ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 18.. வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா பதிவு 25

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 25

 18 वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचनाவக்த்ரலக்ஷ்மீபரீவாஹ  சலந்மீநாப லோசநா --



அழகிய  தடாகத்தில் கண்ணைப் பறிக்கும் வண்ண மீன்கள் துறுதுறுவென்று அசையுமே  அது போன்ற  அழகிய  கயல் விழிகள் கொண்டவள் அம்பாள்.🐟🐟🐡🐡🐋🐋🐳🐳🐬🐬🐠🐠🐠

வக்த்ர= முகம் ; 

பரீவாஹ = நீர் நிலை, பாயும் நீர் நிலை 

லக்ஷ்மி பரீவாஹ

ஸ்ரீலக்ஷ்மிக்குரிய நீர் நிலை 

 சலன் = நகர்தல் 

மீனாப லோசன = மீனையொத்த விழிகள் (உவமை)

முகத் தடாகத்தில் விளையாடும் மீன்களென இரு விழிகள் கொண்டவள்.

ரூப அழகிற்க்காக மட்டுமின்றி, தன்னின்று தோன்றிய சிருஷ்டியை இமைவிலகாது கடைக் கண்ணால் காப்பாதால், விழிகள் அங்கும் இங்கும் அலைபாயும் மீன்களுக்கு உவமையாகிறது.👌👌👌👌👌👌👌👌👌👌



 *18* वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ  சலந்மீநாப லோசநா --  

மதுரையில் பொற் தாமரை குளத்தில் மீன்கள் வாழ்வதில்லை .. காரணம் தெரியுமா ? 

மீனாட்சி தன் கண்கள் எனும் தடாகத்தில் எல்லா மீன்களையும் பிடித்து ஓட விடுகிறாள் அவைகள் இங்கும் அங்கும் ஒட்டிக்கொண்டே யாருக்காவது எந்த கஷ்ட்டம் வந்தாலும் உடனுக்குடன் அம்பிகைக்கு தெரிவித்து அவளை ஓடி வரச் செய்கின்றன ..

மீனலோசனி .. விசாலாட்சி .. விரிந்த கண்களை உடையவள் ... காமாக்ஷி .. கண்களால் ஆட்சி செய்பவள் ..

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் மீனாட்சி எனும் திருநாமம் வருவதில்லை அதற்கு பதில் மீன லோசனா என்றே வருகின்றது 

                     🐟🐟🐡🐡🐠🐠🐬🐬🐳🐳🐋🐋🦚🦚🦚🌸🌸🌸


வக்த்ர லக்ஷ்மீ பரீவாஹ சலன் மீனாப லோசனா

அம்பாளின் திருமுகத்திலிருந்து மங்கலமான அழகு பிரவகிக்கிறது. 

அந்தப் பிரவாகத்தில் ஓடுகின்ற மீன்கள்தாம், அவளுடைய கண்களாக விளங்குகின்றன. 

அவள் மீனலோசனி. மீன்கள், குஞ்சுகளைப் பார்வையினாலேயே வளர்ப்பதாக ஐதிகம். அதன்படியே அம்பாளும், தன்னுடைய கருணாகடாக்ஷத்தால் பக்தக் குழந்தைகளை வளர்க்கிறாள். 

'சலன் மீனாப லோசனா' என்பதற்கு உள்ளார்ந்த அழகொன்று இருக்கிறது. 

அலைந்து கொண்டேயிருக்கிற கண்கள் எனலாம். 

மீன்கள், நீரில் அலைந்து கொண்டேயிருக்கும்; அதுபோல், அம்பாளின் கண்களும் எப்போதும் சலனப்பட்டுக் கொண்டே, அசைந்து கொண்டேயிருக்கின்றன. 

ஏன்

திருவரங்கத்துப் பெருமாளைப் பாடுகிற திருப்பாணாழ்வார், பெருமாளின் அற்புதமான கண்களையும் பாடினார். '

கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடிய பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே....' 

கறுப்பாகவும், பிரகாசமாகவும், பெரியனவாகவும், செவ்வரி பாய்ந்தனவாகவும் உள்ள அக்கண்கள், புடை பரந்தனவாம். 

அதாவது, அங்குமிங்கும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேயிருக்கும் கண்கள். பகவானுடைய கண்கள் ஏன் புடை பரக்க வேண்டும்? 

பகவான் என்ன செய்கிறார் - தன்னுடைய பக்தர்கள் எங்கே எங்கே என்று சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார். 


கல்யாண வீடென்று வைத்துக் கொள்வோம்; அம்மா என்ன செய்வாள்? தன்னுடைய குழந்தை பத்திரமாக சுழற்றிக் கொண்டேயிருப்பாளில்லையா? 

அதுபோல், ஜகன்மாதாவான அம்பாளும் தன்னுடைய குழந்தைகளைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறாள். மீனாக்ஷியாகவும் மீனலோசனியாகவும் இருப்பவள், தன்னுடைய கண்களாலேயே பக்தர்களைக் கடாக்ஷிக்கிறாள்.


லலிதா ஸஹஸ்ரநாமம் அம்பாளை வர்ணித்துக் கொண்டு வரும்பொழுது “வக்த்ர-லக்ஷ்மீ-பரீவாஹ-சலந்-மீநாபலோசநா” என்று சொல்கின்றது. 

வக்த்ர லக்ஷ்மீ” என்றால் அம்பாளுடைய முக காந்தி. 

அது ஒரு பெரிய பிரவாஹமாக (பரீவாஹம்) இருக்கின்றது. 

இப்படி முகதேஜஸ் பெருக்கெடுத்து ஓடுகின்றது என்றால் – நீர்ப்பெருக்கில் மீன் இருக்க வேண்டுமே இந்த காந்தி ஸமுத்ரத்தில் எங்கே மீன்? 

நீண்டு நீண்டு விளங்கும் அம்பாளுடைய நேத்ரம் இருக்கிறதே அதுதான் மீன்.  லோசனம் என்றால் கண். 

(‘லோகனம்’ என்றால் ‘பார்ப்பது’. பார்க்கப்படுவதால்தான் ‘லோகம்’ என்றே பேர்). 

மீன் மாதிரி வடிவத்தில் இருக்கிற லோசனம் – ‘மீநாபலோசனம்’. ‘மீநாக்ஷி’ என்று அப்பட்டமாகச் சொல்லாமல் ‘மீநாபலோசனா’ என சொல்லியிருக்கின்றது.



    செளந்தர்யலஹரி 48, 49,50,51,52,53,54, 55 &56

48     கண்களின் அழகு

நவக்கிரஹ தோஷ நிவிருத்தி

49    எட்டு விதமான கண்ணோட்டம்

ஸர்வ ஜயம், நிதி தர்சனம்

50      மூன்றாவது கண்

தூரதர்சனம், வைசூரி நோய் நிவாரணம்

51   தேவியின் பார்வையில் எட்டு ரஸங்கள்

ஸர்வஜன வச்யம்

52   மன்மத பாணங்களைப் போன்ற கண்கள்

காமஜயம், காது, கண்களின் ரோக நிவாரணம்

53   மும்மூர்த்திகளைச் சிருஷ்டிக்கும் முக்குணங்களைப் படைத்த கண்கள்

தேவி பிரத்யக்ஷம், ஸகல லோக வச்யம்

54   மூன்று புண்ணிய நதிகளைப் போன்ற கண் ரேகைகள்

ஸர்வ பாப நிவ்ருத்தி, உபஸ்தரோக நிவாரணம்

55   கண்கள் முடாமல் இருக்கும் காரணம்

ரக்ஷிக்கும் சக்தி; அண்டரோக நிவாரணம்

56   அழகில் மீன்களையும், நீலோத்பவத்தையும் வெல்லும் கண்கள்

பந்தவிமோசனம், நேத்ரதோஷ நிவாரணம்

57   எங்கும் சமமாகப் பிரகாசிக்கும் நிலவு போன்ற கடாக்ஷம்

ஸகல ஸௌபாக்கியம்

58   மன்மதபாணம் போன்ற கடைக்கண் பார்வை

காமஜயம், ஸகலரோக நிவிருத்தி


                             🐟🐟🐡🐡🐠🐠🐬🐬🐳🐳🐋🐋🦚🦚🦚🌸🌸🌸

                                               👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌


Comments

ravi said…
அல்பீய ஏவ நவமுத்பலமம்ப ஹீனா
மீனஸ்ய வா ஸரணிரம்புருஹாம் ச கிம் வா |
தூரே ம்ருகீ ததஸமஞ்ஜஸமஞ்ஜனம் வா
காமாக்ஷி வீக்ஷணருசௌ தவ தர்கயாம: ||87||

தாயே! காமாக்ஷி ! உனது கடாக்ஷசோபையின் எதிரில் புதிதான நீலோத்பலமும், மீன்களின் கோர்வையும், தாமரை புஷ்பங்களும், பெண்மான் கூட்டங்களும் உயர்ந்தமையோ? எல்லாம் தாழ்ந்தவைகளே!!
ravi said…
உயர்வடையோர் மதிக்கின்ற மாணிக்கமே

நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நீக்கி உள்ளத்தில் வெண்மை நிறம் நிரப்புபவளே

உயர்ந்தவளே உத்தமியே

ஓம் கார நாயகியே

தா வென்றால் தன்னையே தருபவளே !!

தமிழே தித்திக்கும் கற்கண்டே தேன் அமுதே ... !!

பாலும் தேனும் பாகையும் கலந்தே சுவைத்தாலும்

உன் நாமம் தரும் அதி சுவை உண்டோ அதற்கு நிகர் எங்கும் உண்டோ ... !!

நீயே வலிய வந்து ஆண்டு கொண்டாய் ..

என் சென்னி தனில்
உன் திருப்பாதம் பதிய நின்றாய் ..

கிட்டுமோ வரம் ஒன்று இப்படி எவர்க்கும் ...

என் மகுடம் தனில் மாணிக்கம் நீ இருக்கும் பரம்

காஞ்சி வாழ் புண்ணியன் கார்மேகமாய் கூட இருக்கும் புறம்

🙏🙏🙏
ravi said…
அம்மா ... அன்னத்தை படைத்து அதை ஏன் தோற்க வைத்தாய்

குயிலை படைத்து அதை ஏன் நாண வைத்தாய்

கிளியைப் படைத்து அதன் பேச்சை ஏன் நீ பறித்தாய்

மயிலை படைத்து அதன் தோகையை ஏன் தோல்வி தழுவ செய்தாய்

சிங்கம் படைத்து அதன் வீரம் தனை ஏன் நீ கொண்டாய்

நிலவை படைத்து அதன் அழகை ஏன் பறித்தாய்

கார்மேகம் படைத்து ஏன் கருணை மழை நீ ஏன் பொழிகிறாய்

எல்லாம் உன்னிடம் தோற்று விட நான் மட்டும் உனை ஏன் வெல்ல வைத்தாய் ..

எனை கேட்டு உனை தந்தாய் ...

ஏதும் அறியா இந்த அறிவிலீயை நீ பெற்று உயர் மாணிக்கம் தந்ததினால்

நான் அன்றோ உன்னிலும் வல்லவன் தாயே !!!💐💐💐💐
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 344* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*126 ஷாங்கரீ =*

இறைவன் சிவனின் ரூபமான சங்கரனின் மனையாள் (சங்கரீ)💐💐💐
ravi said…
சந்தோஷம் என்பது எல்லோருக்கும் பிடித்த விஷயம் .

இதை அடையத்தான் வாழ்க்கை முழுதும் கஷ்டப்படுகிறோம் ...

என்னென்னவோ செய்து இதை அடைய பார்க்கிறோம்

நெருங்கி வரும் போது வேறு துன்பம் வரும் கொஞ்ச நஞ்ச சந்தோஷத்தையும் பறித்துக்கொண்டு விடுகிறது ...

இப்படி நிரந்தரமில்லாமல் ஏன் சந்தோஷம் இருக்கிறது ... ?

ஏன் என்றால் நாம் விரும்பும் பொருள்கள் எல்லாம் நிரந்தரம் அல்ல ..

நிரந்தரம் இல்லாத பொருள்கள் மூலம் கிடைக்கும் சந்தோஷம் மட்டும் எப்படி நிரந்தரமானதாக இருக்க முடியும் ?

ஒரே ஒரு நிரந்தரம் அம்பாளின் திருநாமங்கள் மட்டுமே இதையே அவள் கையில் வைத்திருக்கும் கிளி போல் சொல்லிக்கொண்டே இருந்தால் ..

நிரந்தர சந்தோஷம் பட்டாம்பூச்சி போல் பறந்து வந்து நம் மீது அமரும் .. 🦋🦋🦋🦋🦋

நாம் அதை தேடி போக வேண்டிய அவசியம் இல்லை ... 🙏🙏🙏🦜🦜🦜
ravi said…
கண்ணா*

கற்பனைக்கும் எட்டவில்லை உன் அழகை வர்ணிக்க ...

கமலம் கொண்டு *கண்* வடித்தாயோ?

*உன் நிறம்* கொண்டே கேசம் இமைகளை வடித்தாயோ?

*செவி* இரண்டும் செம் பொன்னில் செதுக்கினாயோ
*கண்ணா* எனும் போது நானும் பொன் போல் மின்ன

*அதரங்கள்* என்ன மலைத்தேனில் தோய்த்து எடுத்தாயோ
*கண்ணா* என்றே சொல்லும் போதே தேனீக்கள் என்னுள் சென்று விட

*பற்கள்* என்ன உன் உள்ளம் கொண்ட நிறமோ ...

*உன் கழுத்து* என்ன அரவிந்தம் அளித்த தண்டோ

பாரிஜாதம் கொண்டு பாம்பின் *படுக்கை* அமைத்தாயோ
சுகந்தம் சுற்றி வந்து எனை அணைக்கின்றதே

*நாபி* என்ன தாடங்கமோ கஞ்சம் மலர குவளை பூக்க தேனீக்கள் ரீங்காரம் செய்ய

*உன் கரங்கள்* என்ன உதிக்கும் சூரியனின் உறைவிடமோ...
வரம் அருளி சிவந்து போனதோ

*உன் பாதங்கள்* என்ன
ரோஜாவின் இதழ்களோ?

மல்லிகையின் மறுபிறப்போ?

தாழம்பூவின் தந்திரமோ?

துளசி தடவும் யாழின் நரம்புகளோ ?

*கண்ணா*

அறிந்திலேன் ...

பூக்கள் கூட்டம் அதிலே பூத்த இந்த தாமரை என்றும் என் இதய கமலம் ஆகட்டும் *கண்ணா* 💐💐💐
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 118* 💐💐💐
ravi said…
माद्राक्षं क्षीणपुण्यान्क्षणमपि भवतो भक्तिहीनान्पदाब्जे

माश्रौषं श्राव्यबन्धं तव चरितमपास्यान्यदाख्यानजातम् ।

मास्मार्षं माधव त्वामपि भुवनपते चेतसापह्नुवानान्

माभूवं त्वत्सपर्याव्यतिकररहितो जन्मजन्मान्तरेऽपि ॥ १७॥

மாத்³ராக்ஷம் க்ஷீணபுண்யான் க்ஷணமபி ப⁴வதோ

ப⁴க்திஹீனான்பதா³ப்³ஜே

மாஸ்ரௌஷம் ச்ராவ்யப³ந்த⁴ம் தவ சரிதமபாஸ்ய

அன்யதா³க்²யானஜாதம் ।

மாஸ்மார்ஷம் மாத⁴வ த்வாமபி பு⁴வனபதே

சேதஸாபஹ்னுவானான்

மாபூ⁴வம் த்வத்ஸபர்யா வ்யதிகரரஹிதோ

ஜன்மஜன்மாந்தரேऽபி ॥ 17 ॥

ன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
கவி சொல்ல வர தாத்பர்யம் என்னன்னா இந்த போலி சாமியார்களுக்கு நிறைய கூட்டம் இருக்கும்.

ஆனா ஒருத்தர் கூட அதுலருந்து ஞானத்தை தெரிஞ்சிக்க மாட்டா.

மஹான்களோட பழகும்போது நமக்கு அவாளை பார்த்தாலே நமக்கு சந்தோஷம் ஏற்படும்.

தாபம் போகும். அவா தூய்மையே வடிவமா இருப்பா. அதுக்கு மேல அவா கூட்டத்துக்காக பஜனம் பண்ண மாட்டா.

அவா தனிமையில பகவானை பஜனம் பண்ணி, காமாக்ஷியோட வடிவமாவே மஹா பெரியவா இருந்ததுனால எவ்வளவோ பேரை அவா நல்வழி படுத்தினா.

அறிவாளிகளா நிறையப் பேரை மாத்தினா. அறிவிலிகளா போலிச் சாமியார்கள் மாத்திண்டிருக்கா என்கிறதைத் தான் இந்த ஸ்லோகத்துல மூக கவி சொல்றார்.

அதனால நாம நிஜமான சத்சங்கம் எதுன்னு தெரிஞ்சுண்டு அதுல இருக்கணும். மத்ததை தவிர்க்கணும்.
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 67*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
கண்டுநின்ற மாயையுங் கலந்துநின்ற பூதமும்

உண்டுறங்கு மாறுநீ ருணர்ந்திருக்க வல்லீரேல்

பண்டையா றுமொன்றுமாய்ப் பயந்தவேத சுத்தனாய்

அண்டமுத்தி யாகிநின்ற வாதிமூல மூலமே. 67💐💐💐
ravi said…
கண்ணால் காண்பது எல்லாம் மாயை.

அதில் திளைத்துள்ள ஐந்து பூதங்கள்.

உண்டி உண்டவுடன் உடல் உறங்குவதுபோல்,

இந்த ஐம்பூதங்களையும் மாயையையும் உறங்க வைக்கும் வழியை உணர்ந்து இருக்கும் வல்லமை உடையவரென்றால்,

பயபக்தியுடன் சுத்தமான மனதுடன் பழய வழியாகிய முக்கலையை ஒன்றித் தவமிருந்து

ஆதி மூலமாகிய அண்டத்துடன் ஒன்றி முத்தி பெறலாம்.🙏🙏🙏
ravi said…
*🌹🌺"" *ஸ்ரீமந் நாராயணன் தாயினும் மேலானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்ற மன்னன்* ... *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹ஒரு நாள் அக்பர்
கேட்டார் பீர்பாலே இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா ?

🌺பீர்பால் அரசே அவருக்கு ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன் கேட்கிறீர்கள்?

🌺அக்பர் இல்லை ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததர்காவா உங்கள் திருமால் கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும் நீர் கூறியது போல் ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே?

🌺அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும்?

🌺இதற்க்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார்

🌺அதை பார்த்ததும் அக்பருக்கு ஒரு சந்தோசம் பீர்பாலே பதில் சொல்ல முடியாத அளவுக்கு நாம் கேள்வி கேட்டுவிட்டோம் என்று
ஒரிரு நாட்கள் சென்றன

🌺அக்பரும் அவர் குடும்பத்தாரும் அவர்களுடன் பீர்பாலும் சில மெய் காப்பாளர்களும் கங்கை கரையை கடப்பதற்கு படகில் சென்று கொண்டிருந்தனர்

🌺அக்பரின் மூன்று வயது பேர குழந்தையை கொஞ்சி கொண்டிருந்த பீர்பால் படகு ஆழமான பகுதிக்கு வந்ததும் பீர்பால் படகோட்டிக்கும் படகில் வந்த ஒரு வீரனுக்கும் சைகை காட்டிவிட்டு அக்பரின் பேரனை கங்கையில் தூக்கி போட்டுவிட்டார்

🌺பதறிய அக்பர் உடனே நீரில் குதித்து தன பேரனை காப்பாற்ற துணிந்தார்

🌺அவரோடு சேர்ந்து பீர்பால் சைகை செய்த வீரனும் நீரில் குதித்து அக்பரையும் குழந்தையும் தூக்கி வந்து படகில் சேர்த்தான்

🌺படகில் பேரனுடன் ஏறிய அக்பர் தன்னை ஆசுவாசப்படுத்தி விட்டு பீர்பால் என்ன இது நீயா இப்படி என் பேரனை கொல்ல துணிஞ்ச என்னால நம்பவே முடிலயே சொல்லும் என்ன காரணத்துக்காக என் பேரனை தண்ணீர்ல தூக்கி போட்டீர் சொல்லும்? என்றார் கோபமாக

🌺பீர்பால் அமைதியாக உங்களுக்கு திருமாலை பத்தி தெரியனும் என்பதற்காக அப்படி செஞ்சேன் அரசே என்றார்

🌺அக்பர் பீர்பாலே என்ன விளையாடுறியா நீ என் பேரனை தூக்கி தண்ணீர்ல போட்டதுக்கும் உமது திருமாலை நான் தெரியுறதுக்கும் என்ன சம்மந்தம்

🌺பீர்பால் அரசே மன்னித்துக்கொள்க நீங்க அன்று ஒரு நாள் உங்கள் கடவுள் திருமாலுக்கு சேவகர்களே இல்லையா அவர்தான் வந்து யானையை காப்பாற்றணுமான்னு கேட்டிங்களே ஞாபகம் இருக்கா உங்களுக்கு?

🌺அக்பர் ஆமாம் அதுக்கும் இன்று நீ என் பேரனை தூக்கி தண்ணீர்ல போட்டதுக்கும் என்ன சம்மந்தம்?

🌺பீர்பால் அரசே கொஞ்சம் யோசித்து பாருங்கள் என்னையும் சேர்த்து இந்த படகில் உங்களுக்கு 10 சேவகர்கள் இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் யாருக்கும் நீங்கள் உத்தரவு பிற்பிக்காமல் நீங்களே உங்கள் பேரனை காப்பற்ற தண்ணீரில் குதித்து விட்டீர்கள் ஏன் அரசே?

🌺எங்களை நீங்கள் நம்பவில்லையா என்று கேட்டார்

🌺அக்பர் கொஞ்சம் கோபம் தணிந்து அப்படி இல்லை பீர்பால் என் பேரன் மேல் அளவு கடந்த பாசம் வச்சுருக்கேன்னு உனக்கு தெரியும் நீர் திடிர்னு தண்ணீர்ல அவனை தூக்கி போட்டதால் எனக்கு அவனை காப்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந்ததே தவிர உங்களுக்கு உத்தரவிட்டு அவனை காப்பாற்ற சொல்லும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லமால் நானே குதித்து அவனை காப்பாற்றினேன் என்றார்

🌺பீர்பால் புன்னகையுடன்
அரசே இந்த நாட்டை ஆளும் உங்களுக்கே இவளோ பாசம் இருக்கும் போது அண்ட சாகசரங்களையும் ஆளும் எங்கள் திருமாலுக்கு எவளோ பாசம் இருக்கும் உயிர்கள் மேல்

🌺அதனால்தான் எத்தனை சேவகர்கள் இருந்தாலும் தன்னை நம்பி அழைப்பவர்களை எங்கள் கடவுள் நேரில் காக்க வருகிறான்

🌺அரசே இப்பொழுது புரிந்ததா திருமால் ஏன் நேரில் வந்து யானையை காப்பாற்றினார் என்று

🌺நான் நீரில் வீசிய உங்கள் பேரனை காப்பற்ற இங்குள்ள ஒரு வீரனிடமும் படகோட்டியிடமும் நான் முன்னமே சொல்லி வைத்திருந்தேன் தவறு இருந்தால் மன்னியுங்கள் அரசே என்றார்

🌺அக்பர்..... இல்லை பீர்பால் நான் தான் உன்னிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்

🌺உங்கள் கடவுளை பற்றி தவறாக எண்ணி இருந்தேன் ஸ்ரீமந் நாராயணன் தாயினும் மேலானவர் என்பதை புரிந்து கொண்டேன் என்றார் நெகிழ்ச்சியாக

🌺அவனே தாய் தந்தை போல் நமக்கு இருக்கும் போது அவன் அருளாலே எல்லாம் நடக்கிறது அவனின்றி அனுவும் அசையாது என்று மட்டும் நினைப்போம்

🌺"ஓம் நமோ நாராயணாய நம:""🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺🌹

ravi said…
🌹🌺""Sriman Narayanan is better than his mother...a simple story explained by the king 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹 One day Akbar
Birbal asked, does the god Thirumal in Hinduism have no servants?

🌺 Sir Birbal, he has thousands of servants, why do you ask?

🌺No Akbar, a crocodile grabbed the leg of an ordinary elephant, your Thirumal should come with a conch wheel and protect that elephant. As you said, there are thousands of servants, could any one of them have sent one of them and saved that elephant?

🌺 Why should he leave it and come and save that elephant?

🌺 Birpal was silent without giving any answer to this

🌺 On seeing that, Akbar was happy and said that we have asked so many questions that Birbal cannot answer
A couple of days passed

🌺Akbar and his family along with Birbal and some bodyguards were going in a boat to cross the banks of the Ganges.

🌺 When Birbal's boat, which was caressing Akbar's three-year-old grandson, reached the deep end, Birbal signaled to a warrior who came in the boat and threw Akbar's grandson into the Ganges.

🌺Panicked, Akbar immediately jumped into the water and dared to save his grandson

🌺 Along with him, the hero who beckoned to Birbal also jumped into the water and picked up Akbar and the child and put them in the boat.

🌺Akbar got on the boat with his grandson and relieved himself and asked Birbal, what is this, you dare to kill my grandson like this, I can't believe it, for what reason did you throw my grandson into the water? He said angrily

🌺 Birbal quietly said, "O king, I have done so so that you may know about Tirumala".

🌺Akbar Birbal, what are you playing, what has to do with you lifting my grandson and putting me in the water and me knowing your glory.

🌺Birbal, forgive me, do you remember that one day you asked your god Tirumal if he would come and save the elephant or not?

🌺Akbar Yes, what does that have to do with the fact that you picked up my grandson and threw him in the water today?

🌺 King Birbal, think for a while, you have 10 servants in this boat including me, but you did not take orders from any of them and you yourself jumped your grandson into the water without protection, why, king?

🌺 Do you not believe us, he asked


🌺Akbar calmed down a bit and said, "No, you know that Birbal had too much affection for my grandson. Because the water rushed and threw him into the water, I felt the urge to save him. But I didn't have the patience to order you to save him, so I jumped in and saved him."


🌺 Birpal with a smile

🌺 When you, the government, who rule this country, have such affection, our Tirumal, who rules the cosmic adventurers, has such affection for the living beings.


🌺 That is why our God comes to protect those who trust in Him, no matter how many servants there are


🌺 Did the king now understand why Thirumal came in person and saved the elephant?

🌺I told a warrior and a boatman here that I did not protect your grandson whom I threw into the water.


🌺Akbar.....No Birpal I have to apologize to you


🌺I was thinking wrong about your God, I understand that Sriman Narayan is more than mother, he said with a smile.


🌺 When He is like a mother and father to us, we only think that everything happens by His grace and that even Anu cannot move without Him


🌺"Om Namo Narayanaya Nama:""🌹🌺

-------------------------------------------------- --------

🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺🌹
ravi said…
**தாய் இருந்தால் துன்பம் இல்லை,*
*தந்தை இருந்தால் தவிப்பு இல்லை,*
*தங்கை இருந்தால் தனிமை இல்லை,*
*தாத்தா இருந்தால் தயக்கம் இல்லை,*

*பாட்டி இருந்தால் பயம் இல்லை,*
*அக்கா இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும்,*
**அண்ணன் இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு,*
*தம்பி இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும்,*
*மனைவி இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும்,*
*மகள் இருந்தால் மழலை பருவம் தெரியும்,*
*மகன் இருந்தால் மான்புமிக்க வம்சம் நிலைக்கும்,*
*மண்ணில் இறக்க போகிறோமே தவிர,*
*மீண்டும் மண்ணில் ஒன்றாக பிறக்க போவது இல்லை,*
*வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம்,*
*குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்,*
*அதை சொர்க்கமாக்குவதும்,* *நரகமாக்குவதும்*
*நம் கையில் தான் உள்ளது.*

❣️ *அனைவருக்கும் இனிய குடும்ப தின வாழ்த்துக்கள்*.

🙏🙏
ravi said…
யோக நிலையில் ராம பிரான்

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள *நெடுங்குணம்* கிராமத்தில் அமைந்துள்ள *ஸ்ரீ யோக ராமர் கோயில்* இந்து கடவுளான விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ராமர் சின் முத்திரை தோரணையில் வில் இல்லாமல் அனுமனின் வேத பாராயணத்தைக் கேட்டுக் கொண்டிருப்பார். தமிழ்நாட்டின் வட ஆற்காடு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பெரிய விஷ்ணு கோவில்களில் இதுவும் ஒன்று. காஞ்சிபுரம் - சேத்துப்பட்டு - திருவண்ணாமலை வழித்தடத்தில் வந்தவாசிக்கு தெற்கே சுமார் 24 கிமீ தொலைவில் தீர்காசலம் மலையின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

நெடுங்குணம் எனும் ஊரில் மிகவும் பழமை போற்றும் ராமர் கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் உள்ள ராமர் மிகவும் சிறப்பு பெற்றவறாக கருதப்படுகிறார்.

சன்னதியில் ராம பிரான் தனது கோதண்டம் எதுவும் இல்லாமல் அமர்ந்த நிலையில் தனது கண்களை முடியவாறு யோக நிலையில் காணப்படுகிறார்.

தனது திருக்கறங்களில் எந்த ஆயுதங்களையும் இல்லாமல் வலது கை சின் முத்திரையுடன் யோக நிலையில் காணப்படுவது மிகுந்த அபூர்வ திருக்கோலம் ஆகும்.

இதனால் இந்த திருக்கோவிலில் உள்ள ராமர் ” யோக ராமர்” என்று பெருமை போற்ற அழைக்கப்படுகிறார்.

ராமர் அருகே சீதா பிராட்டி அமர்ந்த நிலையில் தாமரை மலர் ஏந்தி காட்சி தருகிறார். லக்ஷ்மணன் ராமருக்கு வலது புறம் அஞ்சலி செலுத்திய வண்ணம் திருக்கோலம் கொண்டு இருக்கிறார்.

ராமனும், சீதா பிராட்டியும் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சி தர, அவர்கள் எதிரே ஹனுமன் ”பிரஹ்மா சூத்திரம்” படித்தவாறு காட்சி கொடுப்பது கூடுதல் சிறப்பை இந்த ஸ்தலத்திற்கு சேர்கிறது.

ஸ்தல புராணம் படி ராமர் அயோதி திரும்பும் பொழுது, *சுக பிரஹ்ம ரிஷிக்கு* காட்சி கொடுத்து இந்த திருக்கோவிலில் தங்கி அருள்புரிந்ததாக கூறப்படுகிறது.
ஓம் நமோ நாராயணாய🙏🙏
ravi said…
*கண்ணா*🦚🦚🦚

கொட்டி தீர்ந்து போனதோ என் வார்த்தைகள் ..

இனி என் கண்ணனை என் சொல்லிப்பாடுவேன் என்றே கோடியில் கேவி நின்றேன்

கேவி நின்ற என்னை ஒரு சிறுவன் ஏறி இறங்க பார்த்தான் ...

என்ன பார்க்கிறாய் என்றேன் .

சிரித்தான் தெருவெங்கும் முத்துக்கள் முதிர்ந்து சிந்தியன...

முடியுமோ உன்னால் கண்ணனை சொல்லி முடிக்க ?

யுகங்கள் போதுமோ அவன் லீலை தனை வர்ணிக்க

வார்த்தை தேடுகிறேன் கிடைக்க வில்லை என் செய்வேன் என்றே தேம்பி தேம்பி சொன்னேன் ...

வந்தவன் சிரித்தான் மீண்டும் ...

வண்ண வண்ண மயில் சிறகுகள் மத்தளம் வசிக்க

புல்லாங்குழல் பன்னீர் தெளிக்க

ஆவினம் ஆர்பரிக்க , மான்கள் மீன்களாய் துள்ளி ஓட

முயலும் அணிலும் நாதஸ்வரம் இசைக்க

யமுனை நாயகன் தெரிந்தான் என் கண் முன்னே ....

கண்ணா வந்தவன் நீயா ...

கண்ணீர் யமனை ஓட்டத்தை வென்றது ..

தன் பட்டு பீதாம்பரம் கொண்டே துடைத்தான் என் கண்ணீரை ...

வார்த்தைகள் வாராமல் போகுமோ ...

தடை பட்டால் நானும் சும்மா விடுவேனோ ...

இன்னும் எழுது ..

உன் எழுத்தும் என் குழலும் என்றும் சாஸ்வதம் என்று சொல்லி மறைந்தான் மாயவன் 🙏🙏🙏
ravi said…
*கந்தர் அலங்காரம் 55* 🐓🦚🙏

*அலங்காரம்-14*

💐💐💐💐

ஒருவரைப் பங்கின் உடையாள், குமாரன் உடைமணி சேர்
திருவரை கிண் கிணி அசை பட, திடுக்கிட்டு

அரக்கர்
வெருவர, திக்கு செவிடு பட்டு, எட்டு வெற்பும் கனக
பருவரை குன்றும் அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே!
ravi said…
*திக்கு செவிடு பட்டு* = எட்டுத் திசையும் காதடைக்கும் படி


*எட்டு வெற்பும்* = எண் திசை மலைகளும் (என்னென்ன?)

*கனக பருவரை குன்றும்* = பொன் மலையான மேருவும் (இது எங்க இருக்கு?)

*அதிர்ந்தன, தேவர் பயம் கெட்டதே =* சும்மா அதிருதல்ல? அதனால் அமரர் பயம் தீர்ந்தது!

இப்படி முருகனின் ஓசை ஒரு சாரார்க்கு அச்சம் கொடுக்குது! இன்னொரு சாரார்க்கு அச்சம் தீர்க்குது!

அஞ்சு முகம் தோன்றில், ஆறு முகம் தோன்றும்! வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! நெஞ்சில் ஒரு கால் நினைக்கில், இரு காலும் தோன்றும்! முருகாஆஆஆஆஆ என்று ஓதுவார் முன்!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 340*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
தீ⁴யன்த்ரேண வசோ-க⁴டேன கவிதா-குல்யோபகுல்யாக்ரமைர்-
ஆனீதைஶ்ச ஸதாஶிவஸ்ய சரிதாம்போ⁴-ராஶி-திவ்யாம்ருதை:
ஹ்ருத்-கேதார-யுதாஶ்-ச ப⁴க்தி-கலமா: ஸாபல்யம்-ஆதன்வதே
துர்பி⁴க்ஶான்-மம ஸேவகஸ்ய ப⁴கவன் விஶ்வேஶ பீ⁴தி: குத :

धीयन्त्रेण वचोघटेन कविताकुल्योपकुल्याक्रमै-

रानीतैश्च सदाशिवस्य चरिताम्भोराशिदिव्यामृतैः ।

हृत्केदारयुताश्च भक्तिकलमाः साफल्यमातन्वते

दुर्भिक्षान् मम सेवकस्य भगवन् विश्वेश भीतिः कुतः
ravi said…
*ஹே விஸ்வேச” –* உலகத்துல எல்லார்க்கும், விஸ்வத்துல எல்லார்க்கும் ஈசன், பரமேஸ்வரன்.

கல்லுக்குள் தேரைக்கும்

கருப்பை உயிருக்கும் சாப்பாடு குடுக்கறவன்.

நான் அவனோட சேவகன்.

அப்டி இருக்கறச்ச எனக்கு “ *விஸ்வேச துர்பிக்க்ஷாத்”.*

பஞ்சம் வந்துருமோ, சாப்பாட்டுக்கு கஷ்டம் வந்துருமோ

அப்படிங்கற பயம் “ *பீ⁴தி: குத* :” –

எனக்கு எப்படி அந்த பயம் வர முடியும் அப்டிங்கறார் .😊😊😊
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 336* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

அனுத்தமோ துராதர்ஷ :
*க்ருதஜ்ஞ* : க்ருதிராத்மவான்||9

💐💐💐
ravi said…
பெண்ணே! இந்த ஐவரும் இந்த நிலைக்கு உன்னால் தான் ஆளானார்கள்! நீ பெண் என்பதால் உன்னை இதுவரை மன்னித்தேன்.

இனி பொறுக்க முடியாது. நீயும் இவர்களுடன் சிறைக்குச் செல்!” என்று சொல்லி அவளையும் அந்த ஐவருடன் சிறையிலிட்டார் சிவபெருமான்.

“யார் இவள்? எதற்காக இவர்களை இந்தப் பெண் இங்கே அழைத்து வந்தாள்?” என்று பார்வதி வினவ,

“இவள் ஒரு தேவலோக மாது. அவளுக்குச் சொர்க்க லக்ஷ்மி என்று பெயர்.

நாம் பகடை விளையாடுவதைக் கண்டு பொறாமை கொண்ட இவள்,
அதற்கு இடையூறு செய்வதற்காக முன்பு தேவேந்திரனை இங்கே அழைத்து வந்தாள்.🙏
ravi said…
மிஸ்ரீபவத் கரள பங்கில ஶங்கரோரஸ்-
ஸீமாங்கணே கிமபி ரிங்கணமாததான: |
ஹேலாவதூத லலித ஶ்ரவணோத்பலோ‌ऽஸௌ
காமாக்ஷி பால இவ ராஜதி தே கடாக்ஷ: ||88||

காமாக்ஷீ! உனது கடாக்ஷமென்கிற குழந்தை, சங்கரனாரின் கழுத்து விஷக்கருப்புடன் கலந்து, அவரது மார்பில் தவழ்ந்து விளையாடியும், அவர் காதில் வைத்திருக்கும் கருநெய்தல் மலரை எடுத்தெறிந்து வீசியும் விளையாடுகிறது!
ravi said…
*விவேகசிந்தாமணி*


*65.மனிதப்பிறவி அரிது*

பூதலத்தின் மானிடராய்ப் பிறப்பதரிது என புகழ்வர் பிறந்தோர் தாமும், ஆதிமறை நூலின்முறை அருள்கீர்த்தி யாம் தலங்கள் அன்பாய்ச் சென்று, நீதி வழுவாத வகை வழக்குரைத்து நல்லோரை நேசம் கொண்டு, காதவழி பேர் இல்லார் கழுதை எனப் பாரில் உள்ளோர் கருதுவாரே.


*பொருள்*

பூமியின் மேல் மனிதராய் பிறப்பது அரிது என்று சான்றோர்கள் சொல்லுவர்.
அப்படி மனிதர்களாய் பிறந்தவர்கள் வேத நூல்களைப் பயின்று அதன்படி வாழ்ந்து இறையருளும் புகழும் பெறவேண்டும். புண்ணிய தலங்களுக்கு பக்தியோடு சென்று வழிபட்டு, எங்கும் நீதி தவறாமல் எடுத்துப்பேசி, நல்லவர்களை நேசித்து வாழ வேண்டும். பத்து மைல் தூரமாவது தன் புகழ் பரவி இருக்குமாறு வாழாதவர் கழுதையென்று உலகில் உள்ளோர் கருதுவார்.

(தோன்றிற் புகழோடு தோன்றுக!)

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
🌹🌺 ' *ஹரே கிருஷ்ணா* .... *என் கடமையை செய்து விட்டேன்
விளைவு எதுவாக இருந்தாலும்,*
ஏற்று கொள்வேன் என்று மனதளவில்
சிறு மாற்றம் செய்து பாருங்கள்..….... - என்பதை விளக்கும் எளிய கதை 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்ந்துதான் பார்ப்போமே....

🌺உண்மையில் சிரமம்தான். எதிர்பார்ப்புகளோடு
அப்படியே நாம் வாழ்ந்து பழகிவிட்டோம்.

🌺நண்பனிடம் எதிர்பார்ப்பு, முதலாளியிடம் எதிர்பார்ப்பு,
மனைவியிடம் எதிர்பார்ப்பு,, படிப்புக்கு எதிர்பார்ப்பு, கடவுளிடம் பணம், வீடு, வாகனம் வேண்டி எதிர்பார்ப்பு

🌺இதை எல்லாம் மாற்றி கொள்ள வேண்டும்
என்றால் மனம் அலைபாயும்.
துணிந்து மாற்றி பாருங்கள்.

🌺ஹரே கிருஷ்ணா....என் கடமையை செய்து விட்டேன்
விளைவு எதுவாக இருந்தாலும்,
ஏற்று கொள்வேன் என்று மனதளவில்
சிறு மாற்றம் செய்து பாருங்கள்.

🌺சட்டென்று ஒரு பெரும் விடுதலை
நம்முள் உணர்வோம். எதிர்பார்பின்றி
சுதந்திர காற்றை சுவாசிப்போம்.

🌺என்ன நிகழ வேண்டுமோ
அது கண்டிப்பாக நிகழும்.
தவறாக இருப்பின் அடுத்த செயலில்
மிகவும் விழிப்புணர்வோடு இருப்போம்.
பிரபஞ்சமும் ஸ்ரீ கிருஷ்ணன் அருளும் என்றென்றும் நம்மோடு கைகோர்த்து விடும்...🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 'Hare Krishna...I have done my duty
Whatever the outcome,
Mentally that I will accept
Try making a small change🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹 Let's live without any expectations....

🌺 Difficulty indeed. With expectations
We are used to living like that.

🌺Expectation from friend, expectation from boss,
Expectation from wife, expectation for education, expectation from God for money, house, vehicle

🌺All this needs to be changed
If the mind wanders.
Dare to change.

🌺 Hare Krishna...I have done my duty
Whatever the outcome,
Mentally that I will accept
Try making a small change.

🌺Suddenly a great release
Let us feel within ourselves. Unexpectedly
Let us breathe the air of freedom.

🌺 Whatever happens
It will definitely happen.
In the next step if wrong
Let's be very vigilant.
Universe and Sri Krishna's grace will join hands with us forever...🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
மரகதமே மாதுளமே மதிப்போரக்கு மனோன்மணியே

சிந்தாமணியும் நீயே சிந்திய முத்துக்களும் நீயே

அந்திய நேரமதில் முந்தி வருபவளும் நீயே .. முக்தி தருபவளும் நீயே முன்வினை நல் வினையாக்கி இனி ஒரு வினையும் ஒட்டாமல் செய்பவளே

உனை துதிக்க மாதவம் செய்தவர்கள் கோடி ... ஒருவருக்கும் எட்டாமல் என் நெஞ்சில் குடி புகுந்ததே உன் பஞ்சடிகள் கொண்டே என் சென்னி தனில் நடம் புரிகின்றாய் ..

புரியும் நடனமதில் சங்கரனும் சேர

அங்கே கேட்டேன் காஞ்சி மஹா சன்னதியில்

ஜய ஜய சங்கர வென்ற இருவர் ஒருவராய் வாழும் நாமம் அதை
கௌசல்யா said…
அருமை அருமை...கண்ணா...எத்தனை பூக்களை அழைத்தாலும் கடைசியில் உன் கமலபதாம்புயத்தில் சேர்ந்து கடைதேரும் வழியல்லவா காண்பிக்கின்றன....உன் கடைக்கண் மலரால் என்னை ஒரு முறை கண்டுவிட்டால் நானும் உன் பாத கமலங்களில் சரணே.....சரணம் சரணம் சரணம் கமலக் கண்ணா.....🙇‍♀️🙇‍♀️🙏🙏🪷🌹💝🌷🌼🌸🍃☘️
ravi said…
மணியான தகவல்.

மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது.

மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று அர்த்தம்.

கணகணவென்று அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என்று அர்த்தம்.

இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம்.

மெதுவாக அடித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம்.

மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.

மணி அடிப்பதை மஹான்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை எடுக்க வேண்டும்.

பிறகு இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும்.

இடது கையால் மணியை எடுக்கவே கூடாது.

கண்டை என்பது சாமான்யமல்ல. அதில் பிரணவம் த்வனிக்கிறது. தேவதைகளை வரவழைக்கிறது. துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகிறது.

பகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக இருக்க வேண்டும். அமங்கலமான பேச்சுகள் காதில் விழக்கூடாது. மணி அடித்தால் அவை காதில் விழாது.

🌷🌷
ravi said…
ப்ரௌடி கரோதி விதுஷாம் நவ ஸூக்திதாடீ-
சூதாடவீஷு புதகோகில லால்யமானம் |
மாத்வீரஸம் பரிமளம் ச நிரர்களம் தே
காமாக்ஷி வீக்ஷண விலாஸ வஸந்த லக்ஷ்மீ: ||89||

காமாக்ஷீ! உனது கடாக்ஷ விலாஸமாகிற வசந்தகால சோபையானது, அறிஞர்களின் புதிய வாக்குகளின் போக்காகிற (படைப்புகள்) என்னும் மாந்தோப்பில், அறிவாளிகளாகிற குயில்களால் கொண்டாடப்பட்டு, மிகுந்த வாசனை உள்ளதுமான தேன் பெருக்கை தடையின்றி உண்டாக்குகிறது !
புவனா said…
Ji
Your writings are extraordinary.
ravi said…
#பிரம்ம #ரகசியம்

💝💝💝💝💝💝💝

தகப்பனே கொலை செய்ய
முயற்சித்த போதும்
பிரகலாதன்
மகிழ்ச்சியாக இருந்தான் . . .

சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
அரிச்சந்திரன்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும்
கைகேயி
மகிழ்ச்சியாக இருந்தாள் . . .

உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதிலும்
விதுரர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

அம்புப்படுக்கையில் வீழ்த்தப்பட்ட போதிலும்
பீஷ்மர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

இளம் விதவையான சமயத்திலும்
குந்திதேவி
மகிழ்ச்சியாக இருந்தாள் . . .

தரித்ரனாக வாழ்ந்த போதிலும்
குசேலர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும்
கூர்மதாஸர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

பிறவிக் குருடனாக இருந்த போதிலும்
சூர்தாஸர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

மனைவி அவமானப்படுத்திய போதிலும்
சந்த் துக்காராம்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

கணவன் கஷ்டப்படுத்திய போதிலும்
குணவதிபாய்
மகிழ்ச்சியாக இருந்தாள் . . .

இருகைகளும் வெட்டப்பட்ட போதிலும்
சாருகாதாஸர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

கைகால்களை வெட்டிப் பாழுங்
கிணற்றில் தள்ளிய போதிலும்
ஜயதேவர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

மஹாபாபியினிடத்தில்
வேலை செய்த போதிலும்
சஞ்சயன்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதிலும்
பூந்தானம்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்திய போதிலும்
தியாகராஜர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதிலும்
மஹாராஜா ஸ்வாதித் திருநாள்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

சோழ ராஜனின் சபையில்
கண்ணை இழந்த போதிலும்
கூரத்தாழ்வார்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

இவர்களால் எப்படி
மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது ?

அதுதான் பிரம்ம ரகசியம் என்பது.....!

தன்னோடு இறைவன் எப்பொழுதும்
இருக்கின்றான்
என்று உணர்ந்ததால் !!!

இறைவன் எப்பொழுதும் தன்னோடு
இருக்கின்றான்
என்று உணர ஒரே வழி என்ன தெரியுமா..

அனுதினமும் இறைவன் நாமத்தை கூறுவதும்.. இறைவனுக்கு சேவை செய்வதுமே.

வாழ்வில் நிகழும்
சின்ன சின்ன விஷயங்களுக்காக
கலங்காதே!

எது எப்படி இருந்தாலும்,
எது எப்படி நடந்தாலும்,
யார் எப்படி நடத்தினாலும்,
யார் எப்படி மாறினாலும்,
எதை இழந்தாலும்,
யாரை இழந்தாலும்,
உன் இறைவன் உன்னுடன்
எப்போதும் இருக்கின்றான்
என்பதை முழுமையாக நம்பு....

இறைவன் எப்போதும்
உன்னோடு இருப்பதை
உணரும் வழியை மட்டும் நாடு....

*உன்னோடு இன்னும் இறைவன் இருக்கிறான் கலங்காதே* 🌹🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இந்த யுகத்திலே முக்யமாக என்ன பெரிய அபாயம் என்றால், அபாயமான வஸ்து அப்படி கண்ணுக்குத் தெரியாமல் அதுவே ரொம்ப நல்லது மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு வந்து மயக்கி விடுவதுதான். அபாயத்தை அபாயமானது என்று தெரிந்து கொள்ள முடிந்தால்தானே அதிலிருந்து நம்மை ஜாக்ரதை செய்து கொள்ளலாம்? தீரர்களாக இருந்தால் அதோடு சண்டையும் போட்டு அதை அடக்கி வைக்கலாம்? பூர்வ யுகங்களில் அபாய ஹேதுவாக அஸுரர்கள் தோன்றியபோது, அவர்களுடைய க்ரூரமான ரூபம், வெளிப்படையாகவே அவர்கள் க்ரூரமாகச் செய்த கார்யங்களெல்லாம் ஜனங்களுக்குத் தெரிந்தபோது அவர்கள் ஒதுங்கிப் போகப் பார்த்தார்கள். அப்படியும் இவர்கள் மேலே வந்து விழுந்து பிடுங்கினபோது ‘நம்மால் இவர்களோடு சண்டை போட்டு முடியாது’ என்று பகவானிடம் ப்ரார்த்தித்துக் கொண்டார்கள். பகவானும் அவதாரங்கள் எடுத்து அவர்களை ஸம்ஹரித்தார். முள்ளு குத்தினால் அதைப் பிடுங்கிப் போட்டவுடன் எல்லாம் ஸரியாய் விடுவது போல, அப்புறம் ஜனஸமூஹம் (தேவ ஸமூஹத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) நல்லபடியாகி, பழையபடி நல்ல வழியிலேயே போய்க் கொண்டிருந்தது. க்ருஷ்ணாவதாரத்திலும் கம்ஸன், சிசுபாலன், ஜராஸந்தன், துர்யோதனன் முதலானவர்களை தர்மத்திற்கு அபாயம் உண்டாக்கும் துஷ்டர்கள் என்று இனம் பிரித்துக் கண்டு கொள்ள முடிந்தது. இப்படிப் பூர்வயுகங்களில் ஒவ்வொரு துஷ்டக் கூட்டம் ஹிம்ஸை செய்வது, அதை பகவான் அவதாரம் பண்ணி ஸம்ஹாரம் செய்தவுடன் லோகம் நன்றாக ஆகிவிடுவது என்று இருந்தது. நல்ல வழியை உபதேசிக்கும் மஹான்கள் அப்போது நிறைய இருந்தார்கள். துஷ்டர்கள் அழிந்ததும் அவர்கள் நிர்பயமாகத் தங்கள் பணியை ஆரம்பித்து விடுவார்கள். நேராக பகவதவதாரமே ஜனங்களிடம் உபதேசம் பண்ணியோ, வாழ்ந்து காட்டியோ ப்ரவ்ருத்தி – நிவ்ருத்தி மார்க்கங்களை நிலைநாட்ட வேண்டுமென்ற அவசியம் இருக்கவில்லை. ஆனாலும் அவதாரம் ஏற்பட்டு துஷ்ட நிக்ரஹம் செய்யாமலிருந்தால் துஷ்டர்கள் இரண்டு மார்க்கங்களையும் ஒழித்துக்கட்டித்தான் இருப்பார்கள். இந்த ரீதியில் அவதாரங்கள் வேத தர்மத்தை ரக்ஷித்துக் கொடுத்தன.

ravi said…
அப்போதெல்லாம் கெட்டதே நல்லது மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு வந்து ஸர்வ ஜனங்களையும் மயக்கித் தன்னுடைய ஆதிக்கத்தில் கொண்டுவரவில்லை. கெட்டதுகள் வசீகரணமுள்ளதாகவும், ப்ரியமான மாதிரி நடிப்பதாகவும் இல்லாமல், கெட்டதாகவே ஸ்பஷ்டமாகத் தெரிந்து கொண்டு ஜனங்களை ஹிம்ஸித்தே தங்கள் ஆதிக்கத்தில் கொண்டுவரப் பார்த்தன. அதனால் இது கெட்டது என்று ஜனங்கள் நன்றாகத் தெரிந்துகொண்டு அதற்கு அடிபணியக்கூடாது என்று இருக்க முடிந்தது.

கலியிலே தனியாக இப்படி அஸுரக் கூட்டம், ராக்ஷஸ ஜாதி என்று இல்லை. மநுஷ்ய ஜாதிக்கு வெளியிலே அப்படியில்லை. அப்படியென்றால்…….. புரிகிறதோல்லியோ? மநுஷ்யர்களின் மூளைகளுக்குள்ளேயேதான் அஸுரர்களும் ராக்ஷஸர்களும் புகுந்துகொண்டு விட்டார்கள்! இந்த யுகத்தில் அதர்ம சக்தி வெளியிலே பௌதிகமாக இருந்துகொண்டு ஜனங்களைத் தாக்காமல் ஜனங்களுக்குள்ளேயே, அவர்களுடைய புத்திக்குள்ளேயே கெட்ட சித்த வ்ருத்திகளாகப் புகுந்துகொண்டு விட்டது!
ravi said…
*கண்ணா*
💝💝💝💝💝💝💝

தகப்பனே கொலை செய்ய
முயற்சித்த போதும்
பிரகலாதன்
மகிழ்ச்சியாக இருந்தானாமே . . .

சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
அரிச்சந்திரன்
மகிழ்ச்சியாக இருந்தானாமே. . .

பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும்
கைகேயி
மகிழ்ச்சியாக இருந்தாளாமே . .

உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதிலும்
விதுரர்
மகிழ்ச்சியாக இருந்தாராமே. . .

அம்புப்படுக்கையில் வீழ்த்தப்பட்ட போதிலும்
பீஷ்மர்
மகிழ்ச்சியாக இருந்தாராமே . . .

இளம் விதவையான சமயத்திலும்
குந்திதேவி
மகிழ்ச்சியாக இருந்தாளாமே. .

தரித்ரனாக வாழ்ந்த போதிலும்
குசேலர்
மகிழ்ச்சியாக இருந்தாராமே. . .

ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும்
கூர்மதாஸர்
மகிழ்ச்சியாக இருந்தாராமே . . .

பிறவிக் குருடனாக இருந்த போதிலும்
சூர்தாஸர்
மகிழ்ச்சியாக இருந்தாராமே . . .

மனைவி அவமானப்படுத்திய போதிலும்
சந்த் துக்காராம்
மகிழ்ச்சியாக இருந்தாராமே . . .

கணவன் கஷ்டப்படுத்திய போதிலும்
குணவதிபாய்
மகிழ்ச்சியாக இருந்தாளாமே . . .

இருகைகளும் வெட்டப்பட்ட போதிலும்
சாருகாதாஸர்
மகிழ்ச்சியாக இருந்தாராமே . . .

கைகால்களை வெட்டிப் பாழுங்
கிணற்றில் தள்ளிய போதிலும்
ஜயதேவர்
மகிழ்ச்சியாக இருந்தாராமே. . .

மஹா
பாபியினிடத்தில்
வேலை செய்த போதிலும்
சஞ்சயன்
மகிழ்ச்சியாக இருந்தாராமே . . .

பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதிலும்
பூந்தானம்
மகிழ்ச்சியாக இருந்தாராமே . . .

கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்திய போதிலும்
தியாகராஜர்
மகிழ்ச்சியாக இருந்தாராமே . . .

நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதிலும்
மஹாராஜா ஸ்வாதித் திருநாள்
மகிழ்ச்சியாக இருந்தாராமா . . .

சோழ ராஜனின் சபையில்
கண்ணை இழந்த போதிலும்
கூரத்தாழ்வார்
மகிழ்ச்சியாக இருந்தாராமே . . .

இவர்களுக்கு மகிழ்ச்சி எங்கிருந்து கிடைத்தது *கண்ணா* ?

*கண்ணன் சொன்னான்*
*சிரித்துக்*
*கொண்டே* 😊

தன்னோடு இறைவன் எப்பொழுதும்
இருக்கின்றான்
என்று உணர்ந்ததால் !!!

இறைவன் எப்பொழுதும் தன்னோடு
இருக்கின்றான்
என்று உணர ஒரே வழி என்ன தெரியுமா..?

*சொல்லு கண்ணா*

அனுதினமும் இறைவன் நாமத்தை கூறுவதும்.. இறைவனுக்கு சேவை செய்வதுமே.

வாழ்வில் நிகழும்
சின்ன சின்ன விஷயங்களுக்காக
கலங்காதே!

எது எப்படி இருந்தாலும்,
எது எப்படி நடந்தாலும்,
யார் எப்படி நடத்தினாலும்,
யார் எப்படி மாறினாலும்,
எதை இழந்தாலும்,
யாரை இழந்தாலும்,

நான் உன்னுடன்
எப்போதும் இருக்கிறேன்
என்பதை முழுமையாக நம்பு....

இறைவன் எப்போதும்
உன்னோடு இருப்பதை
உணரும் வழியை மட்டும் நாடு....

*உன்னோடு இன்னும் இறைவன் இருக்கிறான் கலங்காதே* 🌹🙏

கண்ணன் சொன்ன இரண்டாம் கீதை இது 🙏🙏🙏
ravi said…
*ஸ்ரீமாத்ரே நம*

*பத்மராகம்(புஷ்பராகம்)*


பத்மம் எனும் புஷ்பந்தனில் பாதம் வைத்து நடப்பவளே..

ராகம் தனில் இசையாய் இணைபவளே...

அரவிந்தம் கோடியும் பங்கஜம் கோடியும் கஞ்சங்கள் கோடியும் தாமரை கோடியும் கமலங்கள் கோடியும் ஒன்றிணைந்து ஒரு கொடியானவளே ..

இடை ஏதும் இல்லாமல்

விடையில் அமர்ந்து

இடை தனை
தடை இன்றி
களைபவளே...

மடை திறந்த கருணை வெள்ளமதில் காக்கும் படை திரண்டு வருபவளே

உன் நடை கண்டு உன் கடை பெற்று சடையோன் பாகம் இடம் கொண்ட உன் பாதம் அடைந்து விட்டேன் ...

கூம்பாத உன் பாதங்கள் புஷ்பராகம் பாடட்டும்

காஞ்சி மகான் சென்னிதனில் என்றும் அமரும் என் பத்மராகமே 🪷🪷🪷
ravi said…
திருவருளை குருவருள் மூலமே பெற வேண்டும்.

ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அவர் அருகே ஒரு மாணவன் சென்றான்.
அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான்.

"ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும் " என்றான்.

"தம்பீ...நான் உறங்கவில்லை. கடவுளை தியானிக்கிறேன்."

ஓ...! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் ...கடவுள்... என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கிறீரா? "

"இல்லை "

"கடவுளை கையால் தீண்டியிருக்கீறா? "

"இல்லை "

" �����
ravi said…
ஐயா! என்ன இது மூடநம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை. மூக்கால் முகர்ந்தீரில்லை? கையால் தொட்டீரில்லை? காதால் கேட்டீரில்லை? உம்மைக் கண்டு நான்
பரிதாபப்படுகிறேன். இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக் கொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உமக்கு வயது முதிர்ந்தும் மதி நலம் முதிரவில்லை. பாவம்! உம்போன்றவர்களை காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது, கருப்பா? சிவப்பா? "

"
ravi said…
அது சரி தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கிறது? "

"தேன் பாட்டில் "

"தேன் இனிக்குமா? கசக்குமா? "

"என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீரே? தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும். "

"தம்பி! தித்திக்கும் என்றாயே! அந்த இனிப்பு கருப்பா? சிவப்பா? "

மாணவன் திகைத்தான்! இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று.

"ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது? உண்டவனே உணர்வான்! "

பெரியவர் புன்முறுவலுடன், "அப்பா, இந்த பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையை உரைக்க முடியாது. உண்டவனே உணர்வான் என்கின்றாயே? ஞானப் பொருளாக, அனுபவ வஸ்துவாக விளங்கும் இறைவனை அனுபவத்தால்தான் உணர வேண்டும்.

"தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!

என்கிறார் திருமூலர். "

மாணவன் வாய் சிறிது அடங்கியது.

"பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டுவிட்டு வந்து உம்முடன் உரையாடுகிறேன் "

"தம்பீ, பசி என்றாயே! அதைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? "

"இல்லை "

"என்னப்பா... உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய்?
பசியை கண்ணால் காண்பாயில்லை! மூக்கால் முகர்ந்தாயில்லை! அப்படி இருக்க அதை எப்படி நம்புவது? பசி பசி என்றுரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய்! பசி என்று ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப் பொய். பசி என்று கூறுவது முட்டாள்தனம். உனக்கு இப்பொழுது புரிகின்றதா? பசி என்பது ஒர் அனுபவப் பொருள். அதுகண்ணால் காணக்கூடியதன்று. அதுபோல்தான் கடவுள் ஓர் அனுபவப் பொருள். அதை தவம் செய்து மெய்யுணர்வால் உணர வேண்டும்."

மாணவன் உடம்பு வேர்த்தது. தலை சுற்றியது. பெரியவர் கூறியதை உண்மை என்று உணர்ந்தான்.

"என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம். கடவுளை கண்ணால் காண முடியுமா? "

"தம்பீ, இந்த உடம்பை கண்ணால் பார்க்கின்றாயா? "

"என்ன ஐயா! என்னை மடையன் என்று நினைத்தீரா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்."

"தம்பீ ...உன்னை மூடன் என்று ஒரு போதும் நான் கூற மாட்டேன். நீ அறிஞன்தான். ஆனால், அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளி இருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதாது? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும், திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகிதா?"

"ஆம். நன்றாகத் தெரிகின்றது! "

"அப்பா ...
அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா? "

"எத்தனை முறை கூறுவது. தெரிகின்றது...
தெரிகின்றது..."

"முழுவதும் தெரிகின்றதா? "

எரிச்சலுடன், "ஆம். தெரிகின்றது. " என்றான்.

"தம்பி...உடம்பின் பின்புறம் தெரிகின்றதா? "

மாணவன் விழித்தான்.

"ஐயா! பின்புறம் தெரியவில்லையே! "

"சரி ...முன்புறமாவது முழுவதும் தெரிகிறதா? "

"முன்புறம் முழுவதும் தெரிகின்றது "

"அவசரப்படாதே! நன்கு சிந்தனை செய்து சொல்."

"ஆம். சிந்தித்தே சொல்கிறேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது "

"அப்படியா? உன் முகம் தெரிகின்றதா? "

நெருப்பை மிதித்தது போல் துள்ளினான்.
தணிந்த குரலில், "ஐயனே! முகம் தெரியவில்லை! "

"
ravi said…
குழந்தாய்...இந்த ஊன் உடம்பில் பின்புறம் முழுவதும் தெரியவில்லை. முன்புறம் முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டிருக்கிறாய். ஆனால், கண்டேன்...கண்டேன்என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்? "

"ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறமும் தெரியும் "

"இதற்கே இரண்டு கண்ணாடிகள் தேவைப்படுவது போல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காணவும் இரு கண்ணாடிகள் வேண்டும் "

"ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எங்கு விற்கின்றன? சொல்லுங்கள். இப்பொழுதே போய் வாங்கி வருகிறேன்."

"அது விற்கின்ற பொருள் அல்ல! ஞானமூர்த்தியைக் காண இரு கண்ணாடிகள் வேண்டும். ஒன்று திருவருள். மற்றொன்று குருவருள். இதன் துணையால் கடவுளைக் காணலாம். தம்பீ! திருவருள் எங்கு நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமேபெற வேண்டும். திருவருளும், குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை"

"சரி! குருவே! தெளிந்தேன்! உங்கள் ஆசியுடன் விடை பெறுகிறேன்."

--திருமுருக கிருபானந்தவாரியார்…�����������������
ravi said…
கூலம்கஷம் விதனுதே கருணாம்பு வர்ஷீ
ஸாரஸ்வதம் ஸுக்ருதின: ஸுலபம் ப்ரவாஹம் |
துச்சீகரோதி யமுனாம்பு தரங்க பங்கீம்
காமாக்ஷி கிம் தவ கடாக்ஷ மஹாம்புவாஹ: ||90||

காமாக்ஷி! கருணையாகிற நீரைப் பொழிகிற உனது கடாக்ஷமாகிய பெரிய மேகமானது, நல்லோரின் வாக்காகிற ப்ரவாஹத்தை எளிதில் கரைபுரளச் செய்கிறது. ஆனால், யமுனை நதியின் ப்ரவாஹத்தை தனது காந்தியால் பழித்து துச்சமாகச் செய்கிறது!
ravi said…
கண்ணா*
💝💝💝💝💝💝💝

தகப்பனே கொலை செய்ய
முயற்சித்த போதும்
பிரகலாதன்
மகிழ்ச்சியாக இருந்தானாமே . . .

சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
அரிச்சந்திரன்
மகிழ்ச்சியாக இருந்தானாமே. . .

பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும்
கைகேயி
மகிழ்ச்சியாக இருந்தாளாமே . .

உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதிலும்
விதுரர்
மகிழ்ச்சியாக இருந்தாராமே. . .

அம்புப்படுக்கையில் வீழ்த்தப்பட்ட போதிலும்
பீஷ்மர்
மகிழ்ச்சியாக இருந்தாராமே . . .

இளம் விதவையான சமயத்திலும்
குந்திதேவி
மகிழ்ச்சியாக இருந்தாளாமே. .

தரித்ரனாக வாழ்ந்த போதிலும்
குசேலர்
மகிழ்ச்சியாக இருந்தாராமே. . .

ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும்
கூர்மதாஸர்
மகிழ்ச்சியாக இருந்தாராமே . . .

பிறவிக் குருடனாக இருந்த போதிலும்
சூர்தாஸர்
மகிழ்ச்சியாக இருந்தாராமே . . .

மனைவி அவமானப்படுத்திய போதிலும்
சந்த் துக்காராம்
மகிழ்ச்சியாக இருந்தாராமே . . .

கணவன் கஷ்டப்படுத்திய போதிலும்
குணவதிபாய்
மகிழ்ச்சியாக இருந்தாளாமே . . .

இருகைகளும் வெட்டப்பட்ட போதிலும்
சாருகாதாஸர்
மகிழ்ச்சியாக இருந்தாராமே . . .

கைகால்களை வெட்டிப் பாழுங்
கிணற்றில் தள்ளிய போதிலும்
ஜயதேவர்
மகிழ்ச்சியாக இருந்தாராமே. . .

மஹா
பாபியினிடத்தில்
வேலை செய்த போதிலும்
சஞ்சயன்
மகிழ்ச்சியாக இருந்தாராமே . . .

பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதிலும்
பூந்தானம்
மகிழ்ச்சியாக இருந்தாராமே . . .

கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்திய போதிலும்
தியாகராஜர்
மகிழ்ச்சியாக இருந்தாராமே . . .

நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதிலும்
மஹாராஜா ஸ்வாதித் திருநாள்
மகிழ்ச்சியாக இருந்தாராமா . . .

சோழ ராஜனின் சபையில்
கண்ணை இழந்த போதிலும்
கூரத்தாழ்வார்
மகிழ்ச்சியாக இருந்தாராமே . . .

இவர்களுக்கு மகிழ்ச்சி எங்கிருந்து கிடைத்தது *கண்ணா* ?

*கண்ணன் சொன்னான்*
*சிரித்துக்*
*கொண்டே* 😊

தன்னோடு இறைவன் எப்பொழுதும்
இருக்கின்றான்
என்று உணர்ந்ததால் !!!

இறைவன் எப்பொழுதும் தன்னோடு
இருக்கின்றான்
என்று உணர ஒரே வழி என்ன தெரியுமா..?

*சொல்லு கண்ணா*

அனுதினமும் இறைவன் நாமத்தை கூறுவதும்.. இறைவனுக்கு சேவை செய்வதுமே.

வாழ்வில் நிகழும்
சின்ன சின்ன விஷயங்களுக்காக
கலங்காதே!

எது எப்படி இருந்தாலும்,
எது எப்படி நடந்தாலும்,
யார் எப்படி நடத்தினாலும்,
யார் எப்படி மாறினாலும்,
எதை இழந்தாலும்,
யாரை இழந்தாலும்,

நான் உன்னுடன்
எப்போதும் இருக்கிறேன்
என்பதை முழுமையாக நம்பு....

இறைவன் எப்போதும்
உன்னோடு இருப்பதை
உணரும் வழியை மட்டும் நாடு....

*உன்னோடு இன்னும் இறைவன் இருக்கிறான் கலங்காதே* 🌹🙏

கண்ணன் சொன்ன இரண்டாம் கீதை இது 🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 345* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*92 தேவியின் இருக்கை*

*ஆளுந்திறமை*

கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண ஹரி ருத்ரேஶ்வர ப்ருத:

ஶிவ: ஸ்வச்ச ச்சாயா கடித கபட ப்ரச்சதபட:

த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலன ராகாருணதயா

சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம் 92
ravi said…
தாயே!, லோகாதிகார புருஷர்களான ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் ஆகியவர்கள் உனது சிம்மாசனத்தின் கால்களாக இருக்கிறார்கள்.

அந்த சிம்மாசனத்தில் மேல் விரிப்பாக வெண்மையான ஒளியுடைய ஸதாசிவன் இருந்தாலும் உன்னுடைய சிருங்காரமான சிகப்பான ஒளியின் காரணமாக அவரும் சிவப்பாகத் தோற்றமளித்து உனது கண்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கிறார்.🪷🪷🪷
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 347* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*128 * . साध्वी -ஸாத்வீ --*
கணவனோடு என்றும் இணைபிரியாமல், சிவபக்தியோடு ஓம் நமசிவாய மந்த்ர ஸ்வரூபமாக இருப்பவள்👍
ravi said…
*நற்பண்புகளின் இலட்சணமானவள்*👍👍👍👍👍👍👍👍
ravi said…
*Stress* makes you believe that everything has to happen right now .

*Faith* reminds you that everything will happen at the right and perfect time .

Hari OM 🪷🪷🪷
Kousalya said…
அதி அற்புதம்...வரி எழுத வார்த்தைகள் இல்லை....வேண்டுவது எல்லாம் உன் நினைவு மட்டுமே மாதவா...
ravi said…
[18/09, 07:44] Shyamala Loganathan: Padhma raagam & puspa raagam same meaning ah ji
[18/09, 07:44] Shyamala Loganathan: இனிய காலை வணக்கம் அய்யா
ravi said…
பெண்கள் மேல் கொண்ட மையலினால் அவர்களுக்கு இரங்கி வாழ்நாள் முழுதும் உழைத்து இளைத்து மாண்டு போகின்ற மனிதர்காள்!

வாழையடி வாழையாக வாழைமரம் கன்று ஈன்றதாயும் பூ பூத்து காய்க்கும் காரணத்தை அறிவீர்களா!!

மனிதர்களுக்கும் வாழைக்கும் நீரே வித்தான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்.

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கும் இருக்கும் நந்தியின் வாசலைத் திறந்து மெய்ப்பொருளையே நாடி நோக்கியிருந்து தியானித்திருக்க வல்லவர்

மனத்தினால் தோன்றுகின்ற மாயைகள் யாவும் நம்மைவிட்டு ஒழிந்து நம்முள் அருட்பெரும் ஜோதியாக ஈசன் வந்து தோன்றுவான்.
ravi said…
ஈன்றவாச லுக்கிறங்கி யெண்ணிறந்து போவீர்காள்

கான்றவாழை மொட்டலர்ந்த காரண மறிகிலீர்

நான்றவாசலைத் திறந்து நாடிநோக்க வல்லீரேல்

தோன்றுமாயை விட்டொழிந்து சோதிவந்து தோன்றுமே. 69🪷🪷🪷
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 69*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
ஸ்ரீமாத்ரே நம*

*பத்மராகம்*
*(புஷ்பராகம்)*


பத்மம் எனும் புஷ்பந்தனில் பாதம் வைத்து நடப்பவளே..

ராகம் தனில் இசையாய் இணைபவளே...

அரவிந்தம் கோடியும் பங்கஜம் கோடியும் கஞ்சங்கள் கோடியும் தாமரை கோடியும் கமலங்கள் கோடியும் ஒன்றிணைந்து ஒரு கொடியானவளே ..

இடை ஏதும் இல்லாமல்

விடையில் அமர்ந்து

இடை தனை
தடை இன்றி
களைபவளே...

மடை திறந்த கருணை வெள்ளமதில் காக்கும் படை திரண்டு வருபவளே

உன் நடை கண்டு உன் கடை பெற்று சடையோன் பாகம் இடம் கொண்ட உன் பாதம் அடைந்து விட்டேன் ...

கூம்பாத உன் பாதங்கள் புஷ்பராகம் பாடட்டும்

காஞ்சி மகான் சென்னிதனில் என்றும் அமரும் என் பத்மராகமே 🪷🪷🪷
கௌசல்யா said…
அதி அற்புதம்...வரி எழுத வார்த்தைகள் இல்லை....வேண்டுவது எல்லாம் உன் நினைவு மட்டுமே மாதவா.....🙏🙏🙇‍♀️🙇‍♀️🪷🪷🍃🍃
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 121* 💐💐💐
ravi said…
அடுத்த ஸ்லோகமும் ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம்.

वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात्

औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् |

सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण:

प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: || १८ ॥

வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்

ஔதார்யாத் அகஷோஷணாத் அகணிதஷ்ரேய:பதப்ராபணாத் |

ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:

ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||

ன்னு பகவானோட குணங்களை அடுக்கி ஆறு குணங்களை சொல்லி, ஆறு பேரை அதுக்கு சாக்ஷியா சொல்லி, respectively ன்னு English ல சொல்லுவாளே அந்த மாதிரி முறைப்படியே இந்த ஆறுபேர்னு வெச்சுக்கணும்.🙏🙏🙏
ravi said…
*அபய ப்ரதான ஸமயாத்’ –*

அபயமளிப்பது என்ற அந்த கொள்கை.

அதுக்கு விபீஷணனுக்கு சாக்ஷி.

ஆனா ராமர் அவனுக்கு அபயம் கொடுத்தார்.

சுக்ரீவாதி வானரர்கள் எல்லாம் வேண்டாம்ங்கறா. ஹனுமார் மட்டும்தான் ‘அவன் நல்லவன் தான்னு நான் நினைக்கறேன், சேர்த்துக்கலாம்’ ன்னு சொல்றார்.

ராமர் ‘ *ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீ திச யாசதே | அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம ||*

எவன் என்னை நமஸ்காரம் பண்ணி உன்னை சேர்ந்தவனா வெச்சுக்கோன்னு கேட்டாலும் யாரா இருந்தாலும் நான் அபயம் கொடுப்பேன். இது என்னோட வ்ரதம்னு சொல்றார்.

அதுதான் பகவானோட அபாரமான தயை.

அந்த அபயமளிக்கும் கொள்கை பகவானுக்கு இருக்குங்கிறதுக்கு விபீஷ்ணன் தான் சாக்ஷி.🦚🦚🦚
ravi said…
*கந்தர் அலங்காரம் 57* 🐓🦚🙏

*அலங்காரம்-15*

💐💐💐💐

குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த,
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்! இரு நான்கு வெற்பும்,
அப்பாதி யாய்விழ, மேருவும் குலுங்க, விண்ணாரும் உய்ய,
சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடை சண்முகனே!
ravi said…
*குப்பாச = கு+பாசம் =* இழிவான பாசம்! பாசத்தில் என்னங்க இழிவு?

சுயநலம் போர்த்திய பாசம்! அதான் இழிவு!

பணத்துக்காக, படை பலத்துக்காக, வெளீல பாசம் காட்டிக்கறது!

ஊரறிய ஏசி விட்டு, காரியம் ஆகணும்-ன்னா மட்டும் கூட்டுச் சேர்ந்து பாசம் காட்டுறது!

இதான் குப்பாசம்! நப்பாசையால் வந்த குப்பாசம்
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 342*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

தீ⁴யன்த்ரேண வசோ-க⁴டேன கவிதா-குல்யோபகுல்யாக்ரமைர்-
ஆனீதைஶ்ச ஸதாஶிவஸ்ய சரிதாம்போ⁴-ராஶி-திவ்யாம்ருதை:
ஹ்ருத்-கேதார-யுதாஶ்-ச ப⁴க்தி-கலமா: ஸாபல்யம்-ஆதன்வதே
துர்பி⁴க்ஶான்-மம ஸேவகஸ்ய ப⁴கவன் விஶ்வேஶ பீ⁴தி: குத :

धीयन्त्रेण वचोघटेन कविताकुल्योपकुल्याक्रमै-

रानीतैश्च सदाशिवस्य चरिताम्भोराशिदिव्यामृतैः ।

हृत्केदारयुताश्च भक्तिकलमाः साफल्यमातन्वते

दुर्भिक्षान् मम सेवकस्य भगवन् विश्वेश भीतिः कुतः
ravi said…
*தீ⁴யன்த்ரேண” –* புத்தி என்கிற ஏத்தத்தை வெச்சிண்டு

“ *வசோ-க⁴டேன” –* என்னோட வாக்குங்கற சால் (பானை மாதிரி தண்ணி collect பண்ற பாத்திரம்)

*“கவிதா-குல்யோபகுல்யாக்ரமை:” –* கவிதை அப்படிங்கற, குல்யம் அப்டினா வாய்க்கால். பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால் அது வழியா, புத்தி ங்கற ஏத்தத்தையும் வாக்குங்கற ஜலத்தையும் வெச்சிண்டு
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 338* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

அனுத்தமோ துராதர்ஷ :
*க்ருதஜ்ஞ* : க்ருதிராத்மவான்||9

💐💐💐
ravi said…
அந்தப் பாண்டவர்கள் ராஜசூய யாகம் செய்த போது, கண்ணன் ரிஷிகளுக்காகப் பழங்களை நறுக்கிக் கொண்டிருந்தான்.

வேகமாக வெட்டுகையில் கத்தி கண்ணனின் விரலில் பட்டு ரத்தம் பீறிட்டுக் கொண்டு கண்ட திரௌபதி ஓடி வந்து
தன் புடவையிலிருந்து கொஞ்சம் துணியைக் கிழித்துக் காயத்தைச் சுற்றிக் கட்டினாள்.

அச்செயலினால் மிகவும் மகிழ்ந்தான் கண்ணன்.

பரமசிவனின் சாபம் பலிக்கும் நேரம் வந்தது.

கௌரவர்களுடன் ஆடிய பகடையாட்டத்தில் பெருத்த அவமானத்தைப்
பாண்டவர்களும் திரௌபதியும் சந்தித்தார்கள்.🪷🪷🪷
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இந்த யுகத்திலே முக்யமாக என்ன பெரிய அபாயம் என்றால், அபாயமான வஸ்து அப்படி கண்ணுக்குத் தெரியாமல் அதுவே ரொம்ப நல்லது மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு வந்து மயக்கி விடுவதுதான். அபாயத்தை அபாயமானது என்று தெரிந்து கொள்ள முடிந்தால்தானே அதிலிருந்து நம்மை ஜாக்ரதை செய்து கொள்ளலாம்? தீரர்களாக இருந்தால் அதோடு சண்டையும் போட்டு அதை அடக்கி வைக்கலாம்? பூர்வ யுகங்களில் அபாய ஹேதுவாக அஸுரர்கள் தோன்றியபோது, அவர்களுடைய க்ரூரமான ரூபம், வெளிப்படையாகவே அவர்கள் க்ரூரமாகச் செய்த கார்யங்களெல்லாம் ஜனங்களுக்குத் தெரிந்தபோது அவர்கள் ஒதுங்கிப் போகப் பார்த்தார்கள். அப்படியும் இவர்கள் மேலே வந்து விழுந்து பிடுங்கினபோது ‘நம்மால் இவர்களோடு சண்டை போட்டு முடியாது’ என்று பகவானிடம் ப்ரார்த்தித்துக் கொண்டார்கள்.
ravi said…
பகவானும் அவதாரங்கள் எடுத்து அவர்களை ஸம்ஹரித்தார். முள்ளு குத்தினால் அதைப் பிடுங்கிப் போட்டவுடன் எல்லாம் ஸரியாய் விடுவது போல, அப்புறம் ஜனஸமூஹம் (தேவ ஸமூஹத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) நல்லபடியாகி, பழையபடி நல்ல வழியிலேயே போய்க் கொண்டிருந்தது. க்ருஷ்ணாவதாரத்திலும் கம்ஸன், சிசுபாலன், ஜராஸந்தன், துர்யோதனன் முதலானவர்களை தர்மத்திற்கு அபாயம் உண்டாக்கும் துஷ்டர்கள் என்று இனம் பிரித்துக் கண்டு கொள்ள முடிந்தது. இப்படிப் பூர்வயுகங்களில் ஒவ்வொரு துஷ்டக் கூட்டம் ஹிம்ஸை செய்வது, அதை பகவான் அவதாரம் பண்ணி ஸம்ஹாரம் செய்தவுடன் லோகம் நன்றாக ஆகிவிடுவது என்று இருந்தது. நல்ல வழியை உபதேசிக்கும் மஹான்கள் அப்போது நிறைய இருந்தார்கள். துஷ்டர்கள் அழிந்ததும் அவர்கள் நிர்பயமாகத் தங்கள் பணியை ஆரம்பித்து விடுவார்கள். நேராக பகவதவதாரமே ஜனங்களிடம் உபதேசம் பண்ணியோ, வாழ்ந்து காட்டியோ ப்ரவ்ருத்தி – நிவ்ருத்தி மார்க்கங்களை நிலைநாட்ட வேண்டுமென்ற அவசியம் இருக்கவில்லை. ஆனாலும் அவதாரம் ஏற்பட்டு துஷ்ட நிக்ரஹம் செய்யாமலிருந்தால் துஷ்டர்கள் இரண்டு மார்க்கங்களையும் ஒழித்துக்கட்டித்தான் இருப்பார்கள். இந்த ரீதியில் அவதாரங்கள் வேத தர்மத்தை ரக்ஷித்துக் கொடுத்தன.
ravi said…
அப்போதெல்லாம் கெட்டதே நல்லது மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு வந்து ஸர்வ ஜனங்களையும் மயக்கித் தன்னுடைய ஆதிக்கத்தில் கொண்டுவரவில்லை. கெட்டதுகள் வசீகரணமுள்ளதாகவும், ப்ரியமான மாதிரி நடிப்பதாகவும் இல்லாமல், கெட்டதாகவே ஸ்பஷ்டமாகத் தெரிந்து கொண்டு ஜனங்களை ஹிம்ஸித்தே தங்கள் ஆதிக்கத்தில் கொண்டுவரப் பார்த்தன. அதனால் இது கெட்டது என்று ஜனங்கள் நன்றாகத் தெரிந்துகொண்டு அதற்கு அடிபணியக்கூடாது என்று இருக்க முடிந்தது.
ravi said…
கலியிலே தனியாக இப்படி அஸுரக் கூட்டம், ராக்ஷஸ ஜாதி என்று இல்லை. மநுஷ்ய ஜாதிக்கு வெளியிலே அப்படியில்லை. அப்படியென்றால்…….. புரிகிறதோல்லியோ? மநுஷ்யர்களின் மூளைகளுக்குள்ளேயேதான் அஸுரர்களும் ராக்ஷஸர்களும் புகுந்துகொண்டு விட்டார்கள்! இந்த யுகத்தில் அதர்ம சக்தி வெளியிலே பௌதிகமாக இருந்துகொண்டு ஜனங்களைத் தாக்காமல் ஜனங்களுக்குள்ளேயே, அவர்களுடைய புத்திக்குள்ளேயே கெட்ட சித்த வ்ருத்திகளாகப் புகுந்துகொண்டு விட்டது!
Shyamala said…
இனிய காலை வணக்கம்🙏
Today’s kanna poem is excellent ji, explained with comparison about all puranas like kaikeye, Kunthi, harichandran,sanchayan,koormathasar etc etc
ravi said…
மாது மாதிகே கேசவா நாராயண மாதவ எனபாரதே*

(ஒவ்வொரு முறை) பேசும்போதும், கேசவ, நாராயண, மாதவ என்று சொல்லக்கூடாதா..

*ப்ராதஹ் காலதி எத்து பார்த்தசாரதி எந்து*

*ப்ரீதிலி நெனெது சத்கதிய ஒந்ததே வ்யர்த்த*

*மாதுகள் ஆடல்யாகே, ஹே ஜிஹ்வே, மாதவ எனபாரதே (மாது)*

காலையில் எழுந்தவுடன் பார்த்தசாரதி என்று (அவன் பெயர்) சொல்லி,
(அவனைப் பற்றி) அன்புடன் நினைத்து, பிறவிப்பயனை அடையவில்லை
யென்றால் இந்தப் பிறவியே பயனற்றது;

வெட்டிப் பேச்சு பேசித் திரியாமல், ஹே நாக்கே, மாதவா என்று சொல்லக்கூடாதா (மாது)

*ஜலஜ நாபன நாமவு ஈ ஜகக்கெல்ல ஜனன மரண ஹரவு*
*சுலபவாகிவுது*

*சுகக்கே காரணவிது*
*பலித பாபகளனல்ல* *பரிஹரிசுவுதெந்துதிளிது*

*திளியதிஹரே, ஹே ஜிஹ்வே மாதவ எனபாரதே (மாது)*

அந்தப் பத்மநாபனின் பெயரானது, மறுபிறப்பு என்பதே இல்லாமல் செய்துவிடும்

உச்சரிக்க மிகவும் சுலபமானது;

சுகங்கள் பெறுவதற்கு காரணமானது;

செய்து குவித்துள்ள பாவங்கள் அனைத்தையும் போக்க பரிகாரமானது;

இவை அனைத்தையும் தெரிந்தும், தெரியாதவாறே இருக்கிறாயே,

ஹே நாக்கே, மாதவா என்று சொல்லக்கூடாதா (மாது)

*தருணி திரௌபதிய சீரே செளெயுதீரே*

*ஹரி நீனே கதிஎனலு*
*பரம புருஷ பவ* *பஞ்சன கேஷவ*
*துருளரமர்திசி*

*தருணிகே வரவித்த*
*ஹரி நாமப்*

*ப்ரியவல்லவே, ஹே ஜிஹ்வே மாதவ எனபாரதே (மாது)*

திரௌபதியின் சேலையை (ஒருவன்) இழுக்கும்போது, அவள் நீயே கதி, ஹரி, என்று சொன்னாள்

உத்தமமானவனும், பிரச்னைகளில் சிக்கியவர்களுக்கு உதவுபவனுமான கேசவன் ஆனவன்
கெட்டவர்களை வீழ்த்தி திரௌபதிக்கு வரம் அளித்தான்

(அப்படிப்பட்ட) ஹரியின் பெயரானது (சொல்வதற்கு) மிகவும் பிரியமானதல்லவா,

ஹே நாக்கே, கேசவா என்று சொல்லக் கூடாதா (மாது)

*ஹேம கஷ்யப சம்பவ ஈ ஜகக்கெல்ல நாமவே கதி எனலு*

*ப்ரேமதிந்தலி பந்து*
*காமிதார்த்த*
*களித்த ஸ்வாமி* *ஹயவதனன*

*நாமாவ நெனெயுத்தா*
*யாம யாமக்கே பிடதே ஹே ஜிஹ்வே மாதவ எனபாரதே (மாது)*

ஹிரண்யகசிபு கதை (மூலம்) - நாராயணனின் பெயரே நமக்கு கதி (என்று தெரியவந்தது)

(கூப்பிட்டவுடன்) அன்புடன் வந்து, கேட்டதைக் கொடுப்பவன்,

(அந்த) ஹயவதனனின் பெயரை, ஒவ்வொரு வேளையும்,
விடாமல் சொல்லலாமே,

ஹே நாக்கே, மாதவா என்று சொல்லக் கூடாதா (மாது)
Malar said…
Yet another eye opener today. I'm in the same path just beleiving none other than him.
Tq ji.
ravi said…
🌹🌺 *'ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு கீதையில் அமைந்துள்ள 18 பெயர்களைப் பற்றி.….... - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹1.ஹ்ருஷீகேச* = இந்திரியங்களுக்கு ஈசன்

🌺2.அச்யுத* = தன் நிலையிலிருந்து வழுவாதவன்

🌺3*கிருஷ்ண* = கருப்பு நிறமானவன்,"
= க்ருஷ்" என்றால் பூமி." ண" என்றால் ஆனந்தமளிப்பவர் எனவே பூமியில் உள்ளவர்களுக்கு ஆனந்தமளிப்பவர் ,
= அனைவரையும் கவர்ந்து இழுப்பவர்

🌺4.கேசவ* = அழகிய முடியுடையவன்,
= க என்றால் பிரம்மா ஈச என்றால் சிவபெருமான் இவர்களை படைத்து காத்து அழிப்பவர் ,
= கேசி என்ற அசுரனைக் கொன்றவன்

🌺5.கோவிந்தன்*= கோ என்றால் பசு மற்றும் புலன்கள் எனவே பசு மற்றும்
=புலன்களுக்கு ஆனந்தம் அளிப்பவன்

🌺6.*மதுசூதன* = மது என்ற அசுரனை அழித்தவன்,
=மதுவை(தேனைப் ) போல இனிமையானவன்

🌺7.ஜநார்தன* = மக்களால் துதிக்கப்படுபவன் (அஞ்ஞானத்தை அழிப்பவன்)

🌺8.*மாதவ* = திருமகளுக்குத் தலைவன்

🌺9.வார்ஷ்ணேய* = வ்ருஷ்ணி குலத்தில் உதித்தவன்

🌺10.அரிசூதன* = எதிரிகளை அழிப்பவன்

🌺11.கேசிநிஷூதன* = கேசி என்ற அசுரனை அழித்தவன்

🌺12.*வாசுதேவ* = வசுதேவனின் மைந்தன், = எல்லா உயிர்களிடத்திலும் இருப்பவன்

🌺13.புருஷோத்தம* = பரம புருஷன்(புருஷர்களில் உத்தமன்)

🌺14.*பகவான்* = ஷட்குண சம்பன்னன் (சக்தி,செலவம செல்வம், அழகு, புகழ், அறிவு, துறவு முழுமையாக உடையவர் )

🌺15*யோகேச்வர* = யோகிகளின் தலைவன்/ இறைவன்

🌺16*விஷ்ணு* = எங்கும் வியாபகமாய் இருப்பவன் ( உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன்)

🌺17*ஜகந்நிவாச* = உலகுக்கு இருப்பிடம்

🌺18.*யாதவ* = யதுகுலத்தில் தோன்றியவன்🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

மநுஷ்யராகப் பிறந்த எல்லோரும் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ரு கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்களுக்கு நம்மாலானதைச் செய்ய வேண்டும். ஆதித்யம் (ஓர் அதிதிக்காவது உணவு படைப்பது) அல்லது திருக்குறளிலே ‘விருந்து’ என்பது இதுதான். இது மனுஷ்ய யக்ஞம். பிரம்ம யக்ஞம் என்று இன்னொன்று. ‘பிரம்மம்’ என்றால் பல அர்த்தம். இந்த இடத்தில் ‘வேதம்’ என்று அர்த்தம். வேதம் ஓதுவதும், ஓதுவிப்பதுமே பிரம்ம யக்ஞம். இது ரிஷிகளின் திருப்திக்காக ஏற்பட்டது. இது எல்லோரும் செய்வதல்ல. எல்லோருக்காகவும் பிராமண ஜாதியினர் மட்டும் செய்வது. எல்லோரும் செய்வதற்காக ஏற்பட்ட இன்னொரு கர்மம் ‘பூத யக்ஞம்’. அதாவது மனுஷ்ய ஜீவனாக இல்லாத ஜீவராசிகளுக்குக்கூட நம் அன்பைத் தெரிவித்து உணவூட்டுகிற காரியம். பித்ரு யக்ஞம், தேவ யக்ஞம், மநுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் இவற்றை எல்லோரும் ஏதோ ஒரு ரூபத்தில் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றோம். வைதிகத் தர்மப்படி அவரவரும் தங்களுக்கான தொழிலைச் செய்து ஈசுவரார்ப்பணம் பண்ணுவதே அவரவருக்கும் பிரம்ம யக்ஞம் என்று சொல்லலாம்.

ravi said…
வேத நெறியில் சொல்லப்பட்டதையே ஏறக்குறைய திருவள்ளுவரும்,

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

‘தென் புலத்தார்’ என்பது பித்ருக்கள். பித்ருக்களான தாய் தந்தையார்களுக்கும் மூதாதையர்களுக்கும் நமது கடமைகளை எல்லோரும் அவசியம் செய்தாக வேண்டும். ‘மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ’ என்று வேத மாதாவும், இங்கே நம் எல்லோருக்கும் வேத ஸாரத்தையே லகுவாகப் பிழிந்து கொடுத்த அவ்வை, ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்றும் சொல்லுகிறார்கள். தாய் தந்தையர் ஜீவிய வந்தர்களாக இருக்கையில், அவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்ற சௌக்கியமெல்லாம் செய்து தரவேண்டும். தாய் தந்தையர் நமக்காக ஆதியில் செய்துள்ள தியாகங்களுக்கு நாம் பிரதியே செய்ய முடியாது. அவர்களது மனம் கோணாமல் அவர்களை வைத்துக் காக்க வேண்டும்.

ravi said…
அவர்கள் இந்த உலகத்தை விட்டுப்போன பிற்பாடும், அவர்களுக்காக சாஸ்திரப் பிரகாரம் தர்ப்பணம், சிரார்த்தம் (திதி) இவற்றை அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும்.

பெற்றோர் உயிரோடு இருக்கும் வரையில் அவர்களை வைத்துப் பராமரிக்க வேண்டும் என்பதை ‘சீர்திருத்த’க்காரர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் மரண மடைந்த பின் பித்ரு காரியம் செய்வது அவர்களுக்குப் பரிகாசமாக இருக்கிறது.

‘எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே இருக்கின்றன; அல்லது கண் முன்னாலேயே ஒருத்தன் எடுத்துப் போனான். அல்லது சாப்பிட்டுவிட்டான். பிதிரர்கள் எங்கேயோ மறு ஜன்மா எடுத்து விட்டார்கள் என்று நீரே சொல்கிறீர். அப்படியிருக்க இங்கே உள்ள வஸ்து அங்கே போய் அவர்களை சேருகிறது என்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா? என்று சீர்த்திருத்தக்காரர் கேட்கிறார். அவர் வாய்விட்டுக் கேட்கிறார்; உங்களில் பலருக்கும் மனசுக்குள் இப்படிச் சந்தேகம் இருக்கலாம்.

ravi said…
உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்:

ஒருவர் பையனைப் பட்டணத்தில் படிக்க வைத்திருந்தார். அவர் பரிட்சைக்குப் பணம் கட்டவேண்டியிருக்கிறது. அதுவும் மறுநாள் கட்ட வேண்டியிருந்தது. உடனே அப்பாவுக்கு, ‘தந்தி மணியார்டரில் பணம் அனுப்பு’ என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித்தனியாகத் தெரியும். பிள்ளையோ ‘தந்தி மணியார்டர்’ அனுப்பும்படி எழுதியிருந்தான். அப்பா தபாலாபீஸுக்குப் போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத் தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஓட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, “சரி, உம்முடைய பணம் சேர்ந்துவிடும். அனுப்பியாகிவிட்டது” என்றார். குமாஸ்தா பணத்தை வாங்கி பெட்டியில் போட்டதையும், ஓட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமலிருப்பதையும் பார்த்த அப்பாக்காரர், “என் பணம் இங்கேதானே இருக்கிறது! அதில் ஓட்டை ஒன்றும் போட்டு அனுப்பவில்லையே! அது எப்படிப் போய்ச் சேரும்” என்று கேட்டார். “அது போய்ச் சேர்ந்துவிடும்” என்று மறுபடியும் குமாஸ்தா சொன்னார். “கட்டுக் கடகட” என்று தந்தியும் அடித்தார். ‘ஏதோ லொட்டு லொட்டென்று சப்தம் பண்ணுகிறான். சேர்ந்துவிடும் என்று சொல்கிறான். ரூபாய் இங்கே இருக்கிறது. லொட் லொட்டென்று கட்டையை இங்கே அடித்தால் அங்கே எப்படிப் போய்ச் சேரும்’ என்று அப்பாவுக்குச் சந்தேகம் வந்து விட்டது.

ravi said…
ஆனாலும் பணம் போய்ச் சேர்ந்து விட்டது. தர்ப்பணம் முதலியன பண்ணுவதும் அந்த மாதிரியே ஆகும். நாம் எதைக் கொடுத்தாலும் அதற்கான சட்டப்படி கொடுக்க வேண்டும். சாஸ்திரம் என்கிற சட்டம் விதித்தபடி நாம் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிற பிதுர் தேவதைகள் அது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்து விடுவார்கள். பிதிருக்கள் மாடாகப் பிறந்திருந்தால் வைக்கோலாக்கிப் போட்டுவிடுவார்கள். குதிரையாகப் பிறந்திருந்தால் புல்லாக்கிப் போடுவார்கள். பிதுர் தேவதைகளுக்கு பரமேசுவரன் இப்படி உத்தரவு பண்ணி, இதற்கான சக்தியும் தந்திருக்கிறார். ஆகையால் சிரார்த்தத்தன்று கொடுப்பதைப் பெற்றுக் கொள்ள அப்பா நேரில் வர வேண்டியதில்லை.

தந்தி மணியார்டர் செய்தவனுடைய பணமோ வாங்கிக் கொள்ளுகிறவனிடம் நேராகப் போவதில்லையல்லவா? மணியார்டர் பெறுகிறவன் வேறு தேசத்தில் இருந்தால் அங்கே நம் ரூபாய் நோட்டுச் செல்லவே செல்லாது. இங்கே ரூபாயைக் கட்டினாலும் வெளி தேசத்தில் டாலராகவோ, பவுனாகவோ மாற்றித்தரவும் ஏற்பாடு இருக்கிறது. ஆனால், நம் ஊரில் டாலரையோ பவுனையோ கட்ட முடியாது. இங்கே செல்லுபடியாகிற ரூபாயைத்தான் ஏற்றுக்கொள்ளுவார்கள். அப்படியே சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எள், தண்ணீர், வாழைக்காய் இதுகளை இங்கே தந்தால், பிதிருக்கள் இருக்குமிடத்தில் அவர்களுக்கு ஏற்ற உணவாக மாற்றித் தரப்படும்.

பிதிருக்களிடம் நமக்குள்ள நன்றி மனோபாவமும், சாஸ்திரத்தில் நமக்குள்ள சிரத்தையுமே முக்கியம். “இன்னொருவனுடைய ஆரோக்கியத்துக்காக நான் ‘டோஸ்ட்’ சாப்பிடுகிறேன்” என்று பார்ட்டியில் வெள்ளைக்காரர்களும் வேறொருவன் பேரைச் சொல்லிக் கொண்டு தாங்களே போஜனம் செய்கிறார்கள். தங்களுடைய மனோபாவத்தின் சக்தியால் இன்னொருவனுக்கு ஆரோக்கியம் உண்டாகும் என்று நம்பி அப்படிச் செய்கிறார்கள். சிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம். சிரத்தை நமக்கு முக்கியம். ஒரு காரியம் என்று பண்ண ஆரம்பித்தால் அதற்குரிய சட்டப்படிதான் பண்ண வேண்டும். லெட்டர் எழுதினால், “இப்படித்தான் அட்ரஸ் எழுதுவேன்; அந்தத் தபால் பெட்டியில் போடுவானேன்? எங்களகத்தில் அதைவிட நல்ல பெட்டி செய்து அதில் போடுவேன்” என்று சொல்லலாமா? காரியமில்லாத மனோபாவமாக இருக்கிற வரையில் அன்பு, பக்தி, ஞானம் இவற்றைக் கட்டுப்பாடின்றிச் செலுத்தலாம். காரியம் என்று செய்கையில் அதற்காக ஏற்பட்ட விதியை விடவே கூடாது.
(இன்று மத்யாஷ்ட்டமி)
ravi said…
🌹🌺 'About the 18 Names of Lord Krishna in Gita.... - A Simple Story to Explain 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹 1. Hrushikesa* = Ison for the senses

🌺 2. Achyuta* = One who does not slip from his position

🌺3*Krishna* = the black one,”
= Krush" means earth." "Na" means the bringer of joy and therefore the bringer of joy to those on earth.
= One who attracts everyone

🌺 4. Kesava* = one with beautiful hair,
= K means Brahma Esa means Lord Shiva who creates and preserves them,
= The slayer of the monster Casey

🌺5. Govindan*= Go means cow and senses so cow and
= Giver of pleasure to the senses

🌺 6. *Madhusudana* = He who destroys the demon Madhu,
= Sweet as wine (honey).

🌺7.Janardhana* = He who is praised by people (Destroyer of ignorance)

🌺 8. *Madava* = Head of women

🌺 9.Varshneya* = One who came from the Vrushni clan

🌺 10. Arisudhana* = Destroyer of enemies

🌺 11. Kesinishudana* = Destroyer of the monster named Kesi

🌺 12. *Vasudeva* = Brother-in-law of Vasudeva, = He who exists among all living beings.

🌺 13. Purushottama* = Supreme Lord

🌺 14. *Bhagavan* = Shatguna Sampannan (Full of power, riches, beauty, fame, knowledge, austerity)

🌺 15 * Yogechvara * = Chief of Yogis / Lord

🌺 16*Vishnu* = Omnipresent (Lord who is omnipresent and omnipresent)

🌺17*Jagannivasa* = abode to the world

🌺 18. *Yadava* = One who appeared in Yatukula🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…



"இசை அரசியின் இக்கட்டைப் போக்கிய பெரியவா"

(இந்த லோகத்துல எந்த மூலைல என்னோட பக்தர்களுக்கு என்ன நடந்தாலும் எனக்குத் தெரியும்.அவாளை நான் இருந்த இடத்துலேர்ந்தே காப்பாத்துவேன்!'னு சொல்லாமலே உணர்த்திட்ட மகாபெரியவா)

இன்று எம்.எஸ்.பிறந்த நாள்- 16-09-2022

கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-- குமுதம் லைஃப்
-

(இந்த கட்டுரை பலவேறு கட்டுரையாளர்கள் எழுதியதை போஸ்ட் பண்ணியிருக்கேன். இது ரொம்ப அற்புதமாய் ரசித்து எழுதியிருக்கிறார் ரா.வே)

ஒருநாள் பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா எம்.எஸ். கொண்டு வந்திருந்த பழத்தட்டை மகாபெரியவா முன்னால் வைச்சுட்டு, நமஸ்காரம் பண்ணினா.

"பெரியவா, பாரத தேசத்தோட சார்புல ஐ.நா.சபையில சங்கீதக் கச்சேரி ஒண்ணு பண்ணறுதுக்காக என்னை அழைச்சிருக்கா. உங்க உத்தரவைக் கேட்டுண்டு பதில் சொல்றதா சொல்லியியிருக்கேன்!" பவ்யமாகச் சொன்னா.

மெல்லிசான புன்னகையோட ஆசிர்வாதம் பண்றாப்புல கையை உசத்தின ஆசார்யா,

"
ravi said…
ரொம்ப நல்லது.இது உனக்கு மட்டுமான கௌரவம் இல்லை. நம்ம தேசத்தோட கௌவரத்துக்கானது. அதனால் கண்டிப்பா போய்ட்டுவா!" அப்படின்னு சொன்னதோட, "ஒரு பாட்டு எழுதித் தரேன். அதை அவஸ்யம் அங்கே பாடு!"ன்னு சொல்லிட்டு, பாட்டை எழுதிக் குடுத்தார்.

லோக மக்கள் சண்டை சச்சரவு இல்லாம, ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்கற அர்த்தத்துல அமைஞ்ச அந்தப் பாட்டு,"மைத்ரீம் பஜத...!"ன்னு தொடங்கினதால, அதுக்கு அந்தப் பேரையே வைச்சார்.

ravi said…
பரமாசார்யாளோட ஆசிர்வாதமே பெரிய சந்தோஷம். அதைவிடப் பெருசா, அவரே ஒரு பாட்டை எழுதிக் குடுத்து அதை அவஸ்யம் பாடுனு சொல்றார்னா,அந்த சந்தோஷத்தை எப்படிச் சொல்றது? புளகாங்கிதத்துல கண்லேர்ந்து ஆனந்த பாஷ்யம் சொரிய,அந்த பாட்டை வாங்கி பத்திரப்படுத்திண்டு புறப்பட்டார் எம்.எஸ்.

ஆச்சு. குறிப்பிட்ட நாள்ல குறிச்ச நேரத்துல ஐ.நா.சபையில பாடறதுக்காக போய் இறங்கினா எம்.எஸ். சரியா அதே நேரத்துல தடங்கல் மாதிரி ஒரு லாக் ஏற்பட்டது. ஏரோப்ளேன்ல போய் இறங்கறவாளுக்கு ஜெட்லாக்னு ஒரு பிரச்னை ஏற்படும்னு சொல்வா. அந்தமாதிரி ஏதாவது ஏற்பட்டிருந்தா பரவாயில்லை.சமாளிச்சுண்டுடலாம். இவாளுக்கு ஏற்பட்டது, த்ரோட் லாக். ஆமாம் காற்றினிலே வரும் கீதம்னு பாடினவாளோட வாய்ஸ்ல வெறும் காத்து மட்டும் வர்ற மாதிரி தொண்டை அடைச்சுண்டுடுத்து.

ravi said…
ஐ.நா.சபையில பாடறுதுக்கு இன்னும் ரெண்டு மூணு நேரம்தான் இருக்குங்கற சூழ்நிலையில என்ன செய்யறதுன்னே புரியலை அவாளுக்கு. கூடப் போயிருந்த இசைக் கலைஞர்கள் எல்லாம் தெரிஞ்ச கைவைத்தியத்தை செஞ்சு பார்த்தா.ஊஹூம் எதுவும் கைகொடுக்கலை.

அழறதுக்குக்கூட முடியாம அப்படியே வாயடைச்சு பரிதவிச்சு நின்னுண்டு இருந்த சமயத்துல அவாளுக்கு பரமாசார்யாளோட ஞாபகம் வந்திருக்கு.'இது உனக்கான கௌரவம் இல்லை. பாரத தேசத்துக்கானது கண்டிப்பா நீ பாடணும்னு!' சொல்லி ஒரு பாட்டையும் எழுதிக்குடுத்த அந்த மகானோட வாக்கு ஒருபோதும் பொய்க்காது.கண்டிப்பா அவா காப்பாத்துவார்!'னு ஒரு நம்பிக்கை மனசுக்குள்ளே தோணித்து.உடனே,என்ன ஆனாலும் பாத்துக்கலாம்னு, தங்கியிருந்த ஜாகைலேர்ந்து ப்ரோக்ராம் நடக்கப்போற இடத்துக்கு கிளம்பிட்டா.

https://chat.whatsapp.com/I66BlGEcAqaGuQ1lS8YFWj

ஐ.நா.சபை கூடத்துல அவா போய் உட்கார்ந்ததும் சபையே நிசப்தமாச்சு.தம்புராவோட ஸ்ருதி மெதுவா ரீங்காரமிட ஆரம்பிச்சுது.'கண்ணை இறுக்க மூடிண்டு,கையைக் கூப்பிண்டு,'இக்கட்டு.இக்கட்டு பண்ணாம நீங்கதான் காப்பாத்தணும்! ஆசார்யாளே நீங்க விட்ட வழி!'ன்னு நினைச்சுண்டு மெதுவா வாயைத் திறந்தா இசையரசி. வழக்கத்தைவிடவும் ரொம்பவே இனிமையான கானம் மழையா பெய்ய ஆரம்பிச்சுது.

தாளம்,லயம்,பாவம் எல்லாம் கைகோர்த்துக்க, சப்த ஸ்வரமும் ஸ்ருதி தவறாம சங்கிலியா இணைஞ்சு சங்கீதம் ஒலிச்சுது. நிகழ்ச்சியோட நிறைவா மகாபெரியவா எழுதிக்குடுத்த 'மைத்ரீம் பஜத' பாடலைப்

பாடிமுடிச்சா. அவ்வளவு நேரமும் அந்த கானசாகரத்துல ஐக்கியமாகி இருந்த ஐக்கிய நாடுகள் சபையோட உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் பண்ணினா.

கண்ணுல நீர்க் கசிய எழுந்து நின்ன எம்.எஸ், மனசுக்குள்ளே,"ஆசார்யாளே அத்தனை பெருமைக்கும் காரணம் நீங்கதான்!. ஒலிச்சது என்னோட குரல் இல்லை. கடவுளான உங்க அனுகிரகத்தால் வந்த குரல். இது'ன்னு நினைச்சுண்டு நெகிழ்ந்து நின்னா.

அங்கேர்ந்து திரும்பி வந்ததும்,பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா.அவா எதுவும் சொல்றதுக்கு முன்னாலேயே " என்ன பாடமுடியாதபடிக்கு தொண்டை, சண்டை போட்டுதாக்கும்! இருந்தாலும் சமாளிச்சு பாடிட்டே போல இருக்கு! சந்த்ரமௌளீச்வரரோட க்ருபை உனக்கு எப்பவும் உண்டு!" அப்படின்னு சொல்லி ஆசிர்வதித்தார் ஆசார்யா.

'இந்த லோகத்துல எந்த மூலைல என்னோட பக்தர்களுக்கு என்ன நடந்தாலும் எனக்குத் தெரியும்.அவாளை நான் இருந்த இடத்துலேர்ந்தே காப்பாத்துவேன்!'னு சொல்லாமலே உணர்த்திட்ட மகாபெரியவா அந்த மகேஸ்வரனாகவே தெரிஞ்சார் எல்லாரோட கண்ணுக்கும்.


ravi said…
"வாழ்வின்
யதார்த்தம்" பற்றி நம்
பெரியவாள்
*"தெய்வத்தின் குரல்"* என்ற புத்தகத்திலிருந்து,,,

நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை.

உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும். ஏதோஒரு பொறுப்பும் இருக்கும்.

அது அவர்களின் அறியாமையைத் தவிர வேறில்லை. எது உங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள்.

உங்கள் உடல் உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே!

உங்களின் உடம்பே உங்கள் பேச்சை கேட்காத போது, உலகில் வேறு யார் கேட்பார்? உடலை விடுங்கள்.

உங்களின் தலைமுடி கூட உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. முடி நரைப்பதும், உதிர்வதும், வழுக்கை விழுவதும் யாருக்குத் தான் பிடிக்கும்? முடி நரைப்பதையோ, உதிர்வதையோ உங்களால் தடுக்க முடியவில்லையே!

உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு? தெரியாது...

உண்ட உணவை நீங்களா ஜீரணம் செய்கிறீர்கள்? அதுவாகவே ஜீரணமாகிறது. இருதயத்தையும், குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா இயக்குகிறீர்கள்?

இல்லையே.... இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள் கட்டுப் பாட்டிலும், பொறுப்பிலும் இல்லாத போது, உலகில் பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது அறியாமை.

மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது! மரம் உங்களைக் கேட்டா முளைக்கிறது!

உலகம் உங்களுடைய பொறுப்பிலாசுழலுகிறதுநட்சத்திரங்கள் உங்களது பொறுப்பிலாஜொலிக்கிறது!

நீங்கள் தான் வானிலுள்ள கோள்களை கீழே விழாமல் அந்தரத்தில் தாங்கிப் பிடிப்பவரோ!

உங்கள் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் எவ்வளவு அறியாமை! எதுவும் உங்கள் பொறுப்பில் இல்லை.

அனைத்துமான இறைவன் உங்கள் முடியைக் கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை. அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ, அது அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும்.

உங்களுக்கு ஏன் வீண் கவலை... எதுவும் உங்கள் கையில் இல்லை.... அமைதியாய் இருங்கள். கடமையை சரிவர செய்யுங்கள். போதும்.

ஜய ஜய சங்கர!
ஹர ஹர சங்கர!

காஞ்சி சங்கர!
காமகோடி சங்கர!

ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்!

எல்லாம் வல்ல நம் குருவின் திருவருளால், இன்றைய நாள் இனிய நாளாக அன்பு பிரார்த்தனைகள்! 🙏🙏🌹🌹🪷🪷🙏🙏
ravi said…
*கந்தர் அலங்காரம் 58* 🐓🦚🙏

*அலங்காரம்-15*

💐💐💐💐

குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த,
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்! இரு நான்கு வெற்பும்,
அப்பாதி யாய்விழ, மேருவும் குலுங்க, விண்ணாரும் உய்ய,
சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடை சண்முகனே!
ravi said…
*வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில்* = இந்தப் போலியான பாச நாடகத்தில்
அஞ்சு பேரு டான்ஸ் ஆடுவாங்க!

* *கண்* = பார்வை = என் பார்வைக்கு என்ன படுதோ, அதான் சரி!

அடுத்தவன் என்ன தான் சொல்லுறான்னு பேசக் கூட விட மாட்டோம்!

நான் அப்படித் தான் இருப்பேன்! நீ எனக்கு, இப்படித் தான் இருக்கணும்! :)

* *காது* = கேட்டல் = என்னைப் புகழ்ந்து, என் சார்பா மட்டும் தான் பேசணும்!

நான் விரும்புவேன்! அதையே நீயும் பேசணும்!
* *நாக்கு* = ருசித்தல் = என் ருசியே எனக்கு முக்கியம்! நல்ல ருசியா? தீய ருசியா? - கவலையில்லை!

எனக்குப் பிடிச்ச ருசியா! அது போதும்!
* *மூக்கு* = வாசனை = என் காரியத்துக்கு மட்டுமே தான் மூச்சு விடுவேன்!

அதுக்கு மட்டுமே உயிர் வாழ்வேன்! ஊருக்கே நாறினாலும், எனக்கு மட்டும் வாசனை!
* *உடல்* = உறவு = உணர்ச்சி = பாசம் காட்டுவது போல் உடலாடுவேன்!

ஆனால் அது அன்பால் விளைந்த கூடல் அல்ல! தன்னை இழக்கும் கூடல் அல்ல! தன்னை மட்டும் தீர்த்துக் கொள்ளும் சுயநலக் கூடல்!🙏🙏🙏
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 343*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

தீ⁴யன்த்ரேண வசோ-க⁴டேன கவிதா-குல்யோபகுல்யாக்ரமைர்-
ஆனீதைஶ்ச ஸதாஶிவஸ்ய சரிதாம்போ⁴-ராஶி-திவ்யாம்ருதை:
ஹ்ருத்-கேதார-யுதாஶ்-ச ப⁴க்தி-கலமா: ஸாபல்யம்-ஆதன்வதே
துர்பி⁴க்ஶான்-மம ஸேவகஸ்ய ப⁴கவன் விஶ்வேஶ பீ⁴தி: குத :

धीयन्त्रेण वचोघटेन कविताकुल्योपकुल्याक्रमै-

रानीतैश्च सदाशिवस्य चरिताम्भोराशिदिव्यामृतैः ।

हृत्केदारयुताश्च भक्तिकलमाः साफल्यमातन्वते

दुर्भिक्षान् मम सेवकस्य भगवन् विश्वेश भीतिः कुतः
ravi said…
சதாசிவஸ்ய சரித அம்போராஸி திவ்யாம்ருதை:” – பரமேஸ்வரனோட சரிதம் என்கிற திவ்ய “அம்போராஸி”- அம்ருதமான ஜலத்தை என்னுடைய கவிதை என்கிற வாய்க்கால் வழியா

“ஆனீதைஶ்ச” – கொண்டு வந்திருக்கேன். எங்க கொண்டு வந்திருக்கேன் னா “ஹ்ருத்-கேதார யுதாஶ்-ச” – மனம் என்கிற வயலுக்கு கொண்டு வந்து

“ப⁴க்தி-கலமா:” – பக்திங்கற பயிரை விளைச்சி இந்த ஜலத்தை பாய்ச்சிண்டே இருந்ததுனால

“ஸாபல்யம்-ஆதன்வதே” – அது நன்னா விளைஞ்சிடுத்து . பலன் கொடுத்துடுத்து .இனிமே எனக்கு பசிக்கொடுமையே கிடையாது அப்டினு சொல்றார்.

ரொம்ப அழகானதொரு ஸ்லோகம்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 339* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

அனுத்தமோ துராதர்ஷ :
*க்ருதஜ்ஞ* : க்ருதிராத்மவான்||9

💐💐💐
ravi said…
கௌரவ சபையில் அபலைப் பெண்ணாக நின்றாள் திரௌபதி. ஆயர் குலத்தில் பிறந்த ஒருவனின் உதவியை நீ நாட வேண்டியிருக்கும்
என்று சிவபெருமான் கூறிய வார்த்தை அவள் காதில் ஒலித்தது. “கோவிந்தா!காப்பாற்று!” என்று கண்ணபிரானை அவள் அழைத்தாள்.


“இவள் அன்று தன் புடவையிலிருந்து துணியைக் கிழித்து என் காயத்துக்குக் கட்டுக் கட்டினாளே!இவளுக்கு நம் நன்றிக் கடனைச் செலுத்த வேண்டும்!”
என்ற எண்ணத்தில் மிக நீண்ட புடவையைச் சுரந்து அருள் புரிந்தான் கண்ணன்.
ravi said…
வைரம் என நெஞ்சம் கொண்டவளே வைடூர்யமாய் ஜொலிப்பவளே

கண் இரண்டும் போதுமோ உன் காட்சி காண ...

கோடி விழிகளும் போறுமோ உன் காந்தி தனை கண்டிட

கோடி தேவிகளும் தேவர்களும் பார்த்து முடிக்காத உன் திருமேனி தனை

பாவி எனக்கு பாங்குடன் பார்க்க வைத்தாய்

தேடி என்னை நாடி வந்தாய்

என் நாடி நரம்பெல்லாம் நாணி கோணி விட்டதே தாயே ...

இந்த நாயேனையும் நயந்து நீ ஏனோ நினைவின்றி ஆண்டு கொண்டாய் ..

பேயேன் உனை அறியும் அறிவும் தந்தாய்

என்ன பேறு பெற்றேன் என் தாயே

மலை மகளே செங்கண் மால் திருத்தங்கச்சியே

காஞ்சி வாழ் மன்னன் பெற்ற சீதனமே ..

அவன் நாவில் குடி புகுந்ததே தெய்வத்தின் குரலாய்

உலகமெங்கும் சிம்ம நாதம் புரிகின்றாய் ..

சீமந்த வகுடினிலே உதிக்கின்ற சூரியனாய்

என் உள்ளம் தனில் உன் கதிர் ஒளி பாய்ச்சுகின்றாய் தினம் தினம் 🙏🙏🙏


🙏🙏🙏
ravi said…
கண்ணா*

உன் நாமம் எனும் கற்கண்டு சுவைத்தேன் ..

அதன் இனிமை என்னென்று உரைப்பேன் .. ??

மலர் கண்கள் எனும் உன் நாமம்

எருமை இழுக்க முடியுமோ ?

கொண்டு போய் கோணியில் நிரப்ப முடியுமோ ?

எங்கு எடுத்து செல்லினும் சுங்கவரி உண்டோ .. ?

சரக்கு அதி உத்தமம் அன்றோ

லாபம் அதிகம் தரும் பொருள் அன்றோ *கண்ணா* ?

நஷ்டம் வருமோ *கண்ணா* ?

துர்நாற்றம் வீசுமோ *கண்ணா* ?

திருடன் எடுத்து செல்லினும் மதிப்பு குறையுமோ *கண்ணா* ?

கட்டெறும்பு தின்றாலும் குறையாது

சந்தை சென்று விற்க முடியாது .

என் நாவில் என்றும் இனிக்கும் கற்கண்டு உன் நாமம் ஒன்றே அன்றோ *கண்ணா*
ravi said…
🌹🌺"'Guruyurg Kannan's Divya Mane was mesmerizing everyone..... A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹 Once upon a time there lived an old woman. She is an ardent devotee of Guruvayurg Kannan. She used to go to Guruvayurappan's shrine every morning and evening to have darshan and worship Manamuruga.

🌺 One day while going home after darshan of “Siveli” there was heavy rain with strong wind. There were no street lights in those days. Lost in the dark.

🌺 With great anxiety, she kept chanting the names of Guruvayurappan. Then, a small boy appeared in front of her and said, “Grandma, don't worry. I will take you home."

🌺Both of them got soaked in the rain. They reached grandmother's house while talking.

🌺When he reached home, he thanked the boy and asked, "What is your name?" she asked. To which he said 'Gopalan'. The old woman said, “I want to give you something for the help you have done, what do you want? Listen,” she said.

🌺 He said, “My clothes are wet in the rain. Just give me one kaupeenam from your saree" he said. When she looked around there was a red saree.

🌺 She tore a small piece from it and gave it to him. He also happily took it and went.

🌺The next morning, when Nirmalya opened the door of the sannidhi for darshan, everyone was amazed to see a red colored kaupeenam tied to Srikannan.

🌺 How does Kannan, who was well-decorated on the first day, present himself with dignity? They were surprised.. Kannan's divya mane was mesmerizing everyone.

🌺 At that time the old woman who had come for darshan as usual was happy and told everyone what had happened the previous day.

🌺She also showed her slightly torn saree. Everyone was amazed to see that its torn part was Guruvayurappan's Kaubheenam.

🌺The old woman was happy by recounting this divine play and Guruvayurappan's favor to her.

🌺 Since that day
It is customary to extract red cowpeas at night to Sri Guruvayurappan. -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺"‘ *குருவாயூர்க் கண்ணனின் திவ்ய மேனி அனைவரையும் மயக்கும் வண்ணம் இருந்தது* ..... *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------🌺🌹முன்னொரு சமயம் ஒரு வயதான மூதாட்டி வாழ்ந்து வந்தாள். அவள் குருவாயூர்க் கண்ணனின் தீவிர பக்தை. அவள், ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் குருவாயூரப்பனின் ஸன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்து, மனமுருக வழிபடுவது வழக்கம்.

🌺ஒரு நாள் “சீவேலி” தரிசனம் முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது பெருங்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நாட்களில் சாலை விளக்குகள் கிடையாது. இருட்டில் வழி தவறிவிட்டது.

🌺மிகுந்த கவலையோடு, குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே சென்று கொண்டிருந்தாள். அப்போது, ஒரு சிறிய பையன் அவள் முன் தோன்றி, “ பாட்டி, கவலைப் படாதீர்கள். உங்களை நான் வீட்டில் கொண்டு விடுகிறேன்” என்று சொன்னான்.

🌺மழையில் இருவரும் தெப்பமாக நனைந்து விட்டனர். பேசிக் கொண்டே பாட்டியின் வீட்டை அடைந்தார்கள்.

🌺வீட்டை அடைந்ததும் அந்த சிறுவனுக்கு நன்றி சொல்லி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டாள். அதற்கு அவன் ‘கோபாலன்’ என்று சொன்னான். மூதாட்டி, “ நீ செய்திருக்கும் உதவிக்கு உனக்கு ஏதாவது நான் தர வேண்டும், என்னவேண்டும்? கேள்” என்று சொன்னாள்.

🌺அவனும், “ மழையில் என் துணி நனைந்துவிட்டது. எனக்கு உம்முடைய புடவையிலிருந்து ஒருகௌபீனம் தாருங்கள் போதும்” என்று கூறினான். அவள் சுற்றிப் பார்த்த பொழுது ஒரு சிவப்புப் புடவை இருந்தது.

🌺அதிலிருந்து ஒரு சிறு பகுதியைக் கிழித்து அவனிடம் கொடுத்தாள். அவனும் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டு சென்றான்.

🌺அடுத்த நாள் காலை, நிர்மால்ய தரிசனத்திற்காக ஸன்னிதியின் கதவைத் திறந்தபோது, ஸ்ரீகண்ணனுக்கு சிவப்பு வர்ணக் கௌபீனம் கட்டியிருப்பதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.

🌺முதல் நாள் நன்கு அலங்காரம் செய்யப்பட்ட கண்ணன் இப்போது எப்படி கௌபீனத்தோடு காட்சி அளிக்கிறான்? என்று ஆச்சர்யமடைந்தனர்.. கண்ணனின் திவ்ய மேனி அனைவரையும் மயக்கும் வண்ணம் இருந்தது.

🌺அப்போது வழக்கம்போல் தரிசனத்திற்காக வந்திருந்த மூதாட்டியும் மகிழ்ந்து அனைவரிடமும் முந்தைய நாள் நடந்தவற்றைச் சொன்னாள்.

🌺தன்னுடைய சிறிது கிழிந்த புடவையையும் காண்பித்தாள். அதன் கிழிந்த பகுதி, குருவாயூரப்பனின் கௌபீனமாக இருப்பதைக் கண்ட அனைவரும் வியந்தனர்.

🌺மூதாட்டி, இந்த தெய்வீக நாடகத்தையும், குருவாயூரப்பன் தனக்கு அனுக்ரஹம் செய்ததையும் எண்ணியெண்ணி ஆனந்தித்தாள்.

🌺அன்று முதல்
ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இரவில் சிவப்புக் கௌபீனம் சாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது.
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
புரட்டாசியில் ஒரு பெருமாள் கதை 🙏🙏
________&&&____

அரச்சனை முடிந்து மணியடித்து தீபாராதனை காட்டியபடி சொன்னார் அர்ச்சகர் " லக்ஷ்மி தேவி.. நன்னா தாயாரை தரிசனம் பண்ணுங்கோ.. ஒரு மண்டலம் தர்சனம் பண்ணினா ஐஸ்வர்யம் கொட்டும். அவ்வளவு சக்தி தாயாருக்கு! ''
ராமசந்திரன் பயபக்தியுடன் வணங்கினார்.

'' இப்போ பெருமாள் சன்னதிக்கு போலாம் '' என்று தாயார் சன்னிதியை பூட்டிவிட்டு நடந்தார்.

அது ஒரு புராதனமான கோவில்.
ராமசந்திரன் தன் முன்னோர்கள் அங்கு வழிபட்டதாக அறிந்திருந்தார்.
கூகிளீல் விலாசம் தேடி கண்டுபிடித்து தன் குடும்பத்தாருடன் மகனின் காரை தானே ஓட்டி வந்திருந்தார்.
மெயின் ரோடிலிருந்து கரடு முரடான சாலையில் மூன்று கிலோமீட்டர் பயணத்தின் பின்னர்தான் கோவிலை அடைய முடிந்தது.

பத்தாம் வகுப்பு படிக்கும் பேரன் கவுதம் புலம்பிக்கொண்டே வந்தான்.
' இப்படி ஒரு மட்டமான ரோடு இருக்குன்னு தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன்.'' என்று தாத்தாவை செல்லமாக கடிந்து கொண்டான்.

தாத்தாவுக்கு பேரன் மீது கொள்ளை பிரியம். அவனுக்கும் இவர் மீது அன்புதான். ஆனால் எப்போதும் அவருடைய கருத்துக்கெதிராக பேசி வம்புக்கு இழுப்பான். அவன் இந்தக் காலத்து பையன். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. கடவுள் என்று ஒருவர் இல்லை என்று விதண்டா வாதம் செய்வான்.
நாளாவட்டத்தில் அவனுக்குக் கடவுள் நம்பிக்கை தானாகவே வரும் என்று ராமசந்திரன் நம்பினார்.

ஏற்கெனவே அர்ச்சகரிடம் தொலைபேசியில் பேசியிருந்ததால் அவர் நைவெத்தியத்துக்காக பொங்கல், வடை, சர்க்கரை பொங்கல் எல்லாம் செய்து வைத்திருந்தார்.

பெருமாள் சன்னதிக்கு போகும் வழியில் தாத்தாவிடம் கேட்டான் கவுதம் " தாத்தா மண்டலம்னா எத்தனை நாள்?''
'' நாப்பத்தெட்டு நாள்... ஏன் கேக்கறே...நீ வந்து சேவிக்கப்போறியா?''
'' அதில்லை தாத்தா..இவர் இத்தனை வருஷமா தர்சனம் ப்ண்ணிட்டு தானே ;இருக்காரு. ஆனா இவரு இன்னும் அழுக்கு வேஷ்டி துண்டு கட்டிட்டு ஏழையா இருக்காரே...''

' உஷ்...அவர் காதில் விழுந்தால் வருத்தபடுவாரு. கம்முனு வா'' என்றார் ராமசந்திரன் கடுமையாக.

பெருமாள் சன்னிதியிலும்
தீபாராதனை நைவேத்தியம் எல்லாம் முடிந்தது.

மந்திரம் ஓதி தேங்காய் பழங்கள் பிரசாதம் எல்லாவற்றையும் ஒப்படைத்தார் அர்ச்சகர்.
'' அப்ப நாங்க கிளம்பறோம்..ரொம்ப சந்தோஷம்'' என்ற ராமசந்திரன் 'எவ்வளவு செலவாச்சு' என்று கேட்டு அவர் சொன்ன தொகையுடன் ஐன்னூரு ரூபாய் சேர்த்து தந்தார்.

'' எனக்கு நூறு ரூபாய் போதும். பாக்கி நானூறு ரூபாய்க்கு உங்க பேரில் நாலு வெள்ளிக்கிழமை அர்ச்சனை பண்ணிடறேன்'' என்றார்.

காரில் எல்லோரும் ஏறியதும் ஸ்டார்ட் செய்தார் ராமசந்திரன். ஆனால் இஞ்சின் உறுமி உறுமி அடங்கியது. வண்டி கிளம்பவில்லை. எல்லோரும் தள்ளி ஸ்டார்ட் செய்தாலும் பயனில்லை. மக்கர் செய்தது...அவர் முகத்தில் கவலை படர்ந்தது . இந்த அத்துவானத்தில் எந்த மெகானிக்கை அழைப்பது ?

கோவிலைப் பூட்டிய அர்ச்சகர் அருகில் வந்தார்.
'' கார் பிரச்னையா...கவலை வேண்டாம். இந்த நெம்பருக்கு டயல் பண்ணிக் கொடுங்கோ..நான் பேசறேன். ''

அவர் போனில் பேசினார் '' இங்கே காரில் ஒரு சின்ன பிராப்ளம். வர்றியா?''

மோபெட்டில் ஒருவன் வந்தான். கார் பான்னெட்டை திறந்து பத்தே நிமிடத்தில் சரி செய்துவிட்டான். காரில் ஒரு ரவுண்டு அடித்து நிறுத்தினான். ராமசந்திரனுக்கு ஏக மகிழ்ச்சி.

ravi said…
இருனூறு ரூபாயை நீட்டினார். அர்ச்சகர் சொன்னார்
'' பணமெல்லாம் வேணாம். பர்சில் வையுங்க...இவன் என் பையன். பிரான்ஸ்லே நிச்சான் கார் கம்பெனியில் சீப் எஞ்சினியர்.லீவுலே வந்திருக்கான்..லீவு முடிந்ததும் ஒரகடம் பாக்டரியில் இன் சார்ஜாக பொறுப்பெடுக்கப் போறான்... ''

'' ஓ.. தட்ஸ் கிரேட் .'' என்றார் ராமசந்திரன் இன்ப அதிர்ச்சியுடன்

'' உங்களுக்கு ஒரே பையனா?''

'' ஒரு டாட்டர் இருக்கா. லண்டனில் டாக்டர்''

ராமசந்திரன் கவுதமை அர்த்தபுஷ்டியுட பார்த்தார் ' தாயாரை தினம் தரிசிக்கும் இவர் ஏழையா இருக்கார்னு சொன்னியே..இப்ப பார்த்தியா தேவியின் சக்தியை?'' என்று பார்வையால் வினவினார்.

அர்ச்சகர் கவுதம் அருகில் வந்தார் '' அம்பி, நீ ஸ்கூலில் எந்த டிரஸ் வேண்டுமானாலும் போட்டுகிட்டு போலாமா?''

'' இல்லை..யூனிபார்ம் இருக்கு..அதைத்தான் போட்டுக்கணும்''

'' அதே மாதிரிதான் இந்த கோவிலைப் பொறுத்தவரைக்கும் எனக்கும் இந்த வேஷ்டியும் துண்டும்.தான் யூனிபாரம். நான் பேண்ட் சர்ட் போட்டுகிட்டு பூஜை செஞ்சா நல்லா இருக்குமா...அதுதான். மத்தபடி கடவுளை நம்பினால் நிச்சயம் விரும்பினது கிடைக்கும். '' என்றபடி .

காரில் ஏறிய அனைவரும் அர்ச்சகருக்கும் அவர் மகனுக்கும் கையசைத்து விடை பெற்றார்கள்.

'' இதே மாதிரி வாராவாரம் ஒரு கோவிலுக்கு போலாமா தாத்தா'' என்று ஆவலுடன் கேட்ட கவுதமை ஆதரவுடன் தட்டிக்கொடுத்தார் ராமச்ச்ந்திரன். '' நிச்சயம் போவோம்''

காரை ரிப்பேர்;ஆக்கி கவுதமை ஆன்மீகத்துக்கு மாற்றிய இறைவனின் திருவிளையாடலை எண்ணி வியந்தபடி வண்டியை ஓட்டலானார்.
ravi said…
பிரேத ஸம்ஸ்காரம்

வைத்யநாதய்யர் காலமாகி விட்டார். தொண்ணூறு வயசு. விடிகாலையில் எழுந்து குளித்துவிட்டு நித்ய கர்மாநுஷ்டானம் முடித்து தரையில் பத்மாசனம் போட்டு அமர்ந்து ஜபம் செயது பார்த்து இருக்கிறேன். ரொம்ப பேச மாட்டார். தலையில் சிகை கொஞ்சமாக இருந்தாலும் அதை ஒரு அழகான மணி முடிச்சு போட்டு விடுவார். அது அவருக்கு ஒரு தனி தேஜஸை தந்தது. நெற்றியில் கைகளில், கழுத்தில், மார்பில் விபூதி இல்லாமல் பார்த்தது இல்லை. பூணல் கூட வெளுப்பாக தான் நிறம் மாறாமல் இருக்கும். பார்க்கும்போது சிரிப்பார்.

ravi said…
பிள்ளைகள் ஜாம் ஜாம் என்று காரியம் செய்தவர்கள். கல்யாண சாவு. அனாயாச மரணம். தூக்கத்திலேயே போய் விட்டார். யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை.

அப்போது தோன்றிய ஒரு கேள்வி, அனைவரும் கேட்பது :

''நமது இறந்த உடலுக்கு ஏன் காரியம்?

உடம்பை விட்டு விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம், திதி, படையல் இதெல்லாம் ஏதோ பரோபகாரம் என்றால் ஸரி தான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் கட்டைக்கு எதற்கு ஸம்ஸ்காரம்?

மஹா பெரியவா இதை அழகாக விளக்கி இருக்கிறார். படியுங்கள்:

ravi said…
உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது? ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்து வி ட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருக்கிறது. அவரவர் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேதஸம்ஸ்காரம் பண்ணத்தானே வேண்டும். இது போதாதென்று, யாரோ அநாதை போய்விட்டானென்றால், அவன் உடம்பைமுனிஸிபாலிடிக்காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, ‘ஸம்ஸ்காரம்’பண்ணுகிறேன் என்று இழுத்துவிட்டுக்கொள்கிறோம்?

பிரேதமென்றாலே ஒரு பயம், கூச்சம். சம்பந்தமே இல்லாமல் ஏன், எதற்காக நாமாக எடுத்துப்போட்டுக் கொள்ளவேண்டும்? உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது?”

இதெல்லாம் நல்ல கேள்விகள்.

ravi said…
சாஸ்திரங்கள் என்ன சொல்கிறது? ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும், அதன் அங்கங்களில் கண்ணில் ஸூர்யன், வாயில்அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம் இருக்கின்ற தேவாம்சங்கள் உடனே அதனதன் மூலஸ்தானத்துக்கு எப்படி போகும்? பிரேத சம்ஸ்காரம் மூலம்தான் அவற்றை அதனதன் ஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அபர மந்த்ரங்களைப் பார்த்தால்தெரியும்.

ஜீவாத்மா என்கிற புருஷன் பதினாறு கலை உள்ளவன். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது என்றும், உடம்பும்ஒரு கலை என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈஸ்வரார்ப்பணமாக்கவே பிரேத ஸம்ஸ்காரம் அவசியம்.

ravi said…
சாஸ்த்ரங்களில் தஹனம் பண்ணுவதை ‘அந்த்யேஷ்டி’- அந்திய இஷ்டி – அதாவது ‘இறுதியான வேள்வி’ என்றே ரொம்பவும் உயர்த்திச்சொல்லியிருக்கிறது. கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காக சாஸ்த்ரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்கள் உண்டு.

‘ஸம்ஸ்காரம்’என்றால் ‘நன்றாக ஆக்குவது’ என்று அர்த்தம். (‘நன்றாக ஆக்கப்பட்ட’பாஷைதான் ‘ஸம்ஸ்க்ருதம்’.)

உபநயனம், விவாஹம் ஆகியஎல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப்படுத்துவதற்காக ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள்தான்.

வாழ்நாள் கர்மா முழுவதையும்வேள்வியாக ஈஸ்வரனிடம் அர்ப்பணிக்க இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
.
ravi said…
இப்படி வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருத்தனுக்கு, வாழ்க்கை முடிந்தபிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் – அதாவதுஅந்திய இஷ்டியே ப்ரேத ஸம்ஸ்காரமாகும். எந்த உடம்பை வைத்துக்கொண்டு பாக்கி யஜ்ஞங்களை ஒருத்தன் பண்ணினானோ, அந்தஉடம்பையே சிதாக்னி (சிதை) யில் ஹோமம் பண்ணிவிடுவதுதான் இது. ப்ரேத ஸம்ஸ்கார மந்த்ரங்களில் அப்படித்தான் சொல்லி யிருக்கிறது. ஹோமத்துக்குரிய மற்ற வஸ்துக்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் போடுகிற மாதிரித்தான் ப்ரேதத்தையும் சுத்தம் பண்ணி, தஹனம் செய்யச் சொல்லியிருக்கிறது. சந்தனக்கட்டை, நெய், புது வஸ்திரம், அதற்குத்தான். உடம்பு ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. மண்ணில் அடக்கம் பண்ணினாலும் ''ஈஸ்வரார்பணம் தான்.

ravi said…
இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.

‘தேஹம் ரொம்ப இழிவானது. இதிலிருந்து விடுபடவேண்டும்’ என்று பெரியவர்கள் பாடி வைத்திருப்ப தெல்லாம் உண்மைதான். ஆனால்இன்னொரு நிலையில் பார்த்தால் இந்த தேஹம் என்பது ஒரு மஹா அத்புதமான மெஷினாக இருக்கிறது. ஒரே மெஷினில் ஒவ்வொரு பாகம்ஒவ்வொரு தினுஸான கார்யத்தைச் செய்கிறது.
கண் வெளிச்சத்தையும், வர்ணங்களையும் பார்க்கிறது.
காது சப்தங்களைக் கேட்கிறது.
இருக்கும்
ravi said…
ஒரே ஆத்மா- இத்தனை அவயவங்களுக்குள்ளேயும் ஒரே ஜீவன்தான் இருக்கிறது என்றாலும், கண்ணும், காதும் கிட்டக்கிட்ட இருந்துங்கூட கண்ணால் கேட்க முடிவதில்லை; காதால் பார்க்க முடிவதில்லை! பக்கத்திலேயே வாய் என்றுஒன்று அதற்குத்தான் ருசி தெரிகிறது. பேசுகிற சக்தியும் அதற்கே இருக்கிறது. தொண்டையில் பல தினுஸாகக் காற்றைப் புரட்டி அழகாக கானம்செய்ய முடிகிறது.

ravi said…
பல வஸ்துக்களைப் பிடிப்பதற்கு ஏற்றமாதிரி கையும் விரல்களும் அமைந்திருக்கின்றன. இந்த அமைப்பு கொஞ்சம் வேறுவிதமாகஇருந்தாலும் இப்போது நாம் பண்ணுகிற கார்யங்களைப் பண்ண முடியாது. அடி எடுத்து வைத்து மேலே போவதற்கு வசதியாகக் காலின்அமைப்பு இருக்கிறது. நடக்கிறபோது கூடியமட்டும் ஜீவராசிகள் நசுங்காதபடி, பூரான் மாதிரியானவற்றின் மேலேயே நாம் பாதத்தைவைத்தால்கூட அவை நெளிந்துகொண்டு ஓட வசதியாக உள்ளங்கால்களில் குழித்தாற்போன்ற ஏற்பாடு, சப்பணம் கூட்டி உட்கார வசதியாக முழங்காலில் எலும்பு நரம்புகளின் அமைப்பு – என்று இப்படி ஒவ்வொன்றைப் பார்த்தாலும் பராசக்தி எத்தனை ஸூ¨க்ஷ்மமான கல்பனையோடு ஒரு சரீரத்தைப் பண்ணியிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கிறது!

ravi said…
ஆஹாரத்தை ஜெரிக்க ஒரு அங்கம், ஜெரித்ததை ரத்தமாக்க ஒரு அங்கம். மூச்சுவிட ஒன்று, ரத்தத்தை ‘பம்ப்’ பண்ண ஒன்று- எல்லாவற்று க்கும்மேலே ஸகல கார்யங்களையும் டைரக்ட் பண்ணி கன்ட்ரோல் பண்ணும் மூளை – என்றெல்லாம் விசித்ர விசித்ரமாக பகவான் சரீரத்தைக்கல்பித்திருக்கிறான். சதை, ரத்தம், மஸில்ஸ், நரம்பு, எலும்பு என்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு ‘பர்பஸ்’ இருக்கிறது. எலும்புக்குள்ளேகூட மஜ்ஜைஎன்ற ஜீவஸத்து ஓடுவது ஒரு அதிசயம். மனித சரீரத்தில் இருக்கும் கோடிக்கணக்கான ஸெல்களில் ஒவ்வொன்றும் ஒரு அற்புத லோகம்.

ravi said…
இப்படித் தனித்தனியாக ஒவ்வொரு பாகமும் ஒரு அத்புதமான மெஷினாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எல்லாமாக ஒன்றுக்கொன்று இசைவாக ஸஹாயம் செய்து போஷித்துக் கொள்வதும் மஹா அதிசயமாக இருக்கிறது. ஆனபடியால், எவனோ லக்ஷத்தில் ஒருவன் தேஹம் பொய், மனஸ் பொய் என்று புரிந்துகொள்ளும் ஞானியாக ஆனாலும், பாக்கி எல்லாரும் பகவான் தந்திருக்கிற இந்த அத்புதமான மெஷினை வைத்துக்கொண்டு தர்மமாக வாழத்தான் முயற்சி பண்ணுகிறோம். இந்த தர்ம வாழ்க்கையிலிருந்துதான் அப்புறம் ஞானத்துக்குப்போக வேண்டும்.

ravi said…
யோசித்துப்பார்த்தால், சரீரத்தை ஏன் மட்டம் என்று திட்டவேண்டும்? அது என்ன பண்ணுகிறது? அது மனஸின் கருவி மட்டும்தானே? கையையும் காலையும் கண்ணையும் வாயையும் மனஸ் நல்லபடி ஏவினால் சரீரம் நல்லதே செய்யும். கை பரோபகாரம் பண்ணும்; அல்லது அர்ச்சனை பண்ணும். கால் கோயிலுக்குப் போகும். கண் ஸ்வாமி தர்சனம் பண்ணும், வாய் ஸ்தோத்ரம் சொல்லும், அல்லது எல்லோருக்கும்ப்ரிய வசனம் சொல்லும். எனவே ‘நிஷித்தம்’ என்று சரீரத்தை திட்டுவதுகூட தப்புத்தான். ”தர்மத்தைச் செய்ய சரீரம் தானே ஸாதனமாயிருக்கிறது?”- சரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதனம் – என்று வசனமே இருக்கிறது. ” தேஹோ தேவாலய : ப்ரோக்தா ” – உள்ளே இருக்கிற பரமாத்மாவுக்கு இந்த உடம்பே ஆலயம் என்கிறோம். ‘ காயமே கோயிலாக ‘ என்று அப்பரும் சொன்னார். திருமூலரும் இப்படியே, ”முன்னே உடம்பு ரொம்ப நிஷித்தம் என்று மட்டமாக நினைத்தேன். அப்புறம் அதற்குள்தான் ஈஸ்வரன் குடிகொண்டிருக்கிறான் என்று தெரிந்து கொண்டதும், உடம்பை ஓம்பலானேன்” என்று திருமந்திரத்தில் சொல்கிறார்.

ravi said…
இப்படிப்பட்ட அற்புதமான பகவான் கொடுத்த மெஷினை விட்டு உயிர் போனதும் அதைக் கன்னாபின்னா என்று ‘டிஸ்போஸ்’பண்ணக்கூடாதுதான். மஹா ஸ்மஸானவாஸியான பரமேஸ்வரனுக்குத்தான் அதை ஆஹூதி பண்ண வேண்டும்.

எவன் இந்த உடம்பைக்கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். உலகத்தில் எந்த தேசத்திலுமுள்ள காட்டுக்குடிகள் உள்பட எல்லோரும்ஏதோ ஒரு தினுஸில் இதைத் தெரிந்து கொண்டி ருப்பதால்தான் எங்கே பார்த்தாலும் ப்ரேத ஸம்ஸ்காரம் என்பது ஒரு பெரிய ஸமயச் சடங்காகஇருக்கிறது.

செத்துப்போனபின் ஒரு உடம்புக்குள் தேவதாம்சங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாக நம்பாவிட்டாலுங்கூட ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.இத்தனை நாள் அதற்குள் இருந்த ஜீவன் ஈஸ்வர சைதன்யத்தின் ஒரு திவலையல்லவா? எப்போதோ ஸ்வாமி விக்ரஹம் வைத்த மாடப் புறைஎன்றால்கூட, இப்போதும் அதில் கண்ட கண்டதுகளை வைக்காமல் ஒரு அகலை ஏற்றிவைக்க வேண்டும் என்று தானே தோன்றுகிறது?அப்படியிருக்க ஈஸ்வர சைதன்யத்தின் அம்சம் இருந்த உடலை மரியாதை தந்து மந்த்ரபூர்வமாகதானே dispose செய்ய வேண்டும்?

ஒருத்தன் தன்னுடைய சரீரத்தால் அநேக நன்மைகளைச் செய்தானென்றால், உயிர்போன பின்னும் அந்த சரீரத்துக்கு மரியாதை பண்ணத்தான்வேண்டும். நாஸ்திகர்கள்கூடத் தங்கள் தலைவர்களின் ம்ருத சரீரத்துக்கு மலர்வளையம் வைக்கிறார்களே! ஒருவன் சரீரத்தைக்கெட்டத்திற்கே பயன்படுத்தினான் என்றாலும்கூட, அவனுக்கு அந்த சரீரத்தை இயக்கியது ஈஸ்வர சக்தி என்று தெரியாவிட்டாலும் நமக்குத்தெரிவதால் அதற்குரிய ஸம்ஸ்கார மரியாதையைப் பண்ணத்தான் வேண்டும். ”அவனாக இந்த சரீரத்தைக் கொண்டு ஈஸ்வரார்ப்ப ணமாக எந்தநல்லதும் செய்யாமல் போய்விட்டாலும், அதற்கும் ஈடாக, ப்ராயச்சித்தமாக இப்போது நாமாவது இதையே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம்செய்வோம்''

ஆஹா இதற்கு மேலும் யாரால் விவரித்து கூறமுடியுமா சொல்லுங்கள்.

பெரியவா பெரியவா தான்.

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும் எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும் எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும் எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும்.
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 122* 💐💐💐
ravi said…
அடுத்த ஸ்லோகமும் ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம்.

वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात्

औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् |

सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण:

प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: || १८ ॥

வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்

ஔதார்யாத் அகஷோஷணாத் அகணிதஷ்ரேய:பதப்ராபணாத் |

ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:

ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||

ன்னு பகவானோட குணங்களை அடுக்கி ஆறு குணங்களை சொல்லி, ஆறு பேரை அதுக்கு சாக்ஷியா சொல்லி, respectively ன்னு English ல சொல்லுவாளே அந்த மாதிரி முறைப்படியே இந்த ஆறுபேர்னு வெச்சுக்கணும்.🙏🙏🙏
ravi said…
*ஆர்தார்த்திநிர்வாபணாத்* ’ – கஷ்டத்திலிருப்பவர்களுடைய துயரத்தை போக்குபவன் பகவான்.

அதுக்கு யாரு சாக்ஷினா கரிராட் கஜேந்திரன். “நாராயணா அகில குரோ பகவன் நமஸ்தே” ன்ன உடனே கருட பகவானை இழுத்துண்டு வந்து கஜேந்திரனுக்கு கஷ்ட நிவர்த்தி கொடுத்தார்.
ravi said…
*கந்தர் அலங்காரம் 59* 🐓🦚🙏

*அலங்காரம்-15*

💐💐💐💐

குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த,
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்! இரு நான்கு வெற்பும்,
அப்பாதி யாய்விழ, மேருவும் குலுங்க, விண்ணாரும் உய்ய,
சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடை சண்முகனே!
ravi said…
அருணகிரி இப்படியெல்லாம் இருந்தவர் தான்! ஒரு கட்டத்தில், தொழு நோய் வந்த போதும் இச்சை தாளவில்லை! ஆனால் பரத்தையரோ அவரை ஒதுக்க, மனைவியை அவர் மிதிக்க......
கடைசியில் சொந்த அக்காவே, "வேண்டுமானால் என்னைச் சுவைத்துக் கொள்", என்ற போது தான் அருணகிரி நெஞ்சில் வேல் பாய்ந்தது! வேல் பாய்ந்த நெஞ்சில் வேல்முருகன் பாய்ந்தான்!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 344*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

தீ⁴யன்த்ரேண வசோ-க⁴டேன கவிதா-குல்யோபகுல்யாக்ரமைர்-
ஆனீதைஶ்ச ஸதாஶிவஸ்ய சரிதாம்போ⁴-ராஶி-திவ்யாம்ருதை:
ஹ்ருத்-கேதார-யுதாஶ்-ச ப⁴க்தி-கலமா: ஸாபல்யம்-ஆதன்வதே
துர்பி⁴க்ஶான்-மம ஸேவகஸ்ய ப⁴கவன் விஶ்வேஶ பீ⁴தி: குத :

धीयन्त्रेण वचोघटेन कविताकुल्योपकुल्याक्रमै-

रानीतैश्च सदाशिवस्य चरिताम्भोराशिदिव्यामृतैः ।

हृत्केदारयुताश्च भक्तिकलमाः साफल्यमातन्वते

दुर्भिक्षान् मम सेवकस्य भगवन् विश्वेश भीतिः कुतः
ravi said…
மூக கவி கூட ஒரு ஸ்லோகத்துல சொல்றார். 65 ஸ்லோகம் பாதாரவிந்த சதகம்.

விவேகாம்ப⁴ஸ்ஸ்ரோதஸ்ஸ்னபனபரிபாடீஶிஶிரிதே

ஸமீபூ⁴தே ஶாஸ்த்ரஸ்மரணஹலஸங்கர்ஷணவஶாத் ।

ஸதாம் சேத:க்ஷேத்ரே வபதி தவ காமாக்ஷி சரணோ

மஹாஸம்வித்ஸஸ்யப்ரகரவரபீ³ஜம் கி³ரிஸுதே ॥ 65 ॥
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 340* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

அனுத்தமோ துராதர்ஷ :
*க்ருதஜ்ஞ* : க்ருதிராத்மவான்||9

💐💐💐
ravi said…
இவ்வாறு அடியார்கள் தனக்குச் சிறிய அளவில் ஏதேனும் சமர்ப்பித்தால் கூட, அதை மிகப் பெரிதாகக் கருதி,
அதைப் போலப் பன்மடங்கு அவர்களுக்கு அருள்பவராகத் திருமால் திகழ்வதால் ‘ *க்ருதஜ்ஞஹ* ’ என்று போற்றப்படுகிறார்.

*க்ருதஜ்ஞஹ* என்றால் செய்நன்றி மறவாதவர் என்று பொருள்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 83-வது திருநாமமாக அமைந்துள்ளது.
“ *க்ருதஜ்ஞாய நமஹ”* என்று தினமும் சொல்லி வரும் அடியார்களுக்கு ஒன்றுக்குப் பன்மடங்காகத் திருமாலின் அருள் கிட்டும்.🪷🪷🪷
ravi said…
🌹🌺 *'ஸ்ரீ கிருஷ்ணரின் மீது தூய பக்தி கொண்ட ஹரிதாசின் தொடர்பால் இந்த சமுத்திரமே தன்யமானது, மேலும் மகா பவித்திரமாகி விட்டது என கூறிய சைதன்ய மகாபிரபு - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹" ஒரு மாலை வேளையில் சைதன்ய மகாபிரபு ஸ்ரீ கிருஷ்ண மஹா மந்திரமான ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்று தனது சீடர்களோடு அகண்ட நாம பஜனை செய்து கொண்டு இருந்தார்.

🌺அப்போது ஹரி தாஸ் தாகூர் சைதன்ய சைதன்ய என்று பஜனை செய்து கொண்டு சைதன்ய மகா பிரபுவை பார்த்து ஆனந்த கண்ணீரில் நனைந்தார்

🌺அப்போது அவரின் உயிர் பிரிந்து மோட்சம் கிட்டியது சைதன்ய மகா பிரபுவோ அந்த ஹரி தாஸ் தாகூர் சரீரத்தை தன் கையால் ஏந்தி ஆனந்த நர்த்தனம் செய்து மிக பரவசமாக ஆடினார்.

🌺பின்னர் அந்த சரீரத்தை தன் கையால் சுமந்து கொண்டு பூரி சமுத்திரத்தில் குளிபாட்டினார்
அப்போது சைதன்யர் கூறினார்.

🌺ஸ்ரீ கிருஷ்ணரின் மீது தூய பக்தி கொண்ட ஹரிதாசின் தொடர்பால் இந்த சமுத்திரமே தன்யமானது, மேலும் மகா பவித்திரமாகி விட்டது என கூறி தமது கைகளாளே அவருக்கு சமாதி உண்டு பண்ணினார் இப்போதும் அச்சமாதியை பூரி சென்றால் தரிசிக்கலாம்

🌺ஜெய் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு குருமகராஜ் திருவடிக்கு ஜெய் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 Chaitanya Mahaprabhu said that this ocean itself has become pure and holy because of Haridasa's pure devotion to Sri Krishna - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹 "One evening Caitanya Mahaprabhu was chanting Akanda Nama Bhajan with his disciples chanting Sri Krishna Maha mantra Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare.

🌺Then Hari Das Tagore chanted Chaitanya Chaitanya and shed tears of joy seeing Lord Chaitanya.

🌺 At that time when his life was separated and Moksha was attained, Chaitanya Mahaprabhu carried the body of Hari Das Tagore with his hand and performed Ananda Nartanam and danced very ecstatically.

🌺Then he carried the body with his hand and bathed in Puri sea
Chaitanyar then said.

🌺 Haridas, who had pure devotion to Lord Krishna, said that this ocean became special and became very sacred.

🌺Jai Sri Chaitanya Mahaprabhu Gurumaharaj Jai to, his (Thiruvadi) feet🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
இந்திரா ஏகாதசி :- 21- 09 - 2022

இந்த ஏகாதசியின் பெருமைகளை ஒருவர் படித்தாலோ (அ) கேட்டலோ அவர் தன் எல்லா பாவ விளைவுகளில் இருந்து விடுபட்டு இறுதியில் விஷ்ணுவின் பரமபதத்தை அடைவார்

இந்திரா ஏகாதசி பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார்.

ஓ! கிருஷ்ணா ஓ! மதுசூதனா! ஓ! மது என்ற அரக்கனை கொன்றவரே! புரட்டாசி மாத தேய்பிறையில் (செப்டம்பர்/ அக்டோபர்) தோன்றக் கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? இந்த ஏகாதசியை அனுஷ்டிக்கும் வழிமுறைகள் யாவை? இதை அனுஷ்டிப்பதால் ஒருவர் அடையும் பலன்கள் யாவை?

ravi said…
பகவான் கிருஷ்ணர், பதிலளித்தார். இந்த புனிதமான ஏகாதசியின் பெயர் இந்திரா ஏகாதசி. இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் எல்லா பாவ விளைவுகளும் அழிக்கப்படும் மற்றும் இழிவடைந்த தன் முன்னோர்கள் விடுதலை பெறுவர்.

ஓ! மன்னா! சத்ய யுகத்தில் இந்திரசேனா என்ற ஒரு மன்னர் வாழ்ந்து வந்தார். அவர் தன் எதிரிகளை வெல்வதில் சாமர்த்தியமானவர். அவர் மாஹிஸ்மதிபுரி என்ற தன் இராஜ்ஜியத்தை செழிப்புடன் ஆண்டு வந்தார். தன் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

அவர் எப்பொழுதும் பகவான் விஷ்ணுவின் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு பக்தராகையால் இடைவிடாமல் ஆன்மீக சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். முக்தி அளிக்கக்கூடிய பகவான் கோவிந்தனின் புனித நாமங்களை எப்பொழுதும் ஜெபித்துக் கொண்டிருந்தார்.

ravi said…
ஒரு நாள் மன்னர் மகிழ்ச்சியாக தன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த போது விண்ணிலிருந்து நாரத முனிவ திடீரென தன் முன் தோன்றினார்.

பெருமுனிவரான நாரதரைக் கண்டவுடன். மன்னர் எழுந்து நின்று கைகூப்பி வணங்கினார். பிறகு மன்னர் 16 வகையான பொருட்களைக் கொண்டு முறையாக நாரத முனிவரை வழிபட்டார்.

முனிவர் மகிழ்ச்சியுடன் இருக்கையில் அமர்ந்த பிறகு இந்திரசேன மன்னரிடம் ஓ! மாபெரும் மன்னா! உனது இராஜ்ஜியத்தில் அனைவரும் மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் உள்ளனரா? உன்னுடைய மனது மத கொள்கைகளில் நிலை பெற்றுள்ளதா? நீ பகவான் விஷ்ணுவின் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளாயா? என வினவினார்.

மன்னா பதிலளித்தார். ஓ! முனிவர்களில் சிறந்தவரே! உங்களுடைய கருணையினால் அனைத்தும் நன்றாகவும் மங்களகரமாகவும் உள்ளன. இன்று தங்களின் தரிசனத்தால் என் வாழ்க்கை வெற்றியடைந்தது. என்னுடைய தவங்கள் பலனளித்தது. ஓ! தேவர்களுள் முனிவரே! தயவு செய்து தங்கள் வருகைக்கான காரணத்தைக் கூறுங்கள்.

ravi said…
மன்னரின் இந்த பணிவான வார்த்தைகளைக் கேட்ட நாரத முனிவர் கூறினார். ஓ! சிங்கம் போன்ற மன்னா! எனக்கு ஏற்பட்ட ஒரு அற்புதமான நிகழ்ச்சியைக் கூறுகிறேன் கேள்.

ஓ! மன்னர்களில் சிறந்தோனே. ஒரு முறை நான் பிரம்மலோகத்திலிருந்து யமராஜாவின் வசிப்பிடத்திற்குச் சென்றேன். யமராஜா என்னை மரியாதையுடன் வரவேற்று சரியான முறையில் என்னை வணங்கினார். நான் இருக்கையில் அமர்ந்த பிறகு, பக்தியும் உண்மையும் நிறைந்த யமராஜாவிற்கு என்னுடைய பிரார்த்தனைகளை சமர்ப்பித்தேன். பிறகு யமராஜாவின் சபையில் உன்னுடைய புண்ணியமிகு தந்தையைக் கண்டேன். ஒரு விரதத்தை கடைபிடிக்கத் தவறியதால் அவர் அங்கு செல்ல நேரிட்டது.

ஓ! மன்னா! ஒரு செய்தியை உனக்கு தெரியப்படுத்துமாறு என்னிடம் வேண்டினார்.

அவர் கூறினார். மாஹிஸ்மதிபுரியின் மன்னனான இந்திரசேனா என்னுடைய புதல்வன். என்னுடைய முற்பிறவியில் செய்த சில பாவச் செயல்களால் இப்பொழுது நான் யமராஜாவின் வசிப்பிடத்தில் இருக்கிறேன். ஆகையால் என் புதல்வனை இந்திரா ஏகாதசியை அனுஷ்டித்து அதன் பலனை எனக்கு அர்ப்பணிக்குமாறு தெரியப்படுத்துங்கள். அப்பொழுது நான் தற்போதுள்ள நிலையிலிருந்து விடுபடுவேன்.

நாரத முனிவர் தொடர்ந்தார். ஓ! மன்னா! இது உன்னுடைய தந்தையின் வேண்டுகோள். உன் தந்தை விடுபட்டு ஆன்மீக உலகிற்குச் செல்ல, நீ இந்திரா ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும்.

பிறகு இந்திரசேன மன்னர் கூறினார். ஓ! தேவர்களுள் முனிவரே! தயவு செய்து இந்திரா ஏகாதசியை அனுஷ்டிக்கும் வழிமுறையை எனக்கு விளக்குங்கள்.

நாரதமுனிவர் பதிலளித்தார். ஏகாதசிக்கு முன் தினம் ஒருவர் விடியற்காலையில் குளித்து தன் முன்னோர்களின் திருப்திக்காக அவர்களுக்கு படைக்க வேண்டும். அந்த நாளில் ஒருவர் ஒரு வேளை மட்டும் உண்டு. வெறும் தரையில் உறங்க வேண்டும். ஏகாதசியன்று விடியற்காலையில் எழுந்து குளிக்க வேண்டும். பிறகு எந்த விதமான ஜட இன்பத்திலும் ஈடுபடமாட்டேன். என சபதம் மேற்கொண்டு முழு உண்ணா விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பகவானிடம் ஓ! தாமரைக் கண்ணனே! நான் உன்னிடம் தஞ்சமடைந்துள்ளேன் என பிரார்த்திக்க வேண்டும்.

பிறகு, நடுப்பகலில் சரியான வழிமுறைகளுக்கு உட்பட்டு சாலகிராம சிலாவின் முன் தன் முன்னோர்களுக்கு படையல் வைக்க வேண்டும். பிறகு அந்தணர்களுக்கு சிறப்பாக உணவளித்து, அவர்களுக்கு தட்சிணை கொடுத்து வணங்க வேண்டும். முடிவில் படைத்த மிகுதியை பசுக்களுக்கு கொடுக்க வேண்டும்.

இந்த ஏகாதசியன்று ஒருவர் பகவான் ரிஷேகேசரை, சந்தனம், மலர்கள், ஊதுபத்தி, விளக்கு மற்றும் உணவு வகைகளை சமர்ப்பித்து பக்தியுடன் வணங்க வேண்டும். இந்த ஏகாதசியன்று இரவு, ஒருவர், புனித நாமங்களை ஜெபித்துக் கொண்டு பகவானின் உருவம், குணங்கள் மற்றும் லீலைகள் பற்றி கேட்டுக் கொண்டும், நினைத்துக் கொண்டும் விழித்திருக்க வேண்டும்.

மறுநாள் பகவான் ஹரியை வணங்கி, அந்தணர்களுக்கு உணவளிக்க வேண்டும். பிறகு தன் சகோதரர்கள், பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் அமைதியுடன் உணவு உட்கொண்டு விரதத்தை முடிக்க வேண்டும். ஓ! மன்னா! நான் கூறியவாறு நீ இந்த ஏகாதசியை அனுஷ்டித்தால், நிச்சயமாக உன் தந்தை விஷ்ணுவின் பரமத்தை அடைவார் இவ்வாறு பேசிய நாரத முனிவர் மறைந்தார்.

நாரத முனிவரின் அறிவுரைப்படி இந்திரசேனா மன்னர் தன் பிள்ளைகள் உதவியாளர்கள் மற்றும் பலருடன் இந்த ஏகாதசியை சிரத்தையுடன் அனுஷ்டித்தார் அதன் பலனாக விண்ணில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. உடனே, இந்திரசேனா மன்னரின் தந்தை கருட வாகனத்தில் அமர்ந்து விஷ்ணுவின் பரமத்திற்கு சென்றார்.

பிறகு இந்திரசேன மன்னர் எந்த இடையூறுமின்றி தன் இராஜ்ஜியத்தை ஆண்டார். இறுதியில் இராஜ்ஜியத்தை தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு ஆன்மீக உலகிற்குச் சென்றார்.

இந்த ஏகாதசியின் பெருமைகளை ஒருவர் படித்தாலோ (அ) கேட்டலோ அவர் தன் எல்லா பாவ விளைவுகளில் இருந்து விடுபட்டு இறுதியில் விஷ்ணுவின் பரமத்தை அடைவார்
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்


வர்ண தர்மத்தைப் பார்க்கும்போது எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. முதலில் ஆகாயக் கப்பலில் காற்றுப் பையை (gas bag) ஒன்றாக அமைத்தார்கள். பிறகு அதில் ஓர் ஓட்டை விழுந்தால்கூடக் கப்பலே கெட்டு விழுந்து விடுகிறது என்று கண்டு கொண்டார்கள். அதனால் சிறிது சிறிதாகப் பல காற்றுப் பைகளை வைக்கலானார்கள். தனித்தனியாக இருந்தாலும் எல்லாம் ஒரே இடத்தில் நெருங்கியிருந்து ஒன்றையே தாங்கிக் கொண்டிருந்தன. கப்பல் பழுதடையாமல் இருந்தது. இதுவேதான் நம் மதத்தில் தனித்தனி தர்மம் என்று பிரித்து வைத்திருக்கிற ஏற்பாடு. வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity) என்பது இதுதான்.

ஏகப்பட்ட சுல்லிக் கட்டைகளை சேர்த்துப் பிடித்து ஒரு கட்டாகக் கட்டுவது என்றால் அது சிரம சாத்தியமான காரியம். அப்படியே சிரமப்பட்டு ஒரு கட்டாகக் கட்டினாலும்கூட அது சுலபத்தில நெகிழ்ந்து கொடுத்துத் தளர்ந்து விடும். முதலில் ஒரு சுள்ளியை ஆட்டி எடுக்கிற மாதிரி நெகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டாலே போதும். அந்த ஒன்றை எடுத்ததால் தளர்ச்சி ஜாஸ்தியாகி இன்னொரு சுல்லியைச் சுலபமாக உருவி விடலாம். இப்படி இரண்டு மூன்று என்று எடுத்து விட்டால் அப்புறம் கட்டு ஒரேயடியாக தொள தொளவென்று தளர்ந்துபோய் அத்தனை சுள்ளிகளும் தனியாக விழுந்துவிடும்.

ravi said…
மாறாக முதலிலேயே அத்தனை சுள்ளிகளையும் ஒரே கட்டாகக் கட்டாமல் கைக்கு அடக்கமாகப் பத்துப் பதினைந்து என்று சேர்த்து சின்னக் சின்னக் கட்டுகளாகப் போடுவதாக வைத்துக் கொள்ளுங்கள்; இது ஒவ்வொன்றும் கையடக்கமாக இருப்பதால் தளராதபடி நல்ல பிகுவாகக் கட்டிவிட முடியும். அப்புறம் இந்தச் சின்ன சின்னக் கட்டுகளையெல்லாம் சுலபத்தில் ஒன்றாக அடுக்கி எல்லாவற்றையும் சேர்த்து பெரிய கட்டாகப் போடலாம். ஒட்டு மொத்தமாக அத்தனை சுள்ளிகளையும் வைத்துப் போடுகிற கட்டைவிட இப்போது நாம் போடுகிற பெரிய கட்டு இன்னும் விறைப்பாக, உறுதியாக இருக்கும். அது மட்டுமில்லை. இந்தப் பெரிய கட்டு கொஞ்சம் தளர்ந்தால்கூட ஒரு தனிச் சுள்ளி விழுகிற மாதிரிச் சின்னச் சுள்ளிக்கட்டு விழாது. அதாவது பெரிய கட்டு பந்தோபஸ்தாகவே இருக்கும். என்றைக்கும் அது கட்டு விட்டுப்போகாது.

ravi said…
சின்னக் கட்டுகளில் எதுவோ ஒன்று தளர்ந்து கொடுக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுகூட அதிலுள்ள சுள்ளிகள் மட்டும் விலகுமே தவிர, மற்ற கட்டுகள் எல்லாம் அப்படி அப்படியே பத்திரமாக இருக்கும். அவற்றிலுள்ள சுள்ளிகள் கொஞ்சங்கூடக் கலகலத்துப்போய் விடாது.
ravi said…

ஒரு பெரிய ஜனசமூகத்தை ஒரே அமைப்பிலே போட்டு கட்டுகிறேன் என்றால் அது முடியாத காரியம். ஆண்டளிக்க முடியாத சமுதாயத்தை யார், எப்படிக் கட்டுப் பாட்டில் வைத்து நிர்வகிப்பது? இதற்காகத்தான் ஒவ்வொரு தொழிலைச் செய்யப் பரம்பரையாக ஒரு ஜாதி என்று பிரித்து தனித் தனிக் கட்டுகளாக வைத்தார்கள். இதிலிருக்கிற கட்டுக் கோப்பை யாரும் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வர்ணத்தினரும் சிறு கட்டுகளாக – ஜாதிகளாக – பிரிந்தார்கள். அவரவருக்கும் “ஜாதி நாட்டாண்மை” என்று ஒன்று இருந்தது. அந்தந்த நாட்டாண்மைக்காரர்கள் தங்கள் தங்கள் சமூகத்தினர் ஒழுங்கு தப்பினால் அவர்களைத் தண்டித்தார்கள். இப்போது சர்க்கார்கூடத்தான் ஜெயிலில் போட்டு சிக்ஷிக்கிறது. ஆனால் இது ஒன்றும் குற்றவாளிகள் நெஞ்சில் உறைப்பதில்லை. அதனால் குற்றங்கள் பாட்டுக்கு வளர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. நாட்டாண்மையில் கொடுத்த தண்டனையோ சுரீலென்று உறைத்ததால் ஜனங்கள் தப்புத் தண்டாவில் இறங்காமல், இந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் கூடிய மட்டும் யோக்கியர்களாகவே இருந்து வந்தார்கள். அதுவரை போலீசுக்கும், மாஜிஸ்டிரேட் கோர்ட்டுக்கும் வேலை ரொம்பக் குறைச்சலாகவே இருந்தது.

ravi said…
அதென்ன அப்படிப்பட்ட தண்டனையை நாட்டாண்மைக்காரர்கள் கொடுத்தார்கள் என்றால், ஜாதி ப்ரஷ்டம் என்பதுதான் அது. ஒரு சக்கிலியாக இருக்கட்டும், பரியாரி (நாவிதன்)யாக இருக்கட்டும் – எவராகத்தான் இருக்கட்டும் – இப்போது பிற்பட்ட (Backward) தாழ்த்தப்பட்ட (depressed) என்றெல்லாம் சொல்கிற எந்த ஜாதியினராக இருந்தாலும்கூடத்தான் – அவரவருக்கும் தன் ஜாதியை விட்டுத் தள்ளிவிடுவார்கள் என்றால், அதுவே சுரீலென்று மனதில் தைத்தது. அது தாங்க முடியாத பெரிய தண்டனை, மகத்தான அவமானம் என்று தோன்றியது. இதிலிருந்து என்ன தெரிகிறது? எந்த ஜாதியாரும் எந்த ஜாதியாரையும் மட்டம் தட்டி வைக்கவில்லை. அந்தந்த ஜாதியாரும் தங்கள் விவகாரங்களைப் பொறுத்தமட்டில் தாங்களே ராஜா என்கிற பூரண திருப்தியோடு இருந்திருக்கிறார்கள் என்றுதானே தெரிகிறது? உசத்தி-தாழ்த்தி அபிப்பிராயங்கள் இருந்திருந்தால், தானாகவே பலவிதமான தாழ்வு மனப்பான்மைகள் (inferiority complex) உண்டாகித்தான் இருக்கும். பிராம்மணனையும் க்ஷத்திரியனையும் தவிர ஜாதியார் எவருக்கும் தங்கள் ஜாதியிடம் மதிப்பு, கௌரவ புத்தி, விசேஷமான பிடிப்பு இருந்திருக்க முடியாது. இதெல்லாம் இல்லாவிட்டால் “ஜாதிப்ரஷ்ட”த்தைப் பொருட்படுத்தியே இருக்க மாட்டார்கள். ஆனால், நடைமுறையில் ஜாதி என்ன பெயரில் சின்னச் சின்னச் சமுதாயங்களாக ஜனங்கள் இருந்தபோது, தங்களுக்குள் பரஸ்பரமான அன்பும் விசுவாசமும் ஏற்பட்டு, அதிலே ஒரு பந்துத்துவமே உண்டாயிற்று. அதனால்தான் ‘ஜாதியிலிருந்து தள்ளி விடுவோம்’ என்றால் அது பெரிய தண்டனையாகத் தோன்றியது. இப்போது பிற்பட்டவர்களாக இருப்பதால் பலவித சலுகைகள் கிடைக்கின்றன என்பதற்காக வேண்டுமானால் பலர் தங்கள் ஜாதியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, மனப்பூர்வமாக அதில் கௌரவ புத்திவைத்து அபிமானிக்கவில்லை. அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட சலுகைக் எதுவும் கிடையாது. ஆனாலும், மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முன்வரை நாம் பார்த்தது என்னவென்றால் அவர்களுக்கும் தங்கள் ஜாதியில் ஆழமான அபிமானம் இருந்திருக்கிறது. இப்போதுபோல் இன்னொருத்தரிடம் போட்டியும் எதிர்ப்பும் இருப்பதால் தங்களுக்குள் அபிமானம் பாராட்டிக் கொள்ளவில்லை. அப்போது இந்த ஜாதிச் சண்டை, போட்டாபோட்டி எல்லாம் இல்லவே இல்லை. மெய்யாகவே அவரவருக்கும் தங்கள் ஜாதியில் இருந்து கொண்டு, அதற்கான தொழிலைச் செய்து கொண்டு, அதற்கென்று ஏற்பட்டுள்ள தனிச் சடங்குகள், விதிகள், ஆசாரங்கள், தர்மங்களைப் பின்பற்றிக் கொண்டிருப்பதில் சந்துஷ்டியும் பெருமிதமும் (pride) இருந்தன.

ravi said…
இப்போது கலகம் செய்கிறவர்களிடம் போலீஸ் வந்தால் போலீஸாரிடமே கலகக்காரர்கள் அடிதடியில் இறங்குகிறார்கள்! ஆனால் முன்னமே ஜாதி நாட்டாண்மையில் எதிர்த்து இப்படி யாரும் சண்டை போட்டதில்லை. காரணம் இப்போதிருக்கிற போலீஸ் வெளியிலிருந்து செய்கிற கட்டுப்பாடாயிருக்கிறது. ஜாதி நாட்டாண்மையிலோ, ‘நம்மவர்கள்’ என்ற பாந்தவ்யம், அபிமானம் இருந்தது. இதனால் ஆயுத பலமும் படை பலமும் இல்லாமலே அன்றைய நாட்டாண்மை இன்றைவிட வெகு சிறப்பாகக் குற்றங்களைக் குறைத்து வந்தது. எல்லாரும் ஜாதி, அதற்கான தொழில், அதற்கென்று ஏற்பட்ட ஆசாரங்கள் என்று பிரிந்திருந்தும் ஒற்றுமையாக இருந்தார்கள்.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 349* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*130* *शातोदरी -சாதோதரீ** -

இடையே இல்லாதவள்.

கொடி இடையாள் . காமகலா என்னும் மெல்லிய நுண்ணிய ஸ்வரூபம்💐💐💐
ravi said…
*ஷாதோதர* = மெலிந்த இடை

❖ 130 ஷாதோதரீ = மெல்லிடையாள்
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 347* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*92 தேவியின் இருக்கை*

*ஆளுந்திறமை*

கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண ஹரி ருத்ரேஶ்வர ப்ருத:

ஶிவ: ஸ்வச்ச ச்சாயா கடித கபட ப்ரச்சதபட:

த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலன ராகாருணதயா

சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம் 92
ravi said…
மூவர் மகேசன் முடி கொளும் மஞ்சத் தொழிலாயும்

மேவிய படிகத் தனது ஒளி வெளி சூழ் திரையாயும்

ஓவறு செங்கேழ் விம்பம் அது இன்பத்து உருவாயும்

பாவை நின் அகலா இறையொடு நின்னைப் பணிவாமே😊😊😊
ravi said…
பிரமன், மால், ருத்திரன் என்னும் மூவருடன் மகேசனான சிவபெருமான் நீ ஆட்சி செய்யும் கட்டிலாகவும், கண்ணாடி போன்ற அந்த கட்டிலின் மேல் ஒளி வெளி சூழ்கின்ற திரையாகவும் (விரிப்பாகவும்),

எங்கும் விளங்கும் சிவந்த உருவத்தினால் (உன்னுடைய உருவத்தினால்) சிவந்து அது இன்பமான உருவமாக விளங்கும்படியாகவும், பெண்ணே உன்னை என்றும் விட்டு அகலாமல் விளங்கும் இறைவரோடு உன்னைப் பணிவோம்.🎼🎼🎼
ravi said…
('அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா' என்ற திருவாய்மொழி பாசுர வரி இங்கே நினைவிற்கு வருகிறது.

'உன்னை விட்டு ஒரு நொடியும் அகலமாட்டேன் என்று திருமகள் உன் மார்பில் உறைகின்றாள்'

என்று அங்கே சொல்ல இங்கே தலைகீழாக 'உன்னை விட்டு ஒரு நொடியும் அகலமாட்டேன் என்று உன் கணவன் உன்னுடனே உறைகின்றான்' என்று சொல்லப்படுகிறது).🪷🪷🪷
ravi said…
ஸ்ரீ மாத்ரே நம:*

*நவரத்தினங்கள்*

அழகான மாலை ஒன்று தொடுத்தேன் அம்மா ...

பக்தி எனும் கற்கள் பொறித்தேன் அதில் ...

தொடுத்த மாலை சிரித்தது

ஏன் என்றே கேட்டேன்

யாருக்கு என்னை போடப்போகிறாய் என்றே வினவ

சரணாகதி எனும் நார் எடுத்து கட்டினேன் மாலையை ...

உன் நாமங்கள் எனும் பன்னீர் அதில் தெளித்தேன் ...

பதில் சொல் யாருக்காக என்னை .... ???

பூக்கள் மணம் கண்டு குவிந்தன வண்டுகள் அங்கே ...

கவனம் எனும் கரம் கொண்டு வண்டுகள் தனை விரட்டினேன்

மீண்டும் அதே கேள்வி ... யாருக்கு நான் ???

கண்கள் எனும் என் தடாகம் தனை மூடி விழிகள் தனில் உன் உருவம் செதுக்கினேன் ...

செதுக்கிய உருவம் கண்டே மலைத்துப்போனேன்

... இவ்வளவு அழகா என் அன்னைக்கு என்றே ...

தொடுத்த மாலை புது மணப்பெண் போல் நாணி கூனி என்னிடம் கேட்டது ..

எவர் அழகுக்கும் ஒவ்வாத வல்லிக்கே என்னை தந்தாய் ... என்ன தவம் செய்தேன் ...

நன்றி கோடி உனக்கே என்றது ...

நயந்து சொன்னேன் அன்னைக்கு என்றால் எல்லாமே அதி சுந்தரமே என்றேன் ..

காஞ்சி மகான் சிரித்தார் உண்மை இது தான் என்றே 🪷🪷🪷
ravi said…
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் ஸ்தோத்ரம்:

நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே |
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 1 ||

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி |
சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 2 ||

சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி |
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 3 ||

சித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி |
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 4 ||

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 5 ||

ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரெளத்ரே மகாசக்தி மஹோதரே |
மஹா பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 6 ||

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி |
பரமேஸி ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 7 ||

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே |
ஜகஸ்திதே ஜகந்மாதா: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே || 8 ||

பலஸ்ருதி:

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமாந் நர: |
ஸர்வ ஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா: ||

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம் |
த்வி காலம் ய: படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித: ||

திரி காலம் ய: படேந் நித்யம் மஹா சத்ரு விநாஸனம் |
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா. ||

|| இதி இந்திரன் அருளிய ஸ்ரீ மஹா லக்ஷ்மி அஷ்டகம் ஸம்பூரணம் ||
ravi said…
கண்ணா*

கண்ணா என்னும் பாயசத்தை தயாரிக்க, ராமா என்னும் சர்க்கரையை சேர்த்தேன்

விட்டலா என்னும் நெய்யைப் போட்டுக் கலக்கி, சுவைத்துப் பாரத்தேன்

வாயில் எச்சில் ஊற
சப்புக் கொட்டினேன் *கண்ணா*

கவனம் எனும் கோதுமையைக் கொண்டு வந்து,

வைராக்யம் என்னும் கல்லில் போட்டு

அந்த மாவைக் எடுத்து மெல்லிய இழையாக செய்தேன் *கண்ணா*

இதயம் என்கிற பானையில்; எண்ணம் என்கிற அந்த மாவைப் போட்டு

புத்தியுடன் அதை நன்றாக சமைத்து;

*ஹரி* என்கிற பெரிய தட்டில் போட்டு
சுவைத்தேன் *கண்ணா*

ஆனந்த ஆனந்த என்கிற இரண்டு ஏப்பங்கள் வரும்போது

ஆனந்த மூர்த்தி என் விட்டலன் அன்றோ என் நினைவில் வந்து ஆடுகிறான் *கண்ணா*
கௌசல்யா said…
JRK, For the past 3 days u hv posted the *பரமாத்மாவின் 6 முக்கிய குணாதிசயங்களை* மிக அருமையாக உள்ளது..ஆனால், i am unable to find this specific sloka in Mukundamala... because next ஸ்லோகம் is ஜீஹ்வே கீர்தய...
ravi said…
ஐஸ்வர்யம்
--------------------

அரச்சனை முடிந்து மணியடித்து தீபாராதனை காட்டியபடி சொன்னார் அர்ச்சகர் " லக்ஷ்மி தேவி.. நன்னா தாயாரை தரிசனம் பண்ணுங்கோ.. ஒரு மண்டலம் தர்சனம் பண்ணினா ஐஸ்வர்யம் கொட்டும். அவ்வளவு சக்தி தாயாருக்கு! ''
ராமசந்திரன் பயபக்தியுடன் வணங்கினார்.

'' இப்போ பெருமாள் சன்னதிக்கு போலாம் '' என்று தாயார் சன்னிதியை பூட்டிவிட்டு நடந்தார்.

அது ஒரு புராதனமான கோவில்.
ராமசந்திரன் தன் முன்னோர்கள் அங்கு வழிபட்டதாக அறிந்திருந்தார்.
கூகிளீல் விலாசம் தேடி கண்டுபிடித்து தன் குடும்பத்தாருடன் மகனின் காரை தானே ஓட்டி வந்திருந்தார்.
மெயின் ரோடிலிருந்து கரடு முரடான சாலையில் மூன்று கிலோமீட்டர் பயணத்தின் பின்னர்தான் கோவிலை அடைய முடிந்தது.

ravi said…
பத்தாம் வகுப்பு படிக்கும் பேரன் கவுதம் புலம்பிக்கொண்டே வந்தான்.
' இப்படி ஒரு மட்டமான ரோடு இருக்குன்னு தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன்.'' என்று தாத்தாவை செல்லமாக கடிந்து கொண்டான்.

தாத்தாவுக்கு பேரன் மீது கொள்ளை பிரியம். அவனுக்கும் இவர் மீது அன்புதான். ஆனால் எப்போதும் அவருடைய கருத்துக்கெதிராக பேசி வம்புக்கு இழுப்பான். அவன் இந்தக் காலத்து பையன். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. கடவுள் என்று ஒருவர் இல்லை என்று விதண்டா வாதம் செய்வான்.
நாளாவட்டத்தில் அவனுக்குக் கடவுள் நம்பிக்கை தானாகவே வரும் என்று ராமசந்திரன் நம்பினார்.

ravi said…
ஏற்கெனவே அர்ச்சகரிடம் தொலைபேசியில் பேசியிருந்ததால் அவர் நைவெத்தியத்துக்காக பொங்கல், வடை, சர்க்கரை பொங்கல் எல்லாம் செய்து வைத்திருந்தார்.

பெருமாள் சன்னதிக்கு போகும் வழியில் தாத்தாவிடம் கேட்டான் கவுதம் " தாத்தா மண்டலம்னா எத்தனை நாள்?''
'' நாப்பத்தெட்டு நாள்... ஏன் கேக்கறே...நீ வந்து சேவிக்கப்போறியா?''
'' அதில்லை தாத்தா..இவர் இத்தனை வருஷமா தர்சனம் ப்ண்ணிட்டு தானே ;இருக்காரு. ஆனா இவரு இன்னும் அழுக்கு வேஷ்டி துண்டு கட்டிட்டு ஏழையா இருக்காரே...''

' உஷ்...அவர் காதில் விழுந்தால் வருத்தபடுவாரு. கம்முனு வா'' என்றார் ராமசந்திரன் கடுமையாக.

பெருமாள் சன்னிதியிலும்
தீபாராதனை நைவேத்தியம் எல்லாம் முடிந்தது.

மந்திரம் ஓதி தேங்காய் பழங்கள் பிரசாதம் எல்லாவற்றையும் ஒப்படைத்தார் அர்ச்சகர்.
'' அப்ப நாங்க கிளம்பறோம்..ரொம்ப சந்தோஷம்'' என்ற ராமசந்திரன் 'எவ்வளவு செலவாச்சு' என்று கேட்டு அவர் சொன்ன தொகையுடன் ஐன்னூரு ரூபாய் சேர்த்து தந்தார்.

'' எனக்கு நூறு ரூபாய் போதும். பாக்கி நானூறு ரூபாய்க்கு உங்க பேரில் நாலு வெள்ளிக்கிழமை அர்ச்சனை பண்ணிடறேன்'' என்றார்.

காரில் எல்லோரும் ஏறியதும் ஸ்டார்ட் செய்தார் ராமசந்திரன். ஆனால் இஞ்சின் உறுமி உறுமி அடங்கியது. வண்டி கிளம்பவில்லை. எல்லோரும் தள்ளி ஸ்டார்ட் செய்தாலும் பயனில்லை. மக்கர் செய்தது...அவர் முகத்தில் கவலை படர்ந்தது . இந்த அத்துவானத்தில் எந்த மெகானிக்கை அழைப்பது ?

கோவிலைப் பூட்டிய அர்ச்சகர் அருகில் வந்தார்.
'' கார் பிரச்னையா...கவலை வேண்டாம். இந்த நெம்பருக்கு டயல் பண்ணிக் கொடுங்கோ..நான் பேசறேன். ''

அவர் போனில் பேசினார் '' இங்கே காரில் ஒரு சின்ன பிராப்ளம். வர்றியா?''

மோபெட்டில் ஒருவன் வந்தான். கார் பான்னெட்டை திறந்து பத்தே நிமிடத்தில் சரி செய்துவிட்டான். காரில் ஒரு ரவுண்டு அடித்து நிறுத்தினான். ராமசந்திரனுக்கு ஏக மகிழ்ச்சி.

இருனூறு ரூபாயை நீட்டினார். அர்ச்சகர் சொன்னார்
'' பணமெல்லாம் வேணாம். பர்சில் வையுங்க...இவன் என் பையன். பிரான்ஸ்லே நிச்சான் கார் கம்பெனியில் சீப் எஞ்சினியர்.லீவுலே வந்திருக்கான்..லீவு முடிந்ததும் ஒரகடம் பாக்டரியில் இன் சார்ஜாக பொறுப்பெடுக்கப் போறான்... ''

'' ஓ.. தட்ஸ் கிரேட் .'' என்றார் ராமசந்திரன் இன்ப அதிர்ச்சியுடன்

'' உங்களுக்கு ஒரே பையனா?''

'' ஒரு டாட்டர் இருக்கா. லண்டனில் டாக்டர்''

ராமசந்திரன் கவுதமை அர்த்தபுஷ்டியுட பார்த்தார் ' தாயாரை தினம் தரிசிக்கும் இவர் ஏழையா இருக்கார்னு சொன்னியே..இப்ப பார்த்தியா தேவியின் சக்தியை?'' என்று பார்வையால் வினவினார்.

அர்ச்சகர் கவுதம் அருகில் வந்தார் '' அம்பி, நீ ஸ்கூலில் எந்த டிரஸ் வேண்டுமானாலும் போட்டுகிட்டு போலாமா?''

'' இல்லை..யூனிபார்ம் இருக்கு..அதைத்தான் போட்டுக்கணும்''

'' அதே மாதிரிதான் இந்த கோவிலைப் பொறுத்தவரைக்கும் எனக்கும் இந்த வேஷ்டியும் துண்டும்.தான் யூனிபாரம். நான் பேண்ட் சர்ட் போட்டுகிட்டு பூஜை செஞ்சா நல்லா இருக்குமா...அதுதான். மத்தபடி கடவுளை நம்பினால் நிச்சயம் விரும்பினது கிடைக்கும். '' என்றபடி .

காரில் ஏறிய அனைவரும் அர்ச்சகருக்கும் அவர் மகனுக்கும் கையசைத்து விடை பெற்றார்கள்.

'' இதே மாதிரி வாராவாரம் ஒரு கோவிலுக்கு போலாமா தாத்தா'' என்று ஆவலுடன் கேட்ட கவுதமை ஆதரவுடன் தட்டிக்கொடுத்தார் ராமச்ச்ந்திரன். '' நிச்சயம் போவோம்''

காரை ரிப்பேர்;ஆக்கி கவுதமை ஆன்மீகத்துக்கு மாற்றிய இறைவனின் திருவிளையாடலை எண்ணி வியந்தபடி வண்டியை ஓட்டலானார்.
ravi said…
ஸ்ரீமஹா ஸ்வாமிகள் மகா பெரியவா சொல்வதைக் கேட்போம்
*பசுவும், புண்ணியங்களும்*!

* பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.

* பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.

* பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும்.

இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ‘ஆவுரஞ்சுக்கல்’ அமைத்தனர்.

* பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.

* பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.

* மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.

எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.

* ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது.

பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற, அதன் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

* உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும், அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும், பசுக்களை நாம் பேணிக் காக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

* கறவை நின்ற வயதான பசுக்களைக் கூட நாம் பேணிக் காக்க வேண்டும்.

* பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.

பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

`மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது!

தர்மோ ரக்ஷதி ரக்ஷித:
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

பழைய காலத்தில் செத்தை எரிமுட்டை எல்லாவற்றையும் கொளுத்திப் போட்டே அடுப்பு மூட்டுவார்கள். மழை நாளில் அடுப்பு பிடித்துக்கொள்ள ரொம்ப சிரமமாயிருக்கும். நாலு நெருப்புப் பொறி கிளம்பினால்கூடப் போதும், உடனே விசிறு, விசிறு என்று விசிறி அதைப் பற்ற வைத்து விடுவார்கள். அதுமாதிரி, இன்னமும் முழுக்க அணைந்து போகாமல், ஒரு சில பெரியவர்களிடமாவது இருக்கிற நாலு பொறி ஸநாதன தர்மத்தை ஊதி ஊதி எல்லாரிடமும் பரவச் செய்யலாம் என்பது என்னுடைய பேராசை. அதனால்தான் இதை எல்லாம் சொல்கிறேன்.
ravi said…
நம்முடைய ஸநாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வர்ண தர்மம் இருப்பதால், இது அவசியமில்லை என்று எடுத்துப் போட்டுவிட்டு நம் மதத்தையும் மற்றவை மாதிரி ஆக்கிவிடவேண்டும் என்று சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறார்கள்.
சரி, மதம் என்பது என்ன? ஆத்மாவுக்கு வந்திருக்கிற வியாதி தீருவதற்கு வைத்தியம் சொல்வதுதான் மதம். ஒரு நோயாளிக்கு இன்ன வியாதி வந்திருக்கிறது; அது இன்ன மருந்தைத் தந்தால் சொஸ்தமாகும் என்பது வைத்தியனுக்குத் தான் தெரியும்.
ravi said…
தங்களுக்கென்று ஒரு பொருளையும் தேடிக் கொள்ளாமல், பரமத் தியாகத்துடன் வாழ்ந்து லோக க்ஷேமத்தையே நினைத்த ரிஷிகள், தர்ம சாஸ்திரக்காரர்கள், இப்படித் தந்திருக்கிற மருந்துதான் நமது ஸநாதன தர்மம். மற்ற தேசங்களில் வேறு வைத்தியர்கள் வேறு மதங்களை மருந்தாகத் தந்திருக்கிறார்கள். நம் உடம்புக்கு மருந்து தருகிற டாக்டரிடம், ‘அந்த டாக்டர் அப்படி ட்ரீட்மென்ட் செய்கிறார், நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களே!’ என்றால், அவர் கேட்டுக் கொண்டிருப்பாரா? வைத்திய சாஸ்திரத்தில் பல தினுசுகள் உண்டு. ஒன்றில் கடும் பத்தியம் இருக்கும்; ஒன்று லகுவாக இருக்கும். ஒன்றில் மருந்து கசக்கும்;
ravi said…
இன்னொன்றில் மருந்து தித்திக்கும். இதையெல்லாம் ஒன்றாக்க வேண்டும் என்று சொல்லாமல், அவரவரும் எந்த வைத்திய முறையை மேற்கொள்கிறார்களோ அதையே விடாமல் பின்பற்றினால் எந்த முறையிலும் சொஸ்தம் அடையலாம்.
மற்ற மதங்களில் சகல பிராணிகளுக்கும் அவசியமான பொது தர்மங்களை மட்டும் சொல்லியிருக்கிறது. அவற்றை நம் வைதிக மதமே ஸாமானிய தர்மங்கள் என்ற பெயரில் சர்வ ஜனங்களுக்கும் விதித்திருக்கிறது. அஹிம்ஸை, சத்தியம், தூய்மை, புலனடக்கம் தேவைக்கு அதிகமாக ஒரு துரும்பைக்கூடத் தனக்கென வைத்துக்கொள்ளாமலிருப்பது, தெய்வ பக்தி, மாதா பிதா விடம் விசுவாசம், சகல ஜீவராசிகளிடத்துலும் சமமான அன்பு – இவை எல்லாம் எல்லாருக்கும் நம் மதத்தில் விதிக்கப்பட்ட ‘ஸாமான்ய தர்மங்கள்’. அது தவிர ‘வர்ணம்’ என்ற பெயரில் சமூகத்தைப் பரம்பரை ரீதியில் வெவ்வேறு தொழில்களாகப் பல பிரிவாகப் பிரித்து சில விசேஷ தர்மங்கள் அவரவருக்கும் விதிக்கப்படிருக்கின்றன.
இந்த விசேஷ தர்மங்களையும் சாமானியமாக்கியிருந்தால் அவற்றை எவருமே அநுஷ்டிக்காத நிலைதான் உண்டாகியிருக்கும். இதற்கு ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன்:
ravi said…
புத்த மதத்தில் மாமிசம் உண்ணக்கூடாது என்பதைப் பொது தர்மமாக வைத்தார்கள். ஆனால் இன்று பௌத்த தேசங்களில் என்ன பார்க்கிறோம்? எல்லோருமே மாமிசம் உண்பவர்களாக இருக்கிறார்கள். நம் ரிஷிகளும், தர்ம சாஸ்திரக்காரர்களும் மநுஷ்ய சுபாவம் நன்றாகத் தெரியும். அதனால் புலால் உண்ணாமையைச் சிலருக்கு மட்டுமே விசேஷ தர்மமாக வைத்தார்கள். இதைப் பார்த்து மற்றவர்களும் விரதங்கள், நோன்பு நாட்கள், மூதாதையர் திதி ஆகிய தினங்களில் மாமிச உணவை நீக்கி விடுகிறார்கள்.
ravi said…
எல்லா தர்மங்களையும் பொதுவாக வைத்த ஒவ்வொரு தேசத்தின் பழைய மதமும் அடியோடு விழுந்து விட்டிருக்கின்றன. மேற்கே கிரீஸில் இருந்த ஹெல்லெனிக் மதம் மத்திய ஆசியாவில் இருந்த ஹீப்ரு மதங்கள் எல்லாம் போன இடம் தெரியவில்லை. கிழக்கே கன்ஃபூஷியஸ் மதம், ஷீன்டோ மதம் எல்லாம் ஏதோ கொஞ்சம் கொஞ்சம்தான் இருக்கின்றன. இவற்றிடத்தில் வந்துள்ள கிறிஸ்துவம், இஸ்லாம், பௌத்தம் முதலியவற்றிலும் பொதுவாக ஒரே தர்மம்தான் உள்ளதே தவிர, அதோடுகூட தனித்தனி வர்ணங்களுக்கான விசேஷ தர்மம் என்கிற பாகுபாடு இல்லைதான். ஆனால் இந்த மதங்களில்கூட இப்போது அந்தந்த தேசத்து மக்களுக்கு நிறைவு போய்க்கொண்டுதான் இருக்கிறது. மத நம்பிக்கையற்றவர்கள் இந்த எல்லா தேசங்களிலும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒன்று, இவர்கள் நாஸ்திகராகிறார்கள்; இல்லாவிட்டால், தங்கள் மதத்தில் திருப்திக்கொள்ளாத பலர் நம்முடைய யோகம், பக்திமார்க்கம், ஞான விசாரம் ஆகியவற்றிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேசங்களில் தற்போதுள்ள சரித்திரக்கால மதங்களை உள்ளபடி பின்பற்றிப் போகிறவர்கள் இன்னும் எத்தனை காலம் இருப்பார்கள் என்று சொல்லமுடியாமலிருக்கிறது. ‘
ravi said…
நான் ஹிந்து மதப் பிரதிநிதி, மற்ற மதங்களைக் குறைவுபடுத்தி பேச வேண்டும்’ என்று நினைத்து இப்படிச் சொல்லவில்லை. தற்போதுள்ள வெவ்வேறு மதஸ்தர்களும் தங்கள் மதத்திலேயே இருந்து கொண்டு ஆத்மாபிவிருத்தி அடைய வேண்டும் என்று தான் எனக்கு ஆசை. ‘எங்கள் மதத்துக்கு வாருங்கள்’ என்று எவரையும் நான் கூப்பிடவில்லை. அப்படிக் கூப்பிடுவது நம் மதத்தின் அடிப்படைக் கொள்கைக்கே (Tenet) விரோதம் என்பது என் அபிப்பிராயம். லோகத்தில் எதுவும் காரணமில்லாமல் (accidental) நடந்து விடவில்லை. யோசித்துப் பார்த்தால், நம் தேசத்திலும்கூட பழைய வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்துபோய், எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்ராயம் வந்த பிற்பாடுதான், மத உணர்ச்சி குன்றி, நாஸ்திகம் அதிகமாகியிருக்கிறது என்று தெரிகிறது; சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிகிறது.
ravi said…
இது வேடிக்கையான விஷயமாக இருக்கிறது; அதாவது ஒரு மதம் ஜனங்களைப் பலவிதமாகப் பிரித்து வைக்கிறது என்றால், அதில்தான் பரஸ்பரக் கட்டுக்கோப்பும் ஐக்கியமும் இல்லாமலேயிருக்கும் என்று நினைக்கிறோம். இப்படிப்பட்ட மதம்தான் உள் சண்டையால் தனக்குள்ளேயே உளுத்துப்போய் விழுந்துவிடும் என்று தோன்றுகிறது. அதோடுகூட நம் தேச சரித்திரத்தில் பார்க்கிறமாதிரி, அலெக்ஸான்டர் காலத்திலிருந்து பல அந்நிய மதஸ்தர்கள் வேறு அலைஅலையாகப் படை எடுத்து வந்தார்கள் என்றால், இப்படிப் பட்ட மதம் இருந்த இடம் தெரியாமல் புதைந்துதான் போயிருக்க வேண்டும். ஆனால், வாஸ்தவத்தில் நாம் பார்ப்பது என்னவென்றால் இதற்கு நேர் மாறாக இருக்கிறது; எல்லாருக்கும் அநுஷ்டானம் ஒன்று என்று சமமாக வைத்துக் கொண்டிருந்த பெரிய பெரிய மதங்களை எல்லாம் காலப் பிரவாகம் எங்கேயோ அடித்துக் கொண்டுபோயிருக்கிறது.
ravi said…
இன்றைக்கு உயிரோடிருக்கிற அப்படிப்பட்ட மதங்களுக்கும் பெரிய ஆபத்து இருப்பதாக அந்த மதத்து அறிவாளிகளே சொல்கிறார்கள். ஆனால் பல வகுப்பாக சமுதாயத்தை வர்ண தர்மத்தில் பிரித்து வைத்திருக்கிற நம் மதமோ இன்றளவும் ‘என்னை யார் என்ன செய்துவிடமுடியும்?’ என்று மூச்சைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு உயிர்வாழ்கிறது. இதன் சூக்ஷ்மத்தை நாம் உணர்ச்சிவசப்படாமல் அறிவைத் தெளிவாக வைத்துக் கொண்டு ஆலோசித்துப் பார்க்க வேண்டும்.
ravi said…
ஆயிரம் பதினாயிரம் வருஷமாக வர்ண தர்மத்தைப் பின்பற்றியும் நம் மதம் இத்தனை ஜீவ களையுடன் இருந்து வந்ததன் மர்மம் என்ன? அப்படியாவது, நம் சாஸ்திரங்களை ரக்ஷித்துக் கொடுப்பதே ஸ்வதர்மம் என்று கொண்டிருந்த பிராம்மணர்கள் பெரும்பான்மையாக (மெஜாரிட்டியாக) இருந்தார்களா? இல்லை. அவர்கள் ஆயுத பலத்தையாவது வைத்துக் கொண்டிருந்தார்களா? அதுவும் இல்லை. குறைந்த பட்சம் திரவிய பலமாவது அவர்களுக்கு இருந்ததா? அப்படிக்கூட இல்லை. பிராமணன் பணம் சேர்ப்பது ரொம்பப் பிற்காலத்தில், சமீபத்தில் ஏற்பட்ட விபரீதம்தான். சாஸ்திரப்படி பிராமணன் ஏழையாகத்தான் இருக்க வேண்டும். இப்படிப் பணமும் இல்லாமல், பலமும் இல்லாமல், எண்ணிக்கையிலும் பெருமாபான்மையாக இல்லாமல் இருக்கிறவர்கள் விதித்த சாஸ்திரப் பிரிவினைகளை மற்றவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும்? மற்ற அத்தனைப் பேரும் அத்தனை காலமும் ஏமாந்தவர்களாகவா இருந்தார்கள்? அப்படி அவர்கள் ஏமாந்து போயிருந்தால்கூட, அவ்வப்போது ஒரு புத்தர், ஒரு ஜீனர் மாதிரி ரொம்பப் பெரியவராக ரொம்பச் செல்வாக்கோடு ஒருத்தர் வந்து, ‘இந்த வேதம், யாகம் இதெல்லாம் வேண்டாம். எல்லா ஜனங்களுக்கும் பொதுவான சாமான்ய தர்மங்களை மட்டும் வைத்துக் கொள்வோம். ஸமஸ்கிருதம் வேண்டாம், பொது ஜனங்களின் பிராகிருத பாஷைகளான பாலி முதலியவைகளிலேயே நம்முடையது புது சாஸ்திரங்களை வைத்துக் கொள்வோம்’ என்று புதிய வழியைக் காட்டினால்கூட ஜனங்கள் அப்போதைக்கு ஏதோ ஒரு வசீகரத்தினால் அந்தப் புது மதங்களில் சேர்ந்திருக்கிறார்களேயொழிய, அப்புறம் அவற்றின் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடைசீயில் அவை ரொம்பவும் தேய்ந்து போயே போய் விடுகின்றன! பார்த்தால், பழைய வைதிக மதமே “செத்தேனோபார்” என்று தலையைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிறது.
‘நவத்வாரம் உள்ள உடம்பில் உயிர் தங்கியிருப்பதுதான் ஆச்சரியம். வெளியே போவது ஆச்சரியமே இல்லை’ என்று ஒரு பெரியவர் பாடினார். அம்மாதிரி உள்ளே பிரிந்து வெளியிலிருந்தும் ஓயாமல் தாக்கப்பட்ட ஹிந்து மதம் செத்திருந்தால் ஆச்சரியமே இல்லை; சாகாததுதான் ஆச்சரியம்!
நிஷ்பக்ஷபாதமாக இதை ஆராய்ந்து பார்த்தால் என்ன தெரிகிறது? மற்ற தேசங்களிலும் சரி, நம் தேசத்திலும் சரி; மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இதுமட்டும் பதினாயிரம் வருஷமாகப் போகாமலிருக்கிறதென்றால், அவைகளில் இல்லாத எதுவோ இதில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? அது என்ன என்று பார்த்தால், வர்ண தர்மம்தான் நமக்கு மட்டும் பிரத்தியேகமாக இருக்கிறது. ஆகையால் வர்ண தர்மம் சமூகச் சீர்குலைவுக்கே காரணம் என்று புது நாகரிகக்காரர்கள் சொன்னாலும், இது இருக்கிற நம் சமூகம்தான் சீர்குலையாமல் இருந்து வருகிறது. நவீன யுகத்தில் ‘சமத்துவம்’ (equality) என்று சொல்லப்படுவதைவிட சிலாக்கியமாக, சமூகத்துக்கு ரொம்பவும் க்ஷேமம் விளைவிப்பதாகப் பழைய வர்ண தர்மத்தில் எதுவோ இருந்திருக்க வேண்டும் என்று தானே ஏற்படுகிறது? அதனால்தான் சமூகத்தைப் பலவாகப் பாகுபாடு செய்திருக்கிற நம் மதம் ஒன்று மட்டுமே, இத்தனை எதிர்ப்புகள் இருந்தும் விழமாட்டேன் என்று இன்று வரைக்கும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்து வருகிறது.
கௌசல்யா said…
அற்புத நவரத்தினங்கள் பதித்த மாலை, கருணா ரச சாகரிக்கு அர்பணம்.....மிக அருமை...🙇‍♀️🙇‍♀️🪷🪷
ravi said…
🌹🌺 Chaitanya Mahaprabhu said that this ocean itself has become pure and holy because of Haridasa's pure devotion to Sri Krishna - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹 "One evening Caitanya Mahaprabhu was chanting Akanda Nama Bhajan with his disciples chanting Sri Krishna Maha mantra Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare.

🌺Then Hari Das Tagore chanted Chaitanya Chaitanya and shed tears of joy seeing Lord Chaitanya.

🌺 At that time when his life was separated and Moksha was attained, Chaitanya Mahaprabhu carried the body of Hari Das Tagore with his hand and performed Ananda Nartanam and danced very ecstatically.

🌺Then he carried the body with his hand and bathed in Puri sea
Chaitanyar then said.

🌺 Haridas, who had pure devotion to Lord Krishna, said that this ocean became special and became very sacred.

🌺Jai Sri Chaitanya Mahaprabhu Gurumaharaj Jai to, his (Thiruvadi) feet🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 *'ஸ்ரீ கிருஷ்ணரின் மீது தூய பக்தி கொண்ட ஹரிதாசின் தொடர்பால் இந்த சமுத்திரமே தன்யமானது, மேலும் மகா பவித்திரமாகி விட்டது என கூறிய சைதன்ய மகாபிரபு - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹" ஒரு மாலை வேளையில் சைதன்ய மகாபிரபு ஸ்ரீ கிருஷ்ண மஹா மந்திரமான ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்று தனது சீடர்களோடு அகண்ட நாம பஜனை செய்து கொண்டு இருந்தார்.

🌺அப்போது ஹரி தாஸ் தாகூர் சைதன்ய சைதன்ய என்று பஜனை செய்து கொண்டு சைதன்ய மகா பிரபுவை பார்த்து ஆனந்த கண்ணீரில் நனைந்தார்

🌺அப்போது அவரின் உயிர் பிரிந்து மோட்சம் கிட்டியது சைதன்ய மகா பிரபுவோ அந்த ஹரி தாஸ் தாகூர் சரீரத்தை தன் கையால் ஏந்தி ஆனந்த நர்த்தனம் செய்து மிக பரவசமாக ஆடினார்.

🌺பின்னர் அந்த சரீரத்தை தன் கையால் சுமந்து கொண்டு பூரி சமுத்திரத்தில் குளிபாட்டினார்
அப்போது சைதன்யர் கூறினார்.

🌺ஸ்ரீ கிருஷ்ணரின் மீது தூய பக்தி கொண்ட ஹரிதாசின் தொடர்பால் இந்த சமுத்திரமே தன்யமானது, மேலும் மகா பவித்திரமாகி விட்டது என கூறி தமது கைகளாளே அவருக்கு சமாதி உண்டு பண்ணினார் இப்போதும் அச்சமாதியை பூரி சென்றால் தரிசிக்கலாம்

🌺ஜெய் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு குருமகராஜ் திருவடிக்கு ஜெய் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 *நம் அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஸ்ரீ கிருஷ்ணன் அருள் என்றும் உண்டு நமக்கு ........ விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹நம் உடலுக்குள் ஆத்மா உண்டா??அது அழிந்து போகாதா??உடல் அழிந்து போகிறதே?.விளக்கம் சொல்லுங்கள் என்ற சீடனுக்கு குரு விளக்கினார். .

🌺" பால் "
பயனுள்ளதுதான்...
ஆனால் அதை அப்படியே விட்டால் கெட்டுப்போகும்..
அதில் ஒரு துளி
உறை மோர் விட்டால் பால் தயிராகி விடும் கெடாது...

🌺தயிரான பால் இன்னும் ஒரு நாள் தான் தாங்கும்....
அப்படியே விட்டால் கெட்டுப் போகும்...
அதைக் கடைய வேண்டும்....

🌺கடைந்தால் வெண்ணெய்
ஆகி விடும் கெடாது...
வெண்ணெய் ஆன பால் பல நாள் தாங்காது....
அப்படியே விட்டால் கெட்டுப் போகும்....
அதை உருக்க வேண்டும்...

. 🌺சரியாக உருக்கினால் சுத்தமான நெய் ஆகிவிடும்...
அந்தப் பரிசுத்தமான நெய் கெடவே கெடாது......

🌺அதுபோலத்தான்...
நம்மை ஸ்ரீ கிருஷ்ண பக்தியில் மூழ்க செய்தால் நம் ஆன்மா திரும்ப திரும்ப பிறவிகள் கிடையாது
கெட்டுப் போகும் பாலுக்குள்
கெடாத நெய் இல்லையா??
அதுபோலத்தான்...

🌺நம் அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஸ்ரீ கிருஷ்ணன் அருள் என்றும் உண்டு நமக்கு ...
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
*ஸ்ரீ மாத்ரே நம*

*ஏழு ஸ்வரங்கள்*
*சரிகமபதநி*

*ச*🎼🎼🎼🎼🎼🎼🎼
ravi said…
ஏழு ஸ்வரங்களில் இன்னிசையாய் வருபவளே ...

சடுதியில் வந்தே சங்கடம் தீர்த்தே சரண் அடைந்தோர்க்கு சர்வமும் தருபவளே

சண்முகமும் ஒரு முகமாகி ஓம்கார பிரணவம் பொருள் தந்தவளே ... எப்பிணிக்கும் மருந்தானவளே

சர்வம் சக்தி மயம் அன்றோ

சங்கடங்கள் தீரும் நேரம் இதுவன்றோ ...

சங்கரன் மனம் மகிழும் சங்கரியே
சுந்தரன் தன் பாதி கொண்டே சுந்தரி ஆனவளே ..

இந்திரன் சந்திரன் என்றும் தந்திரம் செய்தாலும் உன் நாமம் எனும் மந்திரத்தில் மகுடி கண்ட பாம்பு அன்றோ அவர்கள்

காஞ்சி கொடி தனில் கோடி புண்ணியம் வைத்தாய்

எங்கு தேடியும் கிடைக்கா எம்மானை பொன்மானாய் அங்கே பதித்தாய்..

பெண் மானே
இந்த பேதைக்கும் உன் சன்மானம் தருவாயோ 💐💐💐
ravi said…
கண்ணா*

வாரய்யா வேங்கட *கண்ணா*

வளங்கிளர் நிதியே

வாராய் வையத்தின் ஐயா

அன்பர்களைக் கைவிடாதே
*கண்ணா*

ஓல மறைகள் காக்க மீனம்

ஒரு அமுதினை அருளக் கூர்மம்

அழுந்தும் உலகைத் தூக்க வராகம்

குழந்தைப் பேச்சுமெய் ஆக்கச் சிம்மம்

உலகை அளந்து,
பரசு சுமந்து
உயிர் ராகவா,
உயர் யாதவா

நிலத்தில் யார்க்கும் அன்பு சுரந்து
பலராமனே கல்கி வித்தனே

வாரய்யா வேங்கட *கண்ணா*

மத்வ பீட வரதனே -

குரு
சித்த பீட அமுதனே

புரந்தர விட்டல நிரந்தரா

வரந்தர வாராய் வாராய்

வாரய்யா வேங்கட *கண்ணா* 💐💐💐
ravi said…
*விவேகசிந்தாமணி*

*70. உலக இயல்பு*

வீணர் பூண்டாலும் தங்கம் வெறும் பொய்யாம் மேற்பூச் சென்பார்,
பூணுவார் தராப் பூண்டாலும் பொருந்திய தங்கமென்பார், காணவே பனைக்கீழாய்ப்பால் குடிக்கினுங் கள்ளே யென்பார், மாணுல கத்தோர் - புல்லர் வழங்குரை மெய்யென் பார்.

*பொருள்*

ஏழைகள் அணிந்தால் அது தங்கம் இல்லை வெறும் மேற்பூச்சு என்பார். செல்வந்தர் பித்தளையை அணிந்தாலும் தங்கம் என்பார்கள். பனைமரத்தின் கீழிருந்து பால் குடித்தாலும் கள் என்பார்கள். பெருமை பொருந்திய உலகிலுள்ளோர், கீழானவர்கள் கலகம் செய்து பேசினாலும் உண்மை என்பார்கள்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
கிருஷ்ண பக்தை அம்மாளு அம்மாள்

அம்மாளு என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் கும்பகோணத்தில் 1906ல் அவள் பிறந்தாள். அந்த கால வழக்கப்படி சிறு வயதிலேயே அவளுக்கு திருமணம் நடந்தது. திருமணம் என்றால் என்ன என்றே தெரியாத நிலையில் கணவன் மரணம் அடைந்ததால் அவள் சிறு வயதிலேயே விதவையாகி விட்டாள். சமூகத்தில் ஒதுக்கப்பட்டு பெண் உருவத்தில் சிதைக்கப்பட்டு உள்ளத்தில் நொறுக்கப்பட்டு சமூகத்தில் அபசகுனமாக வெறுக்கப்பட்டு சபிக்கப்பட்ட ஒரு ஜீவனாக பசியிலும் அவமானத்திலும் வளர்ந்து வாழ்ந்தாள். நரசிம்மனிடம் நாராயணனிடம் கிருஷ்ணனிடம் அவள் கொண்ட பக்தி ஒன்றே அவளை உயிர் வாழச் செய்தது. நாட்கள் செல்ல செல்ல இந்த சமூகம் எனும் கொடிய உலக நரகத்திலிருந்து விடுதலை பெற தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தாள். பக்கத்தில் ஒரு ஆழமான குளம். கண்களை மூடி ஒருநாள் பகவானே என்னை ஏற்றுக் கொள் என்று குதிக்கும் போது நில் என்று ஒரு குரல் தடுத்தது கண் விழித்தாள்.

ravi said…
உக்கிரமான நரசிம்மர் அவள் எதிரே சாந்த ஸ்வரூபமாக நின்றார். எதற்காக இந்த தற்கொலை முயற்சி உனக்கு. உனக்கு கடைசி நிமிடம் வரை உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க நிழலும் கிடைக்க போகிறதே என்றார் நரசிம்மர். அம்மாளு அவரை போற்றி வாழ்த்தி வணங்கினாள். பகவானே எனக்கு ஒரு வரம் தா என்றாள். என்ன வேண்டும் கேள் அம்மாளு என்றார். எனக்கு பசியே இருக்கக் கூடாது என்றாள். அம்மாளு இனி உனக்கு பசி என்றால் என்ன என்றே தெரியாது என்று நரசிம்மர் வரமளித்ததார். அன்று முதல் ஒரு நாளைக்கு ஒரு முறை ஒரு டம்பளர் மோர் பால் ஏதாவது ஒரு பழம் என்று கடைசி வரை வாழ்ந்த அம்மாளு அம்மாள் உணவை தொடவில்லை.
ravi said…
ஏகாதசி அன்று அதுவும் கிடையாது. உற்சாகத்தோடு இருந்தாள். தினந்தோறும் கிருஷ்ண பஜனையில் தன்னை மறந்த நிலையில் ஈடுபட்டாள். அவளுக்கு குருவாக இருந்த ராமச்சந்திர தீர்த்தர் பலவற்றை கற்றுக் கொடுத்தார். இளம் விதைவையாக வாழ்ந்த அம்மாளுக்கு ஒரு நாள் பாண்டுரங்கன் கனவில் உத்தரவிட்டான். நீ பண்டரிபுரம் வா என்றான் பண்டரிநாதன்.

ravi said…
இந்த குரல் அவளை பொழுது விடிந்ததும் பண்டரிபுரம் போக வைத்தது. எப்படி தனியாக போவது என்று அவளது அம்மாவை நீயும் என் கூட வா என்று கூப்பிட்டாள். அம்மா வரவில்லை. தனியாக கட்டிய துணியோடும் தம்புராவோடும் பண்டரிபுரம் சென்றவள் பல வருடங்கள் அங்கேயே தங்கி விட்டாள். கோவிலை அலம்பினாள் பெருக்கினாள் கோலமிட்டாள் மலர்கள் பறித்து மாலை தொடுத்து இறைவனுக்கு சூட்டினாள் பாடினாள் நிறைய பட்சணங்கள் உணவு வகைகள் சமைத்து பாண்டுரங்கனுக்கு திருப்தியோடு அர்பணித்தாள். எல்லோருக்கும் அவற்றை பிரசாதமாக விநியோகித்தாள். ஆனால் அவைகளில் ஒரு துளியும் அவள் உட்கொள்ளவில்லை. அந்த ஊர் ராணி அம்மாளுவின் பூஜைக்காக வெள்ளி தங்க பாத்திரங்கள் நிறைய கொடுத்தாள். கண்ணில் கண்டவர்களுக்கு எல்லாம் அவற்றை அப்படியே விநியோகம் செய்து விட்டாள் அம்மாளு அம்மாள். பணத்தை தொட்டதே இல்லை. கீர்த்தனங்களை சாதாரணமாக அவள் பாடினாள். எந்த கோவிலுக்கு சென்றாலும் அந்த கோவிலின் பெருமைகளை அப்படியே அவள் பாடலில் பாடினாள். அவள் அந்த கோவில்களுக்கு அதற்கு முன் சென்றதில்லை ஒன்றுமே தெரியாது என்றாலும் இந்த அதிசயம் பல கோவில்களில் நடந்திருக்கிறது.

ravi said…
மகா பெரியவா கும்பகோணத்தில் தங்கி இருந்த போது ஒருநாள் ஒருவர் தன் பெண்ணுக்கு திருமணம் பெரியவா ஆசீர்வாதம் ஆசி பெற வந்திருக்கிறேன் என்கிறார். என்கிட்டே எதுக்கு வந்திருக்கே. மரத்தடியில் ஒரு நித்ய உபவாசி இருக்காளே அவா கிட்டே போய் ஆசிர்வாதம் வாங்கிக்கோ. உனக்கு சர்வ மங்களமும் சித்திக்கும். வேண்டிக் கொண்ட எண்ணங்களும் நிறைவேறும் என்றார். மகாபெரியவா இவ்வாறு அம்மாளு அம்மாளின் பெருமைகளை எல்லோருக்கும் அறிவித்ததற்கு பிறகு நிறைய பக்தர்கள் அம்மாளுவை சூழ்ந்து கொண்டார்கள். மகாபெரியவா ஒரு தடவை அம்மாளு அம்மாள் புரந்தர தாசர் அம்சம் என்று கூறினார். பாகவத தர்மத்தின் உதாரணமாக நித்ய பஜனை ஆடல் பாடல் என்று அவள் வாழ்க்கை பூரணமாக கடந்தது. ஒரு பெரியவர் மரணத் தருவாயில் இருக்கும் போது உறவினர்கள் அம்மாளுவை அவரிடம் அழைத்து போனார்கள். அவரைப் பார்த்ததும் அவர் உயிர் பிரிந்து போவது தெரிந்தது. உடனே அம்மாளு தன்னை மறந்த நிலையில் கண்களை மூடி பாடினாள். அவரது உயிரை ராம நாமம் தூக்கி செல்வது அவளுக்கு தெரிந்தது. அதை பாடினாள். அருகே இருந்த உறவினர்களுக்கு அந்த மனிதர் ராம நாமம் உபதேசம் பெற்று ஜபித்து வந்தவர் என்பதே தெரியாது. பிறகு தான் தெரிந்தது.

ஒரு சமயம் சென்னை ஜார்ஜ் டவுனில் நாராயண முதலி தெருவில் நாராயண செட்டி சத்திரத்தில் அம்மாளு தங்கியிருந்தார். அப்போது சென்னையில் பொருட்காட்சி நடந்து கொண்டிருந்தது. அதிலே பங்கேற்ற நாட்டியக் கலைஞர்கள் கோபிநாத் மற்றும் தங்கமணி தம் குழுவினருடன் இரவு நேரக் கலை நிகழ்ச்சியை முடித்து விட்டு அம்மாளு தங்கியிருந்த சத்திரத்தின் மேல் தளத்திற்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியைத் தாண்டிய நிலையில் சற்றே கண்ணயரும் நிலையில் கீழே தாள சப்தமும் நர்த்தனம் ஆடும் சப்தமும் கேட்டதும் இந்த நேரத்தில் யார் ஆடுவார்? பிரமையோ என்று நினைத்தார்கள். மீண்டும் மீண்டும் இன்னமும் சப்தம் அதிகரிக்க நாட்டியக் கலைஞர்கள் கீழே வந்து பார்த்த போது அம்மாளு அம்மாள் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தார். உடனே தாளத்தை வாங்கி நாட்டியத்தில் அனுபவம் மிக்க கலைஞர்கள் தாளம் போட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் அவர்களை மறந்து நாட்டியத்தில் லயித்தனர். கேதார ராகத்தில் பாலக் கடல சய்யா எனும் கீர்த்தனம் பிறந்தது. எல்லாம் முடிந்ததும் நாட்டியக் கலைஞர்கள் அம்மாளு அம்மாவை வணங்கி சில ஜதிகள் நாட்டிய சாஸ்திரம் நன்கு கற்றவர்களாலேயே ஆட முடியாது. அதைப் போன்ற எவராலும் சாதாரணமாக ஆட முடி யாத தெய்வீக நர்த்தனத்தை இன்று கண்டோம். இது யாரிடமும் பயின்று வருவதல்ல யாராலும் பயிற்றுவிக்க முடியாததும் கூட என்று கூறி பிரமித்து நின்றனர். இன்று இதைக் கண்டது நாங்கள் செய்த பேறு என உணர்ச்சி வசப்பட்டனர். இவள் புரந்தரதாஸரின் அவதாரம் என்று ஒருமனதாக புகழ்ந்து போற்றி வணங்கினார்கள்.

மதுராபுரி ஆஸ்ரமத்தில் 2002 இல் அம்மாளுக்கு 94 வயதில் நேரிலேயே கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் தரிசனம் கிடைத்தது. அந்த கணமே நாக்கு கால மூர்தியு நீனே நீ தானே நாலு கால மூர்த்தி என பாடினாள். அந்த நாலு கால மூர்த்திகள் யார்? விடியற்காலையில் ஸ்ரீமந் நாராயணன் காலை முடியும் நேரம் ஸ்ரீ ராமன் அந்தி நேரத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மன் இரவில் ஸ்ரீ வேணுகோபாலன். கடைசி காலங்களை கும்பகோணத்தில் கழித்தாள். வயதானாலும் கிருஷ்ணனை தூங்கப் பண்ணி எழுப்பி குளிப்பாட்டி சிங்காரித்து ஆடைகள் அணிவித்து பாடி உணவு சமைத்து நிவேதித்து தாயாக பாண்டுரங்கனுக்கு சேவை செய்தவள் அம்மாளு அம்மாள். ஒரு நாள் தன்னுடைய இறுதிக் காலம் நெருங்கியதை உணர்ந்த அம்மாளு பாடிக் கொண்டிருக்கும் போது அதில் வைகுண்டம் எப்படி இருக்கும் என விவரித்து பாடினாள். பங்குனி உத்தரம் நாளில் கௌரி சிவனை அடைந்தாள். சீதை ராமனை அடைந்தாள். ஆண்டாள் பரமனை அடைந்தாள். அதுபோல் அம்மாளு அம்மாள் 104 வயது வாழ்ந்து 2010 பங்குனி உத்திரம் அன்று சித்தி அடைந்தாள்.
ravi said…
*கந்தர் அலங்காரம் 61* 🐓🦚🙏

*அலங்காரம்-15*

💐💐💐💐

குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்பு அடைந்த,
இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய்! இரு நான்கு வெற்பும்,
அப்பாதி யாய்விழ, மேருவும் குலுங்க, விண்ணாரும் உய்ய,
சப்பாணி கொட்டிய கை ஆறிரண்டு உடை சண்முகனே!
ravi said…
சப்பாணி கொட்டிய = இரண்டும் கையும் தட்டித் தட்டிச் சப்பாணி கொட்டுறான் முருகக் குழந்தை!
அவன் நடை பழகி, கீழே விழலை! நாம் தான் ஆன்மீக நடை பழகி, வழுக்கி வழுக்கி விழறோம்! ஆன்மீகம், மோனம், சாதனை-ன்னு என்னென்னமோ சொல்லி, ஆனால் இறை அன்பை மட்டும் மறந்துடறோம்!

நம் ஆன்மீக நடை பாதையில் நாம் வீழ, அந்தக் குழந்தை பொக்கை வாய்த்தனமாய்ச் சிரிக்கிறது! சப்பாணி கொட்டுகிறது!
சப்பாணி கொட்டாயே சண்முகா, சப்பாணி கொட்டாயே!
என்னைப் பார்த்துப் பார்த்து, சிரித்துச் சிரித்து, சப்பாணி கொட்டாயே!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 346*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

தீ⁴யன்த்ரேண வசோ-க⁴டேன கவிதா-குல்யோபகுல்யாக்ரமைர்-
ஆனீதைஶ்ச ஸதாஶிவஸ்ய சரிதாம்போ⁴-ராஶி-திவ்யாம்ருதை:
ஹ்ருத்-கேதார-யுதாஶ்-ச ப⁴க்தி-கலமா: ஸாபல்யம்-ஆதன்வதே
துர்பி⁴க்ஶான்-மம ஸேவகஸ்ய ப⁴கவன் விஶ்வேஶ பீ⁴தி: குத :

धीयन्त्रेण वचोघटेन कविताकुल्योपकुल्याक्रमै-

रानीतैश्च सदाशिवस्य चरिताम्भोराशिदिव्यामृतैः ।

हृत्केदारयुताश्च भक्तिकलमाः साफल्यमातन्वते

दुर्भिक्षान् मम सेवकस्य भगवन् विश्वेश भीतिः कुतः
ravi said…
அப்படி பாதம் தான் ஞானத்துக்கான விதை போடறது. அந்த பக்தி பயிரை வளர்க்கறதுக்கும் அம்பாளோட நாமம் தான். பரமேஸ்வரனோட சரிதம் தான். அத பண்ணிண்டே இருந்தா ஞானம் வரும்

Paul Brunton அப்டிங்கறவரோட கிட்ட தட்ட அவரோட வாழ்க்கையோட முடிவுல ஒரு 5 நிமிஷம் speech கொடுத்திருந்தார். அது ரொம்ப அழகா இருந்தது. என்ன பாக்கியவான். எவ்ளோ ஒரு முற்றின விவேகியா இருக்கார் எவ்ளோ தெளிவுனு நான் ரொம்ப சந்தோஷ பட்டேன். அத தமிழில் translate பண்ணி இருக்கேன் .அதை உங்களுக்காக இங்க share பண்றேன்.

அத படிச்சு பாத்தேள்னா அவர்க்கு அந்த meditation த்யானம், புத்திய கொண்டு ஆன்ம வழில ஒரு முடிவான என்ன உண்டோ அது வரைக்கும் அவர் சொல்லிடறார்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 342* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

அனுத்தமோ துராதர்ஷ :
க்ருதஜ்ஞ : *க்ருதிராத்மவான்||9*

💐💐💐
ravi said…
*84. க்ருதயே நமஹ (Krutaye namaha)*🪷🪷🪷
ravi said…
தன் குலகுருவான வசிஷ்டரையும் அழைத்தான் ராமன்.வசிஷ்டர், அகஸ்தியர் இரு ரிஷிகளையும் கொண்டு
கங்கைக் கரையில் அச்வமேத யாகம் செய்தான் ராமன்.லாயத்தில் கட்டப்பட்டிருந்த பல குதிரைகளுள் ஒன்றை யாகத்தில்
பலியிடுவதற்காக அகஸ்தியர் தேர்வு செய்தார்.அந்தக் குதிரையை உலகெங்கும் சுற்றி வருவதற்காக அவர்கள் அனுப்பிய போது
ராமனின் மகன்களே அதைச் சிறைபிடித்த வரலாறும், அது மீட்கப்பட்ட வரலாறும் நாம் அறிந்ததே.

யாகத்தின் இறுதிக்கட்டத்தில் குதிரை பலியிடப்பட வேண்டும்.

அப்போது ராமன் விதிப்படித் தன் வாளை எடுத்துக் குதிரையை வெட்டப் போனான்.

ஆனால் அந்தக் குதிரை காற்றில் மறைந்து விட்டது.

இதென்ன ஆச்சரியம் என்று அகஸ்தியரைப் பார்த்தான் ராமன்.
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 124* 💐💐💐
ravi said…
அடுத்த ஸ்லோகமும் ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம்.

वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात्

औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् |

सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण:

प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: || १८ ॥

வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்

ஔதார்யாத் அகஷோஷணாத் அகணிதஷ்ரேய:பதப்ராபணாத் |

ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:

ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||

ன்னு பகவானோட குணங்களை அடுக்கி ஆறு குணங்களை சொல்லி, ஆறு பேரை அதுக்கு சாக்ஷியா சொல்லி, respectively ன்னு English ல சொல்லுவாளே அந்த மாதிரி முறைப்படியே இந்த ஆறுபேர்னு வெச்சுக்கணும்.🙏🙏🙏
ravi said…
*அகஷோஷனாத்* ’ – பாபங்களைப் போக்குபவர் பகவான்கிறதுக்கு அஹல்யா சாக்ஷி.
ravi said…
*அகணிதஷ்ரேயபதப்ராபணாத்* ’ –

இவ்ளோன்னு சொல்ல முடியாது. அவ்ளோ உயர்ந்த பதவியை கொடுப்பார் என்கிறதுக்கு துருவன் தான் சாக்ஷிங்கறார்.

துருவ நக்ஷத்ரமாக நாம இன்னிக்கும் பார்க்கும்படி என்னென்னிக்குமா ஜ்வலிக்கற பதவி குடுத்தார்.

அந்த குழந்தை அப்பா மடியில உட்காரமுடியலையேன்னு காட்டுல போயி தபஸ் பண்ணினதுக்கு பகவான் நினைச்சுக்கூட பார்க்க முடியாத உயர்ந்த சுப ஸ்தானத்தை கொடுத்தார் இல்லையா.

இப்பேற்பட்ட பகவான் இந்த “ *ஸ்ரீபதிரேகஏவ ஸேவ்ய:”* இந்த பகவான் ஒருவனே வழிபடத் தக்கவர் என்பதற்கு இந்த ஆறு பேர் சாக்ஷி சொல்கிறார்கள்னு அழகான ஸ்லோகம்.💐💐💐💐💐💐
ravi said…
சிவபெருமான் ஒருநாள் நரகத்திற்குப் போனார். அங்கே பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை, ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும்ப் பூவும் மணக்க மணக்க நெய் ததும்பக் கொண்டுபோய் வைத்தார். “இதை எல்லோரும் வேண்டிய மட்டிலும் உண்ணலாம். ஆனால்... ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும். மாலையில் வருவேன். அதற்குள் உண்டு முடியுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அதேபோல சொர்க்கத்திலும் சர்க்கரைப் பொங்கலை கொண்டுபோய் வைத்துவிட்டு கையை மடக்காமல் உண்ணுமாறு கட்டளை பிறப்பித்துவிட்டு சென்றுவிட்டார். பிறகு மாலையில் சிவபெருமான் நரகத்துக்கு போய் பார்த்தார். நரக வாசிகள் கையை மடக்காமல் எவ்வாறு உண்பது என்று தெரியாமல் உண்ணாமலே இருந்துவிட்டனர். சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது, சிறிதும் குறையாமலே.

ஆனால், சொர்க்கவாசிகளோ முழுவதையும் தின்று முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர்.

நரகவாசிகளை அழைத்துக்கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார். சொர்க்கவாசிகளிடம் எவ்வாறு கையை மடக்காமல் சாப்பிட்டீர்கள்? என்று கேட்டார்.

அவர்கள் சொன்னார்கள்.

“நான் எடுத்து அவருக்கு ஊட்டினேன். அவர் எடுத்து எனக்கு ஊட்டினார். இவ்வாறு எல்லோரும் மற்றவர்களுக்கு ஊட்டினோம். அனைவரும் உண்டோம். அண்டாவும் காலி, எங்கள் பசியும் போச்சு” என்றனர். நரகவாசிகள் தங்களுக்கு இந்த தந்திரம் தெரியாமல் போயிற்றே என்று நினைத்து வெட்கப்பட்டனர்.

எது சொர்க்கம்..?

எல்லோரும் மற்றவர்களுக்கு உதவும் நிலை வந்தால் ஒருவரும் துன்பப்படமாட்டார்கள். சொர்க்கம் என்பதே எல்லாரும் எல்லார்க்கும் உதவிசெய்து வாழும் இடந்தான். இப்படி வாழ்ந்தால் வாழ்க்கை ரொம்ப சுபிட்சமுங்க. ஆனால் மனிதர்கள் பூமியில் எப்போதும் அடுத்தவனை கெடுத்து வாழ்வதிலேயே காலத்தை ஓட்டி விடுகின்றனர். தன் சுயநலம் பற்றியே கவலைப்படுகிறவர்கள் கடைசியில் போய் சேர்கின்ற இடமே நரகம்...!

ஓம் நமசிவாய..!
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 72*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
அம்பத்தொன்றி லக்கர மடங்கலோ ரெழுத்துளே

விண்பரந்த மந்திரம் வேதநான்கு மொன்றலோ

விண்பரந்த மூலவஞ் செழுத்துளே முளைத்ததே

அங்கலிங்க பீடமா யமர்ந்ததே சிவாயமே. 72🎼🎼🎼
ravi said…
🌹🌺 ' *ஏ* .... *குரங்குகளே* .... *இனி* *நீங்கள்* *இருவரும் எதைத் தண்ணீரில் எறிந்தாலும் அவை மிதக்கக் கடவது என்று சாபம் கொடுத்த முனிவர்*
- *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹" சுதீட்சண முனிவரின் ஆஸ்ரமத்தில் ஒரு நாள் பூஜையறையில் பாத்திரங்கள் உருளும் சப்தம் கேட்டது.

🌺முனிவர் சென்று பார்த்த போது அவர் பூஜைக்கு வைத்திருந்த சாளக்கிராமங்களை இரண்டு குரங்குகள் தலைக்கு ஒன்றாக எடுத்துச் செல்வதைக் கண்டார்.

🌺அவற்றின் பின்னால் ஓடினார். அவை அதை ஏரியில் எறிந்து விட்டு ஓடி விட்டன.
பிறகு முனிவர் அதை தேடி பிடித்து, மீண்டும் ஆஸ்ரமத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

🌺இப்படி ஒரு முறை அல்ல, பலமுறை நடந்தது. அவருக்குக் கோபம் வந்தது. எனினும் குரங்குகளுக்குச் சாபம் கொடுத்து என்ன பயன்? என்ற எண்ணம்தான் அவருக்குத் தோன்றியது.

🌺பிறகு சிறிது யோசித்து விட்டு, ஏ.... குரங்குகளே....இனி நீங்கள் இருவரும் எதைத் தண்ணீரில் எறிந்தாலும் அவை மிதக்கக் கடவது என்று சாபம் கொடுத்தார்.

🌺அன்று முதல், அவரது சாளக்கிராமங்கள் அந்தக் குரங்குகளால் அவ்வப்போது ஏரியில் எறியப்பட்டு மிதப்பதும், அவர் அவற்றை எடுத்து வருவதும் வழக்கமாகிப் போயின.

🌺சுதீட்சண முனிவரால் சபிக்கப்பட்ட அந்தக் குரங்குகள்தான் ராமாயணத்தில் சுக்கிரீவனின் படைத்தளபதிகளாக வரும் நலன், நிலன் எனும் வானரப்படை வீரர்கள்.

🌺இந்த விஷயம் பிரம்மஞானியான ஆஞ்சநேயருக்குத் தெரியாமலா இருக்கும்?

🌺பிற்காலத்தில் இதை ஆஞ்சநேயர் சொல்ல, அதன்படியே சீதையை மீட்க இலங்கைக்குப் போவதற்காகக் கடலில் சேது பாலம் அமைக்கப்பட்டபோது
ராமபிரான், மற்றவர்கள் எடுத்துக்கொடுக்கும் அனைத்துக் கற்களையும் நலனும் நிலனும் மட்டுமே கடலில் வைக்க வேண்டுமென்று கட்டளையிட்டார்.

🌺அதனால் பெரிய, பெரிய பாறைகளும் தண்ணீரில் மூழ்காமல் மிதந்து எளிதில் பாலம் கட்டப்பட்டது.

🌺இவ்வகையில் சுதீட்சண முனிவரின் சாபம் ராம கைங்கர்யத்திற்கு நன்மையாகவே முடிந்தது. 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


ravi said…
🌹🌺 Chaitanya Mahaprabhu said that this ocean itself has become pure and holy because of Haridasa's pure devotion to Sri Krishna - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹 "One evening Caitanya Mahaprabhu was chanting Akanda Nama Bhajan with his disciples chanting Sri Krishna Maha mantra Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare.

🌺Then Hari Das Tagore chanted Chaitanya Chaitanya and shed tears of joy seeing Lord Chaitanya.

🌺 At that time when his life was separated and Moksha was attained, Chaitanya Mahaprabhu carried the body of Hari Das Tagore with his hand and performed Ananda Nartanam and danced very ecstatically.

🌺Then he carried the body with his hand and bathed in Puri sea
Chaitanyar then said.

🌺 Haridas, who had pure devotion to Lord Krishna, said that this ocean became special and became very sacred.

🌺Jai Sri Chaitanya Mahaprabhu Gurumaharaj Jai to, his (Thiruvadi) feet🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
ரி*

ரீங்காரம் செய்யும் வண்டன வந்தேன் அம்மா

ஓம்கார நாயகியே உன் மலர் பதம் தனில் படுத்துறங்க ..

பரிகாசம் செய்வாயோ

தரம் அன்று இவன் என்றே தள்ளி விடுவாயோ

கருணா ரஸ சாகரம் நீயன்றோ சம்சாஹர சாகரம் கடக்க வைக்கும் படகோட்டியும் நீயன்றோ

நீயன்றி யாரம்மா என் கதி என்றே சிறிதேனும் நினைக்க மறந்தனயோ

நிர்கதியாய் நான் நிற்கும் வேலைதனில் நிறைந்தவளாய் நீ இருப்பதென்ன அழகோ

நீர் போகும் இடமெல்லாம் நிலம் வாழும் என்பார்கள் நீ இருக்கும் இடமெல்லாம் பலர் வாழ அருள் செய்வாய் ...

கேட்டு பெறுபவன் நான்
கேளாமல் தருபவள் நீ
கோணாமல் அருளும் காஞ்சி மகான்

இது போதும் எனக்கும் வாழ்வு தனில் உச்சம் தொடவே
ravi said…
கண்ணா*

கண் நிறைந்த உன் உருவம் அதை

எண்ணிறந்த மறை காணா அருவம் தனை

பண் நிறைந்த நாமம் அதில்

விண் நிறைந்த மேகம் போல்

சொல் நிறைந்து பாடுகின்றேன்

மன் நிறைந்து வாராயோ *கண்ணா*

மண் விரைந்து உண்டவனே ..

அளந்து அளந்து உலகம் வென்றாய்

என் அன்பையும் மூன்றடியாய் அளப்பது நியாமோ *கண்ணா* ?

பரசு கொண்டு அரசு வென்றாய் ... என் மனம் வெல்வது கடினமோ *கண்ணா* ?

கடப்பைக்கொண்டு நிலம் உழுதாய் .. என் மனம் உழுதல் உன்னால் இயலாதோ *கண்ணா* ?

வெண்ணெய் திருடி தின்றாய் உருகும் என் மனம் திருட ஓட ஒளிவதேன் *கண்ணா* ?

தயிர் கடையும் மத்து அன்றோ வாழ்க்கை ... *கண்ணா* நீயிருந்தும் உன் நினைவுகள் தப்புவது ஏன் *கண்ணா* ?

💐💐💐
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 73*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
சிவாயவென்ற வக்கரஞ் சிவனிருக்கு மக்கரம்

உபாயமென்று நம்புதற்கு உண்மையான வக்கரம்

கபாடமற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை

உபாயமிட் டழைக்குமே சிவாயவஞ் செழுத்துமே. 73💐💐💐
ravi said…
சிவயநம என்ற மந்திரமே சிவன் இருக்கும் அட்சரமாகும்.

நமக்கு ஆபத்து வரும் காலங்களில் உபாயமாக வந்து காப்பதற்கு நம்பி உபாசிக்க உண்மையாக உள்ள மந்திரம் இதுவே.

நம் பிராணனிலிருந்து கடந்து போன பிராண வாயுவை மீண்டும் நம் பிரானநிலேயே சேர்த்து ஆயுளைக் கூட்ட பிரானவாமம் செய்தால் அதற்கு உற்ற துணையாக இருப்பது சிவாயநம எனும் அஞ்செழுத்து மந்திரமே.

ஆதலின் அதை ஓதி தியானியுங்கள்.

அதுவே உங்களுக்கு உபாயமாக என்றும் வரும்.🙏🙏🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 351* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*ஷாந்திவ* = கருணை - சாந்தம் *மதீ* = அறிவு

❖ *131 ஶாந்திமதீ* = அன்பையே தனது இயல்பாக கொண்டவள்

(பக்த அனுகிரஹத்தை பிரதிபலிக்கும் பெயர்கள் நிறைவுற்றது. அடுத்த நாமங்கள் " *நிர்குண* " ரூபத்தை உணர்த்துகிறது)
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 349* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
*93 சிவனுடைய கருணையின் உருவே தேவி*

*மனோரத ஸித்தி*

அராலா கேஶேஷு ப்ரக்ருதிஸரலா மந்தஹஸிதே

ஶிரீஷாபா சித்தே த்ருஷதுபலஶோபா குசதடே

ப்ருசம் தந்வீ மத்யே ப்ருது ருரஸிஜாரோஹ விஷயே

ஜகத் த்ராதும் ஶம்போர் ஜயதி கருணா காசிதருணா 93
ravi said…
அம்பிகே!, பரமசிவனுடௌய மனதுக்கும் வாக்குக்கும் கூட எட்டாத பரம கருணை இந்த உலகை ரக்ஷிப்பதற்காக அருணா என்றழைக்கப்படுகிற பராசக்தியாக வெற்றியுடன் விளங்குகிறாய்.

கருணா சக்தியானது உனது கூந்தலில் சுருளாகவும், புன்சிரிப்பில் இயற்கையான இனிமையாகவும் மனதில் வாகைப் பூவைப் போல மிருதுத்தன்மையானதாகவும், நிகில்களில்கல்லினுள் இருக்கும் ரத்தினத்தினத்தைப் போன்ற கடுமையானதாகவும், இடையில் மிகுந்த மெலினமாகவும், மார்பும், நிதம்பமும் பருமனாகவும் விளங்குகிறது.🪷🪷🪷
ravi said…
From one of the great talks of Kanchi Periyava – short, simple yet profound, lucid, humorous too.

நாம அத்வைதத்த எடுத்துட்டாலும், த்வைதமா இருந்தாலும், விசிஷ்டாத்வைதமா இருந்தாலும் ஒரு ஜீவனுக்கு இறுதி இலக்கு பரமாத்மா தான். இதுல 'செகண்ட் தாட்' டே கிடையாது. ஆனா என்ன ஒவ்வொரு மார்க்கமும், ஒரு ஜீவாத்மா எப்படி, எந்த சூழ்நிலைல, என்ன வழிமுறைல பரமாத்மாவை அடையும்கறதுல வேறுபடறது.

இங்கே இருக்கற நிறைய பேர் கணிதம் படிச்சிருப்பீங்க என்ற நம்பிக்கைல சொல்றேன்.

மத்வாசார்யாரின் த்வைத மார்க்கம் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். சங்கரரின் அத்வைத மார்கத்துல பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு சதுரத்தின் பக்கத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு மாதிரி. அதாவது பக்கத்தை
மிகச் சரியாக நாலு மடங்கு செய்தால் அதன் சுற்றளவு வந்து விடும்.
நான்கு என்பது ஒரு RATIONAL நம்பர். எந்த Ambiguityயும் கிடையாது.

ravi said…
ஆனால் த்வைத மார்க்கத்தில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு வட்டத்தின் விட்டத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு போன்றது.
விட்டத்தை பை (Pi)மடங்கு பண்ணா அதன் சுற்றளவு வரும். ஆனால் நீங்க படிச்சிருப்பீங்க பை என்ற நம்பர் ஒரு Irrational number என்று. அதாவது அதை இரண்டு முழு எண்களின் விகிதமாக எழுத முடியாது. இருபத்து இரண்டு by ஏழு அப்படீங்கறது ஒரு
approximation தான். பை (Pi) என்ற இந்த விகிதம் முடிவில்லாமல் அனந்தமாகப்
போய்க்கொண்டே இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். மூணு புள்ளி ஒண்ணு நாலு
ravi said…
அப்படீன்னு எழுதி அதற்குப் பிறகு கோடி கோடி இலக்கங்கள் போட்டாலும் பை (Pi) என்ற எண் முடிவு பெறாது. எனவே வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தைப் போல இத்தனை மடங்கு அப்படீன்னு சரியாக, உறுதியா சொல்லவே முடியாது. விட்டத்தின் எல்லை அதன் சுற்றளவு தான். சுற்றளவு என்பது ஒரு முழுமையான எண். வட்டத்தின் விட்டமும் ஒரு முழுமையான எண். ஆனால் இவை இரண்டின் விகிதம் ஒரு முற்றுப்பெறாத எண். விட்டம் தான் ஜீவாத்மா, சுற்றளவு தான் பரமாத்மா என்று எடுத்துக் கொண்டால் பரமாத்மா ஜீவாத்மாவின் இலக்கு என்றாலும் அது ஜீவனின் இத்தனையாவது படிநிலை என்று உறுதியாக சொல்ல முடியாது. விட்டத்தின் ஏதோ ஒரு முடிவிலி மடங்கில் சரியாக வட்டத்தின் சுற்றளவு வரலாம். ஆனால் எத்தனை துல்லியமாக கணக்குப் போட்டாலும் (Pi)பையை கோடி தசம ஸ்தானம் வரை எடுத்துக் கொண்டாலும் விட்டத்தின்
ravi said…
மடங்குக்கும் சுற்றளவுக்கும் ஒரு சிறிய மைன்யூட் வேறுபாடு இருந்து கொண்டே தான்
இருக்கும். அதே போல ஜீவனின் இலக்கு பரமாத்மா என்று சொன்னாலும் பரமாத்வை அடைய (பரமாத்மாவாக மாற) ஜீவாத்மா எண்ணிலாத, கணக்கற்ற படிகளை கடக்க வேண்டி
இருக்கிறது. ஒரு ஜீவன் சாதனைகளை செய்து படிப்படியாக எவ்வளவு தான்
முன்னேறினாலும் அது சுற்றளவை நெருங்கலாமே தவிர சுற்றளவாக மாற முடியாது. த்வைதம்
ஸ்ரீமன் நாராயணனை சுற்றளவாக நிர்ணயம் செய்கிறது. உலகின் எண்ணிறைந்த ஜீவன்கள் தான் வட்டத்தின் எண்ணிறைந்த விட்டங்கள். விட்டம் சுற்றளவாக மாற எண்ணிறைந்த
முடிவிலியான படிநிலைகளைக் கடக்க வேண்டும். இதை தான் அவர்கள் தாரதம்யம் என்று அழகாகச் சொல்கிறார்கள். அதாவது ஒரு ஜீவாத்மா பரமாத்மாவாக முழுவதும் மாறி விடுவதை எப்படி கணிதம் விட்டம் சுற்றளவாக மாறி விடுவதை தடை
செய்கிறதோ , அப்படி த்வைதத்தின் பஞ்சபேத தத்துவம் தடை செய்கிறது. விட்டம் சுற்றளவா மாறுது அப்படீன்னா பை (Pi) அப்படீங்கறது ஒரு Rational நம்பர் ஆயிரும். கணிதத்தின் முக்கிய எண்ணான பையின் அழகே அது கணிக்க
முடியாமல் irrational ஆக இருப்பது தான். எனவே ஜீவன் மற்றும் பரமாத்வாவின் உறவும் இப்படி
நிச்சயமற்று Irrational ஆக இருக்கிறது என்கிறார் மத்வாச்சாரியார்.

1 – 200 of 308 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை