ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 12 நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா பதிவு 19

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

12 நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்  ப்ரஹ்மாண்ட மண்டலா

பதிவு 19


இன்று 12வது திருநாமம் மிகவும் சுந்தரமான திருநாமம் .. ஆவளே சுந்தரி அவள் நாமங்கள் சுந்தரம் என்று சொல்லவும் வேண்டுமோ ?

நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்  ப்ரஹ்மாண்ட மண்டலா

உதய சூரியனை கண்டு ஆனந்தித்ததுண்டா? 

செக்கச்செவேலென கிழக்கே, பெரிய  உருண்டை யாக, இன்னொரு  உலகமோ என்று வியக்க வைக்கும் செந்நிறம் அம்பாளுடையது. 

அதில் இந்த புவனமே அடக்கம்., எல்லா மண்டலங்களுமே  என்கிறார் ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு.



நிஜாருண
 = நிரந்தரமான சிவப்பு 

ப்ரபா = ஒளிர்வு / பிரகாசம் பூர = 

முழுமையாக 

மஜ்ஜத் = மூழ்குதல் 

ப்ரம்மாண்ட மண்டலா = அண்டசராசரத்தின் மண்டலம்

நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரமாண்ட மண்டலா =

அண்டசராசரத்தின் மண்டலம் முழுவதையும் செந்நிற ஒளிர்வில் மூழ்கச் செய்திருப்பவள் 

பிரபஞ்சத்தையே தன் ரூபமாக்கியவள். 

அதன் தோற்றம், இயக்கம் ஒடுக்கத்தியே அன்னை அம்பிகா, வில் அம்புகளாக தரித்து தன்னுடைய லீலைக்கு உட்படுத்தி விளையாடுகிறாள் என்பது புரிதல்

பட்டர் எப்படி வர்ணிக்கிறார் என்று பார்ப்போம் 🙏🙏🙏


பட்டர் நமக்கெல்லாம் சுலபமாக புரியும் படி இந்த பாடலை பாடுகிறார். 

இந்த பாடல் இந்த நாமத்தின் பின்னணி 

அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே 

அகிலாண்டமும் நின்

ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்

களியாகி அந்தக்கரணங்கள் விம்மி கரை புரண்டு

வெளியாய்விடில் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே??


அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே - வண்டுகள் தேனினை உண்ண மொய்க்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் அழகிய பெண்ணே.

அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற - 

எல்லா உலகங்களும் உன்னிலிருந்து வீசும் ஒளியாக நின்றது.

ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும் - 

அப்படிப்பட்ட ஒளி வீசும் உன் திருமேனியை நினைக்கும் போதெல்லாம்

களியாகி- பெருமகிழ்ச்சி பெருகி

அந்தக்கரணங்கள் விம்மி - உள்ளுறுப்புகள் எல்லாம் விம்மி

கரை புரண்டு - உள்ளே பெருகிய மகிழ்ச்சி கரை புரண்டு

வெளியாய்விடில் - வெளியேயும் பெருகி நிற்கின்றது.

எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே - உனது பேரறிவினை எப்படி மறப்பேன்?

இவ்வளவு காந்தி கொண்டவள் நம் எதிரே தோன்றினால் நம் ஊனக் கண்ணால் பார்க்க முடியுமா? 

கண்ணன் விஸ்வரூபம் விஜயனுக்கு காட்டும் முன் அதற்கு விஜயனை தயார் செய்தான் ... 

அதே போல் அன்னை நம் அறிவுக்கு ஏற்ற வகையில் தன்னை சுருக்கிக் கொண்டு நமக்கு காட்சி தருவாள் ... எவ்வளவு பெரிய அதிசயம் இது !!!💐💐💐



அம்பாளுடைய ஸ்வரூபம், அவளுடைய இருப்பிடம் முழுமையையும் மூழ்கடிக்கிற விசேஷமே இந்த திருநாமம். 

அம்பாள் எங்கே இருக்கிறாள்? என்ன கேள்வி இது? 

எல்லா இடத்திலேயும் இருக்கிறாள். பிரம்மாண்டம் முழுக்க அவளே பிரத்யக்ஷம். தன்னுடைய சிவப்பு நிறத்தால், அதன் பிரகாசத்தால் அந்த பிரம்மாண்டத்தை முழுவதுமாக மூழ்கடிக்கிறாள். 

நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா - அம்பாளை, குறிப்பாக லலிதாம்பிகையைச் செம்மேனி படைத்தவளாகவே வர்ணிக்கிறோம். 

த்வத் ரூபம் ஸகலம் அருணாபம், ஸிந்தூராருண விக்ரஹாம், 

அருணாம் கருணா போன்றவை அவளுக்கான, அவளுடைய செம்மைக்கான விவரிப்புகள். 

அந்தச் செம்மையில், அதனுடைய பிரகாசத்தில் தன்னுடைய பிரகாசத்தில் எல்லாவற்றையும் மூழ்கடிக்கிறாள். 

அதையே இந்தத் திருநாமம் காட்டுகிறது.



                                           👌👌👌👌👌👍👍👍💐💐💐💐


அபிராமி எந்தன் விழுத்துணையே (பாடல் 1)

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை

துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.


உதய சூரியனின் சிவந்த கதிரைப் போன்று உள்ளது அபிராமி அன்னை தன் தலை வகிட்டில் அணிந்திருக்கும் திலகம். ஞானத்தில் சிறந்தவர்களால் போற்றப்படும் மாணிக்கம் போன்றவள் அபிராமி. திருமகளால் வணங்கப்படும் மின்னல் கொடி போன்றவள் அபிராமி. மென்மையான வாசனை வீசும் குங்குமம் கரைத்த நீர் போன்ற மேனியை உடையவள் அபிராமி. அந்த அபிராமி அன்னையே எனக்கு சிறந்த துணையாவாள்.

                                                👌👌👌👌👌👍👍👍💐💐💐💐


Comments

ravi said…
🌹🌺 ' *அடே நண்பா* .... *ஏன்‌ நாயைப்‌ பார்த்து சிரித்துக்‌ கொண்டிருக்கின்றாய் என்று ஆச்சரியத்துடன்‌ கேட்ட நண்பர்- விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹" பிரகாஷ் ஒரு சிறந்த கிருஷ்ண பக்தன், எப்பொழுதும் எந்த வேலையை முடித்தாலும் சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என கூறுவது வழக்கம்.

🌺ஒரு முறை தனது விலையுயர்ந்தக்‌ காரை
தனது வீட்டின்‌ முன்பாக வீதியில்‌
நிறுத்தியிருந்தார்‌ பிரகாஷ்.

🌺அந்த வழியாகச்‌ சென்ற தெரு நாய்‌ ஒன்று
அதன்‌ மீது இயற்கை உபாதை கழித்தது.
இதைப்‌ பார்த்த பிரகாஷ்
சிரித்தார்‌.

🌺இதனைப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்த
நண்பர் சிவா....அடே நண்பா.... ஏன்‌ நாயைப்‌ பார்த்து
சிரித்துக்‌ கொண்டிருக்கின்றாய் என்று
ஆச்சரியத்துடன்‌ கேட்டதற்கு...

🌺பிரகாஷ் மிகவும்‌
சாந்தமாக....., நாய்‌ அதன்‌ அறிவிற்கு
எட்டியதைச்‌ செய்கின்றது.

🌺அதற்கு
இக்காரின்‌ மதிப்பைப்‌ பற்றித்‌ தெரியாது.
சொன்னாலும்‌ அதற்குப்‌ புரியாது என்று
சிரித்துக்‌ கொண்டே சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என கூறினார்‌.
கேள்வி கேட்ட நண்பர் சிவா இப்படி ஒரு பதிலை
சற்றும்‌ எதிர்பார்க்கவில்லை.

🌺இது போலத்‌ தான்‌ நம் வாழ்விலும்‌
நமது மதிப்பை அறியாதவர்கள்‌
நம்மை அவமானப்படுத்தும்‌ போதும்‌,
கேலி செய்யும்‌ போதும்‌ அவர்களிடம் சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என சொல்லி
புன்னகையுடன்‌ கடந்து செல்வோம் .

🌺"நமக்கான கடமை எதுவோ அதைச்‌
செய்வோம் *நாம் சொல்‌ செயல்‌
வீரராக இருப்போம் * ஸ்ரீ கிருஷ்ணன் திருவடி தொழுவோம் ".🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 'Hey friend.... Why are you smiling at the dog? A friend asked in surprise - a simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹"Prakash is a great Krishna devotee and always used to say Sarvam Sri Krishnarpanam whenever he completed any work.

🌺 Once his expensive car
On the street in front of his house
Prakash had stopped.

🌺 A stray dog ​​passed that way
Natural calamity took its toll on it.
Prakash saw this
He laughed.

🌺 Was looking at this
Friend Siva....Hey friend....Why are you looking at the dog?
That you are smiling
I was surprised to hear...

🌺Prakash very much
Gentle…., the dog to its wits
It does what it reaches.

🌺 For that
Don't know about its value.
Even if it is said, it will not be understood
He smiled and said Sarvam Sri Krishnarpanam.
Friend Siva who asked the question gave this answer
Didn't expect at all.

🌺 It is like this in our life too
Those who don't know our worth
enough to humiliate us,
Tell them Sarvam Sri Krishnarpanam even if they make fun of them
Let's pass with a smile.

🌺 "Whatever our duty is
Let's do *Let's say action
Let's be heroes * Let's worship Sri Krishnan Thiruvadi ".🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 ' *அடே நண்பா* .... *ஏன்‌ நாயைப்‌ பார்த்து சிரித்துக்‌ கொண்டிருக்கின்றாய் என்று ஆச்சரியத்துடன்‌ கேட்ட நண்பர்- விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹" பிரகாஷ் ஒரு சிறந்த கிருஷ்ண பக்தன், எப்பொழுதும் எந்த வேலையை முடித்தாலும் சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என கூறுவது வழக்கம்.

🌺ஒரு முறை தனது விலையுயர்ந்தக்‌ காரை
தனது வீட்டின்‌ முன்பாக வீதியில்‌
நிறுத்தியிருந்தார்‌ பிரகாஷ்.

🌺அந்த வழியாகச்‌ சென்ற தெரு நாய்‌ ஒன்று
அதன்‌ மீது இயற்கை உபாதை கழித்தது.
இதைப்‌ பார்த்த பிரகாஷ்
சிரித்தார்‌.

🌺இதனைப்‌ பார்த்துக்‌ கொண்டிருந்த
நண்பர் சிவா....அடே நண்பா.... ஏன்‌ நாயைப்‌ பார்த்து
சிரித்துக்‌ கொண்டிருக்கின்றாய் என்று
ஆச்சரியத்துடன்‌ கேட்டதற்கு...

🌺பிரகாஷ் மிகவும்‌
சாந்தமாக....., நாய்‌ அதன்‌ அறிவிற்கு
எட்டியதைச்‌ செய்கின்றது.

🌺அதற்கு
இக்காரின்‌ மதிப்பைப்‌ பற்றித்‌ தெரியாது.
சொன்னாலும்‌ அதற்குப்‌ புரியாது என்று
சிரித்துக்‌ கொண்டே சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என கூறினார்‌.
கேள்வி கேட்ட நண்பர் சிவா இப்படி ஒரு பதிலை
சற்றும்‌ எதிர்பார்க்கவில்லை.

🌺இது போலத்‌ தான்‌ நம் வாழ்விலும்‌
நமது மதிப்பை அறியாதவர்கள்‌
நம்மை அவமானப்படுத்தும்‌ போதும்‌,
கேலி செய்யும்‌ போதும்‌ அவர்களிடம் சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என சொல்லி
புன்னகையுடன்‌ கடந்து செல்வோம் .

🌺"நமக்கான கடமை எதுவோ அதைச்‌
செய்வோம் *நாம் சொல்‌ செயல்‌
வீரராக இருப்போம் * ஸ்ரீ கிருஷ்ணன் திருவடி தொழுவோம் ".🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
அருமையான வரிகள்....

ஒரு
மகன் பார்க்கக் கூடாதது
தந்தையின் கண்ணீர்

ஒரு
தாய் கேட்கக் கூடாதது
மகனின் அவப்பெயர்

ஒரு
சகோதரன் காட்டக் கூடாதது
உடன்பிறந்தோரிடம் அந்தஸ்த்து

ஒரு
தம்பதிகள் கொள்ளக் கூடாதது
தங்களுக்கு இடையில்
சந்தேகம்

ஒரு வெற்றியாளன்
எண்ணக் கூடாதது
எளியவன் என்ற இருமாப்பு

ஒரு
தலைவன் அடையக் கூடாதது நொடிப்பொழுது சபலம்

ஒரு
ஊர் தூற்றக் கூடாதது
வாழ்ந்து கெட்டவனின் வறுமை

கடும் பசியிலும்
உண்ணக் கூடாத இடம்
அவமதித்தவனின் விருந்து

பகைவனிடத்தும்
மகிழக் கூடாதது
அவனது இறப்பு

ஒருவன் செய்யக் கூடாத
காரியம்
தர்மம் கொடுப்பதை தடுப்பது
ravi said…
*கந்தர் அலங்காரம் 21* 🐓🦚🙏

*அலங்காரம்-04:*

தேரணி இட்டுப் புரம் எரித்தான்,

மகன் செங்கையில் வேல்
கூரணி இட்டு,

அணுவாகிக், கிரௌஞ்சம் குலைந்து,

அரக்கர்
நேரணி இட்டு, வளைந்த கடகம் நெளிந்தது! -

சூர்
பேரணி கெட்டது, தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே!
ravi said…
கற்ற கல்வியெல்லாம் கடைவழிக்கு வாராது;
நித்தம் அவன் பெயரை நிறுத்தாமல் சொல்லி வைத்தால்
சற்றும் கவலையில்லை
கூற்றுவனே வந்தாலும்//
ravi said…
*அலங்காரம்-05/06:*

முருகன் சூரனைக் கொன்றது சரியா? தவறா??

திகில் படங்களைப் பார்த்து இருக்கீங்க தானே?

கொடுக்கும் சவுண்ட் எஃபெக்ட்டுலேயே, பாதி திகில் வந்து விடும்!

நாகேஷ் கதை சொல்லும் போது கொடுக்கும் சவுண்ட்டில், பாலையா பயந்து போவாரே! என்ன படம்ங்க அது?

அதே போல அருணகிரியும் சவுண்ட் எஃபெக்ட்டு கொடுக்கறாரு!

பாட்டு முழுதும் வல்லினம் தான்!

உடல் சோரி, ரத்தம் கக்க, கூர கட்டாரி, இட்டு வெட்டு-ன்னு ஒரே திகில் தான்!

எதைக் கண்டு திகிலாம்?

நம் ஐம்பொறி/ஐம்புலன்களைக் கண்டு தான்!

வாங்க பார்க்கலாம்!🙏
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 298*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः

कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।

सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्

पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:

கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।

ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥

சிவானந்தலஹரி 36

🪷🪷🪷
ravi said…
இந்த கர்மால நாம ஏன் ஈடுபடறோம். कर्मणः किं मूलम् ? रागः | ‘கர்மண கிம் மூலம்? ராக:’ – ஆசை அப்படீன்னு ஆரம்பிக்கறா.

அதாவது ஆசையின்மை, தத்வ ஞானம் வந்தாதான் நாம இந்த கர்மாலயிருந்து விடுபட்டு, இந்த ஜன்மா இல்லாம பண்ணிக்க முடியும். அப்படி பண்ணிக்கறதுதான் மனுஷ ஜன்மாவுக்கே பலன்.

அதைப் பண்ணலேன்னா பிறவியே வீணாப் போய்டுறது.

அப்படியெல்லாம் சொல்லிட்டு, तादृश इच्छाज्ञाननिवृत्तिः वस्तुयाथात्म्य-साक्षात्कारश्च भगवदनुग्रहमूलकम् |

‘தாத்ருஷ இச்சா ஞான நிவ்ருத்தி: வஸ்து யாதாத்ம்ய சாக்ஷாத்காரஷ் ச பகவத் அநுகிரஹ மூலகம்’ – அப்படி ஆசையின்மையும் வஸ்துக்களின் தத்வக்ஞானத்தை அறிதலும் பகவத் அநுகிரஹத்தால் தான் முடியும்🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 295* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*76. விக்ரமிணே நமஹ (Vikraminey namaha)*

ஈச்’வரோ *விக்ரமீ* தன்வீ
மேதாவீவிக்ரம: க்ரம: |

🪷🪷🪷
ravi said…
அங்கே உறங்கிக் கொண்டிருந்தது யார்?

அவன்தான் முருகனுக்கு முன் தேவர்களின் படைத்தளபதியாக இருந்த முசுகுந்தன்.

முருகன் தேவசேனாதி
பதியாகப் பதவியேற்றபின் முசுகுந்தன் தான் ஓய்வெடுக்க விரும்புவதாகத் தேவர்களிடம் கூறினான்.

தேவர்கள் அவனுக்குத் திவ்யமான மெத்தை, தலையணை, போர்வை உள்ளிட்டவற்றை வழங்கி,

“நீ நிம்மதியாக ஓய்வெடுத்துக்கொள். நாங்கள் திருமாலிடம் பிரார்த்தித்து அவரது திருக்கையில் உள்ள சக்கரத்தின் ஒளியை
உன் கண்களுக்குப் பெற்றுத் தருகிறோம்.

நீ உறங்கும் போது யாரேனும் உன்னை எழுப்பினால்,
நீ கண் திறந்து பார்த்தவுடன் எரிந்து சாம்பலாகி விடுவார்கள்!” என்று கூறினார்கள்.

🔥🔥🔥
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 301* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*110 कुण्डलिनी - குண்டலிநீ* --

அம்பாளை குண்டலிநீ என்று மூன்றரை சுற்று நாகமாக கருதுவது. அவளது நுண்ணிய தோற்றம்.

பிராணனின் முக்கிய சக்தி குண்டலினி.

மூலாதார சக்ரத்தில் அக்னிக்கு நடுவே இருப்பது குண்டலினி.

நம்முடைய உடலை 98.4 டிக்ரீ F சூட்டில் வைத்திருப்பது.

இந்த சூட்டின் அளவு மாறும்போது நாம் வியாதியில் சிக்குகிறோம்.

அமைதியாக காதை மூடிக்கொண்டு மனத்தை ஒருமைப்படுத்தி கவனமாக கேட்டால் குண்டலினி வெளிப்படுத்தும் '' *உஸ்* '' சப்தம் கேட்கும்.

குண்டலி சுழுமுனைப்
பாதையில் மேலே ஒவ்வொரு சக்கரமாக தாண்டி எழும்போது யோகிகளை போல் மூச்சு கட்டுப்பாட்டில் வரும்.

ப்ராணனை இதயத்தில் நிறுத்தத்தினால் ஒரு நோயும் வராது என்பார்கள்.

நரம்புகள் மேலே ஸஹஸ்ராரத்தை நோக்கி படரும்.

அங்கிருந்து தொண்டை வழியாக வழியும், சொட்டும், அம்ருதத்தை பெற்று எல்லா நரம்புமண்டலமும் அது பரவி ஆனந்த அம்ருதானுபவம் பக்தன் பெறுவான்.🙏🙏🙏
ravi said…
[01/08, 06:54] Jayaraman Ravilumar: *சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 301* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
[01/08, 06:55] Jayaraman Ravilumar: *80 இடையில் மூன்று ரேகைகளின் அழகு*

*மன்மதனை வெல்லும் திறமை, இந்திரஜாலம்*

*குசௌ ஸத்ய:* ஸ்வித்யத் தடகடித ஸூர்ப்பாஸபிதுரௌ

க ஷந்தௌ தோர் மூலே கனக கலஶாபௌ கலயதா

தவ த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா

த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ வல்லிபிரிவ 80
[01/08, 06:57] Jayaraman Ravilumar: தேவியே !

பரமேசுவரனுடைய பெருமையை நினைத்த அதே க்ஷணத்தில்

உடலுடன் ஒட்டிக்
கொண்டிருக்கிற ரவிக்கையை கிழிப்பனவாகவும்,

தோளின் அடிப்பக்கத்தில் உறைகின்றன
வாகவும்,

பொன்குடங்களைப் போன்ற உனது நகில்களை செய்கின்ற மன்மதனால்

உனது இடுப்பை ஒடிந்துபோகாமல் போதுமான வகையில் காப்பதற்கு இருக்கட்டும் என்று இடுப்பில் மூன்று மடிப்புகளாகத் தோன்றும் வள்ளிக் கொடிகளால் மூன்றுதடவை சுற்றிக் கட்டப்பட்டதுபோல் காண்கின்றது.🪷🪷🪷
ravi said…
வெற்றிகொள் படையினிலும்-

பல
விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்

நற்றவ நடையினிலும்-

நல்
நாவலர் தேமொழித் தொடரினிலும்,

உற்றசெந் திருத்தாயை-

நித்தம்
உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்;

கற்ற பல் கலைகளெல்லாம்-
அவள்
கருணை நல் லொளிபெறக் கலிதவிர்ப்போம்.🪷🪷🪷
ravi said…
ராமரும் ரமணரும்*

*ரமணர் சொன்ன கீதை*

மௌனமே பூரண ஞானம் 🪷🪷🪷
ravi said…
ராமா*

ஏதும் அறியா நான் எல்லாம் அறியும் உன்னிடம் எதுவும் கேட்பதில்லை *ராமா* ..

ஏதும் கேட்காமல் எல்லாம் புரியவைத்தாய் நான் யார் என்றே உணர வைத்தாய் ..

அழியும் யாக்கை இதில் அழியா உன் நாமத்தை விழியால் எழுதி வைத்தேன் என் மனம் எனும் மௌனம் ராஜ்யத்தில் ..

அங்கே அயோத்தினிலும் சிறப்பாய் ஆட்சி புரிகிறாய் *ராமா* ...

உன் வயது கொண்டோர் பலர் தண்டகாரண்யம் தனில் உன் உருவம் ஏற்று உன்னுடன் வர

பல பெண்கள் சீதையிடம் இவர் ராமரா அவர் ராமரா என்றே கேட்க

அனைத்துக்கும் இல்லை என்றாள் உன் இல்லத்தாள்...

உண்மை உனை ஒருவர் சொல்ல பதில் உரைக்காமல் என் மொழி கொண்டாள் மை விழியாள் ..

மௌனம் சம்மதம் அன்றோ *ராமா*

பக்தனுக்கும் இது தான் அன்றோ *ராமா*?

கடவுளைக் காணும் வரை அவரைப் பற்றிய கேள்விகள் எழும்.

பரம்பொருளை தரிசித்தபின் பேசத் தோன்றாமல் மவுனம் வந்துவிடும்.

மவுனம் என்பது முழுமை.

அதுவே பூரண ஞானம் ஆகும் அன்றோ *ராமா* ?

உண்மை *ரமணரே* ..

இறைக்கும் இது பொருந்தும் ...

உங்களை பார்த்தேன் இன்று

சொல் ஒன்றும் வரவில்லை ..

மௌனம் கொண்டே பதில் உரைத்தேன் ...

காஞ்சி வாழ் மகானன்றோ தாங்கள் ..

கருணைக்கு ஒர் பேர் வைத்தால் ரமணர் என்றே அது பொருந்தும் இன்றும் என்றும் 🙏🙏🙏
ravi said…
*ருத்ராக்ஷம் யார் அணியலாம்?*

பெரியவாளுடைய ஒரு பக்தர், ஒரு முறை நேபாளம் சென்றார். அங்கு ஸ்ரீ பஶுபதிநாதர் கோவிலுக்கு சென்று அருமையான தர்ஶனம் பெற்றார்.

அந்த உன்னதமான ஶிவ க்ஷேத்ரத்தில், உயர்ந்த ருத்ராக்ஷ மாலை ஒன்றையும் வாங்கிக் கொண்டார்.

பிறகு காஞ்சிபுரம் வந்து பெரியவாளுக்கு பஶுபதிநாத் ப்ரஸாதத்தையும், தான் வாங்கிய ருத்ராக்ஷ மாலையையும் ஸமர்ப்பித்தார்.

” பஶுபதீஶ்வரரை நன்னா தர்ஶனம் பண்ணினியா?…”

” பெரியவா அனுக்ரஹத்ல… நன்னா தர்ஶனம் பண்ணினேன்…”

கையில் அந்த ருத்ராக்ஷ மாலையை எடுத்துக் கொண்டார்…..

“ஸெரி…. இத.. என்ன பண்ணப் போற?…..”

“பெரியவா அனுக்ரஹம் பண்ணிக் குடுத்தேள்..ன்னா, கழுத்துல போட்டுக்கலான்னு….”

இழுத்தார்…..

பெரியவா மெளனமாக சில நிமிஷங்கள் இருந்தார்…

“அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”

ஒரே தடாலடியாக கேட்டார்.

பக்தருக்கு தூக்கிவாரிப் போட்டது!

“ஆஹா! பெரியவா…….. இனிமே பொய்யே சொல்லமாட்டேன்!”

இப்படியொரு துணிச்சலான பொய்யை, ஸத்ய ஸந்நிதியில் சொல்ல நாக்கு எழுமா?

“இல்ல.. பெரியவா…! ஸத்யமா… என்னால பொய் சொல்லாம இருக்க முடியாது..!.”

“ஏனோ …..?”

“ஏன்னா, நா… ஒரு Bank Oficer. அதுனால, பொய் சொல்லாம சில ரெக்கார்டுகளை தயாரிக்க முடியாது. “இப்டி எழுது”…ன்னு எனக்கு மேல இருக்கற officer உத்தரவு போட்டா… என்னால மறுக்க முடியாது பெரியவா….”

பரிதாபமாக தன் இயலாமையை ஒத்துக்கொண்டார்.

பெரியவா அந்த ருத்ராக்ஷ மாலையை இன்னும் கையில் வைத்து உருட்டிக் கொண்டிருந்தார்.

“இந்தா பிடி! பொய் சொல்லாதவா யாருக்காவுது…. இந்த மாலையைக் குடு!”

பக்தருக்கோ பரம ஸந்தோஷம்! ஏனென்றால், இப்போது இதை யாருக்கு போடுவது என்பது, ஏற்கனவே முடிவு செய்திருந்த ஒன்றுதான்!

நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவாளிடமிருந்து அந்த ருத்ராக்ஷ மாலையை வாங்கி கொண்டார்.

“ஆஹா! என் wife சொன்னா மாதிரியே ஆச்சு! இந்த ருத்ராக்ஷ மாலையை பேசாம ஆத்துல பெரியவாளுக்கு [படத்துக்கு] போட்டுடுங்கோ!..ன்னு சொன்னா! அதுப்படியேதான் இப்போ பெரியவாளும் உத்தரவு போட்டுட்டா……!..”

ப்ரஸாதம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியதும், முதலில் அந்த ருத்ராக்ஷ மாலையை, பூஜையிலிருந்த பெரியவா படத்துக்கு அணிவித்தார்.

“பொய்யே சொல்லாத ஒர்த்தர்…. நம்மாத்து பூஜை ரூம்லேயே இருக்கார்ங்கறதே, இன்னிக்கித்தான் எனக்கு புரிஞ்சுது”

மனைவியிடம் கூறி ஸந்தோஷப்பட்டார்.

கணவனும் மனைவியும், ருத்ராக்ஷ மாலாதரனாக காக்ஷியளித்த தங்களுடைய பெரியவாளை நமஸ்கரித்தனர்.

கொஞ்ச நாள் கழித்து, அந்த பக்தரின் ஸொந்தக்காரர் ஒருவர், பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தார்.

“ஒன்னோட ஸொந்தக்காரன், அதான்! அந்த bank-ல ஆஃபீஸரா இருக்கானே! அவன்ட்ட ஹரிச்சந்த்ரனோட அம்ஸம் இருக்கு! தெரியுமோ? ஏன்னா…… தன்னால பொய் சொல்லாம இருக்க முடியாதுன்னு பொய் சொல்லாம எங்கிட்டயே ஒத்துண்டான்…”

இந்த அருமையான அனுக்ரஹ லீலையில், பெரியவா நம் எல்லாருக்கும் ஒரு உபதேஸத்தையும் அளித்திருக்கிறார்.

ருத்ராக்ஷம் என்பது, ஸ்படிகம், துளஸி போல், மிகவும் பவித்ரமானது. ருத்ராக்ஷத்தை அணிபவர்களுக்கு முக்யமாக இருக்கவேண்டியது….. ஸத்யம் ! இதுதான் பெரியவா திருவாக்கு!

*kn*
ravi said…
வாழ்க்கையில் உயரும் வரை காதைப் பொத்திக் கொள்ளுங்கள். உயர்ந்த பிறகு வாயைப் பொத்திக் கொள்ளுங்கள்.*

*பறவைகளின் நிம்மதியை கெடுக்க ஒரு கல் போதும். மனிதர்களின் நிம்மதியை கெடுக்க ஒரு "சொல்" போதும்.*

*எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலத்தான்.*

*தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் பிரகாசமாக தான் தெரியும்.*

*அருகில் சென்று பார்த்தால் தான் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்.*

*வாழ்க்கையில் முற்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை.*

*பிற்பகுதியில் வெற்றி பெற பொறுமையும் தன்னடக்கமும் தேவை.*

*வாழ்வில் சவால்கள் எதிர்படும்போதெல்லாம், அச்சமும் பதற்றமும் கூடவே சேர்ந்து வந்து விடுகிறது நமக்கு.*

*அச்சமும், பதற்றமும் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த பின் என்ன நடக்கும்.*

*அச்சப்பட்டு, பதற்றத்தில் செய்யும் அனைத்து செயல்களும் தோல்விகளில் , இழப்புகளில் தான் முடியும். இது இயற்கை தானே.*

*அடுத்த முறை இவ்வாறான இருள் நிறைந்த சவாலான ஒரு சூழலை சந்திக்கும் போது, நம்பிக்கை என்ற ஒரு கைவிளக்கை தயாராக வைத்து முயன்று பாருங்கள்.*

*நம்பிக்கை என்னும் ஒளியின் உதவியுடன் முயலும்போது, எங்கேனும் ஓரிடத்தில் இருந்து தேவையான உதவி அல்லது வழி கிடைக்கும்.*

*சவால்களை சமாளித்து பெறும் வெற்றி மிகுந்த மகிழ்ச்சியையும் கூட வழங்கும்.*

*#வாழ்த்துகள்.*

*#வாழ்க_வளமுடன்.*

*P.saravanan shanmugavalli 🌷🌷*
ravi said…
*🔥 சமூக மாற்றம் மாத இதழ் 🔥*
◦•●◉✿ *( Raj 🎡 dk)* ✿◉●•◦

*🎯®➤ 𝐒𝐡𝐨𝐫𝐭 𝐍𝐞𝐰𝐬 ||* *👉 (01-08-2022)*

*💫👉 JUSTIN || ~ தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்...*

*ஆடிப்பூரத்தை முன்னிட்டு பால், மஞ்சள், பன்னீர், தேன் உள்ளிட்டவற்றால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்.*

*பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், முருகன், விநாயகருக்கு சிறப்பு ஆராதனை.*

*🎪 தேன் ® செய்தி களஞ்சியம் 🎪*
ravi said…
[01/08, 20:13] Jayaraman Ravilumar: *முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 76*
[01/08, 20:14] Jayaraman Ravilumar: மாபீ⁴ர்மந்த³மனோ விசிந்த்ய ப³ஹுதா⁴ யாமீஸ்சிரம் யாதனா:

நாமீ ந: ப்ரப⁴வந்தி பாபரிபவ: ஸ்வாமீ நனு ஸ்ரீத⁴ர: ।

ஆலஸ்யம் வ்யபனீய ப⁴க்திஸுலப⁴ம் த்⁴யாயஸ்வ நாராயணம்

லோகஸ்ய வ்யஸனாபனோத³னகரோ தா³ஸஸ்ய கிம் ந க்ஷம: ॥ 13 ॥
[01/08, 20:14] Jayaraman Ravilumar: भवजलधिगतानां द्वन्द्ववाताहतानां सुतदुहितृकलत्रत्राणभारार्दितानाम् ।

विषमविषयतोये मज्जतामप्लवानां भवतु शरणमेको विष्णुपोतो नराणाम् ॥ १४ ॥

ப⁴வஜலதி⁴க³தாநாம் த்³வந்த்³வவாதாஹதாநாம்

ஸுதது³ஹித்ருʼகலத்ர த்ராணபா⁴ரார்தி³தாநாம் ।

விஷமவிஷயதோயே மஜ்ஜதாமப்லவாநாம்

ப⁴வது சரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் ॥ 14 ॥
[01/08, 20:15] Jayaraman Ravilumar: இந்த சுத, துஹித்ரு, களத்ரம் – மகன், மகள், மனைவி இவாளெல்லாம் காப்பாத்தப் போறேன் நான் என்ற ‘த்ராணபா⁴ரார்தி³தாநாம்’ அவாளை காப்பாத்தற பாரத்தை இவன் சுமக்கறான். நாம எங்க காப்பத்தறோம்? மேலும் யாரு நம்மை சேர்ந்தவா?

இந்த மமதா அப்படீங்கிறது ஒரு பிசாசு மாதிரி நம்மளைப் பிடிச்சுண்டு இருக்கு. என்னுடைய குழந்தைகள், என்னுடைய பணம், என்னுடைய வீடு அந்த பாரத்தை நாம சுமந்து அதனால ......
ravi said…
ஓர் பழமையான அக்ரஹாரத்தின் பாரம்பரியம் காக்கப்படுவதற்கு தங்களிடம் ஓர் செய்தியை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அனைவருக்கும் நமஸ்காரம், எனது பெயர் T. கண்ணன் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் அருகில் அதாவது மதுரையில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் விளாச்சேரி என்ற பழமை வாய்ந்த கிராமம் உள்ளது. இங்கு இன்றும் முழுமையாக விவசாயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கிராமத்தில் பழமை மாறாமல் ஒரு அக்ரஹாரம் உள்ளது. இந்த அக்ரஹாரத்தின் வடப் பகுதியில் அதாவது உள்ளே நுழையும் இடத்தில் பேருந்து நிலையம் உள்ளது. அதன் அருகே ஒரு அருமையான சிவாலயம் உள்ளது அதேபோன்று அக்ரஹாரத்தின் தென் பகுதியில் சுமார் 600 வருடங்கள் பழமையான ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவர் ஸ்ரீ ராமபிரான் ஸ்ரீ சித்தமாகவும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கின்றார்கள். ஸ்ரீ ராமருக்கு இடது பக்கம் லட்சுமண பெருமாள் வில் அம்பு வைத்து நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கின்றார். அர்த்த மண்டபத்தில் துவாரபாலகரை போன்று பெரிய திருவடியான கருடாழ்வாரும் சிறிய திருவடியான ஆஞ்சநேயரும் காட்சி கொடுக்கின்றனர். இந்த அக்ரஹாரத்தில் கோசாலையுடன் கூடிய வேத குருகுலம் என்னும் ஒரு வேத பாடசாலை நடந்து கொண்டிருக்கிறது 20 குழந்தைகள் வேதம் படிக்கின்றனர். மேலும் சந்தியா மடம் என்ற இடத்தில் ஒரு அபூர்வமான மேதா தக்ஷிணாமூர்த்தி கோவில் உள்ளது. இந்த மூர்த்தி கிழக்கே பார்த்து கால் மேல் கால் வைத்து எங்கும் காண்பது போல இல்லாமல் ஐயப்பன் போல அமர்ந்துள்ளார் அதேபோல புரட்டாசி மாதம் கிராமத் திருவிழாவில் முதல் நாள் ஸ்ரீ அழகு நாச்சி அம்மன் கோவில் நிகழ்ச்சி அன்று காலையில் நாங்கள் அனைவரும் சேர்ந்து அபிஷேகம் அலங்காரம் மாவிளக்கு எடுத்தல் போன்ற பூஜைகள் நடக்கும். அடுத்து அய்யனாருக்கு குதிரை எடுப்பு நிகழ்ச்சி நடக்கும். இக்கிராமத்தில் கொலு பொம்மை செய்யும் தொழில் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. எனவே பொம்மை செய்யும் குல வேளாளர்கள் அய்யனாருக்கு குதிரை செய்வார்கள் அந்த குதிரையில் அய்யனார் உடன் நேராக விளாச்சேரி அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ ஈஸ்வரன் கோவில் முன்பு வைக்கப்பட்டு குதிரைக்கு கண் திறக்கும் நிகழ்வு நடைபெறும். இந்த அளவுக்கு சிறப்பும் பாரம்பரியம் மிக்க கிராமம் ஒரு காலத்தில் அக்ரஹாரத்தில் சுமார் 60 வீடுகள் இருந்தது. இங்கு வாழ்ந்த பல பேர் கன பாடிகளாகவும் சிவ தீட்சை வாங்கிக் கொண்டவர்களாகவும், வாயு ஸ்தம்பம், ஜெலஸ்தம் பம், போன்ற ஆன்மீக ஆற்றல் உடையவர்களாகவும் பல இதிகாச புராணங்களை தமிழாக்கம் செய்தவர்களும் வாழ்ந்திருக்கின்றார்கள். இங்குதான் தமிழை செம்மொழி என தமிழக அரசு அறிவிப்பதற்கு முதல் குரல் கொடுத்த திரு. சூரிய நாராயண சாஸ்திரி என்கின்ற பரிதிமாற் கலைஞர் பிறந்த ஊர். தற்பொழுது அக்ரஹாரத்தில் 25 பிராமின் வீடுகள் உள்ளது. இதர இடங்கள் காலியாக உள்ளது இதில் சில பேர் தங்களது குடும்பச் சூழல் காரணமாக இங்கு உள்ள வீட்டையோ அல்லது காலி இடங்களையோ விற்பனை செய்யும் சூழல் ஏற்படுகிறது இருந்தாலும் பாரம்பரியமும் நமது சமுதாய ஒற்றுமையும் கோவில் பூஜை வழிபாடுகளும் பாடசாலையும் என்றென்றும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்தோடு தங்களது வீட்டையோ இடத்தையோ பிராமண சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். இதை நிறைவேற்றும் வகையில் தங்களுக்கு வீடாகவோ இடமாகவோ தேவைப்படுவோர் என்னுடைய அலைபேசி எண் 97 888 54 8 54 நான் இங்கு உள்ள கோயில்களின் திருப்பணிக்குழு செயலாளராக உள்ளேன். இது தங்களுக்கோ அல்லது தங்களது உறவினர்களுக்கோ அல்லது நமது சமுதாயத்தில் உள்ள நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு தங்களால் தங்களிடம் உள்ள நமது சமுதாயத்தின் whatsapp குரூப்பில் அனுப்புவதன் மூலம் இந்த பாரம்பரியம் காக்கப்பட வேண்டுகிறேன். நன்றி
ravi said…
🌹🌺"‘ *எந்த முட்டாள்* *இப்படி*
*அஜாக்கிரதையாக* *படகை முட்டவிட்டது* *யார்‌* ?” *என்ற துறவி* .... *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹யார்‌ எப்படி அவமானப்படுத்தினாலும்‌ கோபமே
வராது அந்த துறவி பழனிசாமிக்கு. அந்த ரகசியத்தை
அறிந்து கொள்வதில்‌ ஒரு சிஷ்யருக்கு ஆர்வம்‌.

🌺துறவி பழனிசாமி விளக்கினார்‌. * ஒரு ஏரியில்‌: காலியான படகில்‌ அமர்ந்து தியானம்‌ செய்வது என்‌ வழக்கம்‌. அப்படி ஒரு முறை தியானத்தில்‌
இருந்தபோது நான்‌ அமர்ந்திருந்த படகை வந்து
முட்டியது ஒரு படகு.

🌺எந்த முட்டாள் இப்படி
அஜாக்கிரதையாக படகை முட்டவிட்டது யார்‌?” என்று
கோபமாகக்‌ கண்களைத்திறந்து பார்த்தால்‌ அது ஒரு
வெற்றுப்படகு!

🌺காற்றுக்கு அசைந்து அசைந்து
வந்து மோதியிருக்கிறது. என்கோபத்தினை அந்த
வெற்றுப்படகிடம்‌ காட்டி என்ன பயன்‌?

🌺யாராவது என்னைக்‌ கோபப்‌ படுத்தும்போது
இதுதான்‌ நினைவுக்கு வரும்‌; இதுவும்‌ வெற்றுபடகு தான்‌ என்று அமைதியாகி விடுவேன்‌ !

🌺ஞானம்‌ எப்போது வேண்டுமானாலும்‌, எங்கே
வேண்டுமானாலும்‌ வரலாம்‌ ! நம் மனதை ஸ்ரீ கிருஷ்ணன் வசம் எப்பொழுதும் வைக்க ஞானம்‌ என்றென்றும் நம் வசமே 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺


*
ravi said…
🌹🌺 'Hey friend.... Why are you smiling at the dog? A friend asked in surprise - a simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌺🌹"Prakash is a great Krishna devotee and always used to say Sarvam Sri Krishnarpanam whenever he completed any work.

🌺 Once his expensive car
On the street in front of his house
Prakash had stopped.

🌺 A stray dog ​​passed that way
Natural calamity took its toll on it.
Prakash saw this
He laughed.

🌺 Was looking at this
Friend Siva....Hey friend....Why are you looking at the dog?
That you are smiling
I was surprised to hear...

🌺Prakash very much
Gentle…., the dog to its wits
It does what it reaches.

🌺 For that
Don't know about its value.
Even if it is said, it will not be understood
He smiled and said Sarvam Sri Krishnarpanam.
Friend Siva who asked the question gave this answer
Didn't expect at all.

🌺 It is like this in our life too
Those who don't know our worth
enough to humiliate us,
Tell them Sarvam Sri Krishnarpanam even if they make fun of them
Let's pass with a smile.

🌺 "Whatever our duty is
Let's do *Let's say action
Let's be heroes * Let's worship Sri Krishnan Thiruvadi ".🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 "'What a fool like this
Who carelessly capsized the boat?” A simple story that explains the saint.... 🌹🌺
-------------------------------------------------- ------
🌺🌹 No matter how anyone insults you, it is anger

🌺 That monk Palaniswami will not come. That secret
A student's interest in learning.

🌺 Saint Palaniswami explained. * On a lake: I used to sit in an empty boat and meditate. Once upon a time in meditation
While there, the boat I was sitting on came
A boat crashed.

🌺 What a fool like this
Who carelessly capsized the boat?” that
If you open your eyes angrily, it is one
Empty boat!

🌺Shaking and shaking in the wind
It has come and crashed. That anger
What is the point of showing an empty boat?

🌺When someone makes me angry
This comes to mind; I will calm down that this is an empty boat!

🌺 Wisdom anytime, anywhere
You can come anytime! To always keep our mind at the disposal of Sri Krishna, wisdom is always at our disposal 🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
கண்ணா உனை எண்ணாத நாட்கள் எல்லாம் புண்ணாகி போகும் நாட்கள் அன்றோ ..

மண்ணாகி மரம் செடி கொடிகளாகி

பூவாய் புழுவாய் எண்ணிலா பிறவி கண்டும்

உனை காணும் பேறு பெற்றிலேன் ...

பேதை என் மனம் அதை பிருந்தாவனமாக்கி விட்டாய் ..

பேசும் சொற்கள் எல்லாம் யமுனை தொட்ட பாதம் தனை முத்தமிட்டே வரும் போது

பாதை ஒன்று காட்டினாய் ...

நாதி இன்றி தவித்த எனக்கும் கீதை ஒன்று தந்தாய் ..

பிறர் வாழ எனை வதம் செய்வேன் ...

அந்த வேள்வி தீதனில் கரியோன் உன் முகம் கண்டிடுவேன் ..

குழல் ஊதும் அதரங்கள் சிந்தும் மதுரம் அதை பருகிடுவேன்..

இனி வேறு பாதை செல்லா உன் பாதை கண்டே உயர்ந்திடுவேன் 🙏
ravi said…
ராமரும் காளி தாசனும்*🪔🪔🪷

*காளி தாசன் சொன்ன கீதை* 🪔🪔🪔
ravi said…
ராமா* ..

உன் சரிதம் இயற்ற அருள் புரிந்தாய் ..

என்னவென்று சொல்வேன் என் புண்ணியத்தை ...

உன் முன்னோர்களை எடுத்துரைத்தேன்

பின்னோர்களையும் கவர்ந்து இழுத்தேன் .

உன் காதை தனை நடுவில் வைத்தேன் ..

பசிய இலைகளை உடைய தாமரையாகிய தாதி பக்கத்தில் இருக்க,

பாய்கிற கால்வாய் நீர் உண்மையாகவே மருத்துவம் செய்ய,

நீலோத்பலங்கள் மனம் நெகிழ,

தேரைகள் வாய் விட்டுப் புலம்ப,

மெல்லிய அணை போல இருக்கிற ஆமை மீது ஏறி சங்கு கருவை ஈனும்’

அதுபோல் அன்றோ தயரதன் உனை ஈன்றான் ராமா

ராமா சிவதனுசு கொண்டு கோதண்டம் செய்தாய் ...

சீதை தனை அடையாமல் சிதையில் மூண்டவர்கள் நிலையை சொன்னேன் ராமா

தேடுலாம் குமுதச் செவ்வாய் சுந்தரி இரவில் தொக்க

மாடு சால் அரசவீதி வயின் வயின் ஒருவிச் செல்லும்
வீடிலா தெரிசெஞ் சோதி விளக்கமதொத்தாள் வேந்தர்
நீடுகாள் இருள்சேர் மாட நிரையினை நிகர்த்திட்டாரே’

இரவில் மாடவீதியில் விளக்கோடு செல்கிற போது

ஒவ்வொரு மாடமும் ஒளி பெற்று பின்னர் இருளடைவது போல,

சீதை வருதலைப் பார்த்து ஒளி பெற்ற அரசர்களின் முகம்,

கடந்து செல்லுதலைப் பார்த்து இருளடைந்தது என்றேன் .

முழுச்சந்திரன் போல் உதித்தே வில் தனை வினையம் செய்தாய்

*ராமா*

என் கற்பனைக்கும் எட்டவில்லை உன் கருணை ..

கார் மேகமே சூல் கொண்டே சுந்தர மழை பொழிகிறாய் ..

அதில் நனைந்தே நாடுகிறேன் உன் திருவடி தனை

*காளிதாசனே* ..

உன் படைப்புக்கள் சரஸ்வதியின் குரல் வீணை அன்றோ ...

சொல்லும் பொருளும் பிரிவதுண்டோ ...

உன் எண்ணமும் என் அருளும் குறைவதுண்டோ ?

ரகுவம்சம் படைத்தே என் மனம் தனில் அமர்ந்தாய் .

ஒரு புறம் கம்பன் இருக்க மறுபுறம் நீ இருக்க

எங்கும் பசுமை மணக்க

இதில் வியப்பும் உண்டோ கவியே ?

*ராமா*

மீண்டும் ஓர் பிறவி வேண்டும் ...

உன் நாமம் என் நாவில் தெய்வத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும் ..

என் காமாக்ஷியைய் பார்த்த வண்ணம் கவி பல படைக்க வேண்டும் .

உன் நாமம் உரைப்பதால் நானும் மகானாய் ஆக வேண்டும்

*பெரியவா* என்றே எல்லோரும் அழைக்க இதோ என் கோதண்டம் தருகிறேன் ..

இதுவே நீ சுமக்கும் *தண்டம்* இனியே

நன்றி *ராமா* .. காஞ்சி தனில் மணம் சேர்ப்பேன் .

உனை நினையா மனங்கள் தனை ஒன்று சேர்ப்பேன்

உரைக்க வைப்பேன் *ராமா* எனும் நாமம் அதை வையகம் உயரவே 👍👍👍💐💐💐
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 24*🦚🦚🦚
ravi said…
அஞ்சுமஞ்சு மஞ்சுமே யனாதியான தஞ்சுமே

பிஞ்சுபிஞ்சு தல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர்

நெஞ்சிலஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லிரே

லஞ்சுமில்லை யாறுமில் லனாதியாக தோன்றுமே. 24🙏
ravi said…
அஞ்செழுத்தே ஐந்து பூதங்களாகவும்,
ஐந்து புலன்கலாகவும்

நமது உடம்பில் இருந்து இயங்கி அனாதியான பஞ்சாட்சரமாக இருக்கின்றது.

அதுவே சீவனாகி என்றும் அன்னதியாக உள்ள சிவனால் ஜீவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

அதுவே பின்ஜெழுத்தான வாலையாக ஒரேழுத்தாகி உள்ளது.

இதனை அறியாமல் பித்தர்களைப் போல் வெறும் வாயால் மட்டுமே பிதற்றுவதால் பயன் ஏது?

அந்த அஞ்செழுத்தாக ஆகியிருப்பது இன்னது என்பதை அறிந்து கொண்டு நெஞ்சமாகிய கோவிலிலே அஞ்செழுத்து ஓதி உள்ளம் உருகி கண்ணீர் கசிந்து அங்கேயே நினைவை நிறுத்தி அதிலேயே நின்று தியானிக்க வல்லவர்க்கு அஞ்செழுத்தும் இல்லை ஆறாதாரங்களும் இல்லை.

அஞ்செழுத்தும், ஆறு ஆதாரங்களில் உள்ள தெய்வ சக்திகளும் ஒன்றான சிவமாகி அனாதியாகத் தோன்றும்.🪷🪷🪷
Kousalya said…
கண்ணா, நீ சொன்ன பாதையை, நடந்த பாதையில் சென்று நின் சரணம் அடைய அருள் தருவாய்..🙏🙏🙇‍♀️🙇‍♀️🌹🌹
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 302* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*110 . குண்டலிநீ*

குண்டலினியாக, ஜீவ சக்தியாக வாசம் செய்பவள்.

மூலாதாரத்தில், குண்டலினியானவள், பாம்பு போல மூன்றரை சுற்று சுற்றிக் கொண்டு உறங்குவதாக ஐதிகம்.

பாம்பு அபரிமிதமான ஆற்றல் கொண்டது.

அதனைச் சரியாகப் பயன்படுத்தினால், நன்மையைத் தரும்.

தவறானால், விஷம் கக்கும்.

பாற்கடலில் முதலில் விஷம்; பின்னர்தானே அமுதம்.

விஷம் கொண்ட பாம்பைப் பக்குவப்படுத்தி மேலேற்றினால், விஷம் முறியடிக்கப்பட்டு, அமுத தாரை பொழியும்.

பாம்பின் விஷத்துக்கான நச்சு முறிவு எங்கிருக்கிறது?

அதே விஷத்திலிருந்து
தான்
அதற்கான நச்சுமுறிவும் தயாரிக்கப்படுகிறது.

ஜீவனை விஷமென்றால், அதற்கான நச்சுமுறிவு எங்கிருக்கிறது?

பிறவித்துன்பத்தைப் போக்கடிக்க என்ன வழி?

இதே பிறவியில், கடவுளை வழிபட்டு, விருப்பு வெறுப்பில்லாமல் பிரம்ம ஐக்கியத்தை அடையும்போது, ஜீவனிலிருந்து விடுதலை கிட்டும்.

ஜீவனே வேண்டாம் என்று விட்டுவிட்டால்... மீண்டும் ஜனன மரண சுழற்சிதான்!

பாம்பின் விஷத்தைப் பதப்படுத்துவதால் அதற்கான முறிவு கிடைப்பதுபோல்,

ஜீவனைப் பதப்படுத்தும்போது, அதற்கான முறிவு கிட்டும்.🙏🙏🙏
ravi said…
[02/08, 05:46] Jayaraman Ravilumar: *சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 302* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
[02/08, 05:46] Jayaraman Ravilumar: *80 இடையில் மூன்று ரேகைகளின் அழகு*

*மன்மதனை வெல்லும் திறமை, இந்திரஜாலம்*

*குசௌ ஸத்ய:* ஸ்வித்யத் தடகடித ஸூர்ப்பாஸபிதுரௌ

க ஷந்தௌ தோர் மூலே கனக கலஶாபௌ கலயதா

தவ த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா

த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ வல்லிபிரிவ 80
ravi said…
தாயே!,

உன்னதமானதும், கனத்த தங்கக் கலசங்கள் போன்றதுமான உனது ஸ்தனங்களை மன்மதன் உருவாக்கிய போது,

அவைகளின் பாரத்தால் உன்னுடைய மெலிதான இடுப்பனது ஒடிந்து போகாமலிருப்பதற்காக இடுப்பினைச் சுற்றி வள்ளிக் கொடிகளால் மூன்று சுற்றுக்கள் சுற்றியது போல உனது இடுப்பிலிருக்கும் த்ரிவளியானது தோன்றுகிறது.

அன்னையின் ஸ்தனங்களை உருவாக்கியவன் என்பதாக மன்மதனைக் குறிப்பிடுவதன் மூலமாக

படைக்கும் பிரம்மனை விலக்கி, அன்னையின் பக்தர்களில் சிறந்தவரும், பராசக்தியின் மைந்தனுமான (மன்மதனுக்கு மறுபடிஉயிர் கொடுத்த அன்னையாகிறாள்)

மன்மதனையே அன்னையின் ரூபத்தை சமைத்தவனாகக் காட்டுகிறார் பகவத்பாதர்.

அன்னை தனது பதியான பரமசிவனுடைய ரூபத்தை எப்போதும் மனத்தில் எண்ணுவதால்

ஸ்தனங்கள் விம்மிப் பருத்து தங்களைக் கட்டியிருக்கும் கச்சையை விலக்குவதாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.🪷🪷🪷
ravi said…
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;

கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;

உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;

கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்.
ravi said…
🌹🌺" *அப்பா ஏன் எப்போதும் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை* ......... *என்பதை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------🌺🌹1. அம்மா 10 மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். அப்பாவோ 25 வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான்.

🌺2. தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். அப்பா தனது சம்பளத்தை குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான்.

🌺3. அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார். அப்பா நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாக காட்டப்படுகிறது. .

🌺4. நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே அப்பாவை நினைவில் கொள்கிறோம்

🌺ஆனால், மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில்கூட வைத்திருப்பதில்லை என்று அப்பா எப்போதாவது நினைத்திருக்கிறாரா?

🌺5. அலமாரியில் வண்ணமயமான புடவைகள் மற்றும் குழந்தைகளுக்கான பல ஆடைகள் கொண்டு நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், அப்பாவின் உடைகளோ மிகவும் குறைவுதான். அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதில்லை.

🌺6. அம்மாவிடம் பல தங்க ஆபரணங்கள் இருக்கும். ஆனால், அப்பாவுக்கென்று ஆபரணம் ஏதும் இருப்பதில்லை. தனக்கென்று ஏதும் வாங்கியதுமில்லை.


🌺7. குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்கு அப்பா அன்றாடம் மிகவும் கடினமாக உழைக்கிறார். ஆனால், அங்கீகாரத்தைப் பெறும்போது, ​​அவர் எப்போதும் பின்தங்கியே இருக்கிறார். அது ஏன் என்று புரியவில்லை.

🌺இவ்வாறு குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஒவ்வொரு தந்தையும் ஸ்ரீ ராமனாகவோ ஸ்ரீ கிருஷ்ணனாகவோ இருக்கும் காரணத்தால் தான் நம்மால் நிமிர்ந்து நிற்க முடிகிறது. நம் வளர்ச்சியின் பேரங்கம் அவர்தான்.

🌺இருந்தாலும் அப்பா ஒவ்வொரு வீட்டிலும், அன்பிலும், பாசத்திலும், அவருக்கு கிடைக்க வேண்டிய உணவிலும் கூட
ஏன் பின்தங்கியே இருக்கிறார் என்றுதான்
தெரியவில்லை...,...
நம் தந்தையைப் போற்றுவோம் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 "I don't know why dad is always behind" 🌹🌺 A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------🌺🌹1. Mother carries her in her womb for 10 months. Appao carries it in his mind for 25 years. But both are equal.

🌺 2. The mother works for the family without pay. Dad spends his salary for the family. Both their efforts are equal.

🌺 3. Mom cooks whatever you like. Dad buys you what you want. Both their affections are equal. But the mother's affection is shown to be supreme. .

🌺 4. When you talk on the phone, you want to talk to mom first. When you are hurt, you cry 'Mother'. We remember Dad only when you need us

🌺But has dad ever thought that other times you don't even remember him?

🌺 5. The wardrobe is filled with colorful sarees and many clothes for children. But father's clothes are very few. He is not always concerned about his own needs.

🌺6. Amma will have many gold ornaments. But father does not have any ornaments. He did not buy anything for himself.

🌺 7. Dad works very hard everyday to take care of the family. But when it comes to recognition, he always lags behind. I don't understand why.

🌺 Thus we can stand upright because every father who is the backbone of the family is Sri Rama or Sri Krishna. He is the pillar of our development.

🌺 Although father is in every house, love and affection and even in the food he should get
Why is he lagging behind?
I do not know...,...
Let's praise our Father 🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
ராமரும் தடை செய்த மூவரும்* 👍👍👍

*மூவரும் சொன்ன கீதை* 🙏🙏🙏
ravi said…
*1.மைந்நாக மலை*

*ராமா*

சங்கர சுவனனை தடுத்தேன்

வேகம் குறைத்தே விவேகம் கொண்டு சொன்னான்..

ராம காரியம் விருந்தோம்பல் வேண்டேன் .

விரைவில் முடிக்க ஆசி வேண்டும் என்றான் ...

பக்திக்கு இவனன்றோ முக்தி தந்தவன் ...

ராமா உன் நாமம் சொல்லி லங்கை சென்றவன் உன் நாமம் இதயம் தனில் தங்கும் அன்னையை கண்டான் ..

யார் பெறுவார் இந்த அரியாசனம்...

உன் நாமம் செய்த மகிமை அன்றோ இது

ராமன் சொன்னான்

*மைந்நாக மலையே ...*

பக்திக்கு முன் எதுவும் ஈடில்லை இணையில்லை . துன்பம் இனியில்லை..

நான் செய்தேன் பாக்கியம் இங்கு இவனை நான் பெறவே

2. *சுரசை* 🐍🐍🐍

*ராமா* ...

தேவர் சொன்னார் என்றே ஒரு தெய்வம் வானில் பறப்பதை தடுத்தேன் ..

கோழை நான் பேதை நான் பிழை செய்தேன் .. பித்தாகி போனேன் ...

உன் தூதன் உன் அம்பு அன்றோ ..

நிற்குமோ எங்கும் என்னை கிழித்தான் இரண்டாய் ...

விஷம் கக்கும் நான் அமிர்தம் பொழிகிறேன் உன் நாமம் சொல்வதால் 🐍

*ராமன்* சிரித்தான்

தாயே *சுரஸை* ... அனுமன் என் நாமம் சொல்பவன் ...

இடையும் தடையும் அவனுக்கும் உண்டோ ..

நாமம் சொல்பவர் காண்பார் அமுதம் பொழியும் அதரங்கள் மட்டுமே 🙏

3. *சிம்ஹிகா*

*ராமா*

நிழலை நிஜமாக்கி உண்பவள் நான் ...

நிஜத்தை நிழல் என்றே தடை செய்தேன் .

நிஜம் நிழல் அன்று

நின்று கொள்ளும் என்றே உணர்ந்தேன் *ராமா*

நீ ஒன்றே நிஜம் . உன் நாமம் தரும் நிழல் ஒன்றே இனி நான் அருந்தும் துளசி தீர்த்தம் 🍃🍃🍃

*ராமன்* புன்னகைத்தான் ....

தாயே *சிம்ஹிகா*

என் நாமம் சொல்வோர் நிழலாய் எனை தொடர்வர்...

தொடராது ஊழ்வினையும் பாவங்களும் ..

இதை அறிந்தீர் தாயே ...

நிழலாய் நான் இருந்தே நிஜமாய் ராம நாமம் சொல்லும் அனைவரையும்

கஜராஜனை காத்ததை போல் தினம் காப்பேன் ..இது சத்தியம்

காஞ்சி மகான் தனில் தினம் அருளும் திரிப்புரையாய் வாழ்வீர் நீங்கள் மூவரும் ..

ஆடி பெருக்கில் தேடி வரும் என் நாமம் சுவாமிநாதனாய் என்றும் உங்களை கவசமாய் காக்குமே 🙏🙏🙏🐍🐍
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 25*🦚🦚🦚
ravi said…
நீளவீடு கட்டுறீர்

நெடுங்கதவு சாத்துறீர்

வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே

காலனோலை வந்தபோது கைகலந்து நின்றிடும்

ஆலமுண்ட கண்டர்பாத மம்மைபாத முண்மையே. 25👍👍👍
ravi said…
தான் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பதற்காக நீளமாக பெரிய வீட்டைக் கட்டி வேறு எவரும் உள்ளே நுழையாவண்ணம் பெரிய நிலைக்கதவுடன் அமைத்து வைத்திருக்கும் மனிதர்களே!!

எத்தனை கதவுகள் அமைத்து சாத்தி வைத்தாலும்

எமனின் ஓலையில் எழுதியபடி உயிர் போகும் தருணத்தில்

எதைக் கொண்டும் தடுக்க இயலாமல் நம்மால் எதுவும் ஆகாது என கைவிரித்து நிற்பார்கள்.

ஆலகால விஷத்தை உண்டு அகிலம் முழுமையும் காத்த நீலகண்டராகிய ஈசன் பாதமும் அம்மை சக்தியின் பாதமும் நம்மிடம் உள்ளதை உணர்ந்து அத்திருவடிகளைப் பற்றி தியானியுங்கள்.

அத்திருவடி சத்தியமாய் நம்மை கரை சேர்க்கும்.

இது உண்மையே!!💐💐💐💐💐
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்
தஞ்சை ஜில்லாவுக்கு அவள் வந்த பின்னும் ஒரு கட்டத்தில் அவள் முடிந்து போகாமல் அவளை விஸ்தரித்துவிட வேண்டியிருந்தது;அப்படி விஸ்தாரமாக ஓடப் பண்ணினவர்தான் மூன்றாவது ரிஷி

ravi said…
அவர்தான் ஏரண்டகர். முதல் இரண்டு ரிஷிகள் ஒரு ஸாதாரணப் பெண்ணுக்கான தர்மப்படிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காவேரியை இவர்தான் தெய்வத் தன்மை பொருந்தின மாதா என்று புரிந்து கொண்டு அவள் அநுக்ரஹம் இன்னும் பல ஊர்களுக்குக் கிடைக்கும்படியாக நீட்டிவிட்டார் இப்போதைய தஞ்சாவூர் ஜில்லாவுக்குச் சோழ ராஜாவின் பின்னால் வந்த காவேரி முதலில் சம்பாபதி வரைக்கும் பாய்ந்து ஸமுத்திரத்தில் விழவில்லை.
ravi said…
இது சீர்காழிக்குத் தென்கிழக்கில் பத்து மைலில் உள்ள இடம். முதலில் காவேரி அவ்வளவு தூரம் வரவில்லை. கும்பகோணத்துக்குக் கிட்டத்தில் கொட்டையூர் என்று இருப்பதாகச் சொன்னேனே, அதற்கும் இன்னும் கொஞ்சம் தள்ளி அதாவது கும்பகோணத்திலிருந்து நாலு மைல் மேற்கே உள்ள ஒரு இடத்தோடு காவேரி முடிந்து விட்டது.
ravi said…
ஸாதாரணமாக ஒரு நதி என்றால் அது ஸமுத்திரத்தில் விழுந்துதான் முடியும்; அல்லது வேறே ஒரு மஹாநதியில் கலந்துவிடும் - யமுனை கங்கையில் கலக்கிறாற் போல. கும்பகோணத்துக்கு மேற்கே ஸமுத்திரமோ வேறே நதியோ ஏது? பின்னே, காவேரி என்ன ஆச்சு என்றால், அந்த இடத்தில் பெரிசாக ஒரு பிலம் இருந்தது; அதாவது பூமிக்கடியில் குகை மாதிரி, 'டன்னல்'மாதிரி, அதுபாட்டுக்குப் பெரிசாக ஒரு பள்ளம் போய்க் கொண்டேருந்தது. அந்தப் பள்ளம் அழகாக பிரதக்ஷிண ரீதியில் சுழித்து வெட்டினது போல பூமியைக் குடைந்து கொண்டு போயிருந்தது. இந்தப் பள்ளத்தின் பக்கம் காவேரி வந்ததோ இல்லையோ, அப்படியே அந்தப் பிரதக்ஷிணக் குடைசலில் வலம் வருகிறது போல சுழித்துக் கொண்டு உள்ளே ஓடி, அகாதமான பிலத்துக்குள் மறைந்தே போய் விட்டது. அதனால் அந்த ஊருக்கே திருவலஞ்சுழி என்று பேர் ஏற்பட்டு விட்டது.
ravi said…
சோழ சீமையிலே இன்னம் நாற்பது ஐம்பது மைல் காவேரி ஓடி, வளம் உண்டாக்கி விட்டு ஸமுத்திரத்தில் விழும் என்று நினைத்தால், இப்படி நடுப்பறவே மறைந்து போய் விட்டதே''என்று ராஜாவுக்கு துக்கம் துக்கமாக வந்தது. அப்போது பக்கத்தில் கொட்டையூரில் ஏரண்டக KS தபஸ் கொண்டிருப்பதைப் பார்ததார். அவருகு ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, பிலத்துக்குள் போய்விட்ட காவேரி வெளியிலே வருவதற்கு அவர் அநுக்ரஹம் செய்ய வேண்டும், உபாயம் சொல்லவேண்டும் என்று பிரார்த்தனை பண்ணினார் இப்படி பரமத் தியாகியாக, ஆத்மௌபம்யத்தால் கிருஷ்ண பரமாத்மா சொல்கிற பரமயோகியாகவும் ஆன ஏரண்டகர் திருவலஞ்சுழியில் காவேரியின் பிலத்துச் சுழலில் இறங்கிப் பிராணத் தியாகம் பண்ணினார். பெரும் பள்ள ' மும் ' திருவலம்புர ' மும்
இவர் இறங்குவதற்குள், முன்னே பிலத்தில் பிரவேசித்த காவேரி அண்டர்-க்ரவுண்டாகவே நாற்பது ஐம்பது மைல் ஓடிவிட்டான். இவர் இங்கே இறங்கிப் பலியானோரோ இல்லையோ, அந்த க்ஷணமே, அந்த நாற்பது ஐம்பது மைல் தாண்டியுள்ள இடத்தில் பூமிக்கடியிலிருந்து அப்படியே பீச்சிட்டுக் கொண்டு வெளியில் வந்துவிட்டாள்.
ravi said…
மேலே வருவதற்கு அவள் கன வேகமாக வழி பண்ணிக் கொள்ளும்போது முதலில் பெரிசாக ஒரு பள்ளம் உண்டாயிற்று. அதனால் இந்த இடத்துக்கு இப்போதும் 'பெரும் பள்ளம்'என்று ஒரு பேர் இருக்கிறது. ஜனங்கள், ''இதென்னடா பள்ளம்? பூகம்பமா என்ன?'' என்று பார்த்துக் கொண்டே இருக்கும் போது அதில் அன்டர்-கிரௌண்டாக இருந்த காவேரி கிடுகிடுவென்று நிரம்பி பூமிக்கு வெளியிலே வந்தாள்.
ravi said…
பூமியை அவள் தொடுகிற இடத்தில் லிங்கம் ஒன்று இருந்தது. இந்த லிங்கத்தை பூஜை பண்ணித்தான் மஹா விஷ்ணு வலம்புரிச் சங்கு பெற்றார் என்பது கதை. அதனால் அந்த லிங்கத்துக்கு வலம்புரீச்வரர் என்று பெயர். அவரை வலம் புரிந்தே, அதாவது பிரதக்ஷிணம் பண்ணிக் கொண்டே காவேரி மேற்கொம்டு பூமிக்கு மேலாக ஓடினாள். அந்த ஸ்தலத்துக்கு திருவலம்புரம் என்றும் பெயர் இருக்கிறது.
பாடல் பெற்ற ஸ்தலங்கள் மொத்தம் 274. அதில் மூவரும் பாடியவை நாற்பத்து நாலுதான். இந்த நாற்பத்து நாலில் திருவலம்புரமும் ஒன்று.
திருவலஞ்சுழியில் பிலத்துக்கு உள்ளே போன காவேரி திருவலம்புரத்தில் மறுபடி வெளியிலே வந்தாள். அங்கிருந்து தென் கிழக்காக மூன்று மைல் ஓடி சம்பாபதி, புகார் என்றெல்லாம் சொல்லப்படும் ஊரில் காவேரிப்பூம்பட்டினமாக்கிக் கொண்டு அங்கேயே ஸமுத்திரத்தில் கலந்து விட்டாள்.
(இன்று ஆடிப்பெருக்கு)
ravi said…
[03/08, 18:25] Jayaraman Ravilumar: *கந்தர் அலங்காரம் 22* 🐓🦚🙏

*அலங்காரம்-05:*
*முருகன் சூரனைக் கொன்றது சரியா? தவறா??*
[03/08, 18:29] Jayaraman Ravilumar: ஓர ஒட்டார் ஒன்றை! உன்ன ஒட்டார்!

மலர் இட்டு உன் தாள்
சேர ஒட்டார் ஐவர்!

செய்வது என் யான்? சென்று தேவர் உய்ய,
சோர நிட்டூரனை, சூரனை, கார் உடல் சோரி கக்க,

கூர கட்டாரி இட்டு, ஓர் இமைப் போதினில் கொன்றவனே.
[03/08, 18:32] Jayaraman Ravilumar: *ஐவர்* = கண், மூக்கு, செவி, வாய், மெய் = ஐம்பொறிகள்
இவர்கள் செய்வது என்ன?

*ஓர ஒட்டார் ஒன்றை!* = ஆராய விட மாட்டார்கள் ஒன்றை!

(ஒர்தல்=ஆராய்தல்; ஓர்மையுண்டோ என்று மலையாளத்தில் கேட்பது தான்)

*உன்ன ஒட்டார்* = சிந்திக்க விட மாட்டார்கள்!

*மலர் இட்டு உன் தாள் சேர ஒட்டார்* = மலர் தூவி, உன் திருவடிகளைச் சேரவும் விட மாட்டார்கள்!

*செய்வது என் யான்?* = நான் என்ன செய்வேன்? ஐயகோ!

*சென்று தேவர் உய்ய* = தேவர்கள் பிழைக்கும் பொருட்டு
சோர நிட்டூரனை, *சூரனை* = வஞ்சனை-கொடுமை மனம் கொண்ட சூரனை
கார் உடல் = கரிய உடலில் இருந்து
சோரி கக்க = இரத்தம் கக்க
கூர கட்டாரி இட்டு = கூர்மையான வேலைச் செலுத்தி.
ஓர் இமைப் பொழுதினில் கொன்றவனே = ஒரு நொடியில் கொன்றவனே!🪷🪷🪷
ravi said…
[03/08, 17:45] Jayaraman Ravilumar: *சிவானந்த லஹரீ*
*பதிவு 300*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः

कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।

सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्

पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:

கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।

ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥

சிவானந்தலஹரி 36

🪷🪷🪷
[03/08, 17:46] Jayaraman Ravilumar: ‘பகவச்சரணாரவிந்த த்யானதீர்த்த ரூபம் ஏவ சலிலம். ஆந்தரமல நிவர்த்திகம்’ – பகவானுடைய பாதாரவிந்தங்களை த்யானம் செய்வது தான் உள் அழுக்கை, சித்தமலத்தைப் போக்கிக்கறதுக்கான ஜலம். यथा प्रतिदिनं वासश्शोधनाय शारीरमलशोधनाय च यत्नं नियमेन कुर्मः ततोऽपि नियमेन आन्तरचित्तमलशोधनाय यत्नः कार्यः| ‘யதா ப்ரதிதினம் வாஸஷ்ஷோதனாய ஷரீர மலஷோதனாய ச யத்னம் நியமேன குர்மஹ ததோபி நியமேன ஆந்தர சித்தமல ஷோதனாய யத்னஹ கார்யஹ
ravi said…
[03/08, 17:37] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 297* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[03/08, 17:39] Jayaraman Ravilumar: *77. தந்விநே நமஹ (Dhanviney namaha*)
[03/08, 17:40] Jayaraman Ravilumar: ஈச்’வரோ விக்ரமீ *தன்வீ*
மேதாவீவிக்ரம: க்ரம: |

🪷🪷🪷
[03/08, 17:42] Jayaraman Ravilumar: ராம-ராவண யுத்தம் உச்சக் கட்டத்தை எட்டியது.

ராவணனின் மகனான இந்திரஜித்தை, லக்ஷ்மணன் வதம் செய்தான்.

அதனால் கலங்கிய ராவணன், அவசரக் காலங்களில் நாட்டைப் பாதுகாப்பதற்காக வைத்திருந்த மூலபல சேனையைப்
போருக்கு அழைத்து வந்தான்.

இருபுறமும் கூரான நீண்ட வாள்களை ஏந்திக்கொண்டு அவர்கள் யுத்த களத்துக்குள் நுழைந்தார்கள்.

மழைக்காலத்தில் கரையான் புற்றிலிருந்து கரையான்கள் வரிசையாக வருவது போல இலங்கைக் கோட்டையிலிருந்து அவர்கள்
வானர சேனையை நோக்கி வரத் தொடங்கினார்கள்.

யானைகளையும் குதிரைகளையும் தேர்களையும் மிதித்து நசுக்கிக் கொண்டு நடந்து வந்தார்கள்.🪝🪝🪝
ravi said…
[03/08, 10:32] Jayaraman Ravilumar: 💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 303* 🙏🙏🙏started on 7th Oct 2021

*110 குண்டலிநீ*🙏
[03/08, 10:34] Jayaraman Ravilumar: தோட்டத்துக் குழாயைச் சிறிய இடத்தில் வைக்க என்ன செய்கிறோம்?

சுருட்டி சுருட்டி வைப்போம்.

குறைந்தபட்சம் மூன்றரை சுற்று சுற்றினால்தான், அதனை விரிக்கும்போது ஆற்றல் முழுமையாக வெளிப்படும்.

இன்னொன்று, குண்டலினிப்பாம்பு என்பது பிரணவத்தின் அடையாளம்.

ஓம் என்பதில் உள்ள 'அ', 'உ', 'ம' என்பவற்றிற்கு மூன்று சுற்றுகள்;

ஒற்றெழுத்துக்கான அர்த்தம் மாத்திரையே, அரைச் சுற்று.

மூன்றரை மாத்திரை நேரம் ஓங்காரத்தை ஒலிக்கும்போதுதான், அதன் முழுப் பயனும் கிட்டும் என்கிறது யோக சாத்திரம்.🙏🙏🙏
ravi said…
[03/08, 17:45] Jayaraman Ravilumar: *சிவானந்த லஹரீ*
*பதிவு 300*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः

कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।

सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्

पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:

கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।

ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥

சிவானந்தலஹரி 36

🪷🪷🪷
[03/08, 17:46] Jayaraman Ravilumar: ‘பகவச்சரணாரவிந்த த்யானதீர்த்த ரூபம் ஏவ சலிலம். ஆந்தரமல நிவர்த்திகம்’ – பகவானுடைய பாதாரவிந்தங்களை த்யானம் செய்வது தான் உள் அழுக்கை, சித்தமலத்தைப் போக்கிக்கறதுக்கான ஜலம். यथा प्रतिदिनं वासश्शोधनाय शारीरमलशोधनाय च यत्नं नियमेन कुर्मः ततोऽपि नियमेन आन्तरचित्तमलशोधनाय यत्नः कार्यः| ‘யதா ப்ரதிதினம் வாஸஷ்ஷோதனாய ஷரீர மலஷோதனாய ச யத்னம் நியமேன குர்மஹ ததோபி நியமேன ஆந்தர சித்தமல ஷோதனாய யத்னஹ கார்யஹ
ravi said…
[03/08, 10:24] Jayaraman Ravilumar: *சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 303* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
[03/08, 10:25] Jayaraman Ravilumar: *80 இடையில் மூன்று ரேகைகளின் அழகு*

*மன்மதனை வெல்லும் திறமை, இந்திரஜாலம்*

*குசௌ ஸத்ய:* ஸ்வித்யத் தடகடித ஸூர்ப்பாஸபிதுரௌ

க ஷந்தௌ தோர் மூலே கனக கலஶாபௌ கலயதா

தவ த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா

த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ வல்லிபிரிவ 80
[03/08, 10:29] Jayaraman Ravilumar: வம்பைத் தொலைத்து தறி இறுகிக் கனத்து இளகி

வரு புடை நெருக்கி வளர் மாக்
கும்பக்

கடாக்களிற்றினை அனைய உனது முலை
கொடிது கொடிது என்று வெருவா

அம்பொன் தனிக்கமல இறை பொறாது இடையென
அழுத்து பூண் என

முனிவரொடு
உம்பர்க்கு உளம் அருள

ஒளி கெழுமி ரேகை மூன்று
உலகமோ தெளிவது உமையே🪷🪷🪷
[03/08, 10:30] Jayaraman Ravilumar: கட்டுக்களை மீறி கச்சையை இறுக்கி கனத்து இளகி இருபக்கமும் நெருக்கி வளர்கின்ற, பெரும் கும்பத்தைப் போல் தோன்றி, யானையின் மத்தகத்தைப் போல் விளங்கும் உனது திருமுலை

கொடியது கொடியது என்று பயந்து தனிப்பெருமை கொண்ட தாமரையில் வாழ்கின்ற இறைவன் இனி மேல் தாங்காது என்று எண்ணி இடையுடன் சேர்ந்து உன் திருமுலையைக் கட்டியது போல்

உன் இடையில் மூன்று ரேகைகளை உருவாக்கினான்.

உலகம் அதனை உணருமோ உமையவளே🙏🙏🙏
ravi said…
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,

மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;

கீதம் பாடும் குயிலின் குரலைக்

கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;

ஏகோத கன்ற தொழிலுடைத் தாகிக்

குலவு சித்திரம் கோபுரம் கோயில்

ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்

இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்🦜🦜🦜🪷🪷🪷
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 304* 🙏🙏🙏started on 7th Oct 2021

*111 *பிஸ-தந்து* = தாமரை இழை

*தனீயஸ்* = மெல்லிய - மிகச் சிறிய வடிவு

*111 பிஸதந்து தனீயஸீ* =

தாமரை இழை போன்ற நுண்மையும் மென்மையும் சிறந்த தன்மையும் கொண்டிருப்பவள்🪷🪷🪷
ravi said…
தாமரைத் தண்டில் காணப்படும் நூல் போன்று மெல்லியவள்.

சூக்ஷ்மமானவள் என்பது பொருள்.

இவற்றுள் ஆரம்ப நாமங்களின் பொருளை நாம் இதுவரை சேர்ந்து அனுபவித்து வந்தோம்.

இன்னும் அற்புதமான பொருள் படைத்த நாமங்களும் பின்னர் வருகின்றன.🪷🪷🪷
ravi said…
அம்பாள் இளம், மெல்லிய, தாமரைத்தண்டு போல் மென்மையானவள்.

அவளது நுண்ணிய வடிவத்தை கூறுவதற்கு இந்த உதாரணத்தை ஹயக்ரீவர் சொல்கிறார்.

மூலாதார சக்ரத்தில் அவள் சிறு பெண்.

பிறகு அழகாக உடை உடுத்து ஆபரணங்கள்
சூடி யவளாக மணிபூரகத்தில் உறைகிறாள்

அப்புறம் கேட்கவேண்டுமா, காமேஸ்வரனை மூன்றாவது க்ரந்தி நீங்கி மின்னல் கொடியாளாக சிவனை அடைகிறாள்.

தானே அவனாகிறாள்🪷🪷🪷
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 304* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
*81 மலைபோன்ற நிதம்பம்*

*அக்னி ஸ்தம்பம்*👍👍👍
ravi said…
பார்வதியே ! மலையரசன் கனத்தையும் விஸ்தாரத்தையும் தன்னுடைய அடிவாரத்தின்றும் எடுத்து உன்னிடத்தில் கொடுத்துவிட்டார் போலும்.

அதனால்தான் பருத்தும் விசாலமாகவும் இருக்கிற உன்னுடைய இந்த (hip) நிதம்பத்தின் பின்புறம் பூமி முழுவதையும் மறைக்கிறது, அதை லேசாகவும் செய்துவிடுகிறது.👍🙏🙏🙏
ravi said…
குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்

நிதம்பா தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே

அதஸ்தே விஸ்தீர்ணோ குருரய மஶேஷாம் வஸுமதீம்

நிதம்ப ப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ச 81
ravi said…
தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்,

தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;

உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;

செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்

செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்

கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்

கவிஞர் தெய்வம்,
கடவுளர் தெய்வம்
ravi said…
தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்,

தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;

உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;

செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்

செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்

கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்

கவிஞர் தெய்வம்,
கடவுளர் தெய்வம்
ravi said…
[03/08, 18:25] Jayaraman Ravilumar: *கந்தர் அலங்காரம் 22* 🐓🦚🙏

*அலங்காரம்-05:*
*முருகன் சூரனைக் கொன்றது சரியா? தவறா??*
[03/08, 18:29] Jayaraman Ravilumar: ஓர ஒட்டார் ஒன்றை! உன்ன ஒட்டார்!

மலர் இட்டு உன் தாள்
சேர ஒட்டார் ஐவர்!

செய்வது என் யான்? சென்று தேவர் உய்ய,
சோர நிட்டூரனை, சூரனை, கார் உடல் சோரி கக்க,

கூர கட்டாரி இட்டு, ஓர் இமைப் போதினில் கொன்றவனே.
[03/08, 18:32] Jayaraman Ravilumar: *ஐவர்* = கண், மூக்கு, செவி, வாய், மெய் = ஐம்பொறிகள்
இவர்கள் செய்வது என்ன?

*ஓர ஒட்டார் ஒன்றை!* = ஆராய விட மாட்டார்கள் ஒன்றை!

(ஒர்தல்=ஆராய்தல்; ஓர்மையுண்டோ என்று மலையாளத்தில் கேட்பது தான்)

*உன்ன ஒட்டார்* = சிந்திக்க விட மாட்டார்கள்!

*மலர் இட்டு உன் தாள் சேர ஒட்டார்* = மலர் தூவி, உன் திருவடிகளைச் சேரவும் விட மாட்டார்கள்!

*செய்வது என் யான்?* = நான் என்ன செய்வேன்? ஐயகோ!

*சென்று தேவர் உய்ய* = தேவர்கள் பிழைக்கும் பொருட்டு
சோர நிட்டூரனை, *சூரனை* = வஞ்சனை-கொடுமை மனம் கொண்ட சூரனை
கார் உடல் = கரிய உடலில் இருந்து
சோரி கக்க = இரத்தம் கக்க
கூர கட்டாரி இட்டு = கூர்மையான வேலைச் செலுத்தி.
ஓர் இமைப் பொழுதினில் கொன்றவனே = ஒரு நொடியில் கொன்றவனே!🪷🪷🪷
ravi said…
[03/08, 17:45] Jayaraman Ravilumar: *சிவானந்த லஹரீ*
*பதிவு 300*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः

कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।

सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्

पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:

கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।

ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥

சிவானந்தலஹரி 36

🪷🪷🪷
[03/08, 17:46] Jayaraman Ravilumar: ‘பகவச்சரணாரவிந்த த்யானதீர்த்த ரூபம் ஏவ சலிலம். ஆந்தரமல நிவர்த்திகம்’ – பகவானுடைய பாதாரவிந்தங்களை த்யானம் செய்வது தான் உள் அழுக்கை, சித்தமலத்தைப் போக்கிக்கறதுக்கான ஜலம். यथा प्रतिदिनं वासश्शोधनाय शारीरमलशोधनाय च यत्नं नियमेन कुर्मः ततोऽपि नियमेन आन्तरचित्तमलशोधनाय यत्नः कार्यः| ‘யதா ப்ரதிதினம் வாஸஷ்ஷோதனாய ஷரீர மலஷோதனாய ச யத்னம் நியமேன குர்மஹ ததோபி நியமேன ஆந்தர சித்தமல ஷோதனாய யத்னஹ கார்யஹ
ravi said…
[03/08, 17:37] Jayaraman Ravilumar: *அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 297* 👏👏

12th Sep 2021🙏🙏🙏
[03/08, 17:39] Jayaraman Ravilumar: *77. தந்விநே நமஹ (Dhanviney namaha*)
[03/08, 17:40] Jayaraman Ravilumar: ஈச்’வரோ விக்ரமீ *தன்வீ*
மேதாவீவிக்ரம: க்ரம: |

🪷🪷🪷
[03/08, 17:42] Jayaraman Ravilumar: ராம-ராவண யுத்தம் உச்சக் கட்டத்தை எட்டியது.

ராவணனின் மகனான இந்திரஜித்தை, லக்ஷ்மணன் வதம் செய்தான்.

அதனால் கலங்கிய ராவணன், அவசரக் காலங்களில் நாட்டைப் பாதுகாப்பதற்காக வைத்திருந்த மூலபல சேனையைப்
போருக்கு அழைத்து வந்தான்.

இருபுறமும் கூரான நீண்ட வாள்களை ஏந்திக்கொண்டு அவர்கள் யுத்த களத்துக்குள் நுழைந்தார்கள்.

மழைக்காலத்தில் கரையான் புற்றிலிருந்து கரையான்கள் வரிசையாக வருவது போல இலங்கைக் கோட்டையிலிருந்து அவர்கள்
வானர சேனையை நோக்கி வரத் தொடங்கினார்கள்.

யானைகளையும் குதிரைகளையும் தேர்களையும் மிதித்து நசுக்கிக் கொண்டு நடந்து வந்தார்கள்.🪝🪝🪝
ravi said…
அன்று அலர்ந்த ராமனும் 🪷அழகிய சிங்கனும் 🦁*

*அழகிய சிங்கன் சொன்ன கீதை* 👍
ravi said…
ராமா* ...

மனித அவதாரம் எடுத்தாய் .

மிருகமாய் வாழும் மனிதரை சொல் கொண்டு வில் தொடுத்தாய் ..

நல் அறம் தனை அயோத்தி காணவே பண் கொண்டு பரதம் வளர்த்தாய் ..

அலங்காரம் கண்டாய் ...

ஆட்சி பீடம் தனில் தர்மம் அதை அமர வைத்தாய் ..

உன் நாமம் உயரக்கண்டாய் ..

சொன்னவர் எல்லாம் பாக்கியம் கொண்டனரே ... சுந்தர ராமா ...

உன் போல் புகழ் கண்டார் ஒருவர் உளரோர் இலரரோ ?

கல்லுக்கும் சொல் தந்தாய் ராமா ..

வில்லுக்கு விந்தை தந்தாய்

ராமன் சிரித்தான்

*அழகிய சிங்கரே ..*

தாயின் கருவில் உருவானேன் ...

வானவர் துயர் தீர்க்க தானவரை அழித்தேன்...

என் செய்யினும் உங்கள் சேவை வருமோ ... ??

சுமக்கும் இனிமை பெண்டீர் கண்ட உரிமையோ ...

தூணுக்கும் தாய்மை தந்தீர் ..

அலங்கோலம் கொண்ட அலங்காரம்

அதிலும் தோற்றான் மன்மதன் ...

சிங்கமென கர்ஜிதே நாட்டு ராஜனை காட்டின் ராஜாவாய் கிழித்து எறிந்தீர் ...

ராமா என்று அழைத்தால் வருவேன் ..

நினைத்தால் வரும் சிங்கம் தாங்கள் அன்றோ ..

எனை உயர்த்தி தாங்கள் இழிவு காண்பீரோ ...

*அழகிய சிங்கர் சொன்னார்* 🦁

எல்லாம் காஞ்சியின் பெருமை ..

நம் அருமை அங்கே சேர்ந்தே உதயமாகும் ஓர் நாள் ..

சிங்கம் என கர்ஜிக்கும் .. ராமன் என காரூண்யம் கடல் ஆழம் காட்டும் ...

நடமாடும் தெய்வம் நல்லதையே செய்யும் என்றும் ...
Kousalya said…
ராமா என அழைத்தால் வர, நினைத்த நேரத்தில் கண் முன் தோன்றி கருணை பொழிந்த அந்த சிங்கவேள் அற்புதம்....அற்புதம்..🙏🙏🙇‍♀️🙇‍♀️💐💐🌹🌹
Moorthi said…
அழகாக ஸ்ரீ ராமனின் உயர்ந்த குணங்களை எடுத்துச் சொன்ன விதம் அருமை 👌🙏🙏🙏
ravi said…
59

சக்ஷுர் விமோஹயதி சந்த்ர விபூஷணஸ்ய
காமாக்ஷி தாவக கடாக்ஷ தம: ப்ரரோஹ: |
ப்ரத்யங் முகம் து நயனம் ஸ்திமிதம் முனீனாம்
ப்ராகாஶ்யமேவ நயதீதி பரம்விசித்ரம் ||59||
கடாக்ஷ சதகம்.
ஹே காமாக்ஷி! உனது பார்வையென்கிற இருட்டின் ஆவிர்பாவமானது சந்திரனை சிரோபூஷணமாக உடைய பரமசிவனுடைய கண்களை மயக்குகிறது. ஆயினும், யோகிகளுடைய உள்நோக்கியதும், அசைவற்றதுமான அறிவுக் கண்களை வெளிச்சத்துடன் விளங்க செய்கிறதென்பது ஆச்சர்யமே!
ravi said…
60

காமாக்ஷி வீக்ஷணருசா யுதி நிர்ஜிதம் தே
நீலோத்பலம் நிரவஶேஷ கதாபிமானம் |
ஆகத்ய தத் பரிஸரம் ஶ்ரவணவதம்ஸ-
வ்யாஜேன நூனமபயார்தனமாதனோதி ||60|

ஹே காமாக்ஷி! உனது பார்வையின் காந்தியினால், யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதான நீலோத்பலமானது, கர்வத்தை முற்றிலும் இழந்ததாய், உன் கடைக்கண்களின் அருகில் வந்து காதிலணியும் பூவணியாக தஞ்சம் அடைந்து, கடாக்ஷத்தினிடம் வந்து அபயம் வேண்டுகிறது!
ravi said…
[04/08, 09:00] Jayaraman Ravilumar: *முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 79*
[04/08, 09:00] Jayaraman Ravilumar: भवजलधिगतानां द्वन्द्ववाताहतानां सुतदुहितृकलत्रत्राणभारार्दितानाम् ।

विषमविषयतोये मज्जतामप्लवानां भवतु शरणमेको विष्णुपोतो नराणाम् ॥ १४ ॥

ப⁴வஜலதி⁴க³தாநாம் த்³வந்த்³வவாதாஹதாநாம்

ஸுதது³ஹித்ருʼகலத்ர த்ராணபா⁴ரார்தி³தாநாம் ।

விஷமவிஷயதோயே மஜ்ஜதாமப்லவாநாம்

ப⁴வது சரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் ॥ 14 ॥
ravi said…
*விஷ்ணு போதோ நராணாம்* ’ –

ஒரு நல்ல கப்பல் கிடைச்சுடுதுன்னா நீ உன் பாரத்தை கொண்டு போகலாம்.

அந்த கப்பல்ல ஏறி உட்கார்ந்துக்கலாம்.

அந்த கப்பல் எவ்வளவு காத்து அடிச்சாலும் சரி, எவ்வளவு ஆழமான ஜலமா இருந்தாலும் சரி அதெல்லாம் ஒண்ணும் நீ கவலைப் பட வேண்டாம்.

கப்பல் பாத்துக்கப் போறது.

உன்னுடைய சுமையை நீ கப்பல்ல இறக்கி வெச்சுடலாம்.

அது மாதிரி ‘ *விஷ்ணு போத: விஷ்ணு* என்ற கப்பலில் நீ ஏறிண்டேன்னா இந்த சம்சாரக் கடலை பத்தி நீ கவலைப் படவேண்டாம்.

இங்க பாகவதத்துல இருந்து அழகான ஒரு quotation கொடுத்திருக்கார். “ *த்வயா ஹி குப்தா: விசரந்தி நிர்பயா:விநாயகாநீகபமூர்தஸு ப்ரபோ”* ன்னு சொல்றார்.

பகவானை அடைந்தவர்கள் அவனால் நாற்புறமும் ரக்ஷிக்கப்பட்டவர்களாய் இடையூறுகளின் தலைகளை மிதித்துக் கொண்டு நிர்பயமாக எங்கும் சஞ்சரிப்பார்கள், அப்படீன்னு சுகஸ்வாமி பாகவதத்துல சொல்றார்,🦜🦜🦜.
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 26*🦚🦚🦚
ravi said…
வீடெடுத்து வேள்விசெய்து

மெய்யரோடு பொய்யுமாய்

மாடுமக்கள் பெண்டிர்சுற்ற மென்றிருக்கு மாந்தர்காள்

நாடுபெற்ற நடுவர்கையி லோலைவந் தழைத்திடில்

ஓடுபெற்ற தவ்விலை பொறாது காணுமுடலமே. 26👍
ravi said…
மெய்யாகிய வீட்டை அறியாது பொய்யான வாழ்வை நம்பி,

புது வீட்டைக் கட்டி வேள்விகள், செய்து புது மனை புகுவிழா நடத்தி, மாடு மக்கள் மனைவி சொந்தம் பந்தம் என அனைவரோடும் எப்போதும் இப்படியே இருப்போம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே!

நல்லது கேட்டது என்பதை நடுவாக இருந்து தீர்ப்பளிக்கும் இறைவனின் இறுதி ஓலை எமன் கையில் கிடைத்து இவ்வுயிரை கொண்டு போனால்

மண்ணால் செய்த ஓடு பெரும் விலை கூட பெறாது ஒரு காசுக்கும் உதவாது
இவ்வுடம்பு

என்பதனைக் கண்டு அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆதலின் இவ்வுடலில் ஈசன் இருக்கும்போதே அவனை உங்களில் கண்டுணர்ந்து தியானியுங்கள்.👍👍👍
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்

தஞ்சை ஜில்லாவுக்கு அவள் வந்த பின்னும் ஒரு கட்டத்தில் அவள் முடிந்து போகாமல் அவளை விஸ்தரித்துவிட வேண்டியிருந்தது;அப்படி விஸ்தாரமாக ஓடப் பண்ணினவர்தான் மூன்றாவது ரிஷி

அவர்தான் ஏரண்டகர். முதல் இரண்டு ரிஷிகள் ஒரு ஸாதாரணப் பெண்ணுக்கான தர்மப்படிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காவேரியை இவர்தான் தெய்வத் தன்மை பொருந்தின மாதா என்று புரிந்து கொண்டு அவள் அநுக்ரஹம் இன்னும் பல ஊர்களுக்குக் கிடைக்கும்படியாக நீட்டிவிட்டார் இப்போதைய தஞ்சாவூர் ஜில்லாவுக்குச் சோழ ராஜாவின் பின்னால் வந்த காவேரி முதலில் சம்பாபதி வரைக்கும் பாய்ந்து ஸமுத்திரத்தில் விழவில்லை. இது சீர்காழிக்குத் தென்கிழக்கில் பத்து மைலில் உள்ள இடம். முதலில் காவேரி அவ்வளவு தூரம் வரவில்லை.
ravi said…
கும்பகோணத்துக்குக் கிட்டத்தில் கொட்டையூர் என்று இருப்பதாகச் சொன்னேனே, அதற்கும் இன்னும் கொஞ்சம் தள்ளி அதாவது கும்பகோணத்திலிருந்து நாலு மைல் மேற்கே உள்ள ஒரு இடத்தோடு காவேரி முடிந்து விட்டது.
ஸாதாரணமாக ஒரு நதி என்றால் அது ஸமுத்திரத்தில் விழுந்துதான் முடியும்; அல்லது வேறே ஒரு மஹாநதியில் கலந்துவிடும் - யமுனை கங்கையில் கலக்கிறாற் போல. கும்பகோணத்துக்கு மேற்கே ஸமுத்திரமோ வேறே நதியோ ஏது? பின்னே, காவேரி என்ன ஆச்சு என்றால், அந்த இடத்தில் பெரிசாக ஒரு பிலம் இருந்தது; அதாவது பூமிக்கடியில் குகை மாதிரி, 'டன்னல்'மாதிரி, அதுபாட்டுக்குப் பெரிசாக ஒரு பள்ளம் போய்க் கொண்டேருந்தது. அந்தப் பள்ளம் அழகாக பிரதக்ஷிண ரீதியில் சுழித்து வெட்டினது போல பூமியைக் குடைந்து கொண்டு போயிருந்தது. இந்தப் பள்ளத்தின் பக்கம் காவேரி வந்ததோ இல்லையோ, அப்படியே அந்தப் பிரதக்ஷிணக் குடைசலில் வலம் வருகிறது போல சுழித்துக் கொண்டு உள்ளே ஓடி, அகாதமான பிலத்துக்குள் மறைந்தே போய் விட்டது. அதனால் அந்த ஊருக்கே திருவலஞ்சுழி என்று பேர் ஏற்பட்டு விட்டது.
ravi said…
சோழ சீமையிலே இன்னம் நாற்பது ஐம்பது மைல் காவேரி ஓடி, வளம் உண்டாக்கி விட்டு ஸமுத்திரத்தில் விழும் என்று நினைத்தால், இப்படி நடுப்பறவே மறைந்து போய் விட்டதே''என்று ராஜாவுக்கு துக்கம் துக்கமாக வந்தது. அப்போது பக்கத்தில் கொட்டையூரில் ஏரண்டக KS தபஸ் கொண்டிருப்பதைப் பார்ததார். அவருகு ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, பிலத்துக்குள் போய்விட்ட காவேரி வெளியிலே வருவதற்கு அவர் அநுக்ரஹம் செய்ய வேண்டும், உபாயம் சொல்லவேண்டும் என்று பிரார்த்தனை பண்ணினார் இப்படி பரமத் தியாகியாக, ஆத்மௌபம்யத்தால் கிருஷ்ண பரமாத்மா சொல்கிற பரமயோகியாகவும் ஆன ஏரண்டகர் திருவலஞ்சுழியில் காவேரியின் பிலத்துச் சுழலில் இறங்கிப் பிராணத் தியாகம் பண்ணினார். பெரும் பள்ள ' மும் ' திருவலம்புர ' மும்
இவர் இறங்குவதற்குள், முன்னே பிலத்தில் பிரவேசித்த காவேரி அண்டர்-க்ரவுண்டாகவே நாற்பது ஐம்பது மைல் ஓடிவிட்டான். இவர் இங்கே இறங்கிப் பலியானோரோ இல்லையோ, அந்த க்ஷணமே, அந்த நாற்பது ஐம்பது மைல் தாண்டியுள்ள இடத்தில் பூமிக்கடியிலிருந்து அப்படியே பீச்சிட்டுக் கொண்டு வெளியில் வந்துவிட்டாள். மேலே வருவதற்கு அவள் கன வேகமாக வழி பண்ணிக் கொள்ளும்போது முதலில் பெரிசாக ஒரு பள்ளம் உண்டாயிற்று. அதனால் இந்த இடத்துக்கு இப்போதும் 'பெரும் பள்ளம்'என்று ஒரு பேர் இருக்கிறது. ஜனங்கள், ''இதென்னடா பள்ளம்? பூகம்பமா என்ன?'' என்று பார்த்துக் கொண்டே இருக்கும் போது அதில் அன்டர்-கிரௌண்டாக இருந்த காவேரி கிடுகிடுவென்று நிரம்பி பூமிக்கு வெளியிலே வந்தாள்.
ravi said…
பூமியை அவள் தொடுகிற இடத்தில் லிங்கம் ஒன்று இருந்தது. இந்த லிங்கத்தை பூஜை பண்ணித்தான் மஹா விஷ்ணு வலம்புரிச் சங்கு பெற்றார் என்பது கதை. அதனால் அந்த லிங்கத்துக்கு வலம்புரீச்வரர் என்று பெயர். அவரை வலம் புரிந்தே, அதாவது பிரதக்ஷிணம் பண்ணிக் கொண்டே காவேரி மேற்கொம்டு பூமிக்கு மேலாக ஓடினாள். அந்த ஸ்தலத்துக்கு திருவலம்புரம் என்றும் பெயர் இருக்கிறது.
பாடல் பெற்ற ஸ்தலங்கள் மொத்தம் 274. அதில் மூவரும் பாடியவை நாற்பத்து நாலுதான். இந்த நாற்பத்து நாலில் திருவலம்புரமும் ஒன்று.
திருவலஞ்சுழியில் பிலத்துக்கு உள்ளே போன காவேரி திருவலம்புரத்தில் மறுபடி வெளியிலே வந்தாள். அங்கிருந்து தென் கிழக்காக மூன்று மைல் ஓடி சம்பாபதி, புகார் என்றெல்லாம் சொல்லப்படும் ஊரில் காவேரிப்பூம்பட்டினமாக்கிக் கொண்டு அங்கேயே ஸமுத்திரத்தில் கலந்து விட்டாள்.
(இன்று ஆடிப்பெருக்கு)
ravi said…
*மங்காத செல்வம் தரும் சக்கரத்தாழ்வார் வழிபாடு!*

04-08-2022 வியாழக்கிழமை சுபகிருது வருடம் ஆடி 19, இன்று, *சித்திரை நட்சத்திரம் மாலை 19.07 மணிவரை*.

நடப்பு, *ஆடி மாத, இன்றைய, சித்திரை* நட்சத்திர நன்னாளில் *சக்கரத்தாழ்வாரை* மனதார *அன்பான பாவத்துடன்* வேண்டுங்கள். *மங்கள காரியங்களை* (உரிய நேரத்தில்), சிறப்பாக, நடத்தித் தந்திடுவார். மனநிறைவாக, களத்திரம் / தாரம், சந்தானம் மற்றும் *ஏனைய செல்வங்களை* வாரி வழங்கிடுவார்!

சக்கரத்தாழ்வாருக்கு உரிய நட்சத்திரம் *சித்திரை*.

அடுத்து வரும்',
ஆனி' மாத *சித்திரை* நட்சத்திரம் சக்கரத்தாழ்வார் ஜென்ம ஜெயந்தித் திருநாள் ஆகும்.

மாதந்தோறும் வருகிற சித்திரை நட்சத்திர நன்னாளில், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

*எல்லா பெருமாள் கோயில்களிலும் *சக்கரத்தாழ்வரர்*க்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கும்*. ஸ்ரீரங்கம் கோவிலில் அமைந்துள்ள *சக்கரத்தாழ்வார்*
சந்நிதி,மிகுந்த சாந்நித்தியம் மிக்கவர்.

'ஸ்ரீஅரங்கன்'ஐ தரிசித்து வழிபடுவதற்கு, வாரந்தோறும் பக்தர்கள் தொடர்ந்து வருவது போல், வாரந்தோறும் *சக்கரத்தாழ்வாரை* தரிசித்து பிரார்த்திக்க, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

*சுதர்சனச் சக்கரத்தின் வடிவம் எத்தகையது தெரியுமா?...*

சின்னஞ்சிறு துளசி தளத்தில், ஒரு கைப்பிடி அளவு துளசியில் அடங்கக்கூடியது. *அதேசமயம், இந்தப் பிரபஞ்சம் அளவுக்கு பரந்து விரிந்ததாகவும் இருக்கிறது.*

சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார், மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், *சக்கரத்தாழ்வாரை,* பூஜித்து வருவதும், விசேஷமானது.

நம் வாழ்வில் நமக்கு வருகிற எதிர்ப்புகளையும் எதிரிகளையும்😉 அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்கிறார் சக்கரத்தாழ்வார்.
சக்கரத்தாழ்வாரை மனதார வேண்டுங்கள்.

*விளக்கேற்றி, ஆத்மார்த்தமாக வழிபடுங்கள்.*

*ஓம் சுதர்ஸனாய வித்மஹே...
மஹா ஜ்வாலாய தீமஹி,
தந்நோ சக்ர ப்ரஸோதயாத் :*
👆🏻"என்று" சிர்த்தையுடன், வழிபடுங்கள்

*முடிந்தபோதெல்லாம்கூட, மேற்படி சொன்ன 'நாமவளி' உச்சாடனம் செய்வது சிறப்பான பலன் தரும்.*

தினசரி 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 அல்லது 108 முறை, என குறைந்த அளவுக்குக்காவது சொல்லி *சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள். *எதிர்ப்புகளையும் தடைகளையும், தகர்த்து, *நிச்சயமாக* அருளுவார்.*

"ஆடி சித்திரை நட்சத்திர நன்னாளான, இன்று சக்கரத்தாழ்வாரை மனதார வேண்டுங்கள். மங்கள காரியங்களை நடத்தித் தந்திடுவார்.

********ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்********🙏நன்றியுடன்,
'
ravi said…
தியாகராஜர்
கீர்த்தனை
மலர்ந்த கணம்.
ஆன்மீகம்.
ஸ்வாமி!"
வீட்டு திண்ணையில் அமர்ந்தவாறு கண்களை மூடியபடி ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர், குரல்
கேட்டு சட்டென்று கண்விழித்தார்.எதிரே ஒரு வயதான தம்பதி; அருகே கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன்.
மெல்லிய குரலில் முதியவர்
இப்பொழுது பேச ஆரம்பித்தார்...
"ஸ்வாமி... நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலிருந்துகால்நடையாய்ஷேத்ராடனம் பண்ணின்டு வரோம்...நாளை ராமேஷ்வரம் போகணும்... இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க க்ருஹத்தில தங்கி விட்டு காலை விடிந்ததும் கிளம்பிடறோம்.தயவு செய்து ஒத்தாசை பண்ணனும்!" கம்மிய குரலில் பேசினார் அவர்.
ravi said…
வயதான அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள், முகங்களில் தெரிந்த களைப்பு, வாட்டம் மற்றும் பேச்சில் தெரிந்த ஆயாசம்.. இவை எல்லாவற்றையும்தாண்டி...அம்மூவரின் முக லாவண்யமும், தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய, அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது.
ஒரு கணம் நிலை தடுமாறியவர், பின் மெலிதான புன்னகையுடன், இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கினார்.
அதற்கென்ன பேஷாய் தங்கலாம்!...
இரவு போஜனம் பண்ணிட்டு நிம்மதியாய் தூங்குங்கோ!"
அவர்களை உள்ளே அழைத்து உட்காரச் செய்தவர் பின் அடுக்களையை நோக்கி உரத்த குரலில், "கமலா! குடிக்க தீர்த்தம் கொண்டு வா.." என்றார்.
அடுத்த கணம் தீர்த்த சொம்பு சகிதம் அங்கே வந்த கமலாம்பாளின் கண்கள் அங்கு வந்திருந்த புதியவர்களை கண்டு வியப்பில் விரிந்தன!
யார் இவர்கள்?'
கமலா!" தியாகராஜரின் குரல் அவளை தட்டி எழுப்பியது.
ravi said…
கமலா! இவர்கள் நமது விருந்தாளிகள்; இன்று நமது கிருஹத்தில் தங்கப் போகிறார்கள்.. இரவு இவர்களுக்கும் சேர்த்து உணவை தயார் செய்."
தீர்த்த செம்பை இயல்பாய் வாங்கியவாறே இயல்பாய் பேசினார் அவர்.
அடடா வீட்டீல் இரண்டு பேர்களுக்கு போதுமான அரிசியே இல்லை.. இப்போது ஐந்து பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமானால் அரிசிக்கு எங்கே செய்வது?.. பக்கத்து வீட்டுக்கு சென்று அரிசி வாங்கி வர வேண்டியதுதான்.'உள்ளுக்குள்எண்ணியவள் பின் எதையும் வெளிக் காட்டாமல் புன்னகையுடன் அவருக்கு தலையசைத்து விட்டு அடுக்களையை நோக்கி விரைந்தாள்.
போன வேகத்திலேயேஅங்கிருந்த பாத்திரங்களில் ஒன்றை கையில் எடுத்தவள், பின் அதை யார் கண்ணிலும் படாமலிருக்க புடவையால் மறைத்தவாறு அங்கிருந்து வெளியே வந்த அக்கணம், அந்த சிறிய கூடத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவரின் குரல் தடுத்து நிறுத்தியது.
அடடா எங்கே செல்கிறீர்கள் அம்மா? எங்களுக்காக சிரமப்படவேண்டாம்.. எங்களிடம் வேண்டிய அளவு தேனும் தினை மாவும் இருக்கிறது. இரண்டையும் பிசைந்து, ரொட்டி தட்டி.. நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம்."
ravi said…
அவளின் மனதை படம் பிடித்து காட்டியது போன்று பேசியவரை வியப்புடனும், தர்ம சங்கடத்துடனும் அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே அவள் சற்றும் எதிர் பாராத வகையில் தேனும் தினை மாவும் அடங்கிய சிறிய பையை அவளிடம் நீட்டினார் அந்த முதியவர்.
தயக்கத்துடனும்சங்கோஜத்துடனும் அதனை பெற்றுக் கொண்ட அவள் உணவை தயாரிக்கும் பொருட்டு அடுக்களையை நோக்கி விரைந்தாள்.
அன்று இரவு அனைவரும் அந்த ரொட்டியை சாப்பிட்டு பசியாற..
தியாகராஜர் அவர்களுடன் விடிய விடிய பேசிக் கொண்டிருந்து விட்டு, பின் ஒரு கட்டத்தில் உறங்கிப் போனார்.
பொழுது விடிந்தது.
காலை கடன்களை முடித்து விட்டு, கூடத்தில் அமர்ந்து வழக்கம் போல் கண்களை மூடியவாறு ராம நாமத்தை ஜபித்த வாறிருந்த தியாகராஜர், குரல் கேட்டு கண்களை திறந்தார்.
"ஸ்வாமி!"
எதிரே புன்னகையுடன் அந்த முதியவர்... அருகில் அவர் பார்யாளும்...மற்றும் அந்த இளைஞனும்.
அந்த முதியவர் தொடர்ந்தார், "ரொம்ப சந்தோஷம்; நாங்க காவிரியில் ஸ்நானம் பண்ணி விட்டு அப்படியே களம்புறோம், இரவு தங்க இடம் கொடுத்து.. வாய்க்கு ருசியாய் ஆகாரமும் கொடுத்து, அன்பாய் உபசரித்ததற்கு மிக்க நன்றி."
கூப்பிய கரங்களுடன் முதியவர் பேச, அருகே அந்த மூதாட்டியும், இளைஞனும் அவரின் வார்த்தைகளை ஆமோதிப்பது போன்று தலையசைத்தவாறு நின்றிருந்தனர்.சொல்லி விட்டு மூவரும் அங்கிருந்து கிளம்ப..
தியாகராஜரும் அவர்களை வழியனுப்பும் விதமாய் அவர்களுடன் வாசலுக்கு வந்தார்.
அவர்கள் மூவரும் வாசலை கடந்து தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க...
அவர்கள் செல்வதையே கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிருந்த தியாகராஜரின் கண்களில் 'சட்டென்று' ஒரு தெய்வீக காட்சி இப்போது..
அந்த வயோதிகர் ஸ்ரீராமபிரானாகவும்அந்த மூதாட்டி சீதாபிராட்டியாகவும் அந்த இளைஞன்ஸ்ரீ அனுமனாகவும்தோற்றமளிக்க.. அவருக்குள் ஒரு இனம் தெரியாத
பதை பதைப்பு.
ravi said…
கண்கள் பனிக்க, நா தழுதழுக்க
தன்னை மறந்து பக்தி பரவசத்தில் ஆனந்த கூத்தாடினார்.
என் தெய்வமே..தசரத குமாரா.. ஜானகி மணாளா நீயா என் க்ருஹத்துக்கு வந்தாய்? என்னே நாங்கள் செய்த பாக்கியம்!
அடடா வெகு தூரத்திலிருந்து நடந்து வந்ததாய் சொன்னாயே.. உன் காலை பிடித்து அமுக்கி, உன்கால் வலியை போக்குவதை விடுத்து, உனனை தூங்க விடாமல் விடிய விடிய பேசிக் கொண்டிருந்தேனே..! மகா பாவி நான்.. என் வீட்டில் தரித்திரம் தாண்டமாடறதுன்னு தெரிஞ்சு, ஆகாரத்தையும் கொண்டு வந்ததுடன், ஒரு தாய் தகப்பனாயிருந்து எங்கள் பசியையும் போக்கினாயே..உனக்கு அநேக கோடி நமஷ்காரம்."
நடு வீதி என்பதையும் மறந்து கண்ணீர் மல்கி கதறி அழுதார் தியாகராஜர்.
அப்போது அவர் திருவாயி னின்று அனிச்சையாய்
சீதம்ம...மாயம்மஎன்கிற கீர்த்தனை பிறந்தது
Sindhuja VS madhava gr said…
Super sir👏👏🙏🙏
ravi said…
🌹🌺 ' *இன்று நாம் அலட்சியமாக கருதுபவர்களை நாளை நாம் அண்ணாந்து பார்க்கும் நிலை வரலாம்* - *அதனை விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹" *ஒரு சமயம் பகவான் ஸ்ரீமந் நாராயணன் சற்று ஓய்வாக தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, பாதரக்ஷைகளையும் தரையில் கழற்றி வைத்துவிட்டு சற்று அகன்றார்.

🌺பகவானின் கிரீடம், சங்கு, சக்கரம் மூன்றும் கர்வத்துடன் பாதரக்ஷைகளை(காலணிகள்) கண்டு நகைத்தன.

🌺“பார்த்தீர்களா! என்ன இருந்தாலும் மேல்மக்கள் மேல்மக்களே;
எங்களை அனந்தன் மேல் வைத்தவர் உங்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் தரையில் விட்டுச் சென்றிருக்கிறார். இதிலிருந்தே நீங்கள் கீழ்மக்கள் எனத் தெரியவில்லையா? என்றும்,

🌺“எங்களைப் போல் நீங்கள் அரியாசனத்தில் அமரமுடியாது.” என்றும் எள்ளி நகையாடின.

🌺பகவான் திரும்பியதும் பாதரக்ஷைகள் (காலணிகள்) அவரிடம் முறையிட்டன.

🌺அவர், “கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் ஸ்ரீராமனாக நான் அவதரிக்கும்போது உங்கள் துயர் தீர்ப்பேன்.

🌺உங்களைக் கண்டு நகைத்தவர்களே உங்களுக்குச் சேவை செய்ய, தலைமேல் சுமக்கச் செய்வேன்!” என்றார் கருணையுடன்.

🌺சொன்னதை போல, இராமனாக பரம்பொருள் திரு அவதாரம் செய்த பின்பு, பரதன் முடி சூட வேண்டி கைகேயி செய்த சதியால் வனவாசம் சென்றுவிட, விஷயம் தெரிந்த பரதன், இராமன் இருக்கும் இடம் நோக்கி ஓடுகிறான்.

🌺தன் தாய் செய்த தவறுக்கு வருந்தும் பரதன் இராமரை காட்டுக்கு போய் சந்தித்து மன்னிப்பு கோருகிறான்.

🌺மீண்டும் அயோத்தி திரும்பி வந்து ஆட்சி பொறுப்பை ஏற்குமாறு வேண்ட, இராமர் மறுத்துவிடுகிறார்.

🌺“உங்கள் பாதுகைகளையாவது கொடுங்கள் அண்ணா. அதை சிம்மாசனத்தில் நிறுத்தி, அதன் பிரதிநிதியாக நான் ஆட்சி புரிகிறேன்.” என்று வேண்ட, மனமிறங்கிய அண்ணல், அதற்கு ஒப்புக்கொண்டார்.

🌺ஸ்ரீ இராமரின் பாதரக்ஷைகளை சங்கு-சக்கரங்களின் அம்சமாகப் பிறந்த பரதனும் சத்ருக்னனும் தங்கள் தலைமேல் தாங்கி எடுத்துச் சென்று அதை சிம்மாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தனர்.

🌺இராம ராஜ்ஜியத்தைவிட பாதுகா ராஜ்ஜியம் பவித்திரமாக இருந்தது என்றால் அது எந்தளவு சக்தி மிக்கது என்று யூகித்துக்கொள்ளுங்கள்.

🌺இதன் நினைவாகவே இன்றும் பெருமாள் கோவில்களில் கிரீடத்தின் மேல் பாதுகைகள் உள்ள ‘சடாரி’

🌺மேலும் பகவானின் கால் பட்டல்ல, அவன் பாதுகை பட்டதாலேயே கல்லாக இருந்த அகலிகையும் சாபவிமோசனம் பெற்று எழுந்தாள். ஒம் நாமோ

🌺இறைவனின் பாதுகைகள் அத்தனை மகத்துவம் மிக்கது. கோவிலுக்கு சென்றால் பகவானின் திருவடிகளையே முதலில் பார்க்கவேண்டும்.

🌺காலம் எப்போது யாரை எந்த உயரத்தில் வைக்கும் என்று கணிக்க முடியாது. யாரையும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது.

🌺இன்று நாம் அலட்சியமாக கருதுபவர்களை நாளை நாம் அண்ணாந்து பார்க்கும் நிலை வரலாம்.

🌺அதை உணர்ந்து எப்போதும் அடக்கத்துடன் வாழ்ந்து, இந்த வாழ்க்கை பகவான் போட்ட பிச்சை என்கிற எண்ணத்துடன் வாழ்ந்து வரவேண்டும். ஒம் நாமே நாரயணா💖❤‍🔥💖🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
https://chat.whatsapp.com/KqC06JZZKO4EEMBqXvrB59

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமி நோன்பு பற்றிய பதிவுகள் :*

*பூஜை ஆரம்பிக்கும் முறை:*

பூஜைப் பொருட்கள் அனைத்தையும் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். பின் மகாலட்சுமிக்கு பிடித்தமான மல்லி, முல்லை, ரோஜா, வில்வம் போன்ற வாசனை மிகுந்த மலர்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். எந்த ஒரு பூஜையும் முழுமையாக நல்ல முறையில் நிறைவேற முழு முதற்கடவுளான விநாயகரை முதலில் வழிபட வேண்டும்.

பிள்ளையாரை வணங்கிய பின்பு உங்களுடைய குலதெய்வத்தை வழிபட்டு கொள்ளுங்கள். பின்னர் ஐந்துமுக குத்து விளக்கை நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்றுங்கள்.

லட்சுமிக்கு குங்குமத்தால் 108 முறை அர்ச்சனை செய்யலாம். பின்னர் தூப, தீப, ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். பூஜை நிறைவடைந்ததும் நீங்கள் வீட்டிற்கு அழைத்த பெண்களுக்கு தாம்பூலம் கொடுத்து நைவேத்திய பிரசாதத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நோன்பு கயிற்றை அணிந்து கொள்ளலாம். மறுநாள் சனிக்கிழமை அன்று காலை 10:45 மணி 11:45 வரையிலான காலகட்டத்தில் புனர் பூஜை செய்து அமைத்த கலசத்தை கலைத்து விடலாம்.

*கலசம் கலைக்கும் முறை:*

முதலில் கலசத்தை வடக்கு திசை பக்கமாக கொஞ்சமாக நகர்த்திக் கொள்ளுங்கள். கலசத்தில் இருக்கும் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி விடுங்கள். அதில் வைத்திருக்கும் அரிசியில் இருந்து ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து நீங்கள் சமைக்க பயன்படுத்தும் அரிசியுடன் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

மீதமிருக்கும் அரிசியில் பொங்கல் செய்து நைவேத்தியம் படைக்கலாம். அல்லது இனிப்பு பண்டங்கள் தயாரிக்க பயன்படுத்தலாம்.

இதே முறையில் தேங்காயும் இனிப்பு பண்டங்கள் தயாரிக்க மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். கலசத்தில் இருக்கும் நாணயத்தை உங்கள் பணப்பெட்டியில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் செல்வமானது பன்மடங்கு பெருகும்.

மற்ற பொருட்களை பூஜை அறையில் வைத்து விடுங்கள். இப்படி முறையாக மகாலட்சுமியை அழைத்து வரலட்சுமி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு கேட்ட வரமெல்லாம் அள்ளி கொடுப்பாள் மகாலட்சுமி.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
Hemalatha said…
Wow👏👏👏
Sairam blessings sir.
Very proud sir
My hearty congratulations sir🙏🙏🙏
Hemalatha said…
நித்தமும் ராமர் பாதம் தொட்ட ஜெயராம் ரவி ஐயாவின் புகழ் விண்ணைத் தொடட்டும்🙏🙏🙏
ravi said…
Temples covered from 31st July to 3rd Aug 2022

1. விருத்தபுரீஸ்வரர் விருத்தாசலம்

2. சிதம்பரம்

3. சீர்காழி .. சடையப்பர்

4. சீர்காழி உலகளந்த பெருமாள்

5 வைத்தீஸ்வரன் கோயில்

6 திருக்கடையூர்

7. திருமீயச்சூர்

8 திலதைப்பதி சொர்ண வல்லி சமேத முத்தீசுவரர் திருக்கோயில்

9. திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் - திருவாரூர்

10 கூத்தனூர் சரஸ்வதி

11. அமிர்த நாராயண பெருமாள் திருக்கடையூர்

12. பிரம்மபுரீஸ்வரர் கோயில் திருக்கடையூர்

13. கர்பரக்ஷாம்பிகை

14. வெற்றிதரும் வெள்ளை விநாயகர், க்ஷேத்திரபாலர்,
பெரிய நாயகி அஷ்டபுஜ காளி -
*திருவலஞ்சுழி*

15. பட்டீஸ்வரம் துர்க்கை

16. சுவாமிமலை

17. பார்த்தசாரதி கோயில்

18. கபாலீஸ்வரர் கோயில்

19. மாங்காடு காமாக்ஷி அம்மன்

20 . ஸ்ரீ லலித்தாம்பிகை திருவள்ளூர்

🙏🙏🙏
Moorthi said…
We enjoyed with your company yesterday to Mangadu and Kilambakkam temples. Becoz of you, we had a unforgettable beautiful darshan of Lordess Sri Lalthabigai. Pl tell in future if any such opportunity 🙏🙏🙏
ravi said…
*கந்தர் அலங்காரம் 23* 🐓🦚🙏

*அலங்காரம்-05:*
*முருகன் சூரனைக் கொன்றது சரியா? தவறா??*
ravi said…
ஓர ஒட்டார் ஒன்றை! உன்ன ஒட்டார்!

மலர் இட்டு உன் தாள்
சேர ஒட்டார் ஐவர்!

செய்வது என் யான்? சென்று தேவர் உய்ய,
சோர நிட்டூரனை, சூரனை, கார் உடல் சோரி கக்க,

கூர கட்டாரி இட்டு, ஓர் இமைப் போதினில் கொன்றவனே.
ravi said…
*சென்று தேவர் உய்ய* =

தேவர்களுக்கு மட்டுமே ஏன் முருகன் உதவி செய்ய வேண்டும்?

அசுரர்களுக்கு முருகன் உதவி செய்துள்ளானா? *

தெரிந்தவர் சொல்லுங்கள் பார்ப்போம்!

*கார் உடல் சோரி கக்க, கூர கட்டாரி இட்டு* =

சூரன் செய்த தவறு என்ன? அவனை ஏன் இரத்தம் கக்க, கட்டாரி இட்டு வெட்ட வேண்டும்?

இத்தனைக்கும் அவன் மாற்றான் மனைவியைக் கூட களவாடவில்லை!

பெண்டிரை வன்கொடுமை செய்யவில்லை!

முனிவர்களுக்கும் மானிடர்க்கும் தீங்கு இழைக்கவில்லை!

தன்னையே கடவுளாகக் கும்பிட வேண்டும் என்று யாரையும் கட்டாயமும் படுத்தவில்லை!
ravi said…
தேவர்களை மட்டும் போரிலே வென்று, சிறைப்பிடித்து வைத்தான் -

இது வீரம்!

பின்னர் எதற்கு இந்தச் சூர சங்காரம்?

- * இதையும் தெரிந்தவர் சொல்லுங்கள் பார்ப்போம்!👍
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 301*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः

कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।

सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्

पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:

கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।

ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥

சிவானந்தலஹரி 36

🪷🪷🪷
ravi said…
எப்படி தினோம் உடம்பை அழுக்குப் போகறதுக்கு குளிக்கறோமோ,

துணிகளை துவைச்சுப் போட்டுக்கறோமோ,

அந்த மாதிரி உள்ளயிருக்கிற அழுக்கையும் நீக்கறதுக்கான முயற்சியை தினோம் பண்ணணும்.

எப்படி உடம்புல அழுக்கு சேரவிட்டாலோ, துணிகள்ல அழுக்கு சேரவிட்டாலோ வ்யாதிகள் வருமோ அப்படி உள்ள அழுக்கு சேர்ந்தாலும் சம்சார வ்யாதின்னு ஒண்ணு வந்துடும்.

அது ஜன்ம ஜன்மாவா நம்மளைப் பிடிச்சுக்கும்.

அதனால அதுக்கு இடம் கொடுக்கக் கூடாது.

ஒருநாள் கூட பகவானுடைய சரண த்யானம் பண்ணாமல் போகக்கூடாது.

இந்த இடத்துல பகவான் அவாஅவாளுக்கு ஏத்தமாதிரி வந்து, அவாஅவாளுக்கு பிடிச்ச மாதிரி காட்சி கொடுக்கறார்.

அம்மையும் அப்பனுமா குருவா வர்றார்.

அதுல, அம்பாளுடைய சரணத்துல நம்ப மனசை நிறுத்துறது ரொம்ப சுலபம். 🙏🙏🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 298* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*77. தந்விநே நமஹ (Dhanviney namaha*)

ஈச்’வரோ விக்ரமீ *தன்வீ*
மேதாவீவிக்ரம: க்ரம: |

🪷🪷🪷
ravi said…
அந்தச் சேனையின் தொடக்கத்தைத் தான் காண முடிந்ததே தவிர, அதன் முடிவு கண்ணுக்கு எட்டவில்லை.

இவர்களோடு யுத்தம் செய்தால், பெரும்பாலான வானரர்கள் உயிரிழக்க நேரிடும் எனக் கணக்கிட்டான் ராமன்.
தனக்குத் தொண்டு செய்வதற்காக வந்த வானரர்கள் இவ்வாறு மடிவதை ராமன் விரும்பவில்லை.

அதனால் அந்த மூலபல சேனையைத் தான் ஒருவனே எதிர்கொள்வது என முடிவெடுத்தான்.

“என் அன்பிற்குரிய வீரர்களே! இந்த மூலபல சேனையை நான் தனி ஒருவனாகவே போரிட்டு வெல்வேன்👍👍👍
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

நம்முடைய சாஸ்த்ர, புராணங்களிலிருந்து இந்த அன்புடைமையில், அருளுடைமையில் அந்நாள் ஆசார்யர்கள் ஆதர்ச புருஷர்களாக இருந்திருப்பது தெரிகிறது. குரு சிஷ்யர்களுக்கிடையிலே பரஸ்பர ப்ரியம் போகவே கூடாது என்றுதான் பாடம் ஆரம்பிக்கும்போதே மந்த்ர பூர்வமாக வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். “(குரு – சிஷ்யர்களான) நாங்கள் ஒருத்தருக்கொருத்தர் பகைத்துக் கொள்ளாமல் இருக்கவேண்டும்” என்பது பாட ஆரம்பத்திலும், முடிவிலும் வருகிற உபநிஷத் பிரார்த்தனை.

“அடிக்கிற கைதான் அணைக்கும்” என்பதற்கு அப்படியே ரூபகமாக அந்த ஆசார்யர்கள் இருந்திருக்கிறார்கள். கண்டிப்புச் செய்ய வேண்டிய இடத்தில் எப்படி நிர்தாக்ஷிண்யமாகக் கண்டித்தார்களோ அப்படியே அன்பைக் கொட்ட வேண்டிய ஸமயத்தில் கொட்டினார்கள். பாகவதத்தைப் பார்த்தால் போதும் – இரண்டும் தெரியும். பகவானே குசேலரிடம் தாங்களிருவரும் சேர்ந்து குருகுலவாஸம் செய்த நாட்களைப்பற்றி ஞாபகப்படுத்துகிறார்.

கம்ஸவதமான பின் பகவானுக்கும் பலராமருக்கும் உபநயனமாகி அவர்கள் ஸாந்தீபனி என்ற பிராமணரிடம் குருகுலவாஸம் செய்கிறார்கள். ஸர்வ வித்யைகளும் அவனிடமிருந்துதான் என்றாலும் லோகத்துக்கு குரு பக்தியை உதாரணம் காட்டவே பகவானும் இப்படி ஒரு ஆசார்யனிடம் போய்ப் படித்தான் என்று பாகவதம் சொல்கிறது. ஆனாலும் பகவானுக்கு அவதார கார்யங்கள் நிறையக் காத்துக் கொண்டிருந்ததால் பன்னிரண்டு வருஷம் வித்யாப்யாஸம் செய்வது என்று வைத்துக்கொள்ளாமல், தன் திவ்ய சக்தியையும் கொஞ்சம் கைக்கொண்டு, ஒரு நாளுக்கு ஒரு சாஸ்த்ரம் வீதம் அறுபத்துநாலே நாளில் அத்தனை சாஸ்த்ரமும் கற்றுக்கொண்டு விடுகிறார். (பலராமரும்தான். அவரும் அவதாரம்தானே?) இதிலிருந்தே க்ருஷ்ணருடைய தெய்விக ப்ரபாவத்தை குரு ஸாந்தீபனி தெரிந்துகொண்டு விடுகிறார். அதனால் பிற்பாடு சிக்ஷை பூர்த்தியாகி, “என்ன தக்ஷிணை தரணும்?” என்று பகவான் கேட்டபோது, ரொம்ப நாள் முந்தி ஸமுத்ரம் அடித்துக்கொண்டு போய்விட்ட தன்னுடைய பிள்ளையை அவர் யமாலயத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்து தரவேண்டும், அதுதான் தமக்குவேண்டிய தக்ஷிணை என்கிறார். பகவானும் அப்படியே பண்ணுகிறார். அது இப்போது நமக்கு விஷயமில்லை.

ravi said…
பின்னே எது விஷயம் என்றால், இப்படி தெய்வசக்தி பொருந்தியவராக க்ருஷ்ணரை அவருடைய ஆசார்யர் தெரிந்துகொண்டிருந்தபோதிலும், ‘சீஷப்பிள்ளை என்று வந்த ஒருத்தனை ஆசார்யர் நன்றாக வேலை வாங்கி, பணியினாலும் பணிவினாலும் கட்டுப்படுத்தி சுத்தி செய்வார்’ என்று லோகத்துக்குக் காட்டவே அவர் இந்த சிஷ்ய வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் தெரிந்து கொண்டார். எனவே வேலை வாங்குவதை இவர் விஷயத்திலும் விட்டு விடக் கூடாது என்று இருந்திருக்கிறார்.

ravi said…
அருமையிலும் அருமையான குழந்தை க்ருஷ்ணன், அதே ஸமயத்தில் அறிதற்கரியவராக இருந்த பகவான், குருவின் ஆக்ஞைப்படி காட்டுக்குப் போய் விறகு வெட்டிக் கொண்டு வந்துகூடக் கைங்கர்யம் பண்ணியிருக்கிறார்! அந்த நாட்களில் ஒன்றைப் பற்றித்தான் அப்போது தம் ‘க்ளாஸ்மேட்’டாக இருந்த குசேலரிடம் நீண்ட காலத்துக்குப் பின்னால் பகவான் நினைவு படுத்துகிறார்.

ravi said…
க்ருஷ்ணரும் குசேலரும் ஒருநாள் இப்படி விறகுக்காக அடர்ந்த காட்டுக்குப் போனபோது இருட்டிவிட்டது. அதோடு பேய் மழையும் பிடித்துக்கொண்டுவிட்டது. மேடு பள்ளம் தெரியாமல் ஒரே ப்ரளயமாயிற்று. திக்கு திசை புரியாமல் கும்மிருட்டு வேறே. நரலீலையிலே பகவான் நிஜமாகவே தமக்குத் திக்கு திசை புரியாத மாதிரிதான் நடித்தார். “நானும் நீங்களும் பயந்துண்டு, துக்கப்பட்டுண்டு ஒத்தர் கையை ஒத்தர் கோத்துண்டு ரத்ரியெல்லாம் சுத்தி சுத்தி வந்தோமே! ஞாபகமிருக்கோல்லியோ?” என்று அவரே குசேலரைக் கேட்கிறார். குருவின் வேலை வாங்கும் கண்டிப்பால் வந்தது இது.

ravi said…
இனிமேல் குருவின் அன்பையும் பாசத்தையும் பகவான் வாய் வார்த்தையாகத் தெரிந்து கொள்கிறோம். “குழந்தைகளைக் காணோமே-ன்னு அங்கலாச்சுண்டு குருநாதரும் நம்மைத் தேடிண்டு வந்து, ஸூர்யோதய ஸமயத்தில் கண்டு பிடிச்சாரே! ‘ஐயோ பாவம்! எனக்காக எத்தனை கஷ்டப்பட்டுட்டேள்?’ என்று நம்மிடம் எப்படி உருகிப் போயிட்டார்? அதற்குப் பரிஹாரமாக நமக்கு எப்படி மனஸழர அநுக்ரஹம் பண்ணி, ‘உங்களுடைய நல்ல நினைப்பெல்லாம் பூர்த்தியாகட்டும். நீங்க படிச்ச வேதம் எந்நாளும் பூர்ணசக்தியோடு உங்களை ரக்ஷிச்சுண்டு இருக்கட்டும்’ என்றெல்லாம் வரம் கொடுத்தாரே!” என்று ஞாபகப்படுத்துகிறார்.

மொத்தத்தில் குரு என்பவர் வித்யாஸம்பத்து மட்டுமில்லாமல் குண ஸம்பத்து, அநுஷ்டான ஸம்பத்து, ஆத்ம ஸம்பத்து எல்லாம் ஒருங்கே கூடியவராக இருந்தார்.

இப்படி அவர் இருக்கும்படியாகச் செய்தது அந்தப் பழைய நாளின் குருகுல முறையேதான். சில சிஷ்யர்கள் மட்டும் ஒரு குருவின் ஆதரவில் அவருடைய க்ருஹத்திலேயே இருந்து படிப்பது என்ற கல்வி முறையில் குரு சிஷ்யன் ஆகிய இருவருமே சுத்தர்களாகத்தான் இருந்தாக வேண்டுமென்றிருந்தது. அந்த முறையே அவர்களை அப்படி சுத்தர்களாக உருவாக்கவும் செய்தது.

சிஷ்யர்கள் கூடவே வஸித்தும் அன்பு, மரியாதைகள் செலுத்த வேண்டுமென்றால் குரு நல்லொழுக்கமுள்ளவராகவும், அநுக்ரஹ சக்தி பெற்றவராகவும் இருந்தால்தானே முடியும்? அதேபோல் புத்தி மட்டத்திலும்கூட சிஷ்யன் கூடவே இருந்து, ‘பரிப்ரச்நம்’ என்று பகவான் சொன்னபடி அவரைக் குடைந்து குடைந்து கேள்வி கேட்கிறானென்றால் அப்போது அவர் தாம் போதிக்கிற சாஸ்த்ரத்தில் நல்ல ஆழ்ந்த அறிவை உண்டாக்கிக் கொண்டேயாக வேண்டியிருந்திருக்கிறது.
ravi said…
61

ஆஶ்சர்யமம்ப வதானாப்யுதயாவலம்ப:
காமாக்ஷி சஞ்சல நிரீக்ஷண விப்ரமஸ்தே |
தைர்யம் விதூய தனுதே ஹ்ருதி ராகபந்தம்
ஶம்போஸ் ததேவ விபரீததயா முனீனாம் ||61||

தாயே! காமாக்ஷி! உனது முகசோபைக்கு காரணமாயிருக்கும் உன் சஞ்சலமான கடாக்ஷ பார்வையின் அழகானது பரமசிவனின் மனதில் தைர்யத்தைப்போக்கி அவருக்கு ஆசையை நெஞ்சில் விதைக்கிறது. ஆயினும், அதே பார்வையானது முனிவர்களுடைய மனதில் ஆசைகளை விலக்கி தைர்யத்தை உண்டுபண்ணுகிறது என்பது ஆச்சர்யமே!
ravi said…
🌹🌺 ' *மன்னா* .... *நீங்கள் அரிசியை உடனடியாகக் கொடுக்க வேண்டாம், பால் பாயஸம் செய்து கொடு... என்ற கிருஷ்ணர் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹முன்னொரு சமயம் அம்பலப்புழையை ஆண்டு கொண்டிருந்த அரசன் முன் கிருஷ்ணர் ஒரு முனிவர் வடிவில் தோன்றினார். “இந்த நாட்டில் யாரேனும் என்னை சதுரங்கம் ஆடி ஜயிக்க முடியுமா? என்று சவால் விட்டார்.

🌺அரசனுக்கு சதுரங்கத்தில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் மகிழ்ச்சியுடன் அரசனே சவாலை ஏற்றான்.

🌺அரசன் முனிவரிடம், “சவாலில் நான்தான் ஜயிப்பேன், ஒரு வேளை நீர் ஜயித்தால் பரிசாக என்ன வேண்டும் என்பதை நீரே முடிவு செய்யும்” என்று சொன்னான். முனிவர், “என்னைப் போன்ற முனிவர்களுக்கு அரிசிதான் தேவை.

🌺ஆனால் நான் சொல்லும் முறையில் அரிசியைத் தர வேண்டும். முதல் கட்டத்தில் 1 அரிசி, இரண்டாவது கட்டத்தில் 2 அரிசி,, மூன்றாவது கட்டத்தில் 4 அரிசி, நான்காவது கட்டத்தில் 16 அரிசி என்ற ரீதியில் அரிசியைத் தர வேண்டும்” என்று சொன்னார்.

🌺அரசனும், இவ்வளவு பெரிய ராஜ்ஜியத்தில் வெறும் அரிசியைக் கேட்கிறீர்களே, வேறு ஏதாவது கேளுங்கள் என்று சொல்ல முனிவர் வேறு எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

🌺அரசனுக்கு அந்தக் கோரிக்கையில் வருத்தம் இருப்பினும், அரிசிதானே என்று சந்தோஷமாக ஆடத் துவங்கினான்.

🌺சதுரங்க விளையாட்டு துவங்கியது, கண்ணனுடைய விளையாட்டு, அரசன் ஆட்டமிழந்தான். சொன்னபடி முனிவருக்குப் பரிசு தரும் நேரம் வந்தது. கட்டத்தில் முனிவர் சொன்னபடி அரிசியை வைக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அரசனுக்குத் தன் தவறு புரிந்துவிட்டது.

🌺முனிவரின் உண்மையான கோரிக்கையை உணர்ந்தான். 21வது கட்டம் வரும்போது அரிசி அளவு 10 லட்சமாக (மில்லியன்) உயர்ந்தது. 40-வது கட்டத்தில் ஒரு மில்லியன் மில்லியனாக ஆயிற்று.

🌺இவ்வாறு ஒரு பெருக்குத் தொடர்ச்சியின் (geometric progression) வளர்ச்சியாக வளர்ந்துகொண்டே போனது. களஞ்சியத்தில் இருந்த அரிசி, நெல் அனைத்தும் தீர்ந்து, பக்கத்து ராஜ்ஜியங்களில் இருந்த நெற்குவியலையும், அரிசியையும் கொட்டியாயிற்று. இப்போது, அரசன் முனிவரின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என உணர்ந்தான்.

🌺64 கட்டங்கள் கொண்ட சதுரங்கத்தில் நிரப்ப ((2 ^ 64) – 1) அதாவது 18.446.744.073.709.551.615 டிரில்லியன் டன் கணக்கில் அரிசி தேவைப்பட்டது. அரசன் கலங்கினான். என்ன செய்வது என்று புரியவில்லை.

🌺அரசனின் சங்கடத்தைக் கண்ட முனிவர், கிருஷ்ணர் வடிவில் அரசன் முன் தோன்றினார். மன்னா.... நீங்கள் அரிசியை உடனடியாகக் கொடுக்க வேண்டாம், கடன் தீரும்வரை அம்பலப்புழை கிருஷ்ணன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரிசியில் செய்யப்பட்ட பால் பாயஸம் செய்து கொடு என்று கூறினார்.

🌺அரசனும் கர்வத்தை ஒழித்து, தனது சொத்துக்கள் அனைத்தையும் கோவிலுக்கே கொடுத்தான்.

🌺இன்றளவும் அம்பலப்புழை கிருஷ்ணன் கோயிலில் அரிசியால் செய்யப்பட்ட பால் பாயஸம் கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு, வரும் பக்தர்களுக்குப் பிரஸாதமாகக் கொடுக்கப் படுகிறது.

🌺குருவாயூருக்கு அடுத்து புக்ழ் பெற்று விளங்குகிறது அம்பலப்புழா கிருஷ்ணர் கோவில்.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
*த்ரிபுரசுந்தரி ஆலயம், உதயபூர்*🪷🪷🪷
ravi said…
உதயபூரின் தலைநகர் பெயர் அம்பாள் பெயர். திரிபுரா.

500 வருஷங்களுக்கு முந்தைய ஆலயம். ராஜாக்கள் பரம்பரையாக பராமரித்து வரும் ஆலயம்.

லக்ஷக்கணக்காக அம்பாள் பக்தர்கள் தரிசிக்கும் ஆலயம்.

1501ல் மஹாராஜா தன்யா மாணிக்ய ராஜா கட்டியது.

ராஜா விஷ்ணு ஆலயம் கட்ட தான் ஏற்பாடுகள் செய்தான்.

ஒருநாள் ராஜாவின் கனவில் தேவி பகவதி தோன்றி ''சிட்டகாங் போ. அம்பாள் விக்ரஹம் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்''

ராஜாவின் தளபதி சென்று அம்பாளை கொண்டுவருவதற்குள் கோவில் கட்டப்படவில்லை.

ஆகவே பிரதிஷ்டை தாமதமாயிற்று.

விமரிசையாக அம்பாளை அப்புறம் கோவில் ரெடியானதும் பிரதிஷ்டை செய்தார்கள்.

இதிலும் ஒரு சூக்ஷ்மம் இருக்கிறது.

அம்பாள் சிலை ஒரு இடத்துக்கு வந்ததும் நின்றுவிட்டது. நகர்த்த முடியவில்லை.

அந்த இடம் ஒரு சிறு குன்று.

மடபாரி என்று பெயர். அந்த இடம் உதயபுரிக்கு தெற்கே 3 கி.மீ. தூரத்தில். அங்கு தான் இந்த அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவில் எழும்பியதாம்.

ஆமை வடிவ கூர்ம பீடம்

இந்த குன்று மட பாரி. திரிபுரா என்பதை விட மடபாரி என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். 🙏🙏🙏
ravi said…
ஆலயத்தை ஒட்டி ஒரு பெரிய குளம். கல்யாணசாகர் என்று பெயர்.

கோவில் அமைந்த பிறகு 124 வருஷங்களுக்கு அப்புறம் தோண்டப்பட்ட குளம்.

மாணிக்ய ராஜா காலம் (1625-1660). தெற்கே பார்த்த அம்பாள்.

கிட்டத்தட்ட 4 - 4 1/2அடி உயர நின்ற திருக்கோலம்.

தங்கத்தை உரைக்கும் கல் வகையில் உருவான சிலை.

வர, அபய ஹஸ்தங்கள்.

கழுத்தில் 13 மனித தலைகள் கொண்ட மாலை.

யோக ஜடாமுடி மகுடம் கொண்ட அம்மன்.

சக்தி வாய்ந்த கண்கள்.

சிவனின் விகிரஹம் கீழே சவாசன ரூபத்தில் அமைந்து அதன் மேல் அம்பாள் நிற்கிறாள்.

பக்தர்கள் இவளைக் காளி என்று தொழுகிறார்கள்.

சதி தேவியின் வலது காலின் கீழ் பகுதி விழுந்த இடம் இந்த சக்தி பீடம் என்கிறார்கள்.🙏🙏🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 304* 🙏🙏🙏started on 7th Oct 2021

*111 *பிஸ-தந்து* = தாமரை இழை

*தனீயஸ்* = மெல்லிய - மிகச் சிறிய வடிவு

*111 பிஸதந்து தனீயஸீ* =

தாமரை இழை போன்ற நுண்மையும் மென்மையும் சிறந்த தன்மையும் கொண்டிருப்பவள்🪷🪷🪷
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 305* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
*82 யானையின் துதிக்கை போன்ற தொடை*

*ஜலஸ்தம்பம், இந்திரபதவிக்கொத்த பதவி*

கரீந்த்ராணாம் ஶுண்டான் கனககதலீ காண்டபடலீம்

உபாப்யாமுரூப்யா முபயமபி நிர்ஜித்ய பவதி

ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி கடினாப்யாம் கிரிஸுதே

விதிஜ்ஞே ஜானுப்யாம் விபுத கரிகும்ப த்வயமஸி 82
ravi said…
பகவதி ! பார்வதி !

சிறந்த யானைகளின் துதிக்கைகள், பொன்வாழை மரங்கள் ஆகிய இவ்விரண்டையும் இரண்டு தொடைகளால் ஜயித்தும் சாஸ்திரத்தை அறிந்தவளே !

பதியாகிய பரமசிவனுக்கு நமஸ்காரம் செய்யும் பழக்கத்தால் கடினமாகவும் நன்கு திரண்டு உருண்டும் இருக்கும் முழங்கால் முட்டிகளால் இந்திரனுடைய யானையாகிய ஐராவதத்தின் இரண்டுகும்பங்களையும் ஜயித்தும் இருக்கிறாய்.👍👍👍
ravi said…
*ராமரும் காக்காசுரனும்*👣

*காக்காசுரன் சொன்ன கீதை*👍👍👍
ravi said…
அன்று ரங்கனான் ராமன் ... அன்னையின் மடியில் ஆனந்த சயனம் ...

நடந்த கால்கள் தனை தன் அரவிந்த கரங்கள் கொண்டே அன்னை தடவி விட்டாள் ..

ஆயிரம் தாமரை கண்கள் கொண்டவன் அன்னையின் அன்பில் கூம்பிப் போனான் ...

ஆதவன் உதித்தும் அம்புஜக்கண்கள் மலரவில்லை .. ஆழ்ந்த உறக்கம் அன்று ராமனுக்கே

*ராமா* ..

உன் ஏகாந்த வேளை தனில் ஆகாரம் உண்டு என்றே பறந்து வந்தேன் இங்கே ...

சித்தான அன்னையிடம் பித்தாகி போனேன் ..

அன்னை என்றும் பாராமல் மதனை தூண்டி விட்டேன் மலர் கணைகள் என் மீது ஏவவே...

மடையன் நான் மண்டூகம் நான்
மதி இழந்தவன் நான் ..

செய்த பாவம் கங்கையும் விரும்பாள் கழுவி விட

அந்தோ !!!

கோபம் என்ன விலை என்றே கேட்கும் உன்னையும் அன்று கால ஸம்காரமூர்த்தியாய் கண்டேன் *ராமா*

விடுத்தாய் புல்லை புள்ளான் என் மீது ..

பிரமனும் அதிர்ந்து போனான் ..

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று அறிந்தே

துரத்திய புல் ,
புல் தின்றும் காளை மீது அமரும் காலனை வென்றவன் காலடியில் தள்ளின ..

உன் நாமம் தாங்கிய புல்லை ஈசன் மீண்டும் எய்தான் என் மீதே ...

ஓடினேன் ஓடினேன் எங்கும் ஓட்டம் நிற்க வில்லை *ராமா*

உன் பாதம் மறந்து போனேன் உன் நாமம் துறந்து போனேன் ..

அன்னையின் வார்த்தை பாய்ந்து வரும் அம்பை பாய் போட்டு தடுத்தன ..

உன் பாதம் தனில் ஓடி வந்து விழுந்தேன் ..

*குழந்தாய்* என்றே சொல்லி அணைத்தாய் ..

உன் கருணை யார் பெறுவார் இது போல்..

வரலட்சுமி அருகில் இருக்க நீ வரதனாய் வாழ்வதில் வியப்பென்ன *ராமா*

சிரித்தான் *ராமன்*

சரணம் என்றே ராவணன் வந்தாலும் மன்னிப்பேன் நான் ..

நீ இழைத்த பாவம் என் பாதம் தீர்க்கும் ..

மாற்றான் மனைவியை தாய் அன்றி பார்ப்போர் இழப்போர் பார்வை தனை ..

திருந்தி விட்டாய் என்பதால் இரு பாவையில் ஒரு பாவை மட்டும் ஒளி பெறட்டும்

*ஐயனே* ..

என் கதை எல்லோர்க்கும் பாடம் ..

பாடம் சொல்ல நீயே என்றும் வரவேண்டும் ..

*ராமன் சொன்னான்*

வருவேன் வரதனாய்

வாரி தரும் வள்ளலாய்

காஞ்சி தனில் என் பெயர் மாறக்காண்பாய் அங்கே

*ராமா*

என் பெயர் கொண்டு வருவீர்கள் அங்கே?

ஏழை நான் சேவை செய்ய வேண்டும் இறுதி மூச்சு இருக்கும் வரை

அங்கே என் பெயர் *சுவாமி நாதன்* ...

*பெரியவா* என்று பெரியோர்கள் எனை அழைப்பர் ...

கூடி வாழ்ந்தே கோடி இன்பம் காண்பாய் ..

என் நாமம் சொல்லி வரும் பெண்கள் யாவும் உன் தாய் என்றே வாழ் ..

நீ கரையும் போது உன் ஊழ்வினையும் கரைந்து போகும் அங்கே 🙏🙏🙏💐💐💐
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 27*🦚🦚🦚
ravi said…
ஓடமுள்ள போதெலாம் ஓடியே உலாவலாம்

ஓடமுள்ள போதெலாம் உறுதிபண்ணிக்கொள்ளலாம்

ஓடமும் உடைந்தபோதங்கு ஒப்பில்லாத வெளியிலே

ஆடுமில்லை கோனுமில்லை ஆருமில்லை ஆனதே. 27 🙏🙏🙏
ravi said…
ஒடமாகிய இவ்வுடம்பு இருந்தால்தான் அங்கும் இங்கும் ஓடி உலவலாம்.

இந்த உடம்பில்தான் உயிர் உள்ளது என்பதையும் அதிலேதான் இறைவன் இருக்கின்றான் என்பதையும் அறிந்து பிராணாயாமம், வாசியோகம், தியானம், தவம் போன்றவைகளை அறிந்து புரிந்து இவ்வுடம்பை உறுதியான கல்பதேகமாக மாற்றிக் கொள்ளலாம்.

இதை உணராது இவ்வுடலை விட்டு உயிர்போய் ஆகாயத்தில் மறைந்து விட்டால் அப்போது இவ்வுடலில் ஆடிக் கொண்டிருந்த உயிரும் இல்லை. அதனை மேய்த்துக் கொண்டிருந்த ஈசனும் இல்லை என்றாகி

தம் மனைவி மக்களோ, சொந்த பந்தங்களோ, யாரும் இல்லாது போய்விடும்.

ஆகவே இவ்வுடம்பில் உயிர் இருக்கும் பொழுதே இறைவனை அறிந்து தியானம் செய்யுங்கள்.

பிறவிப் பெருங்கடலை கடந்து கரை சேரலாம்.🙏🙏🙏
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 80*
ravi said…
भवजलधिगतानां द्वन्द्ववाताहतानां सुतदुहितृकलत्रत्राणभारार्दितानाम् ।

विषमविषयतोये मज्जतामप्लवानां भवतु शरणमेको विष्णुपोतो नराणाम् ॥ १४ ॥

ப⁴வஜலதி⁴க³தாநாம் த்³வந்த்³வவாதாஹதாநாம்

ஸுதது³ஹித்ருʼகலத்ர த்ராணபா⁴ரார்தி³தாநாம் ।

விஷமவிஷயதோயே மஜ்ஜதாமப்லவாநாம்

ப⁴வது சரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் ॥ 14 ॥
ravi said…
இங்க பாகவதத்துல இருந்து அழகான ஒரு quotation கொடுத்திருக்கார்.

“ *த்வயா ஹி குப்தா: விசரந்தி நிர்பயா:விநாயகாநீகபமூர்தஸு ப்ரபோ”* ன்னு சொல்றார்.

பகவானை அடைந்தவர்கள் அவனால் நாற்புறமும் ரக்ஷிக்கப்பட்டவர்களாய் இடையூறுகளின் தலைகளை மிதித்துக் கொண்டு நிர்பயமாக எங்கும் சஞ்சரிப்பார்கள், அப்படீன்னு சுகஸ்வாமி பாகவதத்துல சொல்றார். 🦜🦜🦜
ravi said…
பேனா 🖊️🖊️🖊️

I have many *pen* friends .

Asked them about the pen to be erected in the middle of *sea* .

They don't *see* anything good in this .

Their views are consolidated as below :

அன்று கம்பன் பிடித்தான் கலம் (कलम) கவிதைகள் களம் கண்டன

காளி தாசன் கொண்டான் கலம் (कलम) வார்த்தைகள் கொட்டியே பூமி இது புண்ணியம் கொண்டது ..

பாரதி பிடித்தான் கலம் (कलम)... பாரத போர் கண்டது சுதந்திரம் அதை

பாவேந்தன் பிடித்தான் கலம் (कलम).. மூவேந்தர் வந்தே தொழுதனர்..

கண்ணதாசன் கையில் கலம் (कलम).. கற்பனைகள் காவேரியாய் பாய்ந்தன ..

இன்னும் எவ்வளவோ சாதித்தோர் கையில் கலம் (कलम) ..

காலம் அதில் வண்ண கோலம் போட்டதே ...

கடல் நடுவில் கலம் (कलम) என்றே சொல்லினர் பலர் ...

காட்டிய கடல் எங்கும் பெண்கள் சிந்திய கண்ணீர் ...

உப்புக்கு குறைவில்லை ...

ஒரு துப்புக்கும் தரம் இல்லாதவனின் கலம் (कलम)

கூவத்தில் மை எடுத்து கோபாலபுரத்தில் முனை தீட்டி கொட்டிய வார்த்தைகள்

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலாவை தீண்டும் இன்பம் கிடைப்பதில்லை ..

சிதைக்குள் கை வைத்தே தேடும் கருகிய எலும்புகளை

ஊழலுக்கு நினைவு சின்னம் கேட்டதில்லை இதுவரை ... வைத்ததில்லை எவரும் ...

சாத்தான் ஓதும் வேதம் அதில் கிடைக்குமோ திருவாசகமும் திருவாய் மொழியும் 😰😰😰
ravi said…
அபிராமிபட்டர் அருளிய திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம்

பங்கயத் தாளும் ஒருநான்கு தோளும் படாமுகமும்
திங்களின் கோடும் வளர்மோ தகத்துடன் செங்கையிலே
அங்குச பாசமு மாகிவந்(து) என்றனை ஆண்டருள்வாய்;
வெங்கய மே!கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 1.

உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒருதொழிலைப்
பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும்நின் பாதத்திலே
நண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ?
விண்ணும் புகழ்கட வூர்வாழும் கள்ள விநாயகனே! 2.
ravi said…
யாதொன்றை யாகிலும் எண்ணிய போ(து) உன் இணைக்கமல்
பாதம் பரவிய பேர்கட் கலாது பலித்திடுமோ?
பேதம் தெரிந்த மறையோர் தமது பெருச்தெருவில்
வேதம் பயில்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 3.

அரனென் பவனையும் அம்புயத் தோனையும் ஆழிசங்கு
கரனென் பவனையுங் கைதொழ வேண்டி உன் கால்தொழுவார்
இரவும் பகலும் இயலிசை நாடக மென்னும் நன்னூல்
விரவுந் தமிழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 4.
ravi said…
துதியேன் எனினும் தொழுகேன் எனினும் தொழுபவர்தமை
மதியேன் எனினும் வணங்கேன் எனினும் வலியவந்து
கதியே தரும்வழி காட்டிடுவாய்; நின் கருணையினால்
விதியே புகழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 5.

நாக ந்துரகம் பலபணி அடை நவநிதிகள்
பாகஞ்சு மென்மொழியாள் போகமும் உன்றன் பாதமதில்
மோகந் திகழப் பணிந்தோர்க்(கு) அலாமல் முயன்றிடுமோ?
மேகம் பயில்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 6.
ravi said…
இளங்குஞ் சரச்செழுங் கன்றே! எனச்சொலி ஏத்திநின்றாய்
உளங்கசிந் தங்கையால் குட்டிக்கொண் டோர்க்கோர் குறையுமுண்டோ?
வளங்கொண்ட மூவர் தமைமறித் தேதமிழ் மாலைகொண்டு
விளங்கும் புகழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 7

தண்டாயுதத்தையும் சூலாயுதத்தையும் தாங்கியென்னைக்
கண்டாவிகொள்ள நான் வரும் வேளையில் காத்திடுவாய்
வண்டாரவாரஞ்செய் மாமலர்ச்சோலை வளப்பமுடன்
விண்தாவிய கடவூர் வாழும் கள்ள விநாயகனே 8
ravi said…
மூவரும் தங்கள் தொழிலே புரிந்திட முந்திமுந்தித்
தாவரும் நெற்றியில் தாக்கியுன் நாமத்தைச் சாற்றிடுவார்;
தேவரும் போற்றிய தேவே! உனையன்றித் தெய்வமுண்டோ?
மேவருஞ் சீர்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 9.

மைப்பொரு வாரண மாமுக மீதினில் வாய்ந்ததுதிக்
கைப்பொரு ளே! என்று கைதொழு வோர்குன் கருணைவைப்பாய்;
பொய்ப்பணி யோஅறி யாதமு தீசன் புகழுமெங்கள்
மெய்ப்பொரு ளே!கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 10.
ravi said…
திருக்கடவூரில் விநாயகர் கள்ள வாரண விநாயகர் என்ற பெயரில் அருள்புரிகிறார். ஒருமுறை விநாயகரை இந்திராதி தேவர்கள் வணங்க மறந்தனர். இதனால் அமிர்த கலசத்தை அவர் மறைத்து வைத்தார்.

அமிர்தம் கிடைக்காத தேவர்கள் விநாயகரை மறந்ததால் வந்த வினை இது என்பதனைப் புரிந்து விநாயகரை வணங்கி மீண்டும் அமிர்தத்தைப் பெற்றனர். இந்நிகழ்ச்சி நடந்த இடம் அபிராமி, அமிர்தக்கடேஸ்வரர் அருள்புரியும் திருக்கடவூர் ஆகும்.

“இவர் கள்ள விநாயகர். அமுதக் குடத்தை மறைத்து வைத்துபோல் அந்தாதியை மறைந்து விட்டால் என்ன செய்வது? அபிராமியைத் தொழுது அருள்பெற்ற அபிராமி பட்டர் இந்த விநாயகரை வணங்கிப் பாடிய திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம் இவரது சிறப்பினைக் கூறும். அமிர்தத்தை மறைத்ததால் இவர் கள்ள வாரண விநாயகரானார். அபிராமிப் பட்டர் அபிராமி அந்தாதியில் காப்புச் செய்யுளில் இவரைப் போற்றி வணங்குகிறார்.
ravi said…
ஈசனின் சந்நிதிக்கு வலதுபுறத்தில் நந்திக்கு அருகேயுள்ள வெளிப்பிரகாரத்தில் கையில் அமுத கலசத்தை ஏந்தியபடி அருள்புரிறார். இவரை வழிபட நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தித்தை வழங்கி சுக வாழ்வினைத் தருவார்.
ravi said…
🌹🌺 'Manna....you don't give rice immediately, give milk payasam...' Krishna - a simple story to explain 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹Once upon a time Lord Krishna appeared in the form of a sage before the king who was suffering from Ambalapuja. “Can anyone in this country beat me at chess? He challenged that.

🌺 As the king was very interested in chess, the king gladly accepted the challenge.

🌺 The king said to the sage, "I will win the challenge, and if you win, you will decide what you want as a gift." Sage said, “Sages like me need only rice.

🌺 But you have to give rice in the way I say. In the first phase, 1 rice, in the second phase, 2 rice, in the third phase, 4 rice, and in the fourth phase, 16 rice.

🌺 The sage refused to ask for anything else, saying that the king, in such a big kingdom, you are asking for just rice, ask for something else.

🌺 Although the king was saddened by the request, he started dancing happily saying that it was rice.

🌺The chess game started, Kannan's game, the king lost. As said, it was time to give the gift to the sage. The king realized his mistake shortly after he started putting the rice as the sage told him

🌺 Realized the true request of the sage. When the 21st phase comes, the amount of rice increases to 10 lakhs (million). At the 40th stage a million became a million.

🌺 In this way, it continued to grow as a geometric progression. All the rice and paddy in the storehouse was exhausted and the paddy and rice in the neighboring kingdoms were dumped. Now, the king felt unable to fulfill the sage's request.

🌺 18.446.744.073.709.551.615 trillion tons of rice was required to fill the 64 grid chessboard ((2 ^ 64) – 1). The king was disturbed. I don't know what to do.

🌺 Seeing the king's embarrassment, the sage appeared before the king in the form of Krishna. Manna.... He said that you should not give the rice immediately, till the debt is cleared, make milk payasam made of rice to the devotees who come to Ambalappuzha Krishna temple.

🌺 The king also got rid of his pride and gave all his properties to the temple.

🌺Even today in the Ambalappuzha Krishna Temple, milk payasam made of rice is offered to Krishna and is given as prasadam to the devotees who come.

🌺 Next to Guruvayur, Ambalapuzha Krishna Temple is getting fame.🌹🌺 -------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
Lakshmi balaraman said…
உன் கையில் கலம்
எங்கள் சக்தி groups ல்
பக்தியை வளர்த்தது.
ravi said…
ADVANCE: 27/07/2022 Wednesday 3.00pm Grp.B Bhagavatham 1-8 (1-6) Sloka
Total points
5/5


ravi said…

1. குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு பாண்டவர்கள் ஏன் திரௌபதியுடன் கங்கைக்குச் சென்றார்கள்? / Why did the Pandavas go to the Ganges with Draupadī after the Kurukshetra war?
*
1/1
a.தேவர்களுக்கு கங்கைக் கரையில் பூஜை செய்ய /to offer puja to the demigods on the banks of Ganges
b. போருக்குப் பிறகு ஓய்வெடுக்க / to relax after the war
c. இறந்த உறவினர்களுக்கு தண்ணீர் வழங்க / to deliver water to the dead relatives

d. மேலே உள்ள எதுவும் இல்லை/ None of the above
ravi said…
Feedback
FB: SB 1.8.1 சூத கோஸ்வாமி கூறினார்: அதன்பிறகு, பாண்டவர்கள், இறந்த உறவினர்களுக்கு தண்ணீரை வழங்க விரும்பி, திரௌபதியுடன் கங்கைக்குச் சென்றனர். பெண்கள் முன்னால் நடந்தார்கள்.

Sūta Gosvāmī said: Thereafter the Pāṇḍavas, desiring to deliver water to the dead relatives who had desired it, went to the Ganges with Draupadī. The ladies walked in front.
ravi said…
2. இறந்தவர்களுக்காக பாண்டவர்கள் கடைப்பிடித்த சடங்குகள் என்ன? / What are the rituals followed by the Pandavas for the departed souls?
*
1/1
a. அவர்களின் உடல்களை எரித்து மற்றும் விளக்கு ஏற்றினர்/ Burnt their bodies and lighted lamps
b. மலர்களைச் சமர்ப்பித்து உடலை கங்கையில் விட்டுவிட்டனர் / Offered flowers and threw their bodies in the Ganges
c. அவர்கள் கோபமடைந்ததால் எதுவும் செய்யப்படவில்லை/ Nothing was performed because they were angry
d. நீர் வழங்கி, வருத்தம் கொண்டு , புனித கங்கையில் நீராடினார் / Offered water, lamented and bathed in holy Ganges
ravi said…
Feedback
FB: SB 1.8.1. சூத கோஸ்வாமி கூறினார்: அதன்பிறகு, பாண்டவர்கள், இறந்த உறவினர்களுக்கு தண்ணீரை வழங்க விரும்பி, திரௌபதியுடன் கங்கைக்குச் சென்றனர். பெண்கள் முன்னால் நடந்தார்கள்.

SB 1.8.2 அவர்களைப் நினைத்து வருந்தி, போதுமான அளவு கங்கை நீரை அளித்து, கங்கையில் ஸ்நானம் செய்தார்கள், அதன் நீர் இறைவனின் பாதத் தாமரைகளின் தூசியுடன் கலந்ததால் புனிதமானது.

SB 1.8.1. Sūta Gosvāmī said: Thereafter the Pāṇḍavas, desiring to deliver water to the dead relatives who had desired it, went to the Ganges with Draupadī. The ladies walked in front.

SB 1.8.2. Having lamented over them and sufficiently offered Ganges water, they bathed in the Ganges, whose water is sanctified due to being mixed with the
ravi said…
3. உயிர்வாழியின் மீதான இயற்கையின் கடுமையான விதிகள் யாரால் செயல் படுத்தப்படுகிறது?/ Who rules over the stringent laws of nature on living entities?
*
1/1
a. முழுமுதற்கடவுள் / Supreme personality of Godhead

b. இந்திரர் / Indra
c. பிரம்மா / Brahma
d. உயிர்வாழி / Living entity
ravi said…
Feedback
FB: SB 1.8.4 சர்வவல்லவரின் கடுமையான சட்டங்களையும், உயிரினங்கள் மீதான அவர்களின் எதிர்வினைகளையும் மேற்கோள் காட்டி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் முனிகளும் அதிர்ச்சியடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்தத் தொடங்கினர்

Citing the stringent laws of the Almighty and their reactions upon living beings, Lord Śrī Kṛṣṇa and the munis began to pacify those who were shocked and affected.
ravi said…
4. யுதிஷ்டிர மஹாராஜ், இந்திரனைப் போல பெரும் புகழ் பெற எத்தனை அஸ்வமேத யாகங்களை, ஸ்ரீ கிருஷ்ணரின் வழிகாட்டுதலின்படி செய்தார்? / How many Aswamedha Yajnas did Yudhishthira Maharaj do, under the directions of Bhagavan Krishna, to become as famous as Indra?
*
1/1
a. 1
b. 3

c. 50
d. 1000
ravi said…
Feedback
FB: SB 1.8.6 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மூன்று அஸ்வமேத யாகங்களை [குதிரை யாகங்களை] மஹாராஜா யுதிஷ்டிரரால் நடத்தச் செய்தார், இதனால் நூறு யாகங்களைச் செய்த இந்திரனைப் போலவே அவரது நற்பண்புகள் எல்லாத் திசைகளிலும் போற்றப்பட்டன.

Lord Śrī Kṛṣṇa caused three well-performed aśvamedha-yajñas [horse sacrifices] to be conducted by Mahārāja Yudhiṣṭhira and thus caused his virtuous fame to be glorified in all directions, like that of Indra, who had performed one hundred such sacrifices.
ravi said…
5. பௌதீக உலகில் தவிர்க்க முடியாதவை யாவை?/ What are the insoluble factors of material?
*
1/1
a. சாப்பிடுவது, உறங்குவது, நடப்பது மற்றும் உட்காருவது / eating, sleeping, walking and sitting
b. பார்த்தல், முகர்தல், சுவைத்தல் மற்றும் உணருதல்/ Seeing, smelling, tasting and feeling
c. பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய்/ birth, death, old age and disease

d. மேலே உள்ள எதுவும் இல்லை/ None of the above
ravi said…
Feedback
FB: SB 1.8.4 purport
இது, ஜட வாழ்வின் தவிர்க்க முடியாத காரணிகளான பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் போன்ற வடிவங்களில் வெளிப்படும் கடுமையான பௌதீக விதிகளின் எதிர்வினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைதிப்படுத்தும் நடவடிக்கைகளின் சுருக்கம். போரில் பாதிக்கப்பட்டவர்கள், அதாவது குரு வம்ச குடும்ப உறுப்பினர்கள், மரணப் பிரச்சனைகளை நினைத்து வருத்தம் கொண்டிருந்தனர், இறைவன் அவர்களை ஞானம் அடிப்படையில் சமாதானப்படுத்தினார்.

That is a summary of the pacifying measures for those affected by the reaction of stringent material laws, exhibited in the forms of birth, death, old age and disease, which are insoluble factors of material existence. The victims of war, namely the family members of the Kurus, were lamenting the problems of death, and the Lord pacified them on the basis of knowledge.
ravi said…
Feedback
FB: SB 1.8.4 purport
இது, ஜட வாழ்வின் தவிர்க்க முடியாத காரணிகளான பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய் போன்ற வடிவங்களில் வெளிப்படும் கடுமையான பௌதீக விதிகளின் எதிர்வினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைதிப்படுத்தும் நடவடிக்கைகளின் சுருக்கம். போரில் பாதிக்கப்பட்டவர்கள், அதாவது குரு வம்ச குடும்ப உறுப்பினர்கள், மரணப் பிரச்சனைகளை நினைத்து வருத்தம் கொண்டிருந்தனர், இறைவன் அவர்களை ஞானம் அடிப்படையில் சமாதானப்படுத்தினார்.

That is a summary of the pacifying measures for those affected by the reaction of stringent material laws, exhibited in the forms of birth, death, old age and disease, which are insoluble factors of material existence. The victims of war, namely the family members of the Kurus, were lamenting the problems of death, and the Lord pacified them on the basis of knowledge.
ravi said…
பாண்டவர்களின் துக்கத்திலிருந்து அவர்களை சமாதானப்படுத்தியது யார், எப்படி? / Who pacified Pandavas over their grief and how?
பகவான் கிருஷ்ணரும் முனிவர்களும் ... புத்திசாலியான துரியோதனன் தன் சூழ்ச்சியால் யுதிஷ்டிரன் கொண்ட ராஜ்யத்தை பறித்துக்கொள்கிறான். யுதிஷ்டிரருக்கு பகைவர்கள் என்றும் யாரும் இல்லை .. அவனோடு சேர்ந்த அரசர்கள் வாழும் நாட்கள் குறைந்தது திரௌபதிக்கு அவர்கள் செய்த பாவங்களே
ravi said…
Feedback
SB 1.8.3 அங்கே குருக்களின் அரசன் மஹாராஜா யுதிஷ்டிரரும், அவரது இளைய சகோதரர்களும், திருதராஷ்டிரர், காந்தாரி, குந்தி மற்றும் திரௌபதியும் சோகத்தில் மூழ்கி அமர்ந்திருந்தார். பகவான் கிருஷ்ணரும் அங்கே இருந்தார்.

SB 1.8.4 சர்வவல்லவரின் கடுமையான சட்டங்களையும், உயிரினங்கள் மீதான அவர்களின் எதிர்வினைகளையும் மேற்கோள் காட்டி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் முனிகளும் அதிர்ச்சியடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்தத் தொடங்கினர்.

FB: SB 1.8.3 There sat the King of the Kurus, Mahārāja Yudhiṣṭhira, along with his younger brothers and Dhṛtarāṣṭra, Gāndhārī, Kuntī and Draupadī, all overwhelmed with grief. Lord Kṛṣṇa was also there.

SB 1.8.4. Citing the stringent laws of the Almighty and their reactions upon living beings, Lord Śrī Kṛṣṇa and the munis began to pacify those who were shocked and affected.
ravi said…
யுதிஷ்டிரனின் பெருமையை பகவான் கிருஷ்ணர் எவ்வாறு நிலைநாட்டினார்?/ How did Bhagvan Krishna establish Yudhistra’s glory?
3 அஸ்வமேத யஃஞ்சம் செய்ய வைத்து 100 அஸ்வமேத யஃஞ்சம் செய்த இந்திரனைப் போல் யுதிஸ்டரனின் புகழை பரவ ஒரு கருவியாக பகவான் கிருஷ்ணர் இருந்தார்
ravi said…
Feedback
FB: SB 1.8.5 புத்திசாலி துரியோதனனும் அவனது குழுவினரும் தந்திரமாக எதிரி இல்லாத யுதிஷ்டிரனின் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றினர். இறைவனின் அருளால், மீட்பு நிறைவேற்றப்பட்டது, துரியோதனனுடன் இணைந்த நேர்மையற்ற மன்னர்கள் அவரால் கொல்லப்பட்டனர். மற்றவர்களும் இறந்தனர், ராணி திரௌபதியின் தலைமுடியைக் கடுமையாகக் கைப்பற்றியதால் அவர்களின் ஆயுட்காலம் குறைந்துவிட்டது.

SB 1.8.6 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மூன்று அஸ்வமேத யாகங்களை [குதிரை யாகங்களை] மஹாராஜா யுதிஷ்டிரரால் நடத்தச் செய்தார், இதனால் நூறு யாகங்களைச் செய்த இந்திரனைப் போலவே அவரது நற்பண்புகள் எல்லாத் திசைகளிலும் போற்றப்பட்டன.

SB 1.8.5 The clever Duryodhana and his party cunningly usurped the kingdom of Yudhiṣṭhira, who had no enemy. By the grace of the Lord, the recovery was executed, and the unscrupulous kings who joined with Duryodhana were killed by Him. Others also died, their duration of life having decreased for their rough handling of the hair of Queen Draupadī.

SB 1.8.6 Lord Śrī Kṛṣṇa caused three well-performed aśvamedha-yajñas [horse sacrifices] to be conducted by Mahārāja Yudhiṣṭhira and thus caused his virtuous fame to be glorified in all directions, like that of Indra, who had performed one hundred such sacrifices.
ravi said…
https://chat.whatsapp.com/KqC06JZZKO4EEMBqXvrB59

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் பற்றிய பதிவுகள் :*

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்னும் ஊரில் அருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நாகங்களுக்காக அமைக்கப்பட்ட ஆலயங்களில் இது மிகவும் பிரசித்தி பெற்றது.

மூலஸ்தானத்தில் நாகராஜர், ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். நாகராஜர் சன்னதி எதிரிலுள்ள தூணில் நாககன்னி சிற்ப வடிவில் காட்சியளிக்கிறாள்.

இக்கோயிலில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்ற பெண் நாகமும் துவாரபாலகர்களாக உள்ளனர். நாகராஜாவிற்காக அமைந்த தலம் என்பதால், நாகங்களையே துவாரபாலகர்களாக அமைத்துள்ளனர்.

மூலஸ்தானத்தில் நாகராஜர் இருக்குமிடம் மணல் திட்டாக இருக்கிறது. இது வயல் இருந்த இடம் என்பதால், இவ்விடத்தில் நீர் ஊறிக் கொண்டிருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணலையே பிரசாதமாக தருகிறார்கள்.

நாகராஜர் சன்னதிக்கு வலப்புறம் அனந்தகிருஷ்ணர், காசி விஸ்வநாதர், கன்னிமூல கணபதி ஆகியோர் தனிச்சன்னதியில் காட்சி தருகின்றனர்.

பிரகாரத்தில் காவல் தெய்வமான நாகமணி பூதத்தான், சாஸ்தா, பாலமுருகன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.

இக்கோயிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்தகிருஷ்ணருக்கே கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. தை மாதத்தில் பிரம்மோற்சவமும் இவருக்கே நடைபெறுகிறது.

பெருமாள் கோயில் கொடிமரங்களின் உச்சியில் கருடனை வடிவமைப்பர். இங்குள்ள அனந்தகிருஷ்ணர் சன்னதி கொடிமரத்தில் கருடனுக்கு பதிலாக ஆமையை வடித்துள்ளனர். பாம்பும், கருடனும் விரோதிகள் என்பதால் கருடனை இங்குள்ள கொடிமரத்தில் வடிக்கவில்லை.

இக்கோயில் வாசலை 'மகாமேரு மாளிகை" என்று அழைக்கிறார்கள். இக்கோயில் வளாகத்தில் துர்க்கை சன்னதி அமைந்துள்ளது. இச்சிலை இங்குள்ள நாகார் தீர்த்தத்தில் கிடைத்ததால் இவளை 'தீர்த்த துர்க்கை" என்று அழைக்கிறார்கள். வயது முதிர்ந்த பெண்களை 'அம்மச்சி" என்று அழைப்பது போல இந்த துர்க்கையையும், தங்களுக்கு வழிகாட்டும் பெரியவளாக கருதி 'அம்மச்சி துர்க்கை" என்று அழைக்கிறார்கள்.

தை மாதத்தில் பிரம்மோற்சவம், ஆவணி ஞாயிறு, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நாக தோஷம் மற்றும் ராகு, கேது தோஷ நிவர்த்திக்காக இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

இக்கோவிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் நாகராஜருக்கு பால் பாயாசம் படைத்தும், பாலபிஷேகம் செய்தும், கோயில் வளாகத்தில் நாக பிரதிஷ்டை செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*கந்தர் அலங்காரம் 23* 🐓🦚🙏

*அலங்காரம்-05:*
*முருகன் சூரனைக் கொன்றது சரியா? தவறா??*
ravi said…
ஓர ஒட்டார் ஒன்றை! உன்ன ஒட்டார்!

மலர் இட்டு உன் தாள்
சேர ஒட்டார் ஐவர்!

செய்வது என் யான்? சென்று தேவர் உய்ய,
சோர நிட்டூரனை, சூரனை, கார் உடல் சோரி கக்க,

கூர கட்டாரி இட்டு, ஓர் இமைப் போதினில் கொன்றவனே.
ravi said…
*ஓர் இமைப் போதினில் கொன்றவனே* =

சூரனையும் அவன் சுற்றத்தையும் முருகப் பெருமான் அழித்தார்!

இமைப் பொழுதில் கொன்றார்!

ஆனால் இதைக் கொலையாகக் கருத மாட்டார்கள் முருக அன்பர்கள்! ஏன்? ஏன்? ஏன்?

*மும்மலம்* = மூன்று அழுக்குகள் = ஆணவம், கன்மம், மாயை!

*சூரன்* = ஆணவம்;
சிங்கமுகன் = கன்மம்;
தாரகாசுரன் = மாயை!

இந்த மூன்றும் அழிந்தால், பசு பதியிடம் சேரும்!

உயிர் இறைவனிடம் சேரும்!

அப்படிச் சேர்பித்தான் முருகப் பெருமான்!

சூரனை வதைத்த பின்னரும், மயிலும் சேவலுமாய்ச் சேர்த்துக் கொண்டான்!

*ஆக, ஒட்டாரை நம் வழிக்குக் கொண்டு வரும் வழி என்ன? =*

அழிப்பது இல்லை! ஆட்கொள்ளுதல்!

அதே போல நம் ஐம்புலப் பகைவர்களையும் அழித்து விடாமல், ஆட்கொள்ள வேண்டும்!

ஐம்புலனை அழித்தி விட்டால் இறை நுகர்ச்சி ஏது?

எனவே ஐம்புலன்களை நல்லது நோக்கித் திருப்பி விட வேண்டும்!

இந்திரிய நிக்ரஹம் என்பார்கள்!

நிக்ரஹம் என்றால் அழித்தல் என்று பொருளில்லை!

*நி+கிரஹம்* = இல்லை+இடம்!

இடங்கொடுக்காமல் இருப்பது!

துஷ்ட நிக்ரஹமும் அதே தான்!

துட்டர்களுக்கு இடம் கொடாமல் அவர்களை அடக்கி ஆள்வது!

பெரிய பெரிய சூரனை எல்லாம் அடக்கியவன் நீ!

என் ஐம்புலன்களையும் அடக்கக் கூடாதா முருகா? - என்று ஏக்கமாகக் கேட்கிறார் அருணகிரியார்!🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 302*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः

कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।

सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्

पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:

கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।

ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥

சிவானந்தலஹரி 36

🪷🪷🪷
ravi said…
அம்பாளுடைய சரண கமலத்தை த்யானித்தால் மனத்துல அதிகமான சாந்தி ஏற்படுகிறது.

அதனால अतः भगवान् जगज्जननीरूपं यद् गृह्णाति तादृशरूपं हृदीकृत्वा तच्छरणारविन्दयोः दृढां भक्तिम् आबध्य चित्तस्य प्रथमं शोधनं कार्यम् |

‘அத: பகவான் ஜகஜ்ஜனனி ரூபம் யத் க்ருஹனாதி தாத்ருஷ்ரூபம் ஹ்ருதீக்ருத்வா தச்சரணாரவிந்தையோ: த்ருடாம் பக்திம் ஆபத்ய சித்தஸ்ய பிரதமம் ஷோதனம் கார்யம்’ –

அதனால அம்பாளா லோகமாதாவாக, காமாக்ஷியாக, பகவான் வரும்போது அந்த ரூபத்தை மனசுல நிறுத்தி, அவருடைய சரணாரவிந்தங்களில் பக்தி பண்ணுவதுதான் மனசை சுத்தப்படுத்திக்கறதுக்கு முக்கியமான வழி.

शुद्धे चित्ते आत्मस्वरूपं प्रकाशते सम्यक्, वस्तुयाथात्म्यं प्रकाशते ‘ஷுத்தே சித்தே ஆத்மஸ்வரூபம் ப்ரகாஷதே ஸம்யக், வஸ்துயாதாத்ம்யம் ப்ரகாஷதே’ –

அப்படி சித்த சுத்தி ஏற்பட்டா, நம்மளுடைய மனசுல ஆத்ம ஸ்வரூபம், ஆத்ம ஞானம் வரும்🪷🪷🪷
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 299* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*77. தந்விநே நமஹ (Dhanviney namaha*)

ஈச்’வரோ விக்ரமீ *தன்வீ*
மேதாவீவிக்ரம: க்ரம: |

🪷🪷🪷
ravi said…
நீங்கள் பாதுகாப்பாக மரக்கிளைகளில் அமர்ந்துகொண்டு நான் போர் புரிவதை, விளையாட்டை ரசிப்பதுபோல ரசித்து ஆனந்தமடையுங்கள்.

இது மன்னர் சுக்ரீவர், இளவரசர் அங்கதர், இலங்கையின் வருங்கால மன்னரான விபீஷணர், என் இளவல் லக்ஷ்மணன் அனைவருக்கும் பொருந்தும்.

அனைவரும் பாதுகாப்பான இடத்துக்குச் சென்று அமர்ந்து கொள்ளுங்கள்!”

என்றான் ராமபிரான்.
வானரசேனை அனைத்தும் மரக்கிளைகளில் அமர்ந்து கொண்டன.
விபீஷணனும் லக்ஷ்மணனும் மரத்தின் அடியில் கைகட்டி நின்றுகொண்டு ராமன் போரிடுவதை ரசித்தார்கள்.🪷🪷🪷
ravi said…
🌹🌺 ' *சொல்லிக்கொண்டே போகலாம் நம் விட்டலன் லீலா வினோதத்தை….... - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹1. ஞானேஸ்வரருக்கு சுவற்றை தாங்கினான்
2. கபீர் தாஸர் வீட்டில் துணி நெய்தான்
3. ஜனாபாயுடன் மாவரைததான்

🌺4. ரோகி தாஸருக்காய் செருப்பு தைத்தான்
5. ஸாவத மாலிக்காய் மண் வெட்டி வைத்து தோட்ட வேலை செய்தான்
6. சோகா மேளர்க்காய் செத்த மாட்டை சுமந்தான்
7. நாம தேவருடன் போஜனம் செய்து அவர் எச்சிலை உண்டான்

🌺8. கோரகும்பருக்காய் மண் பாண்டம் செய்து சந்தையில் விற்றான்
9. தாமாஜிக்காய் சுல்தானிடம் பணம் கொடுத்து ரசீது பெற்றான்
10. கூர்ம தாஸருக்காய் காலால் நடந்து விரைந்து வந்து உதவினான்

🌺11. சேநாவிக்காய் சவரம் செய்தான்
12. மீராவிற்காக விஷம் அருந்தினான்
13. ராம தாஸருக்காய் மூட்டை நிறைய சொர்ணம் கொண்டு அரசனிடம் வந்து தராசு உயரும் வரை நிறைய கொடுத்தான்

🌺14. துளசி தாசருக்காய் வயலில் விதை தெளித்து கஷ்டபட்டான்
15. நார்ச்சி மேத்தாவின் புத்ரிக்கு விவாகம் செய்ய உதவினான்
16. நரஹரி சேநாருக்கு ஹரி ஹர பேதம் இல்லை என்று காண்பித்தான்

🌺17. ராக்கா கும்பருக்காய் நெருப்பில் இடபட்ட பூனை மை காத்தான்
18. துக்காராம் அபங்கத்தை தண்ணீரில் இருந்து மீட்டான்
19. சக்குபாய்க்காய் அடிமை வேலைசெய்தான்

🌺20. கோமா‌பாய்க்காய் பரிசல் காரன் ஆனான்
21. நீளோபாய்க்காய் சமையல் காரன் ஆனான்
22. திரிலோசனருக்காய் ஆபரண வேலை செய்தான்

🌺இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் நம் விட்டலன் லீலா வினோதத்தை….🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 'Let's go on telling the strangeness of our Vitalan Leela.... - A simple story to explain 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹 1. He supported the wall for Gnaneswara
2. Kabir Dasar weaves cloth at home
3. Map with Janabai

🌺 4. Rogi Dasarukai sewed sandals
5. Sawada Malikkai cut the soil and worked in the garden
6. Choka carried a dead cow on a laurel wreath
7. After eating with Nama Deva, he spit

🌺8. He made clay figurines of gourds and sold them in the market
9. Tamajikai gave money to Sultan and received a receipt
10. Kurma Dasarukai rushed on foot and came to help

🌺11. Senavikkai shaved
12. He drank poison for Meera
13. Rama came to the king with a bundle of dasarukai full of gold and gave so much till the balance was high.

🌺 14. Tulsi sprinkled seeds in the dasarukai field and suffered
15. Narchi helped Mehta's daughter get married
16. Narahari showed Senar that there was no Hari Hara Bedam

🌺 17. Raka Kumbarukai saved the cat from the fire
18. Tukaram rescued Abanga from the water
19. Sakubaikai worked as a slave

🌺 20. Gomabaikai Parisal became Karan
21. Neelobaikai became a cook
22. Trilosanarakai worked as an ornament

🌺 Let's go on saying the strangeness of our Vitalan Leela....🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*உலகம் நிறைந்தவனும் உலகை அளந்தவனும்*🙏

*உலகை அளந்தவன் சொன்ன கீதை 🪷🪷🪷*
ravi said…
ராமா

மூன்றடி மண் கேட்டேன் ..

மூவுலகை வென்றேன் ..

மூர்த்தி சிறிது எனினும் கோதை புகழும் நாயகன் ஆனேன் ...

ஓர் அடி வைத்தே என்னிலும் உச்சம் தொட்டாயே ராமா ..

உன் கீர்த்தி என் மூர்த்தியிலும் உயரம் பெற கண்டாய்

ஓர் அடி அந்த காலடி பட்டே கல்லும் கணிந்ததே ..

காரூண்யம் தனை காலடியிலும் வைத்துள்ளாயே ராமா .

உன் நாமம் போல் என் நாமம் உச்சம் தொட கண்டிலேன் ராமா

*வாமனரே* ...

கங்கை அவள் உங்கள் பாதம் தொட்டாள்

அரசன் கர்வம் அது மண்ணில் புதைந்து போனதே ...

மாசில்லா உங்கள் பாதங்கள் மகாபலியை இன்னும் வாழ வைக்கின்றதே ..

மறு பேச்சு உண்டோ இதற்கு ...

ஓர் அடி பக்தன் எடுத்து வைத்தால் ஈரடி வைக்கின்றீர் ..

ஈரடி வைத்தால் சீரடியில் வந்தே சிரிக்கின்றீர்

மூன்றடி வைத்தால் மூவுலகம் அரசாள தருகின்றீர் ...

உங்கள் பெருமை கொள்ள ராமன் நான் பல அவதாரம் எடுக்க வேண்டும்

*ராமா* ..

உன் நாமம் போல் சுவை எங்கும் காணேன் ...

அதன் அருள் போல் நான் ஏதும் செய்யேன் ...

சிரித்தான் ராமன்

சொன்னான் இதையே

காண்பீர் காஞ்சி தனில் ..

கருணா ரஸ ஸாகரம் ஒன்று பாற்கடலாய் பவனி வரும்

அங்கு காலடி பெருமை சேர்க்கும்

ஓரடியில் உண்மை சொல்லும் .

சொல்வதெல்லாம் ஈரடி குரளாகும்

மூன்றடி முப்புரையாள் புகழ் பாடும்

நாலடி இனிமை சேர்க்கும்

ஐந்தடியில் உயிர் வாழும்

ஆறடி கொண்ட பேர் ஆகும் ..

ஏழடி பெருமாளும் இவரே

எட்டடி தூரம் ஓடி வருபவனும் இவரே...

ஒன்பதடி கோணங்கள் நிறைபவரும் இவரே ..

பத்தடி அவதாரம் கொண்டவரும் இவரே

நம் ஓரடி மூன்றடி ஒன்றும் இல்லை இந்த காலடி வழி வந்த மகானுக்கே

உண்மை *ராமா* ..

ஓங்கி வளரட்டும் உன் நாமம் அவனுடன் கலவை ஆகியே 🙏
ravi said…
இந்த comparison மிகவும் அருமை...
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 305* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*8. பக்த அனுகிரஹம் (மந்த்ர ரூபம் நிறைவுற்றது.*

அடுத்து அம்பாளின் "பக்த அனுகிரஹ"த்தை வெளிப்படுத்தும் நாமங்கள்)

(112-131)

பவானீ;
பாவனா கம்யா; பவாரண்ய குடாரிகா; பத்ர ப்ரியா;
பத்ர மூர்த்தி;
பக்த சௌபாக்ய தாயினி;
பக்திப்ரியா; பக்திகம்யா; பக்திவஶ்யா; பயாபஹா;
ஶாம்பவீ; ஶாரதாராத்யா; ஶர்வாணி; ஶர்மதாயினி; ஶாங்கரீ;
ஸ்ரீகரீ;
சாத்வீ;
ஶரச்சந்திர நிபானனா; ஶாதோதரீ; ஶாந்திமதீ;🪷🪷🪷🪷🪷
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 306* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*82 யானையின் துதிக்கை போன்ற தொடை*

*ஜலஸ்தம்பம், இந்திரபதவிக்கொத்த பதவி*

கரீந்த்ராணாம் ஶுண்டான் கனககதலீ காண்டபடலீம்

உபாப்யாமுரூப்யா முபயமபி நிர்ஜித்ய பவதி

ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி கடினாப்யாம் கிரிஸுதே

விதிஜ்ஞே ஜானுப்யாம் விபுத கரிகும்ப த்வயமஸி 82
ravi said…
அம்பிகே!, உன்னுடைய தொடைகளிரண்டும் கஜராஜங்களது துதிக்கைகளையும், தங்க வாழை மர தண்டுகளையும் விஞ்சிய சோபையுடன் கூடியதாக இருக்கிறது.

உன்னுடைய முழங்கால்களில் இருக்கும் சில்லுகளோ மிகவும் உருட்சியாக, உனதுபதி பரமசிவனுக்கு நீ அடிக்கடி நமஸ்காரம் செய்வதால் மிகுந்த கடினமாகி, திக்கஜங்களைன் கும்பங்களைக் கூட ஜெயித்த பலத்துடன் விளங்குகின்றன.👍
ravi said…
அம்பிகை சகல சாஸ்த்ரார்த்தங்களையும் அறிந்தவளாதலால்

தனக்கு எவ்வளவு மஹிமை இருந்த போதிலும்,

மஹா பதிவிரதையாக, தன் புருஷனான பரமசிவனுக்குச் செய்யவேண்டிய மரியாதைகளில் கொஞ்சமும் குறைவில்லாமல் நடந்து கொள்கிறாள்,என்பதை ' *வித்ஜ்ஞே* ' என்ற சொல்லாலும், ' *பத்யு* : *ப்ரணதிகடினாப்யாம்* ' என்பதாகவும் அறியத் தருகிறார்.

' *விதிஜ்ஞே* ' என்பதற்கு வேதார்த்தங்களை அனுஷ்டிக்கிறவளென்றும் சொல்லலாம்🙏🙏🙏🙏🙏🪷🪷🪷
ரமேஷ் said…
ஈரடி..சீரடி..சுப்பர்..
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 81*
ravi said…
भवजलधिगतानां द्वन्द्ववाताहतानां सुतदुहितृकलत्रत्राणभारार्दितानाम् ।

विषमविषयतोये मज्जतामप्लवानां भवतु शरणमेको विष्णुपोतो नराणाम् ॥ १४ ॥

ப⁴வஜலதி⁴க³தாநாம் த்³வந்த்³வவாதாஹதாநாம்

ஸுதது³ஹித்ருʼகலத்ர த்ராணபா⁴ரார்தி³தாநாம் ।

விஷமவிஷயதோயே மஜ்ஜதாமப்லவாநாம்

ப⁴வது சரணமேகோ விஷ்ணுபோதோ நராணாம் ॥ 14 ॥
ravi said…
அந்த மாதிரி த்ருடமான விஷ்ணுங்கிற கப்பல் கிடைச்சுடுத்துன்னா நாம எதுக்கும் பயப்படாம சந்தோஷமா இந்த வாழ்க்கையை கடந்துடலாம்னு சொல்றார்.

இந்த என்னுடயதுங்கிற மமதை போகணும். நான் என்பது அஹங்காரம், அஹந்தா. என்னோடது என்பது மமதா.

இந்த மமதைங்கிற பிசாசு நம்மளை பிடிச்சுண்டிருக்கு. அதோட பிடியிலிருந்து கொஞ்சம் விட்டாக் கூட அந்த அளவுக்கு நமக்கு நிம்மதி.

அந்த பிசாசு எவ்ளோ பிடிச்சு நம்மள ஆட்டறதோ அவ்ளோ பாடுபடறோம்.

அதோட பிடி ஓரளவு குறைஞ்சுதுன்னாக் கூட அந்த அளவுக்கு நமக்கு வாழ்க்கையில நிம்மதி கிடைக்கும்🙏🙏🙏
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏


ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடிபீடாதீஸ்வரஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதிசங்கராச்சாரியார் சுவாமிகளின் அருள் வாக்குகள்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

"சரீர சாதனை, ஆத்ம சாதனை இரண்டும் வேண்டும்."

ஜென்மபூரா ஒருத்தன் ஏதோ மாடு மாதிரி தேகத்தால் அலைந்து, திரிந்து, கையையும் காலையும் ஆட்டிக் கொண்டிருந்து விட்டு, சாந்தமாக, சௌக்கியமாக, ஈஸ்வர பரமான, ஆத்மார்த்தமான விஷயங்களை தெரிந்து கொள்ளாமலும், பக்தி தியானம் எதுவுமே இல்லாமலும், ஜீவனை விட்டான் என்றால், அவன் மனுஷ ஜென்மம் எடுத்தே பிரயோஜனம் இல்லை தான்.
ravi said…
ஆனால் செய்ய வேண்டிய நிலையில் சரீர உழைப்பு பண்ணியே ஆக வேண்டும். பொதுவாக இப்போது ஜனங்கள் இருக்கிற லோகாயதமான ஸ்திதியில் அவர்களில் பெரும்பாலோர் நீண்ட காலத்திற்கு சரீரத்தால் உழைத்து, உழைத்தே சித்தசுத்தி பெற வேண்டியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

மூளையால் மட்டும் வேலை செய்கிறவனுக்கும் பேனா வேலைக்காரனுக்கும் சரீரத்தால் உழைப்பவனை போல அசந்து தூக்கம் வருகிறதோ? தூக்கம் வராவிட்டால் மனசு எங்கேயாவது திரிந்து கொண்டே அழுக்கை சேர்த்துக் கொள்கிறது. நன்றாக உழைத்து விட்டு வந்தவன் இப்படி எல்லாம் கெட்ட சிந்தனைகளில் போகாமல்நன்றாகதூங்குகிறான். அதனால் தேக பலம், புத்தி பலம் இரண்டும் உண்டாகிறது. வேகத்தையும் புத்தியையும் கனெக்ட் பண்ணுகிற நெர்வஸ் சிஸ்டத்தை அவன் பாழ் பண்ணிக் கொள்கிறதில்லை.
ravi said…
சரீரஉழைப்பில்தான்ஆரம்பித்தாக வேண்டி இருக்கிறது. ஆனால் சரீரத்தோடு நின்று விடாமல்
அந்த ஆரம்ப நாளிலிருந்தே ஈஸ்வர பரமான விஷயங்களிலும் டச் வைத்துக் கொண்டே ஆக வேண்டும். போகப் போக டச் பண்ணினால் மட்டும் போதாது. டச் பண்ணுவதை கையில் பிடித்து வைத்துக் கொள்ளவும் பிரயத்தனப்பட வேண்டும்.

அத்தியாத் மே சமாச்சாரங்களில் அதிகம் ஈடுபட வேண்டும். ஆனால் இப்போதும் இவன் ஆத்மா அபிவிருத்தியில் உச்சாணி கொம்புக்கே போய்விட்டாலும் அப்போதும் கூட சரீரப்பணியில் இவன் டச் அடியோடு விட்டு விடக்கூடாது. ஜீவன் முக்தன் என்று என்னவோ சொல்கிறார்களே நமக்கெல்லாம் அப்படிப்பட்ட ஸ்திதிபுரிவதுகூடகஷ்டமாயி
ருக்கிறது. அந்த ஸ்திதி வந்து நமக்கென்று மனசில்லை, எண்ணம் இல்லை, பிளான் இல்லை என்று ஆகிற மட்டும் நாமாக உடற்தொண்டை அடியோடு விட்டோம் என்று இருக்கவே கூடாது.
ravi said…
அதனால்தான் பெரியோர்கள்" ஒரு கையால் ஈஸ்வரனை பிடித்துக் கொண்டே இன்னொரு கையால் லோக காரியங்களை பண்ணு" என்கிறார்கள்.

முதலில் சரீரக வேலை ஜாஸ்தி, ஆத்மார்த்த சிந்தனை குறைச்சல்; பிறகு இரண்டும் சமம்; அப்புறம் ஆத்மார்த்தம் ஜாஸ்தி, சரீர வேலை குறைச்சல் என்று அதாவது எல்லா ஸ்டேஜிலும் இரண்டும் எந்த ஒன்றுமே இல்லை என்று இல்லாமல் இருக்க வேண்டும். இதற்கும் அப்புறம் ஈஸ்வரனே நம்மை நடத்தி வைப்பது தெரியும் .அந்த ஸ்திதியில் பரம ஞானிகளாக இருந்து கொண்டே ஓயாமல் ஒழியாமல் காரியம் பண்ணினவர்களும் உண்டு.

லோகமே தெரியாமல் கல்லு மாதிரி கிடந்தவர்களும் உண்டு. அங்கே போகிற மட்டும் மெய் வருத்தி பரோபகாரமாக எல்லோரும் உழைத்த ஆக வேண்டும். பலஹீனர்கள்
தவிர மற்ற எல்லோரும்
சரீர கைங்கரியம் நிறைய பண்ணத்தான் வேண்டும். பலஹீனர்கள் இதற்கு ஈடாக
மற்ற தினுசுகளில் பொதுப்பணி செய்ய வேண்டும்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🌹🌹🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏
ravi said…
*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீ மஹாலக்ஷ்மி குபேர அஞ்சனம் பற்றிய பதிவுகள் :*

ஸ்ரீ மஹாலக்ஷ்மி குபேர அஞ்சனம் என்பது இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவதற்கும் மற்றும் தங்கள் வீடு அல்லது தொழில் துறைகளில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை வரவழைப்பதற்கும் அகத்திய முனிவரின் வாக்குப்படி தயாரிக்கப்பட்ட தெய்வீக பொருள் ஆகும்.

இதன் மூலம் வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டவும், தங்கு தடையின்றி பணப்புழக்கத்தை அதிகப்படுத்தவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் மற்றும் மஹாலக்ஷ்மியின் அருள் கடாட்சத்தால் இருண்ட வீட்டிற்கு ஒளி ஏற்றவும் முடியும்.

இந்த அஞ்சனமானது அகத்திய முனிவரின் அஞ்சன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முற்றிலும் தாந்திரீக முறைப்படி முறையாக காப்பு கட்டி தகுந்த குருமார்களினால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

தயாரிக்கப்பட்ட இந்த அஞ்சனமானது முறையாக ஒரு மண்டல காலம் பூஜிக்கப்பட்டு உருவேற்றப்படுகிறது.

முதலில் மஹா கணபதி பூஜையில் தொடங்கி மஹா சண்டிகா யாகம், சத்ரு சம்ஹார யாகம், குபேர லட்சுமி பூஜை, அஷ்ட லட்சுமி பூஜை, லட்சுமி நரசிம்ம பூஜை மற்றும் பௌர்ணமி பூஜை போன்ற பல முக்கிய பூஜைகளில் வைத்து அஞ்சன சங்கல்பம் பூஜை செய்யப்படுகிறது.

இந்த அஞ்சனத்தை பயன்படுத்துவதால் எப்போதும் வீட்டில் மஹாலக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்கும். இதனால் பல நாட்களாக தடைபட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் அரங்கேறும். திருமண வரன் கைகூடும்.

மேலும் வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்து அதிக லாபத்தை ஈட்ட வழிவகுக்கும். இதனால் ஆளுமை திறன் அதிகப்படுத்துவதோடு மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தி தரும். பணிபுரியும் இடங்களில் உயர் பதவிகளுக்கு வழிவகுக்கும்.

ஒருவரின் வீட்டில் மஹாலக்ஷ்மி வாசம் செய்தாலே போதும், குடும்ப பிரச்சினைகள் அனைத்து விலகி மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தும்.

*ஸ்ரீ மஹாலக்ஷ்மி குபேர அஞ்சனத்தின் விலை ₹ 5000 /- Rs*

இந்த அற்புத சக்திவாய்ந்த அஞ்சனத்தை நீங்கள் பெற விரும்பினால் உங்கள் பெயர், முழு முகவரி மற்றும் உங்கள் நட்சத்திரம் இவற்றை whatsapp மூலம் எழுதி எங்களுக்கு அனுப்பவும்.

wa.link/esxm5t

தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள,

📞6369199775
ravi said…
https://chat.whatsapp.com/KqC06JZZKO4EEMBqXvrB59

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் பற்றிய பதிவுகள் :*

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.

* திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.

* திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.

* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பி லை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.

* திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப் பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக் கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.

* கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.

* ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிற கு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது.

* கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கிறது.

* நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது.

* மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும் இரவில் பள்ளியறையின் போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம் செய்யப்படுகின்றன.

* கொல்லூர் மூகாம்பிகைக்கு இரவு அர்த்தஜாம பூஜையின் போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் மனமிக்க கஷாயம் பிரசாதமாக தரப்படுகிறது.

* நெல்லையில் உள்ள புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி, வெள்ளம், ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் புட்டு தான் பிரசாதம்.

* கேரளம், குருவாயூரில் குருவாயூரப்பனுக்கு சுண்டக் காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக செய்யப்படுகிறது.

* திருச்சியில் கோயிலடி அப்பக்குடத்தானுக்கு தினமும் அப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது.

* கேரளம் இரிஞ்சாலக்குடாவில் பரதன் ஆலயத்தில், கத்திரிக்காயால் தயாரிக்கப்பட்ட வலுதனங்கா எனும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. செம்பை வைத்தியநாத பாகவதர் இந்த பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய் தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில் கட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

* குற்றாலம் குற்றாலநாதருக்கும் குழல்வாய்மொழி அம்மைக்கும் நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்ந்த கஷாயம் படைக்கப்படுகிறது. அருவியால், அவருக்கு தலைவலியும் ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஐதீகம்.

* முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றி தயாரிக்கப்படும் தோசை, மதுரை அழகர்கோயிலின் பிரதான பிரசாதம்.

* திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும் சர்க்கரைப் பொங்கலும் நிவேதனம் செய்வார். துவரம் பருப்பு, அரிசி, காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு தயாரிக்கப்படுவதுதான் கூட்டாஞ்சோறு.

* சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும் சிறப்பான நிவேதனங்கள்.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
தினம்ஒரு(தெயவத்தின்)குரல்
மனிதன் விஷயத்தில் புனர் ஜன்மாவை (reincarnation)ச் சொல்லுவதுபோல், ஸ்வாமியின் விஷயத்தில் அவதாரங்களை (incarnation)ச் சொல்வது ஹிந்து மதம் ஒன்றுக்கே உரிய, இன்னொரு தனியம்சமாகும். ஸத்வஸ்து ஒன்றுதான்; அதுதான் இத்தனை ஜீவராசிகளாகவும் ஆகியிருக்கிறது என்பதே நம் மதத்தின் பரம தாத்பரியம். அப்படியானால் அந்த ஒரு பரம்பொருளே மாறி மாறி ஜனன மரணங்களுக்கு ஆளாகிற அத்தனை ஜீவராசிகளும் ஆகும். அது தவிர, இந்த ஜீவ – ஜட லோகத்தை எல்லாம் ரக்ஷிக்கிற ஈசுவரனாகவும் அது இருக்கிறது அல்லவா? இந்த ஈசுவரனுக்கு மநுஷ்யர்கள் போல் கர்ம பந்தம் இல்லை. மனிதன் கர்மத்தை அநுபவிக்கத்தான் பல ஜன்மா எடுக்கிறான். ஈசுவரன் இப்படி எடுக்க வேண்டியதில்லை. ஆனால், புதுப் பிறவிகளில் இந்த ஜீவன் பழைய கர்மத்தைக் கழுவிக் கொள்ளாமல் மேலே மேலே சேற்றை வாரிப் பூசிக் கொள்கிறானே என்பதைப் பார்த்து, அவனுக்கு வழிகாட்டி, கைதூக்கி விடுவதற்காகப் பரம கருணையுடன் ஈசுவரனும் பூலோகத்தில் பலமுறை அவதரிக்கிறான். அதர்மம் ஓங்கி, தர்மம் நலிகிற போக்கு உச்சமாகிற போது, அதர்மத்தை ஒட்டி, தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவும், ஸாதுக்களை ரக்ஷித்து, துஷ்டர்களைச் சிக்ஷிப்பதற்காகவும் பகவான் பல அவதாரங்களைச் செய்கிறான் — கிருஷ்ண பரமாத்மா கீதையில் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

எல்லாமே ஸ்வாமி என்பது ஒரு நிலை; அது நம்மால் கிரகிக்க முடியாத நிலை. அப்புறம் உயர்வானதிலெல்லாம் ஸ்வாமி விசேஷமாகப் குடிகொண்டிருப்பதாகக் கீதையின் விபூதி யோகத்தில் சொன்ன நிலை. மனித வாழ்வில் இந்த உயர்வை ஏற்படுத்துவதற்காகத் தூதர்களாக அவன் ஆசாரிய புருஷர்கள், மகான்கள், ஞானிகள், யோகிகள், பக்திமான்களை அனுப்பி வைப்பது ஒரு நிலை. இதெல்லாமும் போதவில்லை என்று, தானே ஓர் அவதாரமாக இந்த லோகத்துக்கு இறங்கி வருகிறது ஒரு நிலை. ‘அவதரணம்’ என்றால் ‘இறங்கி வருவது’ என்றே அர்த்தம். பரத்துக்குப் பரமாக, பராத்பரமாக — ‘அப்பாலுக்கு அப்பால்’ என்பார்கள். அப்படி இருக்கப்பட்ட ஈசுவரன் இறங்கி வந்து, நமக்கு நடுவில் பிறந்து தர்ம ஸ்தாபனம் பண்ணுவது அவதாரம் எனப்படுகிறது.

சித்தாந்த சைவர்கள் சிவபெருமான் அவதரித்ததாக ஒப்புக் கொள்வதில்லை. ஆதி சங்கர பகவத்பாதாள் ஈசுவராவதாரம், ஞானசம்பந்தர் முருகனின் அவதாரம் என்றெல்லாம் சொல்வதை அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கர்ப்பவாசம் செய்வது, மாம்ஸ மயமான நரதேகத்தில் இருப்பது எல்லாம் ஸ்வாமிக்கு இழுக்கு என்பது அவர்களுடைய அபிப்பிராயம். அத்வைதிகளுக்கோ கர்ப்பவாஸம் செய்த மாம்ஸ சரரீரத்தில் இருக்கிற இத்தனை பேருமே ஸாரத்தில் பிரம்மம்தான். ஆகையால், ஈசுவராவதாரத்தில் அவர்களுக்கு நிஷித்தமாக எதுவும் தெரியவில்லை. ஸித்தாந்த ரீதியில் வைஷ்ணவர்களுக்கும் சைவர்களுக்கும் பல ஒற்றுமையிருந்த போதிலும், பிரம்மமேதான் ஜீவனாயிருக்கிறது என்ற அத்வைதத்தை வைஷ்ணவர்கள் அப்படியே ஒப்புக் கொள்ளாத போதிலும், வைஷ்ணவர்கள் யாவரும் அவதார கொள்கையை ஒப்புக் கொள்கிறார்கள். பொதுவாக லோக வழக்கிலும் அவதாரம் என்றாலே மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கள்தான் நினைக்கப்படுகின்றன. வைஷ்ணவர்கள் அவதாரங்களை ஒப்புக் கொள்வதற்குக் காரணம், பகவான் பரம காருண்யன் ஆனபடியால் ஜனங்கள் உஜ்ஜீவிக்கச் செய்வதற்காகத் தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் குறைவுபடுத்திக் கொள்வான் என்று அவர்கள் நம்புவதுதான்.

உள்ளுக்குள்ளே தான் ஸ்வாமியே என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, வெளியில் ஏதோ, மநுஷ்யன் போல் வேஷம் போடுவதால், அவருக்குக் கொஞ்சங்கூட தோஷமோ, குறைவோ வந்துவிடவில்லை.

மொத்தத்தில் ஹிந்து மதம் எனப்படும் வைதிக நெறி அவதாரக் கொள்கையை ஏற்கிறது என்றே சொல்லி விடலாம். ஏனென்றால், சைவர்களும் தங்களது முழுமுதற் கடவுளான சிவ பெருமான் அவதரிப்பதில்லை என்று சொன்ன போதிலும், மகாவிஷ்ணு தசாவதாரம் செய்ததாக ஒப்புக் கொள்கிறார்கள்.
ravi said…
*கந்தர் அலங்காரம் 24* 🐓🦚🙏

*அலங்காரம்-06:*

திருந்தப் புவனங்கள் ஈன்ற பொன் பாவை,

திருமுலைப்பால்
அருந்திச், சரவண பூந்தொட்டில் ஏறி,

அறுவர் கொங்கை
விரும்பிக், கடல் அழ, குன்று அழ, சூர் அழ, விம்மி அழும்,

குருந்தைக் குறிஞ்சி கிழவன் என்று ஓதும் குவலயமே.🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷
ravi said…
*திருந்தப் புவனங்கள் ஈன்ற பொன் பாவை* =

திருத்தமாய் உலகு ஏழும் ஈன்ற பொன் மகள், அன்னை பார்வதி, புவனேஸ்வரி!

*திருமுலைப் பால் அருந்தி* = அவள் திரு மார்பில் சுரக்கும் பாலைப் பருகி

*சரவணப் பூந்தொட்டில் ஏறி* = சரவணம் என்னும் பொய்கையில் தோன்றி

*அறுவர் கொங்கை விரும்பி =*

கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரின் முலைப்பாலை விரும்பி

*கடல் அழ* = கடலாய் மாறிய அசுரன் அழ,

(சூரன் கடலாய் மாறி நிற்க, கடலை வற்ற வைத்தார் முருகப் பெருமான்;

*அலை வேலை அஞ்ச,* வடி வேல் எறிந்த அதி தீரா என்பது திருப்புகழ்)

*குன்று அழ* = குன்றாய் மாறிய அசுரன் அழ,
(கிரெளஞ்ச மலையாய் மாறி நின்றான் தாருகன். மலைக்குள் அமரரையும் சேர்த்தே விழுங்கினான்; மலைமாவு சிந்த என்றும் அதே திருப்புகழில் வரும்)

*சூர் அழ* = சூரன் அழ,

*விம்மி அழும் குருந்தை* = விம்மி அழுகின்ற குழந்தை!

நாளை இவர்களை எல்லாம் அழ வைக்கப் போகும் குழந்தை!

அதுவே இன்று இப்படி அழுகிறதே! இது என்ன அதிசயம்!

*குறிஞ்சி கிழவன் என்று ஓதும் குவலயமே* =

*கிழவன்* =உரிமை உடையவன்!

குறிஞ்சி நிலத்துக்கு உரிமை உடையவன் என்று தமிழுலகமே தொழும் ஒரு குழந்தை - முருகக் குழந்தை!

ச்சே, குறிஞ்சிக் குழந்தையைப் போயி குறிஞ்சிக் கிழவன்-னு சொல்லுறாங்களே! இந்தப் புலவர்களுக்கும், கவிஞர்களுக்கும், மக்களுக்கும் பித்து பிடித்து விட்டதா என்ன? - என்று நகைச்சுவையாய் நகைச்சு வைக்கிறார் அருணகிரிப் பெருமான்!🙏🙏🙏
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 303*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி,

भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः

कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् ।

सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन्

पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥

ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந:

கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் ।

ஸத்வம் மந்த்ரமுதீ³ரயந்நிஜஶரீராகா³ரஶுத்³தி⁴ம் வஹந்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாணமாபாத³யந் ॥ 36॥

சிவானந்தலஹரி 36

🪷🪷🪷
ravi said…
शुद्धे चित्ते आत्मस्वरूपं प्रकाशते सम्यक्, वस्तुयाथात्म्यं प्रकाशते ‘ஷுத்தே சித்தே ஆத்மஸ்வரூபம் ப்ரகாஷதே ஸம்யக், வஸ்துயாதாத்ம்யம் ப்ரகாஷதே’ –

அப்படி சித்த சுத்தி ஏற்பட்டா, நம்மளுடைய மனசுல ஆத்ம ஸ்வரூபம், ஆத்ம ஞானம் வரும்.

கர்ம நிவ்ருத்தி, ஜன்ம நிவ்ருத்தி ஏற்படும். அதனால, நாம மனுஷாளா பொறந்திருக்கோம்.

அதிக இந்திரிய சக்தியும், புத்தி சக்தியும் கொடுத்திருக்கு. அதைக்கொண்டு, விலங்களுக்கு மேலான அதிக சுகத்தை அடையணும்னு முயற்சி பண்றோம்.

ஆனா இப்போ நாம நினைக்கிற மாதிரி, அந்த இந்திரிய சுகங்கள் அதிகமா, மிருகங்களைவிட ஜாஸ்தியா, விசேஷமா சமைச்சு சாப்படறது மட்டும் கிடையாது🪷🪷🪷
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 300* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

*77. தந்விநே நமஹ (Dhanviney namaha*)

ஈச்’வரோ விக்ரமீ *தன்வீ*
மேதாவீவிக்ரம: க்ரம: |

🪷🪷🪷
ravi said…
ராமன் கையில் வில்லுடன் தனி ஒருவனாக நிற்கும் அந்தப் பெரிய மைதானத்துக்குள் மூலபல சேனை நுழைந்து,
ராமன் மேல் பாய்ந்தது.

அவர்களை நோக்கி ராமன் ‘ *சம்மோகன அஸ்திரம்’* என்ற ஓர் அம்பைச் செலுத்தினான்.
அதன் சிறப்பு என்னவென்றால், அதனால் அடிபட்டவருக்குப் பார்க்கும் பொருட்களெல்லாம் அம்பை எய்தவர் போலவே தோன்றும்.

அதே போல, அது பலவாகப் பெருகி அவர்களைத் தாக்கியது.

தாக்கப்பட்ட ஒவ்வொரு அரக்கனுக்கும் அவனைச் சுற்றி உள்ள அரக்கர்கள்
அனைவரும் ராமனாகவே தெரிந்தார்கள்.

அதனால் ஒவ்வொரு அரக்கனும் தன்னைச் சுற்றி உள்ள அரக்கர்களை
ராமனென எண்ணி வாளால் அவர்களின் தலையை வெட்டத் தொடங்கினான்.🪷🪷🪷
ravi said…
இந்த நிகழ்ச்சியை புரந்தரதாசர் தம் பாடலில் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் .. பார்ப்போமா ராமனை ?
ravi said…
*அல்லி நோடலு ராம இல்லி நோடலு ராம*

*எல்லெல்லி நோடிதரல்லி ஸ்ரீ ராம*

அங்கு பார்த்தாலும் ராமன் இங்கு பார்த்தாலும் ராமன்
எங்கெங்கு பார்த்தாலும் அங்கு ஸ்ரீ ராமன்

*ராவணன மூலபல கண்டு கபிசேனே*
*ஆவாகலே பெதரி ஓடிதவு*

*ஈவேளே நரனாகி இரபார தென்தெணிசி*

*தேவ ராமச்சந்திர ஜகவெல்ல தானாத (அல்லி)*

ராவணனின் முக்கிய படையினரின் பலத்தைப் பார்த்த வானர சேனைகள் உடனடியாக அடித்துப் பிடித்து ஓடியது

இனிமேல் (சாதாரண) மனிதனாக இருக்கக்கூடாது என்றெண்ணிய ராமன் உலகம் முழுக்க அவனே வியாபித்தான்.

(பற்பல அவதாரங்கள் எடுத்தான்).

*அவனிகே இவ ராம இவனிகே அவ ராம*
*அவனியோள்ளுபரி ரூப உண்டே*

*லவ மாத்ரதி அசுர துருவலெல்லரு*

*அவரவர் ஹோடெதாடி ஹதராகி ஹோதரு (அல்லி)*

அவனுக்கு இவன் ராமன்

இவனுக்கு அவன் ராமன்

உலகத்தில் ராமனைத் தவிர இன்னொரு ரூபமும் உண்டோ

இது நடந்த உடனே, அசுரர்களின் பக்கத்தில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு வீழ ஆரம்பித்தனர்

*ஹனுமதாதி சாது ஜனரு அப்பி கொண்டு*
*குணிகுனி தாடிதரு ஹருஷ திந்தா*

*க்ஷண தல்லி புரந்தர விட்டல ராயனு*

*கொனேகொனேயனு தானொப்பனாகி நிந்தா (அல்லி)*


அனுமன் முதலாத வானர சேனைகள் (ஒருவரையொருவர்) கட்டிப் பிடித்துக் கொண்டு குதித்து குதித்து ஆடினர்

சந்தோஷத்துடன் உடனே (ஒரு நிமிடத்தில்) புரந்தர விட்டலனான ஸ்ரீ ராமன் தன் அனைத்து ரூபங்களையும் மறைத்துக் கொண்டு ஒருவனாகி நின்றான்.💐💐💐
ravi said…
வீடு தோறும் கலையின் விளக்கம்,

வீதி தோறும் இரண்டொரு பள்ளி;

நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்

நகர்க ளெங்கும் பலபல பள்ளி;

தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்

கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்👍
ravi said…
Good morning . Today i joined L&T 36 years back . Time flies .

But experiences gained , friends , relations earned will never fly away but stay afoot in my mind .

Shall ever be indebted for such wonderful souls i own till today . 🙏
HKB said…
Really These are sweet memories of past. We came across mingled with many people during these period. Some people are out of mind and some people are in touch. Amazing.
MGT said…
Ohh..you joined in 1986. 8 year after I joined. I swear what an experience, I too enjoyed for 33 years and still continue doing it thro' no of friends & no of more than friends extended family I would call..🙏
Btw I don't agree with your statement of youth flying away..😅
Moorthi said…
👌🤝
Sama said…
🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂💐💐💐💐💐
Shanti said…
Wow a long innings 👏🏻👏🏻👏🏻
Thank you for your support during my tenure with you.
🙏🏼🙏🏼🙏🏼
Ramesh said…
நல்ல மனம் வாழ்க..நாடு போற்ற வாழ்க...தேனீ போல் என்றும் சுறுசுறுப்பாக தேன் போல் முடிவில்லாமல் வாழ்க..வாழ்த்த வயதில்லை..வணங்குகிறேன்..🙌🙏
1 – 200 of 318 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை