அபிராமி அந்தாதி - பாடல் 46 - யானுன்னை வாழ்த்துவனே !
பச்சைப்புடவைக்காரி -488 அபிராமி அந்தாதி பாடல் 46 மிகவும் அருமையான பாடல்.. இப்படி அடிக்கடி சொல்லிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை . எல்லா பாடல்களும் முத்துக்கள் தான் .. ஆதியும் அந்தமும் இல்லாத இறைவியை அந்தாதி எனும் அழகிய தமிழில் அடக்கி விட்டார் நம் அபிராமி பட்டர் . பாடலுக்குள் போவதற்கு முன் ஒரு சந்தேகம் வந்தது .. சரபோஜி மன்னர் என்ன இன்றைய திதி என்று சுப்பரமணியனிடம் கேட்கும் போது தன் நிலை மறந்திருந்த அவர் அன்னையின் வட்ட ஒளியையும் ஒலியையும் ஒன்று சேர்த்து இன்று பௌர்ணமி என்றார் ... அன்னையின் முகம் என்றுமே பௌர்ணமி தான் .. அப்படியிருக்க சரபோஜி மன்னர் வேறு எந்த நாளிலும் கேட்டிருந்தால் கூட பட்டர் இன்று பௌர்ணமி என்று தானே சொல்லியிருப்பார் ? இருக்க முடியாது என்று பதில் ஒன்று சத்தமாக வந்தது .. திரும்பினேன் .. அபிராமி பட்டரே நின்றிருந்தார் .. சிரித்துக்கொண்டே பதில் சொன்னார் ரவி .. அம்பாளை 16 திதி தேவதைகள் ஒருவர் பின் ஒருவர் தினமும் சென்னி குனிந்து பூஜை செ...