ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 20. தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா பதிவு 27

 ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே 

பதிவு 27

 20 ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा - தாராகாந்திதிரஸ்காரி  நாஸாபரண பாஸுரா 



இன்று ஒரு இனிய நாமம் ....20வது திருநாமம் 🌸
🌸🌸🌸🌸

20 ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा - தாராகாந்திதிரஸ்காரி  நாஸாபரண பாஸுரா -- 

அம்பாள் அணிந்திருக்கும்  மூக்குத்தியின் அழகே ஒரு  ஒரு தனி அழகு.    

அப்பப்பா  கண்ணைக்  குருடாக்கும் ஒளி மிக்க நக்ஷத்ரம் அது.

நட்சத்திரங்களின் சோபையை மங்கச் செய்யும் மூக்குத்தியுடன் ஜொலிப்பவள்

(தார= நட்சத்திரம்; காந்தி = பிரகாசம்)

திரஸ்காரி = மிஞ்சிய / மீறிய / 

அதிகரித்த நாஸ = நாசி 

ஆபரண = ஆபரணம் / 

நகை பாசுரா = மினுனினுப்பு ⚡⚡⚡


20 ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा - *தாராகாந்திதிரஸ்காரி  நாஸாபரண பாஸுரா --

அம்பாள் ஒரு பெரிய தபஸ்வினீ .. தவளே என்று பட்டரும் பாடுகிறார் .. 

துர்கா சூக்தம் மிகவும் அழகாக அம்பாளை இப்படி வர்ணிக்கிறது 

Tapasa Jwalanteem.... தான் செய்யும் தபஸ் மூலம் ஜொலிக்கிறாள் ... இதை பெரிய திருமடலில் திருமங்கை ஆழ்வார் இப்படி பாடுகிறார் 

என்னாலே கேட்டீரே ஏழைகாள்?

என்னுரைக்கேன்,

மன்னும் மலையரயன் பொற்பாவை, 

வாணிலா

மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்,

அன்ன நடைய அணங்கு _டங்கிடைசேர்,

பொன்னுடம்பு வாடப் 

புலனைந்தும் நொந்தகல,

தன்னுடைய கூழைச் சடாபாரம் தாந்தரித்து,

ஆங்கன்ன அருந்தவத்தி னூடுபோய், 

ஆயிரந்தோள்

மன்னு கரதலங்கள் மட்டித்து, மாதிரங்கள

மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்,

தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும்,

கொன்னவிலும் 

மூவிலைவேல் கூத்தன் பொடியாடி,

அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே?,


பரமேஸ்வரனை அடைவதே வாழ்க்கையின் குறிக்கோள் என்று உதிர்ந்த இலையையும் அவள் உண்ணாமல் தவம் செய்தாள் இந்த நம்பிக்கை , உழைப்பு , கவனம் நமக்கும் வரவேண்டும் என்று அந்த அபர்ணாவை மனமார  வேண்டிக்கொள்வோம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

நக்ஷத்திரத்தின் பிரகாசத்தை தோற்கடிக்கும் பிரகாசத்தோடு கூடிய மூக்குத்தியினால் மிளிர்பவள். 

தாரா என்னும் சொல் நக்ஷத்திரம் என்னும் பொருள் தரும். சாதாரணமாக இப்பொருள் என்றாலும், மற்ற நக்ஷத்திரங்களைக் காட்டிலும் அதிகமாக பிரகாசிக்கும் சுக்ரனுக்கு இந்தப் பெயர் சிறப்பாகப் பொருந்தும் 

(சுக்ரன் கோள்தானே, நக்ஷத்திரம் இல்லையே என்கிற வார்த்தை விளையாட்டுகள் இங்கில்லை - நக, நாக ஆகிய வேர்ச்சொற்கள் 'ஆகாயம்' என்னும் பொருள் தரும்; வேத காலத்தில், நக்ஷத்ரம் என்பது ஆகாயத்தில் காணப்படும் எப்பொருளையும் சுட்டும்). 

வெள்ளி முளைத்தது என்று பேச்சு வழக்கில்கூட சொல்வார்கள். சுக்ரனைவிட அதிகப் படியான பிரகாசத்தைக் கொண்டது அம்பாளின் மூக்குத்தி. நாசியிலிருந்து அடுத்தபடி, அவளுடைய செவிகளில் விளங்கும் அணிகலன்களைப் பார்க்கிறோம்.



                                                           👌👌👌👌👌👌👌👌👌


செளந்தர்யலஹரி 61 


அஸெள நாஸாவம்ச: துஹிநகிரிவம்சத்வஜபடித்
வதீயோ நேதீய: பலது பலமஸ்மாக முசிதம்
வஹந்த்யந்தர் முக்தா: சிசிரகர நிச்வாஸகளிதம்
ஸ்ம்ருத்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர:

அம்மா!, முத்துமணியைத் தரித்துக் கொண்டிருக்கும் உனது மூக்கு (நாஸதண்டம்) நாங்கள் கோரியவைகளை சீக்ரமாகக் கொடுக்கட்டும். அது மூங்கில் போல முத்துக்கள் நிறைந்து இருப்பதால் அவைகளில் ஒரு முத்து உனது ஸ்வாசத்தின் போது வெளிவந்து மூக்குத்தியாக இருப்பதைப் போல தோன்றுகிறது.

மூங்கிலரிசி என்பது மூங்கில் கணுக்களிடையே இருப்பதாகப் படித்த நினைவு. மூங்கில் உள்ளே முத்துக்கள் இருப்பதாகச் சொல்லப்படுமாம். இங்கே ஆசார்யார் அன்னையின் மூக்கை மூங்கில் போன்று இருப்பதாகக் கூறுகிறார். மேலும், மூங்கில் உள்ளே இருக்கும் முத்துக்கள் போல அன்னையின் மூக்கினுள்ளும் இருக்கிறது. அதனால்தான் அன்னை ஸ்வாசத்தை வெளிவிடும் போது உள்ளிருக்கும் முத்தானது வெளிவந்துநமக்குத் மூக்குத்தியாகத் தெரிகிறது என்று கூறுகிறார்.


                  🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

Comments

ravi said…
*பாடல் 7 ... கெடுவாய் மனனே*

(ஈகையும் தியானமும் நம்மைக் காக்கும்)

*கந்தர் அநுபூதி*

பதிவு 18 started on 6th nov
ravi said…
கெட்டுப் போகின்ற மனமே, நீ உய்யும் வகை கேட்பாயாக.

ஒளிக்காமல்
தானம் செய்.

வேலாயுதக் கடவுளின் திருவடிகளை தியானி.

நீண்ட
துன்பங்கள் ஒழியுமாறு எல்லா வினைகளையும் சுட்டு எரிப்பாய்.

வடமொழி சாத்திரத்தில் பந்தத்தையும் அதை அகற்றும் வழிகளைக்
கூறும் இடத்தை சரம சுலோகம் என்பார்கள்.

அந்த வகையில்
அருணகிரியார் கூறும் சரம சுலோகம்தான் இந்த அநுபூதி.

மாணிக்கவாசகர் இதைக் கூறும்போது,

.. வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே

வல் வினைப்பட்டு வாழ்கின்றாய்

ஆழாமல்
காப்பானை ஏத்தாதே

சூழ்கின்றாய் கேடு
உனக்குச் சொல்கின்றேன்

பலகாலம்
வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே ..

இந்த மணிவாசகத்தின் நிழல் இந்த அநுபூதியில் நன்றாக
பளிச்சிடுகின்றது.

வல் வினைப் பட்டு ... வினை யாவையுமே

ஆழாமல் காப்பான் ... வடிவேல் இறை

சொல்கின்றேன் ... கதி கேள்
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 400* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
அஹ :‌ ஸம்வத்ஸரோவ்யால:
ப்ரத்யய : *ஸர்வதர்ச’ன* : ||10
ravi said…
*94. ப்ரத்யயாய நமஹ (Prathyayaaya namaha)*
ravi said…
ராமனுக்கும் சுக்ரீவனுக்கும் இடையே நட்பை உண்டாக்கினார் ஆஞ்ஜநேயர்.

வாலியைக் கொன்று கிஷ்கிந்தை ராஜ்யத்தைத் தனக்குப் பெற்றுக் கொடுத்தால், எழுபது வெள்ள வானர சேனையைக் கொண்டு
சீதையைத் தேடித் தருவதாக ராமனிடம் சுக்ரீவன் வாக்களித்தான்.

ராமனும் அதற்கு இசைந்தான்.

ஆனால் சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் சந்தேகம்.

வாலியை வீழ்த்தும் அளவு வலிமை ராமனுக்கு உள்ளதா எனச் சோதிக்க நினைத்தான்.

அதனால் ராமனுக்கு ஒரு பரீட்சை வைத்தான்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 400*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 54வது ஸ்லோகம் பொருளுரை
ravi said…
ஸந்த்⁴யாக⁴ர்மதி³னாத்யயோ ஹரிகராகா⁴தப்ரபூ⁴

தானக-
த்⁴வானோ வாரித³க³ர்ஜிதம்ʼ

தி³விஷதா³ம்ʼ த்³ருʼஷ்டிச்ச²டா சஞ்சலா .

ப⁴க்தானாம்ʼ பரிதோஷபா³ஷ்பவிததிர்வ்ருʼஷ்டிர் *மயூரீ* *ஶிவா* 🦚

யஸ்மின்னுஜ்ஜ்வலதாண்ட³வம்ʼ விஜயதே தம்ʼ நீலகண்ட²ம்ʼ ப⁴ஜே .. 54..
ravi said…
அற்புதமான ஸ்லோகம்.

அருமையான விளக்கம்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை கண் முன்னே தரிசித்த பேறு பெறுவோம். 👌🙏🌸

போன ஸ்லோகத்தில் ஆச்சார்யாள், சிவபெருமானை மயிலாக‌ வர்ணித்து, கருமேகமாக இருக்கும் அம்பாளை தர்சித்ததும், சந்தோஷமாக நடனம் ஆடுவதாக ஸ்தோத்திரம் பண்ணினார்.

இந்த ஸ்லோகத்தில், ஸந்தியா வேளையில் சிவபெருமான் என்கிற மயிலின் உஜ்ஜவல (ஒளிபொருந்திய ப்ரகாசமான) தாண்டவத்தை கண்டுகளிக்க சபையே கூடிவிடுகிறது.

அம்பாளுக்கும் அந்த நடனத்தை காண ஆசை!

கருமேகமாக வந்து அவர் நடனமாட தூண்டியவள், தான் அதை கண்டு களிக்க ‘ *மயூரி சிவா’* – பெண் மயிலாக உருவெடுத்து சிவபெருமானின் நடனத்தை ரசிக்கிறாள்.🦚🦚🦚
ravi said…
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பங்கு.

ஆண்டாள் ‘ *வலம்புரி போல் நின்றதிர்ந்து’* என்று பாடினாள்.

ஆச்சார்யாள் விஷ்ணு பகவானின் மிருதங்க த்வனியை மேகங்களின் இடி முழக்கமாக கூறுகிறார்.

தேவர்களின் கண்பார்வையே மின்னல்.🙏🌸

பக்தர்களின் ஆனந்தக் கண்ணீர் பிரவாகத்தை மழையோடு ஒப்பிடுகிறார்.

ஒருவனுடைய மனதில் பக்தி வந்துவிட்டால், பகவத் த்யானத்தில் ஈடுபடுகிறான்.

பாபங்கள் தொலைந்து, புண்ணியங்கள், நற்குணங்கள், நற்கர்மங்கள் எல்லாம் பிரகாசிக்கிறது.

‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ என்று அவ்வைப் பாட்டி சொன்னது போல்

அவனுடைய நற்கர்மங்கள் உலகத்திற்கு மழையைத் தருகிறது.🙏🌸
ravi said…
சந்தியா காலத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆனகம் போன்ற வாத்தியங்களை முழங்க , தேவர்கள் புஷ்ப மாரியைச் சொரிய,

ஸ்ரீ பரமேஸ்வரன் நர்த்தனம் செய்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் !

இதனை ஆசார்யாள் வருஷ கால ஆரம்பத்தில் , மேகங்கள் கர்ஜிக்க,மின்னல்கள் மின்ன, மழை பொழியும் வேளையில், ஒரு மயில் எப்படி நடனம் செய்யும் என்பதைக் கற்பனையாக ஒப்பிட்டு வர்ணனை செய்கிறார் !!

நீலகண்டன் என்பது மயிலையும், ஈஸ்வரணையும் குறிப்பிடுவது!!

எத்தகைய அழகான வார்த்தை விளையாட்டுடன் கூடிய ஸ்லோகம்!🦚🦚🦚
ravi said…
பாதாரவிந்த சதகம் !

31.ஸுராணம் ஆனந்த ப்ரபலநதயா மண்டனதயா
நகேந்து ஜ்யோத்ஸ்னாபி: விஸ்ருமரதம: கண்டனதயா |
பயோஜ ஸ்ரீத்வேஷ வ்ரதரததயா
த்வச்சரணயோ:
விலாஸ: காமாக்ஷி ப்ரகடயதி
நைசாகர தசாம் ||

காமாக்ஷி அலங்காரப்பொருளாகித் தேவர்களின் ஆனந்தத்தைப் பல மடங்கு பெருக்குவதாலும் நகங்களின் நிலவொளியால் பரவிநின்ற இருளை வெட்டி அகற்றுவதாலும் தாமரையின் சீரை அழிப்பதை விரதமெனக்கொண்டு அதில் ஈடுபட்டுள்ளமையாலும் உன் இரு திருவடிகளின் ஒளிபரப்பு தான் சந்திரனாகியுள்ளதைப் பலரறியச் செய்கிறது.

தேவர்கள் தேவியை வணங்க அவர்களது சிரஸில் திருவடி அழகிய அலங்காரப் பொருளாகிறது. தேவர்கள் ஆனந்தத்தின் எல்லையடைகின்றனர். நகவொளி நில வொளியாகித் தாமரையை வாடச் செய்கிறது. வானின் மேட்டில் உலவுகிற சந்திரன் ஆனந்தம் தருகிறான். இருட்டைப்போக்குகிறன். தாமரையை வாடச்செய்கிறான். இதையே திருவடியும் செய்கிறது. வேறொரு சந்திரன் தேவையில்லை. இவளது திருவடியே சந்திரனாக ஒளிர்கிறது. (31)

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
🌹🌺 "“ *மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்* " *எழுதியது என கையொப்பம் இட்ட சர்வேஸ்வரன் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.

🌺2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

🌺3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.

🌺3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.

🌺4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.

🌺5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.

🌺6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

🌺7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.

🌺8. தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.

🌺9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.

🌺10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.

🌺11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

🌺12 சிறப்பு - 1நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.

🌺13. சிறப்பு - 2 சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் வாழ்க என முடியும்.

🌺14. சிறப்பு - 3 அதை அடுத்த 5 வரிகள் வெல்க என முடியும்.

🌺15. சிறப்பு -4 அடுத்த 8 வரிகள் போற்றி என முடியும்.

🌺16. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.

🌺17. சிவபுராணத்தின் 32 வது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார்.
இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.

🌺18. திருவாசகத்தின் 18 வது வரியான அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.

🌺19. ரமண மகிஷி , திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.

🌺20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.
அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.

🌺21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்.

🌺"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

🌺சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்
ஓம் நமச்சிவாய..🙏🏼

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 Sarveswaran Signed ""Manikkavasakar told Azhagiya Chitrambalamudayan" - A Simple Story to Explain 🌹🌺
-------------------------------------------------- ------
🌹🌺1. On the day of Aiyalam in the month of Ani in Thillai, Lord Shiva took the form of Anthana and came to the Math where Manikavasaka was staying.

🌺 2. Vandavar Manikkavasagar said to Guruman that if you recite the 'Thiruvasagam' written by you once, I will write it down on the leaves.

🌺 3. Lord wrote all the 658 hymns of Thiruvasakam, which consists of 51 hymns, while Manikkavasaka was sitting.

🌺 3. Lord Natarasar left behind all the traces of leaves containing the Thiruvasakam written in front of the shrine and disappeared.

🌺 4. The next day on the day of Magam Nakshatra in the month of Ani, the initiates known as Thillai Ji Anthanars, who came to the temple, were stunned to see many footprints in the shrine of Lord Kootaperuman.

🌺 5. After taking all the leaf traces, the initiates saw the signature written on the last leaf as "Manikkavasakar Says Ushya Chirambalamudiyaan".

🌺 6. Stunned again and amazed at the Lord's mercy, the Anthanas went to the place where Manikavasaka was staying and brought him back by telling them what had happened.

🌺 7. After seeing each of the hymns in the prints, and at the end seeing the great acceptance, Pramitavara said, "Yes, it is written to say, Lord," and he shed tears, thinking that it was God himself.

🌺 8. The initiates requested Manikkavasaka to explain the meaning of the tiruvasakam in Olaichuvadi.

🌺9. Manikkavasakar pointed to Lord Natarasha in the dancing sphere with a sad smile and said, "He is the meaning of all these songs."

🌺 10. When Manikkavasaka said that, a light appeared near Lord. Manikavasaka, who went in towards it, gave two directions to Lord Shiva.

11. So, Ani-Magam is the Gurupusai day of Manikkavasaka.

🌺 12 Special - 1 Namachivaya The first book of Thiruvasaka begins with the pentagram of Shiva Purana.

🌺13. Special - The first 6 lines of 2 Shivpurana ends as Hajwa

🌺 14. Special - 3 it can win next 5 lines.

🌺 15. Special -4 The next 8 lines can be praised.

🌺 16. Thus the arrangement of 6-5-8 represents the 658 hymns of Thiruvasakam.

🌺 17. In the 32nd line of Shiv Purana, he sings, "I have found your daughters and I have no home."
This alludes to Manikkavasaka's attaining salvation at the age of 32.

🌺 18. The 18th line of Thiruvasak, Avan Arulale Avan Pahangi, will melt all the readers.

🌺 19. On the last day of his mother's illness in Tiruvannamalai, Ramana Mahishi sat next to her and recited Thiruvasakam continuously. That very night his mother attained salvation.

🌺 20. A childless couple went to Maha Periyar of Kanchi and expressed their grievances. The elder gave him a book of Thiruvasaka and told him to read a certain Padhigam daily.
6 children were born to them in succession.

🌺 21. Shiva Purana must be recited in the house of the deceased.

🌺 We can go on reciting the praises of the delicious Thiruvasaka as "Pullaki, Pudaki, worm mouth, tree, tooth tooth, bird, snake, rock, human, ghost, and moment".

🌺 Realizing the meaning of the said song, Selvar will say it under Lord Shiva of Shivapuram
Om Namachivaya..🙏🏼

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*எங்கும் பரந்துளன் எம்பெருமான் !!*

ஒருவன் பயணத்தின்போது அளவு கடந்த தாகத்தினால் தவிக்கிறான். இதை கவனித்த மற்றொரு வழிப்போகாகன் இளநீர் நிறைந்த தேங்காயொன்றை அவனிடம் தந்தான். அதை பெற்றவன் இளநீர் அருந்தியதே இல்லை.. தேங்காயுள் இளநீர் உள்ளதை அறியான். இதை நமக்கு ஏன் கொடுத்தான் என சிந்தித்துவிட்டு அக்காயை அசைத்துப் பார்த்தான். அதனுள் இளநீர் நிரம்பியிருந்ததனால் தளும்பவில்லை. அதனால், அதில் ஒன்றைமில்லை என நினைத்து வீசி எறிந்து விட்டான்.

தேங்காய் நீர் நிரம்பெயுள்ளதைபோல் எம்பெருமான் உலகம் முழுதும் நிறைந்துள்ளான். இளநீர் தேங்காயென்னும் ஏகதேசத்தில் முழுதும் பரவியுள்ளது. ஆனால் எம்பெருமானோ ' பரந்த தண்பரவையுள் நீர் தொறும் பரந்துளன் ' என்று ஆழ்வார் வாக்குபடி எங்கும் நிறைந்த பொருளாக உள்ளான. ஞானிகள் கண்களுக்கு புலப்படுகிறான் . பாக்கியசாலிகள் அவனைக் கண்டு அனுபவிக்கின்றனர்

விஷ்ணுவைப் பற்றி மேலும் ஆன்மீக தகவல்களை படிக்க
👇
http://www.srimahavishnuinfo.blogspot.com
ravi said…
*இன்னா நாற்பது 21*

ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா;
பாத்து உணல் இல்லாருழைச் சென்று உணல் இன்னா;
மூத்த இடத்துப் பிணி இன்னா; ஆங்கு இன்னா,
ஓத்து இலாப் பார்ப்பான் உரை. 21

பிணி - நோய்
உணல் - உண்ணுதல்

கொடுத்த அளவினால் மகிழாதவர்களுக்குப் பொருள் கொடுத்தல் துன்பமாம். பகுத்து உண்ணுதல் இல்லாதவனிடம் சென்று உண்ணுதல் துன்பமாம். முதுமையுற்ற பருவத்தில் நோய்ப்படுத்துதல் துன்பமாம். அவ்வாறே வேதத்தை ஓதுதல்
இல்லாத அந்தணனின் செயல் துன்பமாம்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
*ஸ்ருதி சாகராய நமஹ*🙏
வேத மந்திரங்கள் சேரும் இடமாக இருப்பவர்

*ஸர்வஜ்ஞா* ஸாந்த்ரகருணா ஸமாநாதிக வர்ஜிதா
சகல ஞானங்களையும் அருள்பவள்
ravi said…
*உண்மையான*
*ஊனம் என்பது*
*உடலில் இருக்கும்*
*உறுப்புக்களை*
*இழப்பது அல்ல...*


*உள்ளத்தில் இருக்கும் தன்னம்பிக்கையை இழப்பதே ஆகும்...!*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
➿➿➿➿➿➿➿➿➿➿➿

🤔 *நாளும் ஒரு சிந்தனை*

சுருக்கங்கள் வேண்டுமானால்
நெற்றியில் விழட்டும்.
இதயத்தில் விழ வேண்டாம்.
இதயம் என்றும் இளமையாக
இருக்கட்டும்!

🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

மஞ்சள் பூசணியின் விதைகளை நெய்யில் வறுத்து நாள்தோறும் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

📰 *நாளும் ஒரு செய்தி*

கல்லீரல் பலம் பெற கொய்யாப்பழம் சாப்பிட வேண்டும்.

🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

எலுமிச்சை சாதம் செய்வதற்கு முன் சில நிமிடங்கள் எலுமிச்சம் பழத்தை வெந்நீரில் போட்டு வைத்து அதன் பின் சாறு பிழிந்தால் அதிக சாறு கிடைக்கும்.

💰 *நாளும் ஒரு பொன்மொழி*

ஆயுதங்களால் ஏற்பட்ட புண் ஆறிவிடும். கொடிய வார்த்தைகளால் ஏற்பட்ட புண் ஆறுவதில்லை.
*-விதுரர்*

📆 *இன்று நவம்பர் 28-*

▪️ *1893-இல் நியூசிலாந்தில் முதல் முறையாக பெண்கள் வாக்களித்தனர்.*

💐 *நினைவு நாள்* 💐

⭕1890- *ஜோதிராவ் பூலே* (இந்திய மெய்யியலாளர், செயற்பாட்டாளர்)

➿➿➿➿➿➿➿➿➿➿➿
(பகிர்வு - தகவல் உலா)

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/ChHBJGCH9nx2hJW0S6pIDg
ravi said…
*இன்றைய 10 சொற்கள்!*


*அறிவு பரவல் ✍*


1. Drape (ட்ரேப்) - திரைச்சீலை.
உணவகங்களில் திரைச்சீலைகள் மூடப்பட்டன.
The drapes were closed in the restaurant.

2. Knead (நீடு) - பிசை
தண்ணீரை சேர்த்து, கலவையை நன்கு பிசையவும்.
Add the water and knead the mixture well.

3. Need (நீடு) - தேவை
உண்மையான அன்பு தேவையான காலத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
True love shows itself in time of need.

4. Knit (நிட்) - பிணைக்கப்பட்ட
இரு சமூகங்களும் பொதுவான நம்பிக்கையால் பிணைக்கப்பட்டுள்ளன.
The two communities are closely knit by a common faith.

5. Nit (நிட்) - முட்டாள்
அவர் முட்டாள் தனமான முறையில் நடந்து கொள்கிறார்.
He was behaving in a nit manner.

6. Knob (நாப்) - குமிழ்
மேசை மீது ஒரு குமிழில் வெண்ணெய் உள்ளது.
There is a knob of butter on the table.

7. Nob (நாப்) - பணக்காரன்
அவர் ஒரு பணக்கார குடும்பத்தில் இருந்து வந்தார்.
He came from a nob family.

8. Pause (பாஸ்) - இடைநிறுத்தம்
உரையாடலில் நீண்ட இடைநிறுத்தம் இருந்தது.
There was a long pause in the conversation.

9. Paws (பாஸ்) - விலங்கின் பாதங்கள்.
பூனைகள் தங்கள் பாதங்களை மறைக்கின்றன.
Cats hide their paws.

10. Moan (மோன்) - முனகல்.
அவர் தனது அறையில் முனகிக் கொண்டிருக்கிறார்.
He is moaning in his room
ravi said…
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍🏻*

*IRASCIBLE*

*(எளிதில் கோபிக்கிற)*

meaning.....  easily made angry.....


1.  It does not take much to aggravate my *irascible* neighbor who is annoyed by any little noise.


2.  Because of the influence of alcohol, a drunken man is often *irascible.*


Happy learning.
English vocabulary.


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
ravi said…
Peace inside is really what matters, no matter what us happening outside.



A person who walks with his legs reaches his destination, but a person who walks with his brain, reaches his destiny.



Everything can be taken from a man, but one thing, the last of the human freedoms - to choose one's attitude to any given set of circumstances, to choose one's way. Viktor Frankl



Life is all winning, losing, and sharing - winning other’s hearts, losing bad things, and sharing happy moments.



You are rich when you are content and happy with what you have.



Take a moment to realise how blessed you are.



Without curiosity, no innovation is possible.
ravi said…
THIRD UMPIRE REFERRAL



Apparently after the Mahabharat was over, Bhima and Arjuna got into a heated argument over who was the greater warrior.



Few onlookers would have liked to have got involved in such a delicate decision, and since third umpire referrals were not yet in vogue, Lord Krishna told them to go ask the head on top of the mountain, who had been watching the battle wage all along.



That head-of Barbareek (with a fascinating backstory of his own), informed the two brothers, he had no idea who they were. All he saw was a battle where people were mindlessly killing each other, and the earth was drinking blood.



There’s an important lesson there.



It should always be remembered that’s how events often appear from a distant viewpoint, from the perspectives of space, time and detached emotion,



We might feel suitably proud after having chalked up an important milestone.



We might even think what we have achieved in the moment is stupendous, but over time it feels less and less important.



To others, it could even appear distinctly unimpressive, despite our vehement exhortations to the contrary.



It is unlikely anyone else will feel as moved as we are by our own accomplishments; and over time even we might find it incredulous that we were once so moved by those same things.



This is what happens over time, and there’s no need to lose one’s head over it.
ravi said…
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍🏻*

*IRASCIBLE*

*(எளிதில் கோபிக்கிற)*

meaning.....  easily made angry.....


1.  It does not take much to aggravate my *irascible* neighbor who is annoyed by any little noise.


2.  Because of the influence of alcohol, a drunken man is often *irascible.*


Happy learning.
English vocabulary.


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 413* 🙏🙏🙏started on 7th Oct 2021

160
ravi said…
*160 निश्चिन्ता - நிச்சிந்தா* -
ravi said…
கவலைகள் இல்லாதவள் ...

*சிந்தா* என்றால் நினைவுகள் ...

நினைவுகளால் ஏற்படும் வேதனைகள், கவலைகள் நம் எல்லோருக்கும் ஏராளம் ... அப்படிப்பட்ட வேதனைகள் இல்லாதவள் சூது வாது தெரியாதவள் ... இதைத்தாதான் அபிராமி பட்டர்

மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலே

என்று போற்றுகிறார்

சூதின்றி வாதின்றி மாந்தரெல்லாம் உரைப்பீர் அவள் பேர் என்கிறார் பாரதியார் 🙏🙏🙏
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 11...18th Nov 22*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

*ஸ்லோகம் 10*💐💐💐
ravi said…
तुङ्गाभिरामकुचभरश‍ृङ्गारितमाश्रयामि काञ्चिगतम् ।
गङ्गाधरपरतन्त्रं श‍ृङ्गाराद्वैततन्त्रसिद्धान्तम् ॥ १०॥

10. Thungabhirama kucha bhara srungareetham aasrayami Kanchi gatham,
Ganga dhara para thanthram srungara advaitha thanthra sidhantham.

துங்காபிராமகுசபரஶ்றுங்காரிதமாஶ்ரயாமி காஞ்சிகதம் |

கங்காதரபரதன்த்ரம் ஶ்றுங்காராத்வைததன்த்ரஸித்தான்தம் ||10||

பர தந்த்ரம் என்றால் பிறருக்கு வசப்பட்டிருப்பது.

புருஷன் காமேஸ்வரனுக்கு வசப்பட்டவள் காமேஸ்வரியான காமாக்ஷி.
பதிவ்ரதை.

ஸ்ருங்கார சாஸ்திரத்தின் சித்தாந்தம் காமாக்ஷி.

சத்வ குணத்திலிருந்து ஏற்படும் பிரம்மானந்தம். ஸ்வயம்பிரகாசமாக ஒளிவிடும் ஆனந்த ரூபிணி.

குண்டலியை மூலாதாரத்திலிருந்து ஸஹஸ்ராரம் வரை கொண்டு சென்று, அம்ருதப்ரவாஹமாக தேஹமுழுதும் வர்ஷிப்பவள்.

நித்ய சரீரி. பக்தியோடு அவளை வணங்கி சகல சௌபாக்கியமும் பெறுவோம்.🙏🙏🙏
ravi said…
மாலையும் வந்தது; மாயன் வாரான்;

மாமணி புலம்ப வல்லேறு அணைந்த;

கோல நல் நாகுகள் உகளும் ஆலோ!

கொடியன குழல்களும் குழறும் ஆலோ!

வால்ஒளி வளர்முல்லைக் கருமுகைகள் மல்லிகை அலம்பி வண்டாலும் ஆலோ!

வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ!

என்சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே?

— திருவாய்மொழி
ravi said…
அந்தி சாயும் சமயமாகி விட்டது.

ஆனால், கருவண்ண மேனியன் எங்கு சென்றானோ, நான் அறியேன்.

கழுத்தில் கட்டிய பெரிய மணிகள் குலுங்கி ஒலியெழுப்பும் காளைகளுடனான புணர்ச்சிக்குப்பின்,

புல்லாங்குழலின் இசை கூட என்னைக் கொடுமைப் படுத்துவதாகவே இருக்கின்றதே!

நிலவைப் பழிக்கும், (மலர்ந்த) முல்லை, மல்லிகை,

கருமுகை மலர்களுக்கிடையே வண்டுகள் சிறகடிக்கும், ரீங்காரமிடும் ஓசையைக் கேட்கிறேன்.

கடல் ஆர்ப்பரித்து விண் நோக்கித் தாவி எழுப்பும் பேரொலியையும் கேட்கிறேன்!

அவனை விட்டுப் பிரிந்த நான், இனி எதைச் சொல்லுவேன்?

எங்ஙனம் பிழைத்திருப்பேன்!!!”
ravi said…
முகுந்தமாலா 31, 32 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
முகுந்தமாலையில 31 ஆவது ஸ்லோகம் இன்னிக்குப் பார்க்கப்போறோம்

नाथे नःपुरुषोत्तमे त्रिजगतामेकाधिपे चेतसा

सेव्ये स्वस्य पदस्य दातरि परे नारायणे तिष्ठति ।

यं कञ्चित्पुरुषाधमं कतिपयग्रामेशमल्पार्थदं

सेवायै मृगयामहे नरमहो मूढा वराका वयम् ॥ ३१॥

நாதே² ந:புருஷோத்தமே த்ரிஜக³தாமேகாதி⁴பே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி பரே நாராயணே திஷ்ட²தி ।
யம் கஞ்சித்புருஷாத⁴மம் கதிபயக்³ராமேசமல்பார்த²த³ம்
ஸேவாயை ம்ருʼக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் ॥ 31 ॥
ravi said…
இருந்தாலும் ஏதோ பணக்காரன்னு நாம் நம்பிண்டு ‘ *அல்பார்த²த³ம்’* அவனுக்கு எவ்ளோ வேலை பண்ணாலும் ரொம்ப அல்பமா தான் கொடுக்கப் போறான்.

ரொம்ப கஞ்சப்பட்டுண்டு, கஷ்டப் பட்டுண்டு ஏதோ இரண்டு பைசா கொடுக்கப் போறான். அவன்கிட்ட போயி எனக்கு ஏதாவது வேலை கொடுன்னு கெஞ்சிண்டு நிற்கறோம். ‘

*நரமஹோ மூடா⁴* *வராகா வயம்* ’ நம்மை மாதிரி முட்டாள்கள், அறிவில்லாதவர்கள் யாராவது உண்டா? ன்னு சொல்றார்.
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (25-40)*
ravi said…
❖ *34 நாப்யாலவால ரோமாலி லதா ஃபல குசத்வயீ =*

தொப்புளியிலிருந்து தோன்றிய படர்கொடியினின்று விளைந்த இரு கனிகளென விளங்கும் மார்பகங்களைக் கொண்டவள்🪷🪷🪷
ravi said…
*அம்மா* ...

என்னெவென்று சொல்வேன்

ஏட்டில் வடிப்பதெல்லாம் ஏரியில் கரைந்து போகுதே

ஏற்றமிகு உன் எழலை இரு கண்கள் கொண்டே பார்க்கினும்

தோற்றம் தரும் உன் வடிவை தூர நின்றே பார்ப்பது போல் இருக்கிறதே !!!

துள்ளி வரும் இளமை துவண்டு மூப்பு கண்டினும்

ஓடி வந்த கால்கள் நிழல் தேடி ஏங்கினும்

உன் எழில் முழுக்க எழுத முடியுமோ ?

என் மூச்சு காற்றுத்தான் அதற்கு உதவுமோ ... ?

அயனும் ஹரியும் அடி முடி கண்டாலும் வியப்பில்லை ...

உன் எழில் விவரித்தால் வெற்றி பெற்றவரே!!!

வியப்புக்கு உரியவரே!!!💐💐💐
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 133*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
இறையறை யிடைக்கிட வன்றுதூமை யென்கிறீர்

முறையறிந்து பிறந்தபோது மன்றுதூமை யென்கிறீர்

துறையறிந்து நீர்குளித்தா லன்றுதூமை யென்கிறீர்

பொறையிலாத நீசரோடும் பொருந்துமாற தெங்ஙனே. 133
ravi said…
இறைவனை அறையில் வைத்து வணங்குகிறீர்கள்;

அந்த இடம் தூய்மையானது என்கிறீர்கள்.

நான் இன்ன குலத்தில் பிறந்தவன்; அதனால் தூய்மையானவன் என்கிறீர்கள்.

உயர்சாதிக்காரர்கள் குளிக்கும் துறையில் குளிக்கிறேன்;

அதனால் தூய்மையானவன் என்கிறீர்கள்.

இந்தப் பொறையற்ற நீசர்களின் கருத்துக்களோடு ஒவ்வுவது எப்படி? ஒவ்வ முடியாது.
Chellamma said…
கவிஞனின் கவித்திறன் அருமை!!!! அற்புதம்!!!! பெருமை எனக்கு உன் கவி ஆர்வம் கண்டு
ravi said…
ஏதோ கிறுக்கிறேன் .. கவி என்று சொல்லும் அளவிற்கு நான் இன்னும் உயரவில்லை 🙏🙏
Gayatri said…
👌🏼
ravi said…
கர்மா பொல்லாதது..
அதை வெல்ல யாராலும் முடியாதது..
இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன் ..

மறைந்த பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல்வாதியாகப் பயிற்சிபெற்றார். ராஜீவ்காந்தி விமானியாகப் பயிற்சி பெற்றார். ஆனால், ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் மாண்டார்.

எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அம்மாள் முதல் அமைச்சர் ஆனார், ஆர் எம் வீரப்பன் வசம் அதிகாரம் போய்விடும் என்று எண்ணிய திருநாவுக்கரசு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிகாரத்தை தன் கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசு கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டார்.

ராமதாஸ்,சசிகலா , வைகோவும் 30 வருடங்களாக முதல்வர் கனவில் இருந்தாங்க... ஆனால்... ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் முதல்வர்கள் ஆகி பிரபலமானார்கள்...

எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் மூவரும் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இருக்கும் போதே...

ராஜீவும், பிரபாகரனும் தங்களின் பிரபல்யம் சறுக்கும் போது மரணித்தார்கள்... அதுவும் வேரொருவரால் கொல்லப்பட்டார்கள்...

ஈவேரா விநாயகர் சிலையை கல் என கூறி தூக்கி ஏறிந்தார்... ஆனால், தனது சிறுநீரகத்தில் உருவான கல்லை கூட தூக்கி எறிய முடியாமல் மூத்திர வாளியோடு சுற்றித்திரிந்தார்...

ஜெயலலிதா சிறைக்கு போகவேண்டுமென கருணாநிதியும்.... கருணாநிதி பவர் இல்லாமல் நான்கு சுவருக்குள் மடங்கணும்னும் ஜெயலலிதாவும் நினைத்தார்கள்...

ஆனால், கருணாநிதி விருப்பப்படி ஜெயலலிதா சிறைசென்றபோது அதை உணரும் நிலையில் கருணாநிதி இல்லை. ஜெயலலிதா விருப்பப்படி கருணாநிதி இறந்த போது ஜெயலலிதாவே உயிருடன் இல்லை.

மெத்தப் படித்த மன்மோகன் சிங், சோனியாவின் கருத்துக்கு பொம்மையாய் ஆடினார்.. ஆனால், ஏதோ படித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு உலகமே ஆடுகிறது...

விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தையே அடக்கி ஆள முயல்கிறார்கள்... ஆனால், பூமி இன்று உலகத்தையே முடக்கி நாளுக்கு நாள் மனித வாழ்வுக்கு உகந்த நிலையில் இருந்து விலகிச் செல்கிறது....

கர்மாவானது உங்களுக்கு எதிராக வினையாற்றுவது இல்லை...

உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்றத்
தவறுவதும் இல்லை....

உங்கள் செயல்களுக்கான பலனை ஏதோ ஒரு வடிவில் உங்களிடமே சேர்த்து விடும் மிகச்சிறந்த நிர்வாகிதான் கர்மா.

யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வருகிறது. கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ அதே கேடு நமக்கே வருகிறது என்பதை புரிந்து கொள்வோம்.. .

கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில்
நன்மையை மட்டுமே விதைப்போம்.

நல்லவர்களாக வாழ்வோம்.
கெட்டவன் தானே தன் அழிவை தேடிக் கொள்கிறான். அவனோடு உங்களை கொஞ்சம் கூட ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்.....

*பாவமன்னிப்பு* என்ற மதச்சடங்கு,இந்து மதத்தில் இல்லாதது ஏன் தெரியுமா?

பாவங்கள் மன்னிக்கப்படுமானால், பாவிகள், தைரியசாலிகள் ஆகிவிடுவர்.

உணர்ந்தவன் பாக்கியசாலி.... கட்டுப்பட்டவன், புத்திசாலி.. நீங்கள் பாக்கியசாலியா... புத்திசாலியா?.. உங்களுக்கான மதிப்பெண்களை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்..... வாழ்வில் மறப்போம் மன்னிப்போம் என்ற நல் கொள்கையை பின்பற்றுவோம் நமது வருமானத்தில் ஓர் மிக சிறிய தொகையினை நம் சமுதாய மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து மகிழ்வோம்.

தயவுசெய்து யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்.

கர்மா அதனுடைய வேலையை மறக்காமல் சேய்யும்.

🙏 *இறைவனின் ஆசீர்வாதத்தையும் விட பெரியது தர்மத்தின் வாழ்த்து. அது நம் வம்சம் வழியையும் நல் வழி அழைத்துச் செல்லும்* இன்று இருப்போர் நாளை இல்லை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

திருச்சிற்றம்பலம்.
ravi said…
பாரதம்,
ராமாயணம் என்பது என்ன ?

ரொம்ப Simple
படித்துதான் பாருங்களேன்..

மண்ணால் போரெனில்
பாரதம் ....
பெண்ணால் போரெனில்
ராமாயணம் ....

சகுனி குழப்பினால்
பாரதம்....
கூனி குழப்பினால்
ராமாயணம் ....

பெண் ஐந்தை மணந்தால்
பாரதம் ...
பத்தை (10) மறுத்ததால்
ராமாயணம் ....

அனுமன் கொடிதனில் பறந்தால் பாரதம் ...
அனுமன் கடல்தாண்டி பறந்தால் ராமாயணம் ....

இறை இப்புவி இறங்கி சாரதியானால் பாரதம் ...
இறை இப்புவி இறங்கி சத்திரியனானால் ராமாயணம் ....

மேய்த்தது கோ எனில்
பாரதம்..
மேன்மை கோ எனில்
ராமாயணம் ...

பகடையால் பகையெனில்
பாரதம்....
பாவையால் பகையெனில் ராமாயணம் ........

பிறன்மனைவியை அவமதித்ததால் பாரதம்...
பிறன்மனைவியை அபகரித்ததால் ராமாயணம் ....

அவதாரம் புனிதனாய் வலம்வந்தது பாரதம் ....
அவதாரம் மனிதனாய் வலம்வந்தது ராமாயணம் ...

இறைவன் கீதை தந்தால்
பாரதம் ...
இறைவன் சீதை பெற்றால் ராமாயணம்....

நாயகியை தொட்டு சேலைஇழுத்தால் பாரதம்...
நாயகியை தொடாது சோலையில் வைத்தால்
ராமாயணம் .....

ஐவருக்கு ஒருத்தியெனில்
பாரதம் ....
ஒருவருக்கு ஒருத்தியெனில் ராமாயணம் ....

மறைந்திருந்து அம்பெய்யகற்றால் பாரதம் ...
மறைந்திருந்து அம்பெய்துகொன்றால் ராமாயணம்...

வில்லால் அடித்த வீரனுக்கு விவாகமெனில்
பாரதம் ...
வில்லை ஒடித்த வீரனுக்கு விவாகமெனில்
ராமாயணம் ....

கற்புநெறிக்காக பெண் கண்ணை கட்டினால்
பாரதம்...
கற்புநெறிக்காக பெண் கனலில் இறங்கினால்
ராமாயணம்....

கதையில் குருடன் அரசன் எனில் பாரதம்....
கதையை எழுதியது திருடன் எனில் ராமாயணம் ...

அரக்கினால் மதில் ஆன அரண்மனை எரிந்தால்
பாரதம் ....
அரக்கியின் மதி கோணலால் அரண்மனை எரிந்தால்
ராமாயணம் ....

அரங்கனின் செய்கையால் அபலைக்குஅபயமெனில்
பாரதம் ....
குரங்கனின் செய்தியால் அபலைக்கு அபயமெனில்
ராமாயணம்....

மண்ணின் மயக்கத்தினால் பிளவெனில் பாரதம் ...
மானின் மயக்கத்தினால் பிரிவெனில் ராமாயணம்

உறவுக்குள் சண்டையெனில்
பாரதம்...
உறவுக்காக சண்டையெனில் ராமாயணம் ....
ravi said…
🪷 *தினம் ஒரு திவ்ய பிரபந்தம்* 🪷

சீதக்கடலுள் அமுதன்ன தேவகி - பெரியாழ்வார் திருமொழி 1.2

பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் இரண்டாம் திருமொழி இந்த 'சீதக் கடலுள் அமுதன்ன தேவகி' என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள்.

இந்தப் பத்துப் பாசுரங்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்திருந்த போது அவனது திருவுறுப்புகளின் அழகினை அங்கிருக்கும் ஆய்ச்சியர்களை அழைத்து ய்சோதை காட்டியதைக் கூறுகிறார் பெரியாழ்வார்.

***

பெரியாழ்வார் திருமொழி 1.2:

பாசுரம் 3

பணைத்தோள் இளவாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்து ஆரவுண்டு கிடந்த இப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித் தளை நின்று இலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே
காரிகையீர் வந்து காணீரே

***

மூங்கிலைப் போன்ற அழகுடைய தோள்கள் கொண்டவள், இளமையில் சிறந்தவள் என்றெல்லாம் இங்கே யசோதைப் பிராட்டியார் பேசப்படுவது அந்த அழகுக்கும் இளமைக்கும் இயற்கையான போகங்களில் ஆழாமல் அவள் தன் திருக்குமாரனை நேசித்துக் கிடந்ததைப் போல் அழகிலும் இளமையிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களும் இந்தக் கண்ணனின் நினைவில் ஆழ்ந்து கிடக்கவேண்டும் என்று காட்டுவதற்காக.

அப்படிப் பட்ட அன்பு இந்தக் கண்ணன் மேல் இருந்ததால் 'நின்று பால் சொரியும்' என்றாற் போல இவள் கொங்கைகளும் 'பால் பாய்ந்த கொங்கை'கள் ஆயிற்று.

காரிகை என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள். அழகுடைய மங்கையருக்கும் அது பெயராக ஆகிவந்தது. அழகின் பெருமை அறிந்தவர்கள் என்பதாலும் கண்ணனின் திருமேனி அழகினைக் கண்டு அனுபவிப்பதில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதாலும் அப்பெண்களை அழைத்தாள் இந்த இளவாய்ச்சி.

***
*நாளை அடுத்த பாசுரங்களை சேவிப்போம்*

ravi said…
*பாடல் 8..*

*பாடல் 8 ... அமரும் பதி*

(மயக்கம் தீர்ப்பான் முருகன்)

அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பெரு தானவ நாசகனே

*கந்தர் அநுபூதி*

பதிவு 19 started on 6th nov
ravi said…
*குமரன்* ... குமாரக் கடவுள்,

*கிரி ராச குமாரி மகன் .* .. மலை அரசனது மகளான பார்வதியின்
புதல்வன்,

*சமரம் பொரு தானவ நாசகனே* ...

போருக்கு வந்த சூரர்களை
அழித்தவன்,

*அமரும் பதி* ... நான் பிறந்த ஊர்,

*கேள்* ... உறவினர்கள்,

*அகம் ஆம்* ... நான் தான் எனப்படும்,

*இப் பிரமம் கெட ...* இந்த மயக்க அறிவு, பிரமை கெட்டு ஒழிய,

*மெய்ப் பொருள் பேசியவா* ... மெய்ப் பொருள் பேசியது என்ன
ஆச்சரியம்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 401* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
அஹ :‌ ஸம்வத்ஸரோவ்யால:
*ப்ரத்யய* : ஸர்வதர்ச’ன : ||10
ravi said…
துந்துபி என்ற அரக்கன் முன்னொரு சமயம் வாலியுடன் போர் புரிய வந்தான்.

அந்த துந்துபியைக் கொன்று அவனது சடலத்தை வாலி தூக்கி எறிந்த போது, அது ரிஷ்யமுக மலையில் சென்று விழுந்தது.

அந்தச் சடலம் இருக்கும் இடத்துக்கு ராமனை அழைத்துச் சென்ற சுக்ரீவன்,

“ராமா! இது அன்று வாலி வீசி எறிந்த அரக்கனின் சடலம்.
இப்போது நீ இதை எடுத்து வீசு. நீ எவ்வளவு தூரம் வீசுகிறாய் என்பதைப் பார்த்து,
உன் பலத்தையும் வாலியின் பலத்தையும் நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்!” என்றான்.
ravi said…
*சிவானந்தலஹரி 55வது ஸ்லோகம் பொருளுரை*🦚🦚🦚
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 400*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 55 வது ஸ்லோகம் பொருளுரை
ravi said…
ஆச்சார்யாள் பரமேஸ்வரனோட தாண்டவத்தை எல்லாத்துலயும், மயிலையும் மேகத்திலும் பாத்துண்டே வந்தவர்,

நேராக அந்த தாண்டவத்தை ஏதோ ஒரு ரூபத்தில், ஒரு cosmicஆ தர்சனம் பண்ணி, அந்த ஒரு பேரானந்தத்தில், அந்த ஶம்புனுடைய ஒரு தாண்டவம்ங்கறது, ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம், திரோதானம், அனுக்கிரஹம் எல்லாத்தையும் பண்றது அப்படிங்கறதை ஒரு ஸ்லோகத்தில் சொல்றார்.👏👏👏
ravi said…
பாதாரவிந்த சதகம் !

32.ஸிதிம்னா காந்தீனாம் நகர ஜனுஷாம் பாதநலின
ச்சவீநாம் சோணிம்நா தவ ஜனநி காமாக்ஷி நமனே |
லபந்தே மந்தார க்ரதித நவ பந்த்தூக குஸும
ஸ்ரஜாம் ஸாமீசீன்யம் ஸுரபுர
புரந்த்ரீ கசபரா: !!

தாயே! காமாக்ஷி ! உன்னை வணங்கும் போது, தேவமாதரின் திரண்ட கூந்தல்கள், உன் கால் நகங்களிலிருந்து
வெளிப்படுகிற ஒளிகளின் வெண்மையாலும் தாமரை ஒத்த திருவடி ஒளியின்
செந்திறத்தாலும் மந்தாரப்பூவும் செம்பரத்தம்பூவும் கலந்து கட்டிய
மாலைகளின் அழகைப் பெறுகின்றன.

திருவடியின் செந்நிறமும் நகத்தின் வெண்மையும் பின்னித் தேவமாதரின் சிரசில் படரும் போது செம்பரத்தம்பூவும் மந்தாரமும் தொடுத்துக் கட்டிய மாலைபோல் சிரஸை அணிவிக்கின்றன.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
*இன்னா நாற்பது 22*

யானைஇல் மன்னரைக் காண்டல் நனி இன்னா;
ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா;
தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா,
கான் யாறு இடையிட்ட ஊர். 22

கான்யாறு - காட்டாறு

யானைப் படையில்லாத அரசரைப் பார்த்தல் மிகவும் துன்பமாகும். உடலைத்தின்று உடல் வளர்ப்பது மிகவும் துன்பமாகும். தேனும் நெய்யும் புளித்துவிட்டால் துன்பமாம். அவ்வாறே காட்டாறுக்கு இடையில் உள்ள ஊர் மிகவும் துன்பமாம்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
குருஷேத்திரம்..
பதினேழாம் நாள் போர் முடிந்த இரவு..

தனது பாசறைகளைப் பார்வையிட்டவாறே, நாளைய நிகழ்வுகளைப் பற்றி பேசிக்கொண்டே வந்த தருமனும், பீமனும், சற்று தொலைவில் தெரிந்த கிருஷ்ணரின் கூடாரத்தில் விளக்கெரிவது கண்டு வியப்புற்றனர். எப்போதும், எல்லோருக்கும் முன்பு, அடுத்த கட்ட போர்நிகழ்வுகளை ஆலோசிக்கும் கிருஷ்ணர், இன்று இதுவரை இதுபற்றி எதுவும் பேசவில்லை என்பதும் ஒருபுறம் கலக்கமாகவே இருந்தது தருமனுக்கு.

உள்ளே வரலாமா ? உத்தரவு கேட்டபின் உள்நுழைந்தனர் இருவரும்.

வாருங்கள்.. என்ற #கிருஷ்ணரின் குரலில் என்றும் இருக்கும் உற்சாகம் சற்றுக் குறைந்திருப்பது தெரிந்தது தருமனுக்கு.

நாளைய போர் நிகழ்வு பற்றி கேட்டுச் செல்லலாம் என வந்தோம் கிருஷ்ணா.. என்றான் தருமன்.

ravi said…
நாளை பதினெட்டாம் நாள் போர். இதுவே குருஷேத்திரத்தில் இறுதிநாளாக இருக்கும் என எண்ணுகிறேன் நான்.. என இழுத்தார் கிருஷ்ணர்.

இறுதிநாள்தான். ஐயமே இல்லை. துரியோதனனுக்கும், அவனது மொத்தப் படைக்கும் நாளை இறுதிநாள். பாஞ்சாலியின் சபதம் நிறைவேறப்போகும் நாள்.. பல் கடித்தான் பீமன்.

நாளை நம் படைக்கு யார் தலைமை தாங்கப் போகிறீர்கள் ? கேட்ட கிருஷ்ணரை, வியப்புடன் பார்த்தான் தருமன்.

யாரா ? அதை நீயல்லவா முடிவு செய்து சொல்லவேண்டும்.. என்றான் தருமன்.

அர்ஜுனனின் பங்கு இப்போரில் கர்ணனைக் கொன்றதோடு முடிந்துவிட்டது. நகுலனும், சகாதேவனும் நாளைய போருக்கு சரிவர மாட்டார்கள். அண்ணன் தருமர் செல்லுமளவிற்கு அத்தனை அவசியமும் இல்லை. எனவே, துரியோதனனை அழிக்க, நானே தலைமை ஏற்கலாம் என நினைக்கிறேன் கிருஷ்ணா.. என்றான் பீமன்.

ravi said…
தாராளமாக. அதில் தவறேதுமில்லை. அதற்குமுன், நகுலனும், சகாதேவனும் நாளை தலைமையேற்க வேண்டாம் என்பதற்கான காரணம் வேண்டுமே ?.. கேட்டார் கிருஷ்ணர்.

விஷயமறியாதவன் போல் பேசுகிறாயே கண்ணா.. நாளை துரியோதனப் படைக்கு தலைமையேற்பது #சல்லியர் என்பது தெரியாதா உனக்கு ? நகுலனும், சகாதேவனும், அவரது மருமகன்களாயிற்றே. அவர்களுடைய கையால் அவர் அழியவேண்டாம் என்பதால்தான், நான் செல்கிறேன் என்கிறேன்.. என்றான் பீமன்.

ஏன் ? உனக்கும் மாமன் முறைதானே சல்லியர் ?.. கேட்டார் கிருஷ்ணர்.

இருக்கலாம். எதிரிப்படையில் நிற்கும் எவரையும் நான் உறவாகக் கொள்வதில்லை. அதுவுமின்றி, பீஷ்மர், கர்ணன், துரோணர் போன்ற பெருவீரர்களை எல்லாம் வென்றழித்த நமக்கு, சல்லியர் எம்மாத்திரம் ?
ravi said…
எனவேதான், அண்ணன் தருமருக்கு அவ்வாய்ப்பினை தராமல், நானே தலைமை ஏற்க நினைக்கிறேன். போர் தொடங்கிய சில நாழிகைகளிலேயே, சல்லியரை அப்புறப்படுத்திவிட்டு, துரியோதனனைத் தொட எண்ணம். அவனைக் கொல்வது மட்டுமே என் இலட்சியம் என்பதை நீயுமறிவாய் கண்ணா.. என்றான் பீமன் வேகமாக.

அப்படியா ? உன் வீரத்தின் மீது நம்பிக்கை வைப்பது உனக்கு நல்லது. அதே சமயம், எதிரியின் வீரத்தை குறைத்து மதிப்பிடுவது உனக்கு நல்லதல்ல பீமா.. என்றார் கிருஷ்ணர்.

ravi said…
புரியவில்லை கண்ணா.. சல்லியர் அத்தனை பலசாலியா ?.. வேண்டுமென்றே இகழ்ச்சியாகக் கேட்ட பீமனை, புன்சிரிப்போடு பார்த்தார் கிருஷ்ணர்.

நீயும், அர்ஷூனனும் ஒன்றாக எதிர்த்தால் கூட, சல்லியரை வெல்வது கடினமே பீமா.. என்ற கிருஷ்ணரின் வார்த்தைகள் கேட்டு கோபமுற்றான் பீமன்.

என்ன பிதற்றுகிறாய் கண்ணா.. நேற்று வரை தேரோட்டியாய் களத்தில் வலம் வந்தவர், இன்று தளபதியானவுடன், பிறந்துவிடுமா வீரம் ?.. கேட்ட பீமனை நோக்கிய கிருஷ்ணர்,

கர்ணனுக்குத் தேரோட்டியாவதற்கு முன், சல்லியன் பங்கு கொண்ட போரில், அவரை எதிர்த்த எவராவது உயிர்தப்பி இருக்கிறார்களா பீமா ?.. என்று கேட்டார்.

ravi said…
தருமன் யோசித்தான். ஆம்.. சல்லியனை எதிர்த்த எவரும் உயிரோடில்லை. எதிர்த்தவர்கள் அத்தனை முக்கிய நபர்கள் இல்லை என்பதால் , இதை கவனத்தில் கொள்ளவில்லை என்பதும் அப்போதுதான் புரிந்தது #தருமனுக்கு.

ஏதோ விஷயம் உள்ளது. இல்லையெனில், கிருஷ்ணர் இத்தனை பீடிகை போடமாட்டார் என்பதும் புரிந்தது.

கிருஷ்ணா.. பீமன் தான் செய்த சபதத்தை முடிக்கவேண்டும் என்ற வெறியில் அறியாமல் பேசுகிறான். அவனை மன்னித்தருளி, என்னவென்று தெளிவாய் எடுத்துரைக்கக் கூடாதா ?.. வணங்கியபடியே கேட்டான் தருமன்.

ravi said…
தருமா.. நாளை கௌரவர் படைக்குத் தளபதியாகப் பொறுப்பேற்று வரப்போகும் சல்லியரை எவராலும் வெல்லவே முடியாது என்பதே உண்மை. அவர்முன் கோபத்தோடு எவர் போரிட்டாலும், எதிரியின் ஆற்றல், ஆயிரம் மடங்காகப் பெருகி, அவரையே அடையும் என்பது அவர் கொண்டிருக்கும் வரம்.
ravi said…
எனவே, அவரை எதிர்த்து எவர் போரிடினும், அவனது ஆற்றலும் அவரையே அடையுமே தவிர, எதிர்த்து நிற்பவர் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை. அதனால்தான், என்ன செய்வதென்று இன்னமும் முடிவெடுக்காமல் இருக்கிறேன்... என்றார் கிருஷ்ணர்.

இப்படி ஓர் வரமா ? சல்லியரிடமா ? இது துரியோதனனுக்குத் தெரியுமா ? எதிர்த்து நிற்கும் எவருமே தப்பமுடியாவிடில், வெல்வதெப்படி ?.. உறைந்துபோய் நின்றான் #பீமன்.

கிருஷ்ணா.. உனையன்றி வேறெதுவும் எங்களைக் காத்தருளாது என்பதை முழுமையாய் அறிந்தவன் நான். இத்தனை இன்னல்களைக் கடக்க எங்களோடு துணைநின்று, பேருதவி பலபுரிந்த நீ, இப்போதும் எமைக் காக்கத் தவறமாட்டாய் என்பதையும் அறிவேன். பாண்டவர் படை முழுவதுமே உன்னையே #சரணாகதி அடைந்திருக்கிறது என்பதை மனதில் நிறுத்தி, என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் உத்தரவிடு கிருஷ்ணா.. என்று கைகள் குவித்து, கருணை மிகுந்த கண்களோடு, யாசிக்கும் தருமனைக் கண்டவுடன், சட்டெனத் தோன்றியது ஓர் முடிவு கிருஷ்ணருக்கு.

ravi said…
எதிரியின் வலிமை அதிகம் என்றறிந்தும் பயப்படாமலும், கோப்படாமலும், ஆத்திரப்படாமலும், பீமன் போல் அவசரப்படாமலும், அடுத்து என்னவென்பதை நிதானமாய் யோசித்து, தன்னை யாசித்து நிற்கும் தருமனே நாளை சல்லியரை எதிர்க்கத் தகுதியானவன் என்பது புரிந்தது கிருஷ்ணருக்கு. பீமனை நோக்கித் திரும்பினார்.

பீமா.. நாளை களத்தில் உன்முன் கௌரவர் படைக்குத் தலைமைதாங்கி நிற்கும் சல்லியரைக் கண்டால், என்ன தோன்றும் உனக்கு ?.. கேட்டார் கிருஷ்ணர்.

எதிரில் நிற்பவர் எவராயினும் எதிரியே எனக்கு களத்தில். உறவுகளைப் பற்றி கவலைகொள்ளாமல், களத்தில் வந்த கடமையை நிறைவேற்றவேண்டும் என்பதுதான் அர்ஜூனனுக்கே நீ செய்த #உபதேசம் கண்ணா.. என்றான் பீமன்.

ravi said…
மறுக்கவில்லை. ஆனால், அன்றோடு குருஷேத்திரப் போர் முடிந்துவிட்டதா பீமா ?.. கேட்ட கிருஷ்ணருக்கு பதிலளிக்க இயலாமல் தடுமாறினான் பீமன்.

ஆனால், அதுதான், அந்த நிகழ்வுதான் நம்மை வெற்றியை நோக்கித் திருப்பியது. இல்லையேல், பீஷ்மரையும், துரோணரையும் அர்ஜூனனால் எதிர்கொண்டிருக்க இயலாது.. என்றான் பீமன்.

ஆம்.. போரில் வெற்றியை நோக்கிப் பயணிக்க, கடமையே முக்கியம் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், நாளைய போர், வெற்றியை அடையப்போகும் விஷயம் என்பதைவிட, போரை முடிக்கப்போகும் விஷயம் என்று கொள்வதே சிறந்தது.
ravi said…
இரத்த உறவுமுறை கொண்ட உங்களால், ஏதோ ஒரு காரணத்தால், இத்தனை பெரிய யுத்தம் துவங்கப்பட்டது. இதில், கௌரவர், பாண்டவர் என்ற உங்கள் இருவரின் ஆற்றலும், திறமையும், வரங்களும், வீரமும், துணையும், சூழ்ச்சிகளும், இராஜதந்திரங்களும் என இவை எல்லாமே போரை நடத்திச் செல்ல பயன்பட்டனவையே தவிர, போரை முடித்துவைக்க அல்ல.
உங்கள் ஆயுதங்களோ, பழியுணர்ச்சியோ, கோபமோ, பகையோ, ஆத்திரமோ, வருத்தமோ இப்போரை முடிக்கவே விடாது. உறுவுகளுக்கிடையே நடைபெறும் இப்போரை மட்டுமல்ல.. எப்போரையுமே முடிக்க இயலாது. . என்ற கிருஷ்ணரை, குழப்பமாய்ப் பார்த்தான் பீமன்.

ravi said…
அப்படியெனில், நாளை இப்போர் முடிந்துவிடாதா ? பாஞ்சாலியின் சபதமும், நான் கொடுத்த சத்தியமும் நிறைவேறாதா ? நான் கொண்ட பழியணர்ச்சி தீராதா ?.. கோபமாய்க் கேட்டான் பீமன்.

பழியுணர்ச்சி என்பது உள்ளவரை எப்போரும் என்றுமே முடியாது பீமா. அது இருக்கட்டும்.. என்றவர், தருமனின் பக்கம் திரும்பினார்.

தருமா, ஒருவேளை நாளை சல்லியரின் எதிரில் நீ நிறுத்தப்பட்டால், என்ன செய்வாய் ?.. கேட்டார் கிருஷ்ணர்.

கௌரவர் படைக்குத் தலைமைதாங்கி வரினும், சல்லியர் எனது மாமன்.. என்னிலும் பெரியவர்.. வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்.. அவரை வணங்குவேன்.. அவரை வெல்ல, அவரின் ஆசி கேட்டு நிற்பேன். கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு போரிடுவேன்.. என்றான் தருமன்.

எதிரியிடம் சரணாகதியா ? இது நமக்குக் கேவலம் அண்ணா.. கொதித்தான் பீமன்.

ravi said…
தருமா.. சற்று முன்பு என்னிடம் சரணாகதி என்றாயே.. என் உத்தரவு கேட்டு நின்றாயே.. என் உத்தரவு இதுதான். நாளை சல்லியரை எதிர்க்கப் போவது நீதான். அதேசமயம், சல்லியரை மனதால் சரணாகதி அடைய உன்னால் இயலுமா ? களத்தில் எதிரிமேல் கருணை கொண்ட விழிடளோடு களமாட இயலுமா ? எதிரியின் அஸ்திரங்களுக்கு பதிலாக எய்யும் உனது அஸ்திரங்களை, சிறிது கூட கோபப்படாமல், சிரித்தபடியே எய்ய முடியுமா ? சுருக்கமாய்க் கேட்கிறேன்.. என்னைக் கண்டால் உன் மனதில் தோன்றும், அன்பும், கருணையும், சல்லியரைக் களத்தில் காணும்போது வெளிப்படுத்த இயலுமா ?.. கேட்ட கிருஷ்ணரின் ஒவ்வொரு வார்த்தைகளையும், மனதிற்குள் ஆழமாய் அசைபோட்டான் தருமன்.

சல்லியரின் முன் கோபத்தோடு போரிடும் எவரின் ஆற்றலும், ஆயிரம் மடங்காய்ப் பெருகி, சல்லியனை அடையும் என்பதால், கோபமே படாமல், கருணையோடு களமாடச் சொல்கிறான் கிருஷ்ணன். எதிரியின் வலிமையைக் கூட்டாமல், பகையுணர்ச்சியைக் கூட்டாமல், கருணையையும் அன்பையும் கூட்டி, செயலிழக்கச் செய்யச் சொல்கிறான் கிருல்ணன் என்பது தெளிவாகப் புரிந்தது.

முடியும் கிருஷ்ணா.. என்னால் முடியும். உன்னிடம் அடைவது போலவே, சல்லியரிடமும் என்னால் சனணாகதி அடைய இயலும் கிருஷ்ணா.. உறுதியாகச் சொன்னான் தருமன்.

இது சாத்தியமே இல்லை அண்ணா.. பீமன் இடைமறித்தான்.

சாத்தியம். இது சாத்தியம். தூணிலும், துரும்பிலும், பரந்தாமன் என்றபின், எதிரே நிற்கும் எதிரியிலும் பரந்தாமன். சல்லியரில் என்னால் கிருஷ்ணனனைக் காண இயலும். அதனால், இது சாத்தியம்.. என்றான் தருமன்.

நல்லது தருமா. குருஷேத்திரப் போர் நாளை நிச்சயம் முடிந்துவிடும். இதை முடிக்கப்போவது, பாண்டவரின் வீரமோ, கிருஷ்ணனனின் துணையோ அல்ல. இப்போரினை முடிக்கப்போவது உறவுகளுக்கிடையேயான #அன்பு. அது வெளிப்பட வாய்ப்பின்றி தனை மறைத்தே நிற்கும். தனது இருப்பினை அது வெளிப்படுத்த ஆரம்பித்தவுடன், எதிர்த்து நிற்கும் எப்பகையும், எப்போரும் முடிந்துவிடும்.

மண்ணாசையால், பொன்னாசையால், அதிகார போதையால், அகம்பாவத்தால் ஆரம்பிக்கப்பட்ட எந்தவொரு போரும், காலம் காலமாய் தொடர, கர்ணன் போன்ற துணையும், பீஷ்மர் , துரோணர் போன்ற வீரமும், சகுனி போன்ற சூழ்ச்சியும், என் போன்ற தந்திரங்களும் துணைக்கு இருக்கலாம். ஆனால், அப்போரினை முடிவுக்கு கொண்டுவர, பெரும் சக்தியான சல்லியருக்கு எதிராக நீ காட்டப்போகும் #அன்பு ஒன்றாலேயே முடியும்..

என்ற கிருஷ்ணரின் வார்த்தைகளில் இருந்த உண்மை என்னவென்பது, மறுநாள் போர் முடிந்தபின்தான் பீமனுக்கும் புரிந்தது.

உங்களுக்கும் புரியும்.. எல்லோருக்கும் புரியவேண்டும்..

மகாபாரதம் வெறும் இதிகாசமோ, வீரகாவியமோ அல்ல.

ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் போராட்டம். இறுதியில், அன்பால் மட்டுமே வெல்ல முடியும் என்பது எல்லோருக்கும் புரியவேண்டும்.

பாரதம்.. மதத்தின் அடையாளமல்ல..
மனிதனின் அடையாளம்.
ravi said…
காட்டில் அலைந்து கொண்டிருந்த ஒருவன், ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து விட்டான்.

http://www.srimahavishnuinfo.blogspot.com

இவனை காப்பாற்ற ஆளில்லை..

"யாராவது என்னை தூக்கி விடுங்கள்...கஷ்டம் தாங்க முடியவில்லை.. காப்பாற்றுங்கள்" என்று கூவி கூவி கதறினான்..

இவனை காப்பாற்ற ஒருவர் வந்து விட்டார்.

வந்தவர், குழியில் இவன் விழுந்து இருப்பதை பார்த்து, "அடடா! கீழே விழுந்து விட்டாயா!! கவலைப்படாதே நான் உன்னை காப்பாற்றுகிறேன்" என்றார்.

முடிச்சுகள் உள்ள கயிறை போட்டு, "இதோ! இந்த கயிற்றில் உள்ள முடிச்சை பிடித்து இடுப்பில் கட்டிக்கொள்! நான் உன்னை தூக்கி விடுகிறேன்" என்றார்.

இவனோ! கயிறை பிடித்து கொள்ள மறுத்தான்..

"
ravi said…
ஏனப்பா! நான் தான் கயிறை போட்டு இருக்கிறேனே! இங்கு என்னை தவிர ஆள் கிடையாது.. இந்த கயிறை பிடித்துகொள். நீ விழுந்து கிடக்கிறாய். நான் உன்னை காப்பாற்ற வேண்டியவன். நம்பிக்கையோடு கயிறை பிடித்துக்கொள்" என்றார் வந்தவர்.

"அது சரி.. நான் இந்த கயிறை பிடித்து கொண்டு ஏறும் போது பாதியில் அறுந்து விட்டால்?" என்றான் விழுந்தவன்.

"கவலையே படாதே! இது அறுகவே அறுகாத கயிர். நிச்சயமாக நான் உன்னை தூக்கி விட்டுவிடுவேன்" என்றார் வந்தவர்.

"கயிர் அறுகாது சரி. நான் பாதி ஏறும் போது, நீங்கள் கயிறை நழுவ விட்டு விட்டால் என்ன செய்வது?" என்றான் விழுந்தவன்.

"கவலையே படாதே! நான் விடவே மாட்டேன். கை சளைக்க மாட்டேன். நீ இடுப்பில் இந்த கயிறை கட்டி கொண்டு விட்டால், உன்னை நிச்சயமாக இழுத்து விடுவேன் (ஸங்கர்ஷண)" என்றார் வந்தவர்.

"
ravi said…
ஏனப்பா! நான் தான் கயிறை போட்டு இருக்கிறேனே! இங்கு என்னை தவிர ஆள் கிடையாது.. இந்த கயிறை பிடித்துகொள். நீ விழுந்து கிடக்கிறாய். நான் உன்னை காப்பாற்ற வேண்டியவன். நம்பிக்கையோடு கயிறை பிடித்துக்கொள்" என்றார் வந்தவர்.

"அது சரி.. நான் இந்த கயிறை பிடித்து கொண்டு ஏறும் போது பாதியில் அறுந்து விட்டால்?" என்றான் விழுந்தவன்.

"கவலையே படாதே! இது அறுகவே அறுகாத கயிர். நிச்சயமாக நான் உன்னை தூக்கி விட்டுவிடுவேன்" என்றார் வந்தவர்.

"கயிர் அறுகாது சரி. நான் பாதி ஏறும் போது, நீங்கள் கயிறை நழுவ விட்டு விட்டால் என்ன செய்வது?" என்றான் விழுந்தவன்.

"
ravi said…
ஏனப்பா! நான் தான் கயிறை போட்டு இருக்கிறேனே! இங்கு என்னை தவிர ஆள் கிடையாது.. இந்த கயிறை பிடித்துகொள். நீ விழுந்து கிடக்கிறாய். நான் உன்னை காப்பாற்ற வேண்டியவன். நம்பிக்கையோடு கயிறை பிடித்துக்கொள்" என்றார் வந்தவர்.

"அது சரி.. நான் இந்த கயிறை பிடித்து கொண்டு ஏறும் போது பாதியில் அறுந்து விட்டால்?" என்றான் விழுந்தவன்.

"கவலையே படாதே! இது அறுகவே அறுகாத கயிர். நிச்சயமாக நான் உன்னை தூக்கி விட்டுவிடுவேன்" என்றார் வந்தவர்.

"கயிர் அறுகாது சரி. நான் பாதி ஏறும் போது, நீங்கள் கயிறை நழுவ விட்டு விட்டால் என்ன செய்வது?" என்றான் விழுந்தவன்.

"
ravi said…
கவலையே படாதே! நான் விடவே மாட்டேன். கை சளைக்க மாட்டேன். நீ இடுப்பில் இந்த கயிறை கட்டி கொண்டு விட்டால், உன்னை நிச்சயமாக இழுத்து விடுவேன் (ஸங்கர்ஷண)" என்றார் வந்தவர்.

"இழுத்து விடுவேன் என்று சொல்கிறீர். என்னை இழுக்க உங்களுக்கு தெம்பு உண்டா?" என்றான் விழுந்தவன்.

"தெம்பு இருப்பதால் தானே இப்படி சொல்கிறேன்." என்று வந்தவர் சொல்ல,

"தெம்பு இருப்பதாக நினைத்து கொண்டு இப்படி சொல்கிறீரோ?" என்று சந்தேகத்துடன் விழுந்தவன் கேட்க,

"நான் ஒருக்காலும் விழவே மாட்டேன் (அச்யுத). கவலையே படாதே!" என்று வந்தவர் சொல்ல,

"
ravi said…
அது சரி.. நீங்கள் விழ மாட்டீர்கள் என்றாலும், என் பலத்தையும் சேர்த்து, நீங்கள் எப்படி தூக்க முடியும்? என்னை கரையேற்றுகிறேன் என்று சொல்லி நீங்களும் விழுந்து விட்டால்?" என்று விழுந்தவன் கேட்க,

"நான் திடமானவன் (த்ருட). நான் திடமானவன் என்பதாலேயே நானும் விழ மாட்டேன். பிறரையும் விழ செய்யவும் மாட்டேன். தைரியமாக அந்த கயிறை பிடி" என்றார் வந்தவர்.

"அதெல்லாம் முடியாது.. நீங்கள் போங்கள். ஒருவேளை நீங்கள் என்னை கரையேற்றி விட்டாலும், காப்பாற்றியதற்கு தக்ஷிணை கொடு என்று கேட்பீர்கள்" என்றான் விழுந்தவன்.

"
ravi said…
நீ எனக்கு ஒன்றுமே கொடுக்க வேண்டாம்.. நீ கஷ்டப்படுகிறாய். என்னால் காப்பாற்ற முடியும். கஷ்டப்படுவது உன் நிலையாக உள்ளது. காப்பாற்றுவது என் ஸ்வபாவம். என் ஸ்வபாவப்படி உன்னை காப்பாற்றுகிறேன் என்று இருக்கும் போது, தக்ஷிணை எனக்கு தேவையே இல்லை" என்றார் வந்தவர்.

"தக்ஷிணை வேண்டாம் என்று சொல்கிறீர்கள். இந்த பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றியதால், 'நான் தான் உன்னை காப்பாற்றினேன். நான் தான் காப்பாற்றினேன். நீ எனக்கு அடிமை' என்று ஆக்கி கொண்டு விட்டால் என்ன செய்வது?" என்றான் விழுந்தவன்.

"வேண்டவே வேண்டாம். நீ எனக்கு அடிமையாக இருக்கவே வேண்டாம். சுதந்திரமாகவே இரு (கைவல்யம்). காப்பற்றுவது என் ஸ்வபாவம். நான் உன்னை காப்பாற்றாமல் விடவே மாட்டேன்" என்றார் வந்தவர்.

"
ravi said…
நீங்கள் என்ன சொன்னாலும், எனக்கு உங்கள் மேல் சந்தேகம் வருகிறது..
ஒரு வேளை என்னை தூக்கி விட்ட பிறகு, 'ஏண்டா.. கவனிக்காமல் இந்த பாழுங்கிணற்றில் விழுந்தாய்?' என்று நீங்கள் அடித்து விட்டால்?.. அதனால், நான் இங்கேயே இருக்கிறேன் (அத்தை தின்று அங்கேயே கிடக்கும் - நம்மாழ்வார்). என்னை விடுங்கள்." என்றான் விழுந்தவன்..

"நான் உன்னை கரையேற்றுகிறேன் என்று ஆசையோடு வந்தும், 'பாழுங்கிணற்றிலேயே இருக்கிறேன், பாழுங்கிணற்றிலேயே இருக்கிறேன்' என்று இப்படி அசட்டு பிடிவாதம் செய்து கொண்டு, அடம் செய்தால் நான் என்ன தான் செய்வது?"
என்றார் வந்தவர்.

இப்படி காப்பாற்றுபவர் வந்தும்,
காப்பாற்ற ஒரு பிடியாக முடிச்சுகள் உள்ள கயிறை கொடுத்தும்,
போட்ட கயிற்றின் மீது சந்தேகப்பட்டு கொண்டு,
காப்பாற்றுபவன் மீதும் சந்தேகப்பட்டு கொண்டு,
பிடிவாதம் செய்து கொண்டு பாழுங்கிணற்றிலேயே இருந்து வந்தான். அவரும் இவன் எப்பொழுதாவது தன்னை நம்புவானோ என்று அங்கேயே இருந்தார்.

வந்தவர் - பகவான் நாராயணன்.
விழுந்தவன் - ஜீவாத்மா (நாம்)
பாழுங்கிணறு - பிறப்பு பிறப்பிலிருந்து மீள முடியாத சம்சார குழி
கயிறு - பக்தி என்ற கயிறு போட்டார்.

முடிச்சு - பக்தி என்ற கயிற்றில் "ஹரே" என்ற நரசிம்ம நாமத்தையும், "ராம' என்ற ராம நாமத்தையும், "கிருஷ்ண' என்ற கிருஷ்ண நாமத்தையும் முடிச்சுக்களாக போட்டு பிடித்து கொள்ள சொன்னார்.

ஹரே ராம ஹரே ராம,
ராம ராம ஹரே ஹரே,
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
என்ற முடிச்சுக்கள் உடைய பக்தி என்ற கயிறை பிடித்து கொண்டால், த்ருடமான (த்ருட) பகவான், தானும் நழுவாமல் (அச்யுத), நிச்சயமாக இந்த சம்சாரம் என்ற பாழுங்கிணற்றில் இருந்து காப்பாற்றி விடுவார்.

விஷ்ணு சஹஸ்ர நாமத்தில், கிருஷ்ண பரமாத்மாவை பார்த்து, பீஷ்மர் "த்ருட: ஸங்கர்ஷண-அச்யுத:" என்று இந்த அனுபவத்தில் பகவானுக்கு பெயர் சூட்டுகிறார்.

திடமானவர் (த்ருட:), தன்னிடத்தில் இழுப்பவர் (ஸங்கர்ஷண), திடமானவர் என்பதாலேயே நழுவ விடாதவர் (அச்யுத)

கீதோபதேசம் செய்த போதே, கிருஷ்ண பரமாத்மா இதை சொன்னார் என்று பார்க்கிறோம்..

तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात्
- bhagavad gita
தேஷாம் அஹம் சமுத்தர்தா
ம்ருத்யு சம்சார சாகராத்
- பகவத் கீதா
Sree krishna says "Paartha! I swiftly pullout them from the ocean of birth and death"
"பார்த்தா! பிறப்பு இறப்பு என்ற சம்சார கடலில் தத்தளித்து கொண்டிருக்கும் ஜீவனை உடனேயே கரையேற்றுபவன் நான்" என்று சொல்கிறார்.

நான் நிச்சயம் காப்பாற்றுவேன்..என் நாமத்தை நம்பிக்கையோடு பிடி என்று பகவான் பக்தி என்ற கயிறை போட்டாலும், சந்தேக புத்தி உள்ள ஜீவன், அங்கேயே இருக்கிறேன் என்று அசட்டு தனம் செய்வதை தான், நம்மாழ்வார் பதிலாக மதுரகவிக்கு சொல்கிறார் என்று பார்க்கிறோம்.

ஞானத்தை அறிந்து கொள்ள விரும்பிய மதுரகவி, திருக்குருகூர் வந்து நம்மாழ்வாரைச் சந்தித்து,
"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?''
என்ற கேட்டார்.

அதற்கு நம்மாழ்வார்,
"அத்தை தின்று அங்கே கிடக்கும்'' என்று பதிலளித்தார்.

நம்மாழ்வாரின் பதிலைக்கேட்ட மதுரகவி,
"இவர் அவதார புருஷர். இவரே நாம் தேடி வந்த ஆத்ம குரு' என்று உணர்ந்து அவரையே தம் ஆசார்யராகவும் தெய்வமாகவும் போற்றித் திருத்தொண்டு புரிந்தார்.

பகவான் போட்ட பக்தி என்ற கயிறை பிடித்து கொல்லாதவரை, நமக்கு விமோசனம் இல்லை என்று உணர்த்துகிறது "த்ருட: ஸங்கர்ஷண-அச்யுத:" என்ற விஷ்ணு சஹஸ்ரநாமம்.

விஷ்ணுவைப் பற்றி சுவாரஸ்யமான புராணக் கதைகள் மற்றும் புதிய ஆன்மீக தகவல் படிக்க மேலே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்
ravi said…
*சுபு ஜாய நமஹ* 🙏
பக்ததர்களை காக்கும் அழகிய தோள்களை உடையவர்

ஸர்வஜ்ஞா *ஸாந்த்ரகருணா* ஸமாநாதிக வர்ஜிதா🙏
இடை விடாமல் தொடர்ந்து கருணை செய்பவள்
ravi said…
🌺" *இருபத்து நான்கே நிமிடங்கள் செய்த தவத்துக்காக காட்சி அளித்த , யோக நரசிம்மப்பெருமாள்…! விளக்கும் எளிய கதை* 🌹🌺
-------------------------------------------------------
🌺🌹 ஆழ்வார்கள் பாடிய நூற்றிஎட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளசிம்மபுரம் எனப்படும் சோளிங்கர்*.
*திருக்கடிகை* என்ற திருப்பெயரில் இவ்வூரை ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள்.

🌺கடிகை என்பது ஒரு நாழிகைப் பொழுதைக் குறிக்கும். ஒரு நாழிகை இந்தத் திருத்தலத்தில் தங்கி இருந்தாலே, இத்தலம் முக்தியை அளிக்க வல்லது. அதனால் தான் திருக்கடிகை என்று இதனை ஆழ்வார்கள் அழைத்துள்ளார்கள்.

🌺 நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்பிய சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்கள், சோளிங்கர் மலைக்கு மேல் நரசிம்மர் யோக நிலையில் தவம் புரிவதை அறிந்து கொண்டார்கள்.

🌺750 அடி உயரம் கொண்ட அந்த மலைக்கு மேல் சென்ற முனிவர்கள், யோகத்தில் இருக்கும் நரசிம்மர் தங்கள் முன்னே வந்து காட்சி அளிக்கவேண்டும் என்று வேண்டி ஒரு நாழிகை தவம் புரிந்தார்கள்.

🌺ஒரு நாழிகை என்பது இருபத்து நான்கு நிமிடங்கள் ஆகும். அந்த இருபத்து நான்கே நிமிடங்கள் செய்த தவத்துக்காக விரைவில் மனம் உகந்து, யோக நரசிம்மப்பெருமாள் அவர்களுக்குக் காட்சி அளித்தார்.

🌺அந்த யோக நரசிம்மரை அங்கேயே அவர்கள் பிரதிஷ்டை செய்தார்கள்.மேலும், வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்க விழைந்த விசுவாமித்திரர், இந்த சோளிங்கர் மலைக்கு மேல் இருப்பத்து நான்கு நிமிடங்கள் தவம் புரியவே, வசிஷ்டர் அவரைத்தேடி வந்து பிரம்மரிஷி பட்டத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார்

🌺மலைக்கு மேல் அம்ருதவல்லித் தாயாரோடு யோக நரசிம்மராகத் திகழும் திருமால், அந்த மலையின் அடிவாரத்தில் பக்தவத்சலப் பெருமாளாகக் காட்சி அளிக்கிறார்.

🌺மேலும் திருக்கடிகை மலைக்கு அருகிலேயே 350-அடி உயரத்தில் சிறிய மலை ஒன்று உள்ளது. அந்த மலையிலே யோக ஆஞ்சநேயர் யோகம் செய்யும் நிலையில் எழுந்தருளியிருந்து அருள்பாலிக்கிறார்.

🌺திருக்கடிகை யோக நரசிம்மப் பெருமாளை அக்காரக்கனி என்றும் ஆழ்வார்கள் அழைக்கிறார்கள்.

🌺🌹பாடல் 🌹🌺

🌺மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர்ப் பொலிகின்ற பொன்மலையைத்
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே🌹

என்று பாடினார் திருமங்கை ஆழ்வார்

🌺யோகத்தில் கண்மூடி இருக்கும் நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண்திறந்து பார்த்து அடியார்களுக்கு அருள்புரிவதாக ஐதிகம் உள்ளது.

🌹வாழ்க வையகம் 🌺 🌹 வாழ்க வையகம்🌺 🌹வாழ்க வளமுடன் 🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* 🌹🌺🌻


ravi said…
🌹🌺"Yoga Narasimhaperumal presented a scene for twenty-four minutes of penance...! A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- -----
🌺🌹 One of the hundred and eight Divya Desams sung by the Alvars is Solingar* called Cholasimhapuram in Vellore district.
Alwars have sung this verse under the title of *Thirukadikai*.

🌺Kadigai means a time of day. If a woman stays in this temple, this place can give salvation. That is why Alwars called it Thirukkadikai.

🌺 The seven sages known as Saptha Rishis who wanted to visit the incarnation of Narasimha came to know that Narasimha was doing penance in a yogic state on top of Solingar hill.

🌺 The sages who went over the 750 feet high mountain, prayed that Lord Narasimha, who is in yoga, would appear before them and performed penance for a day.

🌺A Nazhigai is twenty four minutes. Yoga Narasimhaperumal gave them a vision for those twenty-four minutes of penance.

🌺 They consecrated that yogic Narasimha there. Also, Vishvamitra, who fell down to receive the title of Brahmarishi from Vashishtra, was on top of this Solingar mountain and after doing penance for four minutes, Vashishta came to him and gave him the title of Brahmarishi and left him.

🌺 Thirumal who appears as Yoga Narasimha with mother Amruthavalli on top of the mountain, presents a spectacle as Bhaktavatsala Perumal at the foot of the mountain.

🌺Also there is a small hill 350-feet high near Thirukkadigai hill. On that mountain Yoga Anjaneya stands up and blesses him while doing yoga.

🌺Thirukadikai Yoga Narasimha Perumal is also called Akkarakani by Alvars.


🌺🌹Song 🌹🌺

🌺Mikana is a hidden lamp inside me
Ponmalai that glorifies Buchan
Dakhanaik Kadigai was in a state of confusion
After attaining that fruit, I went away

Thirumangai Alwar sang that

It is believed that Lord Narasimha, who is blind in yoga, opens his eyes only in the month of Karthikai and blesses his servants.

🌹Valga Vayakam 🌺 🌹 Valga Vayakam🌺 🌹Valga Valamudan🌹🌺
-------------------------------------------------- --------
🌻🌺🌹Sarvam Shri Krishnarpanam🌹🌺🌻
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ரொம்ப விசித்ரமாய் கவி பாடுவதில் காளமேகப் புலவரைத் தமிழில் தலைமை ஸ்தானத்தில் வைத்திருக்கிறார்கள். “இம் என்பதற்கு முன்னே எழுநூறு எண்ணூறு என்று கவிதைகளைக் கொட்டிவிடுவேனாக்கும். நிறைய ஜலம் முட்டிக்கொண்டு கறுப்பாயிருக்கிற ஒரு காளமேகம் மழையைக் கொட்டுவதுபோலக் கவிதைகளை கொட்டுகிற காளமேகமாக்கும் நான்”என்று அவரே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ravi said…
நினைத்தே பார்க்கமுடியாதபடி நூதன நூதனமாக எதையாவது சொல்லி அந்தக் கருத்துக்கு இசைய இவர் கவிபாட வேண்டும் என்று மற்ற கவிகள் பந்தயம் வைத்திருக்கிறார்கள். கொஞ்சங்கூடச் சளைக்காமல் அத்தனை பந்தயத்திலும் அவர் ஜயித்திருக்கிறார்.

ravi said…
நமக்கு இந்தக் காஞ்சீபுரம், இதிலே ‘ஒரு மா’ என்பதாக ஒரே ஒரு மாம்பழத்தைப் பழுக்கவிட்டுக் கொண்டிருக்கும் ஏகாம்ரம் ( ஏக – ஒரு; ஆம்ரம் – மா) என்றால் கிட்டின உறவு மாதிரி. அதனால் அது ஸம்பந்தமாக ஒரு காளமேகக் கவிதை பார்க்கலாம்.

‘ஒரே ஒரு மா’ என்கிற போது அதைவிடக் குறைச்சலில்லை என்று ரொம்பச் சின்னதாக ஒரு நம்பரைச் சொன்னாற்போலிருக்கிறது. நான் சொல்லப் போகிற கவிதையிலோ எல்லாமே ஒன்றுக்கும் சின்ன நம்பர்களாக வரும்.

ravi said…
ஒன்றைவிடச் சின்ன பின்னங்களாக முக்கால், அரை, கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என்று இருக்கிற எண்ணிக்கைகளையெல்லாம் குறிப்பிட்டு ஏகாம்ரநாதர் ஸம்பந்தமாக ஒரு வெண்பா பண்ணிக் காட்டும்” என்று மற்ற கவிகள் சாலஞ்ஜ் செய்தார்கள்.

‘ஆசு கவித்வம்’ என்பதாக உடனுக்குடன், கவி பாடும் வல்லமையை அகிலாண்டேச்வரியின் அநுக்ரஹத்தால் பெற்றிருந்த காளமேகம் கொஞ்சங்கூட யோசிக்காமல் பாடிவிட்டார்

முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்

அக்கால ரைக்கால்கண் (டு) அஞ்சாமுன் – விக்கி

இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி

ஒருமாவின் கீழரைஇன் றோது .

இதிலே முக்காலிருந்து, கீழரை வரை உள்ள எல்லா எண்களும் வந்துவிடுகின்றன. ஆனால் எல்லாம் வேறே அர்த்தத்தில்!

வ்ருத்தாபயமும், யமபயமும், வியாதியும், சாவும் வருவதற்கு முன்பு, கச்சி ஏகம்பனை இப்போதிலிருந்தே ஸ்தோத்ரம் பண்ணு; ‘இன்று ஓது’ என்பது வெண்பாவின் தாத்பர்யம்.

‘முக்காலுக்கு ஏகா முன்’ என்றால் இரண்டு காலோடு மூன்றாவது காலாகக் கழியைப் பிடித்துக் கொள்ளும் காலம் வருவதற்கு முந்தி என்று அர்த்தம். ‘முன்னரையில் வீழா முன்’ என்றால் ‘முன்னுச்சி மயிரில் நரை ஏற்புவதற்கு முந்தி’. ‘முன்னுரை’ என்பதில் ‘நரை’, ‘அரை’ இரண்டும் வந்து விடுகின்றன. ‘அக்காலரைக்கால் கண்டு’ என்பதில் கால், அரைக்கால் இரண்டும் வருகின்றன. ‘அந்தப் பொல்லாத காலனின் அடிச் சுவடியைக் கண்டு’ என்பது இதற்கு அர்த்தம். ‘யமன் வருகிற தடயத்தைப் பார்த்து பயப்படுவதற்கு முன்’ என்று தொடர்ந்து போகிறது. வயோதிகத்தில் கபம், ச்லேஷ்மம் என்று விக்கலும் இருமலும் ஏற்படும். ‘அதற்கு முன்’ என்கிறார் – ‘விக்கி இருமாமுன்’. இங்கே ‘இருமா’ என்ற எண்ணிக்கை வந்து விடுகிறது. மாகாணி என்பதும் ஒரு எண். காணிப் பரப்புக்கும் பெரிசாக ஊருக்கு வெளியிலே ருத்ரபூமி (மயானம்) என்று விட்டிருப்பார்கள். அதைத்தான் ‘மாகாணி’ என்று கவி சொல்கிறார்.

‘மாகாணிக்கேகா முன்’ ருத்ர பூமிக்குப் போய்ச் சேருவதற்கு முன்னாலே. ‘ஒருமா’ என்ற இலக்கத்தையே ஏக ஆம்ரமான ஒருமா ஆக்கிக் கொண்டு விடுகிறார். காஞ்சீபுரத்தில் இந்த ஒரு மாவின் கீழே வஸிக்கிறவரைத்தான் ‘கச்சி ஒரு மாவின் கீழரை’ என்கிறார். அவரை, இப்பவே பிடித்து ஸ்தோத்ரம் செய்: “இன்றோது”.

ஏகத்துக்குக் கீழ்ப்பட்ட நம்பர்களால் ஏகாம்ரரைப் பற்றிய நினைப்பில் கொண்டு சேர்த்து விடுகிறார்!
ravi said…
நெல்லை மாவட்டத்தில்
பல்வேறு திருக்கோயில்களுக்கும் சென்று வழிபட்டு வருகின்ற ஆன்மீக அன்பர்கள் கூட
அதிகம் அறிந்திருக்காத
ஒரு திருக்கோயில் இது...!!

வடக்கே வட காசி போல
தெற்கே தென்காசி என்று
தென்காசி திருக்கோயிலுக்கு
ஒரு சிறப்பு உண்டு...

வடக்கே திருப்பதி போல,
தெற்கே தென்திருப்பதி என்ற புகழ் மேலத்
திருவேங்கடநாதபுரம்
பெருமாள் கோயிலுக்கு உண்டு...

அது போல வடக்கே திருவண்ணாமலை போல், தெற்கே... ஏதேனும் கோயில் இருக்கிறதா...?

ஆம். அப்படி ஒரு கோயில் இருக்கின்றது.
அந்த திருக்கோயில்
நமது திருநெல்வேலி மாவட்டத்தில்
அண்ணாமலைப் புதூர்
எனும் ஊரில் இருக்கிறது...!!

ravi said…
இந்த திருக்கோயில் தான் தென்திருவண்ணாமலை கோவில்....

அண்ணாமலைப் புதூர் எங்கே இருக்கிறது ?
அதன் விஷேசம் என்ன?... பார்க்கலாமா...

திருநெல்வேலியிலிருந்து சங்கரன் கோயில் செல்லும் வழியில்...
வன்னிக்கோனேந்தல்
என்ற ஊர் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
இந்த ஊா்.... வன்னிக்கோனேந்தலில் இருந்து சரியாக
4 கி.மீ தொலைவில்
ஒரு " S" வடிவ வளைவு வரும். அந்த இடத்தில்
இடதுபுறம் ஒரு சாலை பிரிந்து செல்லும். அதனை "மருக்காலங்குளம் விலக்கு"
என்ற இடம் உண்டு.

ravi said…
இந்த மருக்காலங்குளம் சாலையில்
8 கி.மீ பயணித்தால்
அண்ணாமலைப்புதூர் என்ற கிராமத்தில்தான் இந்த அக்னிஸ்தலம்
உள்ளது. இங்குதான் அண்ணாமலையார் ஆலயம் உள்ளது..

இந்த ஆலயத்தை
தென்திருவண்ணாமலை என்று அழைப்பதற்கு
பல முக்கிய காரணங்கள் உண்டு.

இந்த கோயில் 200 ஆண்டுகளுக்கு முன்பு....
திருவண்ணாமலையில் இருந்து ஒரு சித்தர் இந்த வட்டாரத்திற்கு
வெள்ளையர்கள் காலத்தில் வந்திருக்கிறார்.
அவர் பெயர் பெரியசாமி..!!

ravi said…
அவரின் சிறப்பு என்னவென்றால்,
ஓவ்வொரு திருக்கார்த்திகை தினத்தன்றும் தனது தலையில் துளசி மாலையை "சும்மாடு"
போல் மடக்கி கட்டிக் கொள்வார். அதற்குள் எண்ணெய் விட்டு தீபம் எரியவிடுவாா்
இதை ஊரே ஒரு அதியசமாக பார்த்தது.
வெறும் தலையில் ஒரு சாமியார் தீபம் எரிய விடுகிறார் என்பது அந்நாளில் அனைவரையும் அதிசயம் கொள்ள செய்தது..

அவர் சுற்றி திரிந்த பண வடலி சத்திரம் பகுதியில் ,
அப்போது கிறிஸ்துவம் வளர்ந்து கொண்டிருந்ததால்
அவர்களால் இந்த சித்தர் விரட்டப்பட்டு அண்ணாமலைப்புதூர்
பகுதிக்கு வந்திருக்கிறார்.
அப்போது அது ஒரு ஊராக இருக்கவில்லை.
மனித நடமாட்டமே இல்லாத காடாக இருந்திருக்கிறது.

ravi said…
சித்தர் பெரியசாமி இந்த இடத்திற்கு வந்தவுடன்,
இந்த பகுதி திருவண்ணாமலையே போல இருக்கிறதே
என்று ஆச்சரியம் கொண்டு
அங்கேயே அண்ணாமலையாருக்கு
சிறிய கோயில் ஒன்றை கட்டினாா். அங்கே அவர் வழிபட்ட ஐம்பொன்னாலான
அண்ணாமலையார் சிலை
இன்னமும் கர்ப்பகிரஹத்தில்
மூலவர் சிலைக்கு
வலப்புறத்தில் உள்ளது.
மூலவராக கல்லால் ஆன சிவலிங்கம் உள்ளது.

திருவண்ணாமலையில் உள்ளது போலவே
இங்கும் ஒரு பெரிய மலை உள்ளது. மலையானது
அங்கே சிவனின் பின்புறத்தில் மேற்கு திசையில் உள்ளது.
இங்கே சிவனின் முன் புறத்தில் கிழக்கு திசையில் உள்ளது.

ravi said…
இங்குள்ள மலைமீது
சப்தகன்னிமார் கோவிலும் உள்ளது. அங்கே இருப்பதை போலவே இங்கேயும் தெப்பக்குளம் இருக்கிறது.

இப்படி இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில்
அண்ணாமலையாருக்கு திருக்கோயிலை உருவாக்கிய
சித்தர் பெரியசாமி
ஒவ்வொரு திருக்கார்த்திகை தினத்தன்றும்
மலை மீது தீபம் எரிய விட்டாா்.
திருவண்ணாமலையில் தீபம் எரிவதை போல,
நம்மூர் பகுதியிலும் தீபம் எரிகின்றதே என்று ஆச்சரியப்பட்டனா் சுற்றுவட்டார கிராம மக்கள்,
இந்த மலையடிவாரத்தை நோக்கி மறுநாள் பகல் பொழுதில் வந்து பார்த்தால், சித்தர் பெரியசாமியோ
தன் தலையில் தீபத்தை
எரியவிட்டு தவக்கோலத்தில் இருப்பாா்.

அதிசயத்த கிராம மக்கள்
அவரை வழிபடத் துவங்கினர். கொஞ்சம் கொஞ்சமாக கோயிலை சுற்றி குடியேறவும் துவங்கினர்.

திருக்கார்த்திகை நாளன்று தன் தலையில் தீபமேந்திய சித்தர், அந்த தீபத்துடன் வீடு வீடாக சென்று அருளாசியும் வழங்குவாா். தீபம் அணைந்து விடாமல் இருக்க ஒவ்வொரு வீட்டிலும் எண்ணெய் ஊற்றிக் கொண்டே இருப்பார்கள்.
கொதிக்கும் எண்ணெய் தலை வழியாக
அவர் தேகமெல்லாம் வழிந்தோடும்
ஆனாலும் அவருக்கு ஒன்றும் செய்யாது.

அவரை வழிபட வந்த மக்கள் அவருக்கு காணிக்கையாக
நவதானியங்களை வழங்குவார்கள்
அவற்றை சித்தர் பெரிய "குலுக்கை" களில்
சேமித்து வைத்திருப்பாா்
அதை ஒரு குடும்பத்தினர்
திருட முயன்ற போது,
சாமியார்
"நான் சுமக்கிற நெருப்பை நீ சுமப்பாய் "
என்று சாபம் கொடுத்து விட்டார். அந்த குடும்பத்தினர் வழி வழியாக இன்றும்
தங்கள் தலையில் தீபம் ஏந்தி கார்த்திகை தினத்தின் மறுநாள் வீதி உலா வருகின்றனர்.

பின்னாட்களில் ஜீவசமாதி அடைந்த பெரியசாமி சித்தரின் சமாதி கோயிலை ஒட்டியவாறே அமைந்திருக்கும்

மிகுந்த அருளாட்சி நிறைந்த கோயிலாக
இது நம்பப்படுகின்றது.
ஊர் மக்கள் ஒற்றுமையாக
கார்த்திகை திருவிழாவை வெகு சிறப்பாக
கொண்டாடி வருகின்றனர்.
அந்த ஊரில் மலை மீது ஏற்றப்படும் தீபம்
பல கீ.மீ. அப்பால் இருந்து பார்த்தாலும் சுடர் விட்டு பிரகாசிப்பதை
நாம் காண முடியும்.

அதே போல் தலையில் தீபம் சுமக்கும் வைபவமும்
ஆண்டு தோறும் நடைபெறுகின்றது.
இந்த திருக்கோயிலுக்கென்று
ஒரு சிறிய தேரும் இருக்கின்றது.
இந்த தேர் ஓடுவது கூட திருக்கார்த்திகை அன்று நள்ளிரவில் தான்.

இவ்வளவு பழமையும்
ஆன்மீக செழுமையும் கொண்ட இவ்வூரின் புகழ் இதுவரை வெளியுலகம் அறியாதது.
இத்தனைக்கும் இந்த ஊரில் படித்தவர்களும்,
அரசுத் துறையில் பெரிய அதிகாரிகளாகவும் பலர் இருந்து வருகின்றனர்.
ஆனாலும் இந்த கோயிலின் சிறப்பு இன்னும் பல பேருக்கு தெரியாது.
இந்த ஊரின் பெருமைகளை,..
வரலாறுகளை சொல்லும்
சிறிய புத்தகம் கூட கிடையாது.

திருக்கார்த்திகை
தினத்தன்று
திருவண்ணாமலை
எப்படி ஜொலிக்கிறதோ,
அது போல்
தென் திருவண்ணாமலையாகிய
அண்ணாமலைப்புதூரும்
வருங்காலங்களில்
ஜொலிக்க வேண்டுமென்றால்
இந்த செய்தி நிறைய ஆன்மீக மெய்யன்பர்களிடம் போய் சேர வேண்டும்....!!.
ravi said…


அவன் அளக்கும் ஒரு மரக்கா நெல் படி
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣

ஏன் இங்கு நின்றான் அப் 'படி'
ஏன் அங்கு கிடந்தான் அப்'படி'
ஏன் எங்கும் இருக்கிறான் இப் 'படி'

இப்படி படிப்படியாய் கேள்விகள்?

எப்படி இருந்தாலும் யுகம் யுகமாய் அவன்
இருந்த 'படி'
நின்ற'படி'
கிடந்த'படி'
எப்படியெல்லாம் நமைக்
காத்துகொண்டிருக்கிறான் தினப்'படி '.

மார்பில் வாசம் செய்யும்
வாசல் படி தாண்டா திருமகளின்
சொல்'படி '
ஈசனோடும் பிரம்மனோடும்
இணைந்த 'படி'
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருமவன்
‌புகழ் பாடுவதெப்'படி !'

இன்னும் ஒரு 'படி'
மேலே சென்று
எங்கும் நிறைந்த' படி'
எதிலும் உறைந்த 'படி'
என்றும் எங்களுக்கே 'படி'
அளக்கும் படி செய்யும்
எங்கள் பிரான் அவனை
போற்றுவதெப் 'படி'

கைகளோ அவனை
சேவித்த 'படி'
கால்களோ அவன் சன்னதி
நடந்த 'படி'
மனமோ அவனை
நாடிய 'படி'
சிந்தையோ அவனின்
அருள் வேண்டிய 'படி'
இன்னும் அவனை
கொண்டாடுவதெப் 'படி'

ஏதும் வேண்டாம்

எல்லா ஜீவனுக்குமாய்
நம்மால் முடிந்த 'படி'
அன்னமோ, நீரோ
அன்றி ஆகாரமோ
ஏதேனும்
நித்தியப்'படி'
அளித்த'படி'
நம் வாழ்வது
இருக்கும் 'படி'
'மற(ர)க்கா'மல்
ஏறினோமானால்
அவன் 'படி'

அதுவே போதும்
காக்கும் அவன் திருவடி.

ரங்கா ரங்கா ரங்கா 🙏🙏🙏
ravi said…
*ஆலயங்களில் அமைந்துள்ள அதிசய தல விருட்சங்கள் பற்றிய பதிவுகள் :*

1. வேதாரண்யம் :
புன்னை மரம் - இந்த மரத்தின் காயில் பருப்புகள் இருப்பதில்லை.

2. நாகப்பட்டினம் :
மாமரம் - இந்த மரத்தில் உள்ள கனிகள் இருசுவைகளில் இருக்கும்.

3. காஞ்சீபுரம் :
மாமரம் - இந்த மரத்தில் உள்ள கனிகளில் நான்கு கிளைகளில் நால்வகைச் சுவை உள்ளது.

4. திருவடிசூலம் :
வில்வமரம் - இந்த மரத்தில் எட்டு பகுதிகள் கொண்ட கூட்டிலை.

5. திருவெண்காடு :
வில்வமரம் - இந்த மரத்தில் முள் கிடையாது.

6. திருநெடுங்குளம் :
அரளி - இந்த மரத்தில் மூன்று நிறங்களில் பூக்கள் பூக்கும்.

7. அன்பில் :
ஆலமரம் - இந்த மரத்தின் இலைகள் பின்புறமாக மடங்கியிருக்கும் மற்றும் இந்த மரத்தில் விழுதுகள் கிடையாது.

8. திருபுவனம் :
வேர்ப்பலா - இந்த மரத்தின் ஆண்டுக்கு ஒரு பழம் மட்டுமே கிடைக்கிறது.

9. திருவானைக்காவல் :
நாவல் மரம் - இந்த மரத்தின் வெண்மையான நாவல்பழம் மட்டுமே உள்ளது.

10. திருவதிகை :
தலமரம் - இந்த மரம் 3 ஆயிரம் நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளது.
ravi said…
பூர்வ ஜன்ம வினைகள் பற்றிய உண்மைகளை அனுபவமாக உணர இந்த சம்பவத்தை படியுங்கள்.

*ஒரு கிராமத்தில் சாம்பசிவம் என்ற ஒரு அந்தணர் வசித்து வ்ந்தார். சிறுவயது முதலே வேதம் புராணம் முதலிய சாஸ்திரங்கள் பலவும் கற்று சிறந்த மனிதராய் திகழ்ந்தார். அவர் எவ்வளவுதான் கற்றவராகவும் மற்றவருக்கு உபதேசிப்பவராகவும் இருந்தாலும் அந்த ஊரில் அவருக்கு மரியாதை இருந்ததே ஒழிய செல்வத்தைக்கொடுப்பவர் யாருமில்லை.*
*அவர் செய்யும் தொழிலுக்கு ஏற்றபடி செல்வத்தைக் கிள்ளிக்கொடுத்தார்களே அன்றி அள்ளிக்கொடுக்கவில்லை. அதனால் நிறைந்த செல்வத்தை அவரால் சேர்க்க இயலவில்லை. அவரது மனைவியும் இவரை கையாலாகாதவர் என ஏளனமாகப்பேசி வந்தாள்.*
ravi said…
அதே ஊரில் தனபாலன் என்ற ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் பெயருக்கு ஏற்ற செல்வவளம் மிக்கவராகத்திகழ்ந்தார். அவரது நிலையைச் சொல்லிக்காட்டி சாம்பசிவத்தின் மனைவி செல்வத்தைச்சேர்க்கும் வழியை பின்பற்றும்படி கூறிவந்தாள்.*
*அதனால் சாம்பசிவம் அடுத்த ஊருக்குச்சென்று பணம் சம்பாதித்து வருவதாக கூறி புறப்பட்டார்.*
*அதேநாளில் தனபாலனும் தன் வியாபாரத்தின் நிமித்தமாக தன்வண்டியில் ஏறிக்கொண்டு அடுத்த ஊருக்குப்புறப்பட்டார்.
ravi said…
இருவரும் ஒரே பாதையில் போய்க்கொண்டு இருந்தனர். தனபாலனின் வில்வண்டி ஜல்ஜல் என்று ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் சாம்பசிவமோ வேர்க்க விறுவிறுக்க நடந்து போய்க்கொண்டு இருந்தார்.*
*இந்த இருவரின் நிலையையும் வைகுண்டத்திலிருந்த மகாலட்சுமி தாயார் பார்த்தாள். பின், அருகே சயனத்திலிருந்த வைகுண்ட நாயகனான நாராயணனைப்பார்த்தாள்.*
*கண்களை மூடிப்படுத்திருந்த அந்த மாயக்கண்ணன் புன்னகை புரிந்தார். அவரது புன்னகையைக்கண்டு பொறுக்காத லக்ஷ்மி "சுவாமி, இது என்ன அநீதி..?; சதா வேதம் ஓதிக்கொண்டு உங்களையே ஸ்மரித்துக்கொண்டு இருக்கும் இந்த அந்தணருக்கு ஏன் இந்த நிலை? அவருக்கு செல்வ வளத்தை தரக்கூடாதா?" என்றாள் சற்றே கோபத்துடன்.*
ravi said…
*அதே புன்னகையுடன் நாராயணர் "என்ன லக்ஷ்மி நீதானே தனத்துக்கு அதிபதி? செல்வத்தை அள்ளிக்கொடுக்க வேண்டியதுதானே?" என்றார் கள்ளச்சிரிப்போடு.*
*"நானே கொடுக்கிறேன் சுவாமி" என்றவளைத்தடுத்தார் நாராயணர். "லக்ஷ்மி, அவனுக்கு இந்த ஜென்மாவில் செல்வத்தை அனுபவிக்கும் பேறு இல்லை. நீ கொடுத்தாலும் அதை அவன் அனுபவிக்க மாட்டான்." என்றார்*
*"கொடுப்பவள் தனலட்சுமி சுவாமி. அவனுக்கு செல்வம் எப்படி சேருகிறது என்று பாருங்கள்" என்றவளைப்பார்த்து புன்னகைத்த நாராயணர், "சரி. உன் விருப்பப்படியே அவனுக்கு செல்வம் கொடு. ஆனால் இரண்டு முறைதான் கொடுக்கவேண்டும்" என்று அனுமதியளித்தார்.*
*
ravi said…
மகாலக்ஷ்மியும் மிகவும் மகிழ்ச்சியுடன் தன் கையிலிருந்து ஒரு பொன்மூட்டையை அந்த அந்தணர் சாம்பசிவம் நடக்கும் வழியில் போட்டாள். எப்படிப்பணம் சம்பாதிப்பது என்ற எண்ணத்துடன் போய்க்கொண்டிருந்த சாம்பசிவத்துக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. "நமது ஐம்புலன்களும் நன்றாக இருக்கும் போதே நம்மால் விரைவாக நடக்க இயலவில்லையே கண்ணில்லாதவர்கள் எப்படி நடப்பார்கள்? நாமும் கண்ணில்லாமல் நடந்து பார்ப்போம்" என்ற எண்ணத்துடன் தன் இருகண்களையும் மூடிக்கொண்டு நடந்தான் சாம்பசிவம்.*
*அதேசமயம் தன் கையிலிருந்த பொன்மூட்டையை அவன் முன் போட்டாள் மகாலட்சுமி. கண்களை மூடிக்கொண்டு நடந்த சாம்பசிவம் அந்த மூட்டையை தாண்டிச்சென்று தன் கண்களைத்திறந்தான். "அப்பாடா, கண்ணில்லாமல் நடப்பது ரொம்ப கஷ்டம்தான். ஆண்டவா எனக்கு நல்லபடியாகக் கண் கொடுத்திருக்கும் உனக்கு கோடானுகோடி நன்றி" என்று இருகை கூப்பி வணங்கிவிட்டு நடந்தான்.*
*வைகுண்ட நாராயணன் சிரித்தார். "என்ன தேவி, உன் பக்தன் நீ கொடுத்த தனத்தை ஏற்கவில்லை போலிருக்கிறதே?" எனக்கேட்டார்*
*"சுவாமி, இன்னொருமுறை முயற்சித்துப்பார்க்கிறேன்" என லட்சுமி கோரிக்கை வைத்தாள்*
*"சரி உன் விருப்பம்."என்று அனுமதி அளித்தார் இறைவன்.*
*இம்முறை அவன் கண்களில் படும்படி அந்த திரவியமூட்டையை அவன் நடக்கும் பாதையில் போட்டாள் தேவி.*
*தன்முன் கிடக்கும் அந்த மூட்டையை கையில் எடுத்தான் அந்த ஏழை பிராம்மணன். மகாலட்சுமி மனம் மகிழ்ந்தாள். நாராயணனை சற்றே கர்வத்துடன் பார்த்தாள். இப்போதும் இறைவன் புன்னகைத்தார். "லக்ஷ்மி என்ன நடக்கிறது என்று பார். உன் விருப்பம் நிறைவேறினால் எனக்கும் மகிழ்ச்சியே. என்ன செய்வது அவன் கர்மபலனை அவன்தான் அனுபவிக்க வேண்டும்" என்றார் பெருமூச்சுடன்.*
*அதேசமயம் கையில் எடுத்த செல்வத்தை பிரித்துப்பார்த்த சாம்பசிவம் அச்சமும் ஆச்சரியமும் கொண்டான். மக்கள் அதிகம் நடமாடாத அந்தப்பாதையில் யார் இந்த மூட்டையைப்போட்டிருப்பார்? யாரேனும் தேடிவருவார்களா என்று அங்கேயே காத்திருந்தான். அப்போது சாம்பசிவத்துக்கு முன்னாலேயே அடுத்த ஊர் சென்று அடைந்த தனபாலன் தன் வியாபாரத்தை முடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டு இருந்தான். அங்கே அமர்ந்திருந்த சாம்பசிவனைப்பார்த்து ஏன் இங்கேயே தங்கிவிட்டாய்? என்று விசாரிப்பதற்காக வண்டியை மெதுவாக விடச்சொன்னான். தான் தவறவிட்ட திரவியத்தைப்பற்றி கேட்கத்தான் வந்துள்ளான் என நினைத்த சாம்பசிவம் தன்னிடமிருந்த மூட்டையைக்கொடுத்து "ஐயா, தாங்கள் தவறவிட்ட மூட்டை இதுதானா? நீங்கள் வருவீர்கள் என்றுதான் காத்திருந்தேன். இந்தாருங்கள் உங்கள் செல்வம்" என்று அந்த மூட்டையை தனபாலனிடம் கொடுத்தான்.*
*தனபாலனும் அதை பெற்றுக்கொண்டு விரைந்து ஊர்வந்து சேர்ந்தான். மிகுந்த நல்லகாரியம் செய்து விட்டதுபோல் சாம்பசிவனும் மகிழ்ச்சியுடன் தன் பயணத்தைத்தொடர்ந்தான்.*
*நாராயணன் "பார்த்தாயா தேவி தனலக்ஷ்மியே கொடுத்தாலும் அந்தசெல்வம் அவனைச்சேரவில்லை பார். இது அவனது பூர்வ ஜன்மவினை" என்றார் அதே புன்னகையோடு.*
*இப்போது மகாலட்சுமி நாராயணனைப்பார்த்து "நானே நினைத்தாலும் ஒருவனை செல்வந்தனாக ஆக்கமுடியாது அவரவர் செய்த புண்ணியங்களும் பாவங்களுமே அவர்களின் சுக துக்கங்களை முடிவு செய்கின்றன என்பதைப்புரிந்து கொண்டேன் சுவாமி" என்று கூறி தலைவணங்கி நின்றாள்.*
*"நாமும் எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனை பிறவிகளிலும் நன்மையே நினைப்பவர்களாக இருக்க வேண்டும்" என்ற உண்மையை புரிந்துகொண்டு வாழவேண்டும்.*
*மேலும் நம் இப்போதய நிலைக்கு நாமே காரணமென உணர்ந்து வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன்போக்கிலேயே வாழ கற்றுக்கொள்வோம்*
*தெய்வீகத்தை உணர்வோம்*
*புண்ணியத்தின் பலனை பெருக்குவோம்...
ravi said…
https://chat.whatsapp.com/Koq63NufiZrBebVSZasWkt

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவனின் ஐந்து முகங்கள் பற்றிய பதிவுகள் :*

*ஈசானன்:*

பிரம்ம தேவன் ஆகாயத்தினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் சாம்பல் வண்ணத்துடன் முக்கண் கொண்டவராயும், இளமதியை சென்னியில் சூடியவாறும், கோரைப்பற்கள் கொண்ட உருமாய் இரண்டு பெண்களுடன் தோன்றினார். இறைவனின் இந்த முகமே ஈசானம் எனப்படும். அதில் ஒரு பெண் மாயன் முதல் தேவர்கள் வரை அனைவரையும் ஈன்ற அன்னை ஆவாள். மற்றொரு பெண் வெண் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் ஆவாள்.

*ஈசான முகத்திலிருந்து தோன்றிய ஐந்து வடி வங்கள்:*

சோமாஸ்கந்தர், நடராசர், ரிஷபாரூடர், கல்யாணசுந்தரர், சந்திரசேகரர்.

*தத்புருஷம்:*

பிரம்ம தேவன் கிழக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் தங்க நிறத்துடன் பிறையை சென்னியில் சூடி காட்சி கொடுத்தார். இறைவனின் இந்த முகமே தத்புருஷம் எனப்படும். பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் உளம் மகிழ்ந்து தனது அழகிய உருவத்திலிருந்து காயத்ரீ தேவியை உண்டாக்கி பிரம்ம தேவனிடம் அளித்தார். காயத்ரீயை வணங்கி வருபவர்களுக்கு நரகம் கிடையாது எனவும் வரமளித்தார்.

*தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய ஐந்து வடிவங்கள்:*

பிட்சாடனர், காமாரி, காலாரி, சலந்தராரி, திரிபுராரி.

*அகோரம்:*

பிரம்மா தெற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார். இறைவன் முக்கண் கொண்டவராய் நெருப்பினையும், வாளினையும் கரத்தில் கொண்டவராய் கரிய நிறத்துடன் தோன்றினார். இறைவனின் இந்த முகத்திற்கு அகோரம் என்று பெயர்.

*அகோர முகத்திலிருந்து தோன்றிய ஐந்து வடிவங்கள்:*

கஜசம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, நீலகண்டர்.

*வாமதேவம்:.*

பிரம்ம தேவன் வடக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் சிவந்த நிறத்துடன் பாம்பை அணிந்தும், மானும் மழுவும் கைகளில் ஏந்தி பிரம்மனுக்கு காட்சி கொடுத்தார். இறைவனின் இந்த முகமே வாமதேவம் எனப் படும்.

*வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய ஐந்து முகங்கள்:*

கங்காதரர், சக்ரவரதர், கஜாந்திகர், சண்டேசானுக்கிரகர், ஏகபாதர்.

*சத்யோஜாதம்:*

பிரம்ம தேவன் மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் அழகிய வடிவத்துடன், வெண்மை நிறமான இளையோனாய் பிரம்மன் முன்பு தோன்றினார். இந்த முகமே சத்யோஜாதம் எனப்படும்.

*சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய ஐந்து முகங்கள்:*

லிங்கோத்பவர், சுகாசனர், அரிஹரர், உமாமகேசர், அர்த்தநாரி.

இந்த ஐந்து முகங்களையும் நினைத்து தியானம் செய்தாலும் அல்லது வழிபாடு செய்தா லும் இப்பிறவியில் சகல சுகங்களும் கிட்டி மறு பிறவியில் முக்தியும் கிட்டும் என்பது பிரம்ம தேவனின் வாக்கு ஆகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 🙏

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

பெண்கள் உத்தியோகம் பார்ப்பதால் பொருளாதார ரீதியிலேயே உண்டாகியிருக்கிற ஒரு அனர்த்தத்தை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. Employment problem [வேலையின்மைப் பிரச்சனை] -ஐ தான் சொல்கிறேன். சில வருஷங்களுக்கு முந்தி ‘கலியாணமாகிற வரையில் பெண் வேலைப் பார்க்கட்டும்;
ravi said…
இதனால் அவள் கல்யாணமாகவில்லையே என்பதை நினைத்து நினைத்து அழுது கொண்டு வீட்டோடு இருக்காமல் அவளுக்கு ஒரு போக்காக இருக்கும். அதோடுகூட, பணசம்பந்தமானதாகப் பண்ணப்பட்டுவிட்ட கல்யாணத்தில் வரதக்ஷிணை, மற்ற செலவுகளுக்கு அவளுடைய சம்பாத்தியத்திலிருந்தே மிச்சம் பிடித்துச் சேமிக்கலாம்’ என்ற எண்ணத்தில் ஒரு பெண்ணை விவாஹம் வரையில் வேலைக்கு விடுவதாகவும்,
ravi said…
அப்புறம் நிறுத்தி விடுவதாகவும் இருந்தது. புக்ககத்துக்காரர்களும் புருஷனும் அந்தப்பெண் கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போவதை நிஷித்தமாக [இழுக்காக] நினைத்தார்கள். ஆனால் வரவர இந்த பிராம்மண சமூகத்துக்கு இந்த ஒரு நூற்றாண்டாக ஏற்பட்டிருக்கிற பணத்தாசையில் இதுவும் மாறி, இப்போது கல்யாணமான பிற்பாடும் அவள் உத்தியோகத்திற்குப் போவது என்ற வழக்கம் வந்திருக்கிறது. இதனால் சிசு ரக்ஷணை [குழந்தை வளர்ப்பு] முதலான தாய்க் குலத்தின் உயர்ந்த கடமைகள் கெட்டுப்போய், வெள்ளைக்கார தேசங்கள் மாதிரி குடும்பம், பெற்றோர், குழந்தை என்பதெல்லாமே ஹ்ருதயபூர்வமாகக் கட்டுப்பட்டில்லாமல் பிஸினஸ் போல் ஆகியிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
ravi said…
எகனாமிக் [பொருளாதார] ரீதியில் இதனால் உண்டாகியிருக்கிற கெடுதலைப் பார்க்கலாம். இப்போது வேலையில்லை, வேலையில்லை என்று லட்சக்கணக்கில் ஆண்கள் திண்டாடுகிறார்கள். அதே சமயம் இன்னொரு பக்கம் பல குடும்பங்களில் புருஷன் உத்தியோகம் பார்ப்பது மட்டும் இல்லாமல் ஸ்திரீயும் வேலைக்குப் போகிறாள். அவன் மட்டில் வேலைக்குப் போய் இவள் வீட்டிலிருந்தால் இவள் பார்க்கிற வேலை உத்யோகமில்லாத ஒரு ஆணுக்கு கிடைக்குமல்லவா?
ravi said…
ஆனாலும் தன் பொண்டாட்டியைத் தன் சம்பாத்தியத்துக்குள்ளேயே கட்டும் செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவதுதான் கௌரவம் என்றில்லாமல் புருஷன் அவளையும் வேலைக்கு விட்டு அவளும்தான் காசு கொண்டு வரட்டுமே என்று இருக்கிறான். முதலில் தாயார் தகப்பனார் மானமில்லாமல் பெண்களை வேலைக்கு விடுகிறார்கள். அப்புறம் புருஷனும் அதையே பண்ணுகிறான். அந்த பெண்ணும் இதை ஒரு பெருமையாகவே நினைக்கிறது.
ravi said…
ஆபீஸுக்குப் போய் உத்தியோக புருஷியாக இருந்த பிறகு வீட்டில் அடைபட்டுக் கிடக்கப் பிடிக்க மாட்டேன் என்கிறது. ஸ்வயமாக ஸம்பாதித்தால் புருஷன் தட்டிக் கேட்காமல் தன் இஷ்டப்படி செலவழித்துக் கொள்ளலாமே என்று இருக்கிறது.
வீட்டோடு இருந்தால் அடைபட்டுக் கிடப்பது என்று அர்த்தமேயில்லை. நம்முடைய சாஸ்திரங்கள், புராணங்கள் தாய் பாஷையிலும் ஸம்ஸ்கிருதத்திலும் இருப்பதற்குக் குறைவேயில்லை. அவற்றிலே ஒரு ருசியை ஏற்படுத்திக் கொண்டால் நாளெல்லாம் படித்தாலும் போதாமல் ஜன்மா முழுதும் படித்துக் கொண்டு ஸந்தோஷமாக இருக்கலாம். பல பெண்கள் ஸத்ஸங்கமாகச் சேர்ந்து ஒவ்வொரு வீட்டில் இவற்றைப் படிக்கலாம். கிளப் என்றோ ஸ்தாபனம் என்றோ போர்டு போட்டுக் கொண்டு காரியாலயம் மாதிரி இல்லாமல் வீடுகளிலேயே இதைச் செய்யவேண்டும். மெம்பர், பிரஸிடென்ட் மாதிரிப் பதவிகள் உண்டாகாமல், இவற்றுக்காகப் போட்டிச் சண்டைகள் இல்லாமல் இருக்க வேண்டுமென்பதால் [இப்படிச்] சொல்கிறேன். இதோடுகூட மடம், ஆலயம் முதலியவற்றுக்காக சுத்தமான மஞ்சள் குங்குமம் பண்ணிக் கொடுப்பது, முனை முறியாத அக்ஷதை பொறுக்கிக் கொடுப்பது போன்ற காரியங்களைச் செய்தால் பெரிய சமூகத் தொண்டாகவும் இருக்கும். ஸ்திரீத்வம் [பெண்மை] என்ற உயர்ந்த சரக்கு பறிபோகாமலே இப்படிப் பட்ட ஸத்காரியங்களைப் பண்ணி வந்தால் வீட்டோடு இருப்பது அடைபட்டிருப்பதாக இருக்காது. ஆத்ம ஸ்வதந்திரத்துக்கு வழியாக ஆனந்தமாகவே இருக்கும். ஸ்திரீத்வத்தையும் இழந்து கொண்டு துராசைகளைப் பெருக்கிக் கொண்டு உத்யோகத்திற்குப் போவதைவிட இதுதான் சிரேயஸ். ஸ்வாபாவிகமாகவும் [இயல்பாகவும்] பெண்களுக்கு எடுத்தது இதுவே. வீட்டில் அடைபட்டில்லை என்று ஆபீஸுக்குப் போவதால் எத்தனை தப்புக்களுக்கு இடம் கொடுத்துப் போகிறது? ‘பெண் விடுதலை’ என்று பெரியதாகச் சொன்னாலும் ஆபீஸில் எத்தனை பேருக்கு அடங்கிப் பதில் சொல்லும்படி இருக்கிறது? இப்படி- யிருப்பதில் வாழ்க்கையில்தான் நிம்மதி உண்டா? நிம்மதியாகச் சமைத்துப் போட்டுச் சாப்பிடுவது; குழந்தை குட்டிகளின் வாத்ஸல்யத்தை பூர்ணமாக அநுபவிப்பது என்பதெல்லாம் இந்த ‘விடுதலை’ யில் உண்டா?
சொல்லி என்ன பிரயோஜனம்? அவரவர்க்கும் ஸ்வயநலம் என்று அவரவரும் நினைத்துக் கொண்டிருக்கிற ஒன்று தான் முக்கியமாக இருக்கிறதே தவிர சமூகத்தில் பிறத்தியார் கஷ்டப்பட நாம் காரணமாய் இருக்கக் கூடாது என்ற நியாய உணர்ச்சி கொஞ்சங்கூட இல்லை. புருஷன் பெண்டாட்டி என்று சில குடும்பங்களில் இரட்டை சம்பாத்தியமும், வேறு சில குடும்பங்களிலோ இரண்டு பேரில் ஒருத்தருக்கும் உத்தியோகம் இல்லாமல் பரிதாபமாகவும் இருக்கிற நிலையில் கல்யாணமான பிறகாவது பெண்கள் வேலைக்குப் போவதை நிறுத்திக் கொண்டால், அத்யாவசியமாக வேலை பார்த்தே ஜீவிக்க வேண்டிய ஒரு புருஷனுக்கு அந்த வேலை கிடைத்து அந்தக் குடும்பம் உருப்படுமே என்ற பிரக்ஞை வரவேண்டும். பெண்களை சரி-சமம் பண்ணுகிறோம் என்கிறவர்களும் இந்த விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.
சரி நிகர் சமம் என்கிற வாதம் எதில் வரலாம், எதில் வரக்கூடாது என்ற வியவஸ்தையே இக்காலத்தில் தெரியவில்லை. ஒவ்வொன்றும் ஒரு விதமாக இருக்க வேண்டும். அப்படித்தான் பிரபஞ்ச வாழ்க்கை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. ‘எல்லாம் ஒரே விதமாக ஆகவேண்டும்; அதுதான் சரி சமம்’ என்ற வாதமே அடியோடு தப்பு. அப்படி ஆக்கினால் இயற்கையான வாழ்க்கைமுறையே பாழாகிவிடும். ஒன்றொன்றும் இயற்கைப்படி, ஸமூஹத்தின் மொத்த வாழ்வுக்கு அநுகூலமாக எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருப்பது தான் அதற்கு நிறைவு. அதிலேதான் அதற்கு நிஜமான ஸெளக்கியம் உண்டு. இந்த நிறைவை விட்டு விட்டு, செயற்கையாக ஸமத்வம் என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அதற்காக ஓடுவதில் individual ஆகவும் [தனி நபரளவிலும்] நிஜமான நிறைவு அவரவர்க்கு உண்டாவதில்லை; குடும்பம், ஸமூஹம் இவற்றின் வாழ்க்கையும் இதனால் கெட்டே போகிறது.
இயற்கைப்படி பெண்கள்தானே பிள்ளை பெற வேண்டும் என்று வைத்திருக்கிறது? நாம் எவ்வளவு ஸமத்வச் சண்டை போட்டாலும் அதை மாற்றமுடியாதல்லவா? பிள்ளையைப் பெற்றவளே அதை சவரக்ஷணை பண்ணுவது, அதற்காக கிருஹலக்ஷ்மியாக இருப்பது என்பதுதான் பெண்களுக்கு ஸ்வாபாவிக (natural) தர்மம். அதைப் பண்ணுவதால் அவர்களுக்கு ஒரு குறைவும் இல்லை. அதை விட்டதால் உயர்வும் இல்லை. அதனால் ஸமப்படுத்துகிற பேச்சுக்கு இங்கே அர்த்தமேயில்லை.
ravi said…
*பாடல் 8..*

*பாடல் 8 ... அமரும் பதி*

(மயக்கம் தீர்ப்பான் முருகன்)

அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பெரு தானவ நாசகனே

*கந்தர் அநுபூதி*

பதிவு 20 started on 6th nov
ravi said…
ஆறாவது பாட்டிற்கும் இப் பாட்டிற்கும் தொடர்பு உண்டு.

நாம்
உய்வதற்காக முருகன் பதினெட்டு சாத்திரங்களை அருளி
இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் இருந்த தனக்கும்
குருநாதராய் உபதேசம் செய்ததால் ஜெக மாயை அகன்று
போனதைக் கூறுகிறார்.

தாம் வசிக்கும் ஊர், சுற்றம், சரீரம், இல்லம் என்கிற பிரமை ஒழிய

மெய்ப் பொருளை உபதேசித்த ஆச்சரியத்தை என் சொல்வேன்
என்கிறார்.

உபதேசம் செய்த குருநாதரோ என்றும் இளையோன்,
அழிவில்லாதவர்.

ஊர், உற்றார், சரீரம் போன்றவைகள் சாஸ்வதம்
இல்லை.

நிலையான தன்மை உடையவராலேயே நிலையான
பொருளை உணர்த்த முடியும்.

குமரன் என்ற வார்த்தைக்கு
எப்பொழுதும் நிலையானவன் எனக் கூறப்படும்.

அருவப் பொருள்
உருவமாக வந்தால்தான் உபதேசம் செய்யமுடியும்.

ஆதலால்
பார்வதியின் மைந்தனே என்கிறார்.

மும்மலச் சொரூபமான சூரனை அழித்தவனே நமது மலங்களையும்
அழிக்க வல்லவன்.

ஆக தானே மெய்ப்பொருளாக இருப்பவரும்,
கருணையினால் உருவத் திருமேனிகொண்டவரும்,

மும்மதச்
சூரனை அழித்தவருமாகிய முருகன் தனக்கு உபதேசித்து
அருளியதால் தன்னைப் பற்றி இருந்த ஊர், சுற்றம், சரீரம் என்கிற
மாயை தெளியப்பெற்றேன்.

இது விந்தையே. ஏனெனில் அநாதியான ஆன்மாவைப் பற்றி
இருக்கும் மாயை ஒழிவதென்றால் அது சொல்லொணாத
ஆச்சரியமல்லவா. ??

செம்பில் இயல்பாக இருக்கும் களிம்பு தானாக
நீங்குவது அது மாதிரியான வியப்பான சம்பவம் இது.👌👌👌
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 402* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
அஹ :‌ ஸம்வத்ஸரோவ்யால:
*ப்ரத்யய* : ஸர்வதர்ச’ன : ||10
ravi said…
அங்கே துந்துபியின் சடலத்தில் சதையெல்லாம் அழுகிப் போய் எலும்புக் கூடு மட்டுமே இருந்தது.

உறவினர்கள், மருத்துவர்களைத் தவிர வேறு யாரேனும் இன்னொருவரின் எலும்பைத் தொட்டால் தீட்டு உண்டாகும்.

அந்தத் தீட்டு நீங்கத் தனி பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

அதனால் அதைத் தொட்டுத் தூக்கி வீச ராமன் தயங்கினான்.

அப்போது லக்ஷ்மணன், “அண்ணா! உங்கள் இடது திருவடியின் கட்டை விரலால் நெம்பி விடுங்களேன்! தீட்டு ஏற்படாது!” என்றான்.

ராமனும் அப்படியே தன் இடது திருவடியின் கட்டை விரலால், பூமியைக் கடந்து அப்பால் செல்லும்படி துந்துபியின் எலும்புக் கூட்டை நெம்பி விட்டான்.

(திருமால் திரிவிக்கிரமனாக உலகளந்த போது, அவரது இடது திருவடி பிரம்மாவின் சத்ய லோகத்தை அடைந்தது.

அப்போது பிரம்மா தன் கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தால் அந்தத் திருவடிக்கு அபிஷேகம் செய்தார்.

அவ்வாறு அபிஷேகம் செய்கையில், அந்த இடது திருவடியின் கட்டை விரலில் இருந்து புறப்பட்டுப் பூமிக்கு வந்தது தான் கங்கை நதி.

அனைத்து தோஷங்களையும் போக்கும் கங்கையின் உற்பத்தி ஸ்தானமாக இருப்பதால் ராமனின் இடது திருவடிக் கட்டை விரலுக்கு மட்டும்
எலும்பைத் தொட்டாலும் தீட்டு ஏற்படாது என்பதை அறிந்து லக்ஷ்மணன் இவ்வாறு கூறியுள்ளான்.)👏👏👏
ravi said…
*சிவானந்தலஹரி 55வது ஸ்லோகம் பொருளுரை*🦚🦚🦚
ravi said…
आद्याय, अमिततेजसे, श्रुतिपदैर्वेद्याय, साध्याय ते,

विद्यानन्दमयात्मने, त्रिजगतः संरक्षणोद्योगिने ।

ध्येयायाखिलयोगिभिः, सुरगणैर्गेयाय, मायाविने,

सम्यक्ताण्डवसम्भ्रमाय, जटिने, सेयं नतिः शम्भवे ॥

ஆத்³யாயாமிததேஜஸே ஶ்ருதிபதை³ர்வேத்³

யாய ஸாத்⁴யாய தே
வித்³யானந்த³மயாத்

மனே த்ரிஜக³த꞉ ஸம்ʼரக்ஷணோத்³யோகி³னே |

த்⁴யேயாயாகி²லயோகி³பி⁴꞉
ஸுரக³ணைர்கே³யாய மாயாவினே

ஸம்யக்தாண்ட³வஸம்ப்⁴ரமாய ஜடினே

ஸேயம்ʼ நதி꞉ ஶம்ப⁴வே ||

*ஶம்புனு* கூப்படறார்.
ravi said…
*ஆத்³யாய’* – உலக தோற்றத்துக்கெல்லாம் முன்னாடி, ஆதியான வஸ்து எல்லாத்துக்கும் ஆதியானவர்.

அதனால், உலகத்தையே ஸ்ருஷ்டி பண்ணவரே அவர் தான்.

‘ *அமிததேஜஸே* ’ அவருடைய அளவு கடந்த அந்த தேஜஸ் தான், அம்பாளோட சேர்ந்து இந்த உலகமாக வெளிப்படறது.

‘ *ஶ்ருதிபதை* ³: *வேத்³யாய’* – வேத வாக்கியங்களா
ravi said…
அறியப்படுபவர்.

‘ *ஸாத்⁴யாய’* – அந்த வேத வாக்கியங்கள் மூலம் அடையப்படுபவர்.

வேதத்து மூலமாக தான் ஒரு ரூபமாகவோ, ஒரு லிங்கத்திலயோ, அந்த சக்தியை ரிஷிகள் கொண்டு வந்து அது மூலமாக நாமெல்லாம் கூட தர்சனம் பண்ண முடிகிறது.

‘ *வித்³யானந்த³மயாத்மனே’* – எல்லா அறிவும் ஆனந்தமும் ஒரே வடிவமாக அமைந்து இருப்பவர்.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 414* 🙏🙏🙏started on 7th Oct 2021

161
ravi said…
**161 * निरहङ्कारा - நிரஹங்காரா --*

சகல சௌபாக்கியங்கள் அருளும் ஸ்ரீ லலிதாம்பிகை இருக்கு திசை பக்கம் கூட அஹம்காரம் நுழையாது.

சத்வ ரஜோ தமோ குணங்கள் உள்ள இடத்தில்தான் அஹம்காரம் தலை காட்டும்.

நிர்குணமாக அருள் பாலிக்கும் அம்பாளிடம் அஹங்காரத்துக்கு என்ன வேலை?😊😊😊
ravi said…
இன்னோரு எதிர்மரை நாமம் *அதிகர்விதா*

மேலாக பார்த்தால் அதிகமான அகங்காரம் கொண்டவள் என்று பொருள் வருகிறது அல்லவா ... அதுவல்ல அதன் பொருள் .. நம்மை போன்ற நல்ல பக்தியுள்ள குழந்தைகளை அவள் பெற்றதனால் அதிகமான கர்வத்துடன் இருக்கிறாள் ... பாரதியார் பாடல் நினைவுக்கு வருகிறது

சின்னஞ் சிறு கிளியே – கண்ணம்மா !
செல்வ களஞ்சியமே !
என்னைக் கலி தீர்த்தே – உலகில்
ஏற்றம் புரிய வந்தாய் !

பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா !
பேசும்பொற் சித்திரமே !
அள்ளி யணைத்திடவே – என் முன்னே
ஆடி வருந் தேனே !

ஓடி வருகையிலே – கண்ணம்மா !
உள்ளங் குளிரு தடீ !
அடித்திரிதல் கண்டால் – உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ !

உச்சி தனை முகந்தால் – கருவம்
ஓங்கி வளரு தடீ !
மெச்சி யுனை யூரார் – புகழ்ந்தால்
மேனி சிலர்க்குதடீ !

கண்ணத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ !
உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா !
உன்மத்த மகுதடீ !

சற்றுன் முகஞ் சிவந்தால் – மனது
சஞ்சல மாகு தடீ !
நெற்றி சுருங்கக் கண்டால் – எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ !

உன்கண்ணில் நீர்வழிந்தால் – எந்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ !
எங்கண்ணிற் பாவையன்றோ ? – கண்ணம்மா !
என்னுயிர் நின்ன தன்றோ ?

சொல்லும் மழலையிலே – கண்ணம்மா
துன்பங்கள் திர்த்திடு வாய்
முல்லைச் சிரிப்பாலே – எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய் ,

இன்ப கதைகளெல்லாம் – உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே – உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ?

மார்பில் அணிவதற்கே – உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே – உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ ?
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 12...18th Nov 22*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

*ஸ்லோகம் 11*💐💐💐
ravi said…
காரண பர சித் ௹பாவான தேவி கார்ய காரண நிர்முக்தாவாகவும் ஆகிறாள்.

அதாவது,எல்லா உயிரிலும் ஒன்றியும், அதே சமயத்தில் விடுபட்டும் , மேலான, அதீதான பரப்ஹ்மமாகவும் விளங்குகிறாள்.

பூமி தே வியின் நாபி ஸ்தானமான காஞ்சி எனும் நகரில், காம பீடத்தில் குங்குமப்பூங்கொத்துப் போல் கருணையை வாரி வழங்கிக் கொண்டு அநேக திருவிளையாடல்களைப் புரிந்துகொண்டு விளங்குகிறாள்,

குவித்துை வைத்த_ குங்குமமோ கொட்டி வைத்த குங்குமப்பூவோ என்பதாக நம் கற்பனை விரியும்படி அம்பாளைக் கண்முன் கொண்டு நிறுத்தும் தோரண வாயில்!

இதனைத் தொடர்ந்து சென்றால் காஞ்சியின் மாளிகையில் உள் நுழையலாம்!

தோன்றும் தோரண வாயில் இந்த முதல் ஸ்லோகம்!

ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய ஜய காமாக்ஷி!😊😊😊
ravi said…
*கண்ணா*

உனை வணங்கும் எவரும் மூவா மாந்தர் அன்றோ ...??

இளமை வாடுமோ இயற்கை சீறுமோ உடல் அழியுமோ உள்ளம் துவளுமோ ??

உண்மை பேசும் மெய்யும் பொய் ஆகுமோ ??

பொய் கொண்ட யாக்கை உன்னுடன் சேர்க்கை கொள்ளாதோ ?

யசோதா இளமை என்றால் நாங்களும் வாடா இளமை கொண்ட மாந்தர்களே ... 👌👌👌

உனை புகழும் உனை நினைக்கும் எவரும் உன் யசோதையே 💐💐💐
ravi said…
*சீதக்கடலுள் அமுதன்ன தேவகி - பெரியாழ்வார் திருமொழி 1.2*


பாசுரம் 3

பணைத்தோள் இளவாய்ச்சி

பால் பாய்ந்த கொங்கை
அணைத்து

ஆரவுண்டு கிடந்த இப்பிள்ளை
இணைக்காலில்

வெள்ளித் தளை நின்று இலங்கும்
கணைக்கால் இருந்தவா

காணீரே
காரிகையீர் வந்து காணீரே
ravi said…
*❖ 35 லக்ஷயரோம லதா தாரத சமுன்னேய மத்யமா =*

கொடி போன்ற இடுப்பில் புலப்படும் மெல்லிய ரோமத்தால் மட்டுமே, இடை இருப்பதை உணர்த்துபவள்...👏👏👏
ravi said…
*அம்மா*

நீ இடையனின் தங்கை அன்றோ ?

என் கஷ்டங்கள் உனதன்றோ ?

இடையில் வரும் வாழ்வு

இதை படை கொண்டு தாக்க வரும் பாவிகளை

உன் விடை கொண்டு அழிப்பாயோ

சடை கொண்ட பதியிடம்

தடை இல்லா பாசம் கொண்டவளே

உன் எடை என்ன காற்றோ

உன் கருணை என்ன மடை திறந்த வெள்ளமோ ...

பொல்லா எண்ணங்கள் அடைகின்ற என் உள்ளம் உன் நடை கண்டு ஓடட்டும்...

உன் கடை கொண்ட பார்வை

நல்ல விடை ஒன்று எனக்கு அருளட்டும் 💐💐💐
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 134*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
சுத்தம்வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும்

மத்தமாகி நீரிலே துவண்டுமூழ்கும் மூடரே

சுத்தமேது சட்டமோது தூய்மைகண்டு நின்றதேது

பித்தர்காய முற்றதேது பேதமேது போதமே. 134
ravi said…
சுத்தமான ஆகாயத்திலிருந்து சுத்தமான மழைநீர் பெய்கிறது.

இதனை உனக்குள் அறியாது சிற்றின்ப நீரிலே மூழ்கி அதனாலேயே பல துன்பங்களுக்கு ஆட்பட்டு விந்து விட்டு நொந்து கெடும் மூடரே!!!

நீரிலே மூழ்குவது மட்டும் சுத்தம் அல்ல. மனதிலுள்ள மாசுக்களை நீக்குவதே சுத்தம்.

சுத்தம் ஏது? தீயாக சுட்டது ஏது?

என்பதை அறிந்து அது பேதம் ஏதும் இல்லாத மெய்ப்பொருளாய் இருப்பதை அறிந்து உணர்ந்து மனதை அதிலேயே இருத்தி தியான போதத்தில் திளைத்திடுங்கள்.������
ravi said…
முகுந்தமாலா 31, 32 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
முகுந்தமாலையில 31 ஆவது ஸ்லோகம் இன்னிக்குப் பார்க்கப்போறோம்

नाथे नःपुरुषोत्तमे त्रिजगतामेकाधिपे चेतसा

सेव्ये स्वस्य पदस्य दातरि परे नारायणे तिष्ठति ।

यं कञ्चित्पुरुषाधमं कतिपयग्रामेशमल्पार्थदं

सेवायै मृगयामहे नरमहो मूढा वराका वयम् ॥ ३१॥

நாதே² ந:புருஷோத்தமே த்ரிஜக³தாமேகாதி⁴பே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி பரே நாராயணே திஷ்ட²தி ।
யம் கஞ்சித்புருஷாத⁴மம் கதிபயக்³ராமேசமல்பார்த²த³ம்
ஸேவாயை ம்ருʼக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் ॥ 31 ॥
ravi said…
முந்தின ஸ்லோகங்கள்ல நாராயண நாமத்துடைய மஹிமையை சொன்னார்.

நாராயண நாமத்தை ஜபிச்சிருந்தா எனக்கு இந்த மாதிரி திரும்ப வந்து கர்பவாஸாதி துக்கத்தை அனுபவிச்சு இந்த பவக்கடல்ல விழுந்துருக்க மாட்டேன்.

போன ஜன்மத்துல நான் நாராயண நாமத்தை ஜபிக்காம போயிட்டேன்னு வருத்தப் படறார்.

நாராயண நாமத்தை சொன்னால் பகவான், பாபியா இருந்தா கூட அவனுடைய ஆசைகளையெல்லாம் பூர்த்தி பண்ணுவார்ன்னு சொன்னார்.

இந்த நாராயண நாமத்தோட மஹிமை சொல்லணும்னா அஜாமிள உபாக்யானம்னு ஸ்ரீமத் பாகவதத்துல இருக்கு.
ravi said…
*தினம் ஒரு திவ்ய பிரபந்தம்*

சீதக்கடலுள் அமுதன்ன தேவகி - பெரியாழ்வார் திருமொழி 1.2

பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் இரண்டாம் திருமொழி இந்த 'சீதக் கடலுள் அமுதன்ன தேவகி' என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள்.

இந்தப் பத்துப் பாசுரங்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்திருந்த போது அவனது திருவுறுப்புகளின் அழகினை அங்கிருக்கும் ஆய்ச்சியர்களை அழைத்து ய்சோதை காட்டியதைக் கூறுகிறார் பெரியாழ்வார்.

***

பெரியாழ்வார் திருமொழி 1.2:

பாசுரம் 4

உழந்தாள் நறுநெய் ஓரோ தடா உண்ண
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழந்தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவா காணீரே
முகில் முலையீர் வந்து காணீரே

உழந்து உழந்து (நிறைய வேலை செய்து) சேர்த்து வைத்த நறுமணம் மிக்க நெய்யை ஒரு பெரும் பானை நிறைய கண்ணன் உண்ண, பானை நெய்யையும் விழுங்கினானே இவன் என்னாவான் என்று பயந்து அவனை இழுத்து வைத்து அழகிய மத்தைக் கடையும் பெரிய தாம்புக்கயிற்றால் அவனை அடிப்பதற்காக ஓங்க அதைக் கண்டு பயத்தாலே தப்பிச் செல்வதற்காகத் தவழ்ந்த இந்தக் கண்ணனின் முழங்கால்களின் அழகைக் காணுங்கள்; முகிழ்த்த முலையுடைய பெண்களே வந்து காணுங்கள்.

***

பாலைக் கறந்து, காய்ச்சி, உறையிட்டு, தயிரான பின்பு கடைந்து வெண்ணெய் எடுத்து அதனை உருக்கி நறுநெய்யாக்கி பெரிய தடாவில் சேர்த்து வைத்த அவ்வளவு வேலைகளையும் சொல்வதற்காக 'உழந்தாள்' என்று சொல்கிறார் ஆழ்வார்.

பயத்தினால் தவழ்ந்தான் என்றால் அவனது முழங்காலை எப்படிப் பார்க்க முடியும்? அதில் தானே தவழ்ந்து சென்றிருப்பான்? இங்கும் யசோதைப்பிராட்டியின் தாயுள்ளத்தைக் குறிப்பாகச் சொன்னார் ஆழ்வார். அவன் பயத்தால் தவழ்ந்தவுடன் 'அடடா. அவன் தவழ்கிறானே. முழந்தாள் மென்மையானதாயிற்றே. அது வலிக்குமே' என்று பதறி அவன் முழந்தாளினை நோக்கினாள். அப்போது அந்த முழந்தாளின் அழகால் மயங்கி முகிழ்முலையார்களையும் அழைத்துக் காட்டினாள்.


*நாளை அடுத்த பாசுரங்களை சேவிப்போம்*

ravi said…
பாதாரவிந்த சதகம் !

33.நகஸ்ரீ ஸந்நத்த ஸ்தபக நிசித:
ஸ்வைஸ்ச கிரணை:
பிசங்கை: காமாக்ஷி
ப்ரகடித லஸத் பல்லவருசி: |
ஸதாம் கம்ய: சங்கே ஸகலப
லதாதா ஸுரதரு:
த்வதீய: பாதோயம்
துஹினகிரி ராஜன்ய தனயே ||

பனிமலையரசனின் மகளே ! காமாக்ஷி ! உன் திருவடி, நக ஒளியாகிற பூங்கொத்து சூடியதும், தங்கநிறமுள்ள தன் ஒளியால் பசுமையும் செம்மையும் கலந்த தளிர்களின் ஒளி கொண்டதும், நல்லோர்கள் சென்றடையும் இடமும், விரும்பிய பயனைத்தருவதுமான கற்பகமரமோ என ஐயப்படுகிறேன்.

வளரும்....
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
ravi said…
🌹🌺 ""Agathiyar guiding birth to reach the state of birthless greatness - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Among the siddhas, if there is one who holds the title of Ishwaran, it is only Lord Akatheesa. He is known as Guru to all Siddhas.

🌺He is also the author of Agathiya, the first grammar book of Tamil language. He does not know any Siddha art. There are no Siddhas who do not know him.

🌺 The Moola Mantra of Agathiya who has so many merits, our previous sins will be removed by praying it. Along with this, many other benefits can also be obtained.

🌺#Agathiyar #Moolamantram🌹

🌺🌹 Om Shrim Om Charkuru Padame
Salvation from sin
Roka aangkara dur vimotsanam
Sarva Deva Kala Siddha Aura form
Charguru is Om Agastya
Grantha Karthaya Nama🌹🌺

🌺 Those who want to worship Agathiyar should keep their body and mind clean. Do not eat non-veg, alcohol etc.

🌺If we take a bath every morning and chant the above mantra 108 times, Agathiyar will guide us in the form of Sutsuma.

🌺 If we follow his guidance, our sins will be removed, our soul will be filled with indescribable pleasure, and spiritual thinking will increase. There is a way to attain birthless greatness.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
🌹🌺 "“ *பிறவி இல்லா பெருநிலையை அடைய வழி பிறக்க வழிகாட்டும் அகத்தியர் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺சித்தர்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒருவர் என்றால் அது அகத்தீச பெருமான் மட்டுமே. இவர் சித்தர்களுக்கெல்லாம் குருவாக அறியப்படுகிறார்.

🌺தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான அகத்தியத்தை எழுதியவரும் இவரே. இவர் அறியதா சித்தர் கலை ஏதும் இல்லை. இவரை அறியாத சித்தர்களும் இல்லை.

🌺இப்படி பல சிறப்புகள் பெற்ற அகத்தியரின் மூல மந்திரம் அதை ஜெபிப்பதன் பயனாக நமது பூர்வ வினை பாவ தோடங்கள் அகலும். அதோடு மேலும் பல அறிய பலன்களையும் பெற இயலும்.

🌺# *அகத்தியர் #மூலமந்திரம்* 🌹

🌺🌹ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே
சாப பாவ விமோட்சனம்
ரோக அகங்கார துர் விமோட்சனம்
சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம்
சற்குருவே ஓம் அகஸ்திய
கிரந்த கர்த்தாய நம🌹🌺

🌺அகத்தியரை வழிபட நினைப்பவர்கள் உடல் மற்றும் மனதை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அசைவம், மது போன்றவற்றை உண்ணக் கூடாது.

🌺தினமும் காலையில் குளித்திவிட்டு மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜபித்து வந்தால், அகத்தியர் நமக்கு சூட்சும வடிவில் வழிகாட்டுவார்.

🌺அவரின் வழிகாட்டுதல் படி நாம் நடந்தால் நமது பாவங்கள் அகலும், நமது உள்ளத்தில் இனம் புரியாத இன்பம் பெருகும், ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். பிறவி இல்லா பெருநிலையை அடைய வழி பிறக்கும்.

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
*துர்தராய நமஹ* 🙏

தடுக்க முடியாத வலிமை கொண்டவர்
ஸர்வஜ்ஞா ஸாந்த்ரகருணா *ஸமாநாதிக வர்ஜிதா*🙏

ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவள்
ravi said…
https://chat.whatsapp.com/Koq63NufiZrBebVSZasWkt

*நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விடங்கேஸ்வரர் திருக்கோயில் பற்றிய பதிவுகள் :*

அருள்மிகு விடங்கேஸ்வரர் திருக்கோயில், தில்லைவிடங்கன், சீர்காழி வட்டம். நாகப்பட்டினம் மாவட்டம்.

சந்திரன் இறைவனை பூஜித்து அருள்பெற்ற தில்லை விடங்கன். சந்திரன் தலம் இது. இங்குள்ள கோயில் அருள்மிகு விடங்கேஸ்வரர் கோயில். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விடங்கேஸ்வரர். இறைவி தில்லை நாயகி.

சில இடங்களில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர்களிலேயே ஊர் பெயர் அமைவதுண்டு. மயூரநாதர் அருள்பாலிக்கும் தலத்தின் பெயர் மயூரம். இது பின்னர் மாயவரம் என்றாகி தற்போது மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது.

வைத்தியநாத சுவாமி அருள்பாலிக்கும் தலம் வைத்தீஸ்வரன் கோயில். இப்படிப் பல தலங்கள் இருப்பினும் இறைவி இறைவன் பெயர்கள் இணைந்த தலத்தின் பெயர்கள் அமைவது மிக அபூர்வம்.

இத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவி தில்லை நாயகியின் பெயரும் இறைவன் விடங்கேஸ்வரர் பெயரும் இணைந்து இத்தலம் தில்லைவிடங்கன் என்று அழைக்கப்படுவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். கோயில் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது.

முகப்பைத் தாண்டியதும் உள்ள பிரகாரத்தில் நந்தி பலிபீடம் இருக்க அடுத்துள்ள மகாமண்டபத்தின் கீழ் திசையில் சந்திரன் அருள்பாலிக்கிறார். மேற்கில் விநாயகர், பாலகிருஷ்ணன், பாலமுருகன் திருமேனிகள் உள்ளன.

அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் விடங்கேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். மகா மண்டபத்தின் வலது புறம் அன்னை தில்லை நாயகியின் சன்னதி உள்ளது.

http://blog.omnamasivaya.co.in/2022/11/blog-post_30.html

இங்குள்ள அம்மன் தில்லை நாயகி சுற்றுவட்டார கன்னிப் பெண்களின் மனம் கவர்ந்த அன்னையாகத் திகழ்கிறாள். திருமணம் ஆகாத பெண்கள் அன்னையிடம் விரைவில் தங்களுக்குத் திருமணமாக வேண்டும் என்றும் நல்ல கணவன் அமைய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்றனர். அவர்களது பிரார்த்தனையும் விரைந்து நிறைவேற அருள் புரிகிறாள் அன்னை.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

*🤘ஓம் நமசிவாய🙏*
ravi said…
*பகவான், பாகவதர், மஹான் இவர்களுக்கு அன்னமிட்டால் இடுபவர்களுக்கு மாத்திரம் புண்யம் மேன்மை என்பதில்லை. இடப்பட்ட அன்னத்துக்கும் மேன்மை இது.*

அடுத்த பிறவியில் "பவநே ஷ்வஸ்த்வபி கீட ஜன்மமே. மஹான்களில் வீட்டில் புழுவாகப் பிறக்கக் கடவேன்" என்று, ஆளவந்தார் ஸாதித்தபடி உயர்ந்த ஜன்மத்தை அந்த அன்னம் பெறும். இப்படி மேன் மேல் உயர்ந்த பிறவையை அடைந்துவந்தால் மனிதர்களாகவும் தேவர்களாகவும் பிறக்க வாய்ப்பு உண்டாகிறது. இதனால் ஞான ஸம்பத்து உண்டாகும். ஆக, தேஹ ஸம்பத்தின் மூலம் ஞான ஸம்பத்து தேறும். மேல் நற்கதியைப் பெறலாம்.

ஒரு மஹான் வீட்டுக்கு வந்தால், ஸ்தாவரங்கள் ஸந்தோஷப்படுகின்றனவாம். புடலை பாகல் அவரை நினைக்கின்றதாம். அதிதி பூஜையில் இவரது வயிற்றில் போவோம். அதன் மூலம் மேன் மேல் நமக்கு க்ஷேமம் என்று. புஷ்பங்களால் பெருமாளை அர்ச்சித்தவனுக்கு மாத்திரம் க்ஷேமம் என்பதில்லை. அர்ச்சிக்கப்படும் புஷ்பமும் க்ஷேமம் பெறுகிறது. பாதுகா ஸஹஸ்ரத்தில் இதைக் காணலாம். "செங்கழி நீர் வாய் நெகிழந்து ஆம்பல் வாய் கூம்பினகான்" என்ற பாசுரத்தில் இதைத் தெளியலாம். ஸாயம் ஆனதும் ஏன் ஆம்பல் கூம்புகிறது? ஐயோ என்னை கடவுளிடம் அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தவில்லையே என்ற கஷ்டத்தால். தாமரைப்பூ ஏன் மலருகிறது தெரியுமா? "நான் செவ்வையாக இருக்கும்போதே, கடவுளிடம் என்னை ஸமர்ப்பிப்பாய். நல்ல கதியை நீ பெருவாய். நானும் பெருவேன் !" என்று இவைகளிலும் ஜீவன் இருக்கிறபடியால், அதன் மூலம், இருவருக்கும் நற்கதி உண்டாகும்.

எண்ணக்கண்ட விரல்களால் இறைப்பொழுதும் எண்ணுகிலாது போய் உண்ணக்கண்டத்தம் ஊத்தை வாய்க்கு கவளம் உந்துகின்றார்களே' என்று ஆழ்வார் சொன்னார். மாலாகாரருக்கு, அலங்காரம் செய்ததால் கிடைத்த பலனைப்பார்க்கவும்.

வேத வித்யா வ்ரதே ஸ்நாதே ச்ரோத்ரியே ஸ்வமாகதே
நந்தந்தி ஓளஷதய ஸர்வா: யாஸ்யாம: பரமாம்கதிம்
யம் யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் யம் யம் பச்யதி சஷுஷா
ஸ்தாவராண்ய பிமுச்யந்தே கிம் புன: பாந்த வாஜனா:

அத்யயனம் முதலிய நற்கார்யங்கள் செய்தவன் வந்ததும் வீட்டுத்தோட்டத்தில் உள்ள செடிகளெல்லாம் ஸந்தோஷமடைகின்றன. இவர் மூலம் நாம் பரம கதியை அடைவோம் என்று. மஹான்கள் கண்ணால் பார்க்கப்பட்டவை தொடப்பட்டவை எல்லாம் பாபங்களிலிருந்து விடுபட்டு வாழ்கின்றன.

அருகம் புல் துளஸி முதலியவை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கப் பட்டால் அவைகள் ஸம்ஸாரமாகிற பாம்பின் விஷத்தையும் போக்கடிக்கும் ஓளஷதியாக மாறுகின்றன என்றார் ஸ்வாமி தேசிகன்.

ஆக, இவ்வாறு பகவான், பாகவதர்களுக்கு உபயோகப்பட்ட பொருள்கள் எல்லாம் அடுத்த பிறவியில் மேன்மையைப் பெற்று க்ரமேண உயர்ந்த கதியை அடைகின்றன


ravi said…
தீவிர முயற்சி செய்து ஒரு நல்ல எண்ணத்தைத் தொடர்ந்து மனதில் வைத்திருக் வேண்டும்.

எந்த நேரமும் வெற்றி கொள்வதற்கான
ஒரு சங்கற்பத்தை அல்லது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான சங்கற்பத்தை மனதில் சுழலவிட்டுக் கொண்டிருந்தாலும்கூட தீய எண்ணத்தை அது விலக்கும்.
- வேதாத்திரி மகரிஷி.

பல பூக்கள் சேர்த்து கட்டினால்தான் அது மாலையாக மாறும். நல்எண்ணங்களுடன் கூடிய செயலே முன்னேற்றத்திற்கான சிறந்த ஏணியாக இருக்கும்.

வாழ்க்கை மிகவும் எளிமையானது நாம் எதைக் கொடுக்கிறோமோ அதையே திரும்பப் பெறுகிறோம். நாம் நினைக்கின்ற ஒவ்வொரு எண்ணங்களும் நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன.
- (ப/பி)

🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼
ravi said…
*💐💐💐🙏🏻🌹🌹🌹❤️🌺இன்றைய சிந்தனை.*
…………………………………………….......................

*'' மகிழ்ச்சியாக இருப்பது..''*
..............................................................

நாம் என்றாவது ஒரு நாள் நம் வாழ்க்கையைப் பற்றி யோசித்தது உண்டா? நம் வாழ்க்கையில் அதிக நேரம் சோகங்களை பற்றியே எண்ணிக் கொண்டே இருக்கிறோம்..

ஏன்? மகிழ்ச்சி என்பது விளம்பர இடைவேளை மாதிரி கொஞ்சம் கொஞ்சம் தான் வரும்.. அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா..?

அதற்குக் காரணம் நாம் தான். நமது வாழ்க்கையில் சோகங்களை அதிகமாக சந்தித்து வருகிறோம். மகிழ்ச்சியை மிகக் குறைவாகவே பார்க்கின்றோம்.

ஏன் சோகங்கள் அதிகமாகவும், மகிழ்ச்சி குறைவாக இருக்கிறது என்ற கேள்வி எழலாம்.. அதற்குக் காரணமும் நாம் தான்..

நாம் எதை ஒன்றை அதிகமாக நினைத்துக் கொண்டே இருக்கின்றாமோ அதுவே திரும்பித் திரும்பி நம மனம் கேட்க வைக்கிறது..

பலர் வாழ்க்கையில் மனிதர்களிடம் பேசுவது குறைந்துக் கொண்டே வருகிறது. அது  சோகங்களை வைத்திருக்க காரணமாக அமைகிறது.

அது நம்மைச் சுற்றியும் நடக்கிறது. எனவே சோகமாக இருபதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும் நாம் தான் காரணமாக இருக்கின்றோம்.

நம் வாழ்க்கையின் நேரத்தை குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்..

அப்போது தான் நம் மனம் அமைதி ஆகும். ஒரு தன்னம்பிக்கையுடனும் இருக்கும்.

முதலில் நம்மைப் பற்றி நாம் நன்றாகத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

நம்மைப் பற்றி நன்கு யோசித்து  மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அது நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

நம்மை மகிழ்ச்சிப்படுத்துவது என்பது நம்மை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

நம் மன அமைதிக்கும் நாம் நோயிலிருந்து விடுபடவும் நமக்கு நேர்மறையான எண்ணங்களையும் அதிகம் கற்றுக் கொடுக்கும்.

*ஆம்.,நண்பர்களே..,*
நாம் மகிழ்ச்சியாக இருப்பது நமது கையில் தான் இருக்கிறது.

நாமும்,நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வோம். நாமும் மகிழ்ச்சியாக இருந்து, மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவோம்..



💐💐💐💐💐

ravi said…
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍🏻*


*PREAMBLE*

*(முன்னுரை, பீடிகை)*

meaning..... an  opening announcement used to describe what is about to be read or said....


1.  As a *preamble,* the company president began the annual meeting by pointing out how well the firm exceeded its goals.


2.   The *preamble* of the international health organization summarizes the group’s purpose.


Happy learning.
English vocabulary.


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
ravi said…
➖➖➖➖➖➖➖➖➖➖➖

🤔 *நாளும் ஒரு சிந்தனை*

வெற்றி
உன் நிழல் போல...
நீ அதை
தேடிப் போக
வேண்டியதில்லை.
வெளிச்சத்தை நோக்கி
நீ நடக்கும் போது
உன்னுடன் வரும்..!

🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

சுக்குடன் பால் கலந்து அரைத்து அதனை இளஞ்சூடாக்கி, வலி உள்ள இடங்களில் தடவ கை, கால் மூட்டு வலிகள் குணமாகும்.

📰 *நாளும் ஒரு செய்தி*

நம்முடைய மூளையில் 100 மில்லியன் நரம்பு செல்கள் உள்ளன. ஒருவர் 35 வயதை எட்டியது முதல் நாள்தோறும் 7 ஆயிரம் நரம்பு செல்கள் இறந்துகொண்டே வருகின்றன.

🥘. *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

பாலை லேசாகக் சூடுபடுத்தி அரைதேக்கரண்டி சர்க்கரையை கரைத்து பின்பு உறை ஊற்றினால் தயிர் கெட்டியாக இருக்கும். புளிக்கவும் செய்யாது.

💰 *நாளும் ஒரு பொன்மொழி*

மனம் ஒருமித்து வேலை செய்யாத ஒருவரும் வெற்றியை அடைய முடியாது.
*-அப்துல் கலாம்*

📆. *இன்று நவம்பர் 30-*

🌸 *பிறந்த நாள்* 🌸

⭕1858- *ஜெகதீஸ் சந்திர போஸ்* (இந்திய இயற்பியலாளர்)

⭕1874- *வின்ஸ்டன் சர்ச்சில்* (ஐக்கிய இராச்சிய பிரதமர், நோபல் பரிசு பெற்றவர்)

➖➖➖➖➖➖➖➖➖➖➖
( பகிர்வு - தகவல் உலா)

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/I8tPBT0gyRA55eGhB3WmiN
ravi said…
*செய்த தவறை சரி செய்யவோ அல்லது ஒப்புக்கொள்ளவோ தைரியம் இல்லாதவர்கள்*

*அதன் பழியை அடுத்தவர் மேல் போட்டு நிரந்தர கோழைகளாகி விடுகின்றனர்...!*

*இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*
ravi said…
*இன்னா நாற்பது 23*

சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா;
துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா;
அறை பறை அன்னார் சொல் இன்னா; இன்னா,
நிறை இலான் கொண்ட தவம். 23

சிறை - மதில்
அறை - ஒலிக்கின்ற

மதில் இல்லாத ஊரைக் காப்பது துன்பமாம். குடிநீர்த் துறையில் ஆடை கழுவுதல் துன்பம். பாறை போன்றாரது சொல் மிகவும் துன்பமாம். ஐம்பொறிகளை அடக்கிக் கொள்ளத் தெரியாதவனது தவம் துன்பமாகும்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 415* 🙏🙏🙏started on 7th Oct 2021

162
ravi said…
*162 निर्मोहा - நிர்மோஹா.*

எதன் மீதும் மோகம் அற்ற, பற்று இல்லாதவள் ப்ரம்ம ஸ்வரூப ஸ்ரீலலிதாம்பிகை.

ஆத்மாவை அடைய முதலில் மனம் தூய்மையாக பற்றற்றான் பற்றினை பற்றவேண்டும். .

அப்போது தான் அம்பாள் தென்படுவாள்.
ravi said…
*மூக பஞ்ச சதி*

*பதிவு 12...18th Nov 22*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

*ஸ்லோகம் recap*💐💐💐
ravi said…
2வது ஸ்லோகம்

*கஞ்சன காஞ்சீ நிலயம்”*
ravi said…
ஸத்-சித்-ஆனந்தம்! ‘ஸத்’தான ப்ரஹ்மம், தான் ‘சித்’ பூர்ணமாக இருப்பதை அறிந்து அநுபவிப்பதில் பெறுகிற பெரிய நிறைவுதான் ‘ஆனந்தம்’.

முதல் ஸ்லோகத்தில் பரசித்ரூபிணியாக, ஸத்தின் சித் ரூபமாக, ஸத்தை விட்டு அகலாத சித் ஸ்வரூபமாக வர்ணிக்கிற மூக கவி,

இந்த ஸ்லோகத்தில் கைவல்யானந்தத்தை, மோக்ஷ ஆனந்தத்தை அளிப்பவளாக, அவளுடைய ரூபத்தை வர்ணிக்கிறார்.

மஹாபெரியவா, “சித்-ஆனந்தம் என்கிற பெரிய தத்வம் நமக்குத் தெரியாமல், புரியாமல் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும்.

அவளுடைய ஸெளந்தர்யமே நமக்கு ஆனந்தம் தரத்தானே செய்கிறது?

அம்பாளின் அழகுப் பிரவாஹத்தைப் பார்த்தாலே போதும்; நிறைந்த நிறைவாகி விடலாம்.

அதிலேயே ஊறி ஊறி அத்வைத மோக்ஷானந்தத்துக்குப் போய்விடலாம்.” என்கிறார்.

நமக்கு மஹாபெரியவா தான் காமாக்ஷி.

இந்த ஸ்லோகம் மஹாபெரியவாளுக்கு பொருந்துகிற வகையில் சொன்னது மிக அருமை.

அவருடைய ரூப த்யானமும் நமக்கு மோக்ஷத்தையே கொடுக்கும். 🙏🙏🙏🙏
ravi said…
தொத்தார் பூங்குழல் கன்னியொருத்தியை

சோலைத் தடம் கொண்டு புக்கு

முத்தார்கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூவேழு சென்ற பின்வந்தாய்

ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை- உரப்பவே நான் ஒன்றும்மாட்டேன்

அத்தா! உன்னை அறிந்துகொண்டேன்

உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே .🙏🙏👏
ravi said…
*கண்ணா*

கொத்தாகச் சேர்த்து பூக்களை…

தலையில் வைத்துக் கொண்டு இருக்கும், கன்னி ஒருத்தியை!…

பெரிய விசாலமாக விளங்கும் பூஞ்சோலையில் …. அழைத்துச் சென்று…

குளிர்ந்த அழகிய இனிய சோலையில்-

– முத்து ஆரம் மார்பில் புரள அணிந்திருந்த அப் பெண்ணுடன்

இரவு பொழுதில்-
மூ ஏழு நாழிகை அதாவது கூடிக் களித்து இருந்து விட்டு!! பிறகு வந்தாய்!!

இப்படி எல்லாம் சாதாரண குழந்தை பாலகன் செய்வானா?!!

மாட்டான் அல்லவா?

நீ பாலகனாக ஆய்ப்பாடியில் வளர்ந்து வந்தாலும் அதிசயமானவன்!!

எம்பெருமான்!

இப்படி எல்லாம் லீலா விநோதங்கள் புரிபவனாக சாதாரணமாக பேசும் படி புரிந்து கொள்ளக் கூடியவனாக இல்லை..

இப்படி இருக்கும் உன்னைப் பற்றி பிறர்

…ஆளுக்கு தகுந்தவாறு வேண்டியலருக்கு விருப்பமான படி இஷ்டம் போல பேசுவோர் இங்கு உள்ளனர்.

உன்னை வேண்டும் என்றே பழி சொல்லி பேசவும்

நீ செய்யாதவற்றையும் நீ செய்ததாக சொல்லி புறம் பேசித் திரிவர் !!

அது எனக்கு வேதனை தரும் என்றாலும் கூட ….

நான் பேச மாட்டேன். நான் சாதாரண ஆயர்குல பெண்மணி.

எம்பிரானான உன்னை நான் ஏதும் கேட்கவும் விஷயமறிந்தவளோ சக்தி வாய்ந்தவளோ இல்லை

*கண்ணா!!*

நீ சர்வசக்தி படைத்தவன்

உலகைக் காத்து ஆளும் தலைவன்

உன்னை நன்கு அறிந்து கொண்டேன்

இனி எப்படி உனக்கு பயமின்றி பாலூட்டுவேன் இயலாது கண்ணா!!

*உன் அன்னை யசோதா*
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (25-40)*
ravi said…
*❖ 36 ஸ்தனபார தலன்மத்ய பட்டபந்த வலித்ரயா* =

கனத்த மார்பகத்தை தாங்குவதால் வயிற்றுப்பகுதியில் மும்மடிப்பும், மார்பகத்தின் பாரத்தால் ஒடியும் மெல்லிய இடைக்கு ஒட்டியானமும் கொண்டு திகழ்பவள்.🙏🙏🙏
ravi said…
*அம்மா*

உன் தனம் தரும் தனங்கள்

ஞானம் எனும் கல்வி அன்றோ அளிக்கிறது ...

ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் மட்டுமா தருகிறது ...

இல்லை அம்மா கூடவே

தெய்வ வடிவும் தருகிறது

என் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தருகிறதே

நல்லன எல்லாம் தருகிறதே உன் கடைக்கண்கள்

நான் ஏதும் கேட்காமலேயே ...

காரணபரசித்ரூபா நீ அன்றோ

கஞ்சன காஞ்சீ நிலயம் தனில் தனித்து வாழும் என் காமாக்ஷி உமையே 🙏🙏🙏🙏🙏
ravi said…
*சிவ வாக்கியர் பாடல்கள் 135*🦚🦚🦚👍👍👍🪷🪷🪷
ravi said…
மாதமாதந் தூமைதான்

மறந்துபோன தூமைதான்

மாதமற்று நின்றலோ வளர்ந்துரூப மானது

நாதமேது வேதமேது நற்குலங்க ளேதடா

வேதமோதும் வேதியா விளைந்தவாறு பேசடா. 135🙏🙏🙏
ravi said…
மாதம்தோறும் பெண்களுக்கு இயற்கையாய் வரும் தூமையே அவள் தூய்மையானவள் என்பதற்கு சான்று.

அது நின்று போனால் அவள் கருவைத் தாங்கியிருக்கின்றால் என்பதே காரணம்.

அத்தீட்டில் கலந்தே உடலும் உயிரும் வார்ந்து உருவமாகி ஜனிக்கின்றது.

நாதமும் விந்துவும் கலந்தே உயிர்கள் யாவும் உண்டானது.

இதில் நாதம் எது? வேதம் எது? நற்குலங்கள் எது? எல்லாம் அத்தூயமையில் இருந்தே தோன்றியுள்ளது என்பதனை அறியாமல்

வேதங்களை வெறும் வாயால் ஓதுவதால் மட்டும் உயர்ந்த குளம் எனப் பேசும் வேதியரே!

நீங்கள் இப்போவியில் இவை இல்லாமல்தானோ விளைந்தீர்களா?

அது எப்படி எனக் கூறுங்கள்!!!
ravi said…
முகுந்தமாலா 31, 32 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
முகுந்தமாலையில 31 ஆவது ஸ்லோகம் இன்னிக்குப் பார்க்கப்போறோம்

नाथे नःपुरुषोत्तमे त्रिजगतामेकाधिपे चेतसा

सेव्ये स्वस्य पदस्य दातरि परे नारायणे तिष्ठति ।

यं कञ्चित्पुरुषाधमं कतिपयग्रामेशमल्पार्थदं

सेवायै मृगयामहे नरमहो मूढा वराका वयम् ॥ ३१॥

நாதே² ந:புருஷோத்தமே த்ரிஜக³தாமேகாதி⁴பே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி பரே நாராயணே திஷ்ட²தி ।
யம் கஞ்சித்புருஷாத⁴மம்

கதிபயக்³ராமேசமல்பார்த²த³ம்
ஸேவாயை

ம்ருʼக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் ॥ 31 ॥
ravi said…
ஸ்ரீமத் பாகவதத்துல இருக்கு.

அஜாமிளன்னு ஒருத்தன் இருக்கான்.

அவன் வேதம் படிச்சு நல்ல வழியில வாழ்க்கையை நடத்திண்டிருக்கான்.

அவனுடைய அப்பா அம்மாவை பார்த்துக்கறான்.

ஒரு நாள் அவன் அப்பா ‘நீ காட்டுல போயி விறகு எடுத்துண்டு வா’ ன்னு சொல்றார்.

அவன் காட்டுக்கு வந்த இடத்துல யாரையோ பார்க்கறான்.

எல்லாத்தையும் மறந்து, அவளோட இருந்து அவ கிட்ட பத்து பிள்ளைகள் பெற்று கொள்கிறான்.

பத்தாவது பிள்ளைக்கு நாராயணன்னு பேர் வைக்கறான்.

அவனுடைய அந்திம காலம் வர்றது.

எல்லா கெட்ட பழக்கங்களும் இருந்து அவன் ரொம்ப மோசமான வாழ்க்கை நடத்தியிருந்தாலும் அவன் அந்த கடைசி நிமிஷத்துல உயிர் பிரியும்போது, நாராயணான்னு கூப்பிடறான்.

தன் பத்தாவது பிள்ளையைத் தான் நினைக்கறான்.

பகவானைக் கூட நினைக்கலை.

நாராயணான்னு கூப்பிட்டுண்டு உயிரை விட்டுடறான்.

எம படர்கள் இவனைப் பிடிச்சுண்டு போய் நரகத்துல கடுமையான தண்டனை கொடுக்கணும்னு வரா.

நல்ல ஜன்மா கிடைச்சுக் கூட இப்படி வீணடிச்சான்னு அவன் உயிரை பறிக்க வரும்போது விஷ்ணு தூதர்கள் வரா
ravi said…
இவர எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கா?

சிவாலயத்தில் நீங்கள் கண்டுகொள்ளாமல் நகரும்

இவருக்குத்தான் கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்க நினைக்கிறமாதிரி கார்த்திகை என்பது முருகனுக்கல்ல

சிவாலயத்தை வளம் வரும்போது மூலவரின் கருவறைக்குப் பின்னால் மேற்கு நோக்கி இருப்பார்.

இவர்தான் லிங்கோத்பவர்.

ஒரு முறை விஷ்ணு பிரம்மா இருவரிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சச்சரவு வரவே, இருவரும் சிவனிடம் சென்று தங்களில் யார் பெரியவர் என நீங்களே கூறுங்கள் எனக் கேட்க, அதற்கு அவர்,

ஜோதி வடிவமாய் விண்ணுக்கும் மண்ணுக்கும் பிரம்மாண்டமாய் எழுந்துநின்று, தன்னுடைய அடியையும் முடியையும் முதலில் யார் கண்டுவருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவன் சொல்லிவிடுகிறார்.

விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து மண்ணைக் குடைந்து செல்கிறார்.
பல ஆண்டுகள் கழித்து தங்களின் அடியை என்னால் காண இயலவில்லை எனச் சிவனிடம் சொல்கிறார்.

அன்னப்பறவையாகி விண்ணுலகம் சென்ற பிரம்மா, பல ஆண்டுகள் கழித்து வழியில் ஒரு தாழம்பூவைக் காண்கிறார்.

நீ எங்கிருந்து வருகிறாய் என பிரம்மா தாழம்பூவிடம் கேட்க அதற்கு அந்தத் தாழம்பூ, நான் சிவனுடைய தலையிலிருந்து வருகிறேன் எனக்கூறியுள்ளது.

அவருடைய தலை இன்னும் எவ்வளவு தூரம்னு பிரம்மா கேட்க,
நானே நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழே வந்துகொண்டிருக்கிறேன் என பிரம்மாவை அதிரவைத்துவிட்டது தாழம்பூ!

நான் உன்னைத் தலையிலிருந்து எடுத்து வந்ததாக சிவனிடம் சொல் என பிரம்மா கட்டளையிட,

இருவரும் சிவனிடம் பொய்யுரைத்து மாட்டிக்கொள்கின்றனர்.

கோவம்கொண்ட சிவன்,
பிரம்மா உனக்கு பூலோகத்தில் பக்தர்களே இருக்கமாட்டார்கள்,
உனக்கு ஆலயங்களும் எங்கும் இருக்காது,
தாழம்பூ இனி உன்னை யாரும் பூஜைக்குப் பயன்படுத்தமாட்டார்கள் என இருவருக்கும் சாபமிடுகிறார்.

உண்மை உரைத்த விஷ்ணுவே
உனக்கு, எனக்கு நிகரான ஆலயங்கள் பூலோகத்தில் இருக்கும் என அவருக்கு ஆசியும் வழங்குகிறார்.

இந்த நிகழ்வு நடந்த இடம் திருவண்ணாமலை.

இறையனார் ஜோதி வடிவாக விஸ்வரூபம் எடுத்த நிகழ்வே கார்த்திகைத் திருநாள் எனக் கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்வை நடத்திய சிவபெருமான்தான் லிங்கோத்பவர் என வணங்கப்படுகிறார்.

பெரும்பாலும் மன்னர்கள் கட்டிய ஆலயங்கள் மட்டுமே லிங்கோத்பவர் வைத்து கட்டப்பட்டதாகச் சொல்வர்.

சிவாலயத்தில் லிங்கோத்பவர் இருக்க சில விதிமுறைகள் உண்டாம்.

புதிதாக கட்டப்பட்ட சிவாலயத்தில் லிங்கோத்பவர் இருப்பது அரிதே.

அதாவது லிங்கோத்பவர் இருக்கும் ஆலயங்கள் மிகப்பழமையான சிவாலயமாகும்.

சிவாலயம் சென்று வேண்டும்போது அது விரைவில் பலிக்க லிங்கோத்பவரிடமும் அதே வேண்டுதலைச் சொல்லவேண்டுமாம்.

அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவபெருமான் தன்னுடைய இடப்பாகத்தில்ஒவ்வொரு சிவாலயத்திலும் உள் பிரகாரச் சுற்றில் கருவறைக்கு பின்புறம், மூலவருக்குச் சரியாக பின்னால் எதிர்ப்புறம் நோக்கிய சிற்பமாக லிங்கோத்பவர் இருக்கிறார்.

இந்த லிங்கோத்பவமூர்த்தியை சிவாலயத்தில் மட்டுமின்றி, பிற ஆலயங்களிலும், மூலக் கருவறையின் பின்னுள்ள கோஷ்டத்தில் (திருப்பிறையில்) பார்க்க முடியும். மும்மூர்த்திகளின் அருளும் ஒரே திருவுருவில் அமைந்துள்ள லிங்கோத்பவரை வழிபட்டு வருவது சிறப்பாகும். லிங்கோத்பவமூர்த்தியை மாலையில் இருட்டத் துவங்கும் நேரத்திலும்; பவுர்ணமி தினங்களில் கூடுதலான நேரமும் வழிபடுதல் விசேஷம். இதன் மூலம் ஒவ்வொரு நாளும் நாம் ஏதோ சாதித்து விட்டதாக எண்ணுகின்ற கர்வம் அழியும்.

இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்குவதற்காக, தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மமூர்த்தியைப் போல, நம் அறியாமையையும் அகந்தையையும் வாழ்வில் ஏற்படும் கர்வங்களை அழித்து வழிகாட்டும் திருவுருவமாக விளங்கும் லிங்கோத்பவரை வணங்கி அமைதியான வாழ்வை பெறுவோம்
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

ஸாதனை செய்கிறவன் dry-யாகப் போய்விடக் கூடாது என்பது ஒன்று. இன்னொன்று, அவனுக்கு அஹங்காரம் வந்து விடப்படாது; ego, தற்பெருமை, தன் ஸமாசாரம் என்ற மானாபிமானம் உண்டாகிவிடக்கூடாது என்பது. அந்தஃகரணத்தின் அங்கமாயுள்ள அஹங்காரம் போவது இருக்கட்டும் – அது பெரிய விஷயம்; முடிவாக நடக்க வேண்டியது. பேச்சு வழக்கில் ‘அஹங்காரம்’ என்கிற மண்டைக் கனத்தைத்தான் இப்போது சொல்கிறேன். வித்யாஸத்திற்காக இதை ‘அஹம்பாவம்’ என்று வேண்டுமானால் சொல்லலாம்1. சாஸ்திர புஸ்தகங்களில் அப்படி [வித்யாஸம்] இல்லை; clarity-க்காக நாம் வைத்துக் கொள்ளலாம். மூல ‘நான்’-எண்ணமான அஹங்காரத்தை ‘ஈகோயிஸம்’ என்றும், மண்டைக்கன ‘நான்’-எண்ணமான அஹம்பாவத்தை ‘ஈகோடிஸம்’ என்றும் சொல்கிறார்களென்று நினைக்கிறேன். ‘நாமாக்கும் மந்த-மத்யம அதிகாரிகளுக்கு மேலே போய், கர்மா-பக்திகளுக்கு மேலே போய் ஞான வழியில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்’ என்ற அபிப்ராயம் ஏற்பட்டதானால் போச்சு! அப்படி ஆகாமல் விநய ஸம்பத்தை ஊட்டுவதற்காகவும் பக்தியை ஆசார்யாள் வைத்திருக்கிறார். நாம் என்கிறது ஒன்றுமேயில்லாமலாகி அன்பிலே கரையணும் என்னும்போது கனத்துக்கு இடமே இல்லை! ரொம்பவும் லேசாக அது இவனை ஆக்கிவிடும். உத்தமாதிகாரிக்கே ஞானம் என்று உசத்திச் சொல்லப் பட்டிருக்கிறபடியால், அவனுக்கு அதிலே தலை கனத்துப் போய், அந்த பாரமே ஸாதனையை அழுத்தி உடைத்துவிடாமல் ஜாக்ரதை பண்ண பக்தியின் நைச்ய பாவம் [தாழ்ந்திருக்கும் பாங்கு] அவசியமாகிறது.
ravi said…
நாம் அன்போடுகூட எத்தனை வரணம் பண்ணினாலும் அது [பிரம்மம்] தன்னை விவரணம் என்பதாக ‘ரிவீல்’ பண்ணிக் கொண்டாலொழிய கடைத்தேற முடியாது என்ற நினைப்பில், அந்த லக்ஷ்யத்தின் முன்னால் தாழ்ந்து கிடக்கும் நைச்ய பாவம் ஏற்பட பக்தியே உதவி பண்ணும். அந்த உச்சியநுபவந்தான் என்றில்லை; ‘இதுவரை ஸாதனையில் கண்ட பலனெல்லாமும் பரமாத்மா அநுக்ரஹித்துக் கிடைத்ததுதான்! நாம் பண்ணினது முயற்சி மட்டுமே; பலன் அது [பரமாத்மா] கொடுத்ததே! அப்படி முயற்சி பண்ணத் தோன்றியதும், பண்ணிக்கொண்டே போனதுங்கூட அதன் அநுக்ரஹத்தால்தான்’ என்ற நைச்ய பக்தி இருந்தாலே, அடுத்தாற்போல ஸந்நியாஸியாவதற்கு உடைமைகளைத் தியாகம் செய்ய வேண்டியிருப்பதில் ரொம்ப முக்ய உடைமையான அஹம்பாவத் தியாகம் செய்ய முடியும்.
ravi said…
நம் எல்லோருக்கும் முருகனின் ஆறுபடை வீடுகள் தெரியும் ... ஐயப்பனின் 6 படை வீடுகள் தெரியுமா ?

முதல் படை வீடு ( மூலாதாரம்)

பொன் சொரி முத்து ஐயன் கோயில்

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து காரையார் அணைக்கும் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் ஆலயம் .. அகத்தியருக்கு இங்கே ஜோதி ரூபத்தில் ஐயன் காட்சி தந்தார்

2. அச்சன் கோயில் ( சுவாதிஷ்ட்டானம்)

3. ஆரியங்காவு - மணிப்பூரகம்

4. குளத்துப்புழை ..
அனாகதம்

5. எருமேலி ...விசுக்தி

6. சபரி மலை ... ஆக்ஞா

இந்த ஆறையும் கடந்து சகஸ்ராரமாக காந்த மலையில் ஜோதி தரிசனம் தருகிறார் நம் மணிகண்டன் 🙏🙏🙏
ravi said…
*பாடல் 9..*

*பாடல் 9*


*கந்தர் அநுபூதி*

பதிவு 21 started on 6th nov
ravi said…
*பாடல் 9 ... மட்டூர் குழல்*

(மங்கையர் மையல் தூரத்தேக)

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?

தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல, நிர்பயனே
ravi said…
*சயிலத்து* ... கிரவுஞ்ச கிரியின் மீது,

*தட்டு ஊடு அற* ...

தடைகள் இன்றி ஊடுறுவிச் செல்லும்படி

*வேல் எறியும்* ... வேலாயுத்தை ஏவி,

*நிட்டூர* ... அழித்தவனே,

*நிராகுல* ... துன்பம் இல்லாதவனே,

*நிர்பயனே* ... பயமற்றவனே,

*மட்டு ஊர் குழல்* ... தேன் சிந்தும் மலர்கள் அணிந்த கூந்தலை உடைய,

*_மங்கையர்_* ... பெண்களது,

*மையல் வலை பட்டு ...* மோக வலையில் அகப்பட்டு,

*ஊசல் படும் பரிசு ...* ஊஞ்சல் ஆடுவதுபோல் உள்ளம் ஆடுகின்ற
தன்மையை,

*என்று ஒழிவேன்* ... எப்போது நீங்கப் பெறுவேன்?
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 403* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

ஸுரேச’: ச’ரணம்‌ சர்ம
விச்’வரேதா: ப்ரஜாபவ : |
அஹ :‌ ஸம்வத்ஸரோவ்யால:
*ப்ரத்யய* : ஸர்வதர்ச’ன : ||10
ravi said…
சுக்ரீவனோ, “ராமா! என்ன இருந்தாலும் நீ எலும்புக் கூட்டைத்தான் தூக்கி வீசி இருக்கிறாய்.

வாலி இவன் உயிரோடு இருந்த காலத்திலேயே இவனைத் தூக்கி எறிந்தான்.

எனவே இந்த ஒரு செயலைக் கொண்டு
உன்னால் வாலியைக் கொல்ல முடியும் என்று என்னால் நிச்சயிக்க முடியவில்லை!

உனக்கு இன்னொரு பரீட்சை வைக்கப் போகிறேன்!” என்றான்.

“என்ன?” என்று ராமன் கேட்க,
அருகில் இருந்த வனத்துக்கு அழைத்துச் சென்ற சுக்ரீவன், “ராமா! வாலி தன் வில்லில் இருந்து பாணம் போட்டால்,
அது பெருத்த சால மரத்தையே துளைக்கும்.

அவ்வாறு உன்னால் பாணம் போட முடியுமா?” என்று கேட்டான்.
ravi said…
आद्याय, अमिततेजसे, श्रुतिपदैर्वेद्याय, साध्याय ते,

विद्यानन्दमयात्मने, त्रिजगतः संरक्षणोद्योगिने ।

ध्येयायाखिलयोगिभिः, सुरगणैर्गेयाय, मायाविने,

सम्यक्ताण्डवसम्भ्रमाय, जटिने, सेयं नतिः शम्भवे ॥

ஆத்³யாயாமிததேஜஸே ஶ்ருதிபதை³ர்வேத்³

யாய ஸாத்⁴யாய தே
வித்³யானந்த³மயாத்

மனே த்ரிஜக³த꞉ ஸம்ʼரக்ஷணோத்³யோகி³னே |

த்⁴யேயாயாகி²லயோகி³பி⁴꞉
ஸுரக³ணைர்கே³யாய மாயாவினே

ஸம்யக்தாண்ட³வஸம்ப்⁴ரமாய ஜடினே

ஸேயம்ʼ நதி꞉ ஶம்ப⁴வே ||

*ஶம்புனு* கூப்படறார்.
ravi said…
*சிவானந்தலஹரி 55வது ஸ்லோகம் பொருளுரை*🦚🦚🦚
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 403*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 54வது ஸ்லோகம் பொருளுரை
ravi said…
ஸாந்த்³ரானந்தா³வபோ³தா⁴த்மகம்ʼ, அனுபமிதம்ʼ,
காலதே³ஶாவதி⁴ப்⁴யாம்ʼ,
நிர்முக்தம்ʼ நித்யமுக்தம்ʼ,
நிக³மஶதஸஹஸ்ரேண, நிர்பா⁴ஸ்யமானம் |
அஸ்பஷ்டம்ʼ,

த்³ருʼஷ்டமாத்ரே புன:, உருபுருஷார்தா²த்மகம்ʼ, ப்³ரஹ்ம தத்வம்ʼ,

தத்தாவத், பா⁴தி ஸாக்ஷாத், கு³ருபவனபுரே, ஹந்த, பா⁴க்³யம்ʼ ஜனானாம் ||

அப்படினு நாராயணீயத்தோட முதல் ஸ்லோகத்துக்கும், இந்த ஸ்லோகத்துக்கும் நிறைய பொருத்தம் இருக்கு.
ravi said…
🌹🌺 "“ *கண்ணா* .... *எனக்கு எப்பொழுதும் துன்பமே கிடைக்க வேண்டும்.... இதுவே நீ எனக்கு தர வேண்டிய வரம் என்ற ஒரு அம்மையார் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺இறைவனிடம் பக்தி செலுத்தும் போது நம் பக்தியில் உண்மை இருந்தாலும் நம் சுயநலத்துக்காக சில கோரிக்கைகள் இறைவனிடம் கூறுவோம் ---

🌺ஆனால் இந்த விஷயத்தில் நாம் ஒரு உண்மையை உணரவேண்டும் நம் கோரிக்கைகளையோ அல்லது கஷ்டங்களையோ அறியாதவனா அந்த பரந்தமான்?

🌺எல்லாம் அவனுக்கு தெரியும் நாம் ஏன் அதை அவனிடம் கூற வேண்டும்--- காரணம் நமக்குள் ஒரு ஆறுதல் வார்த்தை அது ஸ்ரீ கிருஷ்ணனிடம் கூறியாயிற்று நம் கஷ்டம் யாவையும் அந்த பரந்தமான் பார்த்து கொள்வான் என்று ஒரு ஆறுதல் எண்ணம் நமக்கு தோன்றும் அதனால் தான் நாம் அப்படி வேண்டிக்கொள்கிறோம்

🌺சரி---- பொதுவாக ஸ்ரீ கிருஷ்ணனிடம் நாம் வேண்டும் போது ---பொருள் வசதி வேண்டும் ---பெயர் சொல்ல ஒரு புத்திரபாக்கியம் வேண்டும் ---நிம்மதியான வாழ்வு வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்

🌺ஆனால் நாம் யாரவது ஒருவர் எனக்கு எப்பொழுதும் துன்பமே வேண்டும் என வேண்டிக்கொள்வோமா மாட்டோம் மாட்டவே மாட்டோம் --

🌺ஆனால் இங்கே ஒரு அம்மையார் கண்ணனை நேரில் கண்டு துன்பமே வரமாக வேண்டும் என கேட்கிறார் ஏன் அப்படி?

🌺பாண்டவர்கள் காடாள வேண்டும் என்று தீர்ப்பு வரும்போது அவர்களது தாயான குந்தி தேவி மட்டும் விதுரரின் குடிலில் தங்க ஏற்பாடானது ---அப்போது குந்தியின் மேல் இரக்கம் கொண்ட கண்ணன் ---அத்தை உனக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் கேட்டு பெற்று கொள் என்கிறான் ---

🌺குந்தியோ --கண்ணா எனக்கு எப்பொழுதும் துன்பமே கிடைக்க வேண்டும் இதுவே நீ எனக்கு தர வேண்டிய வரம் ---என்று கூற --கண்ணனோ --என்ன அத்தை இது வரத்தை கேட்க சொன்னால் சாபம் அல்லவா கேட்கிறாய் --

🌺குந்தியோ ---கண்ணா யார் சொன்னது துன்பத்தை வரமாக கேட்டால் சாபம் என்று ----எனக்கு துன்பம் வரும்போதெல்லாம் உன்னை நினைக்கிறேனே---உன்னை நினைக்க காரணமாக இருப்பது எனக்கு வரும் இந்த பெரும் துன்பம் தானே --

🌺இதோ இப்போது கூட பாரேன் எனக்கு துன்பம் என்றதும் நீயே தேடி வந்து வரம் தருகிறேன் என்று கேட்கிறாய் ---இப்பொழுது நீயே சொல் துன்பம் என்பது நீ எல்லோருக்கும் அளிக்கும் வரம் தானே ---என்று குந்தி கேட்க ----கண்ணனே சற்று கலங்கி தான் போனான்🌹🌺

🌺🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வையகம் 🌹வாழ்க வளமுடன்
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺

ravi said…
🌹🌺 ""Agathiyar guiding birth to reach the state of birthless greatness - A simple story to explain 🌹🌺
-------------------------------------------------- ------

🌹🌺 Among the siddhas, if there is one who holds the title of Ishwaran, it is only Lord Akatheesa. He is known as Guru to all Siddhas.

🌺He is also the author of Agathiya, the first grammar book of Tamil language. He does not know any Siddha art. There are no Siddhas who do not know him.

🌺 The Moola Mantra of Agathiya who has so many merits, our previous sins will be removed by praying it. Along with this, many other benefits can also be obtained.

🌺#Agathiyar #Moolamantram🌹

🌺🌹 Om Shrim Om Charkuru Padame
Salvation from sin
Roka aangkara dur vimotsanam
Sarva Deva Kala Siddha Aura form
Charguru is Om Agastya
Grantha Karthaya Nama🌹🌺

🌺 Those who want to worship Agathiyar should keep their body and mind clean. Do not eat non-veg, alcohol etc.

🌺If we take a bath every morning and chant the above mantra 108 times, Agathiyar will guide us in the form of Sutsuma.

🌺 If we follow his guidance, our sins will be removed, our soul will be filled with indescribable pleasure, and spiritual thinking will increase. There is a way to attain birthless greatness.

🌺🌹valga Vayakam 🌹valga Vayakam 🌹valga Valamudan
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
ravi said…
*இன்னா நாற்பது 24*

ஏமல் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா;
தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா;
காமம் முதிரின் உயிர்க்கு இன்னா; ஆங்கு இன்னா,
யாம் என்பவரோடு நட்பு. 24

ஏமம் - காவல்
மூதூர் - பழைய ஊரில்

பழைய ஊரில் வாழ்தல் மிகவும் துன்பமாகும். தீச் செய்கையுடையவரது அருகில் இருத்தல் மிகவும் துன்பமாகும். காமநோய் முற்றினால் உயிர்க்குத் துன்பமாகும். அவ்வாறே, நான், எனது என்பாரோடு தங்கியிருத்தல் துன்பமாம்.

*இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன்*🌹🌻🌹🌻🙏🏻🙏🏻🌻🌹🌻🌹
ravi said…
மாயம்மா

அந்த சித்தர் மிக ஆச்சரியமான பிறப்பு, பொதுவாக அசாம் எனும் காமாக்யா பகுதி அன்னை சக்தியின் அருளாற்றல் மிக்க பிரதேசம், இந்துஸ்தானத்தில் சக்தி வழிபாட்டில் கேரளமும் அசாம் எனும் காமாக்யாவும் முக்கியமானவை, அப்படி அங்கு அவதரித்தவர் அந்த சித்தர்

ஆனால் இளம் வயதிலே கன்னியாகுமரிக்கு வந்திருக்கின்றார்

ravi said…
குமரி என்பது ஞான பூமி, அங்கிருக்கும் விஷேச சக்தி எல்லோருக்கும் புரியாது, காசி போல இமயமலை போல கடல்சூழ்ந்த அந்த முனையும் தவம் செய்யவும் பிரபஞ்ச சக்தியினை ஈர்க்கவும் சரியான இடம்

அதனை அன்னை சக்தியே பகவதியாக தவமிருந்து காட்டினாள், அவளை தொடர்ந்து எல்லோரும் வந்து தவமிருந்தார்கள், இமயமலை ஞானியர் முதல் ஞானம் தேடுவோருக்கு திருவண்ணாமலை போல குமரி ஞான பீடம்

எப்பொழுதுமே ஞானம் கொட்டுமிடத்துக்கு அசுர சக்திகள் வந்து வம்பு செய்வது வழமை, அதை ராமாயண காலத்தில் இருந்தே காணலாம், அதற்கு முன்பு அன்னை தவமிருந்தபொழுது பாணாசூரன் வந்து அட்டகாசம் செய்தபொழுதே அறியலாம்

ravi said…
அங்கு எப்பொழுதும் சில மறைமுக சிக்கல்கள் உண்டு, காசி மட்டுமல்ல கன்னியாகுமரி கெட்டாலும் நாட்டுக்கு நல்லதல்ல, அன்னை குடிகொண்டிருக்கும் தென்முனையில் எப்பொழுதும் ஆன்மீகமும் இந்துமத காவலும் அவசியம்

புரிந்துகொள்ளமுடியா சூட்சுமம் இது, ஆனால் அடிக்கடி நடக்கும் அதிசயமும் அது

அந்த கன்னியாகுமரிக்கு அனுமர் வந்தார், அகத்தியர் வந்தார் பின்னாளில் ஆதிசங்கரர் வந்தார், ராமானுஜர் வந்தார்

அய்யா வைகுண்டர் தன் மூன்றுநாள் கடலடி தவத்தை குமரியில்தான் செய்தார் என்பது ஒரு ஆய்வு செய்தி

அப்படிபட்ட குமரிக்கு பின்னாளில் சுவாமி விவேகானந்தரே தேடி வந்து தவமிருந்தார்

ravi said…
அந்த வழியில்தான் அசாமில் இருந்து இளம்பிராயத்திலே வந்தாள் மாயம்மா, அவள் யார் என்றோ அவளின் பெற்றோர் யார் என்றோ, எதற்காக வந்தாள் என்றோ தெரியாது, பகவதி அம்மன் வாசலிலும் கடற்கரையிலும் அவளை காணமுடியும் அதை தாண்டி அவளை அறிந்தோர் இல்லை

இவையெல்லாம் 1920ம் வருடங்கள், தவமும் தெருவோர வாழ்க்கையுமாக சுற்றி திரிந்தாள்

அவளின் இளம் வயதும் அழகும் பல தொல்லைகளை கொடுக்க,விகாரமான முகத்தை தன் சக்தியால் பெற்றாள், மேற்கொண்டு தெருபுழுதியும் கரும் ஜடையும் சுற்றி பரைவரின் வாகனங்களோடும் வலம் வந்தாள் அவள்

அவளை மிக அருவெருப்பானவாளாக கண்டால் ஒதுக்கிவைக்கும்படிதான் அன்றைய கன்னியாகுமரி வைத்திருந்தது, குப்பை தொட்டி உணவும் சுற்றி கரும் பைரவர்களும் கந்தல் உடையும் குளிக்காத மேனியுமே அவள் தோற்றமாயிற்று

அவளை யாரும் கண்டுகொள்ளா நிலையில் அவளை அடையாளம் காட்டியது அதே தெருவோர பைரவர் வாகனம்

சாலையில் அடிபட்டு குடல் சரிந்து இறந்து கிடந்தது அந்த ஜீவன், யாரும் தொட தயங்கும் அந்த சடலத்தை தொட்டு குடலை உள் வைத்து ஒரு குச்சியால் மூடி தள்ளி வைத்தாள், அதனையே உற்று பார்த்தாள் சட்டென எழும்பியது ஜீவன்

இறந்து கிடந்த சடலம் உயிர்பெற்று ஓடியதில்தான் அவளை அடையாளம் கண்டது சமூகம்

ஆனால் அவள் யாரையும் கண்டு கொள்வதில்லை, சருகுகளை அள்ள்ளி வெறும் கையால் தீ மூட்டுவாள், அது யாகத்தில் ஒரு வகை என யாருக்கும் தெரியவில்லை

திடீரென கடலில் குதிப்பாள், அவளை காணமுடியாது

விவேகானந்தர் மண்டபமில்லா அக்காலத்தில் அங்கு நீந்தி சென்று தவமிருப்பாள், அந்த பாறையில் நிற்கும் உருவம் திடீரென கரைக்கும் வரும்

காணாமல் போன மீணர்களை எண்ணி ஊர் அழுதால் கடல்மேல் மாயம்மா நடந்து செல்வதும், மீணவர்கள் திரும்பி வருவதும் நடந்தது

அவள் யாரையும் தேடி செல்வதில்லை மாறாக ஊரே வந்து வணங்கும் அவள் யாரையும் ஏறெடுத்து பார்ப்பதில்லை

மாறாக கடைவீதியில் எல்லா கடையும் திறந்திருக்க அவள் விரும்பிய கடைக்குள் சென்று உணவினை எடுத்து அவளும் உண்டு தன்னை சுற்றிய ஜீவன்களுக்கும் வீசுவாள்

அவள் கால்பட்ட கடையும் வியாபாரமும் செழிக்கும் என்பதால் அவள் தெய்வமானாள்

அவளை தேடி வந்த கூட்டம் தள்ளி இருந்து பார்த்துகொண்டே இருக்கும், அவள் பேசமாட்டாள் நகர்ந்துவிடுவாள் அவள் காலடி பட்ட பண்ணை எடுத்து சுகம் அடைந்தோர் கோடி

திடீரென உணவகதுகுள் புகுந்து உண்பவள் எச்சி சோற்றை யாருக்காவது நீட்டுவாள் அதை வாங்க பெரும் கூட்டம் கூடிற்று

ஒரு வகையில் 1930 முதல் 1990 வரை கன்னியாகுமரியில் மதமாற்றம் நிகழாமல் இருக்க அவளும் பெரும் காரணம்

1967ல் விவேகானந்த மண்டபம் அமைய கூடாது என சர்ச்சை வந்த நிலையில் அந்த செய்தி கேட்டு அவள் சத்தமாக சிரித்தாள் பின் கடலில்நடந்தே பாறைக்கு சென்றாள் என்ற செய்தியும் உண்டு

அவளுக்கு பக்தர்கள் பெருகினார்கள், நாடாளும் பிரதமர்கல் ஜனாதிபதிகள் வரை வந்தார்கள்

மாயம்மா செய்த அற்புதமும் சித்து வேலைகளும் அமைதியாக செய்த மாயங்களும் ஏராளம்

1980களிலே ஆன்மீகம் தேடிய இளையராஜா சந்தித்த சித்தர்களில் மாயம்மாவும் ஒருவர் இதுபற்றியெல்லாம் அவர் நிரம்ப பேசியுள்ளார்

இளையராஜா தன் வீட்டில் வைத்து அவரை காத்துகொள்ள விரும்பினார், ஆனால் சித்தர்கள் தங்கள் இருப்பிடத்தை தாங்களேதான் தேர்ந்து கொள்வார்கள்

அப்படி ராஜேந்திரன் எனும் சீடரின் முயற்சியில் சேலம் அருகே குடில் அமைத்து வாழ்ந்த மாயம்மா அங்கேயே சமாதி அடைந்தார், இன்றும் அந்த சமாதி அங்கு உண்டு

ரமணர், காஞ்சி பெரியவர், யோகிராம் சுரத்குமார் போன்றோரின் வரிசையில் தேசமே வணங்கிய பெரும் ஞானசித்தர் மாயம்மா

அன்னை சக்தியின் அவதாரமாக அசாமில் பிறந்து பின் கன்னியாகுமரிக்கு வந்து ஒரு பிச்சைக்கார கோலத்தில் தவமிருந்து, மதமாற்றம் உச்சத்தில் இருந்த காலத்தில் அந்த புண்ணிய பூமியினை காத்து ஒரு காவல் தெய்வம் போல் இருந்தவர் மாயம்மா

அவரை பற்றி எழுத எவ்வளவோ விஷயங்கள், ஆன்மீகங்கள், வாயே பேசாமல் பேசவைத்த சம்பவம் உண்டு, இந்துமதத்தை காத்து நின்ற அதிசயம் உண்டு அதை எல்லாம் எழுத பெரும் தொடர் அவசியம்

ஒரே நாளில் ஒரே பதிவில் எழுதவும் முடியாது

கன்னியாகுமரியில் அவருக்கொரு மண்டபம் உண்டு, அங்கு செல்வோர் மாயம்மாவினை வணங்க தவறாதீர்கள், அப்படியே சேலம் பக்கம் சென்றாலும் அவர் சமாதியினை வணங்க தவறிவிடாதீர்கள்

அவர் பெரும் சித்தர், அன்னை சக்தியின் அவதாரம், கன்னியாகுமரியின் சூட்சும பலத்தையும் அந்த ஸ்தலத்தின் பெருமையினையும் அது இந்து மண்ணாக இருந்து இந்து பக்தியினை காக்கும் அவசியத்தையும் சொல்ல வந்தவர் மாயம்மா

அசாம் கேரள சக்தி வழிபாட்டின் இணைப்பும் ஆதாரமும் அவரே, ஒவ்வொரு தமிழக இந்துவும் அறிந்துகொள வேண்டிய அபூர்வ சித்தரும் அவரே
ravi said…
🌙 இரவு சிந்தனை 🌙
🌹 30.11.2022 🌹

🌹உலகத்திலேயே விலைஉயர்ந்த சிறந்த செயல் நம்பிக்கை🌹

🌹அதை அடைய பலவருடங்கள் ஆகலாம் அதுஉடைய சில நொடிகள் போதும்🌹

🌹வாழ்க்கையில் இன்னல்கள் வலிமையானது அதை விட வலிமையானது நீங்கள் உங்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை🌹

🌹மலையை பார்த்து மலைத்து விடாதீர் மலை மீதுஏறினால் அதுவும் உங்கள் காலடியில் கீழ்🌹

🌹நம்பிக்கையை இழந்து எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணாமல் இருங்கள்🌹

🌹இது முடிவு
இல்லை🌹

🌹வாழ்வில் நாம் முன்னேற வேண்டுமென்றால்🌹

🌹தோல்வி எனும் அடி கிடைத்தால் தான் வெற்றி எனும் விடை விரைவில் கிடைக்கும்👍

🤲இறைவா இன்றைய
30-11-2022🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲

🙏நாளைய பொழுது 01-12-2022 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏

🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏

⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா ⚜️

🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌

🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏

👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏

🙏இனிய இரவு வணக்கம்🙏
ravi said…
_*பூமியுடன் தொடர்பில் இருங்கள் :*_


நம்மில் எத்தனை பேர் தினமும் பூமியுடன் தொடர்பில் உள்ளோம் அதாவது வெறும் கால்களுடன் நிலத்தில் நடக்கிறோம் ? பதில் முக்கால்வாசி இல்லை என்பதே.

வெறும் கால்களுடன் நடந்ததால் நோய் தொற்றிக்கொள்ளும் என சொல்லியே காலனிக்கு (செருப்பு) பழகினோம், இப்பொழுது காலனியை விட shoes அணிவதை மார்டனகவும்,பெருமிதமாகவும் கொள்கிறோம்.

சரி இப்போது university of California மற்றும் journal of Environmental and Public Health இவை இரண்டு அமைப்புகளும் மனிதன் காலனி அணியாமல் வெறும் கால்களுடன் பூமியில் நடந்தால் மனித உடம்பில் ஏற்ப்படும் மாற்றம் பற்றி ஒரு ஆய்வு நடத்தின அந்த ஆய்வின் முடிவில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை பார்ப்போம்.

*ஆய்வறிக்கைப்படி நாம் பூமியில் வெறும் கால்களுடன் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்:*

புவி இயற்கையாகவே negative charge (-) கொண்டது மற்றும் anti-oxidants கொண்டது, எனவே வெறும் கால்களுடன் நாம் பூமியில் நடக்கும் போது உடல் செல்களை பாதிக்கும் தொடர் செயல்முறையான ஆக்சிஜனேற்றம் தடுக்கப்படுகிறது அதாவது உடலுக்கு நேரடியாக பூமியில் இருந்து vitamin "C" கிடைக்கிறது.

உடலில் எலக்ட்ரான் ஓட்டம் தடையில்லாமல் சீராக பரமரிக்கபடுகிறது.

எலும்பு,கல்லிரல்,மூளை(பார்கின்சன்) போன்ற உறுப்புகளை பாதிக்கும் நாள்பட்ட சிதைவு எனப்படும் Chronic Degenerative Diseases க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

மற்றும் வெறும் கால்களுடன் நடப்பதன் மூலம் chronic stress, உடல்வலி,தூக்கமின்மை,உடல் வீக்கம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது

தொடர்ந்து ஒருமணிநேரம் இடைவெளியில் பூமியில் தொடர்பில் இருப்பதன் மூலம் முகத்தில் இரத்தஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் சீராகபராமரிக்கப்படுகிறது, இதன் மூலம் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கிறது (முகத்திற்கு முகபொலிவிற்காக பயன்படுத்தும் cream அவசியம் இருக்காது)...

மிகமுக்கியமாக blood viscosity (((இரத்த பாகுத்தன்மை))குறைக்கப்படுகிறது இதனால் இதயநோய்கள் முற்றிலும் குறைக்கபடுகிறது.

எனவே இயற்கையோடு இயைந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள் இதுவே நமக்கும் நம் தலைமுறைக்கும் நல்ல வாழ்வியலை தரும் மற்றும் நாகரிகத்தால் வரும் நோய்களை களையெடுக்கும்....✍🏼🌹
ravi said…
முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்ட
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகில் உள்ள
#பேரங்கியூர்
#திருமூலநாதர் என்ற #மூலஸ்தானமுடையார் திருக்கோயில் வரலாறு:

விழுப்புரம் - திருச்சி செல்லும் சாலையில், விழுப்புரத்திலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் இருக்கிறது பேரங்கியூர் எனும் கிராமம். இங்கு மிகவும் தொன்மை வாய்ந்த திருக்கோயில் ஒன்று உள்ளது.

மூலவர்: மூலஸ்தானமுடையார்
அம்மன்: அபிராமி அம்மன்
ஊர்: பேரங்கியூர்
புராண
பெயர்: திருமுனைப்பாடி
வட்டம் : திருவெண்ணெய்நல்லூர்
மாவட்டம்: விழுப்புரம்
காலம்: 10 ஆம் நூற்றாண்டு (முதலாம் பராந்தக சோழன்)

ravi said…
அருள்மிகு திருமூலநாதர் எனும் திருப்பெயருடன் சிவபெருமான் குடியிருக்கும் இந்தக் கோயில், பாண்டியன் ராஜசிம்மனை வீழ்த்தி மதுரையை வெற்றிகொண்ட சோழன் முதலாம் பராந்தகனால் கட்டப்பட்டது. அளவில் சிறியதுதான் என்றாலும் சிற்ப அழகும், கட்டுமான நுட்பங்களும் கொண்ட இந்த ஆலயம், கிழக்கு நோக்கியது.

திருக்கோயில் அமைந்துள்ள பேரங்கியூர், முற்காலத்தில் பேரங்கூர் என்று வழங்கப்பட்டதாம். திருமுனைப்பாடி நாட்டில் அமைந்த இவ்வூர், பிரம்மதேயமாக அந்தணர்களுக்குத் தானமாக அளிக்கப்பட்ட தகவல், இங்குள்ள கல்வெட்டுகளில் உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அக்காலத்தில் இந்தக் கோயில் திருமூலஸ்தானமுடைய கோயில் எனவும், இறைவன் ‘திருமூலஸ்தானமுடைய மகாதேவர்’ எனவும் அழைக்கப்பட்ட தகவலும் உண்டு.

ravi said…
கல்வெட்டுகளில் பேரங்கூர் என்று குறிக்கப்பட்டுள்ள பேரங்கியூரில் முதலாம் பராந்தகன் கால சிவன் கோயில் ஒன்று உள்ளது. திருமுனைப்பாடி நாட்டில் பேரங்கூர் பிரம்மதேயமாக இருந்துள்ளது. நான்குவேதங்கள் தெரிந்த பிராமணர்களுக்கு தானமளிக்கப்பட்ட ஊராக இருந்துள்ளது. கல்வெட்டுகளில் கோயில் பெயர் மூலஸ்தானமுடையார் கோயில் என்றும், இறைவன் மூலஸ்தானமுடைய மகாதேவர் என்றும் குறிக்கப்படுகின்றன. பராந்தகன் தொடங்கி பல்வேறு அரசர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. திருமூலநாதர் கோயிலில் முற்காலச் சோழர்களின் எழில்மிகு சிற்பங்கள் அமைந்துள்ளன. அவை தனிச்சிறப்புடையவை. அர்த்தமண்டப தென்புறக் கோட்டத்தில் மானேந்திய விநாயகர் சிற்பம் காணப்படுகிறது. இவரின் தலைக்கு மேல் குடையும், இருபுறமும் சாமரங்களும் காட்டப்பட்டுள்ளன. விநாயகரின் நான்கு தோள்களில் முன்கையிரண்டில் மானும் அம்பும் ஏந்தியுள்ளார். இவ்வமைப்பு தனித்தன்மையுடையதாகும். விநாயகர் வேட்டுவக்கடவுள் என்பதை இது காட்டுகிறது. தென்புற தேவக்கோட்டத்தில் ஆலமர்ச்செல்வன் சிற்பம், வழக்கத்திற்கு மாறாக இடது காலை மடித்து வலது தொடையின் மீது வைத்தும், வலது காலைத் தொங்கவிட்டும் உடலை ஒருக்களித்தவாறு ஒருவாறு சாய்ந்த நிலையில் அமர்ந்துள்ளார். அர்த்தமண்டப வடபுறக் கோட்டத்தில் விஷ்ணு துர்க்கை உள்ளார். கருவறையின் மேற்குப்புற தேவகோட்டத்தில் திருமால் நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி காட்சியளிக்கிறார். கோயிலின் தென்புறத்தில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏழுகன்னியர், மூத்ததேவி (ஜ்யேஷ்டா தேவி), சண்டிகேஸ்வரர், விநாயகர் சிற்பங்களும் முற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த எழில்மிகு சிற்பங்களாகும். திருமூலநாதர் கோயில் கருவறை, அர்த்தமண்டபம் இரண்டும் கோயில் கட்டப்பட்டக் காலத்தவையாகும். முகமண்டபம் தற்காலத்தியது. இக்கோயில் தாங்குதளம் முதல் கொடுங்கை வரை கற்றளியாகும். விமானம் செங்கல்லும் சுதையும் கொண்டு கட்டப்பட்டதால் தற்போது விமானம் காணப்படவில்லை. தாங்குதளம் ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை என உபானம் தவிர்த்து அனைத்து உறுப்புகளையும் பெற்று விளங்குகிறது. இக்கோயில் முழுவதும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை வெளிப்புறச் சுவரில் அரைத்தூண்கள் நிற்கின்றன. கூரைப்பகுதியில் கொடுங்கைக்குக் கீழே பூதவரி செல்கின்றது. பூதகணங்கள் ஆடல்பாடலுடன் காட்டப்பட்டுள்ளன. கொடுங்கையில் கூடுமுகங்கள் காட்டப்பட்டுள்ளன. தேவகோட்டங்களின் மேற்புறம் மகரத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருவறை மேற்குச் சுவரில் தாங்குதளப் பகுதியில் அளவு கோல் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோல் 365 செ.மீ. நீளம் கொண்டது. சோழர்கள் காலத்தில் இந்த அளவுகோல் நிலம் அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

வரலாற்றுச் செய்திகள்:

ravi said…
கல்வெட்டுகளில் பேரங்கூர் என்று குறிக்கப்பட்டுள்ள பேரங்கியூரில பராந்தகன் கால சிவன் கோயில் உள்ளது. திருமுனைப்பாடி நாட்டில் பேரங்கூர் பிரம்ம தேயமாக இருந்துள்ளது. கோயில் பெயர் ரூலஸ்தானமுடையார் கோயில் என்றும் இறைவன் ரூலஸ்தானமுடைய மஹாதேவர் என அழைக்கப்பட்டுள்ளார். புராந்தகன் தொடங்கி பல்வேறு அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன.இராஜராஜன் காலத்தில் கோயில் பணிகளைக்யீ கவணிக்க ஸ்ரீருத்ர கணப்பெருமக்கள் நியமிக்கப்பட்டனர் என்று ஒரு கல்எவட்டு கூறுகிறது. கோயில் கருவறை, அர்த்தமண்டபம் இரண்டும் கோயில் கட்டப்பட்ட காலத்தவையாகும். முகமண்டபம் பிற்காலத்தது ஆகும்.இக்கோயில் அதிஷ்டானம் முதல் கபோதகம் வரை கற்றளி, பிறகு விமானம் செங்கல்லும் சுதையும்ளூ கொண்டு கட்டப்பட்டுள்ளது.

ravi said…
கருவறையில் மேற்கு சுவரில் அதிஷ்டானப் பகுதியில் அளவு கோல் ஒன்று காணப்படுகிறது. இக்கோல் 365 செ.மீ நீளம் கொண்டுள்ளது. சோழர் காலத்தில் இந்த அளவுகோல் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும். கோயிலில் வித்யாசமான எழில்மிகு சிற்பங்கள் உள்ளன. அர்த்த மண்டபத் தென்புற கோட்டத்தில் மானேந்திய விநாயகர் சிற்பம் உள்ளது. இவருக்கு பின்புறம் குடையும் இரு சாமரங்களும் உள்ளன. இவருடைய சதுர் புஜங்களில் மானும் அம்பும் ஏந்தியிருப்பது சிறப்பாகும். தென்புறக் கோட்டத்தில் உள்ள ஆலமர்ச் செல்வன் சிற்பம், வழக்கத்திற்கு மாறாக இடது காலை மடித்து வலது தொடையின் மீது வைத்தும், வலக்காலைத் தொங்க விட்டு அமர்ந்த நிலையில் உள்ளது.மேலிருகரங்களில் அக்ஷமாலையும் உடுக்கையும் கீழ்க்கரங்களில் சுவடிகளை ஏந்தும் சின்முத்திரை தாங்கியும் உள்ளன. கோயிலின் தென் புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஷப்தமாதர், ரூதேவி, சண்டிகேஸ்வரர், விநாயகர்ச சிற்பங்கள் எழில் மிக்கவை. தமிழக அரசு தொல்லியல் துறை இக்கோயிலைப் பராமரித்து வருகிறது.

கல்வெட்டு :

கல்வெட்டுகளில் பேரங்கூர் என்று குறிக்கப்பட்டுள்ள பேரங்கியூரில் முதலாம் பராந்தகன் கால சிவன் கோயில் ஒன்று உள்ளது. திருமுனைப்பாடி நாட்டில் பேரங்கூர் பிரம்மதேயமாக இருந்துள்ளது. நான்குவேதங்கள் தெரிந்த பிராமணர்களுக்கு தானமளிக்கப்பட்ட ஊராக இருந்துள்ளது. கல்வெட்டுகளில் கோயில் பெயர் மூலஸ்தானமுடையார் கோயில் என்றும், இறைவன் மூலஸ்தானமுடைய மகாதேவர் என்றும் குறிக்கப்படுகின்றன. பராந்தகன் தொடங்கி பல்வேறு அரசர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

சிற்பங்கள்:

திருமூலநாதர் கோயிலில் முற்காலச் சோழர்களின் எழில்மிகு சிற்பங்கள் அமைந்துள்ளன. அவை தனிச்சிறப்புடையவை. அர்த்தமண்டப தென்புறக் கோட்டத்தில் மானேந்திய விநாயகர் சிற்பம் காணப்படுகிறது. பக்கவாட்டில் ஒருக்களித்து தன்னுடைய இயல்பான லளிதாசனத்தை விட சற்று இடப்பக்கம் சாய்ந்தவாறு அமர்ந்துள்ளார். அவருடைய தோள்கள் மனிதனுடைய இயல்பான தோற்றத்தை ஒத்திருக்கிறது காணத்தக்கது. இவரின் தலைக்கு மேல் குடையும், இருபுறமும் சாமரங்களும் காட்டப்பட்டுள்ளன. விநாயகரின் நான்கு தோள்களில் முன்கையிரண்டில் மானும் அம்பும் ஏந்தியுள்ளார். இவ்வமைப்பு தனித்தன்மையுடையதாகும். விநாயகர் வேட்டுவக்கடவுள் என்பதை இது காட்டுகிறது. தென்புற தேவக்கோட்டத்தில் ஆலமர்ச்செல்வன் சிற்பம், வழக்கத்திற்கு மாறாக இடது காலை மடித்து வலது தொடையின் மீது வைத்தும், வலது காலைத் தொங்கவிட்டும் உடலை ஒருக்களித்தவாறு ஒருவாறு சாய்ந்த நிலையில் அமர்ந்துள்ளார். அர்த்தமண்டப வடபுறக் கோட்டத்தில் விஷ்ணு துர்க்கை உள்ளார். கருவறையின் மேற்குப்புற தேவகோட்டத்தில் திருமால் நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி காட்சியளிக்கிறார். கோயிலின் தென்புறத்தில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏழுகன்னியர், மூத்ததேவி (ஜ்யேஷ்டா தேவி), சண்டிகேஸ்வரர், விநாயகர் சிற்பங்களும் முற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த எழில்மிகு சிற்பங்களாகும்.

கோயிலின் அமைப்பு:

திருமூலநாதர் கோயில் கருவறை, அர்த்தமண்டபம் இரண்டும் கோயில் கட்டப்பட்டக் காலத்தவையாகும். முகமண்டபம் தற்காலத்தியது. இக்கோயில் தாங்குதளம் முதல் கொடுங்கை வரை கற்றளியாகும். விமானம் செங்கல்லும் சுதையும் கொண்டு கட்டப்பட்டதால் தற்போது விமானம் காணப்படவில்லை. தாங்குதளம் ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை என உபானம் தவிர்த்து அனைத்து உறுப்புகளையும் பெற்று விளங்குகிறது. இக்கோயில் முழுவதும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை வெளிப்புறச் சுவரில் அரைத்தூண்கள் நிற்கின்றன. கூரைப்பகுதியில் கொடுங்கைக்குக் கீழே பூதவரி செல்கின்றது. பூதகணங்கள் ஆடல்பாடலுடன் காட்டப்பட்டுள்ளன. கொடுங்கையில் கூடுமுகங்கள் காட்டப்பட்டுள்ளன. தேவகோட்டங்களின் மேற்புறம் மகரத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கருவறை மேற்குச் சுவரில் தாங்குதளப் பகுதியில் அளவு கோல் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோல் 365 செ.மீ. நீளம் கொண்டது. சோழர்கள் காலத்தில் இந்த அளவுகோல் நிலம் அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அமைவிடம் :

சென்னையிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள வழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் 10 கி.மீ தொலைவில் உள்ளது

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
ravi said…
*வாக்மீயே நமஹ*🙏
நல் வார்த்தைகளை உடையவர்

*சர்வஸக்திமயீ* ஸர்வமங்கலா ஸத்கதிப்ரதா🙏
சகல ஆற்றல்களையும் உடையவள்
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 416* 🙏🙏🙏started on 7th Oct 2021

*162 निर्मोहा - நிர்மோஹா.*
ravi said…
அலை பாய்கின்ற மனமோ தெளிவற்ற தன்மையோ இல்லாதவள் ...

எல்லா கெட்ட குணங்களும் நம்மிடம் தான் உள்ளன ...

மோகம் என்பது ஓர் மாயை

மாயை என்பது கானல் நீர் ..

கானல் நீர் என்பது இல்லாததை இருப்பதைப் போல் காண்பிக்கும் ..

அம்பாளோ இருப்பதை மறைப்பவள் ...

மறைப்பதை காப்பவள்

காப்பாற்றுபவற்றை நீக்குபவள்

நீக்குபவற்றை மீண்டும் பிரசவிப்பவள் ... 🤝🤝
ravi said…
கஞ்சன காஞ்சீ நிலயம் ஸ்லோகம் 2 தொடர்கிறது

*மூக பஞ்ச சதி*

*பதிவு 13...18th Nov 22*

*ஆர்யா சதகம் - ஸ்லோகம்*👌👌👌

*ஸ்லோகம் recap*💐💐💐
ravi said…
கஂசந காஂசீநிலயம் கரத்4ருதகோத3ண்ட3பா3ணஸ்ருணிபாஶம் |
கடி2நஸ்தநப4ரநம்ரம் கைவல்யாநந்த3கந்த3மவலம்பே3 ‖2‖
ravi said…
பெரியவாளையும் காமாக்ஷி அன்னையையும் ஒப்பிட்டுப் பேசுவதை போல் ஸ்லோகம் அமைந்துள்ளது

சாலப் பொருத்தம்!!!

உலக பசு பாச பந்தம் விலக அவள் பாதங்களை, பெரியவா இணையடி நீழலைப் பற்றிக் கொண்டால் சம்சாரம் எனும் சாகரத்தில் இருந்து விடுபடலாம் !

காஞ்சி என்ற ஸ்தலத்தில் தனது இருப்பிடமாகக் கொண்ட காமாக்ஷி,தனது நான்கு கைகளிலும், கரும்புவில், மலரம்பு,பாசம், அங்குசம்தரித்துத் தன் கனத்த குசங்களால் சிறிது வளைந்த திருமேனியுடன் உள்ள அவளை மனதால் நினைத்துப் பார்க்க வொண்ணாத மோக்ஷமெனும் ஆனந்தமான ஒன்றை மனதால் பற்றிக் கொள்கிறேன்.

தேவி ஸ்ரீவித்யா ஸ்வரூபினியாக வர்நிக்கப் படுகிறாள்

முதல் இரண்டு ஸ்லோகங்கள் லிளும் . காதி வித்தை எனப்படும் மன்மத வித்தை க வில் ஆரம்பமாகிறது

கனத்த குடங்களுடன் சாய்ந்த நிலையில் உள்ளதை பட்டரும் பணிமலர்ப்பூங்கணையும் கறுப்புச் சிலையும், மென் பாசாங்குசமும் கையில் அணையும் என வர்ணிக்கிறார் ..
,
பெரியவாளை காமாக்ஷியுடன் ஒப்பிட்டு இந்த ஸ்லோகத்தைப் பார்ப்பது மிகப் பொருத்தம்!

கையில் தண்டம், காஷாய வஸ்த்ரம் கமண்டலுவுடன் சித்தரித்தது மிக அருமை !!

எங்கும் பெரியவா எதிலும் பெரியவா என்ற தத்வம் இது!
ரொம்ப மனசுக்கு நிறைவாக இருக்கும் !!
TV Ganesh said…
வில்லெடுத்து வீழ்த்தினான் சீதையை சீதாராமன்

கவிதை சொல்லெடுத்து வீழ்த்தினீர் என்னை

நீங்கள் கவிதாராமன்

வில்லுக்கு சொல் கொடுத்த சொக்கத் தங்கமே

கவிதை சொல்லுக்கு WILL POWER கொடுத்த தமிழ் அங்மே வாழ்க

புல்லாங்குழலால் கிடைத்தால் ராதை கிருஷ்ணருக்கு

கவிதை சொல்லால் கிடைத்தீர் எங்களுக்கு
ravi said…
*கண்ணா*

நீ குழந்தையோ இல்லை கோமானோ

செய்யும் லீலைகள் மழலை அறியா கீதைகள்

மயக்கம்... உண்ட பின் தானே வரும் .. ?

உனை பார்க்கும் முன்னே வருவதேன்?

ஆனந்தம் எல்லாம் அடைந்த பின் தானே வரும் ..

உன் நாமம் சொன்னதும் வருவதேன் ?

துன்பங்கள் சோதனை தந்த பின்னே தானே விலகும் ...

கண்ணா என்றவுடன் சடுதியில் மறைவதேன் ?

மாடுகள் மயங்க மதி மயங்க பெண்கள் மயங்க பேய்களும் மயங்க பேதை நான் முழித்திருப்பது என்ன நியாயம் கண்ணா ..

தேவை இல்லை நான் என்றே வேறு தெரு சென்றாயோ ...

போதை தந்த கண்ணனே

இந்த சோதனை எனக்கல்ல என்னுள் இருக்கும் உனக்கே 💐💐💐
ravi said…
வாளாவாகிலும் காணகில்லார்

பிறர் மக்களை மையன்மை செய்து
தோளாலிட்டு அவரோடு திளைத்து

நீ
சொல்லப்படாதன செய்தாய்

கேளார் ஆயர்குலத்தவர் இப்பழி
கெட்டேன்!

வாழ்வில்லை நந்தர்க்கு-
ஆளாவுன்னை அறிந்து கொண்டேன்

உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
ravi said…
*❖ 37 அருணருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடிதடீ; =*

இளஞ்சிவப்பும் சிவப்புமாக ஒளிரும் வஸ்திரத்தைக் (ஆடை) கொண்டு இடையை-இடைச்
சரிவை அலங்கரித்தவள்🙏
ravi said…
*ஆய கியாதி நாமங்கள் உடையாள் சரண் அரண் நமக்கே* 🪔🪔🪔

*(கேசாதி பாத வர்ணனை) (25-40)*
ravi said…
அம்மா .. வியப்பானவள் நீ வியக்க வைப்பவள் நீ

இல்லா இடைக்கு சிவப்பு ஆடை கொண்டே சரி செய்கிறாய் ...

தென்றலுக்கு ஆடை அணிவிப்போர் உண்டோ ?

மின்னலுக்கும் சடை பின்னுவோர் உண்டோ ?

அன்னம் தன் நடை பயில பள்ளிக்கூடம் செல்வதுண்டோ ?

பார்க்கடல் யார் கடலிலும் பொருள் இரவல் கேட்பதுண்டோ ?

மதி மயக்கும் மதி நிதி கண்டு வியப்பதுண்டோ ..?

உதிக்கின்ற செங்கதிர் இருளை கொல்லாமல் எழுவதுண்டோ

பகலவன் வந்த பின் பனிக்கூட்டம் கோலாட்டம் கும்மாளம் போடுவதுண்டோ ...?

கொட்டும் மழையில் குடை எட்டி நின்றே வேடிக்கை பார்ப்பதுண்டோ ?

கர்ஜிக்கும் சிம்மம் கட்டெரும்புடன் உறவு வைப்பதுண்டோ ...

கமலம் என்றும் காதலிக்கும் ஆதவன் அதன் காதல் தனை வெறுப்பதுண்டோ

கவலையுடன் காத்திருக்கும் குவளை திங்கள் வந்தபின் கண்ணீர் சிந்துவதுண்டோ ?

நீ இன்றி இவ்வயகம் சுழல்வதுண்டோ ...?

என் மனது நீ அதில் சுழல்வதில் சுகம் பெற மறப்பதுண்டோ?

💐💐💐
ravi said…
முகுந்தமாலா 31, 32 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
முகுந்தமாலையில 31 ஆவது ஸ்லோகம் இன்னிக்குப் பார்க்கப்போறோம்

नाथे नःपुरुषोत्तमे त्रिजगतामेकाधिपे चेतसा

सेव्ये स्वस्य पदस्य दातरि परे नारायणे तिष्ठति ।

यं कञ्चित्पुरुषाधमं कतिपयग्रामेशमल्पार्थदं

सेवायै मृगयामहे नरमहो मूढा वराका वयम् ॥ ३१॥

நாதே² ந:புருஷோத்தமே த்ரிஜக³தாமேகாதி⁴பே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி பரே நாராயணே திஷ்ட²தி ।
யம் கஞ்சித்புருஷாத⁴மம்

கதிபயக்³ராமேசமல்பார்த²த³ம்
ஸேவாயை

ம்ருʼக³யாமஹே நரமஹோ மூடா⁴ வராகா வயம் ॥ 31 ॥
ravi said…
அவா எமபடர்கள் கிட்ட ‘இவனை நாங்க வைகுண்டத்துக்கு கூட்டிண்டு போகப் போறோம்’ ன்னு சொல்றா.

யமதூதர்களுக்கு ஆச்சர்யமா இருக்கு.

‘இவனை எப்படி நீங்க வைகுண்டத்துக்கு கூட்டிண்டு போக முடியும்? ன்னு கேட்ட உடனே ‘

இவன் கடைசி நிமிஷத்துல நாராயண நாமத்தை சொன்னான்.

அதனால இவன் பாபமெல்லாம் போயிடுத்து.

நீங்க எமதர்ம ராஜாவையே போய் கேட்டுக்கோங்கோ’ ன்னு சொல்லிட்டு அஜாமிளனை கூட்டிண்டு போயிடறா.

இவா எமதர்ம ராஜாகிட்ட போய் கேட்ட போது ‘ஆமாம். நாமத்தோட மஹிமை அப்பேற்பட்டது.

எவன் ஒருவன் உயிர் பிரியும் தருவாயில் நாமத்தை சொன்னால் அவனை பகவான் தன்னைச் சேர்ந்தவனா நினைச்சு காப்பாத்தறார்.

இனிமேல் அந்த மாதிரி விஷ்ணு பக்தர்கள் பக்கத்துல போகாதேங்கோ’ ன்னு சொல்றார்.
ravi said…
*பெருமாளின் அருள்*

நான் மிகவும் சந்தோஷமாக
இருக்கிறேன நம் குடும்பமும் உறவினரும் உலகமும் சந்தோஷமாக இருக்கும் *எம் பெருமானின் அருளால்.*

🌺 நான் நல்ல செல்வத்தோடு
இருக்கிறேன் இப்படி இருக்க என்னிடம்
என்ன உள்ளது ?

#இதன்_ரகசியம்_சொல்லவா . . . . .

🔯 என்னுடைய பணத்தேவைகளைக்
கவனித்துக்கொள்ள
திருக்கோளூர்
#வைத்தமாநிதி_பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

🔯என்னுடைய உடல் ஆரோக்கியத்தை
அற்புதமாக கவனிக்க
திருஎவ்வுள்ளூர்
#வைத்தியர்_வீரராகவன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

🔯என் மனதில் கவலைகள்
உண்டாகும்போது, 'கவலைப்படாதே'
என்று சொல்ல
திருக்கச்சி
#பேரருளாளன்_வரதராஜன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

🔯எனக்கு குறைவில்லாமல்
அழகழகான, அற்புதமான
வஸ்திரங்கள் எப்பொழுதும் தர
த்வாரகாநாதன்
#ரண்_சோட்_ஜீ
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

🔯எனக்கு வேண்டிய
ருசியான,ஆகாரத்தை,
என் ஆயுள் முழுவதும் தர
பூரி நாயகன்
#ஜகந்நாதன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

🔯என் குடும்பத்தை என்றும்
சந்தோஷமாகக் காப்பாற்ற,
திருமலைமேல்
#திருப்பதி_ஸ்ரீநிவாஸன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

🔯என்னை விரோதிகளிடமிருந்து
எல்லா சமயங்களிலும் காப்பாற்ற,
அஹோபிலம்
#மாலோல_நரசிம்மன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

🔯என் வாழ்க்கையை
சரியான பாதையில் நடத்த
திருவல்லிக்கேணி
#பார்த்தசாரதி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

🔯என்னை இரவில்
சுகமாக தூங்க வைக்க
திருப்புளியங்குடி
#பூமிபாலர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

🔯என்னை காலையில்
அன்போடு அழகாக எழுப்ப
திருக்குறுங்குடி
#சுந்தர_பரிபூரண_நம்பி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

🔯என்னோடு ஆனந்தமாக
குள்ளக்குளிர குடைந்து நீராட
யமுனைத்துறைவன்
#பாங்கே_பிகாரி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

🔯இன்னும் யாரெல்லாம்
என்னோடு எனக்காக இருக்கிறார்கள்
தெரியுமா ?

🌺 சொல்கிறேன் . . .
நீயும் தெரிந்து கொள் !
கொஞ்சம் பொறுத்திரு . . .

🍑 நீ இவர்களை எல்லாம்
உன்னோடு வைத்துக்கொண்டாயா ?

🍂 இன்னும் பலர் இருக்கிறார்கள் . . .
அவர்களையும் சொல்கிறேன் கேள் !

🙏 நான் சொன்னபடி செய்யவும்,
என்னோடு எல்லா இடத்திற்கு வரவும்,
திருவெண்பா
#சொன்ன_வண்ணம்_செய்த_பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

🙏என்னை உரிமையோடு தொட்டுப்
பேசவும்,என்னோடு விளையாடவும்
பண்டரீபுரம்
#விட்டலன்_பாண்டுரங்கன்
என்னோடு எனக்காக இருக்கிறான் . . .

🙏எனக்கு பொழுது போகாத
சமயங்களில் என்னோடு உட்கார்ந்து பேச
தென்திருப்பேரை
#மகர_நெடுங்குழைக்காதர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

🙏எனக்கு வேண்டிய உபதேசங்களைச்
சொல்லித்தரவும்,என்னைக் குளுமையாக
வைக்கவும் எப்பொழுதும்
பத்ரிகாஸ்ரமம்
#நாராயணன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

🙏எனக்கு எல்லா ஆழ்வார்களையும்
தரிசிக்கவைப்பதற்கும்,
பூமியில் வாழ எல்லா வளங்களையும்
தருவதற்கும்,
ஸ்ரீரங்கம்
#ரங்கராஜன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

🙏 நான் கொஞ்சிமகிழவும்,
எனக்கு அன்புத்தொல்லை தரவும்,
குருவாயூர்
#உன்னி_க்ருஷ்ணன் குருவாயூரப்பன்
என்னோடு எனக்காக இருக்கிறான் . . .

🙏என்னோடு கடற்கரையில்
காலார நடந்துகொண்டு,
வயிறு குலுங்க சிரிக்க வைக்க,
திருக்கடல்மல்லை
#ஸ்தல_சயனப்_பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

🙏என்னிடம் தைரியமாகப் பொய்
சொல்ல,என்னை உரிமையோடு
மத்தால் அடித்துத் திருத்த,
உடுப்பி
#ஸ்ரீக்ருஷ்ணன்
என்னோடு எனக்காக இருக்கிறான் . . .

🙏எனக்காக தூது செல்ல,
எனக்காக வாதாட,
திருப்பாடகம்
#பாண்டவர்_தூத_பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

இப்படியாக இன்னும் பலபேர்
என்னோடு எனக்காக இருக்கிறார்கள் !

🍁 அதனால் என் தேவைகளைப் பற்றி,

🍁என் வாழ்க்கையைப் பற்றி,

🍁என் எதிர்காலத்தைப் பற்றி,

🍁என் மரணத்தைப் பற்றி,

🍁என் குடும்பத்தைப் பற்றி,

🍁என் கௌரவத்தைப் பற்றி

🍒நான் யோசிப்பதேயில்லை . . .

ஆஹா....சொல்லாமல் விடமுடியுமா . . .

🔯எனக்கு மோக்ஷத்தைத் தர,
என் மனதிற்கு சாந்தி தர,
எனக்கு புகழைத் தர,
திருவனந்தபுரம்
#ஸ்ரீ_அனந்தபத்மநாப_ஸ்வாமி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .

🍒இத்தனை பேர்
என்னோடு இருக்க,
நான் எதைப்பற்றி
கவலைப்படவேண்டும் ?

🔯 நான் #ஆனந்தத்தில்
நீந்திக் களித்துக்கொண்டிருக்கிறேன் . . .

🔯எப்பொழுதும் ஆனந்தமாகவே இருப்பேன் . . .

🔯எல்லா ஜன்மங்களிலும் நிச்சயம்
ஆனந்தமாகவே இருப்பேன் . . .

🔯 நீயும் இவர்களை உன்னோடு
வைத்துக்கொள் !

🔯 உன் வாழ்க்கையும் நிச்சயம்
#ஆனந்தமாகவே_இருக்கும் . . .

ravi said…
*தினம் ஒரு திவ்ய பிரபந்தம்*

சீதக்கடலுள் அமுதன்ன தேவகி - பெரியாழ்வார் திருமொழி 1.2

பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் இரண்டாம் திருமொழி இந்த 'சீதக் கடலுள் அமுதன்ன தேவகி' என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள்.

இந்தப் பத்துப் பாசுரங்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்திருந்த போது அவனது திருவுறுப்புகளின் அழகினை அங்கிருக்கும் ஆய்ச்சியர்களை அழைத்து ய்சோதை காட்டியதைக் கூறுகிறார் பெரியாழ்வார்.

***

பெரியாழ்வார் திருமொழி 1.2:

பாசுரம் 5

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப்பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே
குவிமுலையீர் வந்து காணீரே

முன்னொரு காலத்தில் பெரும் வீரத்துடன் எதிர்த்து வந்த இரணியனின் மார்வினை சிங்கப்பிரானாகி வந்து கீண்டவன் இவன். இப்போதோ பெரும் ஒளியுடன் வந்த பேய்ச்சியாம் பூதனையின் விஷம் தோய்ந்த முலையை சுவைத்து உண்பவன் போல அவள் உயிரையும் பசையற உண்டான். அச்செயல்களை எல்லாம் செய்தவன் ஒன்றும் அறியாத சிறு பிள்ளை போல் இங்கே உறங்குகிறான். அவனுடைய திருத்தொடைகளின் அழகினை காணுங்கள். குவிந்த முலையை உடைய பெண்களே வந்து பாருங்கள்.

***

சென்ற பாட்டில் ஆய்ச்சியர் கண்ணனின் முழந்தாளைக் கண்டு அனுபவித்ததைப் பாடினார் ஆழ்வார். இந்த பாசுரத்தில் அவனது திருத்தொடைகளின் அழகினைப் பாடுகிறார். திருத்தொடைகளைக் கண்டவுடன் முன்னொரு நாள் இரணியனைக் கொல்லும் போது இதே தொடைகளின் மேல் கிடத்தித் தானே கொன்றான் என்று நினைவிற்கு வந்தது போலும்.


*நாளை அடுத்த பாசுரங்களை சேவிப்போம்*

ravi said…
💐💐💐🙏🏻🌺🌺🌺

*இன்றைய சிந்தனை*
…………………………………………….....................

*"போராட்டமே வாழ்க்கை’’*
………………………….............................

போராட்டத்தைச் சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ இயலாது. பிறப்பு முதல் இறப்பு வரை போராட்டம் இருந்துக் கொண்டே தான் இருக்கிறது...

பிறந்த குழந்தைக் கூட அழுகை என்னும் புரட்சி செய்து தான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது...

போராட்டத்தில் பிறந்து, போராட்டத்தில் வளர்ந்து, போராட்டத்தில் மடிவது தான் வாழ்க்கை...

வாழ்க்கையில் தங்கள் கொள்கைகளை நிலைநிறுத்திக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் போராட வேண்டியுள்ளது...

மனித வாழ்வே அறைகூவல்  நிறைந்தது தான். மனித குலம் காடுகளில் தான் தனது வாழ்வைத் தொடங்கியது. ஒவ்வொரு கணமும் மரணத்தை எதிர்த்துப் போராடியே தன்னைத் தக்க வைத்துக் கொண்டது...

கொடிய விலங்குகள், மலைப்பாம்புகள், நச்சுப் பூச்சிகள் போன்றவற்றை எதிர்த்தே வாழ்ந்து வந்தான் மனிதன். இதற்கிடையே மழை, வெள்ளம், புயல், பூகம்பம் போன்றவையும் மனிதனை எதிர்த்துப் போர் புரிந்தன...

சரியான நேர்மையான வாழ்க்கைப் பயணப் பாதை, முட்கள் நிறைந்த கரடுமுரடான பாதை தான்...

இந்தப் பாதையில் முட்களாகவும், கரடுமுரடான கற்களாகவும், பிறரின் அவமானப் பேச்சுக்களும், பழிச்சொற்களும், நியாயமற்ற விமர்சனங்களும் தான் நிறைந்திருக்கும்...

கப்பல் வடிவமைக்கப்படுவது கரையில் நிறுத்தி வைக்கப்படுவதற்கு அல்ல...!
வாழ்க்கையும் கரையில் நின்று வேடிக்கைப் பார்ப்பதற்கு அல்ல...! வாழ்க்கைக்கு வழிகள் ஆயிரம் இங்கே இருக்கின்றன...

வாழ்வில் இருந்து விலகி ஓடும் மனிதர்களை விட, எதிர்த்து நின்று போராடுகிறவர்களே உயர்ந்த இடம் பெறுகின்றனர்...

வாழ்க்கைப் பாதையில் பயணிக்கின்றோம் என்றால், நாம் நற்சிந்தனைகளாலும், நற்செயல்களாலும் மலரும் புதிய பயனுள்ள மலர்களால் பாதையை நிரப்ப வேண்டும்...

*ஆம் நண்பர்களே...!*

வாழ்க்கை என்பது ஒரு போராட்டமே. போராட்டம் இல்லாமல், எதிலும் வெற்றி பெறுவது குதிரைக் கொம்பே...!

போராட்டக் களத்தில் காயப்படுவதுண்டு. நமக்கும் வாழ்வில் காயங்கள் வரலாம். சில ஆறாத வடுவையும் ஏற்படுத்தலாம்...

மனம் தளர்ந்து விட வேண்டாம்...

ravi said…
🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖


*Good morning friends*


*Today's word ✍🏻*


*RENAISSANCE*

*(மறுமலர்ச்சி)*


meaning..... a  renewed interest or rebirth of something...


1.   The creation of the Internet brought about a *renaissance* in communication.


2.   The arrival of a large number of immigrants into the community is likely to create a cultural *renaissance* in food and music.


Happy learning.
English vocabulary.


🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖
1 – 200 of 316 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை