அப்போது மறைந்திருந்து வாலியை கொன்று விடுகிறேன் என்று வாக்கு கொடுத்தார். சுக்ரீவன் வாலியை சண்டைக்கு அழைத்தான். சண்டை துவங்கியது. ஆனால், யார் வாலி, யார் சுக்ரீவன் என்று ராமருக்கு அடையாளம் தெரியவில்லை. அடிபட்டு தோற்ற நிலையில் தப்பித்து சுக்ரீவன் ஓடிவர, மிகுந்த துக்கப்பட ராமர் அவனைத் தேற்றினார்.

‘‘
ravi said…
உன் மனைவியை அபகரித்த வாலியை நான் கொல்வேன். ஆள் மாறாதிருக்க ஏதேனும் அடையாளம் தேவை,’’ என்று சொல்லி, லட்சுமணனால் தயார் செய்யப்பட்ட ஒரு மாலையை சுக்ரீவன் கழுத்தில் போட்டார். அந்த மாலையோடு போய் மறுபடியும் அவன் குரல் கொடுக்க, மிகுந்த கோபத்தோடு வாலி தன் குகையை விட்டு வெளியே வந்து அவனோடு சண்டையிட, தன்னுடைய வில்லை வளைத்து வாலியின் நெஞ்சு பார்த்து ஒரு சரத்தை ராமர் தொடுக்க அது வாலியை குத்திக் கீழே சாய்த்தது.

‘‘
ravi said…
உன் மனைவியைத்தேட என்னை அணுகியிருக்கலாமே! ஏன், சுக்ரீவனிடம் உதவிகேட்டு என்னை சண்டையிட அழைக்கச் சொல்லி என்னைக் கொன்றாய்? என்னைக் கொல்வதால் உனக்கு என்ன லாபம்? நீ உத்தமன். நல்ல பண்புடையவன், மானிடரில் சிறந்தவன், மன்னவரில் உயர்ந்தவன் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி மறைந்திருந்து கொல்கிறாயே, இது நியாயமா?’’ என்று கேட்க, ‘‘உன்னுடைய எதிரியின் வலிவை வாங்கிக் கொள்ளும் வரத்தை நீ வைத்திருக்கிறாய்.

ravi said…
அதனால் உன்னுடன் நேரில் நின்று போரிடுவது தர்மயுத்தம் ஆகாது. உன்னுடைய வீரத்தை மறைந்துதான் சந்திக்க வேண்டியுள்ளது. உன்னுடைய வரத்தின் தவறு அது. மறுபடியும் சொல்கிறேன் நீ ஒரு வானரம். ஒரு மிருகம். அதை நான் மறைந்திருந்து கொல்லலாம். அது தவறில்லை’’ என்று சொல்ல, அவருடைய பேச்சைக் கேட்டு வாலி அமைதியானான்.

‘‘
ravi said…
ராமா, ஆயினும் தோன்றுகிறது. இந்த உதவியை நான் செய்திருப்பேனே,’’ என்று சொல்ல, ‘‘நான் எப்படி உன்னை நம்புவது? சுக்ரீவனுடைய மனைவியை நீ வைத்துக் கொண்டிருக்கிறாய். நான் என் மனைவி சீதையை தேடிக்கொடு என்று உன்னிடம் சொன்னால் வேறு ஏதேனும் விபரீதம் நடந்தால் நான் எப்படி நம்புவேன்? நீ நம்பிக்கைக்கு உரியவனாக எனக்குத் தென்படவில்லை. மாற்றான் மனைவியை வரிப்பவன் நல்லவனாக நான் நினைக்கவில்லை’’ என்று சொன்னார் ராமர்.

‘‘
ravi said…
இது எங்கள் மிருக விதி. அதனுடைய நியமம். ஆயினும் உன் கையால் நான் மரணமடைவது எனக்கு சந்தோஷம்’’ என்று சொல்லி வாலி உயிரை விட்டான். ‘‘ராமர், வாலியின் மகனான அங்கதனுக்கு இளவரசு பட்டம் கட்டி சுக்ரீவனை மன்னனாக்கி விலகினார். மழைக்காலம் என்பதால் அவர்கள் தங்கள் குகையில் அடங்கினார்கள். மழைக்காலம் முடிந்ததும் நிச்சயம் வருகிறேன் என்று சுக்ரீவன் உத்தரவாதம் கொடுத்திருந்தான்.

ravi said…
சீதையின் நினைப்பாகவே மனம் உருகி மழைக்காலம் முடியும்வரை தென்திசை நோக்கியே ஸ்ரீராமர் அமர்ந்திருந்தார்’’ என்று மகரிஷி சொல்ல, நீண்ட நெடிய பெருமூச்சோடு அவர்கள் ராமருடைய துக்கத்தை தம்முடைய நெஞ்சில் ஏற்றி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவதாரப் புருஷரான ஸ்ரீராமர் அடைந்த துக்கத்திற்கு இணையான துக்கம் இல்லவே இல்லை என்பது போலத்தான் தருமரும், மற்றவர்களும் உணர்ந்தார்கள்.

ravi said…
மழைக்காலம் முடிந்தும் வராத சுக்ரீவனை நோக்கி லட்சுமணன் போய் அதட்டி அழைத்து வர, சுக்ரீவன் மன்னிப்பு கேட்டான். தன் படைகளைத் தயார் செய்தான். நாலாபுறமும் வீரர்களை ஏவினான். தென்திசை நோக்கி ஜாம்பவானும், ஹனுமனும் போனார்கள். தாங்கள் செய்வது ராமகாரியம் என்ற நினைப்போடே மிகுந்த கவனத்தோடு நடந்து கொண்டார்கள்.

ravi said…
இலங்கையை அடைந்த ராவணன் சீதையை ஒரு அசோகவனத்தில் தங்க வைத்தான். அவளைச் சுற்றி அரக்கிகளை காவல் வைத்தான். விகாரமான உருவமுடைய அந்த அரக்கிகள் சீதையை பல்வேறு விதமாக ராவணனோடு சேர்ந்திருக்கும்படி மோசமான வார்த்தைகளால் வற்புறுத்தினார்கள். துன்புறுத்தினார்கள். இல்லையெனில் தின்று விடுவோம் என்று பயமுறுத்தினார்கள். அப்பொழுது திரிஜடை என்கிற ஒரு அரக்கி மட்டும் சீதைக்கு ஆதரவாக இருந்தாள்.

‘‘
ravi said…
ராவணனுக்குக் கேடுகாலம் வந்து விட்டது. அவன் மடியப் போகிறான். உன் புருஷன் இலங்கைக்கு வந்து வெகு நிச்சயம் ராவணனை கொல்லப் போகிறான். நான் ராவணனைப் பற்றி மோசமான கனவுகள் கண்டேன். உன்னுடைய புருஷன் ஜெயிப்பதாக கனவு கண்டேன். அது பலிக்கும்,’’ என்று ஆறுதல்படுத்தினாள். திரிசடையினுடைய நம்பிக்கையான வார்த்தைகள் சீதாதேவிக்கு உறுதுணையாக இருந்தன.

ravi said…
ராவணன் வந்து சீதையை தன் ஆசைக்கு இணங்கும்படியாக உரத்த குரலில் கர்ஜிக்க, மண்டோதரிக்கு இணையான இடத்தைத் தருவேன் என்று உத்தரவாதம் சொல்ல, ராவணனுக்கும் தனக்கும் நடுவே சீதை ஒரு புல்லைப் போட்டு அந்த புல்லை நோக்கி பேசலானாள். ‘‘ராட்சஸ ராஜா, இப்படி உயர்குலத்தில் பிறந்தும் அதர்மமான வாக்கியங்களை ஏன் பேசிக் கொண்டிருக்கிறாய்? நீ என்ன செய்தாலும் என் மனதை என் புருஷனான ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியினின்று மாற்ற இயலாது.

ravi said…
அவருடைய பராக்கிரமம் தெரியாமல் நீ இந்த தவறான காரியம் செய்து விட்டாய். என்னைக் கொண்டுபோய் அங்கு விடு என்றும் நான் கேட்க மாட்டேன். அவர் வருவார். உன்னை வதம் செய்வார். பிறகு, என்னை அழைத்துக் கொண்டு போவார். அதுவரையில் நான் காத்திருப்பேன். மறந்து போயும் இனி என்னிடம் இப்படி பேச வேண்டாம்,’’ என்று நிஷ்டூரமாக சீதை சொல்ல, ‘‘உன்னுடைய சம்மதம் இல்லாமல் உன்னைத் தொடமாட்டேன்,’’ என்று ராவணன் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

ravi said…
அப்பொழுது திரிசடை, ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவன் அவளை வற்புறுத்தினால் துன்புறுத்தினால் அவனுக்கு உடனடியாக இறப்பு ஏற்படும் என்று ஒரு சாபம் இருக்கிறது. எனவே, உன்னை ஒருபோதும் அவன் வற்புறுத்த மாட்டான் என்று சமாதானம் சொன்னாள். வடக்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் போனவர்கள் திரும்பி வர, தென்திசை போனவர்கள் மட்டும் திரும்பவில்லை. ஸ்ரீராமர் அந்த திசையிலிருந்து நல்ல செய்தி வரும் என்று ஆவலுடன் காத்திருந்தார்.

ravi said…
சில மாதங்கள் கழிந்ததும், சில வானரங்கள் வந்து மதுவனத்தை அழித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அவர்கள் அனைவரும் தென்திசை நோக்கி பயணப்பட்டவர்கள் என்று தெரிவித்தார்கள். மதுவனத்தை சீரழித்துக் கொண்டிருப்பதாகவும் விவரங்கள் கிடைத்தன. அப்படியானால் தென்திசை சென்றவர்கள் வெற்றிகரமாக காரியத்தை முடித்துவிட்டார்கள் என்று சுக்ரீவன் உணர்ந்து கொண்டான். ராமரிடமும் அந்த விஷயத்தைச் சொன்னான்.

ravi said…
மது வனத்தில் ஓய்வு எடுத்த பிறகு ஹனுமான் ராமரிடம் வந்து வணங்கி நின்றான். ‘‘சொல் ஹனுமான், நீ ஜானகியைப் பார்த்தாயா? நான் பகைவர்களை வென்று ஜானகியை என்னுடைய தேசத்திற்கு அழைத்துப் போக முடியுமா? அந்தப் போரில் வெற்றியடைய முடியுமா? என் மனைவியை மீட்டு வராமல் நான் உயிர் வாழ மாட்டேன்,’’ என்று கோபம் கலந்த வார்த்தைகளைச் சொன்னார்.

ravi said…
அதற்கு வாயுபுத்ரன், ‘‘உங்களுக்கு பிரியமான செய்தியைச் சொல்கிறேன். நான் ஜானகியை சந்தித்தேன். பல இடங்களில் சீதையை தேடி களைத்து பிறகு ஒரு மிகப் பெரிய குகையை கண்டோம். அதனுள் அகன்ற காடுகள் இருந்தன. வெகுதூரம் அந்தப் பாதையில் நகர்ந்து போனோம். அங்கே ஒரு திவ்ய வனம் இருந்தது. அது கைகராஜன் மயனுடைய வாழ்விடமாக கருதப்படுகிறது. அதில் பிராபாவதி என்னும் தபஸ்வி தவம் செய்து கொண்டிருந்தார்.

ravi said…
எங்களுக்கு பல்வகையான பதார்த்தங்களையும், ரசங்களையும் அளித்தார். அவற்றை உண்டு எனக்கு பலம் கிடைத்தது. நாங்கள் கடல் பக்கம் போய் கந்தமான மலையில் ஏறி நின்று அகன்ற அந்தக் கடலை பார்க்கத் துவங்கினோம். எங்களுக்கு அந்தக் கடலைத் தாண்டுவோம் என்ற நம்பிக்கை வரவில்லை. மிகவும் தளர்ந்து போனோம். நிற்க முடியாமல் அமர்ந்து கொண்டோம். அப்பொழுது உங்களைப் பற்றியும், லட்சுமணன் பற்றியும், ஜடாயு பற்றியும் பேச்சு வந்தது. அப்பொழுது அருகிலே ஒரு உருவம் தள்ளாடி வந்தது. பெரிய கழுகைப் போன்று அருகே வந்து நின்றது.

ravi said…
என்னுடைய சகோதரன் ஜடாயு பற்றி பேசுகிறீர்களா? என் பெயர் சம்பாகு. நாங்கள் சூரியனை பிடிக்க முயற்சித்து, என்னால் முடியாமல்போய் என் சிறகுகள் கருகி உதிர கீழே விழுந்தேன். ஆனால், ஜடாயு காயப்படாமல் தப்பினான். நீங்கள் எதற்காக ஜடாயு பற்றி பேசுகிறீர்கள்? யார் ஸ்ரீராமர், சீதை யார்?’ என்று கேட்க, வானரங்கள் அதற்கு சரியான பதிலைச் சொல்லின.

ravi said…
ராவணன் சீதையை அபகரித்துப் போனானா? அவனுடைய இலங்கையை நான் பார்த்திருக்கிறேன். அது பெரிய மலைக்கு நடுவே ஒரு பெரிய குகைக்கு அருகே உயர்ந்த ஒரு மலையில் அமைக்கப்பட்ட நகரம். மிக ஒளிபொருந்திய நகரம். நீங்கள் அங்குபோக இந்தக் கடலை தாண்டித்தான் ஆகவேண்டும்,’ என்று சொல்லி நிறுத்தியது. ஜடாயு இறந்த கதையை நாங்கள் சொல்ல, சம்பாகு துக்கப்பட்டார்.

ravi said…
நான் இலங்கையில் இறங்கி அசோக வனத்திற்கு நடுவே உங்கள் சீதையைக் கண்டேன். அவரைச் சுற்றி கோரமான அரக்கிகள் காவல் இருந்தார்கள். அவருடைய கேசம் ஜடையாக மாறியிருந்தது. அவர் உடம்பு முழுவதும் புழுதியாக மாறியிருந்தது. அவர் உடைகள் கிழிந்திருந்தன. மிகுந்த சோகத்தோடு அவர் இருந்தார். அரக்கிகள் தூங்கிய பிறகு நான் அவருக்கு என்னை வெளிப்படுத்திக் கொண்டேன். உங்கள் தூதுவனாக வந்திருப்பதாகச் சொன்னேன். என்னை முழுவதுமாக நம்பி தன்னை சந்தித்ததற்கு அடையாளமாக ஒரு சூளாமணியை கொடுத்தார். இதோ அந்தச் சூளாமணி.

ravi said…
இது தவிர, வேறொரு விஷயத்தையும் சொன்னார். சித்ரகூடத்தில் நீங்கள் இருக்கும்போது ஒரு காக்கை மீது ஒரு புல்லை அஸ்திரமாக செலுத்தி அந்தக் காக்கையினுடைய கண்களை பறித்தீர்கள்.அந்தக் காக்கை சீதையை துன்புறுத்த முயற்சித்தது என்பதையும் விளக்கிச் சொன்னார். இது வேறு எவருக்கும் தெரியாது, எனக்கும் ராமருக்கும் மட்டுமே தெரிந்தது. இப்போது உனக்கும் தெரிந்தது என்றும் சொன்னார்.’’
ராமர் உதடு நடுங்க, மனம் நடுங்க அந்தச் சூளாமணியை பெற்றுக் கொண்டார்.

ravi said…
முத்தமிட்டார். நெஞ்சில் வைத்துக் கொண்டார். ‘சீதே சீதே சீதே...’ என்று புலம்பினார். கண்ணில் நீர் வழிய நின்றார். ஹனுமான் பார்த்தது சீதையைத்தான் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது. நல்ல செய்தியை கொண்டு வந்த ஹனுமானை ராமச்சந்திர மூர்த்தி ஆரத்தழுவிக் கொண்டார். இலங்கையை எரித்து கடல் தாண்டி மறுபடி வந்ததையும் ஹனுமான் விவரித்தார்.

ravi said…
லட்சுமணனோடும், பெரிய வானர சேனையோடும் ராமச்சந்திர மூர்த்தி சமுத்திரக்கரையை அடைந்தார். ‘‘ஹனுமானைப்போல இந்தக் கடல் பகுதியை எல்லா வானரங்களாலும் தாண்ட முடியாது. ஆனால், இந்தக் கடல் வழியாகத்தான் வானரங்கள் போயாக வேண்டும். எனவே, நான் தர்ப்பையை விரித்து சமுத்திரராஜனை வேண்டுவேன். வழிவிடச் சொல்வேன். அப்படி வழிவிடவில்லையெனில் என் வில்லை வளைத்து நாண் ஏற்றி அஸ்திரங்களை பிரயோகம் செய்து இந்தப் பகுதியிலுள்ள அத்தனை நீரையும் எரித்து விடுவேன்,’’ என்று உரக்கச் சொன்னார்.

ravi said…
சமுத்திரராஜன் உடனே வந்து கைகூப்பினார். ‘‘ஸ்ரீராமா நீ அக்னி அஸ்திரங்களை ஏவினால் என் நிலைமை என்னாவது? அதை ஒருபோதும் செய்ய வேண்டாம். இந்த வானர கூட்டத்தில் விஸ்வகர்மாவின் மகன் நளன் இருக்கிறார். அவர் கையால் கட்டையோ, துரும்போ, கல்லோ எடுத்துப் போட்டால் அவற்றை நான் நீரின் மேல் மிதக்கச் செய்வேன். அதுவே உங்களுக்கு பாலமாகிவிடும்’ என்று சொல்லி மறைந்தான்.

ravi said…
பிறகு ராமரின் உத்தரவுப்படி கடலின்மேல் ஒரு பாலத்தை தயார் செய்தார். இந்தப் பூமியில் இன்றும் நளசேது என்று அந்தப் பாலம் பிரபலமாய் இருக்கிறது. சமுத்திர கரையை அடைந்தபோது விபீஷணன் தன்னுடைய நண்பர்களோடு தன் தமையனை விட்டு ராமரை சரணடைய, ராமர் அவனை தன் நண்பனாக ஏற்றுக் கொண்டார். அவர் படையில் அவனும் ஓர் அங்கம் வகித்தான். வானரப்படை விபீஷணனின் வழிகாட்டலோடு, பாலத்தின் வழியே போய் இலங்கையில் இறங்கியது.

(தொடரும்)

பாலகுமாரன்



ravi said…


வீழ்ந்தான் வீணன்!


மாகாபாரதம் - 70

வானர வீரர்கள் இலங்கைக்குள் இறங்கி தோப்புகளுக்குள் மெல்ல நுழைந்து, நகரைச் சுற்றியுள்ள காடுகளுக்குள் ஊடுருவதை, அங்கு காவல் காத்திருந்த இரண்டு அரக்கர்கள் பார்த்து விட்டனர். சைன்யம் பெரிதாக இருக்கிறது எதிர்க்க முடியாது, போய் தகவல் சொல்லி விட்டு வரவும் நேரம் இல்லை என்பதால், என்ன, ஏது என்று தெரிந்து கொள்வதற்காக சட்டென்று தங்களை வானரங்களாக உருமாற்றிக் கொண்டு அவர்களோடு கலந்து, இப்போது எங்கே போகிறோம், என்ன செய்யப் போகிறோம் என்றெல்லாம் தங்களுக்குள் பேச, மற்ற வானரங்கள் பதில் சொல்ல முயற்சிக்க, ஒரு தவறான வாசனை வருகிறது என்பதை விபீஷணன் உணர்ந்து கொண்டு, அந்த இடம் நோக்கிப் போய், உருமாறிய அந்த அரக்கர்களை சட்டென்று தாவி பிடித்தார். வானர வீரர்கள் பயந்தார்கள். அடித்து நொறுக்கினார்கள். விபீஷணன் தடுத்து ராமரிடம் கொண்டு போனார்.

ravi said…
“அட, ஒற்றர்களா, நீங்களாகவே இந்த வேலைகளை செய்வீர்களா? அரசருக்கு இன்னும் தெரிவிக்கவில்லையா? நிச்சயம் தெரிவிக்க வேண்டும். அது ஒற்றர்களுடைய கடமை. நீங்கள் செய்த வேலை சரி. உருமாறி வந்ததும் சரி. தவறேதும் இல்லை. என்னுடைய சைன்னியங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், அதுதானே? என்னுடைய மகத்தான தளபதிகளை நான் அறிமுகப்படுத்துகிறன்” என்ற ராமர், அங்கதனையும், நீலனையும், கரணையும், ஜாம்பவானையும் அறிமுகப்படுத்தினார். ஹனுமாரை சுட்டிக் காட்டினார். தன் இளவளையும் தன்னையும் அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர்கள் பயந்து நடுங்கினார்கள். வெட்கப்பட்டார்கள்.

ravi said…
எந்த பயமும் கொள்ள வேண்டாம். நல்ல உயரத்திற்கு வந்து வானர சேனையைப் பாருங்கள்” என்று உயரமான இடத்திற்கு அனுப்பி, அங்கிருந்து வானர சேனையைப் பார்க்கச் சொன்னார். வானர சேனையை முழுவதும் பார்த்து விட்டு அவர்கள் ராமருக்கு அருகே வந்தார்கள். “இப்பொழுது நீங்கள் போகலாம். உங்களுக்கு விடுதலை கொடுத்து விட்டேன். எந்த பயமும் இல்லை. யாரும் தாக்க மாட்டார்கள். இவர்கள் தாக்கியதற்கும் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு வேகத்தில் நடந்து விட்டது. நீங்கள் போய் உங்களுடைய அரசனிடம் இந்த சைன்யம் பற்றிச் சொல்லுங்கள்” என்று சொல்லிய ராமரைப் பார்த்து அவர்கள் வியந்தார்கள்.

ravi said…
மெல்ல வானரங்களூடே அரக்கர்கள் நகர, ஒரு வானரம் வேண்டுமென்றே பெரிதாய் பயமுறுத்த, அவர்கள் துள்ளி எகிறி தரையில் விழுந்து அலறினார்கள். மற்ற வானரங்கள் தூக்கி நிறுத்தி வாய்விட்டு சிரித்தன. ‘இத்தனை பயமா?’ என்று கேட்டன. தொலைவிலிருந்து இதை பார்த்த ராமரும் மெல்லியதாய் சிரித்தார். கோபமாக இருக்கின்ற வானர வீரர்களைப் பார்த்து சந்தோஷப்பட்டார்.

ravi said…
அந்த அரக்கர்கள் வெகுவேகமாக ரகசிய வழியின் மூலம் இலங்கைக்குள் ஓடினார்கள். சைன்யங்கள் அந்த காடுகளையும், தோட்டங்களையும் பாழ்படுத்த ஆரம்பித்தன. காடுகளை அழித்து பாதைகளை உண்டாக்கின. இலங்கைக்குள் போவதற்கு நாலாபக்கமும் பாதைகள் போடப்பட்டன. அவற்றில் சைன்யம் மிகப் பெரிய முழக்கத்தோடு உள்ளே நுழைந்தது. ஒற்றர் மூலமும், மற்றவர் மூலமும் அந்த ராட்சஸ மன்னன் ராவணன், ராமரின் வருகையை உணர்ந்து கொண்டான். தன்னுடைய சைன்யத்தை திரட்டினான்.

ravi said…
ஆயுதங்களை தயார் செய்யச் சொன்னான். கோட்டைக்கு அருகே வானர வீரர்கள் நெருங்கினார்கள். கோட்டைக்கு அப்பால் பெரிய அகழி இருந்தது. அதில் சுறா மீன்களும், முதலைகளும் இருந்தன. இரும்புக் கம்பிகள் நடப்பட்டிருந்தன. கோட்டையிலிருந்து எறிகுண்டுகளும், கவண் கற்களும், பாறைகளும் எறியப்பட தயாராக இருந்தன. எகிறி குதித்து கோட்டையினுடைய உயரம், அந்தப் பக்கம் இருக்கின்ற விஷயங்கள் இவற்றையெல்லாம் வானர வீரர்கள் கண்டுகொண்டார்கள். தங்களுக்குள் பரிமாறிக் கொண்டார்கள்.

ravi said…
வானர வீரர்களின் துடிப்பு ராமருக்கு சந்தோஷத்தை கொடுத்தது. போர் தொடுக்கும் யாரையேனும் தூதாக அனுப்ப ராமர் தீர்மானித்தார். வானரப் படையின் தலைவனான அங்கதனை அழைத்து ‘தைரியமாகப் போய் ராவணனை சந்தித்து விட்டு வா’ என்று சொன்னார். கோட்டை வழியினூடே செல்லாமல் மாளிகை சுவர் மீது ஏறி மறுபக்கம் குதித்து, ‘உங்கள் அரசனை பார்க்க வேண்டும்’ என்ற கோஷத்தோடு அங்கதன் இலங்கைக்குள் நுழைந்தான். அவனை கருத்த மேனியுள்ள ராட்சஸர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.

ravi said…
மேகங்களுக்கு நடுவே நடக்கின்ற சூரியனைப் போல அங்கதன் காட்சியளித்தான். அமைச்சர்களுக்கு நடுவே அரியாசனத்தில் அட்டகாசமாய் அமர்ந்திருந்த ராவணேஸ்வரனைப் பார்த்து கர்ஜிக்கும் குரலில் ‘புலஸ்தியா’ என்று அங்கதன் அவனை விளித்தான். ராவணன் தன்னை ஈஸ்வரன் என்று சொல்லிக் கொள்வதில் விருப்பமுள்ளவன். அங்கதன் சொல்ல விரும்பவில்லை. அவனுடைய இயற்பெயரை அழைத்தான்.

‘‘
ravi said…
கோசல நாட்டு மன்னர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தூதுவனாக நான் இங்கு வந்திருக்கிறேன். அவர் உனக்கு ஒரு எச்சரிக்கை விடுவித்திருக்கிறார். அவருடைய மனைவியை அபகரித்து இருக்கிறாய். அடாது செய்திருக்கிறாய்.
ravi said…
சிறை வைத்திருக்கிறாய். அவர் இல்லாதபோது போர் செய்யாது, ஒரு கோழையைப் போல ஒளிந்திருந்து கவர்ந்து போயிருக்கிறாய். உன்னுடைய இழிவான செயல் அரச குலத்திற்கே இழிவு. அது மட்டுமல்லாமல் வனவாசிகளான ரிஷிகளை, அந்தணர்களை கொன்றிருக்கிறாய். பல பெண்களை பலவந்தமாக கவர்ந்து வந்திருக்கிறாய். தேவர்களோடு சண்டையிட்டிருக்கிறாய். பல்வேறு உயிரினங்களுக்கும் துன்பம் இழைத்திருக்கிறாய்.

ravi said…
அவர்கள் அழுது தொழுதும், மறுத்து கொன்றிருக்கிறாய். உன்னைப் போல உன் சேனைகளும் அட்டகாசம் செய்திருக்கின்றன. என்னை மனிதன் என்று நினைத்துக் கொண்டு கொக்கரிக்காதே. என்னுடைய வில்லின் வலிமை மிகப் பெரியது. புலஸ்தியா, உன்னை உன் கூட்டத்தோடு அடித்து ஜெயிக்க என்னால் முடியும். ஒரு அரக்கர்கூட உலகத்தில் இல்லாது, சகல ராட்சஸர்களும் அழியும்படியான ஒரு யுத்தத்தை என்னால் செய்ய முடியும். மன்னிப்பு கேட்டு சீதையை விடுவித்து, செய்த குற்றத்திற்கு பரிகாரம் தேடு. இல்லை, ஆண் மகனாக யுத்தத்திற்கு வா. மறுபடியும் ஓடி ஒளியாதே. தந்திரங்கள் செய்யாதே என்று அவர் சொல்லச் சொன்னார்’’ என உரத்தக் குரலில் பேச, ராவணன் பல் கடித்தான். ஓங்கி காலால் தரையை மிதித்தான். ‘அடேய்...’ என்று கூவினான்.

ravi said…
தலைவனுடைய கோபத்தை உணர்ந்து கொண்ட ராட்சஸர்கள் அங்கதன் மீது பாய்ந்தார்கள். அங்கதன் தன் இடத்திலிருந்து எகிறி அவர்களுக்கு போக்கு காட்டினான். தன்னை பிடித்தவர்களை அடித்து வீழ்த்தினான். தொடர்ந்து வந்த ராட்சஸர்களை கடுமையாக அடித்து துன்புறுத்தினான். ஒரு மாளிகையின் உச்சிக்குப் போய், அங்கிருந்து கோட்டைக்குத் தாவி பிறகு வெளியே வந்து கோசலேந்திரரான ஸ்ரீராமச்சந்திரரை வணங்கி நடந்த விஷயங்களைச் சொன்னான்.

ravi said…
அங்கதனுடைய வீரம் ராமருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. மனமுவந்து பாராட்டினார். தன்னுடைய மன்னர் செயற்கரிய செய்கை செய்து, ராமச்சந்திர மூர்த்தியால் பாராட்டப்படுகிறார் என்பது தெரிந்து வானர வீரர்கள் உத்வேகம் கொண்டார்கள். உற்சாகம் கொண்டார்கள். மன்னனால் முடிந்தபோது நம்மால் முடியாதா என்று நெஞ்சு தட்டிக் கொண்டார்கள். ‘கொல்லுவோம், அரக்கனை கொல்லுவோம்’ என்று வீர வசனம் எழுப்பினார்கள். இதன் பொருட்டுதான் ராமர் அங்கதனை தேர்ந்தெடுத்து அனுப்பினார். அங்கதனின் தூதால், சாமர்த்தியத்தால் அந்தப் படை உக்கரமாகியது. போருக்கு பரபரத்தது.

ravi said…
பல்லாயிரக் கோடிக்கணக்கான வானர வீரர்களும், தன்னுடைய வில்லின் துணையோடும் ராமச்சந்திர மூர்த்தி இலங்கையினுடைய கோட்டையின் மீது படையெடுத்தார். கோட்டை சுவரை இடித்து மண்ணோடு மண்ணாக்கினார். கோட்டையிலுள்ள அலங்கார வளைவுகளை வானர வீரர்கள் தகர்த்து எறிந்தார்கள். அபாய மணிகளை பிடுங்கி அகழியில் போட்டார்கள். கொடிகளை உடைத்து ஊருக்குள் வீசினார்கள். பாறைகளை எறியும், குண்டுகளை பொழியும் கவண் கல்லை உடைத்து அகழியில் போட்டார்கள். தங்கள் மீது ஈட்டியும், கத்தியும் வீசியவர்களை, சட்டென்று தரையில் இறங்கி கம்புகளால் ஆண் பெண் பாராது சகலரையும் அடித்து துவைத்தார்கள்.

ravi said…
ஓட ஓட விரட்டினார்கள். மறுபக்கம் இருந்தபடியே சரமாரியாக அம்புகளை ராமர் விட, அவை அங்குள்ள வீரர்களை தாக்கின. அங்கதனும், நீலனும், மற்றவர்களும் எந்த இடத்திற்கு அம்பு போக வேண்டும் என்று சைகை செய்ய, அந்த இடத்திற்கு ராமரும், லட்சுமணனும் இடையறாது அம்பு மாரி பொழிந்தார்கள். எங்கிருந்து அம்பு வருகிறது என்றுத் தெரியாமல் பல அரக்கர்கள் குத்துப்பட்டு இறந்தார்கள். ‘சரியான அழிவு’ என்று அங்கதன் கொக்கரித்த பிறகு அதில் சந்தோஷமடைந்த ராமர் பின்னடைந்தார்.

ravi said…
வானர வீரர்கள் அழிக்காத ஒரு தோப்புக்குள் வந்து தங்கினார். மாலைநேரம். வானர வீரர்கள் மதில் சுவரிலிருந்து இறங்கி பின்னடைந்தார்கள். ஆனால், எப்பொழுது வேண்டுமானாலும் யுத்தம் நடக்கும் என்று தயாராக இருந்தார்கள். தோப்புக்குள் வந்ததும் மாலை நேரத்து பேய், பிசாசங்கள் வேகமாக வந்து கற்களையும், மண்ணையும் வானர வீரர்கள் மீது வாரி இறைத்தன. கண்ணுக்குத் தெரியாதபடி இருந்து மேலே விழுந்து தொந்தரவு கொடுத்தன. வானர வீரர்கள் அலை மோதினார்கள்.

ravi said…
விபீஷ்ணனுக்கு அந்த அந்தர்ஜால வித்தை தெரியும். அதற்கு பதிலடி கொடுக்க, அந்த பூதங்களும், பிசாசங்களும் வானர வீரர்கள் கண்ணுக்குத் தெரிந்தன. வானர வீரர்கள் அந்த மங்கிய ஒளியில் அவர்களை கடுமையாகத் தாக்கினார்கள். அவர்கள் பிய்த்து எறியப்பட்டார்கள். மறுநாள் ராவணன் மிகுந்த கோபத்தோடு யுத்த சாஸ்திரத்தின் முறையை அறிந்து சரியான வியூகம் அமைத்து மாளிகையிலிருந்து வெளிப்பட்டு, ராமச்சந்திரமூர்த்தி தங்கியிருந்த தோப்புக்குள் வர, அங்கதன் துணையோடு ராமர் வேறுவிதமான வியூகம் அமைத்து எதிரியை எதிர்கொண்டார். ராவணனை நோக்கி அம்புகள் செலுத்தினார்.

ravi said…
அவன் வேகத்தை தடுத்து நிறுத்தினார். லட்சுமணன் இந்திரஜித்தோடு போர் புரிந்தான். சுக்ரீவன் விருபாட்சனோடு யுத்தம் செய்தான். தாருணன் என்னும் வானரம் விகர்ணன் என்ற அரக்கனோடு போர் செய்தான். நளன் என்ற வாரணன் கும்பன் என்பவனை எதிர்த்தான். போர், விடியும் நேரத்தில் கடுமையாக நடந்தது. ராமரை நோக்கி சூலங்களும், கத்திகளும், சக்கரங்களும் வேகமாக வந்தன. இடையறாது அம்புகளால் அவற்றைத் தடுத்துக் கொண்டிருந்தார். ராவணனை நோக்கி இரும்பு அம்புகளை செலுத்தினார்.

ravi said…
அவை அவனைத் தாக்கின. விபீஷணன் தன்னை தாக்க வந்த பிரகஸ்தனை தடுத்து நிறுத்தி, தன் சக்தி ஆயுதத்தால் அவன் தலையில் ஓங்கி அடிக்க, அவன் தலை உடம்பிலிருந்து துண்டாகி விழ, அவன் இறந்து தரையில் சாய்ந்தான். அவன் இறந்ததைப் பார்த்து துர்ராட்சஸன் என்ற அரக்கன், வானர வீரர்களை நோக்கி வெறி கொண்டு ஓடிவந்தான். அவன் வேகத்தைப் பார்த்து வானர வீரர்கள் பதுங்கிக் கொண்டார்கள். பின்னடைந்தார்கள்.

ravi said…
அந்த ராட்சஸனைத் தடுப்பதற்கு ஹனுமார் முன் வந்தார். தடுத்து தரையில் தள்ளினார். எட்டி உதைத்தார். அவர் வருவதைக் கண்டு மற்ற வானர வீரர்கள் வேகமாக தாக்கத் துவங்கினார்கள். பெரிய மரக்கிளையை உடைத்து, துர்ராட்சஸனின் தேரை உடைத்து குதிரையை நாசம் செய்தார். அவன் மீது அடிமரத்தால் ஓங்கி அடித்து நசுக்கினார். துர்ராட்சஸன் இறந்தான்.

ravi said…
வானரங்களும், கரடிகளும் உற்சாகமானார்கள். இன்னும் வேகத்தோடு அரக்கர்களை கொல்லலானார்கள். அடிதாங்காமல் இலங்கைக்குள் ஓடிப்போய் ராவணனிடம் முறையிட்டார்கள். அயர்ந்து தூங்கும் கும்பகர்ணனை எழுப்பும்படி ராவணன் கட்டளையிட்டான். மிகப்பெரிய பேரிகைகளும், முரசுகளும், எக்காளங்களும் வைத்து உறங்குகின்ற கும்பகர்ணனை அவர்கள் தட்டி எழுப்பினார்கள். அரைதூக்கத்தில், மயக்கத்தில் இருந்த கும்பகர்ணனைப் பார்த்து, ‘‘என் அருமைத் தம்பியே, உன்னைப் போல வீரன் இந்த உலகத்தில் எவரும் இல்லை.

ravi said…
போ. நம்மை துன்புறுத்துகின்ற ராமனையும், லட்சுமணனையும் தாக்கு. அடித்து துவம்சம் செய். வானர வீரர்களை இங்கிருந்து பலத்த காயங்களோடு வெளியேற்று. இது என் கட்டளை. நீ முன்னே போக, என் தம்பி வஜ்ரனும், பிராகாதியும் பெரும் சேனையோடு உன்னைத் தொடர்வார்கள். வானர வீரர்களை அடித்து நொறுக்குவார்கள்,’’ என்று உற்சாகமூட்ட, கும்பகர்ணன் சிரிப்போடு எல்லாம் தெரிந்த ஒரு முகபாவத்தோடு யுத்த களத்தில் பிரவேசித்தான்.

ravi said…
எங்கே வானர வீரர்கள் என்று ஆவலோடு தேடினான். அவர்கள் கும்பகர்ணனை சூழ்ந்து கொண்டார்கள். எகிறி எகிறி தாக்கத் துவங்கினார்கள். பிரமாண்டமான உருவம் கொண்ட கும்பகர்ணன், தன் புறங்கைகளால் அவர்களை ஒட்டுமொத்தமாக விலக்கினான். அவர்கள், அந்த வேகம் தாங்காமல் சுருண்டு விழுந்தார்கள். கடுமையாக அடிபட்டார்கள். வானர வீரர்களை கொத்தாகப் பிடித்து தரையில் அடித்தும், இன்னொரு கொத்தாக பிடித்து வாயில் கடித்து துப்பியும் மிகுந்த இம்சை கொடுத்தான். இம்மாதிரியான யுத்தத்தை பார்த்திராத வானர வீரர்கள் பயந்து பின்வாங்கினார்கள். உயரே தூக்கி தரையில் அடிபடுகிறபோது ஏற்பட்ட வலி தாங்காமல் அலறினார்கள்.

ravi said…
வானர வீரர்களின் அலறலை பார்த்து சுக்ரீவன் ஓடினான். பெரிய ஆல மரத்தை பிய்த்து எடுத்து கும்பகர்ணன் தலையில் அடித்தான். ஆலமரம் துண்டாகியது. கும்பகர்ணனுக்கு எதுவும் நேரவில்லை. சுக்ரீவனை அள்ளி எடுத்துக் கொண்டான். உச்சியில் தூக்கினான். ஓங்கி தரையில் போடுவதற்காக பிடித்துக் கொண்டான். சுக்ரீவனை கும்பகர்ணன் பிடித்துக் கொண்டதைப் பார்த்து லட்சுமணர் அங்கே ஓடினார். வில் வளைத்து தூக்கிய கைகளில் இடையறாது கூரிய அம்புகளை செலுத்தினார்.

ravi said…
புறங்கையில் அம்புகள் நுழைந்ததால் கும்பகர்ணன் சுக்ரீவனை நழுவ விட்டான். தனது கையால் பெரிய பாறையை எடுத்துக் கொண்டு லட்சுமணர் மீது போடுவதற்காக முயற்சித்தான். லட்சுமணர் அந்தப் பாறையையும் தன்னுடைய அம்புகளால் துளைத்துத் தூள்தூளாக்கினார். அந்தப் பக்கத்து கையையும் அம்புகளால் துளைத்தார். இரண்டு கைகளும் செயலற்று கும்பகர்ணன் வெறுமே நின்றான். அவனுக்கு மேலும் நான்கு கைகள் உண்டாயின. அந்தக் கைகளையும் லட்சுமணர் தகர்க்கத் துவங்கினார்.

ravi said…
அவனைக் கொல்லக் கருதி, பிரம்மாஸ்திரத்தை மனதில் நினைத்து கையில் வரவழைத்து, நெற்றியில் வைத்து கும்பகர்ணன் நெஞ்சு நோக்கி பிரம்மாஸ்திரத்தை செலுத்தினார். பெரும் ஓசையோடு வந்த அந்த பிரம்மாஸ்திரம் கும்பகர்ணன் நெஞ்சை தாக்கி இரண்டாக கிழித்தது. கும்பகர்ணன் மிகப் பெரிய சத்தத்தோடு தரையில் விழுந்தான்.

ravi said…
கும்பகர்ணனை தொடர்ந்து வந்த பிரம்மாதி, நீலனால் அழிக்கப்பட்டான். வஜ்ரவேகனை மலைச் சிகரத்தால் எடுத்து அடித்து நசுக்கி கொன்றான். அரக்கர்கள் ராமருடைய சைன்யத்தால் கொல்லப்பட்டார்கள். கும்பகர்ணன் இறந்ததைக் கேட்டு ராவணன் தன் மகனை அழைத்தான். இறுக அணைத்துக் கொண்டான். ‘பகைவரை அழிப்பவனே, ராம லட்சுமணரை வதம் செய். சுக்ரீவனை கொன்று போடு. நீ இந்திரனை வென்று புகழ் பெற்றவன். இவர்கள் உனக்கு இணையேயில்லை. போ.

ravi said…
வெறியோடு போர் செய்’ என்று உசுப்பி அனுப்பினான். இந்திரஜித் மாயையில் வல்லவன். அவன் தேரில் ஏறி லட்சுமணனை நோக்கி உள்ளே நுழைந்தான். லட்சுமணர் அவன் தேரை உடைத்தார்.
ravi said…
பாணங்களால் அவனை அடித்தார். இந்திரஜித் மாயமானான். மாயமான முறையில் நின்று வேகமாக அவர்கள் மீது பாணம் செலுத்தினான். எங்கிருந்து பாணம் எப்படி வருகிறது, எப்படி எதிர்ப்பது என்று தெரியாமல் திகைத்துப் போன ராம, லட்சுமணர் மயங்கி விழுந்தார்கள்.

ravi said…
அவர்களை மேலும் பாணத்தால் கட்டினான். சுஷேசணன், மைந்தன், த்வீதன், ஹனுமான், குமுதன், அங்கதன், நீலன், தாரன் மற்றும் நளனோடு சுக்ரீவன் அவ்விருவரையும் பத்திரமாக பாதுகாத்தான். விபீஷணன் அங்கு ஓடி வந்து மந்திரத்தின் மூலம் அவ்விருவரையும் நினைவுக்கு கொண்டு வந்தான். உடம்பு முழுவதும் அம்புகளால் துளைக்கப்பட்ட ராம, லட்சுமணர் வேதனைப்பட்டார்கள். சுக்ரீவன் விஷயா என்ற மந்திரத்தின் மூலம் அவர்கள் அங்கங்களில் இருந்த அம்புகளை எடுத்து ஒரு நொடியில் குணப்படுத்தி விட்டான். விஷம் நீங்க அவர்கள் துள்ளி எழுந்தார்கள்.

ravi said…
அப்பொழுது குபேரன் கட்டளையால், ஒரு தேவன் ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொண்டு ராமரிடம் வந்தான். ‘குபேரன் இந்த நீரை எடுத்து உங்கள் கண்களை கழுவச் சொன்னார். உங்களைச் சுற்றி இருக்கின்ற மாயை நீங்க இந்த நீரை உபயோகப்படுத்தினால் மாயையால் மறைந்தவர்களை உங்களால் பார்க்க முடியும் என்று சொல்லி இதை கொடுத்து அனுப்பினார்’ என்று சொல்ல, ராமர் அந்த மந்திர நீரை எடுத்துக் கொண்டு முகம் கழுவி, லட்சுமணன், சுக்ரீவன், நீலன், ஹனுமான் எல்லோருக்கும் கொடுக்க, வானர வீரர்களும் கழுவிக் கொண்டார்கள். எல்லோருக்கும் அந்தரத்திலிருந்து போர் புரிகின்ற மாயையான வீரர்கள் கண்ணுக்குத் தெரிந்தார்கள்.

ravi said…
வெற்றி பெற்ற இந்திரஜித் ராவணனிடம் போய் அலட்டிக் கொண்டான். மறுபடியும் போருக்கு வந்தான். துவம்சம் செய்வேன் என்று கொக்கரித்தான். லட்சுமணர் அவனை எதிர்கொண்டார். வேகமாக அவனை நோக்கி பாணங்களை செலுத்தினார். லட்சுமணனுக்கு கட்டுங்கடங்காத கோபம் இருந்தது. பெருத்த அகங்காரம் இந்திரஜித்திடம் இருந்தது. அவர்கள் இருவரும் மிக உக்கிரத்தோடு போரிட்டார்கள். மூன்று பாணங்களால் இந்திரஜித்தின் நெஞ்சை நோக்கி செலுத்தி லட்சுமணர் அவன் உயிரை எடுத்தார்.

ravi said…
அவன் தலையை உடம்பிலிருந்து துண்டித்தார். இந்திரஜித்தினுடைய சாரதியையும் லட்சுமணர் ஒரு பாணத்தால் கொல்ல, குதிரைகள் திரும்பி அரண்மனைக்கு இந்திரஜித் இல்லாமல் ஓடின. மகன் இல்லாது தேர் வருவதைப் பார்த்து ராவணன் பயத்தால் நடுங்கினான். பித்துப் பிடித்தவன்போல் ஆனான். எல்லாவற்றுக்கும் காரணம் அந்த சீதைதானே? அவளை வெட்டிக் கொன்று போடுகிறேன். அதுதான் ராமனுக்கு நான் தரும் தண்டனை என்று வாளை உருவிக் கொண்டு சீதையை நோக்கி ஓடினான்.

ravi said…
அப்பொழுது அபிங்ஞன் என்கிற மந்திரி ராவணனைத் தடுத்தான். ‘‘பல எதிரிகளைக் கொன்ற இந்த வாள் ஒரு அபலையை கொல்வதா? நீங்கள் போரிட வேண்டியது ராமரை நோக்கியே தவிர, கொல்ல வேண்டியது சீதையை அல்ல. உங்களிடம் கைதியாக இருப்பவரை வெட்டிப் போடுவது எந்த விதத்திலும் வீரமல்ல. உங்களுக்கு கொல்ல வேண்டுமென்றால் இவள் கணவனைக் கொல்லுங்கள். இவள் கணவனைக் கொன்றால் இவள் தானாக இறந்து விடுவாள். இந்திரனை புறமுதுகு காட்டி ஓடச் செய்த நீங்கள் இப்படி வாளோடு ஒரு பெண்ணை நோக்கிப் போவது பரிதாபமாக இருக்கிறது.’’ என்று அவன் வாளை பிடுங்கி உறையில் சொருகினான்.

ravi said…
மகன் இறந்த துக்கத்தில் தன் தேரில் ஏறி மிக கம்பீரமாக ராவணன் கோட்டையை விட்டு வெளியே வந்தான். அவனைச் சுற்றி பல்வேறு விதமான ராட்சஸர்கள் துணையாக வந்தார்கள். அவர்கள் கோட்டையை விட்டு வெளியே வந்ததும் வானர வீரர்கள் சூழ்ந்துகொண்டு கற்களாலும், கம்பு கட்டைகளாலும் அடித்து அந்த கூட்டத்தை ஓடச் செய்தார்கள். இடையறாது பாறைகளை எறிந்தார்கள். அப்பொழுது ராவணன் ஒரு மாயா விவகாரம் செய்தான். ராம, லட்சுமணரைப் போலவே ஆயிரக்கணக்கானவர்களை உண்டாக்கி அவர்களை வானரங்களை நோக்கி பாணங்களை விடச்செய்தான். வானர வீரர்கள் திகைத்தார்கள். ஆனால், லட்சுமணர் திகைக்கவில்லை. இது அரக்கனுடைய கூத்து என்பதை புரிந்து கொண்டு கடுமையாக அந்த உருவங்களை தாக்கினார்.

ravi said…
அப்பொழுது இந்திரனுடைய சாரதியான மாதலி பச்சை வர்ணமுள்ள குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி ராமனுக்கு அருகே வந்தான். இந்தத் தேரிலே ஏறி ராவணனை கொல்லுங்கள். இது இந்திரனுடைய தேர் என்று அழைக்க, ராமர் முதலில் இது அரக்கனுடைய சூட்சியோ என்று சந்தேகித்து பின் விபீஷணனிடம் விசாரித்து இது உண்மை என்றுத் தெரிந்து அந்தத் தேரில் ஏறிக் கொண்டார்.

ravi said…
ராமர் மீது ராவணன் பாணங்களைச் செலுத்த தன்னுடைய கூரிய அம்புகளால் ராமர் அதை துண்டு துண்டாக்கினார். தங்கத்தால் ஆன ஒரு பாணத்தை எடுத்து அதை அட்சரம் உச்சரித்து ராவணனுடைய நெஞ்சு நோக்கி அனுப்பினார். அந்த அம்பு ராவணனுடைய தேரை எரித்தது. குதிரையை எரித்தது. தேர் பாகனை கொன்றது.

ravi said…
ராவணனுடைய நெஞ்சு அறுத்து கீழே சாய்த்தது. ராமருடைய பிரம்மாஸ்திரத்தால் ராவணனுடைய எலும்புகளும், நரம்புகளும், தோலும் பஸ்மமாகி விட்டன. அதன் சாம்பல்கூட எஞ்சவில்லை. ராவணன் இறந்த அந்த கணமே விபீஷ்ணனுக்கு ராமர் பட்டம் கட்டினார். கோட்டைக்குள் போன விபீஷ்ணன் முக்கிய மந்திரியான அபிங்ஞனோடு சீதையை நோக்கி நடந்துபோய் கைகூப்பி அவளை வெளியே அழைத்து வந்தான். அழுக்கு படிந்த உடையும், கலைந்த தலையும், அழுத கண்களும், துவண்ட உடம்புமாக இருந்த சீதை பல்லக்கில் ஏறி
ஸ்ரீராமரை வந்து அடைந்தாள்.

ravi said…
இனிய என் மனைவியே, உன்னை ராவணனுடைய சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்து விட்டேன். உன்னை கடத்திய ராவணனை கொன்று விட்டேன். கடைசிவரை, முதுமைவரை நீ அவனுடைய சிறையில் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தினாலேயே இந்த அரக்கனை நான் வதம் புரிந்தேன். ஆனால், வேறொரு புருஷனுடைய கையில் அகப்பட்டு, ஒரு நாழிகை நேரத்திற்கு மேலே இருந்த பெண்ணை மறுபடியும் ஏற்றுக் கொள்வது என்பது எங்ஙனம்? நீ தூய்மை உள்ளவளா, தூய்மையற்றவளா என்பது எனக்கு முக்கியமல்ல. ஆனால், நான் உன்னை ஏற்க முடியாது. நாய் நக்கிய அவிஸை யாரும் ஏற்பதில்லை’ என்று சொல்ல, சீதை கவலையடைந்தாள். துவண்டு சரிந்தாள்.

(தொடரும்)
ravi said…
கபாலியின் சொத்து கபாலிக்கே!

மயிலை லஸ் சர்ச் ரோட்டில் உள்ள Central Bank of India மயிலை கபாலீஸ்வரர்க்கு சொந்தமான நிலத்தில் இயங்கி வருவதாக கேள்வி பட்ட ஜெபமணி மோகன்ராஜ், வங்கியிடம் வாடகை யாருக்கு செலுத்துகிறீர்கள் என்று கேட்க, வங்கி ஒரு தனியார் பெயரை குறிப்பிட்டது. திரு மோகன் ராஜ் அறநிலையத்துறை ஆணையரிடம் முறையிட, விஷயம் ஆணையர், துணை ஆணையர், செயல்அலுவலர் என்று முடிவில்லாமல் சுற்றி கொண்டிருந்தது.
ravi said…
ஆகவே சென்னை உயர் நீதிமன்றத்தில் W.P. No. 8185 of 2019 என்ற பொதுநல வழக்கை தொடுத்தார்.
ravi said…
நீதிமன்றத்தில் அறநிலையத்துறை வேறு வழியின்றி அந்த சொத்தை பற்றிய உண்மைகளை கக்கியது.1898 ஆம் ஆண்டுசௌந்தரராஜ அய்யங்கார் என்பவர் 3333 லஸ் சர்ச் ரோட்டில் உள்ள 24 கிரௌட் கபாலீஸ்வரர் சொத்தை 100 ருபாய்க்கு 99 வருட‌ குத்தகை எடுத்தார். அந்த நிலத்தில் 4321 சதுர அடி நிலத்தை தனியார்க்கு உள்குத்தகை விட்டார். உள்குத்தகைகாரர் அங்கு கட்டிடம் கட்டி Central Bank of India மற்றும் Rex Fashionனுக்கு வாடகை விட்டு சுகமாக வாழ்ந்து வந்தார்.2012 ஆம் ஆண்டுஅறநிலையத்துறை ஒரு வழியாக விழித்து கொண்டு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க தொடங்கியது.
ravi said…
ஆக்கிரமிப்பாளர்கள் கோர்ட் கேஸ் என்று இழுக்க 2017 ஆம் ஆண்டு அறநிலையத்துறை ஆணையர் வாடகை காரர்களிடம் நேரடியாக நியாய வாடகை வசூலிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். ஆனால் கோவில் நிர்வாகம் மறுபடியும் தூங்க தொடங்கியது வாடகை யின் ஒரு பகுதிஅறநிலையத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சமாக சென்றது என்று கொள்க.திரு மோகன் ராஜ் தொடுத்த வழக்கில் இரண்டு மாதங்களுக்குள் அறநிலையத்துறை நியாய வாடகை சம்பந்தமாக இறுதி முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ravi said…
ஒரு வழியாக இப்பொழுது அறநிலையத்துறை மாதம் ருபாய் 2.5 லட்சம் வாடகைதார்களிடம் வசூலிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
தகவல் உரிமை அறியும் சட்டம் மற்றும் நீதிமன்றம் துணை கொண்டு எப்படி அறநிலையத்துறையை தன் வேலையை செய்ய வைக்க முடியும் என்பது திரு மோகன் ராஜ் அணுகுமுறை ஒரு சிறந்த உதாரணம்.
ravi said…
தியாகி நெல்லை ஜெபமணியின் மகனான திரு மோகன் ராஜ் ‌கோவில் சொத்து மீட்பு சம்பந்தமாக மேலும் பல நல்ல வெற்றிகளை பெற்றுள்ளார். அவையாவன-
1. மயிலாப்பூர் கிளப் கபாலீஸ்வரர் சொத்தை வைத்து கொண்டு வாடகை தராமல் டபாய்த்து கொண்டிருந்தது. திரு மோகன் ராஜ் எடுத்த முயற்சியால் சுமார் 15 கிரௌண்ட் நிலத்தை கோவிலுக்கு திருப்பி கொடுத்து விட்டது. அந்த நிலத்தில் கார் பார்க்கிங் மூலம் கோவிலுக்கு வருமானம் வருகிறது.
ravi said…
2. சுமார் ருபாய் 2000 கோடிக்கு மேற்பட்ட நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரம் கோவில் சொத்துக்கள் சட்டபுறப்பாக விற்கப்பட்டது. திரு மோகன் ராஜ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த சொத்துக்களை மீட்க அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டது. இப்பொழுது இது சம்பந்தமாக நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு நடந்து வருகிறது.
3. பல வருடங்களாக ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் வடபழனி வேங்கீஸ்வரர் கோவில் குளத்தை மீட்க திரு மோகன் ராஜ் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வு ஆக்கிரமிப்புகளை நீக்க உத்தரவிட்டது.
ravi said…
ஆக்கிரமிப்பாளர்கள் உச்ச நீதிமன்றம் சென்று தடையுத்தரவு வாங்க திரு மோகன் ராஜ் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்துள்ளார்.
4. விருகம்பாக்கம் சுந்திரவரதராஜ பெருமாள் கோவில் குளத்தை தூர்ந்து பட்டா போட்டு மசூதி கட்ட ஒரு முஸ்லிம் கும்பல் முயல நீதிமன்ற உத்திரவின் பேரில் கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டது. கலெக்டர் இரண்டு வருடங்களாக தூங்க, திரு மோகன் ராஜ் குளத்தை காணவில்லை என்று வழக்கு தொடுத்து கலெக்டர் விசாரணையில் இணைந்து கொண்டார். பிறகு விசாரணை முடிக்காத கலெக்டர் மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்ககை அவர் தொடுக்க கலெக்டர் அந்த சொத்து முஸ்லிம் பார்டிக்கு சொந்தமில்லை என்று தீர்ப்பு வழங்கினார்.
ravi said…
இப்பொழுது கோவில் குளத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.இன்று இந்து கோவில் சொத்துக்களை மீட்க இந்துக்களிடையே ‌ஆர்வம் பெருகி வருகிறது. ஆனால் மக்களுக்கு அதை எப்படி செய்வது என்று சரியாக தெரியவில்லை.
திரு மோகன் ராஜ் போன்றவர்களை முன் உதாரணமாக கொண்டு கோவில் சொத்துக்களை மீட்க மேலும் பல இந்துக்கள் முன்வர வேண்டும்.

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை