சிவானந்தலஹரி-19 -என் தலையில எழுதினதே இருக்கட்டும். அதை அனுபவிக்கட்டும்னு விட்டுட்டியோ??
ஏ பரமேஸ்வரா! தங்கள் திருவடிகளை நான் தரிசனம் ஏது விட்டால் தங்கள் கடாக்ஷம் என்மேல் விழுந்துவிடும். அதற்குமேல் எனக்கு யாதொரு கவலையும் இராது. அந்தத் திருவடிகளில் தரிசனமே அரிதாக இருக்கிறதே! நான் என்ன செய்யலாம் ? என சிவனிடம் அரற்றும் காட்சி இது !
நான் பல ஜன்மாவில் பண்ணிய புண்ணியத்தால் தாங்கள் எண்ணிடமுள்ள கருபையாலோ தாங்கள் என் முன் ஆவிர்பவித்தபோதிலும் தங்கள் தரிசனத்துக்கு போட்டி போட்டுக்கொண்டு எனக்கு முன் நிற்கும் தேவர்களின் வரிசை, நான் தங்களின் சரணங்களை தரிசனம் செய்ய முடியாதபடி என்னை மறைத்து விடுகிறதே, நான் என் செய்வேன்? என்று மனதின் நினைப்பை இங்கு அரற்றுகிரார் !!
சுகாஸ்வரோபியான ஏ பரமேஸ்வரா, ஜனங்களுக்கு தாங்கள் ஒருவரே யாவற்றையும் விட சிறந்த மோக்ஷம் என்ற பழத்தைக் கொடுக்கக் கூடியவராவீர்! ஏனென்றால் விஷ்ணு முதலிய தேவர்கள் தங்கள் மூலமாகவே கிடைத்த வைகுண்டம் முதலிய உயர்ந்த ஸ்தானத்தை, பெற்றவர்களாக இருந்து கொண்டு மறுபடியும் தங்களையே வணங்குகிறார்கள் ! தங்களுக்கு பக்தர்களிடையே அபிப்ராயத்தை அனுசரித்து இருக்கும் தன்மைதான் எவ்வளவு ? அடை அளவிடவே முடியாது ! எப்போழுதுதான் , கருணை ததும்பும் விழிகளால் அஹங்காரத்திலிருந்து என்னைக் காத்தருளுவீர்?
என்ற அழகான பிரார்த்தனை !
ஓம் நம: சிவாய
பரமேஸ்வரனின் பாத தியானத்தால், அடைய முடியாத மோக்ஷமும் சித்திக்கும், மற்றும் ஏனைய க்ஷேமங்களும் கை கூடும்.
சிவானந்தலஹரியில அடுத்த இரண்டு ஸ்லோகங்கள் பார்ப்போம். 19ஆவது ஸ்லோகம்.
து³ராசாபூ⁴யிஷ்டே² து³ரதி⁴பக்³ருʼஹத்³வாரக⁴டகே
து³ரந்தே ஸம்ஸாரே து³ரிதனிலயே து:³க²ஜனகே ।
மதா³யாஸம் கிம் ந வ்யபனயஸி கஸ்யோபக்ருʼதயே
வதே³யம் ப்ரீதிஸ்சேத்தவ சிவ க்ருʼதார்தா:² க²லு வயம் ॥
ன்னு ஸ்லோகம் து³ராசாபூ⁴யிஷ்டே² – கெட்ட ஆசைகள் நிறைந்ததும், து³ரதி⁴ப – அதிபர்கள்னா bosses. துரதிப: னா கெட்ட அதிகாரிகள். க்³ருʼஹ த்³வார க⁴டகே – வீட்டு வாசல்ல போய் நின்னுண்டு, இந்த கெட்ட ஆசைகள் என்ன பண்றதுன்னா, யாராவது ஏதாவது பணம் கொடுப்பாளான்னு அவாளோட வீட்டு வாசல்ல போயி நிறுத்திடறது.
அப்படி நின்னா துரந்தே – அதோட முடிவு எப்படி இருக்குன்னா, அதோட முடிவும் நன்னாயில்ல. அவமானப் பட வேண்டியிருக்கு. து³ரிதனிலயே – பாவத்துக்கும் இருப்பிடமா இருக்கு.
அவா சொன்ன காரியங்கள் எல்லாம் நாம பண்ணினா பாபம் வந்து சேர்றது து:³க²ஜனகே – இதுலேருந்து பணம் சம்பாதிச்சுண்டு வந்து சுகப்படப் போறோமோன்னு நினைக்கறோம். ஆனா அது துக்கத்துலதான் கொண்டு போய் விடறது. துன்பத்தை விளைவிப்பதான ஸம்சாரம் – இப்பேற்பட்ட பிறவிச் சூழலில் மதா³யாஸம் கிம் ந வ்யபனயஸி – நான் சுத்தி வந்துண்டிருக்கேன்.
இந்த ஆயாசம் என்னுடைய இந்த துன்பத்தை, களைப்பை, நீ ஏன் போக்க மாட்டேங்கற? கஸ்யோபக்ருʼதயே – கஹ ன்னா பிரம்மா. பிரம்மாவுக்கு அவருக்கு உபகாரம் பண்ணலாம், அவர் சொன்ன வார்த்தையே இருக்கட்டும். என் தலையில எழுதினதே இருக்கட்டும். அதை அனுபவிக்கட்டும்னு விட்டுட்டியோ! ன்னு சொல்றார் – ஹே சிவ! வத – நீயே சொல்லு அயம் ப்ரீதிஸ்சேத்தவ – இது உனக்கு ப்ரீதியா இருந்தா க்ருʼதார்தா:² க²லு வயம் – நாங்கள் ரொம்ப கொடுத்து வெச்சவான்னு சொல்றார். அலுத்துக்கற மாதிரி சொல்றார்.
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே.
ன்னு சுந்தரர் பாடின மாதிரி நீங்க நன்னா வாழ்ந்துண்டிருங்கோ. நான் இப்படி கஷ்டத்தை சொல்றேன். ஒண்ணும் பண்ணலியே! ன்னு கேட்கறார்.அந்த மாதிரி இங்க என்னோட கஷ்டத்தை நீங்க கண்ணெடுத்து பார்க்கமாட்டேங்கறேள். சிவ க்ருʼதார்தா:² க²லு வயம் – இதுதான் உங்களுக்கு த்ருப்தினா சரி. என்ன பண்றது? அப்படியாவது உங்க த்ருப்திக்கு நாங்க காரணமாக இருக்கோம். இந்த மாதிரி அலையறதுல உங்களுக்கு த்ருப்தினா சரி! இப்படியே இருக்கோம்! என்கிற மாதிரி சொல்றார்.
இது அப்படியே இருக்கட்டும்னு அர்த்தம் இல்லா. இதுலேருந்து எங்களை விடுவிக்கணும் பெருமானேன்னு பிரார்த்தனை. பரமேஸ்வரன் ஒரருத்தன் நினைச்சா தான் ஏதோ கோடியில ஒருத்தர் அந்த மாதிரி இந்த பந்தங்கள்ல இருந்து விடுபட முடியும். முக்கியமா மஹான்கள் எல்லாருமே இதைச் சொல்றா.
இந்த காலத்துல சம்பாதிச்சாதான் சாப்பிட முடியும், அதுக்காக படிப்புங்கிற மாதிரி ஒரு காலத்துல வந்து நாம நிக்கறோம். 50 வருஷம் முன்னாடி கூட பிராம்மணாள் நீச சேவகம் போகக் கூடாது. முடிஞ்ச வரைக்கும் தன்னிச்சையா இருக்கணும்.
நம்முடைய படிப்பை வெச்சுண்டு நாம தைர்யமா இருக்கலாம்னு மஹா பெரியவாளெல்லாம் சொல்லிண்டிருந்தா. இப்ப டாலர்ல சம்பாதிச்சா அதுதான் மதிப்பாயிருக்கு. ஸ்வாமிகளை நீ பாகவதமே படிச்சிண்டிருன்னு அவ்ளோ கஷ்டம் இருக்கும்போது கூட மகா பெரியவா அவரை வந்து அந்த வேலை என்ற பந்தத்துலருந்து விடுவிச்சார்.
ஏன்னா அவருடைய உயர்ந்த நன்மையை நினைச்சதுனால அப்படி சொன்னா. அப்படி சொல்லக் கூடியவர்கள் மஹான்கள் தான். ரமண பகவான் முருகனார்ங்கிறவரை அவருடைய பதவியிலேருந்து விலகி தன்னிடத்துலேயே இருக்கும்படி பண்ணார். அது உலகத்துக்குப் புரியாது. ஆனா அதுனால குடும்பத்துக்கு கஷ்டமோ ஒண்ணும் வராது. என்ன தலையில எழுதியிருக்கோ அது படி நடக்கும்.
அப்படி மஹான்கள் அந்த பந்தத்துல இருந்து விடுவிக்க முடியும். பரமேஸ்வரன் தான் விடுவிக்க முடியும். அப்படி என்னை விடுவிக்கணும்ங்கிற பிரார்த்தனையை இந்த மாதிரி ரொம்ப இரக்கப்படும்படியான வேண்டுதல் வெச்சு ஆதி சங்கரர் சொல்றார். காமாக்ஷிகிட்ட மூக கவியும்
ஜனனி பு⁴வனே சங்க்ரம்யேऽஹம் கியந்தமனேஹஸம்
குபுருஷகரப்⁴ரஷ்டைர்து³ஷ்டைர்த⁴னைருத³ரம்ப⁴ரி: ।
தருணகருணே தந்த்³ராசூன்யே தரங்க³ய லோசனே
நமதி மயி தே கிஞ்சித்காஞ்சீபுரீமணிதீ³பிகே ॥
ன்னு சொல்றார். ஜனனி – அம்மா பு⁴வனே சங்க்ரம்யேऽஹம் – இந்த மூவுலகத்துலயும் சுத்தி சுத்தி வரேன். எதுக்காகன்னா குபுருஷகரப்⁴ரஷ்டை: நிறைய கெட்ட புருஷர்களோட கையிலேருந்து நழுவி விழும் து³ஷ்டைர்த⁴னைருத³ரம்ப⁴ரி: – அவன் என்னென்னமோ பண்ணி சம்பாதிச்ச பணம். அந்த கெட்ட பணத்தை வாங்கிண்டு அதை வெச்சு வயிற்றை நிரப்பனும்ங்கிறதுக்காக நான் இப்படி சுத்தி சுத்தி வரேன்.
உலகம் முழுக்க சுத்திண்டிருக்கேன் கியந்தம் – எவ்ளோ நாள்தான் இப்படி இருக்கப் போறேன் தருணகருணே – கருணையே மிகுந்த உன் கடாக்ஷம் தந்த்³ராசூன்யே – எப்பவும் சோம்பல் இல்லாத உன்னோட உள்ள துருதுருன்னு கடாக்ஷம்கிறார்.
அதாவது என்ன அர்த்தம்னா அந்த கடாக்ஷம் ஒருத்தனுக்கு கிடைச்சுதுன்னா,அவனுக்கு இந்த மாதிரி எல்லார் வீட்டு வாசல்ல நின்னு வயிற்றை நிரப்பற நிலைமை மாறிடும். எவ்ளோ பணக்காரனா இருந்தாலும் ஒரு வாட்டி கொடுப்பான். இரண்டு வாட்டி கொடுப்பான். அப்புறம் அலுத்துப்பான்.
ஆனா காமாக்ஷியினுடைய கடாக்ஷம் சோம்பல் இல்லாமல் நமக்கு கொடுக்கும். அதுனால அம்மா, அந்த உன்னுடைய தரங்க³ய லோசனே – அலை போன்ற உன்னுடைய கடாக்ஷத்தை நமதி மயி தே கிஞ்சித் – என்மேல கொஞ்சம் போடக் கூடாதா?
காஞ்சீபுரீமணிதீ³பிகே – காஞ்சிபுரத்துக்கு ஒரு மணிதீபம் போல விளங்கும் ஹே காமாக்ஷி உன்னுடைய கடாக்ஷம் எனக்கு கிடைச்சுடுதுன்னா இந்த மாதிரி கண்ட பேர் கிட்ட நான் போய் நிக்கற நிலைமை வராதேன்னு சொல்றார்.
மஹான்கள் எல்லாரும் அந்த பிரார்த்தனை பண்றா. உலகத்தாரை நம்ப வேண்டியதில்லை. நாம் பகவானை நம்பினா நமக்கு ஒரு வாழ்க்கை கொடுப்பார். தலையில எழுதியிருக்கிற சுக, துக்கங்கள் அந்தந்த வேளைக்கு வரும். இந்த நம்பிக்கை, தைரியம் வந்து, ஒருத்தரை பார்த்தாதான் அந்த மாதிரி ஒரு சத்குருவை பார்த்து, அவா நீ இந்த வழிபாடு பண்ணுன்னு சொல்லி அதை நாம கெட்டியா பிடிச்சிண்டு பண்ணினா தான் அந்த இரண்டு மணிநேரம் தினம் பண்றதுக்கு இடம் கொடுக்கறது.
பகவான் வழிவிடறார். இது பண்ண முடியறதுன்னு தெரியும். இதை மூணு மணிநேரம் ஆக்கினா இன்னும் மேல மேல பஜனம் பண்ணினா அதனால ஒண்ணும் ஆபத்தே இல்ல. அதனால ரொம்ப சம்பத்துதான். அதுனால ரொம்ப க்ஷேமம்ங்கிறதை மஹான்கள் சொல்லி கொடுப்பா. நம்பி நாம பண்ணினோம்னா நாம் அதை அனுபவிக்கலாம்.
என் தலையில் எழுதிய பிரம்மாவுக்கு உபகாரம் செய்யும் பொருட்டே கெட்ட ஆசைக்கிடமானதும், கெட்ட அதிகாரிகளின் வாயிலில் நிற்கச் செய்வதும், பாபத்திற்கிடமாகி கெட்ட முடிவையே அளிப்பதுமான இப்பிறவிச் சுழலில் நான் அலுப்புறுவதை அகற்றாதிருக்கிறாயா? இப்படி செய்வதால் உனக்குப் ப்ரீதி ஏற்படுமானால் அந்தப் ப்ரீதிக்கு காரணமாகி கடைத்தேறியவர்களாகிறோம்! இதில் ஐயமில்லை.
AA :
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.



Comments
பாலும் வெண்ணெயும் எடுத்து வைத்தேன் கண்ணனுக்கே ..
வருவேன் என்றான் இன்னும் காணவில்லையே!!
தங்கத்தொட்டிலிலே தாழம்பூ மெத்தையிலே மயில் இறகை பரப்பி வைத்தேன் கண்ணன் அவன் கண் மூடுவே ...
வருவேன் என்றான் இன்னும் வரவில்லையே !!
வாரணங்கள் ஆயிரம் பாடி நின்றேன் ..
திருப்பாசுரங்கள் மனமெங்கும் நிரப்பி வைத்தேன் ...
தீர்த்த கரை வந்து விட்டேன் என்றான் கண்ணன் இன்னும் வரவில்லையே !!
வான் நிலவை அரைத்து அதில் கார்மேகங்களை சற்றே கலக்கி வைத்தேன் ...
தித்திப்பாய் இருக்க பாற்கடல் நீர் தெளித்தேன் ..
நிலா சோறு ஊட்டிடவே...
இரண்டு கலவம் உண்பேன் என்றான் கண்ணன்
உண்ண இன்னும் வரவில்லையே !!
தாரகைகளை அழைத்து தரமாய் மாலை தொடுத்தேன் ...
அணிந்து கொள்ள வருவேன் என்றான் கண்ணன் இன்னும் வரவில்லையே !!
மலை தூக்கியவன் என் சுமை தூக்க வருவேன் என்றான் ..
காலிங்க நடம் புரிந்தவன் என் மனம் எனும் அரங்கத்தில் நடம் புரிவேன் நித்தம் என்றான் ...
சொன்னவன் வரவில்லையே !!
கண்ணா நீ உண்மை தவிர எல்லாம் பேசுகிறாய்
நான் உன்னைத் தவிர வேறு நாமம் சொல்வதில்லை ..
பல முரண்பாடுகள் கொண்ட நம் நட்பு மட்டும் என்றுமே வாடுவதில்லையே கண்ணா ...
இது என்ன அதிசயம் கண்ணா !!💐💐💐
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
*அம்மா !*
மாத்திரைகள் பல சாப்பிட்டு
மயக்கும் போதைகள் பல உள் அனுப்பி
உறக்கம் வேண்டி தவிப்போர் பல கோடி !!
உபாதைகள் ஒரு பக்கம்
உறங்கும் உண்மைகள் ஒரு பக்கம் ... !!
உன் அருள் இன்றி உறக்கம் வந்திடுமோ ?
உன் கருணை இன்றி அவை எங்கள் கண்களை தழுவிடுமோ ?
நித்திரை வடிவில் உறைபவள் நீயே
பத்தரை மாற்று சொர்ணமும் நீயே
சித்திரை ஆரம்பித்து எத்திரையும் கிழித்து ஏறிபவளே
கவசம் நீயே என்றால் காலன் அருகில் வருவானோ ... ??
உன் பாலன் இவன் என்றே அணைத்து ஆசி தருவானே பல கல்பங்கள் வாழ் நீயே என்றே !!!
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
அம்மா ...
ஞானம் ஓர் உருவம் எடுத்து வந்ததோ வேழம் என்றே பேர் கொண்டதோ ... !
பவழங்கள் அணி வகுத்து வந்ததோ !
உன் இதழ்கள் தனில் தஞ்சம் என்று புகுந்ததோ !
அன்னங்கள் அழகு நடை புரிந்தே
நீ அணியும் கால் கொலுசுவிடம் தோழமை கொண்டதோ ... !!
ஒளிர் விடும் உன் நக காந்தி உதிக்கும் சூரியனுக்கு ஒளி தந்து மகழ்ந்ததோ ..
காது வரை நீண்ட உன் கண்கள் நிலவுக்கு குளிமை கற்று தந்ததோ!
புத்தி தந்து ஞானம் தந்து கருணை தந்து காட்சியும் தந்தே
என்னை கடனாளி ஆக்கியது ஏனோ இன்று வரை புரிந்திலேன் 🙏
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
அம்மா !
எல்லா உயிர்களிலும் சத்தாக இருக்கிறாய் ...
உணராதவர்கள் உயிர் வாழும் பிணங்கள் அன்றோ
தாவரங்களை , மரங்களை, செடி கொடிகளை, பறப்பன ,ஊர்வன , மிதப்பன இவையனைத்தையும் கேட்டேன் ...
வாழ்வது உன் அருளால் மட்டுமே என்றன ...
விலங்குகளையும் விடாமல் கேட்டேன் ... உன் சாரம் இன்றி வாசம் செய்ய மாட்டோம் என்றன
மனிதனை கேட்டேன் ...
வீரம் அனைத்தும் தனதே என்றான் ...
உயிர் வாழ்வது தனது கடமை என்றான் ...
சிரித்தேன் ...
ஆறறிவு ஏன் தந்தாய் எங்களுக்கே ?
ஐந்தறிவு , நான்கறிவு மூன்றறிவு இரண்டறிவு ஓர் அறிவு உள்ள உயிர்கள் இடத்தே பாடம் கற்றுக்கொள்ளவோ அம்மா ?
அன்னை சிரித்தாள் ..
தான் என்ற கர்வம் உள்ளவரை பருவம் மறையும் வரை என்னை அறிந்து கொள்ளான் என்றாள் நான்மாட கூடல் அழகி 🪷🪷🪷
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
மாதவனின் சோதரியே ...!!
மஹா மாயா எனும் திரு நாமம் கொண்டவளே !!
மண்ணில் பிறக்கும் உயிர்கள் யாவும் தன்னில் மறந்து கண்ணில் கனிந்து
ஒருவர் துடிப்பில் பிறக்கும் கவிதை
இருவர் துடிப்பில் ஓர் உயிராய் மாறும் அதிசயம் உன் மாயம் அன்றோ ?
பாதாள லோகம் சென்றே பொருள் தேடும் மனிதன்
உனைத் தேட மறந்ததும் நீ செய்யும் லீலை அன்றோ ?
எது நிரந்தரம் என்றே அறியாமல் அந்தரத்தில் தொங்குகிறோம் ..
அந்த ரங்கன் தங்கையே ... இதன் அந்தரங்கம் சொல்வாயோ ?
ஆடி முடிந்து நீ புரிய வைத்து என்ன பயன் ?
ஆடும் போது உன் சரண் தேடும் கண்கள் தருவதில் நன்கு செழிக்கும் எங்கள் நயன் !!
மாயையை நிறுத்தி க்கொள் உன் தாய்மையை காட்டி விடு ...
மறைப்பதில் என்ன மகிழ்ச்சி ..? மன்னிப்பதில் என்ன தளர்ச்சி .. ?
வீழ்ச்சி ஏதும் காணாதவளே ..
இகழ்ச்சி செய்ய மனம் இல்லை வளர்ச்சி நீ தாயாய் தரும் போதே !! 💐💐💐
என்பதை_தெரிந்து_கொள்வோம்
மந்த்ர புஷ்பம் என்பது ஒரு வேத பாடலாகும் , இது பூஜைகளின் முடிவில் இந்து தெய்வங்களுக்கு மலர்களை சமர்ப்பிக்கும் நேரத்தில் பாடப்படுகிறது . மந்திரம் வேத மந்திரங்களின் மலராக கருதப்படுகிறது.
இந்த மந்திரம் யஜுர் வேதத்தின் தைத்திரிய ஆரண்யகத்திலிருந்து எடுக்கப்பட்டது . நீர், நெருப்பு, காற்று, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மேகங்கள் மற்றும் நேரம் பற்றிய இரகசிய அறிவால் வழங்கப்படும் வரம்பற்ற நன்மைகளைப் பற்றி இது பேசுகிறது. இது பொதுவாக எந்த பூஜை (வழிபாடு) அல்லது யாகம் செய்த பிறகு அனைத்து ப்ரோகிதர்களாலும் பாடப்படுகிறது . நீர் (இங்கு நீர் ஈதர்) இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படை என்று சுருக்கமாகச் சொல்கிறது.
மந்திர சக்தியை உடைய புஷ்பம் என்று சொல்வதை விட, மந்திர உச்சாடனத்தின் மூலம் சக்தி பெற்ற பூக்களைக் கொண்டு வணங்குவது என்று புரிந்துகொள்ளலாம். ஆலயத்தில் அபிஷேகம், அலங்காரம், ஷோடஸ உபச்சார தீபாராதனை, சதுர்வேத பாராயணம் என்று அத்தனை உபச்சாரங்களையும் இறைவனுக்கு செய்து முடித்த கையோடு, ‘யோபாம் புஷ்பம் வேத..’ என்று ஆலயத்தில் அர்ச்சகரின் குரல் கணீரென்று ஒலிக்கும்போது மெய் சிலிர்க்கும். ஒவ்வொரு கால பூஜையின்போதும் மகாதீபாராதனைக்கு முன்னதாக ஆலயங்களில் ஓதப்படும் இந்த மந்த்ரபுஷ்பம் என்கிற வேத மந்திரம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. பொருள் புரியாதவர்கள் கூட அந்த மந்திரத்தின் ஸ்வரத்திலும், உச்சரிப்பிலும் மெய்மறந்து மனம் உருகி நிற்பர்.
நம் இல்லங்களில் நடைபெறும் பூஜையின்போதும் ஏற்ற இறக்கத்தோடு அதற்குரிய ஸ்வரத்தில் சாஸ்திரிகள் இந்த மந்திரபுஷ்பத்தை உச்சாடனம் செய்யும்போது நாமும் அவரோடு இணைந்து சொல்வது போன்ற ஒரு உள்ளுணர்வு நமக்குள் உண்டாவதை உணர முடியும். எல்லாவிதமான பூஜைகளின் போதும், அதன் உச்சக்கட்டத்தில் முத்தாய்ப்பாக இந்த மந்திரபுஷ்பத்தைச் சொல்கிறார்களே., அப்படி என்னதான் சிறப்பு இதற்கு என்பதையும் தெரிந்து கொள்வோம்.
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு. இந்த நீர்தான் உலகின் அடிப்படை ஆதாரம் என்பதையே இந்த மந்திரம் வலியுறுத்துகிறது. நீர், நிலவு, நெருப்பு, காற்று, சூரியன், நட்சத்திரங்கள், மேகங்கள் போன்ற இயற்கை சக்திகளுக்கு இடையே உள்ள தொடர்பினை நாம் அறிந்துகொள்ளும் விதமாக இந்த வாக்கியங்கள் அமைந்திருக்கின்றன.
மந்திர புஷபம்
ஓம் யோபாம் புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ சந்த்ரமா வா
அபாம் புஷ்பம்/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ ய ஏவம் வேத
வணக்கங்கள்.🥀🌷🌺🙏
யாரொருவன் நீரின் மலரை அறிகிறானோ, அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகிறான். நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான்.
யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அக்னிர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோக்னேராயதனம் வேத/ ஆயதனவான்
பவதி/ ஆபோ வா அக்னேராயதனம்/ ஆயதனவான் பவதி/ய ஏவம் வேத
விளக்கம்
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ வாயுர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ வாயோராயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை வாயோராயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத
விளக்கம்
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். காற்றே நீரின் ஆதாரம். யார் காற்றின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே காற்றின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
யோபா மாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அஸெள வை தபன்னபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோமுஷ்ய தபத ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி/ ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத
விளக்கம்
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். கொதிக்கும் சூரியனே நீரின் ஆதாரம். யார் கொதிக்கும் சூரியனின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே அந்த தகிக்கும் சூரியனின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (4)
யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ சந்த்ரமா வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யச்சந்த்ரமஸ ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத
விளக்கம்
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நிலவே நீரின் ஆதாரம். யார் நிலவின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நிலவின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ நக்ஷத்ராணி வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ நக்ஷத்ராணாமாயதனம் வேத/
ஆயதனவான் பவதி/ ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத
விளக்கம்
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நட்சத்திரங்களே நீரின் ஆதாரம். யார் நட்சத்திரங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நட்சத்திரங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ பர்ஜன்யோ வாஅபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத
ஆயதனவான் பவதி/ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத
விளக்கம்
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மேகமே நீரின் ஆதாரம். யார் மேகங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மேகங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
யோபாமாயதனம் வேத/ ஆயதனாவான் பவதி/ ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யஸ்ஸம்வத்ஸரஸ்யாயதனம்
வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத
விளக்கம்
யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மழைக்காலமே நீரின் ஆதாரம். யார் மழைக்காலத்தின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மழைக்காலத்தின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.
யோப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத/ ப்ரத்யேவ திஷ்டதி
யாரொருவன் நீரில் நிலைபெற்றுள்ள ஓடத்தை அறிகிறானோ, அவன் அதிலேயே நிலை பெறுகிறான்.
ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே/ நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே/ ஸ மே காமான் காமகாமாய மஹ்யம்/ காமேச்வரோ வைச்ரவணோ ததாது/ குபேராய வைச்ரவணாய/ மஹா ராஜாய நம:
விளக்கம்
தலைவர்களுக்கெல்லாம் தலைவனும், பெரும் வெற்றிகளைக் கொடுப்பவனுமான குபேரனை நாங்கள் வணங்குகிறோம். விருப்பங்களை நிறைவேற்றுபவனும், செல்வத்தின்
Thaலைவனான அவன், என் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு எனக்குத் தேவையான செல்வத்தைக் கொடுக்கட்டும். செல்வத்தின் தலைவனான குபேரனுக்கு, மன்னாதி மன்னனுக்கு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
"கைக்கு எட்டிய தூரம் கைலாசம் வாய்க்கு எட்டிய தூரம் வைகுண்டம்"
என்பது பண்டையத் தமிழ்நாட்டுப் பழமொழி.. இந்தப் பழமொழி ஏதோ சுவையான உணவுகளை உண்பதற்காக கூறப்பட்டது போல தெரிகின்றதல்லவா? இதன் உண்மையான பொருள் வேறு..
என்றும் 16 மார்க்கண்டேயனின் கதையையும், கஜேந்திர மோட்சம் என்ற கதையையும் இணைத்தே இப்பழமொழி உருவானது.. மார்கண்டேயனின் உயிரினைப் பறிப்பதற்காக எமதர்மன் மார்கண்டேயனின் மீது பாசக் கயிற்றினை வீசினான்.. மார்கண்டேயனோ சிவபெருமானை கெட்டியாக பிடித்துக் கொண்டான். அதைக் கண்ட எமதர்மராஜனோ சிவனை பிடித்திருக்கும் மார்க்கண்டேயனின் மீது பாசக்கயிறை வீசினான்.. தன்னை கெட்டியாகப் பிடித்திருக்கும் பக்தனின் மீது பாசக்கயிறை வீசிய எமனை சிவபெருமான் தண்டித்தார். அதோடு, மார்கண்டேயனுக்கு என்றும் பதினாறு என்ற வரத்தையும் வழங்கினார்.. அதாவது மார்கண்டேயனின் கைக்கு எட்டிய தூரத்தில் கைலாசம் (சிவபெருமான் இருப்பிடம்) இருந்தது! என ஒரு பாதி விளக்கமளிக்கிறது..
..
இதே போல கஜேந்திரன் என்ற யானையை முதலை பிடித்துக் கொண்ட போது அந்த யானை தன்னை காப்பாற்ற “ஆதி மூலமே ஆதிமூலமே” என்று கதற ஸ்ரீமன் நாராயணன் விரைந்து வந்து தனது சுதர்சனச் சக்கரத்தை ஏவி முதலையை அழித்து கஜேந்திரனை காப்பாற்றினார்.. கஜேந்திரனின் கதறல் ஒலி எட்டும் தூரத்தில் அதாவது கஜேந்திரனை வாய்க்கு (ஒலிக்கு) எட்டும் தூரத்தில் தான் வைகுண்டம் (விஷ்ணுவின் இருப்பிடம்) இருந்தது! என மறுபாதி விளக்கம். அளிக்கிறது.. அதாவது இறைவனை நாம் வழிபட்டால் நமது துன்பங்களை அவன் போக்குவான் என்பதே இப்பழமொழியின் அர்த்தம் ஆகும்.
எனவே தான் :கைக்கு எட்டிய தூரத்தில் கைலாசம் வாய்க்கு எட்டிய தூரத்தில் வைகுண்டம்" என்ற பழமொழி வழக்கத்தில் வந்தது..
..
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம:
*அம்மா*
ஆசை இருந்து என்ன பயன் ?
பாடு படும் திறன் வேண்டாமோ ?
திறன் மட்டும் இருந்தென்ன பயன் ?
இலக்கை அடைய பொறுமை வேண்டாமோ ?
பொறுமை இருந்து என்ன பயன் ... ?
உன் அருமை அறிந்திருக்க வேண்டாமோ ?
உன் அருமை, பெருமை அறிந்து என்ன பயன் ... ?
உன் நாமம் சொல்லாமல் நாட்களை ஓட்டுவது நற்பயன் தந்திடுமோ ? 💐💐💐
பித்தம் கொண்டோர் புரிந்த யுத்தம் பிறப்பால் ஒன்றியோர் போரிட்டார் நித்தம்
சத்தம் இன்றி செய்த சூழ்ச்சிகள் சாதனை என்றே பெயர் எடுத்தன ...
அதர்மம் அழிய அங்கங்கள் மிளிர தினம் உறங்குவோன் உறங்கம் இன்றி தேர் ஓட்டினான் ...
எல்லா பழிகளும் அவன் மீதே ... எல்லா வினைகளும் அவன் மீதே ...
கீதை உரைத்து போரில் பாதை வகுத்தான் ...
போதை கொண்டோர் பாதையில் செல்ல மறுத்தனர் ...
பாதை எங்கும் நடமிடா பாதங்கள் தர்மம் காக்க துணை தேடியதே 🐚🐚🐚
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம:
அம்மா ... கண்களுக்கு ஒளி தருபவளே
ஒளி இன்றி உன் ஒலி எங்கனம் ரசிப்பேன்
நிஜம் இன்றி நிழல் வாழ்ந்திடக்கூடுமோ ?
நினைவலைகள் இன்றி சரித்திரம் தலை தூக்குமோ ?
வேறின்றி மரம் வாழக்கூடுமோ ? நீர் இன்றி மீன் வசிக்க முடியுமோ ?
நீ இன்றி நான் வாழ்தல் முடியுமோ ..
நீ வேறு நான் வேறு என்றால் தித்திப்பு இல்லா தேனாகுமன்றோ என் வாழ்க்கை 🌳🌳🌳