ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 15 - அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா பதிவு 22

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

15  अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா   

பதிவு 22



இன்று நாம் காண இருப்பது 15வது திருநாமம் 

15  अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -  

அஷ்டமி அன்று ராத்திரி  சந்திரன் கண்டு களித்ததுண்டா?

ஒருநாள்  மொட்டைமாடியில் நின்று ரசித்தால்  தெரியும்.  

அந்தமாதிரி  ஒளியுள்ள, பூரண காந்தியான நெற்றி அவள் முக லாவண்யத்திற்கு எடுப்பாக, பொருத்தமாக இருப்பவள்.🌝🌝🌕


ஷ்டமி சந்திர = அஷ்டமியில் வரும் பிறைச் சந்திரன் 

விப்ராஜ = உள்-ஒளிர்தல் 

அலிக = நெற்றி ; 

ஸ்தல = பிரதேசம் / 

மேடு ஷோபிதா = அழகுடன் அமைந்திருத்தல் 🙏🙏🙏

அஷ்டமியின் சந்திரப்பிறையைப் போன்ற ஒளிரும் நெற்றிப்பிரதேசத்தை அழகுடன் அமையப்பெற்றவள்.🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌝

ஆதி சங்கரர் இந்த சந்திரனை வைத்துக்கொண்டு சௌந்தர்ய லஹரியில் ஒரு சரித்திரமே படைத்துள்ளார் ..

அம்மா உன் முகம் பூர்ண சந்திரன் ..

அந்த சந்திரன் தேயக்கூடியது 

ஆனால் உன் முக சந்திரன் என்றுமே வளர் பிறை ..

அது என்றும் தேயாது ..

உன் நெற்றி சந்திர பிறை 

ஆனால் அது பாதிதான் நீ சூடிய பிறையும் பாதிதான் 

இவை இரண்டையும் மாற்றி அமைத்து ஒட்டி விட்டால் அதுவே பூர்ண சந்திரன் அன்றோ அந்த ஒட்டும் கயிறாக என் மனம் இருக்க அருள் செய் தாயே என்கிறார் .. 

இதற்கு மேலும் யாராவது கூடுதலாக வர்ணிக்க முடியுமா ?? 🌕🌝🌝🌝🌝🌕🌕🌕🌝



அறுபத்து மூன்று வர்ணனைகள் 

ஸ்வரூப வர்ணனையும் அம்பாளின் இருப்பிட வர்ணனையும் சேர்த்து கிட்டத்தட்ட 63 திருநாமங்கள் (காமதாயினி என்கிற 63ஆவது திருநாமம் வரை). 

இவற்றுள் மிகவும் அழகான ஒன்று அம்பாளுடைய திருநெற்றியை விவரிக்கக் கூடியது. அஷ்டமி சந்திர விப்ராஜ அஷ்டமி சந்திரன்! எவ்வளவு நுணுக்கமாக நம்முடைய மஹான்கள் சிந்தித்தார்கள் என்பதற்கும் நம்முடைய பாரம்பரியம் எவ்வளவு நுணுக்கமான பாரம்பரியம் என்பதற்கும் இதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். 



சாதாரணமாக ஒரு பெண்ணின் நெற்றி என்று வர்ணிக்கும்போது நவீன காலத்து வர்ணனையானாலும் சரி, முந்நூறு நானூறு ஆண்டு காலத்துக்கு முந்தைய வர்ணனையானாலும் சரி, பிறை நெற்றி என்றுதான் வர்ணிப்பார்கள். 

பிறைச் சந்திரன் எப்படி இருக்கும்? என்று சிறிது யோசித்துப் பார்க்க வேண்டும். ஆதிசங்கர பகவத்பாதர், சௌந்தர்யலஹரியில் அஷ்டமி சந்திரன் என்பதற்கு ஒரு விளக்கம் கொடுப்பார். நேரடியாக அஷ்டமி சந்திரன் என்று சொல்லாமல் வேறுவிதமாகச் சொல்வார்.

"அம்மா! உன்னுடைய திருமுகத்தை நான் பார்க்கிறேன். இரண்டு சந்திரன்கள் அங்கே இருக்கின்றன" என்பார் ஆதிசங்கரர். 

அம்பாளிடம் எப்படி இரண்டு சந்திரன்கள் இருக்கின்றன? 

ஏற்கெனவே ஒன்று இருக்கிறது. 'தாரா நாயக சேகராம்' என்று தியான ஸ்லோகத்தில் வருகிறதல்லவா? 

தாரா நாயகன் என்றால் நட்சத்திரங்களுக்கெல்லாம் நாயகனான சந்திரன் என்று அர்த்தம். 

ஏற்கெனவே அவள் திருமுடியிலே ஒரு சந்திரன் இருக்கிறது. அம்பாளைப் பார்த்து விட்டு ஆதிசங்கரர், 'இரண்டு நிலவுகள்' என்றார். 

இரண்டு நிலவுகள்கூட அல்ல, ஒரு நிலவின் இரண்டு பாகங்கள் என்கிறார். 



எப்படி? "உன் திருநெற்றியைப் பார்க்கிறேன். அதைப் பார்க்கும்போது உன் திருமுடியிலே ஒரு நிலா இருக்கிறதே அதன் மற்றொரு பாதிதான் உன் நெற்றியிலே வந்து அமர்ந்ததோ என்று தோன்றுகிறது" என்கிறார்! 

முழு நிலவில் ஒரு பாதி அவள் திருமுடியிலும் மற்றொரு பாதி அவள் திருநெற்றியில் அஷ்டமி சந்திரனாகவும் (எட்டாம் பிறை) இருக்கிறது. 

ஆதிசங்கரர் மேலும், "ஆனால் இந்த இரண்டு நிலவுகளும் திசைமாறி இருக்கின்றன. இரு பாதிகளும் ஒன்றையொன்று நோக்காமல் எதிர்த் திசைகளில் நோக்குகின்றன. ஒன்று செய்யலாம். 

மேலே இருப்பதை எடுத்துக் கீழே இருக்கும் பாதியுடன் வைத்துத் தைத்து விட்டால் முழு நிலா கிடைக்குமே" என்றார். 

எப்படித் தைப்பது என்பதையும் சொன்னார்; "அமிர்தம் இருக்கிறதல்லவா? அந்த அமிர்தம் என்னும் பசையை எடுத்து ஒட்டிவிடலாம்!" என்று கூறுகிறார். 



ஒட்டியது பிரிந்துவிட்டால் என்ன செய்வது? "ஆகவே அந்த அமிர்தத்தையே கயிறாக மாற்றி (ஸுதாலேபஸ்யூதி) இரண்டு பாதிகளையும் சேர்த்துத் தைத்துவிட்டால் இரண்டும் சேர்ந்து மஹாபூர்ணிமையாகத் திருமுகம் விளங்காதா?" என்றார். 

இது எங்கேயிருந்து ஆசார்யருக்குத் (சௌந்தர்யலஹரியில்) தோன்றியது? 

அஷ்டமீ சந்த்ர விப்ராஜ என்ற லலிதா சஹஸ்ரநாமத்தின் திருநாமத்திலிருந்து தான்.

பிறைச் சந்திரன் என்னும்போது நான்காம், மூன்றாம் பிறையெனில் அதில் நடுவிலே ஒரு பள்ளம் இருக்கும். 

அதனால்தான் அஷ்டமி சந்திரன் என்று வர்ணித்தார்கள். 

அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரையிலான காலகட்டத்தில் சரியாக நடுவில் உள்ள எட்டாவது நாள் சந்திரன். 

அது எப்படி சரிபாதியாக இருக்குமோ அப்படிப்பட்ட கச்சிதமான அமைப்பிலான நெற்றி. அதுவும் அது சாதாரண திருநெற்றி இல்லை - அஷ்டமீ சந்த்ர விப்ராஜ(த்) அலிகஸ்தல சோபிதா.



                                        💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

சௌந்தரிய லஹரி 


பாடல் 46   பாதிச் சந்திரன் போன்ற நெற்றியின் வர்ணனை 

லலாடம் லாவண்யத்யுதி விமலம் ஆபாதி தவ யத்

த்விதீயம் தந்மந்யே மகுடகடிதம் சந்த்ர சகளம்

விபர்யாஸ ந்யாஸாத் உபயமபி ஸம்பூய ச மித:

ஸுதாலேப ஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர:

லாவண்யமான வெண்ணிலாவுடன் ப்ரகாசிக்கும் உனது நெற்றியானது கிரீடத்திலிருக்கும் அர்த்த சந்திரனைத் தவிர்த்து வேறான அர்த்த சந்திரன் போல தோன்றுகிறது. 

ஏனென்றால் மேலும் கீழுமாக எதிரெதிர் திசையில் வளைவுகளையுடைய இரு நிலாக்களையும் வளைவுகள் பொருந்தும்படியாகச் சேர்த்து வைத்தால் அம்ருதம் நிறைந்த பூர்ண சந்திரன் போன்ற தோற்றமாம். இது தான் "அஷ்டமீசந்த்ர பிப்ராஜத் அலிகஸ்தல சோபிதா" என்னும் நாமம்.


அன்னையின் உச்சிக் வகிட்டின் கேசங்களுக்கு கீழ் புருவம் வரையில் இருக்கும் நெற்றிப் பகுதி வளைந்து கன்னங்களை அடைவது பிறைச் சந்திரனைத் தலைகீழாக கவிழ்த்து வைத்தது போல் இருக்கிறதாம். (இது பற்றி பெரியவர் திராச ஒரு பதிவு போட்டிருக்கிறார், அது இங்கே). பிறைச் சந்திரன் என்று சொல்லும் போது அர்த்த சந்திரன் என்கிறார். 

அஷ்டமீ தினமானது பக்ஷத்தின் நடுவில் இருக்கும் திதி. அமாவாசையில் இருந்து தினமும் சந்திரனைப் பார்த்துக் கொண்டே வந்தால் அஷ்டமி தினத்தில் சரிபாதியாக வளர்ந்திருக்கும். அதனால் அர்த்த சந்திரன். இவ்வாறாக இரு அர்த்த சந்திரனை வளைவுகள் பொருந்தும்படி அமைத்தால் வருவது முழு நிலா.



                                       💐💐💐💐💐💐💐💐💐💐💐💐





Comments

ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
என் விஷயம் இருக்கட்டும். இப்போது பொது விஷயத்தைப் பார்க்கலாம். வைதிக ஸமயாநுஷ்டானம் என்பதைப்பார்த்தால் அது முக்யமாக தனி மநுஷ்யனைத்தான் centre -ல் வைத்திருக்கிறது. அதில் ஒரு ஸமூஹப்பணி. ஸமூஹத்தை நலமடையச் செய்யும்போதே, அப்படிச் செய்வதாலேயே இந்தத் தனி மநுஷ்யன் ஆத்ம பரிபக்குவம் அடைவதுதான் இந்தப் பரோபகாரத்துக்கும் குறிக்கோள்*. ஸேவைக்குப் பாத்திரமாகிறவனும், அதாவது தானம் பெறுகிற தீனன், சிகித்ஸை பெறுகிற நோயாளி, வித்யாதானத்தால் ப்ரயோஜனமடையும் மாணவன், இப்படியாகப் பலவித பரோபகாரங்களுக்கும். பாத்ரமாக இருக்கப்பட்டவனும் இந்த லௌகிக உபகாரங்களைப் பெற்றதோடு த்ருப்தி பெற்று நின்றுவிடக்கூடாது. இவனும் தன்னுடைய இந்த லௌகிகமான problem தீர்ந்தது, இதற்கான விசாரம் இனி இல்லாமல் ஆத்மா பக்கம் விச்ராந்தியாகத் திரும்புவதற்குத்தான் என்று புரிந்து கொண்டு அந்த வழியில் போக வேண்டும். வெறுமே லௌகிகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு பரோபகாரம் நின்றுவிடுமானால் அது செய்தவனுக்குத் தான் சித்த சுத்தி என்ற பெரிய லாபத்தைக் கொடுப்பதாகுமேயொழிய உபகாரம் பெற்றவனுக்கு சாச்வதமான லாபம் தரவில்லை என்றேயாகும்.
நான் ஸோஷல் ஸர்வீஸ் பற்றியும் பேசியிருக்கிறேன்;தனி மநுஷ்யனின் அநுஷ்டானங்கள் பற்றியும் பேசியிருக்கிறேன். ஸோஷல் ஸர்வீஸில் அநேக லௌகிகமான உபகாரங்களைச் சொல்லியிருக்கிறேன். அன்னதானம் செய்வது, வைத்யசாலை வைப்பது, வித்யாதானம் (ஸெக்யூலர் எஜுகேஷனையும் சொல்லியிருக்கிறேன்) , வேலையில்லாதவர்களுக்கு உத்தயோக வசதி பண்ணித்தருவது, ஏழைகளுக்கு விவாஹத்துக்கு உதவி செய்வது என்று நான் சொன்ன அநேக விஷயங்கள் லௌகிகமானவைதான். இவை நேரே ஆத்மாபிவிருத்திக்கு உதவுகிற பணிகளல்ல.

ravi said…
ஆனால் ஒரு இன்டிவிஜுவலின் ஆத்மாபிவிருத்திக்காக நான் அநுஷ்டானங்களைப் பற்றிச் சொல்லும்போது ஜெனரலாக க்ருஹஸ்த தர்மம், ஸ்த்ரீ தர்மம் என்றெல்லாம் சொன்னாலும், லௌகிக அம்சங்களை விஸ்தாரப்படுத்திச் சொன்னதில்லை. ஆத்மாபிவிருத்தியை aim -ஆக [லக்ஷி்யமாக] வைத்தே அதற்காக ஸ்த்ரீ புருஷர்கள் தனி வாழ்க்கையிலும் குடும்பத்திலும் என்ன செய்ய வேண்டும். என்பதை மாத்திரந்தான் சொல்லி வந்திருக்கிறேன். மற்றபடி ‘ஒரு ஏழைக்குக் காசுபோடு’ என்கிற மாதிரி ‘உனக்குக் காசு தேடிக்கோ’ என்று சொன்னதில்லை. கதியில்லாத ஒரு வியாதியஸ்தனுக்குச் சிகித்ஸை பண்ணு’ என்று சொன்ன மாதிரி, ‘உனக்கோ, வீட்டு மநுஷ்யர்களுக்கோ உடம்பு ஸரியில்லாவிட்டால் டாக்டரிடம் காட்டு’ என்று நான் சொன்னதில்லை;’ ஏழைப்பிள்ளை ஒருத்தனுக்குப் படிப்புக் கொடு;வேலை பண்ணி வை’என்று சொல்லியிருக்கிறேனே தவிர ‘உன் பிள்ளையை நன்றாகப் படிக்க வைத்து நல்ல உத்யோகமாக ஸம்பாதித்துக்கொடு’ என்று சொன்னதில்லைதான்!’ எவனோ ஒரு ஏழையின் பெண்ணுக்குக் கன்னிகாதான ஸஹாயம் பண்ணு’ என்பேனே தவிர, ‘உன் பெண்ணுக்கு வரன் பார்த்துக் கல்யாணம் பண்ணு’ என்பதில்லை. ‘ஊருக்குக் குளம் வெட்டு’ என்பேனே தவிர ‘உன் வீட்டுக்குக் குழாய் போட்டுக்கொள்’ என்று சொன்னதில்லை.

ravi said…
ஏன்? இந்த லௌகிக உதவிகளை இன்னொருத்தனுக்குப் பண்ணுவதே இவனுக்கு ஆத்மிகமாக உதவி பண்ணுகிறது இவனுடைய சித்த சுத்திக்கு ஸஹாயம் செய்கிறது. ஆனால் இதே லௌகிக விஷயங்களைத் தனக்கும் தன்னைச் சேர்ந்த குடும்பத்தவர்களுக்கும் பண்ணிக்கொள்கிறபோது அதிலே ஆத்ம ஸம்பந்தமாக எந்த லாபமும் சேராமலே போகிறது. காரணம் – தான், தன் மநுஷ்யர் என்பவர்களுக்குச் செய்வது தனக்கே பண்ணிக்கொள்ளும் உபகாரந்தான். அதாவது லௌகிகமான லாபம் இவனுக்கே கிட்டுகிறது. நிறையப்பணம் நஷ்டப்பட்டுப் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணிப் பெரிய இடத்தில் ஒப்படைக்கிறான் என்றாலுங்கூட அதிலும் நம் பெண் நல்ல இடமாகப் போய் அடைந்தாளே என்ற ஸ்வய பாச திருப்தி என்ற லௌகிகமான ஸ்வய லாபம் இருக்கத்தான் செய்கிறது. லௌகிக லாபத்தைப் பிறத்தியானுக்குக் கிட்டப் பண்ணினால் அதற்குப் பிரதியாக இவனுக்கு ஆத்மலாபம் கிடைப்பதே நியாயம். லௌகிக லாபமே நேராக இவனுக்குக் கிடைக்கிறபோது அதற்கு குட்டிப் போட்டுக்கொண்டு ஆத்ம லாபமும் எப்படி கிடைக்கும்?
Bhuvana said…
என் சொல்வேன்???
உவமை மிக மிக அற்புதம்.
Bhuvana said…
Sir
I'm not so good in Tamil writing. Every writing of yours is marvellous👏👏👏👏🙏🙏🙏🙏🙏
ravi said…
*கந்தர் அலங்காரம் 38* 🐓🦚🙏

*அலங்காரம்-11:*
ravi said…
சொல்லுகைக்கு இல்லை என்று, எல்லாம் இழந்து,

சும்மா இருக்கும்
எல்லையுள் செல்ல என்னை விட்டவா!

இகல் வேலன், நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக், கல்வரை

கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப்

புல்கின்ற மால்வரை தோள் அண்ணல் வல்லபமே!🦚
ravi said…
*இகல் வேலன்* = இகல்-னா வலிமை!

இகல்-ன்னு வரும் குறள் என்ன? சொல்லுங்க பார்ப்போம்!

வலிமை வாய்ந்த வேலன்!

*இகல் வேலன்* = இகல்-னா வலிமை! இகல்-ன்னு வரும் குறள் என்ன?

சொல்லுங்க பார்ப்போம்!

வலிமை வாய்ந்த வேலன்!

*நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியை* =

இது யாருப்பா?

கொல்லி-சொல்லின்னு?

கொல்லி என்றால் இந்தளப் பண்.

நாதநாமக்ரியை ராகம்.
பேசினாலே இந்தளம் போலப் பேசும் சொல்லி - *வள்ளி* !

அவள் எப்பமே நாத நாமம் தானே பேசுவாள்! அதான் அவள் பேச்சே நாதநாம ராகமாய், இந்தளமாய் ஆகிவிட்டது!

இறைவனின் நாமங்களுக்கு இறைவனைக் காட்டிலும் அவ்வளவு பெருமை!

முருகாஆஆஆஆ என்று ஒரு முறை உரக்கச் சொல்லிப் பாருங்கள்!

என்ன, முருகனை விட இனிக்குதா? :) அதான் நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!

நாத நாமத்தைச் சொல்லிக்கிட்டே இருந்தா, நம்மையும் அறியாமல், நம் குரலும் கனிவாகி, இனிமையாகி, இந்தளம் ஆகிவிடும்!=
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 319*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி ல 38 வது ஸ்லோகம் பார்க்கலாம்.

ரொம்ப அற்புதமான ஒரு கவிதை,

இந்த மாதிரி கவிதைகள் படிக்கறதுனாலயே நம்ப ரொம்ப பாக்கியசாலிகள்.

ஆதிசங்கரர் works படிக்கிறவா எல்லாரும் பாக்கியசாலிகள்.

प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः
सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः ।
चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः
प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते ॥ ३८॥

ப்ராக்புண்யாசலமார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉ப்ரஸன்ன꞉ ஶிவ꞉

ஸோம꞉ ஸத்³கு³ணஸேவிதோ ம்ருʼக³த⁴ர꞉ பூர்ணஸ்தமோமோசக꞉.

சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேதா³னந்த³பாதோ²நிதி⁴꞉

ப்ராக³ல்ப்⁴யேன விஜ்ருʼம்ப⁴தே ஸுமனஸாம்ʼ வ்ருʼத்திஸ்ததா³ ஜாயதே
ravi said…
ஸுமனஸாம்ʼ வ்ருʼத்தி: ஜாயதே” – பூக்கள் எல்லாம் நன்னா.. சந்திரன் வரும்போது பூக்கள், மூலிகைகள் எல்லாம் நன்னா வளரும்.

அப்படினு இது சந்திரனுக்கு… இதே பரமேஸ்வரனுக்கு பார்க்கும்போது..

“ப்ராக்புண்யாசல மார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉” – எத்தனையோ ஜென்மங்கள்ல பண்ண மலை போன்ற புண்ணியத்தின் காரணமாக காணப்படுகிற அமுத வடிவானவர் பரமேஸ்வரன்.

“ப்ரஸன்ன꞉” – எப்பவும் ப்ரசன்னமா இருப்பார்.

“ஶிவ꞉” – மங்கள வடிவம். நமக்கும் மங்களங்களை அருள்பவர்.

“ஸோம꞉” → “உமயா ஸஹ” – உமையோடு கூடினவர்.

“ஸத்³கு³ணஸேவித:” – ஸாதுக்களால் பூஜை செய்யப்படுபவர்

“ம்ருʼக³த⁴ர꞉” – பரமேஸ்வரன், கைல மான் வெச்சிண்டு இருக்கார், இடது கைல….

“பூர்ண:” – பரிபூர்ண வஸ்து, பரமேஸ்வரன்

“தமோமோசக꞉” → “மோசக:” – அக்ஞானத்தை போக்குபவர்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 316* 👏👏

12th Sep 2021🙏🙏🙏


ஈச்’வரோ விக்ரமீ தன்வீ
மேதாவீ
*விக்ரம* க்ரம: |

🪷🪷🪷
ravi said…
வேதசந்தங்கள் அவரது அங்கங்கள், திஷ்ண்யம் எனும் வேதப்பகுதி அவரது நகங்கள்,

வாமதேவ்யம் அவரது உடல்,

ஸ்தோமம் அவரது ஆத்மா, பிருஹத், ரதந்தரம் ஆகியவை அவரது இறக்கைகள்,

யஜ்ஞாயஜ்ஞம் அவரது வால்.

வேதமே தனக்கு வாகனமாக உள்ளதை உணர்த்தவே, வேத ஸ்வரூபியான கருடன் மீதேறி, கருடவாகனத்தில் திருமால் காட்சியளிக்கிறார்.

‘ *வி* ’ என்றால் வடமொழியில் பறவை என்று பொருள்.

வேதஸ்வரூபியான கருடன் என்னும் பறவையைத் தனக்கு வாகனமாய்க் கொண்டபடியால் திருமால் ‘ *வி-க்ரம:’* என்றழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 79-வது திருநாமம்.“ *விக்ரமாய நமஹ* ” என்று தினமும் சொல்லி
வருபவர்களுடைய அனைத்துப் பயணங்களிலும் திருமால் வழித்துணையாக உடன்வந்துக் காத்தருள்வார்.🦅🦅🦅
ravi said…
74

மூகோ விரிஞ்சதி பரம் புருஷ: குரூப:
கந்தர்பதி த்ரிதஶராஜதி கிம்பசாந: |
காமாக்ஷி கேவலமுபக்ரம கால ஏவ
லீலா தரங்கித கடாக்ஷருச: க்ஷணம் தே ||74||

ஹே காமாக்ஷி ! விளையாடல் நிரம்பிய உனது கடாக்ஷ காந்தியானது ஒரு பக்தன் மேல் விழுந்த கணத்திலேயே, (ஒரு க்ஷணகாலத்திற்குள்) அவன் ஊமையாயிருந்தால், நான்முகனைப்போல ஆகிறான்! வெறுக்கத்தக்க ரூபத்தை உடையவன் மன்மதன்போல ஆகிறான். ஏழையாயிருப்பவன் தேவேந்திரனாக ஆகிவிடுகிறான்!
ravi said…
கங்கையின் கர்வம் கரைந்தது விரி சடை தனில் 🪷🪷🪷
ravi said…
என் அழகென்ன அறிவென்ன குணம் என்ன

நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் வாழ் பூமிக்கு செல்வேன் அன்று

தேவர் ஏங்கினர் பகீரதன் தவம் கண்டே

தாயே கங்கா ... நீ வரவேண்டும் என்றே ஊன் உறக்கம் இன்றி தவம் செய்யும் அவன் முகம் பார் ...

அன்னை என பெயர் பெறுவது அரிது.

அதனிலும் அரிது கருணை தன்னில் கொள்வதே

அதனிலும் அரிது தாய்மை தனில் காரூண்யம் எனும் தேன் கலப்பதே

செல்லுங்கள் பூமிக்கு

புண்ணியம் பல செய்தோர் வாழும் வாழ்ந்த , வாழப்போகும் பூமி

அதில் அறிவின்றி பாவம் செய்வோரும் உண்டு ..

உங்கள் கை பட்டு கரையட்டும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் ...

சரி செல்கிறேன்
நான் பேரழகி

என் பராக்கிரமம் தடுப்போர் இங்கு எவருண்டு ..

செல்லும் வேகம் பூமி தாங்குமோ ...

தெறித்து போனால் நான் பொறுப்பு அன்றோ ?

சிரித்தான் ஈசன் ..

மமதை கொண்டோர்

தான் எனும் மமகாரம் கொண்டோர் வீழ்ந்தோரே ..

எழுந்து வாரா
மூச்சு விடும் பிணங்கள் அன்றோ ... ?

இத்தனை கர்வம் தாயினும் பெண்ணுக்கு உண்டோ ?

தடுப்பேன் அவளை
என் கரம் கொண்டு

தாயுமானவளாக தன்னிகரில்லா சுயநலம் அல்லா தாரகை ஆக்குவேன்

விரித்தான் சடை தனை

வேகம் கொண்டவள்

தான் எனும் தாபம் கொண்டவள்

தாய்மையின் வேர் அசைத்தவள் விழுந்தாள் அவன் விரித்த சடை தனில் ...

ஈசன் பரிசம் பட்டே பெண்ணின் பெருமை கொண்டாள்

பேசும் தெய்வமானாள்

பேர் சொல்லும் கங்கை ஆனாள் ..

ஆரத்தி தினம் பெறும் அரம்பை ஆனாள்

பகீரதன் பெற்றான் பேர்...

அவன் தவம் யாரும் அடையா தவம் ...

விண்ணவர் கர்வம் கொன்ற தவம் ...

ஈசன் புகழ் போற்றும் தவம்

அன்னை மீண்டும் ஈசனிடம் கேட்டாள் புண்ணியர் கலியில் உண்டோ ...

கங்கையே

பிறப்பான் ஒருவன் ..

பிறப்பால் உயர்ந்து

அறப்பால் அருந்தி

தமிழ் பால் உரைத்து

தன்பால் அன்பு கொண்டோர் ,

வெண்பா இயற்றும் கவி செய்வான் ..

அவன் பெரியவன் என்னிலும்

எண்ணிலும் அவன் எட்டாதவன் ...

காஞ்சி வாழும் இனியே இனிதாய் என் காமாட்சி போல் 🦚🦚🦚🪷🪷🪷🪷
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 45*🦚🦚🦚
ravi said…
சித்தமேது சிந்தையேது
சீவனேது சித்தரே

சத்தியேது சம்புவேது சாதிபேத மற்றது
முத்தியேது மூலமேது

மூலமந்தி ரங்களேது
வித்திலாத வித்திலே யின்னதென் றியம்புமே. 45🪷🪷🪷
ravi said…
சித்தரென்றும் அவதாரமென்றும் சொல்லித் திரியும் ஞானிகளே!

சித்தம் என்று சொல்லுமிடம் ஏது?

சிந்தனை எங்கு தோன்றுகிறது?

ஜீவனாகிய உயிர் எங்குள்ளது?

சத்தியாகிய வாலை இருப்பிடம் எது?

சம்பு எனப்படும் ஈசன் உலாவும் இடம் எது?

சாதி பேதம் இல்லாதது எது?

முத்தியை அழிப்பது எது?

உடம்புயிருக்கு மூலம் எது?

மூல மந்திரமான ஒரேழுத்து எது என்பதையெல்லாம் அறிவீர்களா?

வித்தே இல்லாமல் வித்தாக என்றும் நித்தியமாய் விளங்கும் உளதாய், இலதாய் உள்ள பொருளை இதுதான் அது என்று விளக்கமாக இயம்புங்கள்.🪷🪷🪷
ravi said…
கண்ணா கருமை நிறம் கொண்டாய்

ஏனோ பலருக்கும் அதை உள்ளத்தில் வைத்தாய் !

கருமை கண்ணில் இட்டாய்

அதை ஏனோ பலர் எண்ணங்களில் திணித்தாய் !

அதர்மம் அழித்தாய் ஏனோ தர்மம் வாழ தடை பல விதைத்தாய் !

உன் பால் அன்பு கொள்ள வைத்தாய் ஏனோ எட்டிப்பிடிக்கா இடம் அதில் அமர்ந்து கொண்டாய் !

குழல் கொண்டு மதுரம் தந்தாய்

ஏனோ இன்னும் உன் தழல் பணிய மறுப்போர் தனை படைத்தாய் !

போர் தனில் கீதை உரைத்தாய் ..

மனப்போர் தனில் ஏனோ நல்ல பாதை காட்ட மறந்தாய் !

கண்ணா கொடுப்பது என்றும் பாதி என்றால்

என் ஆவி முழுதும் வாழ வேண்டுமோ இந்த யாக்கை தனில்

அதில் பாதி நீ எடுத்தே எனை உன்னில் சேர்ப்பாயோ .. ?

பாதி பாதி விளையாட்டு வேண்டாம் என்னிடம்!!

தாதி தாதி என வருவாய்

ஆதி ஆதி என புகழ்வோர்க்கு ஆதிமூலம் நீ அன்றோ கண்ணா 🦚🦚🦚💐💐💐
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 323* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*86 பரமசிவன் பார்வதியை வணங்குவது மன்மதனுக்கு வெற்றி*

*பிசாச பய நிவிருத்தி, சத்ருஜயம்*

ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலன மத வைலக்ஷ்ய நமிதம்

லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே

சிராதந்த: ஶல்யம் தஹனக்ருத முன்மூலிதவதா

துலாகோடிக்வாணை: கிலிகிலித மீஶான ரிபுணா 86
ravi said…
மறு மடந்தையை மொழிய நின் பத
மலர் வெகுண்டு

அரன் நுதலில் ஓர் முறை
அறைந்திட

விழியினும் பட
பழம் பகை கருதி வேள்
இறையை வென்றனன் விழியை வென்றனன்

என முழங்கிய குரல் எனாது

அறை சிலம்பெழும் அரவம் என்பது என்
அருண மங்கல கமலையே🪷🪷🪷
ravi said…
குங்குமம் அணிந்த மங்கலத் தாமரைச்செல்வியே!

உன்னைப் பற்றி சிவனார் குறை கூற அதனால் வெகுண்டு நீ சினம் கொள்ள

அரன் உன் பாதங்களில் பணியும் போது உன் திருப்பாதங்களால் அவர் நெற்றியை விலக்கினாய்;

அப்போது அந்த அறை நெற்றிக் கண்ணிலும் பட்டது.

பழைய பகையைக் கருதியிருந்த மதன வேள் 'நான் இறைவனை வென்றேன். என்னை எரித்த நெற்றிக் கண்ணை வென்றேன்' என முழங்கிய குரலைப் போல் இருந்தது அங்கே எழுந்த சிலம்பின் ஓசை.👍👍👍
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 321* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*பத்ர* = மகிழ்ச்சியான - *மங்களமான மூர்த்தி* = வடிவம்

*116 பத்ரமூர்த்தி* = வளம் செழிக்கும் நற்பேறுகளின் உருவகமானவள்
ravi said…
116 * भद्रमूर्तिः - *பத்ரமூர்த்திர்* --

எதெல்லாம் புனிதமானதோ, அதெல்லாம் அம்பாள் தான்.

ப்ரம்மம் பரிசுத்தமானது.

அது அம்பாள்.

விஷ்ணுவை விஷ்ணு ஸஹஸ்ரநாமம் ''மங்களானாம் ச மங்களம்'' (நன்மை பயக்குவதில் எல்லாம் சிறந்த நன்மை) என்று சொல்வது இதையே தான்.👍👍👍
கௌசல்யா said…
அற்புதம்......பெரியவா....நின் திருவடிகள் சரணம் அடைந்தோர் பாபம் கரைந்தோடுமே கரை புரண்டு ஓடும் புனித கங்கை போலே....🙏🙏❣️❣️சரணம் சரணம் சரணம் 🙇‍♀️🙇‍♀️🍒🌹🌹🙏🙏
Sindhu said…
கண்ணன் அவனையே உருக வைத்து விட்டீர்கள் ஐயா 🙏🪷🌺
ravi said…
🌹🌺 *ஸ்ரீ கிருஷ்ணனை புரிந்தவர்கள் மகான் ஆகிறார்கள்* .
*புரியாதவர்கள்* , *மனிதனாக இந்த பூமியில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்* .….... - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹குரு ஸ்ரீ ஆதிசங்கரரிடம் ஒரு மாணவன், ஒரு கேள்வியை கேட்டான்! ‘குருவே! “நல்லதை படைத்த இறைவன் தானே, கெட்டதையும் படைத்துள்ளார்! நல்லதை, நாம் மனம் அப்படியே ஏற்கின்றது அல்லவா?

🌺நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் நம் மனது, எதற்காக, கெட்டதை ஏற்றுக் கொள்ளக் மறுக்கின்றது’? குரு ஸ்ரீ ஆதிசங்கரர், சிறிய புன்னகையோடு, ‘அது அவரவர் இஷ்டம்’ என்று சொல்லிவிட்டார்.

🌺சிறிது நேரம் கழிந்தது, இரவு நேர சாப்பாடு, சாப்பிடும் நேரம் வந்தது. குரு ஸ்ரீ ஆதிசங்கரர் தன்னுடைய சிஷ்யனுக்கு, உணவாக ஒரு டம்ளரில் பாலையும், ஒரு தட்டில் சாணத்தையும் கொடுத்தார்.

🌺இதைப் பார்த்த மாணவன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான்! குழம்பிய மாணவனின் மனதிற்கு குரு ஸ்ரீ ஆதிசங்கரர் பின்வருமாறு விளக்கம் அளித்தார்.

🌺‘பசுவிடமிருந்து தான் பால் வருகின்றது. சாணமும், அதே பசுவிடமிருந்து தான் வருகின்றது. பாலை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் நாம், எதற்காக சாணத்தை மட்டும் ஏற்க மறுக்கிறோம்?’

🌺பால் போன்று நன்மையைத் தரும் பொருட்களை நாம் நேரடியாக மகிழ்ச்சி என்று சொல்லி அனுபவிக்கின்றோம்.

🌺சாணத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அதை உரமாக்கி, மண்ணில் புதைத்து, அது தரும் நன்மையின் மூலம் பலன் அடைகின்றோம்.

🌺இதே போல் தான் வாழ்க்கையில் வரும் கெட்டதை மண்ணில் புதைத்து, அதிலிருந்து கிடைக்கும் நன்மையை, அனுபவங்களை நம்முடைய வாழ்க்கையின், உரமாக்கி முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றவாறு பதிலைக் கூறினார்.

🌺ஸ்ரீ கிருஷ்ணன் நமக்காக படைக்கப்பட்ட ஒவ்வொரு விஷயங்களிலும், பல மர்மங்கள் அடங்கி தான் இருக்கின்றது.

🌺ஸ்ரீ கிருஷ்ணனை புரிந்தவர்கள் மகான் ஆகிறார்கள்.
புரியாதவர்கள், மனிதனாக இந்த பூமியில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்

🌺இதுதானே வாழ்க்கை! ஒரு மனிதன் மகானாக மாறுவதற்கும், மீண்டும் மறுபிறவி எடுப்பதற்கும், அவரவர் வாழ்கின்ற வாழ்க்கையை, எந்த கண்ணோட்டத்தில் பார்த்து வாழ்கின்றார்கள், என்பதை பொறுத்தே அமைகின்றது.

🌺அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணனை, நினைத்து, உருகி, சிந்தித்து செயல்பட்டு, சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 Those who understand Sri Krishna become great.
Those who don't understand, keep taking birth again and again on this earth as human beings🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹A student asked a question to Guru Sri Adisankar! 'Master! “The Lord who created the good, created the bad too! Isn't the good thing accepted by our mind as it is?

🌺 Why does our mind, which only accepts the good, refuse to accept the bad? Guru Sri Adisankar, with a small smile, said, 'It is his will.'

🌺 Some time passed, it was time to eat dinner. Guru Sri Adisankar gave his disciple a tumbler of milk and a plate of dung as food.

🌺 Seeing this, the student was stunned for a minute! Guru Sri Adisankara gave the following explanation to the confused student's mind.

Milk comes from the cow. The dung also comes from the same cow. We who accept milk directly, why refuse to accept only dung?'

🌺 We directly enjoy things that give benefits like milk as happiness.

🌺 We don't accept dung as it is, we compost it, bury it in the soil, and benefit from its benefits.

🌺Similarly, we should bury the bad things that come in life in the soil and use the benefits and experiences that come from it for the improvement of our life. He replied.

🌺 In every thing created for us by Sri Krishna, many mysteries are included.

🌺 Those who understand Sri Krishna become Mahan.
Those who do not understand, take birth again and again on this earth as human beings

🌺This is life! For a man to become a great man and to be reborn again, it depends on the perspective from which he lives his life.

🌺 Everyone should think, melt, think and act of Sri Krishna and lead a great life 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
இனிய காலை வணக்கம்.
இந்தநாள் இனிய நாளாக அமைய நல்வாழ்த்துகள். தாங்களும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று நோயின்றி வளமுடன் மனநிம்மதியுடன் நீண்டகாலம் வாழ எங்கள் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள்.

*23td August, 2022*. Good Morning. Have a Blessed Tuesday. All Be blessed with good health, wealth and long life.

नमस्ते जी।. चुभ मंगलवार ।

सब लोग और परिवार अच्छी तरह रखने के लिए हम भगवान से प्रार्थना करेंगे।
🙏🙏🙏🙏🙏

बा। वेणुगोपालन। & परिवार।
तिरुविडैमरुदुर।
B.Venugopalan & Family, Thiruvidaimarudur.
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🛕🔔🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏

"ஸ்வாமிகள் எங்கே".பெரியவாளைப் பார்த்து தம்பதிகள்.

"சுவாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன். இருக்கும் இடம் தெரியவில்லை"- பெரியவா

(பெரியவாளுக்கு இந்த மாதிரி விளையாட்டெல்லாம் ரொம்ப பிடிக்கும். அவைகளைக் கண்டு ரசிக்க, அணுக்கத் தொண்டர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்! நமக்கும்தான்.)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பஞ்சாங்கத்தில் 'வபன பௌர்ணமி' என்று சில பௌர்ணமி திதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஸ்ரீ காமகோடி பீடாதிபதிகள் அன்றைய தினம்தான் க்ஷவரம் (முடி மழித்தல்) செய்து கொள்வது சம்பிரதாயம்.

ஒரு வபன பௌர்ணமிய ன்று மகா பெரியவாளுக்கு கடுமையான காய்ச்சல்.அதனால் வபனம் செய்து கொள்ளவில்லை.ஒரு வபன பௌர்ணமி தவறினால், அடுத்த வபன பௌர்ணமி வரைகாத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

காய்ச்சல் காரணமாக முடி மழித்துக் கொள்ளாததால், பெரியவாளுக்கு தலைமுடியும், தாடியும் மிகவும் வளர்ந்துவிட்டன.

அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில்,ஒரு மரத்தடியில் அமர்ந்து பெரியவாள் ஜபம் செய்து கொண்டிருந் தார்கள். அப்போது,ஒரு தம்பதிகள் அவசரமாக தரிசனத்துக்கு வந்தார்கள். ஏராளமான முடியுடனிருந்த பெரியவாளை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை யாரோ ஒரு சந்நியாசி என்று நினைத்து அவர்களைப் பார்த்தே, "ஸ்வாமிகள் எங்கே?" என்று கேட்டார்கள்.

பெரியவாள் கொஞ்சமும் பதற்றப்படாமல், "சுவாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன். இருக்கும் இடம் தெரியவில்லை" என்று, இரு பொருள் தொனிக்கப் பதில் கூறினார்கள்.

வந்தவர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. சுவாமிகளை தரிசிக்க வேண்டும் என்று ஆவலுடன் வந்தால், அவர் இருக்குமிடமே தெரியவில்லையாமே

எதிரே வந்த ஒரு தொண்டரிடம் விசாரித்தார்கள்.

அவர் மரத்தடியிலிருந்த பெரியவாளை சுட்டிக்காட்டி, "அதோ இருக்காளே!" என்று கூறியதும், தம்பதிகளுக்கு உடல் வெலவெலத்து விட்டது.

"எவ்வளவு பெரிய அபசாரம் செய்து விட்டோம்?" என்று தவித்துக் கொண்டிருந்த போது, பெரியவாளே அவர்களை கூப்பிட்டு அருகில் உட்காரச் சொன்னார்கள்

"தாடி ரொம்பவும் வளர்ந்துபோச்சு! அதனாலே என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியல்லே! நான் தான் உங்களை பயமுறுத்தியிருக்கேன்! பரவாயில்லை..." என்று அவர்களுக்கு மனத்திருப்தி ஏற்படும் வரை சமாதானமாகப் பேசி, பிரசாதம் கொடுத்தார்கள்.

பெரியவாளுக்கு இந்த மாதிரி விளையாட்டெல் லாம் ரொம்ப பிடிக்கும்.

அவைகளைக் கண்டு ரசிக்க, அணுக்கத் தொண்டர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்!

நமக்கும்தான்



ravi said…
*விவேகசிந்தாமணி*

*41: பேராசையுள்ளவர் பாடு*

பொருட்பாலை விரும்புவார்கள் காமப்பா லிடை மூழ்கிப் புரள்வர் கீர்த்தி, அருட் பாலாம் அறப்பாலைக் கனவிலுமே விரும்பார்கள் அறிவொன் றில்லார், குருபாலர் கடவுளர் பால் வேதியர் பால் புலவர் பாற் கொடுக்க ஓரார், செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே
கோடி செம்பொன் சேவித் தீவார்.

*பொருள்*

சிலர் பொருளை (பணத்தை) மிக விரும்புவார்கள். காமத்திற்கு செலவழித்து மூழ்கிப் புரள்வர், புகழையும் புண்ணியத்தையும் தரும் அறச்செயல்களைச் செய்ய கனவிலும் விரும்பமாட்டார், அறிவில்லாத இவர்கள் குரு, கடவுள், அந்தணர், ஏழைப் புலவர் இவர்களுக்கு கொடுக்க நினைக்க மாட்டார், செருப்பாலே அடித்து மிரட்டிப் பறிக்கும் தீயவர்களுக்கு பணிந்து கொடுப்பார்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*
ravi said…
அஜா ஏகாதசி 23.08.2022
*****************************
முன்வினை பாவங்கள் நீக்கும் அஜா ஏகாதசி விரதம்

இன்றைய தினம் அஜா ஏகாதசி. இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர்.

இந்நாளில் எவரொருவர் உபவாசம் இரு ந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிரா ரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவி னைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.

அஜாஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும். இந்த அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி, மகா பாரத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளக்கியுள்ளார்.

முன்னொரு காலத்தில், பகவான் ஸ்ரீராமர் தோன்றிய ரகு வம்சத்தில் அரிச்சந்திரன் என் றொரு அரசன் சத்தியம் தவறாது மா பெரும் வேந்தனாக அரசாண்டு வந்தான். அவனுக்கு சந்திரமதி என்ற மனைவியும், லோகிதாசன் என்ற மகனும் இருந்தனர். நாடும், அவனும் எந்த விதமான குறையும் இன்றி, சுபிட்சத் தோடு விளங்கியது.

அரிச்சந்திர மகாராஜா:
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விதிவசத்தால், அரிச்சந்திர மகாராஜா தனது நாடு, நகரம் அனைத்தையும் இழக் க நேரிட்ட தோடு, மனைவி, மக்களையும் விற்கும் மிகக் கொடிய நிலைக்கு தள்ளப் பட்டார்.

பக்திமானான அரிச்சந்திரனை நாய்களை உண்ணும் சண்டாள குலத்தவனுக்கு அடி மையாகி மயா னத்தைக் காக்கும் பணியி ல் அமரவைத்தது விதி. ஆனால் அந்நிலை யிலும் அரிச்சந்திர மகாராஜா தனது சுயத் தன்மையை இழக்கா மல் சத்தியத்தினை கைவிடாது கடைபிடித்து வந்தார்.

முனிவரின் ஆலோசனை:
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பல காலங்கள் கடந்தன. ஒரு நாள் அவர், நான் என்ன செய்வேன் ? இன்னும் எத்த னை காலம் இது போன்ற வேதனையில் வாடுவது, இதிலி ருந்து மீள வழியே இல்லையா? என்று மிகவும் வருந்தினார்.

அப்போது அதிர்ஷ்டவசமாக, அவன் அந்த வழியாக சென்ற கௌதம முனிவ ரைக் கண்டு தனது நிலைமையை எடுத்துக் கூறி, இதிலிருந்து மீள வழி கூறுமாறு வேண்டினார்.

ஏகாதசி விரதம்:
^^^^^^^^^^^^^^^^^^^
அரிச்சந்திரனின் சோக கதையைக் கேட்டு இரக்கம் கொண்ட முனிவர், அவருக்கு இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார்.

அரிச்சந்திரா, உன் நல்ல காலம், இன்னும் ஏழு நாட்களில் பாவங்கள் அனைத்தையும் நீக்கி மிகவும் நற்பலன்களை அளிக்க வல்ல அஜா ஏகாதசி எனப்படும் அன்னதா ஏகாதசி வரவிருக்கிறது. இந்நாள் மிகவும் மங்களமானது.

கண்விழித்து விரதம்:
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்நாளில், நீ இருக்கும் இந்த நிலையில் உன்னால் மற்ற அனுஷ்டானங்களைக் கடைபி டிக்க முடியாவிட்டாலும், உபவாசத் தை மட்டுமா வது ஏற்று, அன்று இரவு கண் விழித்து இறை வன் ஸ்ரீஹரியின் திருநா மத்தை உச்சரித்து கொண்டிரு . இதன் காரணமாக உனது முற்பிறவி பாவங்களி ல் இருந்து விடுதலை பெற்று நன்னிலை யை அடைவாய் எனக் கூறினார்.

ராஜ்ஜியத்தை அடைந்த அரிச்சந்திரன்:
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அரிச்சந்திரன், கௌதம முனிவரின் வழிகா ட்டு தலின் படி, அஜா ஏகாதசி நாளில் உபவாச ம் இருந்து அவனது பாவங்கள் அனைத்தும் நீங்கி, மீண்டும் நாடு நகரத்தி னை பெற்று நன்னிலையை அடைந்தான்.

இந்த விரதத்தி ன் பலனால் மாயையின் காரணத்தால் உயிரி ழந்த மகனை மீண்டு ம் அடைந்ததோடு, மனை வியுடன் ஒன்று சேர்ந்து மீண்டும் ராஜ்ஜியத்தினை அடை ந்தார் என்று ஸ்ரீகிருஷ்ணர் தர்மருக்குக் கூறி முடித்தார்.

அஜா ஏகாதசியின் சிறப்புகள்:
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அதோடு அவர் யுதிஷ்டிரனிடம், "பாண்டு புத்ரா, நீயும் இப்போது இந்த அஜா ஏகாத சியின் சிறப்புகளை அறிந்து கொள்.." எனக் கூறத் தொடங்கினார். இந்நாளில் மேற்கொள்ளும் விரதம் நாம் முற்பிறவி களில் செய்த பாவங்க ளின் விளைவால் இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களை உடனடியாக நீக்க வல்லது. இதனால் அவர்கள் அனைவரும் இறுதியி ல் பக்தி லோகத்தை அடைவர் என்று கூறினார்.

அஸ்வமேத யாகம் செய்த பலன்:
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எவரொருவர், இந்நாளில் இந்த விரதத்தி ன் மகிமையை விவரிக்கும் இந்தக் கதை யினை கேட்கிறாரோ அல்லது படிக்கிறா ரோ அல்லது சொல்கிறாரோ அவர் அஸ்வ மேத யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறி முடித்தார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்கின்றது.

ஜெய் ஸ்ரீ ராம்... ஓம் நமோ நாராயணாய...
22.08.2022... நேசமுடன் விஜயராகவன்....
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 98*
ravi said…
அடுத்த ஸ்லோகம்

तृष्णातोये मदनपवनोद्धूतमोहोर्मिमाले दारावर्ते तनयसहजग्राहसङ्घाकुले च ।

संसाराख्ये महति जलधौ मज्जतां नस्त्रिधामन् पादाम्भोजे वरद भवतो भक्तिनावं प्रयच्छ ॥ १६ ॥

த்ருʼஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே

தா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச ।

ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்

பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² ॥ 16 ॥

ன்னு ஒரு ஸ்லோகம்.
ravi said…
பூர் புவஸ் ஸ்வாஹங்கிற மூவுலகங்கள்ல இருக்கார் அப்படீன்னு த்ரிதா⁴மன் என்கிறதுக்கு பல அர்த்தங்கள் கொடுத்திருக்கார்.

அப்படி மூன்று இருப்பிடங்களைக் கொண்ட நாராயணா! *பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தி நாவம் ப்ரயச்ச²*

உன்னுடைய பாத தாமரைகளில் வரத! வரம் அருளுபவனே *ப⁴க்திநாவம் ப்ரயச்ச²* –

பக்தி என்ற படகை கொடு. நீ வரம் கொடுப்பவன். அதனால் உன்கிட்ட இந்த வரம் கேட்கறேன்.

உன்னுடைய பாத பக்தி என்ற அந்த படகை கொடுத்தால் அந்த படகுல ஏறிண்டு இந்த ஸம்ஸாரக் கடலை நான் தாண்டிடுவேன்னு சொல்றார்🚝🚄🚅
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

முன் காலங்களில் ஸர்வ ஜனங்களுக்கும் சாஸ்த்ராபிமானம், தெய்வத்திடம் பய பக்தி, அதனால் தப்புப் பண்ணுவதிலே பயம், அடக்க குணம் முதலியன இருந்தன. அதனால் ஸகல ஜாதியாருமே இன்றைக்கு இருப்பதைவிடக் கட்டுப்பாட்டுடன் (இந்திரிய நிக்ரஹத்தில் கூட இன்றைவிடக் கட்டுப்பாட்டுடன்) இருந்து வந்தார்கள். இப்போது ஸினிமா, ட்ராமா, நாவல் எல்லாம் ஸ்வதந்திரப் போக்கு என்று சொல்லி ஜனங்களைத் தறிகெட்டு அலையப் பண்ணியிருக்கிற மாதிரி அப்போதில்லை. இந்திரிய சாபல்யத்துக்கு இப்போது திரும்பின இடமெல்லாம் தீனி போட்டு வளர்ப்பது போல அப்போது இல்லை.
ravi said…
அதனால் மது மாம்ஸாதிகள் சாப்பிடுபவர்கள் கூட அதிலே ஓர் அளவு, ஒழுங்கு வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இன்றைய ஜனங்கள் மாதிரி இல்லாமல் சரீரத்தால் நன்றாக உழைக்கவும் உழைத்தபடியால் அந்த ஸாமான்கள் அவர்களுக்கு தேஹ ரீதியிலோ, மனோ ரீதியிலோ கெடுதல் பண்ணவில்லை. ஆனால் இப்போதுள்ள பொது ஜனங்களின் ஸ்வபாவம், வேலை முறை எல்லாமே மாறி, சூழ்நிலையும் கெட்டுப் போயிருப்பதால் அந்தக் காலத்தைவிட இந்தக் காலத்தில் ஸகல ஜாதியாருமே மரக்கறி உணவுப் பழக்கத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக வளர்த்துக் கொள்வது நல்லது; கள்ளு குடி முதலியவற்றை விடுவதும் நல்லது.
ravi said…
அதோடு இப்போது ஆபீஸ், குடியிருப்பு எல்லாவற்றிலும் எல்லா ஜாதியாரும் முன்னைவிட நெருங்கி வாழும்படியாகியிருக்கிறது. பிராம்மணாசாரங்களை மற்றவர்கள் முடிந்தமட்டும் எடுத்துக் கொள்வதே இதுவரை வழக்கமாயிருந்திருக்க, இப்போது பிராம்மணன் மற்றவர்கள் பண்ணுகிற மாதிரித் தானும் செய்வதாக ஏற்பட்டிருக்கிறது! புலால் உணவுக்காரர்களுடன் நெருக்கமாக வாழ்வதால் மரக்கறி உணவுக்காரர்கள் அந்த வழக்கத்தை எடுத்துக்கொண்டு விடப் போகிறார்களே என்று பயமாக இருக்கிறது. அவ்வப்போது ஒவ்வோரிடத்தில் இப்படிக் கேள்வியும் படுகிறோம். ஆனால் இன்னமும் நிலைமை கை மீறி விடவில்லை. இந்தியாவில் மட்டும் எல்லா ஜாதி ஜனங்களும் …. நினைத்துப் பார்க்கவே கஷ்டமாயிருக்கிறது …. நான்-வெஜிடேரியன்களாகி விட்டார்களென்றால் லோகத்துக்கே ஒரு பெரிய ‘ஐடியல்’ நஷ்டமாகிவிடும். அப்புறம் அதை ஒரு காலத்திலும் ஈடு செய்யவோ அதற்குப் பரிஹாரம் காணவோ முடியாது. இன்றைக்கும் நமக்கு ஏதாவது துளிப் பெருமை ஒட்டிக் கொண்டிருக்கிறதென்றால், அது லோகத்திலேயே மிகப்பெரிய ஜனஸமூஹம் வெஜிடேரியன்களாக உள்ள தேசம் நம்முடையதுதான் என்பதே. ஹிந்து என்றால் அஹிம்ஸாவாதி என்றே லோகத்தில் இன்னமும் பரவலாக நல்லபிப்ராயம் இருக்கிறது.
ravi said…
*"தேக நலன் சீராக இருக்க மகாபெரியவா சொன்ன இந்த சுவாசக் கணக்கு"*.

மகாபெரியவர் வடநாட்டுக்கு யாத்திரை செய்துவிட்டு, திரும்ப வந்து ஸ்ரீமடத்தில் அருள்பாலித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது.

பல ஆயிரம் மைல்கள் நடந்தே சென்று யாத்திரை செய்த களைப்பு கொஞ்சமும் முகத்தில் தெரியாமல் அன்றைக்கு மலர்ந்த பூப்போல அமர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார் மகான்.

அந்தச் சமயத்தில் அவரைத் தரிசிக்க வந்தவர்களில் நடுத்தர வயதுக்காரர் ஒருவர், மகான் முன்னிலையில் வந்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.

அப்படிக் கும்பிட்ட பிறகு எழுந்திருக்கவே முடியாமல் சிரமப்பட்டார்.

அதோடு மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து கொண்டு பெருமூச்சு விட்டார்.

அவர் சிரமப்படுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார், பெரியவா.

வணங்கி விட்டு எழுந்தவர் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினார்.

“சுவாமி என் உடல் நிலை இப்படித்தான் அடிக்கடி சங்கடப் படுத்துகிறது. கொஞ்சம் வேகமாக நடந்தால் கூட மூச்சு வாங்குகிறது..!” என்றார்.

அவர் சொன்னதற்கு பதில் எதுவும் சொல்லாமல், “நீ என்ன உத்யோகம் பார்க்கிறாய்?” என்று கேட்டார் மகான்.

“கணக்கு வாத்யாராக இருக்கிறேன்.!” சொன்னார், அவர்.

“அப்படியானால் உனக்குப் புரியும்படி கணக்காகத்தான் சொல்ல வேண்டும். அதற்கு முன்னால் ஒரு கேள்வி.

நீ தேகாப்யாசம் (உடற்பயிற்சி) ஏதாவது செய்கிறாயா? பெருமூச்சு வாங்குகிறது என்கிறாயே,
அப்படியென்றால் சாதாரணமாக எப்படி மூச்சு விடுவது என்று உனக்குத் தெரியுமா? மகான் கேட்க, எல்லோருடைய கவனமும் அங்கே திரும்பியது.

வந்தவர் அமைதியாகவே நிற்க, மகான் தொடர்ந்தார்.

“இந்த உலகத்துல எல்லாத்துக்குமே ஒரு கணக்கு உண்டு. அது எப்படின்னா, வரவுக்கும் செலவுக்கும் சமமா இருக்க வேண்டும் என்கிற கணக்கு.

ஒருத்தரிடம் கைமாற்றாக ஒரு தொகையை வாங்கினால், அதைத் திருப்பித் தரும் போது முழுசாகத் திருப்பித் தர வேண்டும்.

இல்லையென்றால் அந்தக் கணக்கு சரியாகாது. என்ன நான் சொல்கிற கணக்கு சரிதானே?

கேட்டு நிறுத்திய மகான், சின்ன இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

இதே கணக்குதான் நாம் உயிரோடு இருக்க அத்தியாவசியமான மூச்சு விடுகிறதில் உள்ள கணக்கும்.

மூச்சில் எந்த அளவுக்கு காற்றை உள்ளே வாங்குகிறோமோ, அது வரவு. அதே அளவைத் திருப்பி வெளியே விடவேண்டும். இது செலவு.

தூங்கிக் கொண்டிருந்தாலும் இதைச் சரியாகச் செய்ய வேண்டும். அதுதான் ஆரோக்யக் கணக்கு.

உள்ளே இழுக்கும் காற்றும், வெளியே விடும் காற்றும் சம அளவாக இருக்கும்படி பழகிக் கொண்டால், பெரும்பாலான உடல் உபாதைகளே வராது.

ஆனால், பொதுவாக எல்லோரும் என்ன செய்கிறோம்? எது நமக்கு நல்லது செய்யக் கூடியதோ..

எது நம்முடைய வாழ்க்கையில் அத்யாவசியமோ அதையெல்லாம் கவனிப்பதில் அலட்சியமாக இருக்கிறோம்.

ஒரு நாளைக்கு 21600 முறை சுவாசிக்கணும். அதாவது ஒரு சுவாசத்துக்கு சராசரியாக நாலு செகண்ட் எடுத்துக்கணும்.

இந்தக் கணக்கை எத்தனை பேர் சரியாகச் செய்கிறோம்?

கோபம் வந்தால், சுவாசம் எகிறுகிறது. கஷ்டம் வந்தால் தாறுமாறாகிறது.

கவலை வந்தால் சுவாசிப்பதில் சிரமம். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் எது முக்கியமோ அதை அலட்சியப் படுத்துகிறோம்.

அப்படித் தப்பாகிப் போகிற சுவாசத்தை…சுவாசக் கணக்கை குறிப்பிட்ட நேரம் வரைக்குமாவது சரியாகச் செய்யக் கற்றுக் கொள்ளத்தான், அமைதியாக சுவாமி கும்பிடுவது, தியானம் செய்வது, யோகாப்யாசம் செய்வது, ஸ்லோகங்கள் சொல்வது இப்படிப் பல விஷயங்களை வைத்திருக்கிறார்கள்.

அப்படிக் கொஞ்ச நேரம் பழகினால் அதுவே படிப்படியாக முழு நேரப் பழக்கமாகிவிடும்.

“முதலில் நீ ஒன்று செய். வீணாக உணர்ச்சி வசப்படுவதைத் தவிர். அனாவசிய டென்ஷன், வீண் கோபதாபம், விருப்பு வெறுப்பு போன்றவற்றுக்கு இடம் தராமல், சுவாமி நினைவோடு இரு. அப்படி இருந்தால், சுவாசம் சீராகும். பிறகு ஆரோக்யம் தானாக சீராகும். ஆயுசும் வளரும்!”

பெரியவா சொல்லி முடிக்க, பிரசாதம் பெற்றுக் கொண்டு நகர்ந்தார் அந்த பக்தர்.

தேக நலன் சீராக இருக்க மகாபெரியவா சொன்ன இந்த சுவாசக் கணக்கு, அந்த பக்தருக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே பொருந்தும் என்பது உண்மை.

*kn*
ravi said…
ஹிந்து’ என்ற வார்த்தை அந்நிய தேசத்தார் நமக்கு வைத்த பெயர்தான்* நம்முடைய சாஸ்திரங்களில் அந்தப் பேரைப் பார்க்கவே முடியாது. ஆனால் பிற்காலத்தில், வெளிதேசத்தார் வைத்த ‘ஹிந்து ‘என்ற பெயரையே ஸம்ஸ்கிருத ‘ரூட்’டிலிருந்து வந்த மாதிரி நம்மவர்கள் அர்த்தம் பண்ணியிருக்கிறார்கள் – அதாவது ” ஹிம்ஸாயாம் தூயதே ய: ஸ ஹிந்தூ(இ)த்யபிதீயதே” என்று! ஹிம்ஸையில் எவன் ரொம்பவும் துக்கப்படுகிறானோ அவனே ஹிந்து என்று இதற்கு அர்த்தம். இது சமத்காரமாகப் பண்ணியது என்றாலும் ஹிந்து மதஸ்தர்கள் அஹிம்ஸைக்காரர்கள் என்பதால்தானே இப்படி ஒரு ‘டெஃபனிஷன்’ கொடுக்க முடிந்திருக்கிறது? இந்தப் பெரிய கௌரவம் நமக்குப் போகப்படாது என்றால், முன்னைவிட எல்லா ஜாதியாரும் கலந்து கொண்டு வாழும்படியாக இருக்கிற இந்தக் காலத்தில் புலால் உணவுக்குப் பழக்கப்பட்டவர்களும் முன்னைவிட மரக்கறி உணவில் அதிக நாட்டம் கொள்வது நல்லதென்று தோன்றுகிறது.
ravi said…
*மஹா பெரியவா அருள்வாக்கு* * பிறரது குறைகளை வெளிப்படுத்தக் கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே பார்க்க வேண்டும்.
* தேவை அதிகரிக்கத் தொடங்கினால் மனதில் அமைதி இருக்காது. குறைத்துக் கொண்டால் நிம்மதி தேடிவரும்.
* எண்ணத்தைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். ஆனால், எண்ணியதை எல்லாம் பேசுவதையாவது குறைக்க முயற்சியுங்கள்.
* கடவுளின் நாமத்தைச் சொல்வதற்கோ, பக்திப் பாடலைப் பாடுவதற்கோ வெட்கப்படக் கூடாது. கடவுளின் நாமத்தால் பாவம் மறைந்தோடும்.
* வாழ்க்கை முறை சாத்வீகமாக இருந்தால், நம்மைச் சுற்றிலும் அமைதி பரவும். குடும்பமும் சமுதாயமும் பயன்பெறும்.
* மனதில் ஆயிரம் தீயஎண்ணங்களை வைத்துக் கொண்டு மற்றவருக்கு உபதேசம் செய்வதால் பயன் இல்லை.
* 15 நாளைக்கு ஒருமுறையாவது விரதம் இருக்கவேண்டும். மற்ற நாட்களிலும் மிதமாக உண்ணவேண்டும். *- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்*.


பெரியவா சரணம்
கோ ஸம்ரக்ஷணை : தெய்வத்தின் குரல்

ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுவுக்காவது ஒரு பிடி புல் கொடுக்க வேண்டும்; தோட்டம் உள்ள எல்லோரும் அதில் கொஞ்சமாவது மாட்டுக்கேற்ற அகத்திக்கீரை போடவேண்டும் என்றெல்லாம் ஏற்பாடு செய்து அதன்படியே ரொம்பப் பேர் நடத்தி வந்தார்கள். மாட்டுக்கு ஒரு பிடி என்பதை ” கோ க்ராஸம் ” என்று சொல்லியிருக்கிறது. இதிலிருந்துதான் இங்கிலீஷில் புல்லுக்கு ”க்ராஸ்” என்று பேர் வந்ததோ என்னவோ? மேய்ச்சல் நிலமெல்லாம் குடியமைப்பாயும், தார் ரோடாயும் மாறி வருவதால் நம் கொல்லையிலேயே துண்டு இடமிருந்தால் அதில் ஆத்தி, அறுகு வைத்துக் கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

இதற்கெல்லாமாவது கொஞ்சம் செலவு, த்யாகம் பண்ண வேண்டியிருக்கிறது. இதுகூட இல்லாமல், நம் அகத்தில் கறிகாய் முதலியவற்றை நறுக்கும் போது தோலை வீணாகத்தானே போடுகிறோம்? அப்படிப்போடாமல், சிலர் வீடுவீடாகப்போய் இந்தத் தோலை எல்லாம் ‘கலெக்ட்’ பண்ணி மாடுகளுக்குப் போட ஏற்பாடு பண்ணினோம். நான் திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி அநேக இடங்களில் இந்தக் கார்யம் நடந்தது. இப்போதும்கூடப் பல இடங்களில் தொடர்ந்து நடக்கிறது.

உண்டி வாயிலே மெகானிகலாகப் பணத்தைப் போடுவது பெரிசில்லை. அதுவும் இப்போது இருக்கிற inflation -ல் எவரும் ஏதோ கொஞ்சம் உண்டியில் போட்டு விட்டுப் போய்விடலாம். அதுவும் பண்ணவேண்டியது தான். ஆனாலும் இப்படி மெகானிகலாக உண்டி வாயில் போடுவதைவிட, ஒரு செலவும் நமக்கு இல்லாமலே கறிகாய்த் தோல்களை நேரே உயிருள்ள ஒரு பசு வாய்க்குப் போட்டு, அது தின்பதைப் பார்த்தால், இதில் நமக்குக் கிடைக்கிற உள்ள நிறைவே அலாதி என்று தெரியும். ஸேவையிலே இதுதான் முக்யமான அம்சம்;அதில் பணமும் உழைப்பும் பேசுவதைவிட ஜீவனோடு ஜீவன் பேச வேண்டும்.

ஸேவை செய்கிறவர்கள் ஸங்கமாக ஒன்று கூடும்போது இப்படி உயிர்த் தொடர்பு ஏற்படுவது மட்டுமின்றி, ஸேவைக்குப் பாத்திரமாகிறவர்களையும் நேரே தங்ளோடு தொடர்பு படுத்திக்கொள்ள வேண்டும். ஒரே ஈஸ்வரன்தானே இத்தனை ஜீவன்களுமாகியிருப்பது? ஜீவலோகத்துக்குச் சொரிகிற அன்பினால், ஸேவையால் அந்த ஈஸ்வரத்வத்தை அநுபவித்து அவனுக்கு வழிபாடாகவே இதைச் செய்வதுதான் ஸேவையின் ஸாரம்.

கும்பிக்கு இரைதேடிக் கொடுப்பார் இடம்தோறும்
வெம்பித் திரிகை விடுப்பது இனி எக்காலம்? 37
ravi said…
❤ ஸ்ரீ மாத்ரே நம:❤
28/08/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் ஆவணி மாத பூர நட்சத்திரத்தை முன்னிட்டு
ஸ்ரீ லலிதா மஹா த்ரிபுர ஶுந்தரி ௮ம்பாளுக்கு விசேஷ நவ கலஸ ஸ்நபந மஹா அபிஷேகம் ஹோமத்துடன் நடைபெற்று ஷோடஸ உபசாரத்துடன் மஹா தீபாராதனை நடைபெற உள்ளது.
🙏 அனைவரும் வருக! அம்பிகையின் அருள் பெருக! 🙏
ravi said…
*கந்தர் அலங்காரம் 39* 🐓🦚🙏

*அலங்காரம்-11:*

சொல்லுகைக்கு இல்லை என்று, எல்லாம் இழந்து,

சும்மா இருக்கும்
எல்லையுள் செல்ல என்னை விட்டவா!

இகல் வேலன், நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக், கல்வரை

கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப்

புல்கின்ற மால்வரை தோள் அண்ணல் வல்லபமே!🦚
ravi said…
இப்போ சொல்லுங்க, சும்மா இருத்தல் என்றால் என்ன?

மெய்யாலுமே ஒருத்தர் சும்மா இருக்கத் தான் முடியுமா? கடவுளையாச்சும் நினைப்போம்-ல? சும்மா கிட! அது கூட வேணாம் என்றா சொல்லி இருப்பாரு அருணகிரி?

அப்படின்னா இதுல வேற ஏதோ ஒரு விஷயம் இருக்கணும், இல்லையா?

அந்த வரியை இன்னொரு முறை நல்லாப் பாருங்க! = எல்லாம் இழந்து, சும்மா இருக்கும், எல்லையுள் செல்ல, எனை விட்டவா!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 320*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி ல 38 வது ஸ்லோகம் பார்க்கலாம்.

ரொம்ப அற்புதமான ஒரு கவிதை,

இந்த மாதிரி கவிதைகள் படிக்கறதுனாலயே நம்ப ரொம்ப பாக்கியசாலிகள்.

ஆதிசங்கரர் works படிக்கிறவா எல்லாரும் பாக்கியசாலிகள்.

प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः
सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः ।
चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः
प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते ॥ ३८॥

ப்ராக்புண்யாசலமார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉ப்ரஸன்ன꞉ ஶிவ꞉

ஸோம꞉ ஸத்³கு³ணஸேவிதோ ம்ருʼக³த⁴ர꞉ பூர்ணஸ்தமோமோசக꞉.

சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேதா³னந்த³பாதோ²நிதி⁴꞉

ப்ராக³ல்ப்⁴யேன விஜ்ருʼம்ப⁴தே ஸுமனஸாம்ʼ வ்ருʼத்திஸ்ததா³ ஜாயதே
ravi said…
இந்த ஸ்லோகதில் பரமேஸ்வரனை *சந்திரனா* சொல்றார்.

சந்திரன்ங்கிறதுக்கு எப்படி அர்தங்றத சொல்றேன்.

*“ப்ராக்புண்யாசலமார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉”*

*ப்ராக்னா* – கிழக்கு. கிழக்குதிக்கில்,

“ *புண்யாசல* ” – புனிதமான மலைகளின் நடுவில், அந்த மார்கத்தில்,

“ *த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉* ” – காணப்படும் அம்ருத வடிவானவர், இது சந்திரன்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 317* 👏👏

12th Sep 2021🙏🙏🙏


ஈச்’வரோ விக்ரமீ தன்வீ
மேதாவீ
விக்ரம *க்ரம* : |

🪷🪷🪷
ravi said…
*80. க்ரமாய நமஹ (Kramaaya namaha)*
ravi said…
உறங்காப்புளி, தோலா வழக்கு, ஊறாக் கிணறு, காயா மகிழ் – திருக்கண்ணங்குடி”

என்ற தொடரை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இது எப்படி வந்தது?

திருமங்கையாழ்வார் திருவரங்கநாதனுக்கு மதில் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது,
கட்டிடப் பணிக்குத் தேவையான பொருள் ஈட்ட என்ன வழி என்று சிந்திக்கலானார்.

அப்போது நாகப்பட்டினத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலை ஒன்றுள்ளது.

அதை விற்றால் மதில் கட்டுவதற்குத் தேவையான
பணம் கிடைத்துவிடும் என்று சிலர் தெரிவிக்க உடனே நாகப்பட்டினம் சென்றார்.

அச்சிலையைப் பார்த்து, ‘உனக்கு ஈயம், இரும்பு, மரம், பித்தளை, செம்பு போன்றவை போதாதா தங்கச்சிலை தான் வேண்டுமா?’ என்று கேட்டார்.🪷🪷🪷
ravi said…
கண்ணா* ...

என் மனமே உன் கோகுலம் அன்றோ

அங்கே நீ திருடிய வெண்ணெயும் தயிரும்

கருமை கொண்ட
என் மனம் அதை வெண்மை ஆக்கியதன்றோ ...

*கண்ணா*

என் ஆத்மா நீ உறங்கும் மதுராவன்றோ *கண்ணா*

அங்கே மதுரம் என்றே உன் நாமம் என் அதரம் தனை தன் பள்ளியறை ஆக்கிக்கொண்ட
தன்றோ *கண்ணா* ..

என் இதயம் உன் துவாரகை அன்றோ *கண்ணா*

அங்கே அரசாளும் ஆதிக்கம் உனக்கு மட்டுமே அன்றோ ?

என் கண்கள் நீ மகிழும் பிருந்தாவனம் அன்றோ *கண்ணா* ...

எங்கும் உன் நிழல் கண்டே

அங்கே பொங்குவது என் கண்ணீர் எனும் யமுனையன்றோ *கண்ணா*

🪷🪷🪷🙏🙏🙏
ravi said…
எருமை சவாரியும் எட்டி உதைத்த திருப்பாதமும்*👣👣
ravi said…
எருமை அன்று உறும கருமை கொண்ட காலன் 🐃

வறுமை கொண்ட மனதிலே

சிறுமை எண்ணம் தோன்றவே

பொறுமை தொலைத்து சென்றான்

அருமை எந்தன் சிவமென்று

உரிமை அதில் மிகக்கொண்டு

தன் நிலைமை கண்டு கடமை சிவநாமம் ஒன்று உரைப்பதே என்றே கட்டி பிடித்திருந்தான் சிவனை அன்று மார்க்கண்டேயன்

தனிமை கொண்ட வாழ்விலே பெருமை ஒன்று உளதோ...

பெண்மை தனை மேனிதனில் பாதி பாதி கொடுத்தவன் தேடி தேடி வருவானோ?

தேவர்க்கும் கிட்டா தேனமுதம் அவனே அன்றோ ?

சிவநாமம் அதுரம் தனில் மதுரம் என பொழிந்திருக்க

சிந்தனை, விடை ஒன்றை விடையேறும் கடை தீரும் படை கொண்ட பாம்பாட்டி தனில் நிலைத்திருக்க

காலன் ஒர் காளானாய் பாசம் கொண்ட இறை தொழும் பக்தன் மீது தன் பாசக் கயிறு தனை வீசினான்

வீசிய கயிறு காலன் தன் கழுத்தை நெருக்க

பிறர் படும் துன்பம் அறிந்தான் முதன்முதலாய் காலன் அன்றே

வாயில் நுரை தள்ள கண்கள் மேல் நோக்கி நிலைத்திருக்க

உள் நாக்கு வெளி வந்து காற்று வாங்கியதே !

கதறினான் காலன் .. இறுதி மூச்சு நிற்க மரணம் அன்று மரணம் எய்தியதே

தேவர் வணங்க பூதேவி கெஞ்ச மீண்டும் உயிர் தந்தான் காலனுக்கு ..

*காலனே*

உன் கடமை அறிவேன் ... எனை வணங்கும் உயிர்கள் எனை சேரும் ஒரு நாள் ...

உயிர் எடுக்கும் உரிமை இனி உனக்கில்லை...

மார்க்கண்டேயன் என்றும் பதினாறு ... பிறப்பும் இல்லை மூப்பும் இல்லை ...

*ஐயனே* இனி ஒருவன் இதுபோல் இனி பிறப்பனோ ...

ஏழை நான் அவன் இருக்கும் பக்கம் சிரம் வைத்து உறங்கேன்

சிரித்தான் ஈசன் ..

ஒருவன் வருவான் கலியுகம் தனில் ..

அவன் உயிர் எடுக்கும் எண்ணம் உனக்கும் வாரா ..

உத்தமன் உயர்ந்தவன் நல்ல குணம் பெற்றவன்

பேயேன் மனையாள் பாதம் ஒன்றே உயிர் என வாழ்பவன் ...

பெரியவன் அதனால் குருவும் ஆனவன் ..

என்றும் இந்த நிகழ்வு உன் நினைவில் நிழலாடும் அவன் நிழல் கண்டே ...

*ஐயனே*

ஓர் உதை போதும் இனியொரு உதை வாங்கேன் ..

உதிக்கும் அந்த செங்கதிர் காண செல்கின்றேன் காஞ்சி நகருக்கே 👌👌👌
ravi said…
அகிலாண்ட கோடி பிரமாண்டநாயகன் மீனாட்சி சுந்தரேசுவரரின் திருவிளையாடல்கள் ஆரம்பம்
🪷🌿🪷🌿🪷 *மதுரை அருள்மிகு மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில்*💢 *ஆவணி_மூலதிருவிழா*-22
23.08.22 - காலை ஆவணி_மூலதிருவிழா_கொடியேற்றத்துடன் ஆரம்பம்💢

Madhurai Sri Meenakshi_Sundareswarar Temple💢Aavani Festival 2022💢Started with flaghoisting today Morning 23.08.22
🌿🪷🌿🪷🌿🪷
23.08.2022 முதல் 28.08.2022 வரை தினமும் இரவு - சந்திரசேகரர் உற்சவம்
✨✨✨✨✨✨
29.08.2022- காலை - கருங்குருவிக்கு_உபதேசம்_செய்த_லீலை
மாலை - சுவாமி கற்பகவிருட்சம்,
அம்பாள் -வெள்ளி சிம்ம வாகனம்
✨✨✨✨✨✨
30.08.2022 - காலை - நாரைக்கு_முக்தி-கொடுத்த_லீலை
மாலை -சுவாமி பூத வாகனம்,அன்ன வாகனம்
✨✨✨✨✨✨
31.08.2022 - காலை - மாணிக்கம்_விற்றலீலை.மாலை - கயிலாய பர்வதம் , காமதேனு வாகனம் .
✨✨✨✨✨✨
01.09.2022- காலை - தருமிக்கு_பொற்கிழி_அளித்த_லீலை
மாலை -சுவாமி தங்க சப்பரம், யானை வாகனம்
✨✨✨✨
02.09.2022 - காலை - உலவாக்கோட்டைஅருளிய_லீலை
மாலை-சுவாமி-அதிகாரநந்தி,அம்பாள் யாளி வாகனம்
✨✨✨✨✨✨
03.09.2022 - காலை - பாணனுக்கு_அங்கம்_வெட்டிய_லீலை
மாலை - சுவாமி தங்கரிஷபவாகனம் அம்பாள் வெள்ளி ரிஷப வாகனம்
✨✨✨
04.09.2022 - காலை - வளையல்_விற்ற_லீலை. இரவு -7.35-7.59 அருள்மிகு சுந்தரேஸ்வர சுவாமி பட்டாபிஷேகம் ✨✨✨✨✨✨
05.09.2022 - காலை - தங்க சப்பரம்
மாலை-நரியை_பரியாக்கிய_லீலை, சுவாமி,அம்பாள் தங்க_குதிரைவாகனம் , திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், திருவாதவூர் மாணிவாசகப் பெருமான் எழுந்தருளல்
✨✨✨✨✨
06.09.2022 -செவ்வாய் காலை சொக்கநாதப்பெருமான்_பிட்டுத்தோப்புக்கு எழுந்தருளி பிட்டுக்கு_மண்_சுமந்த_லீலை மதியம் 02.35-02.59மணிக்குள் மண்_சாத்துதல்.மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி_ரிஷப வாகனத்தில் திருக்கோயிலுக்கு எழுந்தருளல். ✨✨✨✨✨✨
07.09.2022 -மாலை 4.30மணி-விறகு_விற்றலீலை ✨✨✨✨✨✨
08.09.2022 - காலை 10.30 சட்டத்தேர்
மாலை 7 மணிக்கு சப்தாவர்ணசப்பரம்
✨✨✨✨✨✨
09.09.2022 - மாலை பொற்றாமரை_குளத்தில் தீர்த்தவாரி.
இரவு-வெள்ளி_ரிஷபவாகனம்
✨✨✨✨✨✨
உற்சவ தினங்களில் ஆவணி மூல வீதிகளில் புறப்பாடு நடைபெறும் . ✨✨✨✨✨✨
பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்- திருவாசகம்.
🌿🪷🌿🪷🌿🪷 🌙சொக்கே⭐ நின் தாளே👣 துணை🙏🏻
ravi said…
🌹🌺 ' *நாரதா* ..... *உன் நோக்கம் உயர்வாக இருக்கும் போது அதில் நடக்கும் செயல்களை கண்டு நீ ஏன் வருந்தவேண்டும் என்ற ஸ்ரீமந் நாராயணன்* .….... - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹ஒரு முறை நாரத -மகரிஷி கவலையுடன் காணப்பட்டார்.*
அவரது கவலையை கண்ட அன்னை மஹாலக்ஷ்மி மகனே ஏன் கவலையாக இருக்கிறாய் என்று கேட்டாள்-.

🌺நாரதர் --தாயே நான் செய்யும் செயல்கள் யாவும் இறுதியில் நன்மையில் முடிந்தாலும் அந்த நேரம் ஏற்படும் கலகங்களுக்கு நான் தானே காரணமாக விளங்குகிறேன் அதை எண்ணித்தான் வருத்தமாக உள்ளது தாயே என்றார் --

🌺மஹாலக்ஷ்மி ---நாரதா அப்படி என்றால் ஒன்று செய் --ரிஷிகேசம் சென்று புனித கங்கையில் நீராடி விட்டு வா உன் கவலை யாவும் போய்விடும் பாரேன் என்றாள்--

🌺நாரதரும் ரிஷிகேசம் வந்தார் .
கங்கையில் நீராடலாம் என்று நினைக்கும் போது பல வண்ணங்கள் கொண்ட விசித்திரமான மீன் ஒன்று நீரில் நீந்திக்கொண்டே நாரதரிடம் ---என்ன நாரதரே சௌக்கியமா என்றது ---

🌺பேசும் மீனை அதிசியமாக பார்த்துக்கொண்டே நாரதர் ---
ம்ம்.... ஏதோ சௌக்கியமாக இருக்கிறேன் நீ நலமா மீனே என்று நாரதர் திருப்பி மீனிடம் கேட்டார் --

🌺-மீன் கொஞ்சம் சலித்து கொண்டே நானும் ஏதோ நலமாக இருக்கிறேன் நாரதரே என்றது ---

🌺நாரதர் --ஏன் மீனே உன் சலிப்புக்கு என்ன காரணம் ஏதாவது தேவையா என்று சொல் நான் வரவழைத்து தருகிறேன் என்றார் --

🌺மீன்--நாரதரே என் நலத்தில் ஒன்றும் குறைச்சல் இல்லை ஆனால் ---நாரதர் ---ஆனால் ---

🌺மீன் ---ஒரே தாகமாக இருக்கிறது குடிக்க தண்ணீர் தான் கிடைக்க மாட்டேங்கிறது அதுதான் என் சலிப்புக்கு காரணம் என்றது---மீன் ---

🌺-மீன் கூறியதை கேட்டதும் -- நாரதருக்கு கோபம் வந்தது--என்ன மீனே என்னிடமே விளையாடுகிறாயா ?!!

🌺நீருக்குள் நீந்தி கொண்டே தாகத்துக்கு நீர் கிடைக்கவில்லை என்று என்னிடம் சலித்து கொண்டு சொல்கிறாயே உன் முட்டாள் தனத்தை என்னவென்று சொல்வது ?!!

🌺மீன் --சிரித்துக்கொண்டே ---அய்யனே நீவிர் மட்டும் என்னவாம் பேரானந்தம் தரும் நாராயண மந்திரத்தை உம்முள் வைத்துக்கொண்டே கவலையாக எதோ நலமாக இருக்கிறேன் என்று கூறுகிறீரே நீர் கூறுவது மட்டும் நியாயமோ என்று கேட்க

🌺நாரதர் வியப்புடன் மீனை பார்க்க --மீன் உருவம் மறைந்து திருமால் நாரதர் முன் காட்சியளித்து

🌺நாரதா ---என் பெயரை கூறி கொண்டு நீ செய்யும் செயல்கள் யாவும் நன்மையில் தானே முடிவடைகிறது ---

🌺கலகம் என்பது அவர் --அவர்கள் மனநிலையை பொறுத்து உள்ளது ---அதை நினைத்து நீ வருந்தி என்ன பயன் --யாவரும் நலம் பெறவேண்டும் என்று எண்ணி தானே நீ உன் கலகத்தை துவக்குகிறாய் --

🌺நாரதா.....உன் நோக்கம் உயர்வாக இருக்கும் போது அதில் நடக்கும் செயல்களை கண்டு நீ ஏன் வருந்தவேண்டும் ---

🌺என்று கூறி நாரதரை திருமால் ஆசிர்வதித்து விட்டு மறைந்து போனார் .நாரதரும் உள்ளம் தெளிவடைந்து புனித-கங்கையில் நிம்மதியாக --ஆனந்தமாக நீராடினார் ---என் கருத்து ---என்ன கவலையாக இருந்தாலும் சரி கூறுவோம் நாராயண மந்திரம் --அதுவே நாளும் பேரின்பம் --யாவும் நலமாகவும் முடியும் .

🌺ஓம் நமோ நாராயணா !🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 Those who understand Sri Krishna become great.
Those who don't understand, keep taking birth again and again on this earth as human beings🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹A student asked a question to Guru Sri Adisankar! 'Master! “The Lord who created the good, created the bad too! Isn't the good thing accepted by our mind as it is?

🌺 Why does our mind, which only accepts the good, refuse to accept the bad? Guru Sri Adisankar, with a small smile, said, 'It is his will.'

🌺 Some time passed, it was time to eat dinner. Guru Sri Adisankar gave his disciple a tumbler of milk and a plate of dung as food.

🌺 Seeing this, the student was stunned for a minute! Guru Sri Adisankara gave the following explanation to the confused student's mind.

Milk comes from the cow. The dung also comes from the same cow. We who accept milk directly, why refuse to accept only dung?'

🌺 We directly enjoy things that give benefits like milk as happiness.

🌺 We don't accept dung as it is, we compost it, bury it in the soil, and benefit from its benefits.

🌺Similarly, we should bury the bad things that come in life in the soil and use the benefits and experiences that come from it for the improvement of our life. He replied.

🌺 In every thing created for us by Sri Krishna, many mysteries are included.

🌺 Those who understand Sri Krishna become Mahan.
Those who do not understand, take birth again and again on this earth as human beings

🌺This is life! For a man to become a great man and to be reborn again, it depends on the perspective from which he lives his life.

🌺 Everyone should think, melt, think and act of Sri Krishna and lead a great life 🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
சுதர்சன சக்கரத்தின் மகிமை; சக்கரத்தாழ்வாரை வணங்குவோம்..!!

கிருஷ்ணரின் கையில் உள்ளது சுதர்சன சக்கரம் என்பது நமக்கெல்லாம் தெரியும்.

சுதர்சன சக்கரம் குறித்து இன்னும் அறிந்துகொள்வோம்.

சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது, மங்கலகரமானவன் என்று அர்த்தம்.

‘சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்துகொண்டே இருப்பது என்று பொருள். மற்ற ஆயுதங்களைப் போல் சுதர்சன சக்கரம் இல்லை. எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானது. அத்துடன் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கக் கூடியது.

சாதாரணமாகவே, சுதர்சன சக்கரம் என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும் மகாவிஷ்ணுவோ, தன் ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார்.

யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார். எதிரிகளை, அசுரக்கூட்டத்தை அழித்த பின்னர், சுதர்சனச் சக்கரமானது மீண்டும் அந்த இடத்துக்கே திரும்ப வந்துவிடுகிறது.

அதாவது, சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகு ஏவிய பகவானின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, அவரின் திருக்கரங்களுக்கே வந்துவிடுகிறது.

எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறது விஷ்ணு புராணம். மேலும் மகாவிஷ்ணுவின் திருக்கரத்திலிருந்து சுதர்சனச் சக்கரமானது கிளம்பியதும் தெரியாது, எதிரிகளை அழித்ததும் தெரியாது, மீண்டும் அவரின் திருக்கரங்களுக்கு வந்து விரலில் வந்து உட்கார்ந்துகொள்வதும் தெரியாது. எல்லாமே கணப்பொழுதில் அரங்கேறிவிடும்.

ஒருவேளை, எதிரியானவன் மிகுந்த பராக்கிரமம் மிக்கவனாக இருந்தால், சுதர்சனச் சக்கரத்தின் வேகத்தில் தடையேதும் ஏற்பட்டால்... அப்போது, சக்கரத்தின் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு வேகம் கூடுமாம்! இதை ‘ரன்ஸகதி’ என்பர்.

இன்னொரு விஷயம்... சுதர்சனச் சக்கரம் சுழலும் தருணத்தில், சப்தங்கள் எழுப்புவதில்லை.

சுதர்சனச் சக்கரத்தின் வடிவம் எத்தகையது தெரியுமா? சின்னஞ்சிறு துளசி தளத்தில், ஒரு கைப்பிடி அளவு துளசியில் அடங்கக்கூடியது. அதேசமயம், இந்தப் பிரபஞ்சம் அளவுக்கு பரந்து விரிந்துமாகவும் இருக்கிறது.

சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது. நம் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்வார் சக்கரத்தாழ்வார் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஏகாதசி, புதன்கிழமை, திருவோணம், சனிக்கிழமை உள்ளிட்ட நாட்களில், சக்கரத்தாழ்வாருக்கு துளசி சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் இன்னல்கள் யாவும் பறந்தோடும். இல்லத்தில் நிம்மதியும் ஆனந்தமும் குடிகொள்ளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

#mahavishnuinfo
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 322* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*பத்ர* = மகிழ்ச்சியான - *மங்களமான மூர்த்தி* = வடிவம்

*116 பத்ரமூர்த்தி* = வளம் செழிக்கும் நற்பேறுகளின் உருவகமானவள்
ravi said…
*மங்களம்* ...

அவளை நினைத்தால் தொழுதால் அவள் நாமங்களை உச்சரித்தால்

அவள் நம் வாழ்வை என்றும் மங்களாமாகவே வைத்திருப்பாள் என்று உறுதி அளிக்கும் திருநாமம் இது 🙏🙏🙏

நினைவு ஒன்றே மனதில் ஆழப் பதித்தால் ...
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 324* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
*87 பனியிலும் இரவிலும் கூட அழகு குன்றாத பாதகமலங்கள்*

ஸர்ப்ப வச்யம்🙏
ravi said…
ஹிமானீ ஹந்தவ்யம் ஹிமகிரி நிவாஸைக சதுரௌ

நிஶாயாம் நித்ராணாம் நிஶி சரமபாகே ச விஶதௌ

வரம்லக்ஷ்மீபாத்ரம் ஶ்ரிய மதிஸ்ருஜ ந்தௌ ஸமயினாம்

ஸரோஜம் த்வத் பாதௌ ஜனனீ ஜயதஶ் சித்ரமிஹ கிம் 87
ravi said…
தாயே !

தாமரையோ பனியில் கருகிப்போவது

உனது திருவடித் தாமரைகளோ – பனிமலையில் இருப்பதில் தேர்ச்சி பெற்றவை;

தாமரை இரவில் இதழ்களை மூடிக்கொண்டு உறங்குவது,

உனது திருவடிகளோ இரவிலும் இரவு முடிந்தபோதும் எப்போதும் பிரசன்னமாய் இருப்பவை;

தாமரை தன்னிடம் லக்ஷ்மி வசிக்கும்படி இருப்பது,

உன் திருவடித் தாமரைகளோ வழிபடுபவர்களுக்கு லக்ஷ்மியை அளிப்பவை; —

ஆகையால் தாமரையை உனது பாத கமலங்கள் ஜயிக்கின்றன.

இதில் அதிசயம் என்ன இருக்கிறது ?🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
Kousalya said…
அருமை அருமை...🙏🙏
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 99*
ravi said…
அடுத்த ஸ்லோகம்

तृष्णातोये मदनपवनोद्धूतमोहोर्मिमाले दारावर्ते तनयसहजग्राहसङ्घाकुले च ।

संसाराख्ये महति जलधौ मज्जतां नस्त्रिधामन् पादाम्भोजे वरद भवतो भक्तिनावं प्रयच्छ ॥ १६ ॥

த்ருʼஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே

தா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச ।

ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்

பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² ॥ 16 ॥

ன்னு ஒரு ஸ்லோகம்.
ravi said…
*ப⁴க்திநாவம் ப்ரயச்ச²’* ன்னு கேட்டதுனால பக்திங்கிறது பகவான் தான் கொடுக்கணும்.

அவனருளாலே அவன் தாள் வணங்கி ன்னு அவன் யாரப் பார்க்கறானோ ஜாயமான கடாக்ஷம்னு பொறந்தபோதே எவனை பகவான் கடாக்ஷிக்கறானோ அவனுக்குத் தான் இந்த ஜன்மத்தை முடிச்சுக்கணும். பகவானோட பாதங்கள்ல போய் சேரணும்ங்கிற ஆசை வர்றது. அவனுக்கு நல்ல குரு கிடைக்கறா.

அவன் விடாமல் இந்த வழியில போய் நடுவில் எந்த சலனமும் இல்லாமல் பகவானை அடையறான்.👍👍👍
Vellammal said…
👌🏼👌🏼 Arumaiyaga ezhuthugireergal .🙏
ravi said…
🕉️*விநாயகர் சதுர்த்தி விரத மஹிமை சிறப்பு பதிவுகள்

🕉️உங்கள் வீட்டில் பிள்ளையாரை எந்த வஸ்துவால் பிடிக்க போகிறீர்கள் எவ்வாறு பிடித்தால், என்ன மாதிரி பலன் அமையும்?

🕉️1: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்

🕉️2: குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்

🕉️3: புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும். வியாபாரத்தைப் பெருக வைப்பார்

🕉️4: வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்

🕉️5: உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்

🕉️6: வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்

🕉️7: விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

🕉️8: சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

🕉️9: சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.

🕉️10: வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

🕉️11: வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.

🕉️12: சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

🕉️13 பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்

🕉️14 கல் விநாயகர்- வெற்றி தருவார்

🕉️15 மண் விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார்.

🕉️எப்படி சொல்லப்பட்டிருந்தாலும், விநாயக சதுர்த்தி அன்று மண்ணால் பிடிக்கப்பட்ட பிள்ளையாரைத்தான் பூஜையில் வைத்து வழிபடுகிறோம். எதனால் தெரியுமா?

🕉️மண்ணில் பிறந்தவர்கள் எல்லோருமே ஒரு நாள் மண்ணிற்குள்தான் அடங்குவோம் என்னும் மிகப் பெரிய தத்துவத்தை நாம் எல்லோரும் உணர்ந்து கொள்ளத்தான் களிமண்ணால் செய்த பிள்ளையாரை வாங்கி வந்து, பூஜித்துவிட்டு, கடலிலோ, குளத்திலோ மண்ணோடு மண்ணாகக் கரைத்து விடுகிறோம்.

🕉️படிக்கும் குழந்தைகள், " சதுர்தீஸாய மான்யாய ஸர்வ வித்யா ப்ரதாயினே வக்ர துண்டாய குப்ஜாய ஸ்ரீ கணேசாய மங்களம்" என்னும் ஸ்தோத்திரத்தைத் தினமும் கூறிவர பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

*எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும் எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும் எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும் எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும்


🌺🌺🌺
🙏🙏🙏
Kousalya said…
காலா என் காலருகே வாடா, உனை எட்டி உதைக்கின்றேன் என் காலால்........ அருமை அருமை 🙏🙏
Hemalatha said…
என்ன விஷேசம் சார் இன்று பதிவுகள் கருமையை தாங்கி வந்துள்ளது.அருமை🙏🙏
ravi said…
படித்ததில் பிடித்தது!

ஒரு நாள் ஒரு கிணறு அருகில் ஒரு கோபிகை ஸ்த்ரீ தண்ணீர் குடத்தை யாராவது தூக்கிவிடுவார்களா என எதிர்பார்த்துகாத்துக்கொண்டிருந்தாள்.
அப்போது அங்கே சிறுவனான ஸ்ரீகிருஷ்ணன்வந்துகொண்டிருந்தான்.

கிருஷ்ணனைப் பார்த்த அந்த கோபிகை தண்ணீர் குடத்தை தூக்குவதற்காக கிருஷ்ணனை கூப்பிட்டாள்.

கிருஷ்ணனோ கூப்பிட்ட குரல் கேட்காதது போல சிறிதும் கவனிக்காமல்போய்க்கொண்டிருந்தான்.

கோபிகையோ கிருஷ்ணனை கூப்பிட்டு கூப்பிட்டு தொண்டை வரண்டு விட்டது.

கிருஷ்ணனோ திரும்பிகூட பாராமல் போய்விட்டான்.

ஒருவழியாக கோபிகை நீர் நிறைந்த குடத்தை தலையில் சுமந்தபடி தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

தன் வீடு வந்தவள் அதிர்ந்தாள்.

அங்கே ஸ்ரீகிருஷ்ணன் அவள் வீட்டு வாசலில்அவளுக்காககாத்திருந்தான்.

கோபிகை வாசல் அருகே வந்ததும் தானே முன்வந்து நீர் நிறைந்த குடத்தை கீழே இறக்கி வைத்தான்.

உடனே கோபிகை கிருஷ்ணா குடத்தை தூக்குவதற்காக உன்னை அழைத்தபோது நீ திரும்பிகூட பாராமல் சென்றுவிட்டாய்.

இப்போது கூப்பிடாமல் குடத்தை இறக்கி உதவி செய்தாயே ஏன்? என்று கேட்டாள்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் தன் மந்தகாச இனிமையான புன்சிரிப்போடு மெதுவாக கோபிகையிடம் இப்படி கூறினான்.

*நான் பாரத்தை* *இறக்கி* *வைப்பவன்* *ஏற்றுபவனல்ல*."

ஸர்வம் கிருஷ்ணார்பனமஸ்து!.
ravi said…
*Sri AmruthaVarshini Veda Vidya Peetam*

*Sri Lalitha Sahashranama Sthothram in everyhome*
Batch 7
September 2022
Free online Zoom session..

Learn to Chant the complete sanskirt Version with Poorva bagam, Nyasam and Phalasruthi.
*Date*: 02/09/22
*Time* : 4.30pm to 5.30pm
*Days* : Monday, Thursday and Friday

**Sri Lalithambika Samarpanam*

No of sessions :12
Weekly four classes.
Classes in English

Sahasra namavali kumkuma archana Pooja will be taught.. and continuous follow up everyday ..

Make use of this opportunity to get connected with the divine mother.

Classes taken by: *Sri Matha Veda Vidyamba Saraswathi*
All Men, Women, Children (above 12 years) can join.

Kindly Whatsapp : 9842770761,
7418381393
Sri Mathre Namaha 🙏
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏

ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை நீ இதுவரைக்கும் பார்த்திருக்கியோ?.."

(பெரியவாளின் அனுகிரஹத்தால் அந்த பழம் (1008) கிடைக்கப் பெற்ற தொண்டர் கிருஷ்ணமூர்த்தியிடம்

அப்பழங்களை 'விஷு'புண்யகாலத்துக்கு குருவாயூர் அனுப்ப சொல்ல 14 நாட்கள் கெடாமலும்,ஒன்று கூட தாரில்இருந்து கீழே விழாமல் இருந்த அதிசய சம்பவம்)

கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்
புத்தகம்-மகா பெரியவர்,
தட்டச்சு வரகூரான் நாராயணன்

சற்று சுருக்கப்பட்டது.

சென்னையிலிருந்து ஒரு முக்யஸ்தர் அன்றைக்கு ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார். பெரியவாளின் திருச்சந்நிதிக்கு சமர்பிக்க வேண்டும் என்பதற்காகத்தன் தோட்டத்தில் விளைந்த இரண்டு தார் வாழைப் பழ்ங்களைத் தன்னுடன் கொண்டு வந்திருந்தார்.பெரியவாளுக்கு வாழைத்தார்களை சமர்ப்பித்து விட்டு, அவருக்கு நமஸ்காரம் செய்து பிரசாதம் பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

மடத்திலேயே கைங்கர்யம் செய்யும் கிருஷ்ணமூர்த்தியை அழைத்து 'இந்த ஒவ்வொரு தார்லயும் எத்தனை பழம் இருக்குன்னு எண்ணிச்சொல்லு' என்றார் மகா பெரியவா.

கைகளை உதறிக் கொண்டு கிருஷ்ணமூர்த்தி எழுந்தார். பெரியவாளிடம், "எண்ணிட்டேன் பெரியவா ஒரு தார்ல 275 பழம்,இன்னொரு தார்ல 375 பழம் இருக்கு" என்றார்.

"சபாஷ்..சரி.." என்று இழுத்த பெரியவா,"ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை நீ இதுவரைக்கும்பார்த்திருக்கியோ.." என்று கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்துக் கேட்டார்.

ஒரு சில விநாடிகள் கழித்து கிருஷ்ணமூர்த்தி. "இல்லே பெரியவா...இதுவரை நான் கேள்விப்பட்டதில்லே.. பெரியவா உத்தரவு கொடுத்தா அப்படி ஒரு தார் எங்கிருந்தாலும் பிடிச்சுண்டு வந்துடறேன்" என்றார்.

"ஓ...இந்தக் கேள்விக்கெல்லாம் நானே பதில் சொல்லுவேன்னு ரொம்ப ஆவலா எம் மூஞ்சியை பாத்துண்டிருக்கியா?" என்று புன்னகையுடன் கேட்ட பெரியவா, "இதுக்கு நா பதில் சொல்ல வேணாம். இளையாத்தங்குடில மாரியம்மன் கோயில் இருக்கு. அங்கே போ. அந்த அம்மனை தரிசனம் பண்ணு. உனக்கு எல்லா விவரமும் தானா கிடைக்கும்" என்று பொசுக்கென்று முடித்தார் மகா பெரியவா.

'1008 பழங்கள் அடங்கிய வாழைத்தாரைப்பார்ப்பதற்கு இளையாற்றங்குடிக்குப் போ' என்று பெரியவா கட்டளை இட்டதில் வியப்பு ஒன்றும் இல்லை.இளையாற்றங்குடிக்கும் காஞ்சி ஸ்ரீசங்கர மடத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு.

மகா பெரியவா சொன்னபடி அடுத்த நாளே தன் குடும்பத்தோடு இளையாற்றங்குடி புறப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி. பெரியவா திருவாக்கின்படி மாரியம்மனைத் தரிசித்தார்.

அப்போது கோயிலில் இருந்த யாரோ இருவர் வாழைத்தார்களைப் பற்றி திடீரென பேசிக் கொண்டிருந்தனர். சட்டென்று இவர்கள் பேச்சு காதுகளில் விழ..ஆச்சர்யப்பட்டு சம்பாஷணை நிகழ்ந்த திசை நோக்கித் திரும்பினார்.

அவர்களிடம், "ஐயா..1008 வாழைப்பழம் இருக்கிற மாதிரி நல்ல வாழைத்தார் வேணும். இந்த ஊரில் எங்கே கிடைக்கும்?"என்று கேட்டார்.

ஏற இறங்கப் பார்த்த ஒரு ஆசாமி தன் வலக்கையை, நீட்டி, "தோ...தெக்கால போங்க. ஒரு பெரிய கிணத்தைத் தாண்டியதும் நிறைய வாழைமரம் இருக்கிற தோட்டம் ஒண்ணு வரும் அங்கே இருக்கிறவர் கிட்ட கேட்டுப் பாருங்க" என்று சொன்னார்.

தலையில் முண்டாசு கட்டிய ஒருவர் இவரை எதிர்கொண்டு விசாரிக்க 1008 வாழைப்பழங்கள் அடங்கிய தார் ஒன்று வேண்டும் என்று சொன்னார்.சற்று முன் வாழைமரத்தில் இருந்து அறுத்துத் தரையில் இறக்கி வைக்கப்பட்டிருந்த தார்களில் இருந்து ஒன்றைத் தூக்க முடியாமல் சுமந்து வந்தார்.அவர். "இதான் சாமீ நீங்க கேட்ட 1008 பழத்தாரு.." என்று இவர் முன்பாக வைத்தார்.

உடலெங்கும் புல்லரிப்பு. மகா பெரியவாளின் தீர்க்க தரிசனத்தை நினைத்துப் பரவசப்பட்டார்.

தோட்டத்துக்காரன் சொன்ன விலையான ரூபாய் முப்பதைக் கொடுத்து விட்டு,ஒரு ஆசாமியை கூலிக்கு அமர்த்தி பெரியவா திருச்சந்நிதியின் முன்னால் அந்த வாழைத்தாரைக் கொண்டு போய் வைத்தார்.

https://chat.whatsapp.com/CtFKTErgipjKp70F0nOdk3

அதைப் பார்த்து பெரியவா புன்னகைத்தார்.

"
ravi said…
1008 பழம் இருக்கிற தாரைப் புடிச்சுண்டு வந்துட்டே போலிருக்கு?" என்று பெரியவா இடி இடியெனச் சிரித்தார்.

"நேத்து ஊர்ல பாக்கறதுக்குக் காயா இருந்தது. பெரியவா சந்நிதிக்கு வந்தவுடனே மஞ்ச மசேல்னு பழுக்க ஆரம்பிச்சுடுத்து" என்றார் கிருஷ்ணமூர்த்தி நெகிழ்ச்சியுடன்.

"விஷு (மலையாள புத்தாண்டு) வரப் போகிறது. இந்த தாரை ரொம்ப கவனமா குருவாயூருக்கு அனுப்பிவிடு" என்றார் பெரியவா தடாலென்று.

அப்போது பெரியவா கைங்கர்யத்தில் இருந்த சீடர்கள் "விஷுவுக்கு இன்னும் பதினாலு நாள் இருக்கே. அதுக்குள்ள இந்த தாரை இங்கே வெச்சிருந்தா அழுகி வீணாப் போயிடுமே" என்று இவர் காதருகே வந்து குசுகுசுத்தனர்.

அப்போது கிருஷ்ணமூர்த்தி சொன்னார்;

"இது குருவாயூருக்குப் போகணும்னு பெரியவா உத்தரவு போட்டிட்டாருன்னா, அது பதினாலு நாள் இல்லே... பதினாலு வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாது.

அன்னிக்கிப் பழுத்த பழம் போல பொலிவோட பிரகாசமா இருக்கும். பெரியவா வாக்கு என்னிக்குமே தப்பாது" என்று சொல்லி தாரைப் பத்திரப்படுத்துமாறு ஒரு
சிஷ்யரிடம் சொன்னார்.

https://chat.whatsapp.com/CtFKTErgipjKp70F0nOdk3
குருவாயூரில் சமர்ப்பிக்கப்படும் வரை அந்த 1008 பழத்தில் ஒரு பழம்கூட தாரில் இருந்து கீழே விழவில்லை. முனையில் கருக்கவில்லை. கொஞ்சமும் வீணாகாமல் புத்தம் புதிதாக அப்படியே இருந்தது அதிசயம்தான்


ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
ப்ரதோஷ ஸ்தோத்ரம் என்று ஒன்று உண்டு. அதிலே அத்தனை தெய்வங்களையும், கீத வாத்யங்களோடு ஸம்பந்தப்படுத்திச் சொல்லியிருக்கிறது. ஸாக்ஷாத் பரமேஸ்வரன் ப்ரதோஷ காலத்தில் அம்பாளை ரத்ன பீடத்தில் உட்கார்த்தி வைத்துவிட்டு அவளுக்கெதிரே, கைலாஸ மலையிலே நடனம் செய்கிறானாம். அவனுடைய டான்ஸுக்குத்தான் ஆர்க்கெஸ்ட்ராவாக அத்தனை தேவர்களும் வாத்யம் வாசிக்க வந்திருக்கிறார்களாம். வாக்தேவியான ஸரஸ்வதி வீணை வாசிக்கிறாளாம், வீணைக்கு ‘வல்லகி’ என்று ஒரு பேர். அந்தப் பேரைதான் இங்கே சொல்லியிருக்கிறது. இந்த்ரன் புல்லாங்குழல் ஊதுகிறானாம். பிரம்மா ஜால்ரா போடுகிறாராம். லக்ஷ்மி வாய்ப்பாட்டுப் பாடுகிறாளாம். விஷ்ணு ம்ருதங்கம் வாசிக்கிறாராம். நந்திகேச்வரைத்தான் பொதுவில் ம்ருதங்கத்துக்கு சொல்வது வழக்கம். ஆனால் ப்ரதோஷ தாண்டவத்தின் போது நந்திகேச்வரர் யஜமானனின் லாவண்யத்தில் தன்னையே மறந்து போய்விட்டார் போலிருக்கிறது*1. அதனால் மஹாவிஷ்ணு ம்ருதங்கம் வாசித்திருக்கிறார். பரமேஸ்வரனோடு மஹாவிஷ்ணுவுக்கு எத்தனை விதமான உறவுகளிருக்கின்றன என்று நம் ஆசார்யாள் ‘சிவாநந்தலஹரி’யில் “பாணத்வம் ரிஷபத்வம்” என்ற ஸ்லோகத்தில் அடுக்கிக் கொண்டு போகிறபோதும் அவர் சிவ தாண்டவத்துக்கு மத்தளம் கொட்டுவதை “ம்ருதங்க வஹதா” என்று குறிப்பிடுகிறார்.
ப்ரதோஷ நாட்யத்தில் அம்பிகையை சிவ தாண்டவத்தை வெறுமே பார்த்துக்கொண்டு ரஸிப்பவளாக மாத்திரம் சொல்லியிருக்கிறது. இந்த ஆனந்த தாண்டவத்தை மட்டுமின்றிக் கல்பப் பிரளயத்தில் எல்லாவற்றையும் தன்னில் ஒடுக்கிக் கொண்டு ஈஸ்வரன் ஸம்ஹார தாண்டம் செய்யும்போதும் அம்பாள் ஒருத்தி மட்டும் அழிந்து போகாமல் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று லலிதா ஸஹஸ்ர நாமத்தில் சொல்லியிருக்கிறது:
மஹேச்வர மஹா கல்ப மஹா தாண்டவ ஸாக்ஷிணீ.
அந்தப் பரதேவதையையே ஸங்கீத தேவதையாகச் சொல்லும்போது ராஜ மாதங்கி, ராஜ ச்யாமளா என்று பெயர். “மீநாக்ஷி மே முதம் தேஹி … ராஜ மாதங்கி” என்று தீக்ஷிதர் பாடியிருக்கிறபடி மதுரையிலே நித்ய வாஸம் பண்ணுகிற மீநாக்ஷியானவள் பராசக்தி ஸங்கீதத்தின் அதி தெய்வமாக இருக்கப்பட்ட அவஸரம் (கோலம்) தான். காஞ்சீபுரத்தில் காமாக்ஷி கோயிலிலும் இவளுக்குத் தனி ஸந்நதி இருக்கிறது. ‘ச்யாமளா தண்டகம்’ இப்படி ஸங்கீதமூர்த்தியாக இருக்கப்பட்ட பராசக்தியைப் பற்றியதே. ‘நவரத்னமாலா‘ என்பதாக ‘ஓம்கார பஞ்ஜர சுகீம்‘ என்று ஆரம்பிக்கிற – ஸ்துதி ஒன்றைக் காளிதாஸன் செய்திருக்கிறான். அதுவும் இந்த ச்யாமளா தேவியைப் பற்றியதுதான். அதிலே இவளும் ஸரஸ்வதியைப் போலவே கையில் வீணை வைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. “வீணா ஸங்க்ராந்த காந்த ஹஸ்தாம்”. நிறத்தில் மட்டும் அவளுக்கும் இவளுக்கும் நேர் வித்யாஸம். ஸரஸ்வதி நல்ல வெளுப்பு. இவளே சாம்பல் கறுப்பு. அதனால்தான் ‘ச்யாமளா’ என்று பெயர். இவளுடைய லாவண்யம் நிறைந்த கையின் நுனிவிரல் வீணையின் தந்திகளில் எப்போதும் ஸஞ்சாரம் பண்ணிக் கொண்டிருக்கிறது. அவள் இப்படி இருக்கிறாளென்றால் நாமும் ஸங்கீத உபாஸனையால் அவளைப் பிடித்துவிடலாம் என்று அர்த்தம். நிறைய சாஸ்த்ராப்யாஸம் பண்ணி, யோகாதிகளால் சித்தத்தை நிறுத்தி வசப்படுத்த முடியாத நாமும் ஸ்வரங்களில் லயிப்பதால் மனஸை நிறுத்தி அவளுடைய சரணார விந்தத்தில் அதைக் கிடத்திவிடலாம். ஸுலபமாக அவள் கடாக்ஷத்தைப் பெற்றுவிடலாம்.
ravi said…
‘ப்ரதோஷ ஸ்தோத்ர’த்தைப் போல அந்த ப்ரதோஷ கால நடராஜ தாண்டவத்தை வர்ணிப்பதாக ‘சம்பு நடன அஷ்டகம்’ என்று ஒன்று உண்டு. இது பதஞ்ஜலி பண்ணின ஸ்தோத்ரம். அவர் ஆதிசேஷன் அவதாரம். அவரைப் போலவே நடராஜாவோடு ஸதா இருக்கும் வ்யாக்ர பாதர் புலிக்கால் பெற்றவர். பாம்பு, புலி முதலான க்ரூர ஜந்துக்களையும் ஸங்கீத நாட்யங்கள் ப்ரேமையாய், சாந்தமாய் பண்ணிவிடுகிறதென்று அர்த்தம். இந்த ‘அஷ்டக’ ஸ்லோகங்களின் சொல்லமைப்பாலும், கதியாலும், சொல்கிறபோதே எதிரே நாட்டியம் நடக்கிறது போன்ற ப்ரமை தட்டும். இதை ப்ரதோஷ பூஜையில் ந்ருத்யோபசாரம் பண்ண வேண்டிய இடத்தில் வாஸ்தவமாகவே சந்த்ர மௌளீச்வரருக்கு நாட்டியமாக அர்ப்பணிக்க வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது. மடத்திலே ஸ்த்ரீகள் ஆடுவதற்கு இடமில்லை. அதனால், த்ரவியத்தையோ கீர்த்தியையோ முன்னிட்டதாயில்லாமல் பூஜாங்கமாக ஈஸ்வரனுக்கு ஸமர்ப்பணமாவதுதானே என்பதால் நம்முடைய ஆஸ்தான (ஸங்கீத) வித்வானையே*2 இந்த ஸ்தோத்திரத்துக்கு அபிநயம் பிடிக்கும்படி சொன்னேன். அவர் முதலில் பயந்தேபோய்விட்டார். ‘எத்தனையோ வருஷம் நாட்ய சிக்ஷை சொல்லிக் கொண்டால்தானே இது வரும்? தமக்குப் பாட்டில் உள்ளது போல டான்ஸில் பரிசயமில்லையே’ என்பதால் பயப்பட்டார். நான்தான் “ஒன்றும் பயப்பட வேண்டாம்! நடராஜாவை நினைத்துக் கொண்டு, குயவன் களிமண்ணைத் துவைக்கிற மாதிரி காலாலே பண்ணிக்கொண்டு, சொல்போகிற போக்கில் கையைக் காட்டிக்கொண்டு போ. ஸரியாய் வந்துவிடும்” என்று தைரியம் கொடுத்தேன். அப்படியே நன்றாக அமைந்தது. சிதம்பரத்திலே சுத்த மத்தளம் என்கிற ‘ஸ்பெஷல் டைப்’மத்தளம் நடராஜாவுக்கு வாசிக்கப்படுகிறது. அதனால் இந்த சம்பு நடன அபிநயத்தின் போதும் இங்கே சுத்தமத்தளம் வாசிக்குமாறு ஏற்பாடு செய்தது. சங்க நாதத்தையும் சேர்த்துக் கொண்டது. இதனால் பூஜையிலேயே ஸாந்நித்யம் கூடுதலாகி விட்டாற்போல இருந்தது.
இதற்கெல்லாம் என்ன அர்த்தமென்றால் ச்ருதி-லய சங்கீதம், ந்ருத்யம் எல்லாமே உபஸனையாக அப்யஸிக்கப்பட்டால் நம்மை ஈஸ்வர ஸந்நிதானத்திலேயே கொண்டுபோய் நிறுத்திவிடும். முடிவிலே அந்த ஸந்நிதானம் எங்கே இருக்கிறது? நம் ஹ்ருதயத்துக்குள்ளேயேதான். அதற்குள்ளே அடங்கி ஆத்மானந்தத்தை அடைய ஸங்கீதம் ஒரு வழி.
ravi said…
*🌹 பிரதோஷம் 🌹*




*ஒரு மணிநேரம் சிவாயநம என்று சொன்னால் என்னென்ன பலன் தெரியுமா?*

🔥▪ஒரு மணி நேரம் நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது.
💫▪ஒரு மணி நேரம் நீங்கள் இறைவனுக்கு சமமாக வாழ்ந்ததாகிறது.
🔥▪ஒரு மணி நேரம் உத்தமன் போல் உண்மையை பேசியதாகிறது.
🔥▪ஒரு மணி நேரம் நீங்கள் உங்கள் மரணம் என்கிற பரிட்சைக்கு தயார் செய்தீர்கள் என்று ஆகிறது.
🔥▪ஒரு மணி நேரம் சிவ வழிபாடு செய்ததாகிறது.
🔥▪ஒரு மணி நேரம் உங்கள் பாவத்தை போக்கி கொள்ள பிராயசித்தம் செய்ததாகிறது.
🔥▪ஒரு மணி நேரம் இறைவனை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது.
🔥▪ஒரு மணி நேரம் நான்மறைகள் ஓதுவதாகிறது.
🔥▪ஒரு மணி நேரம் பெரியோர்கள் சொல் பேச்சு கேட்டதாகிறது.
🔥▪ஒரு மணி நேரம் நீங்கள் பக்தராகிறீர்கள்.
🔥▪ஒரு மணி நேரம் நீங்கள் மகான்களால் வாழ்த்தப்படுகிறீர்கள்.
🔥▪ஒரு மணி நேரம் உங்கள் புலன்களை வெற்றி கண்டவர்கள் ஆகிறீர்கள்.
🔥▪ஒரு மணி நேரம் தியானம் செய்தவர் ஆகிறீர்கள்.
🔥▪ஒரு மணி நேரம் சமாதியில் உள்ளவர் ஆகிறீர்கள்.
🔥▪ஒரு மணி நேரம் ஒழுக்கமானவனாக ஆகிவிடுகிறீர்கள்.
🔥▪ஒரு மணி நேரம் நேர்மறையாக இருக்கிறீர்கள்.
🔥▪ஒரு மணி நேரம் உங்கள் போலித்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைகிறீர்கள்.
🔥▪ஒரு மணி நேரம் நடராஜன் பிடித்துக்கொண்டு இருக்கிறான்.
🔥▪ஒரு மணி நேரம் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள்.
🔥▪ஒரு மணி நேரம் உங்களுக்கு தெரியாமல் உங்களை நீலகண்டன் ரசித்துக்கொண்டு இருக்கிறான்.
🔥▪ஒரு மணி நேரம் நாயன்மார்கள் சித்தர்கள் வாயில் வந்த நாமத்தை சிவாயநம என நாமும் சொல்வதால் அவர்களுடைய பிரசாதத்தை உண்டவர்கள் ஆகிறீர்கள்.
🔥▪இந்த ஒரு மணி நேரத்தினால் இறைவன் நீங்கள் செய்த தவறுகளை மறந்து நிற்கிறான்.
🔥▪ஒரு மணி நேரம் சிவவேள்வி செய்தவர் ஆகிறீர்கள்.
🔥▪ஒரு மணி நேரம் ஈசனயே நீங்கள் கடனாளி ஆக்குகிறீர்கள்.
🔥▪ஒரு மணி நேரம் நீங்கள் கங்கையில் குளித்தவர் ஆகிறீர்கள்.
🔥▪ஒரு மணி நேரம் யமுனையில் குளித்தவர் ஆகிறீர்கள்.
🔥▪ஒரு மணி நேரம் காவிரி, வைகையில் குளித்தவர் ஆகிறீர்கள்.
🔥▪ஒரு மணி நேரம் கைலாய வாசத்தில் உள்ளவர் ஆகிறீர்கள்.
🔥▪ஒரு மணி நேரம் கோடி கோடியான புண்ணியத்தை சம்பாதிக்கிறீர்கள்.

🔥எல்லாவற்றிற்கும் மேல் நாம் வேறு இல்லை, சிவம் வேறு இல்லை. ...
நாமே சிவம் சிவமே நாம்... என்பதை உணர்கிறோம்.

🔥அந்த ஒரு மணி நேரம் இறைவனை மனமுருகி சொல்லும் நாமத்தால் உங்கள் நாக்கில் எச்சில் பட்டு கட்டுண்டு இருக்கிறான் பரமன்...



*🙏 ஓம் நமசிவாய 🙏*
ravi said…
கண்ணா* ..

அம்பு தொடுத்தனை ஐந்தலை சாய்த்தனை ஆறுதலை அளித்தனை

நின்றனை அளந்தனை அழித்தனை அதர்மம் தனை

தவழ்ந்தனை இகழ்ந்தனை- தலை தனை கொய்தனை

கபந்தனை மாய்த்தனை சபரி மோட்சம் கண்டனை

தண்டனை தந்தனை அதர்மம் அணைத்தோர்க்கே

வண்டனை போல் சுற்றும் என்னை ஏனோ மறந்தனை

உனை வந்தனை நிந்தனை புரிவோர் பஞ்சனையில் உறங்கும் போதில்

உந்தனை என் கண்ணனை கார்முகில் வாகனனை சாந்துணை மறக்காமை கொண்டனை

எனக்கே ஏமாற்றம் ஏன் தந்தனை என் கண்ணா ?
ravi said…
ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய 🙏🏻🙏🏻

|| வாழ்க்கையின் தத்துவம் ||

உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள்.

அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.

அதையும் பெரிது பண்ணாதே.

*உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.*

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்.

*ஒவ்வொரு மனிதனும்*
*தனித்தனி ஜென்மங்கள்.*

அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.
அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே.அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .

அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும்.
அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.

இதுதான் வாழ்க்கையின் உண்மை.

அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.

அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும்,
நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற
குழந்தைகளாக இருந்தாலும்,
பேரன் பேத்திகளாக இருந்தாலும்,
உறவுகளாக இருந்தாலும்,
அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா?

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்! பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.

*அவர்களுக்கு அனுபவம் தான் குரு.*
அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு.

செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார் ?,தன் குணம் என்ன ?,என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள்.
எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.

நாம்வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம்.
அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத் தவிர வேறு எதையும் செய்து காட்ட முடியாது.
எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் இறைவன்.
அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. இயற்கையின் சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.

நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும் ,தீமை வந்தாலும் ,உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் .அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.

இன்பமானாலும் துன்பமானாலும்
அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்.
அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.

*உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்*

பெண்ணாக இருந்தாலும் ,ஆணாக இருந்தாலும் ,வரும் துன்பத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.

*மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.*

உன் கண்ணீரும் உன் கவலையும்
உன்னை பலவீனமாக காட்டிவிடும்.

அழுவதாலும் சோர்ந்து போவதாலும்
ஒன்றும் நடக்கப்போவதில்லை.
எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும்.

அழுது சுமப்பதை காட்டிலும்.
ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.

ஆசார்யர்களைப் போல் தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள்.

இந்த பக்குவத்தை அடைந்துவிட்டால்
எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.

ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

#mahavishnuinfo
ravi said…
வில்லெடுத்த கரங்கள் வெலவெலத்துப் போனதே ...

அள்ளி பூ சொருகும் கொண்டை கொண்ட ரதி தடுத்தாள்

மதனே வேண்டாம் இந்த காரியம்

விளையாடுவது நெருப்புடன் அன்றோ

கதி என்று அவன் காலடி பற்றினால் விதி என்று ஏதும் உளதோ?

சதி செய்தனர் தேவர்கள்

மதி இழந்து மழுவும் மானும் கொண்டவன் மேனி தனில்

நீ அம்பு தொடுத்தால் ரதி என் வாழ்வும் மறைந்து போகும் அன்றோ ?

ஈசன் அவன் அருள் இன்றி அவன் தவம் களைப்பின்

காமன் உன் பாணம் அதில் காலன் தன் பாசம் படருமன்றோ ?

சரண் அடைந்து உன் மரண் தவிர்த்து ஈசன் தவம் தனை மஞ்சமாக்கு ..

அஞ்சேல் எனும் சுந்தரி தனை அங்கே அவன் நாடும் கஞ்சமாக்கு (🪷)

வாழலாம் நாம் நெடுநாள் இல்லை எனில்

உன் மலர் பாணங்கள் தினம் நான் போடும் கல்லறை ஆகி விடும்

சிரித்தான் மதன் ...

*ரதியே* ...

இறப்பது ஈசன் கையால் என்றால் என்னை மீண்டும் படைப்பது என் தாய் *உமை* அன்றோ ...

அவன் அறிந்து செய்ய நான் தேவை இல்லை

மறைந்து செய்ய என் பாணங்கள் சரணாகதி செய்யட்டும் அவன் பாதங்களில்

ஈசன் அருள் இன்றி செய்த வினை மதனை சுட்டெரித்தது ..

சுட்டெரித்த சுடர் ஒன்று காமாக்ஷி பாதம் தனை தழுவ

பகலவன் அங்கே தோன்றினான்

பார் போற்றும் சுவாமிநாதனாய் 💐💐💐
ravi said…
🌹🌺 ' *பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்லி, அவனை மனதார ஸேவித்தால், சத்தியத்துடனும் தர்மத்துடன் நிறைவாக வாழலாம் என்பதை - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹'சத்தியம் எங்கே இருக்கிறதோ அங்கே ஸ்ரீகண்ணனும் இருப்பான். ஏனெனில், அந்தச் சத்தியம் என்பதே சாட்ஷாத் அவன்தானே!' என்று போற்றுகின்றனர் வைணவப் பெருமக்கள்.

🌺பகவான் இருக்குமிடத்தில் சத்தியம் நிறைந்திருக்கும். பஞ்ச பாண்டவர்களிடம் இருந்த சத்தியமும் தர்மமும்தான் அவர்களைக் காத்தன. அதாவது, பகவான் பாண்டவர்களுடன் இருந்ததால்தான் அவர்கள் வென்றனர்.

🌺''ஒரேயொரு பாணத்தில் பாண்டவ வம்சத்தில் உள்ள அனைவரையும் அழித்துவிட முடியும். ஆனால், அவர்களுக்கு ரட்சகனாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இருக்கிறாரே... அவர் மட்டும் இல்லையென்றால், விரல் சொடுக்கும் நேரத்துக்குள் அழித்துவிடலாம்'' என பீஷ்மரும் துரோணரும் சொன்னார்கள்.

🌺ஆச்சார்யர்கள் சொன்னதை விடுங்கள்... ஸ்ரீபரமேஸ்வரனே சொல்கிறார்... ''கண்ணபிரான் அவர்களுடன் இருக்கும் வரைக்கும், பாண்டவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என்று!

🌺பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்லி, அவனை மனதார ஸேவித்தால், சத்தியத்துடனும் தர்மத்துடன் நிறைவாக வாழலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

🌺'சரக சம்ஹிதை’யின் ஒளஷத சாஸ்திரம், அற்புதமாக இதை விவரிக்கிறது. 'எப்படி வாசுதேவனுக்குத் தோல்வி என்பதே கிடையாதோ, இந்தச் சமுத்திரம் எப்படி வற்றாமல் இருக்கிறதோ, என் தாயாரின் திருமணத்தை எப்படி நான் பார்த்தது கிடையாதோ... இந்த சத் வாக்கியங்கள் அனைத்தும் உண்மையானதைப் போல, இந்த மருந்தும் வேலை செய்து குணமாக்கும்’ என்கிற மந்திரத்தைச் சொல்லியபடி, மருந்து தயார் செய்வார்களாம்.

🌺இத்தனை பெருமைகளைக் கொண்டவன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. இதனால்தான், அபராஜிதன் எனும் திருநாமம் அமையப் பெற்றான். அபராஜிதன் என்றால், தோல்வியே இல்லாதவன் என்று அர்த்தம்!🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 'Naratha.....when your purpose is high why should you feel sorry for the actions that take place in it' Sriman Narayana.... - A simple story explaining 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹Once Narada-Maharishi looked worried.*
Mother Mahalakshmi saw his worry and asked why are you worried son-.

🌺Naradhar - Mother said that even though all my actions end in good end, I myself am the cause of the riots that occur at that time.

🌺 Mahalakshmi --- Narada If so-go to Rishikesam and go to the holy Ganges and your concern will be gone.

🌺Narada also came to Rishikesh.
When he thought of taking a dip in the Ganges, a strange multi-colored fish swam in the water and asked Narada, ``What are you, Narada?

🌺 Narada looking at the talking fish in wonder ---
Hmm....I am fine, are you okay fish, Narada turned to fish and asked --

🌺-The fish got a little bored and said, Narada, I am also fine ---

🌺 Narada said, "Why are you bored, tell me what is the reason for your boredom, do you need anything, I will bring you."

🌺 Fish--O Narada there is nothing wrong with my health but---Naradha---but---

🌺Fish---I'm thirsty only I can't get water to drink that's the reason for my boredom---Fish---

🌺-After hearing what the fish said -- Narada got angry--What fish are you playing with me?!!

🌺 You are boring and telling me that you can't get water for thirst while swimming in the water, what are you talking about your stupid nonsense?!!

🌺Meen--Smiling--- Sir, what is it that you are saying that you are keeping the blissful Narayana Mantra in yourself and you are worried and saying that I am fine?

🌺 Narada looked at the fish with amazement -- the fish form disappeared and Thirumal appeared before Narada.

🌺Narada---Whatever you do by chanting my name ends in good itself---

🌺Rebellion is based on his/her mindset ---what is the use of regretting about it--you start your rebellion thinking that everyone should get well--

🌺 Narada.....when your purpose is so high why should you feel sorry for the actions that take place in it---

🌺Saying , Narada was blessed by Tirumal and disappeared. Narada's heart became clear and he bathed in the holy Ganga peacefully--blissfully.

🌺Om Namo Narayana!🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒருமுறை வரும் ஒரு நாளை குறிக்கிறது. இந்த நாட்கள் பொதுவாக திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.

அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஆறாவது நாள் சஷ்டி ஆகும். அமாவாசையை அடுத்துவரும் சஷ்டியை சுக்லபட்ச சஷ்டி (அ) வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்துவரும் சஷ்டி கிருஷ்ணபட்ச சஷ்டி (அ) தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.

திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.

திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.

முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே 'சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்" என்ற பழமொழி எழுந்தது.

திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும். நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.

ravi said…
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறுவது தவறு. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அனைத்து சிறப்பையும் பெற முடியும்.

வேலைக்கு சேருதல், வீடு மற்றும் வாகனம் வாங்குதல், மருத்துவ தொழில் தொடங்குதல் போன்றவை செய்ய சஷ்டி திதி உகந்த நாளாகும்.

சஷ்டி விரதத்தின்போது முருகனுக்குரிய மந்திரங்களான ஓம் சரவணபவ, ஓம் சரவணபவாயநம, ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஒன்றை நாள் முழுவதும் ஜெபித்து, மாலை வேளை பக்கத்திலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள்
Kousalya said…
அருமை..🙏🙏🙇‍♀️🙇‍♀️🌹🌹
Sindhuja said…
கண்ணன் அவன் கண்களை பார்த்தாலே மயங்கிவிடும் நம் கண்கள், எப்படி இப்படி புகழ்ந்து அவனை pottrukireergalo,awesome sir🙏🙏
Sindhuja said…
Great explanation sir,thankyou for taking time and sharing with us🙏
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 323* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*117 * भक्तसौभाग्यदायिनी - பக்த ஸௌபாக்ய தாயிநீ --*
ravi said…
சக்தி உபாசகன், அம்பாள் பக்தன் கொடுத்து வைத்தவன்.

மேலே மேலே கொண்டுவந்து சாய்க்கிறாள் அம்பாள்.

இந்த நாமத்துக்கு அர்த்தமே வேண்டாம். சகல சௌபாக்யமும் தருபவள் என்று புரிகிறது அல்லவா ?💐💐💐
ravi said…
*பக்த* = பக்தர்கள் *சௌபாக்ய* = வளம் *தாயின்* = கொடுப்பவள்

*117 பக்த சௌபாக்ய தாயினி =* பக்தர்களின் வாழ்வில் செழிப்பும் வளமும் அருளுபவள்👏👏👏👍👍👍
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 325* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*87 பனியிலும் இரவிலும் கூட அழகு குன்றாத பாதகமலங்கள்*

ஸர்ப்ப வச்யம்🙏

ஹிமானீ ஹந்தவ்யம் ஹிமகிரி நிவாஸைக சதுரௌ

நிஶாயாம் நித்ராணாம் நிஶி சரமபாகே ச விஶதௌ

வரம்லக்ஷ்மீபாத்ரம் ஶ்ரிய மதிஸ்ருஜ ந்தௌ ஸமயினாம்

ஸரோஜம் த்வத் பாதௌ ஜனனீ ஜயதஶ் சித்ரமிஹ கிம் 87
ravi said…
தாயே!, பனிமலையிலேயே இருக்கக்கூடியவையும்,

இரவு, பகல், ஸந்த்யாகாலம் போன்ற எல்லா காலத்திலும் மலர்ந்து இருப்பதும்,

ஸமயாசாரமுடைய பக்தர்களுக்கு லக்ஷ்மியைக் கொடுக்கக்கூடியதுமான உனது பாதங்கள்,

பனியில் நாசமடைந்தும், இரவில் உறங்கியும், லக்ஷ்மி விரும்புகிற நேரத்தில் மட்டும் வந்து அமரும்படியான தாமரை மலரை ஜயித்து இருப்பதில் வியப்பில்லை.🪷🪷🪷
ravi said…
ம்ருʼக³த⁴ர꞉” – சந்திரன்ல ஒரு அடையாளமா ஒன்னு இருக்கும் இல்லையா, அது மான் மாதிரி இருக்கு அப்டிங்கறதால, சந்திரனுக்கு ம்ருʼக³த⁴ர꞉ னு பேரு.

“பூர்ண:” – பதினாறு கலைகளும் நிரம்பியதால பூர்ணமானவர்.

“தமோமோசக꞉” – இருளை போக்குபவர். சந்திரன் வந்தா இருள் போகும்.
ஹேமலதா said…
காலையில் கண்ணனைப் பற்றி படித்தால் மனம் ரம்மியமாகும்.ஆனால் வேலை செய்யாமல் அவனை நினைத்து சில மணித்துளிகள் அமர்ந்து விடுவேன்.தவிர்க்கவும் முடியவில்லை.ஓரிரு வரிகள் வரிகள் படித்ததும் மனம் லயித்து விட்டது.இன்று அன்னதான வேலை சார்😊😊 இருந்தாலும் முழுதும் படித்து விட்டேன் காலை ட்ரீட்👏👏👏🙏
ravi said…
🌹🌺 *ஸ்ரீ கண்ணன் தேடியது* *வெண்ணையைப்* *போன்று*
*தண்ணீரின் மேலே* *சவாரி செய்யும், ஆசையை வென்ற* *ஞானவான்களை தான்* .... - *விளக்கும்* *எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹மனிதனும் ஆசையும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாதது!

🌺மனிதன் தனது பிறப்பின் நிலையை கண்டுணர்ந்து தனது பிறப்பின்
ரகசியத்தை அறிய முற்படும்போது தனது நான் யார்... நான் யார் என்றெழும்பும்
மனக்கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு தன்நிலையில் உஷ்ணப்பட்டு பதமாகி ஒரு குருவைநாடி அவரது சிட்ஷையால், தான் மனமிருகி தன்னுள் ஆழ்ந்து தன்னை தீவிர பயிற்சியில் ஆட்படுத்தும் போது ஞானம் வெளிப்படும் ,

🌺ஞானம் வெளியானால் மனிதன் பூரணமான நிலை அடைகின்றான் – இப்போது ஆசை அவனை ஆட்கொள்வதில்லை –

🌺இவனை ஆட்டிவைத்த ஆசையை இவன் ஆட்டிவைக்கின்றான் – ஆசையின் மேல் சவாரி செய்கிறான்.

🌺இங்கேbபால் என்பது, மனிதன் தண்ணீர் என்பது, ஆசை

🌺பதமாக காய்ச்சுதல் என்பது, தன்னுள்ளே எழும் நான் யார் எனும் கேள்விகள் பழைய தயிர் என்பது, ஒரு குரு

🌺தயிர் என்பது, தான் மனமிருகுதல்
மத்து என்பது, தீவிரமான பயிற்சி

🌺வெண்ணை என்பது, ஞானம்
இப்போது புரிகின்றதா

🌺ஸ்ரீ கண்ணன் தேடியது வெண்ணையைப் போன்று
தண்ணீரின் மேலே சவாரி செய்யும், ஆசையை வென்ற ஞானவான்களை தான்....

🌺ஆசையின் மேல் அமர்ந்து, அதனை அடக்கி அல்லது அதன் பாதையை மாற்றி, இறைவனை நோக்கிய பயணமாக்கும் கலையை கற்றுணர்ந்தவர்களைத்தான்
அந்த மாயக்கண்ணன் தேடியிருக்கின்றான் என்பதை நாம் உணர்ந்தபோது நம் மனம் ஆகாயத்தில் மிதந்தது.

🌺நாம் பார்த்த அந்த கண்ண பரமாத்மாவின் ஞானம் என்பது மிக மேலான நிலை பற்றி சொல்வது.அந்த நிலையை நாம் காண்பதற்கு காலம் வெகு தூரம் இல்லை ..🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

வாகீசர் எனபது யார்? தேவ ஜாதியில் வாகீசர் என்பது யார்?இரண்டு தேவர்களுக்கு அந்தப் பெயருண்டு.ஒருவர் பிரஹஸ்பதி.மற்றவர் பிரம்மா.’ப்ருஹஸ்பதியோ?’என்று கேட்கிற அளவுக்கு விசேஷணமாக புத்தி பிரகாசம் பெற்ற தேவகுரு,வியாழன் என்று சொல்கிறோமே அவர் சகல சாஸ்திரங்களிலும்மஹா கெட்டிக்கார்ர் ஆனதால் வாகீசர் எனப்படுவர். பேச்சில் நல்ல வாகீசர் அவர்.வாகீசர் என்றே அர்த்தம் கொடுப்பதான ‘கீஷ்பதி’ என்ற பெயரும் அவருக்கு உண்டு.ப்ருஹஸ்பதியை ப்ரமணஸ்பதி என்றும் வேதம் சொல்லும்.அறிவும் வித்வத்தும் உருவமான அவருக்கு பிள்ளையார் சம்பந்தம் விசேஷமாக உண்டு.’வேதகால ப்ரமணஸ்பதிதான் புராணகால விக்னேஸ்வர்ர்’ என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்வார்கள்.விநாயக மூர்த்தியின் ஆவாஹனத்தில் பிரசித்தமாக வழங்கும் வேத ரிக்கே ப்ரமணஸ்பதிகானதுதான்.
ravi said…
தேவர்கள் விதிப்படிகுருமுகமாக பிள்ளையார் வணக்கம் செய்கிறார்கள் என்று காட்டுவதற்காக ‘வாகீசாத்யா:ஸுமனஸ;’ என்று சொல்லியிருக்கிறதென்று உள்ளர்த்தம் செய்து கொள்ளலாம்.தேவகுருவே பிள்ளையாருக்கு நமஸ்காரம் பண்ணி சீடர்களான தேவர்களுக்கெல்லாம் வழி காட்டுகிறார் என்று தொனிக்கிறது.இதிஹாச காவ்யம் ஒன்று என்றால் அதன் ஆரம்பத்தில் வாக்தேவியாகவும் வித்யாதி தேவதையாகவும் இருக்கப்பட்டவளை ஸ்தோத்திரிப்பதே பொருத்தம். அதுவே போதும் என்று தோன்றலாம்.ஆனால் அவளுக்கும் முந்தி பிள்ளயாரை ஸ்தோத்ரிக்க வேண்டியிருக்கிறது.ஏன் இப்படி?அவளை நாம் ஸ்தோத்ரிப்பதற்கே ஏதாவது விக்னம் ஏற்பட்டுவிட்டால் என்ன பண்ணுவது? அதனால் முதலில் விக்னங்களைப் போக்கடிக்கும் விக்னேஸ்வர்ரை ஸ்தோத்திரிக்க வேண்டியதாகிறது!
ravi said…
கண்ணா*

கண்ணில் உனை எண்ணில்

பெண்ணில் பொன்னில்

பெருமை கொள்ளேன் *கண்ணா*

மண்ணில் செல்லும் முன்னில் என்னில் உனை சிலை வைப்பேன் *கண்ணா*

வம்பில் தும்பில் வாழ்க்கை ஓடி விட்டதே *கண்ணா*

அன்பில் பண்பில் எனை செதுக்க வில்லையே நீ *கண்ணா*

அம்பில் தையித்த உடல் போல்

கயிற்றில் கட்டிய களிறு போல்

தூண்டில் சிக்கிய மீன் போல்

தும்பில் மாட்டிய புழு போல்

வாழ்க்கை மாட்டி சிக்க

உன்னில் நான் சேர்வது எந்நாளோ *கண்ணா* ?

சேரும் நாளை சொல்லிவிட்டால்

சோர்ந்து போவேனோ
*கண்ணா*

சுகம் அதுவே என்றே இமயம் உச்சி சென்றே உரைத்திடுவேன் *கண்ணா*💐💐💐👍👍👍
ravi said…
வேடனும் வில்லனும்*🏹🏹🏹
ravi said…
வில்லுக்கு ஒருவன் யாருக்கும் வில்லன் அல்ல

சொல்லுக்கும் பொருளுக்கும் தொடர்பு கொண்டவன் ...

கண்ணனுக்கு தோழன் சீடன் உறவினன்

வில்லும் அம்பும் என்றும் தோற்றதில்லை

அதுவே அவன் மண்டைதனில் ஏறிய கர்வம் தனை தடுக்க வில்லை

பாசுபதாஸ்திரம் பெறவே மாதொருப்பாகன் நாடியே மா தவம் செய்தான் மாதவன் சொல்லியே

வராஹம் ஒன்று அங்கே பாய்ந்து வர

தவம் சற்று களைந்தே அம்பு தனை பேசவிட்டான் கொஞ்சம் ...

அம்பு பாய்ந்து வராஹம் வராஹம் எடுத்தவன் பாதம் சேர்ந்ததே

வராஹம் உடம்பில் இரண்டு அம்புகள்

ஹரியும் சிவனும் போல் சேர்ந்து இருந்ததே ...

ஒர் அம்பு இரண்டாய் மாறிய அதிசயம் புரியாமல் தவித்தான் விஜயன்

விஷம் தோய்ந்த அம்பு

விஷம் உண்டவன் அனுப்பியது அன்றோ

அறியாமல் அரியின் சீடன் ஆணவம் கொண்டே வந்த வேடனிடம் சொல் அம்பு ஒன்றை விட்டான்

கொன்றது நான் ..

செத்த பன்றி மீது எய்த அம்பு உனை வீரன் என்றே சொல்லுமோ வேடனே?

விஜயன் நான்

வில்லில்

நானே நாண்
நானே அம்பு

தப்புமோ என் குறி .. தவறுமோ என் நெறி

சிரித்தான் வேடன் ...

அண்டம் ஆகாசம் அனைத்தும் சிரிக்க கண்டான் குந்தி மகன்

வில்லுக்கு விஜயன் என்பவன் நீயோ ...

வீரம் உண்டு என்றே சொல்வது கானல் நீரோ ...

முதல் அம்பு எனதே ஆகும் முதல்வன் நானே என்றே இவ்வுலகம் அறியும்

முக்கண்ணனும் உன் கண்ணனும் என் அம்புக்கு பதில் சொல்ல இயலார் ..

சென்றுவிடு என்னை திங்க விடு என்றான்
வேடன்

திங்கள் அதை சடை தனில் சற்றே மறைத்துக்கொண்டே

சொல் அம்பு தோற்று போய் கை அம்பு ஆனது

அதுவும் தோற்று போய் வீரம் வேடனிடம் உயிர் பிச்சை கேட்டது

அடியும் முடியும் காணா பெருங்கடல் மேரு மலையாய் உயர்ந்து நின்றது ..

பேரின்பம்
ஆடும் இன்பம் கண்டு தாள் இன்பம் தனில் தண்டையாய் ஒலி ஒலித்ததே ...

வந்தது பரமன் என்றே பாதம் பற்றி அழுதான் பார்த்திபன்

பாசுபதாஸ்திரம் அர்ஜுனன் கையில் அழகாய் அமர

கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்புடன் சொன்னான் ஈசன்

*அர்ஜுனா* ..

வீரம் கர்வம் கொள்ளக் கூடாது

உன் வேகம் தனில் விவேகம் அழியக்கூடாது

உன் பெருமை நீயே சொன்னால் அது சிறுமை அன்றோ

அதில் கிடைப்பது வெறுமை அன்றோ ..

எல்லாம் இறைவன் செயல் என்றே சொன்னால்

உன் கண்ணிலே அன்பு வருமன்றோ

கல்லிலேயும் தெய்வம் தெரியுமன்றோ ...

*ஐயனே*

கர்வம் மண்ணில் சாய்ந்தது இன்றே ...

இனி வரும் பிறவி சிறுமை இல்லா பெரியவனாய் பிறப்பேன் ...

நடக்கும் இடமெல்லாம் வேதம் தனை விதைத்துச் செல்வேன் ...

சிரித்தான் சங்கரன் .. புரிந்து கொண்டான் விஜயன் ...

*ஐயனே*

நான் சொல்வது நீ தரும் வரமாக வேண்டும் ..

எனை நினைப்போர் உனை நினைப்போரே ...

விழுப்புரம் தனில் வந்து பிறந்தான் அர்ஜுனன் சுவாமி நாதன் எனும் திரு நாமத்திலே ...

தர்மம் தழைக்க வேதம் கானம் இசைக்க

அமுத சுரபி ஒன்று ஆழ்கடல் நீங்கி வெளி வந்ததே உலகம் தழைக்க 🏹🏹🏹
ravi said…
கடவுள் மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?

திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.

மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு. மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு. சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு. சாமிதான் பொய்யானால் சாணம் பாரு.

இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம். இதற்கான விளக்கம்

மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு

மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்ல விட்டு நீங்கள் தள்ளி நின்று இதைப் பார்க்கலாம்

மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு

வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் மருந்து
அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாண-வேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.

சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாரு

ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர்.

எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.

சாமிதான் பொய்யானால் சாணம் பாரு

இது ரொம்ப சுவாரசியமான விஷயம். கிராமங்களில் பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள்.

இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டு விடுவார்கள். அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதை சாப்பிடும்.

விநாயகர் என்று நாம் உருவேற்றி விட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்பது தான் இந்த பழமொழியின் கருத்து.

அர்த்தமுள்ள சனாதன தர்மம்..
Amsaveni said…
Thank you sir 🙏 for posting poem daily. I am pleased to read this one.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 324* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*117 * भक्तसौभाग्यदायिनी - பக்த ஸௌபாக்ய தாயிநீ --*
ravi said…
மிகவும் அருமையான திருநாமம் ...

சௌபாக்யம் என்ற வார்த்தை கேள்வி பட்டிருக்கிறோம் .

பாக்யம் என்றால் போறாதா ?

அது என்ன *சௌபாக்கியம்* ?

🪷 சம்பாதிப்பது சொத்து சேர்ப்பது பாக்கியம்

- சேர்த்த சொத்தை நாமே அனுபவிக்கும் கொடுப்பினை *சௌபாக்கியம்*

🪷 ஆரோக்கியமாக இருப்பது பாக்கியம்

கடைசி மூச்சு வரை அப்படியே இருப்பது *சௌபாக்கியம்*

🪷 கஷ்ட்டங்களை சமாளிப்பது பாக்கியம் ..

கஷ்ட்டங்களே வராமல் இருப்பது *சௌபாக்கியம்*

🪷 கொடை அன்னதானம் செய்வது பாக்கியம்

முழு மனதோடு எதிர்பார்ப்பு இல்லமால் விளம்பரம் இல்லாமல் செய்வது *சௌபாக்கியம்*

🪷 பிறருக்கு நல்லது நினைப்பது பாக்கியம்

பிறர் வாழ நாமே ஊன்று கோலாய் இருப்பது *சௌபாக்கியம்*

🪷 அம்பாளை நினைப்பது பாக்கியம்

அவளாகவே ஆவது ( பவானீத்தவம்) *சௌபாக்கியம்*

சௌபாக்கியங்கள் அம்பாள் தருகிறாள்

குறை இல்லாமல் அதனால் *சௌபாக்கிய தாயினீ*
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 326* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*87 பனியிலும் இரவிலும் கூட அழகு குன்றாத பாதகமலங்கள்*

ஸர்ப்ப வச்யம்🙏

ஹிமானீ ஹந்தவ்யம் ஹிமகிரி நிவாஸைக சதுரௌ

நிஶாயாம் நித்ராணாம் நிஶி சரமபாகே ச விஶதௌ

வரம்லக்ஷ்மீபாத்ரம் ஶ்ரிய மதிஸ்ருஜ ந்தௌ ஸமயினாம்

ஸரோஜம் த்வத் பாதௌ ஜனனீ ஜயதஶ் சித்ரமிஹ கிம் 87
ravi said…
அம்பிகையின் பாதங்களானது தாமரைப் புஷ்பத்தை விஞ்சிய அழகுடையது என்பது இந்த ஸ்லோகத்தில் உள்ள செய்தி.

தாமரைப்பூ அதிக பனியில் கருகிவிடுமாம்.

சூரியனது கதிர் கண்டே மலரக்கூடியது தாமரை.

தாமரைப் பூவில் லக்ஷ்மி வாசம் செய்வதாகச் சொல்வர்.

லக்ஷ்மியும் எப்போதும் தாமரையில் இருப்பதில்லையாம்,

தனக்கு இஷ்டமிருக்கையில்
மட்டுமே வந்து அமர்கிறாளாம்.

இவ்வாறாக இரவில் மலராதும், பனியில் கருகியும், எப்போதாவது மஹா-லக்ஷ்மி அமரும் தாமரைப் பூவைவிட,

அன்னையின் பாதங்கள் சிறப்பாக பனிமலையிலும், ஒருநாளின் எல்லா காலங்களிலும், தன்னைச் சரணடைந்தவர்களுக்கு எப்போதும் லக்ஷ்மி கடாக்ஷத்தைத் தருவதுமான தாமரை என்று ஒப்பு நோக்கிக் கூறியிருக்கிறார்.🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 48*🦚🦚🦚
ravi said…
கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா

உடைந்துபோன சங்கினோசை யுயிர்களு முடற்புகா

விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா

இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே. 48👍👍👍
ravi said…
பசுவின் மடியில் இருந்து கறந்த பால் மீண்டும் பசுவின்முலைக் காம்புகளில் சேராது,

மோரிலிருந்து கடைந்தெடுக்கப்பட்ட வெண்ணெய் மீண்டும் மோராகாது.

உடைந்து போன சங்கிலிருந்து ஓசை வராது,

அதிலிருந்து வெளிவரும் உயிர் மீண்டும் அவ்வுடலாகிய சங்கில் புகாது.

விரிந்த பூ மொட்டாகாது.

மரத்திலிருந்து உதிர்ந்த காய் மீண்டும் மரத்தில் ஓட்ட முடியாது.

அது போல்தான் நம் உடம்பை விட்டு உயிர்போய் விட்டால் மீண்டும் அவ்வுடம்பில் சேர்ந்து பிழைக்க வைக்க முடியவே முடியாது.

ஆகவே உடம்பில் உயிர் உலாவிக் கொண்டிருக்கும்போதே யோக தியானம் செய்து இறைவனை அடைந்து பிறவா நிலை அடையுங்கள்🙏🙏🙏🙏🙏
ravi said…
_*நான்... நான்... நான்...*_

*நான் சம்பாதித்தேன்*
,
*நான் காப்பாற்றினேன்*,

*நான் தான் வீடு கட்டினேன்*,

*நான் தான் உதவி செய்தேன்*
,
*நான் உதவி செய்யலனா? அவர் என்ன ஆகுறது!!!!!*

*நான் பெரியவன்*,

*நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன்*,

*நான் நான் நான்*
*நான் என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!...*

*நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?*

*நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?*

*நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?*

*நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??*

*நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?*

*நான் தான் காய்களை பழமாக மாற்றுகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?*

*நான் தான் கடலில் மீன் பிடிக்கிறவனுடைய வலையில் மீனை சிக்க வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?*

*இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* *என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..*

*ஆகையால் நான் என்ற* *அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள்*.
*அன்பே அனைத்து துன்பப் பூட்டையும் திறக்கும் திறவுகோல்*.

*ஆகையால் நாம் அன்பை பரிமாறிக் கொள்வோம்*
*அன்புடன்*
Hemalatha said…
Ravi sir எழுதுவது பாக்கியம் அதை நித்தமும் படிப்பது சௌபாக்கியம் 🙏😊
Sindhuja said…
Great sir,thankyou for sharing with me and you as a sowbakkiyavadhan bless us and my family to become sowbakkiya family together 🙏🙏
ravi said…
தினம் ஒரு(தெய்வத்தின்)குரல்

பிள்ளையாருடைய மனஸ் எத்தனை நல்லது என்பதற்கு ஒன்று சொல்லிவிட்டால் போதும்.ஒருத்தரின் கிட்டேயே கோபம் நெருங்க முடியாது:மஹாகோபிஷ்டர்கூட அவருக்கு முன்னால் தானாகவே சாந்தமாகி விடுவாரென்றால் அப்படிப்பட்டவர் வெகு நல்ல மனம்,உயர்ந்த அன்புள்ளம் படைத்தவராகத்தானே இருக்கவேண்டும்?இப்படி உதாஹரணம் பிள்ளையார் விஷயமாக இருக்கிறது.நம் எல்லோரிடமும் ,ஈ,எறும்பிலிருந்து ஆரம்பத்து அத்தனை ஜீவராசிகளிடமும் பரம கிருபையோடு இருக்கக் கூடிய ஒருவர் யார்?
ravi said…
சாட்சாத் அம்பாள்தான்! அஅத்தனை ஜீவராசிகளுக்கும் தாயாக இருக்கப்பட்ட அகிலாண்ட ஜன்னி அவள்தானே? அப்படிப்பட்ட அந்த அகிலாண்டேஸ்வரியே ஒரு சமயம் உக்ர ரூபம் கொண்டிருந்தாள்.ஜம்புகேஸ்வர்த்தில் இருக்கப்பட்ட அகிலாண்டேஸ்வரி கலிகாலத்தில் ஜனங்கள் போகிற போக்கை பாரத்து இப்படி உக்ர கோலமாகிவிட்டாள்.சகல சக்தியும் அவள்தானாகையால் அன்பில் பரம செளம்யமான ல்லிதாம்பாளாக இருக்கப்பட்ட அவளே கோபம் வந்தால் அதன் உச்சியில் காளியாயிருப்பாள்.இப்போது அப்படித்தான் ஆகியிருந்தாள்.
ravi said…
கலியைக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக அவதாரம் செய்திருந்த நம்முடைய ஆச்சார்யாள் அங்கே வந்தார்.பரமேஸ்வர அவதாரமானதால் அவரால் உக்ர கோலத்தில் இருக்கிற அம்பாளிடமும் போகமுடியும்.ஆனாலும் அவர் இந்த சந்தர்ப்பதை பயன்படுத்திக்கொண்டு பிள்ளையாரின் அன்பு மனப்பெருமையை உலகத்துக்கு தெரிவிக்க நினைத்தார்.அதனால் அம்பாளுக்கு நேர் எதிரே கோவில் முடிந்து மதில் வந்துவிடுகிற ்அவ்வளவு தூரத்திலே, பெரிசாக ஒரு பிள்ளயாரை ப்ரதிஷ்டை பண்ணிவிட்டார்!அவ்வளவுதான்!செல்லப்பிள்ளை எதிரே இருக்கிறான் என்றதும் அம்பாளுடைய அத்தனை உக்ரமும் போன இடம் தெரியாமல் போய்விட்டது! அனேக விநாயக மூர்த்தங்களில் ஒன்றுக்கு ‘செல்லப்பிள்ளையார் என்றே பெயர்!அப்படிப்பட்ட பிள்ளையின் அன்பு மன விசேஷத்தால் அம்பாளுக்கும் கோபம் போய் வாத்சல்யம் பிறந்தது.அப்போது அம்பாளை விட்டுப் போயிருந்த கோபம் மறுபடியும் ஒரு போதும் அவளிடம் திரும்பிவிடக் கூடாதென்று ஆச்சார்யாள் நினைத்தார்.அதனால் அந்த உக்ர கலைகளை அப்படியே யந்த்ராகாரமான இரண்டு தாடகங்களில் ஆகர்ஷித்து சமனம் செய்தார்.அந்த தாடகங்களை அம்பாளின் காதுகளிலேயே அணிவித்தார்.
இப்படி அவளுடைய பாதிவ்ரத்ய ப் பெருமைக்குரிய தாடங்கத்தில் உக்ர கலையை ஆகர்ஷித்ததோடு,அதறகு முந்தியே அவளுடைய வாத்சல்யப் பெருமையைக் காட்டுவதாக ப்ரிய வத்சனான பிள்ளையாரை அவளுக்கு முன்னால் ப்ரதிஷ்ட்டை பண்ணிவிட்டார்!
ravi said…
மஹா பெரியவா அனுபவங்கள் 🌸🌹🙏
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉️🕉️🕉️🕉️🕉️🛕🔔🙏


*"தேக நலன் சீராக இருக்க மகாபெரியவா சொன்ன இந்த சுவாசக் கணக்கு"*.

மகாபெரியவர் வடநாட்டுக்கு யாத்திரை செய்துவிட்டு, திரும்ப வந்து ஸ்ரீமடத்தில் அருள்பாலித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது.

பல ஆயிரம் மைல்கள் நடந்தே சென்று யாத்திரை செய்த களைப்பு கொஞ்சமும் முகத்தில் தெரியாமல் அன்றைக்கு மலர்ந்த பூப்போல அமர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார் மகான்.

அந்தச் சமயத்தில் அவரைத் தரிசிக்க வந்தவர்களில் நடுத்தர வயதுக்காரர் ஒருவர், மகான் முன்னிலையில் வந்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.

அப்படிக் கும்பிட்ட பிறகு எழுந்திருக்கவே முடியாமல் சிரமப்பட்டார்.

அதோடு மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து கொண்டு பெருமூச்சு விட்டார்.

அவர் சிரமப்படுவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார், பெரியவா.

வணங்கி விட்டு எழுந்தவர் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினார்.

“சுவாமி என் உடல் நிலை இப்படித்தான் அடிக்கடி சங்கடப் படுத்துகிறது. கொஞ்சம் வேகமாக நடந்தால் கூட மூச்சு வாங்குகிறது..!” என்றார்.

அவர் சொன்னதற்கு பதில் எதுவும் சொல்லாமல், “நீ என்ன உத்யோகம் பார்க்கிறாய்?” என்று கேட்டார் மகான்.

“கணக்கு வாத்யாராக இருக்கிறேன்.!” சொன்னார், அவர்.

“அப்படியானால் உனக்குப் புரியும்படி கணக்காகத்தான் சொல்ல வேண்டும். அதற்கு முன்னால் ஒரு கேள்வி.

நீ தேகாப்யாசம் (உடற்பயிற்சி) ஏதாவது செய்கிறாயா? பெருமூச்சு வாங்குகிறது என்கிறாயே,
அப்படியென்றால் சாதாரணமாக எப்படி மூச்சு விடுவது என்று உனக்குத் தெரியுமா? மகான் கேட்க, எல்லோருடைய கவனமும் அங்கே திரும்பியது.

வந்தவர் அமைதியாகவே நிற்க, மகான் தொடர்ந்தார்.

“இந்த உலகத்துல எல்லாத்துக்குமே ஒரு கணக்கு உண்டு. அது எப்படின்னா, வரவுக்கும் செலவுக்கும் சமமா இருக்க வேண்டும் என்கிற கணக்கு.

ஒருத்தரிடம் கைமாற்றாக ஒரு தொகையை வாங்கினால், அதைத் திருப்பித் தரும் போது முழுசாகத் திருப்பித் தர வேண்டும்.

இல்லையென்றால் அந்தக் கணக்கு சரியாகாது. என்ன நான் சொல்கிற கணக்கு சரிதானே?

கேட்டு நிறுத்திய மகான், சின்ன இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

இதே கணக்குதான் நாம் உயிரோடு இருக்க அத்தியாவசியமான மூச்சு விடுகிறதில் உள்ள கணக்கும்.

மூச்சில் எந்த அளவுக்கு காற்றை உள்ளே வாங்குகிறோமோ, அது வரவு. அதே அளவைத் திருப்பி வெளியே விடவேண்டும். இது செலவு.

தூங்கிக் கொண்டிருந்தாலும் இதைச் சரியாகச் செய்ய வேண்டும். அதுதான் ஆரோக்யக் கணக்கு.

உள்ளே இழுக்கும் காற்றும், வெளியே விடும் காற்றும் சம அளவாக இருக்கும்படி பழகிக் கொண்டால், பெரும்பாலான உடல் உபாதைகளே வராது.

ஆனால், பொதுவாக எல்லோரும் என்ன செய்கிறோம்? எது நமக்கு நல்லது செய்யக் கூடியதோ..

எது நம்முடைய வாழ்க்கையில் அத்யாவசியமோ அதையெல்லாம் கவனிப்பதில் அலட்சியமாக இருக்கிறோம்.

ஒரு நாளைக்கு 21600 முறை சுவாசிக்கணும். அதாவது ஒரு சுவாசத்துக்கு சராசரியாக நாலு செகண்ட் எடுத்துக்கணும்.

இந்தக் கணக்கை எத்தனை பேர் சரியாகச் செய்கிறோம்?

கோபம் வந்தால், சுவாசம் எகிறுகிறது. கஷ்டம் வந்தால் தாறுமாறாகிறது.

கவலை வந்தால் சுவாசிப்பதில் சிரமம். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் எது முக்கியமோ அதை அலட்சியப் படுத்துகிறோம்.

அப்படித் தப்பாகிப் போகிற சுவாசத்தை…சுவாசக் கணக்கை குறிப்பிட்ட நேரம் வரைக்குமாவது சரியாகச் செய்யக் கற்றுக் கொள்ளத்தான், அமைதியாக சுவாமி கும்பிடுவது, தியானம் செய்வது, யோகாப்யாசம் செய்வது, ஸ்லோகங்கள் சொல்வது இப்படிப் பல விஷயங்களை வைத்திருக்கிறார்கள்.

அப்படிக் கொஞ்ச நேரம் பழகினால் அதுவே படிப்படியாக முழு நேரப் பழக்கமாகிவிடும்.

“முதலில் நீ ஒன்று செய். வீணாக உணர்ச்சி வசப்படுவதைத் தவிர். அனாவசிய டென்ஷன், வீண் கோபதாபம், விருப்பு வெறுப்பு போன்றவற்றுக்கு இடம் தராமல், சுவாமி நினைவோடு இரு. அப்படி இருந்தால், சுவாசம் சீராகும். பிறகு ஆரோக்யம் தானாக சீராகும். ஆயுசும் வளரும்!”

பெரியவா சொல்லி முடிக்க, பிரசாதம் பெற்றுக் கொண்டு நகர்ந்தார் அந்த பக்தர்.

தேக நலன் சீராக இருக்க மகாபெரியவா சொன்ன இந்த சுவாசக் கணக்கு, அந்த பக்தருக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே பொருந்தும் என்பது உண்மை.

*kn*


ravi said…
இந்த பூமியில் நல்லதை படைத்த ஆண்டவன் தான், கெட்டதையும் படைத்திருக்கின்றான்! நல்லதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நம்முடைய மனது, எதற்காக கெட்டதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது’? என்றாவது இந்த கேள்வியை நீங்கள் சிந்தித்து உள்ளீர்களா? இன்றைக்கு கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமா? ஒரு சிறிய கதையோடு!

குருவிடம் ஒரு மாணவன், இதே கேள்வியை கேட்டான்! அதற்கு, அந்த குரு என்ன விளக்கம் அளித்தார்? என்பதை நாம் தெரிந்து கொண்டால், தலைப்பில் உள்ள கேள்விக்கான பதிலை நாம் புரிந்து கொள்ளலாம். ‘குருவே! “நல்லதை படைத்த இறைவன் தானே, கெட்டதையும் படைத்துள்ளார்! நல்லதை, நாம் மனம் அப்படியே ஏற்கின்றது அல்லவா? நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ளும் நம் மனது, எதற்காக, கெட்டதை ஏற்றுக் கொள்ளக் மறுக்கின்றது’? அந்த குரு, சிறிய புன்னகையோடு, ‘அது அவரவர் இஷ்டம்’ என்று சொல்லிவிட்டார்.

சிறிது நேரம் கழிந்தது, இரவு நேர சாப்பாடு, சாப்பிடும் நேரம் வந்தது. குரு தன்னுடைய சிஷ்யனுக்கு, உணவாக ஒரு டம்ளரில் பாலையும், ஒரு தட்டில் சாணத்தையும் கொடுத்தார். இதைப் பார்த்த மாணவன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான்! குழம்பிய மாணவனின் மனதிற்கு குரு, பின்வருமாறு விளக்கம் அளித்தார்.

‘பசுவிடமிருந்து தான் பால் வருகின்றது. சாணமும், அதே பசுவிடமிருந்து தான் வருகின்றது. பாலை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் நாம், எதற்காக சாணத்தை மட்டும் ஏற்க மறுக்கிறோம்?’ பால் போன்று நன்மையைத் தரும் பொருட்களை நாம் நேரடியாக மகிழ்ச்சி என்று சொல்லி அனுபவிக்கின்றோம்.

சாணத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அதை உரமாக்கி, மண்ணில் புதைத்து, அது தரும் நன்மையின் மூலம் பலன் அடைகின்றோம். இதே போல் தான் வாழ்க்கையில் வரும் கெட்டதை மண்ணில் புதைத்து, அதிலிருந்து கிடைக்கும் நன்மையை, அனுபவங்களை நம்முடைய வாழ்க்கையின், உரமாக்கி முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றவாறு பதிலைக் கூறினார்.

இறைவன் நமக்காக படைக்கப்பட்ட ஒவ்வொரு விஷயங்களிலும், பல மர்மங்கள் அடங்கி தான் இருக்கின்றது. புரிந்தவர்கள் மகான் ஆகிறார்கள். புரியாதவர்கள், மனிதனாக இந்த பூமியில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கின்றோம். இதுதானே வாழ்க்கை! ஒரு மனிதன் மகானாக மாறுவதற்கும், மீண்டும் மறுபிறவி எடுப்பதற்கும், அவரவர் வாழ்கின்ற வாழ்க்கையை, எந்த கண்ணோட்டத்தில் பார்த்து வாழ்கின்றார்கள், என்பதை பொறுத்தே அமைகின்றது. அனைவரும் சிந்தித்து செயல்பட்டு, சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

ஸர்வம் ஸ்ரீ விஷ்ணு மயம்

#mahavishnuinfo
ravi said…
வைகுண்டம் புகுவது மண்ணவர் விதியே!' என்பார்கள். திருமால் குடிகொண்டிருக்கும் வைகுண்டத்துக்குச் சென்று, அவன் திருவடியைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை விரும்பாத மனிதர்கள் இருக்கிறார்களா, என்ன?
கோயிலுக்குச் சென்று, பெருமாளின் திவ்விய ரூபத்தை சேவித்துப் பிரார்த்தித்து, அவனுடைய அடியவன் என்று சொல்லிக் கொள்வதில் ஆனந்தப்படுகிற பக்தர்கள், 'என்னை வைகுண்டத்துக்கு அழைச்சுக்கோ பகவானே’ என்று ஒருகட்டத்தில் பிரார்த்திக்கின்றனர்.

'பதம் அநுத்தமம்’ என்றொரு சொல் உண்டு. பதம் என்றால் இடம்; அநுத்தமம் என்றால், அதை விட வேறில்லை என்று அர்த்தம். அதாவது, நாம் அடைக்கலம் அடைவதற்கு பரந்தாமன் குடிகொண்டிருக்கிற வைகுண்டத்தைவிட ஆகச் சிறந்த இடம் வேறில்லை என்று பொருள்!



அந்த வீரம் எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் செயல் மூலமாகவே உணர்த்தியிருக்கிறான்.

போஜனப் பாத்திரத்தில் மிச்சம் வைக்கவேண்டும்; தீர்த்தப் பாத்திரத்தில் மிச்சம் வைக்கக்கூடாது என்பார்கள். அதாவது, சாப்பிடுகிற இலையில் மிச்சம் வைத்தால், அவற்றை நாயோ பூனையோ சாப்பிடும். ஆகவே, மீதம் வைக்க வேண்டும். உணவு முடிந்ததும் பக்கத்தில் வைத்திருக்கிற சொம்புத் தண்ணீரை மீதம் வைக்காமல் குடித்தால்தான், அந்தத் தண்ணீரானது உணவைக் கரைக்கவும் செரிக்கவும் வைப்பதற்கு பேருதவி செய்யும்!

அதேபோல், மிச்சம் வைக்கக்கூடாத முக்கியமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா? சத்ருக்கள் எனப்படும் எதிரிகளை ஒருபோதும் மிச்சம் வைக்கவே கூடாது! எதிரிகளில் மிச்சசொச்சமாக ஒருவரேனும் இருந்துவிட்டால், அவரால் நமக்கு எப்போது வேண்டுமானாலும் தொல்லைகள் நேரலாம்.

ஸ்ரீராமருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் உள்ள முக்கியமான வித்தியாசமும் இதுதான்!

அதாவது, ஒவ்வொரு முறையும் ஒருவரை மிச்சம் வைத்துக்கொண்டே வந்து, அவர்களால் தொல்லைகளையும் அனுபவித்து, பிறகு அழித்தொழித்தான் ஸ்ரீராமபிரான். எல்லோரையும் அழித்தபோது மாரீசனை மட்டும் விட்டுவிட்டான் ஸ்ரீராமன். பிறகு, அவனால் வந்த விளைவைச் சந்தித்தான். அதேபோல், சூர்ப்பணகையைக் கொல்லாமல், அவள் காது - மூக்கை மட்டும் சேதப்படுத்தி அனுப்பி வைத்தான். அவளும் அழுதுகொண்டே அண்ணனிடம் சென்று முறையிட்டாள்.

இப்படி... எதிரிகளை மிச்சம் வைத்து, அதனால் தொல்லைகளை அனுபவித்த பிறகுதான் அழித்தான் ஸ்ரீராமன். ஆனால் ஸ்ரீகண்ண பரமாத்மா, துரியோதானாதிகள் ஒருவரைக்கூட விடாமல் அழித்தொழித்தான். அதனால்தான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்கு 'வீரஹ’ எனும் திருநாமம் அமைந்ததுபோலும்!

அப்படி வீரனாக, முறுக்கு மீசை கொண்ட சூரனாக இருந்தாலும், கண்ணனைப் போல கருணையாளன் வேறு எவருமில்லை.

'பணமும் பத்தா இருக்கணும்; குணமும் முத்தா இருக்கணும்’ என்பார்கள். இங்கே பணத்தைப் பார்க்கவேண்டாம்; குணத்தைப் பார்ப்போம்.

ஸ்ரீகிருஷ்ணனுக்கு 'ஹேமாங்கஹ’ எனும் திருநாமம் உண்டு. ஹேமம் என்றால் சுத்தமான, சாத்விகமான திருமேனியைக் கொண்டவன் என்று அர்த்தம். சுத்தமான திருமேனி கொண்ட கிருஷ்ணரைத் தரிசிக்க தரிசிக்க... அவனையே அனவரதமும் நினைந்துருக உருக... நம் மனமும் சுத்தமாகும். நமக்கு உள்ளேயும் சாத்விக குணம் பரவும்! அதனால்தான் 'கண்ணா கண்ணா...' என்றோ, 'கிருஷ்ணா கிருஷ்ணா...' என்றோ நாம் அடிக்கடி உச்சரிக்கிறோம்.

வீரன் என்று குறிக்கும் வகையில் ஒரு திருநாமம்; எதிர்மறையாக, அமைதியான சாத்விக மேனி கொண்டவன் என்று குறிப்பிடும்படியாகவும் ஒரு திருநாமம். இவை தவிர, எல்லோருக்கும் தெரிந்த அவனுடைய இயல்பான குணத்தைக் கொண்டும் ஒரு திருநாமம் உண்டு. ஆம்... விஷமங்கள் செய்வதில் சூரனான கண்ணபிரானுக்கு 'விஷமஹ’ எனும் திருநாமமும் உண்டு!......

#mahavishnuinfo
ravi said…
நிறைவில் இறைவனிடம் அப்படித்தான் வேண்டுகிறோம். ஆனால், ஆரம்பத்தில்... பகவானின் திருமேனியில் சிலிர்த்துப் போகிறோம்; அப்பேர்ப்பட்ட பொன்னான திருமேனி உடையவன் ஸ்ரீபகவான். அதனால்தான் அவனுக்கு 'ஸ்வர்ண வர்ணஹா’ எனும் திருநாமம் அமைந்தது.

'என்ன இது குழப்பம்! கண்ணபிரான் நீலமேக சியாமளன் ஆயிற்றே... அவனுடைய நிறம் கறுப்பும் நீலமும் கலந்தது அல்லவா! அப்படியிருக்க, ஸ்வர்ண வர்ணம் என்று சொல்லி அதைக் கொண்டே திருநாமம் சூட்டியிருக்கிறார்களே..?!' என்று குழப்பம் அடைகிறீர்களா?

ஸ்வர்ணம் என்றால் பொன்; ஸ்வர்ண வர்ணம் என்றால் பொன்னின் நிறம் என்று அர்த்தம். ஆனால், கண்ணபிரான் நீல வண்ணம் கொண்டவன்தான். ஆனால், அவன் திருமேனி எந்த நிறத்தில் இருந்தால் என்ன... அவன் பொன்னின் நிறத்தைப் போல ஜொலிஜொலிக்கிறான்; தங்க நிறத்தில் தகதகக்கிறான். அதாவது, தங்க நிறத்தைப்போல் ஒளி கொண்டு திகழ்கிறான் என்று அர்த்தம்.

'சரி... கண்களும் தலைமுடியும் கறுப்பு நிறத்தில்தானே இருக்கும்? அதுவுமா தங்க நிறத்தில் காட்சி தந்தது?!' என்கிறீர்களா?

இன்றைய காலகட்டத்தில், தலைமுடியை 'அப்படிப் பண்ணிக்கிறேன்... இப்படி செஞ்சுக்கறேன்’ என்கிறார்கள். 'ப்ளீச்' பண்ணிக்கொண்டு, செம்பட்டை நிறத்தில் முடியை மாற்றிக் கொள்கிறார்கள். அப்படி முடியின் நிறத்தை மாற்றிக் கொள்வதற்காக ஏகப்பட்ட செலவுகளைச் செய்கிறார்கள்.

ஆனால், கருமை நிறக் கண்ணனான பரமாத்மாவின் தலைமுடியும் கண்களும் கறுப்பு நிறமாகத்தான் தெரிந்தன. அதேநேரம், கண்ணபிரானின் மேனியெங்கும் ஒருவித ஒளி படர்ந்து, பரவியிருந்தது. கறுப்பு நிறத்தில்கூட, தங்க நிற ஒளி பிரகாசமாக ஜொலித்தபடி காட்சி தந்ததாம்!

இன்னொரு விஷயம்... சாஸ்திரப்படி மீசை வைத்துக் கொள்ளக்கூடாது என்பார்கள். ஆனால், ஆயர் குலத்தில் பிறந்தவன் என்பதால் மீசை வைத்திருந்தானாம் ஸ்ரீகண்ணபிரான். 108 திவ்விய தேசங்களில், எத்தனையோ திருக்கோலங்களில் பகவான் திருக்காட்சி தந்தாலும், பெரிய மீசையுடன் ஸ்ரீவேங்கடகிருஷ்ணனாக, ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளாகக் காட்சி தருவது திருவல்லிக்கேணி திருத்தலத்தில்தான்!

சென்னை, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதியின் திவ்வியமான மேனியைத் தரிசித்தால், அவன் ஸ்வர்ண வர்ணன் என்பதை அறிந்து சிலிர்ப்பீர்கள். 'பரஞ்ஜோதி’ அல்லவா பரம்பொருள்!

அதேபோல், 'வீரஹ’ எனும் திருநாமமும் அவனுக்கு உண்டு. வீரமானவன் என்று அர்த்தம்.
ravi said…
🌹🌺 *ஹே கிருஷ்ணா* ..... *உம்மை போன்ற பரம தயாளன் ஒருவர் உண்டோ* !!.….... *என்ற ஜகந்நாத பக்தன்* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹‘தாஸியா’ ஒரு அப்பாவி அவருக்கு ஜகந்நாதனை பற்றி எல்லாம் அவ்வளவாக தெரியாது, ஆனால் அவர் ஊரில் வந்த பாகவத உத்தமர்கள் ஜகந்நாதன் சரித்திரம் சொல்லவதை தூரத்தில் இருந்து கேட்டு இருக்கிறார்.

🌺 ஓ இவ்வளவு பரமக்ருபாகரனா இந்த ஜகந்நாதன் என்று மனதிற்குள் நினைத்துகொண்டு அவனை ரசிக்க ஆரம்பித்தார். தினமும் ஹரி பஜனை செய்து வாழ்வை பயனுள்ளதாக மாற்றி கொள் என வந்த பாகவதர் உபதேசம் செய்தனர்.

🌺இவரும் தினமும் ஜகந்நாதா! ஜகந்நாதா! என சொல்லி கொண்டு வாழ்வை நகர்த்தி வந்தார்.

🌺இப்படி இருக்க இவருக்கு ஆர்வம் மேலிட்டது சரி என்று இவர் ஊரில் இருந்து கிளம்பி நடக்க ஆரம்பித்தார் நடந்தார் நடந்தார் நடந்து கொண்டே இருந்தார், ஆனால் சேத்திரம் வந்த பாடில்லை இருப்பினும் ஒரு வழியாக வந்து சேர்ந்தார்.

🌺சரி நம் ஜகந்வாதனுக்கு ஏதாவது கொடுக்கலாமே என்று தன் கையில் வைத்து இருந்த சிறிய தொகையை வைத்து ஒரு தேங்காய் வாங்கி சமர்ப்பிக்க நினைத்தார் அதை ஒரு துண்டில் வைத்து முடிந்து கொண்டு சென்றார்.

🌺 போகும் வழியில் வாயில் காப்பாளன் இவன் என்ன சுற்றி கொண்டு போகிறான் என வாசலில் நிறுத்தி நீயெல்லாம் கோவிலுக்கு வர தகுதி இல்லாதவன் என நிறுத்தினான்.

🌺 இவரும் வாசலில் நின்ற ‘பட்டரிடமெல்லாம்’ இந்த தேங்காயை ஜகந்தாதனிடம் சேர்த்து விடுங்கள் என கூற அவர்களோ பெரிய அதிய தேங்காய் போ போ என விரட்டி அடித்தனர்.

🌺 மனம் நொந்து இவர் கருட ஸ்தம்பம் வந்து ஹே ஜகந்நாதா! நீ கருணை மிக்கவன் அல்லவா எம்மை போன்ற அனாதைகளின் தாயல்லவா நான் ஆசையோடு உமக்காக வாங்கி வந்த இந்த தேங்காயை ஏற்று கொள்ள இங்கு யாருக்கும் மனது இல்லை

🌺அன்று குசேலர் கொண்டு வந்த அவுலை ஆசையுடன் ஏற்று கொண்ட பரம க்ருபாநிதி நீ அல்லவா! ஜகந்நாதா! இந்த அபலை வாங்கி வந்த தேங்காயை திருப்பி எடுத்து செல்ல போவது இல்லை

🌺இதோ உமக்கு சேர வேண்டியது நீயே எடுத்து கொள் என்று அவர் தேங்காயை நீட்ட ஜகந்நாதன் வந்து உடனே அதை வாங்கி கொண்டான்.

🌺ஹே கிருஷ்ணா உம்மை போன்ற பரம தயாளன் ஒருவர் உண்டோ!!🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 Hey Krishna.....Is there a supreme benefactor like you!!.. Jagannath Devotee - Explaining Simple Story 🌹🌺 -------------------------------------------------- ------
🌺🌹'Tasiya' is an innocent, she doesn't know much about Jagannathan, but she has been listening to the story of Jagannathan from a distance by the Bhagavata Uthamas who came to the town.

🌺 Thinking in his mind that this Jagannath is so great, he started admiring him. Bhagavathar preached to make life useful by performing Hari Bhajan daily.

🌺He is Jagannath every day! Jagannath! He used to move his life by saying that.

🌺 He started walking from the town and walked and walked and kept walking, but he did not reach Setram, but somehow he came there.

🌺 Well, he wanted to buy a coconut with the small amount he had in his hand to offer something to our Jaganwadan, he put it in a piece and carried it away.

🌺 On the way, the gate guard stopped him at the door asking what he was carrying around and stopped him saying that you are not worthy to come to the temple.

🌺 He also said to 'Battari allam' who was standing at the door to give this coconut to Jagannath, they chased away the huge coconut.

🌺 Distraught, he came to the Garuda pillar, O Jagannatha! Aren't you merciful or the mother of orphans like us, no one here has the heart to accept this coconut which I have eagerly bought for you.

🌺Aren't you the Supreme Krupanidi who eagerly accepted the awl brought by Kuseler that day! Jagannath! I am not going to take back the coconut that I bought this apple

🌺Jagannathan came to hold out the coconut and immediately took it.

🌺O Krishna, is there a supreme benefactor like you!!🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
முருகா* ...

அலை பாயும் ஆலயம் அங்கே அழகே சிலை கொண்ட ஓவியம்

தீயின் அணைப்பில் தெறித்த குளிமை ..

ஈசன் சடை தங்கும் திங்களுக்கும் இல்லை

அமுதம் பொழியும் வதனம் ...

அதிலே ஓடுவதோ தந்தை இடும் மந்தம் தரா பால்நீறு

சக்தி தந்த
வேல் அதிலே முக்தி வரும் பக்தி கொண்டால்

தோகை விரித்தாடும் மயில்

ஆடல் குடும்பத்தில் அதுவும் ஒரு எழில்

காலை எழுப்பும் சேவல் மணியோசை தருமே மரகதம் வருகிறான் என்றே

சிகப்பு நிறம் தன்னில் வெள்ளை மனம் கொண்டாய் முருகா

நீ எல்லோர்க்கும் அள்ளி தருவதோ பசுமை மட்டுமே அன்றோ ?

ஆறுமுகம் கண்டால் ஆறுதல் கிடைக்குமென்றே

ஆடி ஆடி காவடி ஏந்தி வந்தேன் ..

முருகா நீ தந்ததோ ஏறுமுகம்

இனி எனக்கில்லை கார்முகம் ...

*செந்தூர் குமரா*

நானும் அலையானேன்

இன்று உன் திருவடி கண்டே திரும்பி போகிறேன்

தீர்ந்தது என் கவலை எல்லாம் என்றே
🐓🦚🐓🦚🐓🦚🐓🦚
Hemalatha said…
ஒரு வேண்டுகோள்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த 2 தினங்களில் சுவாமிக்கு சிகப்பு, வெள்ளை,பச்சை சாத்தி வைபவங்கள் நடந்தது.தங்கள் எழுத்துக்களில் படிக்க ஆசை.முடிந்தால் ப்ளீஸ் சார்🙏🙏
ravi said…
காலால் உதைத்தாயோ காலனை ?

அதனால் உனை
உதைத்தானோ ஒரு வேடன்!!
ravi said…
காரூண்யம் கொட்டும் கண்ணில் குருதி ஓடும் காட்சி கண்டான் திண்ணன்

காமாக்ஷி கொலுவிருக்கும் மேனி தனில் தன் கால் வைத்தான்

கருணை அங்கே கங்கை என ஓடியதே

என்றோ காலனை உதைத்தான் என்பதால்

இன்று பழி தீர்த்தானோ வேடன் இவன்

இல்லை இல்லை ...

குழந்தையின் கால் பட இறைவனும் தவம் செய்தான் அன்றோ ..

உமிழ்ந்த நீர் கங்கைக்கு போட்டி அன்றோ

சூடிய காட்டு மலர்கள் இந்திரன் தோட்டத்து பாரி ஜாதம் அன்றோ

வெந்த அசைவம் சைவம் விரும்பி சுவைத்த பால் பாயசம் அன்றோ

இறந்தபின் கண் தானம் தருவோர் சிலர் உண்டு

வாழும் போது தரும் இவன் அன்றோ வேதம் சொன்ன பாதம் ..

அவன் பாதம் , பதம் தூக்கி ஆடும் பரம்மனுக்கு பன்னீர் அன்றோ

இதம் கனிந்து நில் கண்ணப்பா என்றான் ஈசன் ... கண்ணப்பன் நில்லாமல் இறையுடன் சேர்ந்தான்

காஞ்சி வாழ் கருணைக்கடலாய் மீண்டும் பிறந்ததே

என் கண்ணப்பா சொல்லப்பா என்றே நம்மை சொல்ல வைத்தான் பெரியவா ஆகியே 💐💐💐
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 325* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*117 भक्तसौभाग्यदायिनी - பக்த ஸௌபாக்ய தாயிநீ --*
ravi said…
அம்பாளுக்கு என்றே சில பிரத்யேக விசேஷ குணங்கள் உண்டு

👍 *வாத்ஸல்யம்* தன்னை வழி படுபவர்களை தாயாக கனிந்து பார்த்துக்கொள்பவள்

👍 *சௌலப்யம்*

நமக்காக இறங்கி வரும் தன்மை கொண்டவள்

👍 *சௌசீல்யம்* .

மிகுந்த தோழமை கொண்டவள் . நண்பர்களுடன் தான் மனம் விட்டு பேசமுடியும் அதுபோல் அம்பாளிடம் பேசலாம் .. சுந்தருக்கு ஈசன் போல

👍 *சக்தி* ...

தன்னுள் எல்லா சக்திகளையும் கொண்டு உள்ளவள் .. வேறு யாரிடமும் நாம் வேண்டி போக த் தேவை இல்லை

👍 *தேஜஸ்* ...

அபரிதமான அழகு , ஞானம் , காந்தி கொண்டவள்

👍 *வீர்யம்*

சண்டை போடும் தன்மை மட்டும் அல்ல யார் யாருக்கு எதை எப்பொழுது கொடுப்பது என்று முடிவு எடுக்கும் திறமை

இன்னும் நிறைய கல்யாண குணங்கள் கொண்ட தாய் அம்பாள் ... எனவே அவளே *சௌபாக்கிய தாயினீ* 💐💐💐
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 327* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*87 பனியிலும் இரவிலும் கூட அழகு குன்றாத பாதகமலங்கள்*

ஸர்ப்ப வச்யம்🙏

ஹிமானீ ஹந்தவ்யம் ஹிமகிரி நிவாஸைக சதுரௌ

நிஶாயாம் நித்ராணாம் நிஶி சரமபாகே ச விஶதௌ

வரம்லக்ஷ்மீபாத்ரம் ஶ்ரிய மதிஸ்ருஜ ந்தௌ ஸமயினாம்

ஸரோஜம் த்வத் பாதௌ ஜனனீ ஜயதஶ் சித்ரமிஹ கிம் 87
ravi said…
//அம்பிகையின் பாதங்களானது தாமரைப் புஷ்பத்தை விஞ்சிய அழகுடையது என்பது இந்த ஸ்லோகத்தில் உள்ள செய்தி.//

அன்னையின் பாதாரவிந்தத்தில் சமர்ப்பணம்.
ravi said…
அன்னை பராசக்தியின் ம்ருதுவான அக்கால்களை பரமசிவன் எப்படித்தான் அம்மிக்கல்லில் வைக்கத் துணிந்தாரோ//

அதானே!

//பஞ்ச ழுத்தினும் வாடு நின்பதபங்க யத்தினை //

மெல்லிய பஞ்சால் அழுத்தினால் கூட வாடி விடுமாம் அம்மாவுடைய தாமரைப் பாதங்கள். எவ்வளவு அழகு! கவிதை, உவமை, பாதம், எல்லாம்தான்!
ravi said…
இம நெடுங்கிரி உலவியும் கவின்
எழு நிரந்தர மலரும் மேல்

அமர் பெருந்திரு அருளும் நின் பத
அருண முண்டகம் அனையதோர்
கமலம் என்பது

பனியில் வெந்து இதழ்
கரிய கங்குலின் முகுளமாய்
விமலையின் திருமனை எனும் பெயர்
விளவது ஒன்றல முதல்வியே🪷🪷🪷
ravi said…
முதல்வியே!

குளிரில் சிறந்த இமய பெருமலையில் உலவியும் அழகுடன் எப்போதும் (இரவும் பகலும்) மலர்ந்திருப்பதும்,

என்றும் நிலையாக பெரும் செல்வம் அருளும்,

உன்னுடைய திருவடிகள்👣 விரிந்த சிவந்த தாமரை🪷 மலர்கள் போன்றது என்று புகழ்வது சரி தானா?

விமலையாம் திருமகளின் இல்லம் என்பது மட்டுமே தாமரைக்கும் உன் திருவடிகளுக்கும் உள்ள ஒற்றுமை.

மற்ற படி கமலம் பனியில் வெந்து இதழ் கரிந்து விடும். கங்குலாம் இரவில் கூம்பி முகுளமாகிவிடும்.

அதனால் தாமரை போன்றது உன் திருவடிகள் என்று சொல்வது பொருத்தமில்லை.👍👍👍
ravi said…
கண்ணா*🦚

மூங்கில் செய்த புண்ணியம் நான் செய்யவில்லை

உன் புல்லாங்குழல் சுவைக்கும் மதுரம் நான் சுவைத்ததில்லை

உன் கருணை எனும் தாடகம் தனில் நான் அரவிந்தமாய் மலர்ந்ததில்லை(🪷)

உன் கீதை கேட்டும் சரி பாதை சென்றதில்லை

என் உள்ளம் உன் நிறம் கொண்டதே ஏன் *கண்ணா*? ...

உன் சங்கின் நிறம் அடைய துடிக்கின்றதே *கண்ணா* ..

யமுனை என ஓடும் வாழ்க்கை இது

அதில் தவணை முறையும் உனை நினைக்கின்றிலேன்

பொய்யும் மெய்யும் இயம்ப பாடுகின்றேன்
மண்ணில் செல்லும் உயிர்களை ...

உன்னை எண்ணிலேன்
ஒரு பொழுதும் ..

இதனால் கண்டிலேன் உனை இமை பொழுதும் 😰

*கண்ணா*

பாவி என்றே எனை தாவி அணைக்க மறந்தாயோ .. ?

ஏவி எறியும் என் வார்த்தைகள் எரிமலை என்றே வெறுத்தாயோ?

தூவி மலர் தொழா என்னிடம் தோழமை கொள்ள மறுத்தாயோ??

மன்னவனே என்னவனே

மடி பிச்சை தாராயோ ?

உன் மடி மீது கொஞ்சம் துயில் கொள்ளும் வரம் அருளாயோ ?💐💐💐
ravi said…
I give here the essence of all the 18 chapters of Gita in just 18 sentences.

One liner Geeta -
Will you forward and circulate this to all? Each one is requested to forward this to as many persons in 4 days. Not only within your state but this should be forwarded to the entire India.

One liner Geeta

*Chapter 1 - Wrong thinking is the only problem in life .*
*Chapter 2 - Right knowledge is the ultimate solution to all our problems .*
*Chapter 3 - Selflessness is the only way to progress and prosperity .*
*Chapter 4 - Every act can be an act of prayer .*
*Chapter 5 - Renounce the ego of individuality and rejoice the bliss of infinity .*
*Chapter 6 - Connect to the higher consciousness daily.*
*Chapter 7 - Live what you learn .*
*Chapter 8 - Never give up on yourself .*
*Chapter 9 - Value your blessings .*
*Chapter 10 - See divinity all around .*
*Chapter 11 - Have enough surrender to see the truth as it is.*
*Chapter 12 - Absorb your mind in the higher.*
*Chapter 13 - Detach from Maya and attach to divine .*
*Chapter 14 - Live a life- style that matches your vision.*
*Chapter 15 - Give priority to Divinity .*
*Chapter 16 - Being good is a reward in itself .*
*Chapter 17 - Choosing the right over the pleasant is a sign of power .*
*Chapter 18 - Let go, let us move to union with God .*
( Introspect on each one of this principle)

|| ॐ तत्सत् ||

P. S. - Again and again I request you to forward this to as many people and explain the importance of Gita.
ravi said…
50 - ஆன்மீக
கேள்விகளும்-பதில்களும்
ஏன் ? எதற்கு? எப்படி?

1 - வீட்டில் விளக்கேற்றும் போது
சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம்
போட வேண்டுமா?

காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.

2 - செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?

செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.

3 - கண்ணை மூடிக் கொண்டு
கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே! உண்மையா?

கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.
ravi said…

4 - திருமணஞ்சேரியில் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை
மாலை தொலைந்துவிட்டது. மீண்டும் மாலை செலுத்த விரும்புகிறேன். பரிகாரம் என்ன?

அறியாமல் செய்த தவறு தானே! இதற்காகக் குழம்பிக் கொள்ள வேண்டாம். மீண்டும் திருமணஞ்சேரி சென்று புதுமாலை வாங்கி சேர்த்து விடுங்கள். தவறைப் பொறுக்குமாறு கல்யாணசுந்தர சுவாமியிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

5 - சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே, ஏன்?

சஞ்சீவி என்பது உயிர் காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.
ravi said…
சஞ்சீவி என்பது உயிர் காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.

6 - கனவில் பாம்பு அடிக்கடி
வருகிறது. அதைத் தவிர்க்க
ஏதாவது பரிகாரம் உண்டா?

பொதுவாக கனவில் பாம்பு வந்தால் பணம் வரும் என்பார்கள். மற்றபடி பயப்பட ஏதுமில்லை. முருகனுக்கு அர்ச்சனை செய்து பயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.

7 - பூஜை, விரதம்
போன்றவற்றை பெண்கள் மட்டுமே
கடை பிடிக்க வேண்டுமா, ஆண்கள் கடைபிடிக்கக் கூடாதா?

இவற்றில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வீடு, குழந்தைகள் நலன் விஷயங்களில் பெண்களே அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் பூஜை, விரதங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். மற்றபடி ஆண்கள் பூஜை, விரதம் போன்றவற்றைச் செய்யாமல் இல்லை.
ravi said…

8 - மாலை நேரத்தில் சாப்பிடக்
கூடாது என்று பெரியவர்கள்
சொல்வதன் காரணம் என்ன?

சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு வேளைகளிலும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மற்றதைச் செய்யக்கூடாது.

9 - வாகனத்தில் பன்றி இடித்துவிட்டால் அதை விற்றுவிடுகின்றனர். இதற்கு சாஸ்திர ரீதியான காரணம் உண்டா?

பன்றியைத் தவிர மற்ற மிருகங்கள் இடித்துவிட்டால் வாகனம் தங்கமாக மாறிவிடுமா? இதற்கு சாஸ்திரங்களையெல்லாம் இழுக்க வேண்டாம். வாகனங்களை விற்கவும் வேண்டாம். முதலில் எல்லோரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். "சாலை விதிகளை மதிக்காமல் வாகனத்தில் இடிப்பவர்களெல்லாம் அடுத்த பிறவியில் பன்றியாகப் போகக் கடவது' என்று சபிக்குமளவுக்கு சிலர் வாகனம் ஓட்டுகின்றனர்.
ravi said…

10 - திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது என்று சொல்லுங்கள்?

சாம்பிராணி புகை போட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள்.

11 - கோயிலில் நவக்ரஹ வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா?

முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.

12 - சிவன் கோயிலில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையில் செல்லக்கூடாது என்பது ஏன்?

நந்திதேவர் தமது மூச்சுக் காற்றின் வாயிலாக சுவாமிக்கு சாமரம் வீசி வழிபட்டுக் கொண்டே இருக்கிறார். அது தடைபடாமல் இருக்க நாம் இடையில் செல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சுவாமி - நந்தி, கணவன் - மனைவி, பெற்றோர் - குழந்தை, குரு -சிஷ்யன், பசு - கன்று ஆகியோரது குறுக்கே செல்லக்கூடாது என்பது சாஸ்திர நியதி.
ravi said…

13 - நரசிம்மர் கோயிலில் பிரதோஷ விழா நடப்பது ஏன்?

பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். நரசிம்மரை வழிபடுவதற்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

14 - பஞ்சாங்கத்தில் நட்சத்திரம்,
திதி போன்றவை மதியம் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை இருப்பதாக பார்க்கிறோம். விரதம், வழிபாட்டை எப்போது செய்ய வேண்டும்?

விரதம், வழிபாடு மேற்கொள்வதிற்கு இரவில் திதி வியாபித்து இருக்கவேண்டும் என்பது நியதி. அதனால், முதல்நாளிலேயே விரதத்தை மேற்கொள்ளுங்கள். திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது போன்றவற்றிற்கு இது பொருந்தாது.
ravi said…
15 - கிருஷ்ணர்வெண்ணெய் திருடுவதில்உள்ளதத்துவம் என்ன?

மேலோட்டமாக பார்க்கும்போது திருடுவது போலத் தெரிந்தாலும், அதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் அதை திருட்டாக எண்ண மாட்டோம். வெண்ணெய் என்பது பக்தி நிறைந்த வெள்ளை உள்ளத்தைக் குறிக்கும். அதை பரம்பொருளான கிருஷ்ணர் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்.

16 - விளக்கேற்றக் கூடிய
திசைகள் யாவை?

கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளில் ஏற்றலாம். தெற்கில் மட்டும் ஏற்றக்கூடாது.

17 - நம்முடைய இஷ்டதெய்வத்தின் உருவச்சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா?

இஷ்டதெய்வ சிலையை வைத்து வழிபடலாம். வழிபாட்டின் போது காலை, மாலை வேளைகளில் பால், பழம் பிரசாதமாக வைத்து பூஜை செய்யுங்கள்.
ravi said…
17 - நம்முடைய இஷ்டதெய்வத்தின் உருவச்சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா?

இஷ்டதெய்வ சிலையை வைத்து வழிபடலாம். வழிபாட்டின் போது காலை, மாலை வேளைகளில் பால், பழம் பிரசாதமாக வைத்து பூஜை செய்யுங்கள்.

18 - பிரதோஷம் என்றால் என்ன?
அத்தருணத்தில் இறைவனை வழிபட்டால் என்ன பலன் உண்டாகும்?

தோஷம் என்றால் குற்றம். ப்ர என்றால் பொறுத்துக்கொள்வது. இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள்தரும் காலமே பிரதோஷம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.
ravi said…
19 - ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்னும் பழமொழியின் பொருள் என்ன?

மாலறு நேயமும் மலிந்தவர் வேடமும் தான் அரன் எனத் தொழுமே என்கிறது சிவஞான போதம். உண்மை பக்தியுடன் சிவாலயம், சிவனடியார்களைத் தொழுதால் அறிவும், நல்வாழ்வும் கிட்டும் என்பது இதன் பொருள். நல்லறிவே மகிழ்ச்சியான வாழ்வின் அடித்தளம். இதனைத் தரும் ஆற்றல் ஆலய வழிபாட்டிற்கு மட்டுமே உண்டு.
ஊர்கள் தோறும் சிவ, விஷ்ணு கோயில்கள் எழுப்பப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. வீட்டில் எவ்வளவு தான் ஜெபம்,ஹோமம், பூஜை செய்தாலும் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் தான் நிறைவு உண்டாகும். சித்தாந்தம் கூறும் இவ்வளவும் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று' எனும் ஒரே வரியில் கூறிவிட்டார் அவ்வைப் பிராட்டியார்.
ravi said…
20 - புனிதமான கோயில் கோபுர சிற்பங்களில் ஆபாச சிலைகள் வடித்திருப்பதன் காரணம் என்ன?

இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லா விஷயங்களுமே புனிதமானவை தான். எதையும் தவறாகச் செய்யும் போது அதன் புனிதம் போய் ஆபாசமாகி விடுகிறது. உதாரணமாக, நல்ல விஷயங்களைப் பேசினால் அது அர்த்தமுள்ள பேச்சு. தீய வார்த்தைகளை உபயோகித்துப் பேசினால் அதுவே ஆபாச பேச்சாகி விடுகிறது. புனிதமான தாம்பத்ய உறவு இல்லையென்றால் குழந்தைகள் எப்படிப் பிறக்கும்? உலக இயக்கம் எப்படி நடக்கும்? உலக வாழ்க்கையில் மனிதன், மிருகம், செடி, கொடி, மரம்.. இப்படி உயிருள்ள எல்லாமே இனப்பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம். இந்த நோக்கில் பார்த்தால் தாம்பத்ய உறவு என்பது திருக்கோயில் சிலையாக வடிக்கக் கூடிய அளவிற்குப் புனிதத்தன்மை வாய்ந்தது. சினிமா, நாடகம், "டிவி' போன்றவை வந்து இந்தப்புனிதத்தை ஆபாசமாக்குவதற்கு முன்பு, கோயில் சிற்பங்களில், இதனைக் கண்டு புனிதமாக வாழும் நெறியை மனிதஇனம் உணர்ந்து கொள்ளவே இப்படிப்பட்ட சிற்பங்களை வடித்தார்கள். மேற்கொண்டு ஆராய்ந்து இதனை ஆபாசமாக்க கூடாது.
ravi said…

21 - சுவாமிக்கு சாத்திய
மாலையை வாகனத்தின் முன்
கட்டிக் கொள்ளலாமா?

சுவாமிக்கு சாத்திய மாலைகள்
பிரசாதம் எனும் புனிதப் பெயரையடைகின்றன. இவை
காலில் படும்படியாக எங்கும் விழக்கூடாது.வாகனங்களில் கட்டிக் கொள்வதால் அது செல்லும் இடம் எல்லாம் சிதறி விழும். அதன் மீது மற்றைய வாகனங்கள் ஏறிச்செல்வது, நம் காலில் படுவது போன்ற தவறுகள் ஏற்படுகின்றன. இது பாவச் செயல். செய்யக்கூடாது.

22 - சிவலிங்க வழிபாட்டை
வீட்டிலேயே செய்வது சரியா?

என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஆண்டாண்டு காலமாக நமது முன்னோர் வழி நின்று நம் எல்லார் இல்லங்களிலும் சிவலிங்கம் வைத்து சிவபூஜை செய்தலும் மற்றும் அவரவர் குல வழக்கப்படி தெய்வ விக்ரகங்களை பூஜை செய்வதும் நடந்து கொண்டு தானே இருக்கிறது. இதற்கு ஆன்மார்த்த பூஜை என்று பெயர். கோயில்களில் செய்யப்படுவது பொது நலனுக்காகச் செய்யப்படும் பரார்த்த பூஜை. இரண்டும் சரியாக நடந்தால் தான் நாமும் நாடும் சுபிட்சமாய் இருப்போம்.
ravi said…

23 - பிதுர்தோஷம் ஏன் ஏற்படுகிறது. அதைப் போக்கும் வழி என்ன?

காலம் சென்ற முன்னோருக்கு பித்ருக்கள் என்று பெயர். இவர்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் நல்ல முறையில் வாழ ஒவ்வொரு தெய்வ வழிபாட்டை ஏற்றுக் கொள்வது போன்று ஒவ்வொரு மனிதனுடைய சந்ததி தழைக்க அவரவர்களது முன்னோர் வழிபாடு எனும் பிதுர் காரியத்தை அவசியம் செய்ய வேண்டும். ஆண்டு தோறும் திதி கொடுத்தல், அமாவாசை தர்ப்பணம் செய்தல் போன்றவை பிதுர் காரியங்களாகும்.

இவற்றைச் சரியாக
செய்யாதவர்களுக்கு பிதுர் தோஷம் ஏற்பட்டு குடும்ப வாழ்க்கையில் குறைபாடு, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனைப் போக்கிக் கொள்ள ராமேஸ்வரம், திருவாஞ்சியம், திருவெண்காடு ஆகிய தலங்கள் ஏதாவது ஒன்றில் தில ஹோமம் செய்ய வேண்டும். இதன் பிறகும், பிதுர் காரியங்களாகிய முன்னோர் வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் பிதுர்தோஷம் நீங்கி நல்ல குடும்ப வாழ்க்கையும் வம்ச விருத்தியும் உண்டாகும்
ravi said…
24 - திருமணத்திற்குப் பின்
பெண்கள் பிறந்த வீட்டு குல
தெய்வத்தை வழிபடலாமா?

புகுந்த வீட்டுக் குல தெய்வம் தான் உங்களின் குலதெய்வமும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், தாய்வீட்டு குலதெய்வத்தை ஒதுக்க வேண்டும் என்பதில்லை. உங்கள் குழந்தைகளுக்கு, தாய் வீட்டுக் குல தெய்வக் கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவது உள்ளிட்டவற்றைச் செய்யலாம். இது விசேஷமானதும் கூட.
ravi said…

25 - ஸ்ரீராமஜெயம் எழுதிய
நோட்டை நதியில் விட்டுவிடலாமா?

ஸ்ரீராமஜெயம் நோட்டில் எழுதுவதற்கு லிகிதநாமஜெபம் என்று பெயர். எழுதிய நோட்டை பூஜையறையில் வைப்பது சிறப்பு. இயலாவிட்டால் ராமநாம வங்கிகளுக்கு அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

26 - வீட்டிலிருந்து கிளம்பும்போது
மூன்று பேராகச் செல்லக்கூடாது
என்பது உண்மைதானா?

சுபநிகழ்ச்சிகள் தொடர்பாக பேசச் செல்லும் போது மட்டும் மூன்று பேராகச் செல்லக்கூடாது. மற்ற நிகழ்ச்சிகளுக்கு பிரச்னையில்லை.

27 - வாழ்க்கை நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டதா அல்லது முற்பிறவி பாவபுண்ணிய அடிப்படையில் அமைக்கப்படுகிறதா? விளக்கம் தேவை?

முற்பிறவி பாவ புண்ணிய பலன்களின் அடிப்படையில் தான் வாழ்வு அமைகிறது. அதற்கான பலனைத் தரும் அதிகாரம் நவக்கிரகங்களின் கையில் உள்ளது. இதனால் தான் நவக்கிரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம்.
ravi said…
28 - அசுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விபூதி குங்குமம் அணிந்து செல்லக் கூடாது என்கிறார்களே, சரிதானா?

எந்த இடத்திற்குச் சென்றாலும் விபூதி அணிந்து செல்லத்தடையில்லை. குங்குமம் கூடாது. நகை அணிந்து செல்லக்கூடாது. திருமணமான பெண்கள் மேற்படி இடத்திற்குச் செல்லும் பொழுது, ஒரு மஞ்சள் கிழங்கை முந்தானையில் முடிந்து செல்ல வேண்டும்.

29 - செவ்வாய் தோஷ நிவர்த்திக்கான எளிய பரிகாரத்தைச் சொல்லுங்கள்?

செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செவ்வாய் ஹோரை வேளையில், செவ்வாய் கிரகத்திற்கு தீபம் ஏற்றி, சிவப்பு மலர் சாத்தி வழிபடுங்கள்.
ravi said…

30 - சுபநிகழ்ச்சிகளுக்கு
வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்?

நவக்கிரகங்களில் ஒருவரான
சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால், மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும்போது, சுபநிகழ்ச்சிகள் குறைவின்றி சிறப்பாக நடந்தேறும் என்பதற்காகவே வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

31 - அறுபது வயதடைந்த
அனைவரும் 60ம் கல்யாணம்
கட்டாயம் நடத்த வேண்டுமா?

நாம் பிறந்த வருடம், மாதம், நட்சத்திரம் மூன்றையும் சேர்த்துப் பார்ப்பது அறுபதாவது பிறந்த நாளில் தான். மறுமுறை பார்ப்பது நூற்று இருபதாவது வயதில்! அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. எனவே ஒரு மனிதனின் வாழ்வில் அறுபது வயது பூர்த்தி என்பது மிக விசேஷமான நாள். அன்றைய தினம் ஆயுள்ஹோமம் செய்து, திருமாங்கல்ய தாரணமும் செய்ய வேண்டும்.

அன்றைய தினம் முதல் மறுபிறவி எடுத்ததாக எண்ணி, அது முதல் அந்த தம்பதிகள் நோய் நொடிகள் இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ்வார்கள். இதனை "ஷஷ்டியப்தபூர்த்தி சாந்தி' என சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே கட்டாயமாக செய்து தான் ஆக வேண்டும். ஆடம்பரமாகச் செய்ய வேண்டும் என்பதில்லை. எளிமையாக நடத்திக் கொள்ளலாம்.

ஒரே வீட்டில் இரு திருமணங்களைச் சேர்த்து நடத்தலாமா? நடத்தலாம், முகூர்த்த நேரத்தை மட்டும் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். கண் திருஷ்டிக்குப் பயந்துதான் சிலர் இதை செய்ய யோசிக்கிறார்கள். தேங்காய் உடைத்து பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்து விடுங்கள். தம்பதிகள் அமோகமாக இருப்பார்கள்.
ravi said…

32 - சிலர் கடவுள் வேடம் அணிந்து பிச்சை எடுக்கிறார்களே. இதை ஊக்கப்படுத்தலாமா?

பிச்சை எடுப்பதே தவறு. இதில் கடவுள் வேடம் வேறு. கிடைக்கும் காசை எடுத்துக் கொண்டு வேடத்தைக்கூட கலைக்காமல் அசைவ ஓட்டலிலும் மதுபானக்கடைகளிலும் இவர்களைக் கண்டு வேதனைப்படுபவர்கள் ஏராளம். எனவே ஊக்குவிக்காதீர்கள். பிச்சைக்காரர்களே இல்லாத நாடாக இந்தியா மாற வேண்டும். பிச்சைஎடுப்பவர்கள் திருந்தி வேறு வழியில் உழைத்து சம்பாதிக்க வேண்டும். அவர்களது குழந்தைகளையாவது படிக்க வைக்க வேண்டும். எவ்வளவோ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தோன்றியும் இவர்களை மாற்ற முடியவில்லையே!
ravi said…

34 - பெரியவர்களை சந்திக்கும் பொழுது எலுமிச்சம்பழம் கொடுப்பது ஏன்?

எலுமிச்சம் பழம் தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. பெரியவர்கள், குழந்தைகள், ஆசிரியர், தெய்வம் இவர்களைப் பார்க்கச் செல்லும் பொழுது வெறும் கையுடன் செல்லக்கூடாது. அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்கள், பழங்கள், கோயிலுக்கு என்றால் புஷ்பம் இப்படி எதாவது எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும்.

35 - கோயிலில் பிறரால் ஏற்றப்பட்டு அணைந்து போன விளக்கை மீண்டும் ஏற்றி வைப்பது நல்லதா?

நாம் புதிய தீபம் ஏற்றுவதைவிட உயர்ந்தது பிறர் ஏற்றி அணைந்த தீபத்தை மீண்டும் ஏற்றுவது. சுவாமி, சந்நிதியில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுடர் விழுந்து அணையும் தருவாயில் இருந்த அந்த விளக்கில் எண்ணெய் குடிப்பதற்காகச் சென்ற எலி ஒன்று, தாம் அறியாமலேயே தீபத்தைத் தூண்டிவிட்டது.

அறியாமல் செய்தாலும் கூட இச்செயல் மிகப் பெரிய புண்ணியமாக எலிக்குக் கிடைத்து மறு பிறவியில் மிகப் பெரிய அரச குடும்பத்தில் பிறக்கும் பாக்கியம் பெற்றது. எனவே சந்நிதியில், அணைந்துள்ள தீபங்களை எந்த குழப்பமும் இல்லாமல் செய்யுங்கள். அடுத்த பிறவியில் நீங்கள் தான் பிரதமர்.
ravi said…
36 - பிறந்த குழந்தையை கோயில் தரிசனத்திற்கு எவ்வளவு நாள் கழித்து அழைத்துச் செல்ல வேண்டும்?

குழந்தை பிறந்து 22 நாள் வரை தாய்க்கும் சேய்க்கும் தீட்டு உண்டு. எனவே அதன் பிறகு ஒரு நல்ல நாள் பார்த்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

37 - தற்காலத்தில் புத்திர
காமேஷ்டி யாகம் செய்கிறார்களா?
விரும்புபவர்கள் எந்த தலத்திற்குச் செல்ல வேண்டும்?

புத்திர பாக்கியம் வேண்டி செய்யப்படுகிற இந்த யாகத்தை, பலர் தங்கள் y செய்து கொள்கிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை புத்திர காமேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயம் (நவக்கிரக புதன் ஸ்தலம்) ஆகியவை சிறப்புடையவை.

38 - கோயிலில் அரசமரம்,
வேப்ப மரம் இரண்டையும் சேர்த்து பக்தர்கள் வலம் வருகிறார்கள். இதன் முக்கியத்துவம் என்ன?

அரசமரம் விஷ்ணுவின் வடிவம். இதனை "அசுவத்த நாராயணர்' என்பர். இதன் அருகில் வேப்பமரம் வைத்து மகாலட்சுமியாக எண்ணி, "அ”வத்த விவாஹம்' எனப்படும் அரசவேம்பு கல்யாணம் செய்ய வேண்டும் என சாத்திரங்கள் கூறுகின்றன. இவற்றை வலம் வந்தால், ஸ்ரீ லட்சுமி நாராயணரை வலம் வந்த பலன் கிடைக்கும். திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்கி இனிய இல்லறமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
ravi said…

39 - மந்திரங்களின் வலிமையை அறிந்து கொள்ளும் வழி முறையைக் கூறுங்கள்?

இது கடையில் வாங்கும் மருந்தல்ல! சாப்பிட்டுப் பார்த்து வலிமையை அறிந்து கொள்ள! அல்லது அறிந்து கொண்டு பிரார்த்தனையைத் துவங்க! குருநாதரிடத்தில் அவர் கூறும் மந்திரத்தை உபதேசமாகப் பெற்று, அவரவர் நலனுக்காக நம்பிக்கையுடன் ஜபம் செய்தால் பலன் கிடைக்கும். இது விஷயத்தில் ஆராய்ச்சி வேண்டாம்.

40 - வழிபாட்டில் இருந்த விளக்கு உடைந்து விட்டது. அதை அகற்ற மனமில்லை. மீண்டும் பயன்படுத்தலாமா?

பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்தால், தாராளமாக உபயோகிக்கலாம். தோஷம் எதுவும் கிடையாது. நல்ல பலனே ஏற்படும்

41 - யாகத்தீயில் பட்டு வஸ்திரம், பழவகைகள், நாணயம் இவைகளை இடுவதால் என்ன பயன்?

இந்தப் பொருட்கள் ஆகுதிப் புகையாக சூரியனைச் சென்றடைந்து மேகமாக மாறி மழையாக நமக்குக் கிடைக்கிறது. யாகத்தில் இட்ட பொருட்கள் பல்லாயிரம் மடங்காக விளைகிறது என்கிறது தர்ம சாஸ்திர ஸ்லோகம்.
""அக்னௌ ப்ரஸ்தாகுதி: ஸம்யக் ஆதித்யம் உபதிஷ்டதி
ஆதித்யாத் ஜாயதே விருஷ்டி: வ்ருஷ் டேரன்னம் தத:ப்ரஜா:''
யாகத்தீயில் பொருட்களை இடுவதால் நல்ல மழை பெய்யும். சுவையான நீர் கிடைக்கும். காற்று மண்டலம் சுத்தமாகும். விளைச்சல் அதிகமாகும். விளைபொருட்களை ஏராளமாகப் பெறலாம். செல்வ அபிவிருத்தி கிடைக்கும்.
ravi said…

42 - கிரகண வேளையில் கோயில் நடை சாத்துகிறார்கள். அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாமா?

அந்நேரத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்றே சாத்திரங்கள் கூறுகிறது. அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி ஜபம் செய்தால் மிக விசேஷம். ஒரு ஜபம் ஆயிரம் மடங்கு ஜபம் செய்வதற்குச் சமம்.

43 - கடவுளின் படம் அல்லது சிலை
எது வழிபாட்டிற்கு உகந்தது?

மனதில் இறைவனை நிறுத்தி வழிபடுவது மிக உயர்ந்தது. இரண்டாவது சிலை, அடுத்தது படம். முதலில் கூறியதற்கு மன ஒருநிலைப்பாடு அவசியம். உலக வாழ்க்கையை வெறுத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஞானிகளுக்கு மட்டுமே இது சாத்தியம். உருவச்சிலை வழிபாட்டில் அபிஷேகம், நைவேத்யம் ஆகிய கிரியைகள் அதிகம். அவசரமான காலகதியில் எல்லோருக்கும் இயலாது. பட வழிபாடு எளிமையானது. தினமும் புஷ்பம் சாத்தி, பழம், பால், கற்கண்டு நிவேதனம் செய்தால் போதும். எது உயர்ந்தது என்று கவலைப்படுவதை விட, எது இயன்றது என்று முடிவெடுத்து, அதை விடாமல் செய்வது தான் உயர்ந்தது.
ravi said…

44 - ரோகிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்பது உண்மைதானா?

சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் வீட்டில் சிலருக்கு ஆகாது என்பது ஜோதிட சாஸ்திரப்படி உண்மைதான். அதற்காகப் பயந்து கொண்டு குழந்தைகளை வெறுக்கக் கூடாது. சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸூமாகரம் போன்ற நூல்களில் இவற்றிற்கான பரிகாரம் கூறப்பட்டுள்ளது. இதன்படி தக்க பரிகாரம் செய்து கொண்டால்,தீயவையும் நல்லதாகிவிடும். விஷத்தையே மருந்தாக மாற்றும் நாம், ஏன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும்.

45 - வீட்டில் வழிபாட்டிற்காக இருக்கும் துளசிச் செடியின் இலைகளை மருந்துக்காகப் பறிக்கலாமா?

வீட்டில் துளசிச் செடி வழிபாட்டில் இருப்பதே பெரிய மருந்து தான். இதன் இலைகளைப் பறிக்கக் கூடாது. வேறு துளசிச் செடிகளை வளர்த்து மருந்துக்கு உபயோகிக்கலாம்.

46 - ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்துவது ஏன்?

மற்ற தெய்வங்களுக்கு சந்தனக் காப்பு சாத்துவது போல் ஆஞ்சநேயருக்குப் பிரியமான வெண்ணெயினால் சாத்துபடி செய்வது சிறப்பு. அவரது வாலில் தீ வைக்கப்பட்டதால், உஷ்ணத்தைத் தணிக்க பக்தர்கள் அன்புடன் வெண்ணெய் சாத்துகின்றனர்.
ravi said…
47 - சுமங்கலிகளை வழியனுப்பும்போது குங்குமம் கொடுக்க வேண்டுமா?

அவசியம் கொடுக்க வேண்டும். இதில் இரு விஷயங்கள் உள்ளன. சுமங்கலிகள் நம் வீட்டிற்கு வந்தால் அம்பாளே வந்திருப்பதாக எண்ண வேண்டும். குங்குமம், ரவிக்கைத்துணி, வெற்றிலைபாக்கு, மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை வழியனுப்பும்போது கொடுத்தால் அம்பாளின் அருள் கிடைக்கும். மற்றொன்று வந்திருப்பவர் நம்மை விட வயதில் சிறியவராக இருந்தால் வாழ்த்தியும், பெரியவராக இருந்தால் வாழ்த்துப் பெற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்ட இதனைச் செய்வது வழக்கில் உள்ளது.

48 - அம்மனுக்குப் பூக்குழி இறங்குவது
(தீ மிதித்தல்) எப்படி சாத்தியமாகிறது?

நம்பிக்கையும் பக்தியும் முழுமையாக இருந்தால் சாத்தியம் தான். இந்நிலையில் இருப்பவர்களை மருளாளிகள் என்பர். பக்தி மிகுதியால் ஏற்படும் பரவச நிலையை மருட்சி என்று அழகிய தமிழ்ச்சொல் குறிப்பிடுகிறது. மருட்சி உடையவர்கள் மருளாளிகள். இவர்களுக்குத் தீயும், பூவும் ஒன்றாகத் தெரியும். இதனால் தான் தீ மிதித்தலை பூ மிதித்தல் என்று கூறுகிறார்கள். நம்பிக்கை இல்லாமலோ அல்லது சோதித்துப் பார்க்கவோ பூக்குழி இறங்கினால் கஷ்டம் தான்.
ravi said…
48 - அம்மனுக்குப் பூக்குழி இறங்குவது
(தீ மிதித்தல்) எப்படி சாத்தியமாகிறது?

நம்பிக்கையும் பக்தியும் முழுமையாக இருந்தால் சாத்தியம் தான். இந்நிலையில் இருப்பவர்களை மருளாளிகள் என்பர். பக்தி மிகுதியால் ஏற்படும் பரவச நிலையை மருட்சி என்று அழகிய தமிழ்ச்சொல் குறிப்பிடுகிறது. மருட்சி உடையவர்கள் மருளாளிகள். இவர்களுக்குத் தீயும், பூவும் ஒன்றாகத் தெரியும். இதனால் தான் தீ மிதித்தலை பூ மிதித்தல் என்று கூறுகிறார்கள். நம்பிக்கை இல்லாமலோ அல்லது சோதித்துப் பார்க்கவோ பூக்குழி இறங்கினால் கஷ்டம் தான்.

49 - கோயிலில் தெப்பக்குளம்
இருப்பதன் நோக்கம் என்ன?

திருக்குளம் என்ற பெயர் தான் முக்கியம். அதில் தெப்பம் விடுவதால் தெப்பக்குளமாகி விட்டது. திருக்குளம் அடிப்படையிலேயே சிந்திப்போம். ஒரு கோயிலில் மூல மூர்த்தியாக விளங்கும் தெய்வம் எப்படி முக்கியமோ, அதுபோலவே தீர்த்தம் (திருக்குளம்), தலவிருட்சம் ஆகிய இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் சிறப்பாக அமையும் கோயில் தான் க்ஷேத்திரம் என போற்றப்படும்.

50 - சித்திரை மாதத்தில் பிள்ளை
பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்று சொல்லப்படுவது உண்மையா?

இல்லை...
இது முற்றிலும் தவறான கூற்று.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
ஸரி, தர்க்க சாஸ்த்ரத்துக்கும் பிள்ளையாருக்கும் என்ன ஸம்பந்தம்?
தர்க்க சாஸ்த்ரத்தில் ‘இதனால் இது இப்படி’ என்று காரண – காரியங்களை அறிவு ரீதியில் இசைத்துக் காட்டி வகுத்துள்ள விதிகளுக்கு ‘ந்யாயம்’ என்று பெயர். அதனால் தான் அந்த சாஸ்த்ரத்துக்கே ‘ந்யாயம்’ என்று விசேஷப் பெயர் ஏற்பட்டிருக்கிறது. உவமைகளைக் கொண்டும் நமக்குப் புரியுமாறு பல ‘ந்யாய’ங்களை வகுத்துத் தந்திருக்கிறது. ந்யாய சாஸ்த்ர நூல்களில் சொல்லியிருப்பவற்றோடு ஆன்றோர் வசனத்திலும் பொது வழக்கிலும் பிறந்த இப்படிப்பட்ட அநேக ந்யாயங்களும் உள்ளன. உதாஹரணமாக: உத்தேசமில்லாமல் தற்செயலாக ஒன்றை அடுத்து இன்றொன்று நடக்கும்போது ‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது’ என்கிறோமல்லவா? இதற்குக் ‘காக – தாளீய ந்யாயம்’ என்று பெயர். ‘தாளி’ என்றால் பனை. ‘தாலி’ கூட அதிலிருந்து வந்ததுதான். ஸம்ஸ்க்ருதத்தில் ‘ல’வுக்கும் ‘ள’வுக்கும் பேதம் கிடையாது.
ஸ்திரீகளின் ஸெளமங்கல்யத்துக்கு முக்கியமான சின்னங்கள் காதுத் தோடும், கழுத்திலுள்ள மங்கள ஸூத்ரப் பதக்கமும்தான். ஆதியில் ரொம்பவும் எளிமையாக நம் பெரியோர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருந்தபோது இந்தக் காதணி, கழுத்தணி இரண்டுமே பனையோலையால் ஆனதாகத்தான் இருந்தன. அதனால் தான் வைரத் தோடானால்கூட அதைப் பிற்காலத்திலும் வைர ஓலை என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. ‘ச்யாமளா நவரத்னமாலை’ யில் அம்பாளையே ‘தாளீ பலாச தாடங்காம்’ என்று சொல்லியிருக்கிறது. அம்பிகையே பனை ஓலையைத்தான் தாடங்கமாகச் சுருட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறாளாம். கழுத்தின் மங்கள ஸூத்ரப் பதக்கமாகவும் அந்த ஓலை நறுக்கே இருந்திருப்பதால்தான் அதற்குத் தாலி என்று பேர் ஏற்பட்டிருக்கிறது.
பிள்ளையாரை விட்டு விஷயம் எங்கேயோ போய்விட்டது!
அத்வைத வேதாந்தம், ந்யாய ஸித்தாந்தம் ஆகியவற்றைப் பற்றிய ‘ந்யாயேந்து சேகர’ த்தில் பிள்ளையாரைப் பற்றி இருப்பதைச் சொல்லவந்தேன்.
‘இன்ன அடிப்படையினால் இது இப்படி நிரூபிக்கப்படுகிறது’ என்று காட்டுவனவாக ந்யாயங்கள் என்று பல உண்டு என்று சொன்னேனல்லவா? ஒரு புஸ்தகம் என்றிருந்தால் அதில் முதலில் ‘மங்கள ச்லோகம்’ என்று இருக்கும். ‘பாயிரம்’, ‘கடவுள் வணக்கம்’ என்றெல்லாம் சொல்வது இதைத்தான். சற்றுமுன் சொன்னாற்போல், இப்படிப்பட்ட மங்கள ச்லோகங்களில் எடுத்த எடுப்பில் உள்ளது பிள்ளையாரைப் பற்றியதாகத்தானிருக்கும். ‘ந்யாய ஸம்பந்தமாக நாம் எழுதுகிற இந்தப் புஸ்தகத்தில் ஆரம்ப ச்லோகமாயிருக்க வேண்டிய பிள்ளையார் ஸ்துதியிலேயே ஏதாவதொரு ந்யாயத்துக்கு எடுத்துக்காட்டு கொடுத்துவிட்டால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும்?’ என்று ராஜு சாஸ்திரிகள் (மன்னார்குடி பெரியவர்கள்) நினைத்தார்.
ravi said…
மஹா பண்டிதரானதால் நினைத்தபடியே ச்லோகம் பண்ணி விட்டார். பிள்ளையாரை அதுதான் தர்க்க சாஸ்த்ரத்தோடு ஸம்பந்தப்படுத்திவிடுகிறது. அப்யந்யாமரம் ஆரிராதயிஷதாம் யத் பாத பங்கேருஹ-
த்வந்த்வாராதநம் அந்தராயஹதயே கார்யம் த்வவச்யம் விது: |
தத்-ஹேதோரிதி நீ திவித்து பஜதே தேவம் யம் ஏகம் பரம்
ஸர்வார்த்த ப்ரதிபாதநைக சதுரோ த்வைமாதுரோ (அ)வ்யாத் ஸ ந: ||
இது தான் ‘ந்யாயேந்து சேகர’ த்தின் மங்கள ச்லோகம்.
இதற்கு என்ன அர்த்தமென்றால் : ‘வேறே ஏதோ ஒரு தெய்வத்தை, அதாவது விக்நேச்வரர் அல்லாத இன்னொரு தெய்வத்தை, பூஜை பண்ண விரும்புகிறவர்கள்கூட தங்களுடைய பூஜையில் ஏற்படக்கூடிய விக்னம் நீங்குவதற்காக விக்நேச்வரருடைய இரண்டு பாத கமலங்களை அவசியம் பூஜிக்கத்தான் வேண்டுமென்று அறிந்திருக்கிறார்கள். பூஜை செய்கிறவன் ‘தத்-ஹேது ந்யாயம்’ தெரிந்தவனாயிருந்தாலோ (வேறே தெய்வத்தைப் பூஜை பண்ணவேண்டுமென்றே நினைக்காமல்) ஏகப் பரம்பொருளான விக்நேச்வரர் ஒருவரை மாத்திரம் பூஜிப்பதோடு முடித்துவிடுகிறான். இப்படி ஸகல கார்யத்தையும் தாமே பூர்த்தி செய்து தர வல்லவராக உள்ள அந்த விக்நேச்வரர் நம்மை ரக்ஷிக்கட்டும்’ என்பதாகும்.
Malar said…
🤔என்ன உவமை சார், நினைத்து பார்த்தால் ஆமாம் என்று தோன்றுகிறது. அதில் பக்தியில் கொஞ்சுவதும் உள்ளடங்கி இருப்பது அருமை.
Malar said…
சாாாார் பக்தியில் நனைய வைக்கிறீர். 😢😥ஆனந்த கண்ணீர்.
ravi said…
[26/08, 23:34] Shyamala Loganathan: Sir ur dedicated & sincere work.. no words 2 tell sir.. hats off
[26/08, 23:36] Shyamala Loganathan: I don’t know in which jenma I did gud... got blessed from tat madhavan ..u all legends I should say in name of madhava group🙏
ravi said…
*"கட்டுப்படுத்தும் சக்தி!"*

நண்பர் ஒருவரின் பதிவில் சந்திராஷ்டமம் பற்றிய சில வரிகள் பார்த்தேன். *அது "ரூ100 கோடியில் ஒரு தொழில் தொடங்கும் முன் அன்றைய தினத்தில் தனக்குச் சந்திராஷ்டமம் உள்ளதா என்பதை அந்த முதலீட்டாளர் பார்த்துத் தொடங்குவது நலம்" என்று* சொல்லியிருந்தார்.

"அப்படி எதையுமே பார்க்காமல் அன்றைய தினம் தெரியாமல் ஒரு வேலையைத் தொடங்கிவிட்டால் என்ன செய்வது?" என்று இன்னொரு அன்பர் கேள்வி கேட்க, அதற்கு இவர் "உடனே காஞ்சி மஹாபெரியவாளை மனத்தில் நினைத்தால் அன்று சந்த்ராஷ்டமத்தின் கெடுபலன் வேலை செய்யாது" என்று பதிலளித்திருந்தார். இதுதான் பதிவு!

அது ஏன் அவரை நினைக்கவேண்டும்... சிவனையோ முருகனையோ அக்கணம் நினைக்கலாமே? ஆம், நினைப்பவர்கள் தாராளமாக நினைத்து வேண்டலாம்.

மஹாபெரியவாள் மஹேஸ்வர அம்சம் என்பது தெரிந்ததே. மகேசன் என்றால் முருகனும் அவராகத்தானே இருக்கவேண்டும்? ஆமாம். பழனியில் நவகிரகங்கள் லயம் என்பதால் அங்கு நவபாஷாண முருகனின் கருவறை முன்னே நாம் நின்றால் அவை தீய பலன்களைத் தராது. அதுபோலவே மஹாபெரியவாள் இருக்கும் இடத்திலிருந்து 200 அடி சுற்றளவுக்கு நவகிரகங்கள் எதுவும் வேலை செய்யாது என்பதை அவர் வாழும் காலத்தே தரிசிக்க வந்த ஒரு முதிர்ந்த மலையாள மாந்திரீக ஜோதிடர் கூறினார். "நவகிரகங்களை ஸ்தம்பிக்க செய்யும் வலிய சக்தி திருமேனிக்கு உண்டு" என்று கைகளைக்கூப்பிச் சொன்னாராம்.

அதனால் அவரை அக்கணம் நம் மனம் நினைத்தால் எந்தவிதமான கோள் சார ரீதியான கெடுபலனும் நீர்த்துப்போகும் என்பது பலர் அறியாத ரகசியம். ஹரஹர சங்கர! ஜயஜய சங்கர!
ravi said…
A tribute to the Madhava Family*

*நாம்*

முன் பின் பார்த்தவர் இல்லை .

எண்ணும் எழுத்தும் அறிந்தவர் இல்லை ..

எங்கோ பிறந்தோம் எளிதாய் வளர்ந்தோம்

சொந்தம் என்று சொல்ல புது உறவுகள் இங்கு கண்டோம்

மிதி அடியாய் வாழ்ந்தும்

மெச்சும் அடிகள் நமதே என்றே இங்கே உணர்ந்தோம்

தாலாட்டு பாடாதவர் பல காலம் தாய் மடி இழந்தவர்கள் சகோதர்களை தொலைத்தவர் தன்னந்தனி என்றே பிறந்தவர்

இளவரசியாய் வாழ்ந்தவர்
ஏங்கும் துணை கண்டவர்
எதிலும் சாதனை படைத்தவர்
தாதி ஆகியும் குழந்தை உள்ளம் கொண்டவர்

ஏழை எளியோர்க்கு எண்ணிலா வியாதி தீர்ப்பவர் ..

பெண் என பிறவி எடுத்த தேனருவி குயில்கள்

செடி கொடிகளுக்கும் தாயுமும் ஆனவர்

வேறு மண்ணில் வாழ்பவர் வெகுளியாய் தன்னை நினைப்பவர் ..

என்னவர் எப்போ வருவரோ என்றே குடும்ப சுமை தோளில் சுமப்பவர் ..

ரத்தம் பாலாய் வழிந்து அதிலே பிள்ளை நிழல் காணும் பேதை உள்ளம் கொண்டவர்

கவி பல செய்தே கவித்துவம் தன்னில் அன்று அலர்ந்த சித்திரமாய் சொல்லும் வார்த்தையில் கச்சிதமாய் பெருமைகள் எல்லாம் என்னவர்க்கே என்றே சிந்து பாடும் தாரகைகள்

ரம்மியம் முகத்தில் மட்டும் இருந்தால் போதுமா

குரல் அதை காண வேண்டாமோ என்றே குயில் நாண செய்பவர்...

சொல்லிக்கொண்டே போகலாம் சொல்வதற்கு இன்னும் வார்த்தை இருந்தால் ..

அப்பப்பா எண்ணிலோர் சாதனை பட்டியலில்

எழுதும் இந்த மடல் வாழ்த்தும் இந்த கூட்டுக் குடும்பம் தனை .

ஆயிரம் நாமம் மேல் கொண்டவன் அனைத்தும் தருவான்

அவன் தங்கையோ இழந்தவை அனைத்தும் மீண்டும் பெற செய்வாள் சௌபாக்கிய தாயினீ யாய்

உண்மை சொல்கிறேன் .. சத்திய வார்த்தைகளில் என்றும் அசத்தியம் வாழ்வதில்லை

👍👍👍🙏🙏🙏🪷🪷🪷
ravi said…
ஊளையிட்ட குதிரைகள்* 🦄🦄🐺🐺
ravi said…
அரிமர்த்தனப் பாண்டியன் அரியணையில் அமராமல் ஆகாயம் தனை அண்ணாந்து பார்த்து கொண்டிருந்தான் ..

இயல் இசை நாடகம் தினம் நடக்கும் மதுரையில்

ஈக்கள் கூட்டமும் இல்லாமல் போனதே

உறக்கம் இல்லா கண்கள்
ஊக்கம் தருமோ
எங்கும் நிறைந்த இறை காண விழையுமோ
ஏங்கித் தவித்தான் அரசன்

ஓலமிடம் இரவுகள் ஊக்கம் தரா என்றே உள்ளமதில் ஓம்காரம் பாடியதே

வாதவூரார் வாங்கி வருவானோ நல்ல பரிகளை

சென்றவன் வரவில்லை

கறந்தபால் மீண்டும் முலைப்புகுமோ

கடைந்தவெண்ணை மோர் புகுமோ

உடைந்துபோன சங்கினோசை யுயிர்களு முடற்புகுமோ

விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகுமோ

இறந்தவர் பிறப்பதில்லையே

சென்றவன் வருவது நினைக்கும் செயலோ ??

வாசல் வந்த புழுதி கண்ணில் நிரம்பி வழிந்ததே ...

எங்கும் குதிரைகள் எல்லாம் தங்கமென மின்ன கட்டி அணைத்தான் அரசன் மணி வாசகனை ..

வாங்கி வந்தாயோ குதிரை தனை மதுரைக்கே ...

உன் போல் எவருண்டு ...

பெய்யும் கனகம் எனப்பொழிந்தான் மணி வாசகன் மீதே பொற் காசுகளை

இரவு ஒன்று வந்தது வந்த குதிரை ஊளை இட்டது ..

நாட்டுக்குள் நரிகள் ... பாட்டு பாடியே நட்டம் புரிந்தன

எதுவும் நிரந்தரம் இல்லை என்றே அந்தரம் ஒன்று குரல் தந்தது ...

தந்திரம் இல்லா வாழ்வு

எதுவும் வேண்டாம் எனும் வாழ்வே அன்றோ ...

அரசன் புரிந்து கொண்டே

சுவாமிநாதனான் ...

எதுவும் தனக்கு இல்லாமல் நாட்டில் நரிகள் வாரா வரம் தந்தான்
பெரியவாளாய்👍👍👍
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 50*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
தூமைதூமை யென்றுளே

துவண்டலையு மேழைகாள்

தூமையான பெண்ணிருக்கத்

தூமைபோன தெவ்விடம்

ஆமைபோல முழுகிவந் தனேகவேத மோதுறீர்

தூமையுந் திரண்டுருண்டு சொற்குருக்க ளானதே. 50👍👍👍
ravi said…
எந்தச் செயலும் தூய்மையானதல்ல;

கெட்டதாகவே (தூமை=தீட்டு) இருக்கின்றன;

எனும் சஞ்சலத்தால் அலைக்கழிக்கப்படும் மனிதர்கள்,

ஒழுக்கமற்ற தூய்மையற்ற பெண்ணைக் கண்டதும் மனம் மயங்கி அப்பெண்ணின் பின் அலைவது ஏன்?

அப்பொழுது அவர்கள் கூறும் அந்தத் தூய்மை எங்கே போனது?

ஆமையைப்போல் நீரில் முழுகிவிட்டு, அழுக்கு போய்விட்டதா என்று கூடப் பார்க்காமல்,

சுத்தமாய்த்தான் இருக்கிறோமென்று சொல்லிக்கொண்டு வாயால் மட்டும் எண்ணிலடங்கா முணுத்தங்களைச் (மந்திரங்கள்) சொன்னால் மட்டும் போதுமா?

நற்பயன் கிட்டுமா?

சலனமற்ற மனம் ஒருநிலைப்பட்டுத் தவத்தில் (முக்கலையொன்றித்தல்) நின்றால் மட்டுமே அழுக்கற்ற சிவத்தின் தன்மையை உணரலாம்.👍👍👍
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 326* 🙏🙏🙏started on 7th Oct 2021
ravi said…
*117 भक्तसौभाग्यदायिनी - பக்த ஸௌபாக்ய தாயிநீ --*
ravi said…
இந்த நாமத்தை விட்டு அகலவே முடியவில்லை . என்னை கட்டி போட்டு விட்டது .. எழுதிக்கொண்டே இருக்கலாம் என்றே தோன்றுகிறது
Moorthi said…
உங்கள பயணம் இனிதே தொடரட்டும் 👏👏✌️🖋️🖋️
ravi said…
ஒருவருக்கு வாழ்க்கையில் எல்லாமே கிடைத்து விடுவது இல்லை

கிடைத்தாலும் நிரந்தரம் இல்லை ...

ஆனால் இந்த அம்பாள் மட்டும் இதற்கு விதி விலக்கு தருகிறாள் ..

எல்லாம் தருகிறாள் தந்தவைகளை நம்முடன் நிரந்தரமாக வசிக்கவும் செய்கிறாள் ..

ஆனால் நாம் கேட்பதோ அல்ப பொருள்களை மட்டுமே ...

நாம் கேட்க வேண்டியது அவள் கருணையை பவானீத்துவதை... திருவடிகள் நம் சென்னியின் மேல் பதிந்து இருக்கும் வரத்தை ...

சௌபாக்கிய தாயினீ யிடம் சரியான வரத்தை கேளுங்கள் .. நிரந்தரமாக தருவாள் கண்டிப்பாக 🪷🪷🪷
Kousalya said…
Attal Vishwas, Arpudham..🙏🙏🪔🌹🌹🙇‍♀️🙇‍♀️🌹🌹🙏🙏
Lakshmi balaraman said…
கடைக்கண் பார்வை போதும்.
ईषन्निषीदतु मयीक्षणमीक्षणार्ध
मिन्दीवरोदर सहोदरमिन्दिराया‌:
सौभाग्यदायिनि।
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 328* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

*87 பனியிலும் இரவிலும் கூட அழகு குன்றாத பாதகமலங்கள்*

ஸர்ப்ப வச்யம்🙏

ஹிமானீ ஹந்தவ்யம் ஹிமகிரி நிவாஸைக சதுரௌ

நிஶாயாம் நித்ராணாம் நிஶி சரமபாகே ச விஶதௌ

வரம்லக்ஷ்மீபாத்ரம் ஶ்ரிய மதிஸ்ருஜ ந்தௌ ஸமயினாம்

ஸரோஜம் த்வத் பாதௌ ஜனனீ ஜயதஶ் சித்ரமிஹ கிம் 87
ravi said…
அம்பாளின் திருவடிகளை மிகவும் ரசித்தவர் நால்வர்

1. ஆதி சங்கரர்

2. மூகர்

3. அபிராமி பட்டர்

4. காளிதாசன்

இதில் அபிராமி பட்டர் தன் 100 பாடல்களில் கிட்டத் தட்ட 75 பாடல்களில் அம்பாளின் திருவடிகளின் பெருமையை பாடுகிறார்..

இதற்கு ஒரு படி மேலே போய் மூகர் 100 பாடல்கள் பாடுகிறார் ..

காளி தாசன் திருவடியை விட்டு அகலவே இல்லை ..

ஆதி சங்கரர் ஆரம்ப பாடலிலும் இறுதி பாடல்களிலும் ( SL)
அம்பாளின் திருவடி ஒன்றே முக்தி கொடுக்கும் சக்தி கொண்டது என்கிறார் ... நாம் இதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது ?👣👣
ravi said…
கண்ணா*

உனை எண்ணாத நாள் எல்லாம் பிறவாத நாள் அன்றோ ?

எட்டாவதாய் பிறந்தாய்

ஏழ்மலையில்
நிற்கின்றாய்

ஆறாய் ஓடும் பக்தி தனில்

ஐந்தான பாண்டவரை

நான்கு திசையும் வெல்லவைத்தாய்

மூன்றாய் தெறித்த எழுத்துக்களை சேர்த்தே *கண்ணா* என்றே சொல்ல வைத்தாய் ..

இரண்டாய் பிளந்த என் இதயம் தனில் ஒன்றாய் நின்றே காலிங்க நர்த்தனம் புரிகின்றாய் ... 🐍

*கண்ணா என் தவம் செய்தேன்?*

என் நெஞ்சத்து நஞ்சை எல்லாம் உன் அருட்புனலால் துடைத்து விட்டாயே ...

நஞ்சு இல்லா என் இதயம் தேவர் தேடிய அமுதம் ஆனதே

அதிலே திரண்டு வந்த வெண்ணெய்

உன்னை ஓடி வர செய்தே என்னையும் சேர்த்து திருடிக்கொண்டதே 🦚🦚🦚🙏🙏🙏
Kousalya said…
காளிங்க நடன கண்ணன் வெண்ணெய் போல் எங்கள் உள்ளங்களையும் திருடியவன் ஆயிற்றே!!!! அருமை அருமை.. ராதே ராதே!!
ravi said…
*கந்தர் அலங்காரம் 41* 🐓🦚🙏

*அலங்காரம்-11:*
ravi said…
சொல்லுகைக்கு இல்லை என்று, எல்லாம் இழந்து, சும்மா இருக்கும்
எல்லையுள் செல்ல என்னை விட்டவா! இகல் வேலன், நல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக், கல்வரை கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரை தோள் அண்ணல் வல்லபமே!
ravi said…
இகல் வேலன் = இகல்-னா வலிமை! இகல்-ன்னு வரும் குறள் என்ன? சொல்லுங்க பார்ப்போம்!

வலிமை வாய்ந்த வேலன்!

நல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியை = இது யாருப்பா? கொல்லி-சொல்லின்னு?
கொல்லி என்றால் இந்தளப் பண். நாதநாமக்ரியை ராகம்.
பேசினாலே இந்தளம் போலப் பேசும் சொல்லி -வள்ளி! அவள் எப்பமே நாத நாமம் தானே பேசுவாள்! அதான் அவள் பேச்சே நாதநாம ராகமாய், இந்தளமாய் ஆகிவிட்டது!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 324*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி ல 38 வது ஸ்லோகம் பார்க்கலாம்.

ரொம்ப அற்புதமான ஒரு கவிதை,

இந்த மாதிரி கவிதைகள் படிக்கறதுனாலயே நம்ப ரொம்ப பாக்கியசாலிகள்.

ஆதிசங்கரர் works படிக்கிறவா எல்லாரும் பாக்கியசாலிகள்.

प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः
सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः ।
चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः
प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते ॥ ३८॥

ப்ராக்புண்யாசலமார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉ப்ரஸன்ன꞉ ஶிவ꞉

ஸோம꞉ ஸத்³கு³ணஸேவிதோ ம்ருʼக³த⁴ர꞉ பூர்ணஸ்தமோமோசக꞉.

சேத꞉ புஷ்கரலக்ஷிதோ ப⁴வதி சேதா³னந்த³பாதோ²நிதி⁴꞉

ப்ராக³ல்ப்⁴யேன விஜ்ருʼம்ப⁴தே ஸுமனஸாம்ʼ வ்ருʼத்திஸ்ததா³ ஜாயதே
ravi said…
ஸுமனஸாம்ʼ வ்ருʼத்தி: ஜாயதே” – பூக்கள் எல்லாம் நன்னா.. சந்திரன் வரும்போது பூக்கள், மூலிகைகள் எல்லாம் நன்னா வளரும்.

அப்படினு இது சந்திரனுக்கு… இதே பரமேஸ்வரனுக்கு பார்க்கும்போது..

“ப்ராக்புண்யாசல மார்க³த³ர்ஶிதஸுதா⁴மூர்தி꞉” – எத்தனையோ ஜென்மங்கள்ல பண்ண மலை போன்ற புண்ணியத்தின் காரணமாக காணப்படுகிற அமுத வடிவானவர் பரமேஸ்வரன்.

“ப்ரஸன்ன꞉” – எப்பவும் ப்ரசன்னமா இருப்பார்.

“ஶிவ꞉” – மங்கள வடிவம். நமக்கும் மங்களங்களை அருள்பவர்.

“ஸோம꞉” → “உமயா ஸஹ” – உமையோடு கூடினவர்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 321* 👏👏

12th Sep 2021🙏🙏🙏


ஈச்’வரோ விக்ரமீ தன்வீ
மேதாவீ
விக்ரம *க்ரம* : |

🪷🪷🪷
ravi said…
மறுநாள் பஞ்சாயத்து கூடியபோது திருமங்கையாழ்வார் பட்டயத்தோடு வரவில்லை.

நிலத்தின் உரிமையாளனின் பட்டயத்தையும் காணவில்லை.

அதனால் தீர்ப்பு சொல்ல முடியாமல்
அது தோலா (தீர்வு காணப்படாத) வழக்காகவே முடிந்தது.

திருக்கண்ணங்குடியில் ஊர்க்கிணற்றின் அருகே நின்றிருந்த பெண்களிடம் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டார் திருமங்கையாழ்வார்.

இவர் நிலத்தை ஏமாற்றி வாங்கியது போல், நம் பானையையும் வாங்கிவிட்டால் என்ன செய்வது என அஞ்சிய அப்பெண்கள்,
தர மறுத்துவிட்டார்கள்.

“இவ்வூரின் கிணறுகளில் இனி தண்ணீர் ஊறாமல் போகும்!” எனச் சாபம் கொடுத்தார் ஆழ்வார்.
அடுத்த நொடியே அவ்வூரில் உள்ள கிணறுகள் வறண்டு போயின. அதனால் ஊறாக் கிணறு திருக்கண்ணங்குடி என்ற தொடர் வழக்கில் வந்தது.
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 100*💐💐💐
ravi said…
அடுத்த ஸ்லோகம்

तृष्णातोये मदनपवनोद्धूतमोहोर्मिमाले दारावर्ते तनयसहजग्राहसङ्घाकुले च ।

संसाराख्ये महति जलधौ मज्जतां नस्त्रिधामन् पादाम्भोजे वरद भवतो भक्तिनावं प्रयच्छ ॥ १६ ॥

த்ருʼஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே

தா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச ।

ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்

பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² ॥ 16 ॥

ன்னு ஒரு ஸ்லோகம்.
ravi said…
சபரி.

அவள் வேடுவ குலத்தில் பிறந்திருந்தாக் கூட அவளுக்கு அந்த ஜாயமான கடாக்ஷம் இருந்ததுனால இந்த ஜன்மால நாம மத்த வேடர்களைப் போல இருக்கக் கூடாதுன்னு தெரிஞ்சுண்டு அங்கிருந்து கிளம்பி வந்து மதங்க முனிவரை ஆஸ்ரயிச்சு, அவருக்கு கைங்கர்யம் பண்ணி, அவரோட அனுக்ரஹத்தால அவளுக்கு ராம தரிசனம் கிடைச்சு முக்தி அடைந்தாள்.

அந்த மாதிரி பக்திங்கிற ஒரு படகு கிடைச்சுதுன்னா நாம் இந்த ஸம்ஸாரக் கடலை தாண்ட முடியும்.

இந்த மஹான்கள் காண்பிக்கிற பக்திங்கிறது கிட்டத்தட்ட ஞான மார்க்கம் மாதிரிதான் இருக்கு.

நாம சுலபமா ஏதோ ஒரு பத்து நிமிஷம் பாராயணம் பண்றது பக்தின்னு நினைக்கறோம்.🙏🙏🙏
ravi said…
This comment has been removed by the author.
ravi said…
*முகுந்த மாலா*

*குலசேகர ஆழ்வார்* 👌👌👌 *பதிவு 101*💐💐💐
ravi said…
அடுத்த ஸ்லோகம்

तृष्णातोये मदनपवनोद्धूतमोहोर्मिमाले दारावर्ते तनयसहजग्राहसङ्घाकुले च ।

संसाराख्ये महति जलधौ मज्जतां नस्त्रिधामन् पादाम्भोजे वरद भवतो भक्तिनावं प्रयच्छ ॥ १६ ॥

த்ருʼஷ்ணாதோயே மத³னபவனோத்³தூ⁴தமோஹோர்மிமாலே

தா³ராவர்தே தனயஸஹஜக்³ராஹஸங்கா⁴குலே ச ।

ஸம்ஸாராக்²யே மஹதி ஜலதௌ⁴ மஜ்ஜதாம் நஸ்த்ரிதா⁴மன்

பாதா³ம்போ⁴ஜே வரத³ ப⁴வதோ ப⁴க்தினாவம் ப்ரயச்ச² ॥ 16 ॥

ன்னு ஒரு ஸ்லோகம்.
ravi said…
அவா அங்க ஆரம்பிச்சு குழந்தைக்கு அம்மா நிலாவை காட்டி நன்னா பிசைஞ்சு கொஞ்சம் கொஞ்சமா ஊட்டறா.

ஆனா வளர்ந்த பின்னே அவனே எல்லா வ்யஞ்சனங்களோட இன்னும் கொஞ்சம் கூட்டு கொண்டுவா, கறி கொண்டு வான்னு கேட்டு சாப்பிடறான்.

அந்த மாதிரி ஆரம்பத்துல மஹான்கள் பக்தியோட ருசியை காண்பிக்கறா. ரொம்ப பாக்யசாலிகள் அந்த பக்தியை அனுபவிச்சு அந்த ருசி வளர்ந்து, அதை நன்னா கெட்டியா பிடிச்சிண்டு அந்த பாதையில விடாம போறா.

மகான்கள் ‘தைலதாரை மாதிரி ஒரு க்ஷணம் கூட பகவானை மறக்காத நிலைமை தான் பக்தி’ ன்னு define பண்றா
1 – 200 of 311 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை