அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 71 ,72 & 73 பதிவு 60
அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 71 , 72,73 பதிவு 60👌👌👌 கேள்வி பதில் நேரம் பதிவு 60 🥇🥇🥇 கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது நான் . பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர் . கேள்வி 71 நான் : ஐயனே .... நமஸ்காரம் . இறைவி அபிராமி எங்கும் வியாபித்தவள் என்று சொல்லுகிறீர்கள் .இதை தாங்கள் என்னைப்போன்ற அறிவிலிகளுக்கு புரியும் மாதிரி சொல்ல முடியுமா ? பட்டர் .. தகுதி இல்லாமல் இருப்பது தான் தகுதி என்று சொன்னேன் ஒருமுறை ... நீ அறிவிலி என்று நீயே ஒப்புக்கொண்டாய் ... பரவாயில்லை சொல்கிறேன் ... 🙌🙌🙌 பட்டர் பிரகஸ்பதி எனப்படும் தேவகுருவை மூன்று இளைஞர்கள் தேடிவந்தனர். முனிசிரேஷ்டரே! உம் சீடராக எங்களை ஏற்க வேண்டும், என்றனர். ஆளுக்கொரு கிளியைக் கொட...