ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 14 (ல) (64 to 68)
LT 14 64-68 லாகினீ லலனாரூபா லஸத்³தா³டி³மபாடலா । லலன்திகாலஸத்பா²லா லலாடனயனார்சிதா ॥ 14 ॥ 64. லாகினீ எல்லோராலும் சுலபமாக அணுகக்கூடியவள் . அவளை உண்மையான அன்பினாலும் , உயர்ந்த எண்ணங்கள் மூலமும் , சுத்தமான பக்தியாலும் சுலபமாக அணுகி விடலாம் . 65. லலனாரூபா ஸ்திரீகளின் வடிவில் பிரத்தியக்ஷமாய்க் காணப் படுபவள் . எந்த எந்த பெண்களிடம் தாயின் கருணையும் , அன்பும் , ஒழுக்கமும் இருக்கின்றதோ அவர்கள் எல்லாருமே சக்தியின் வடிவங்கள் தான் . 66. லஸத் தரடிம பாடலா மலர்ந்த மாதுளம் பூவையும் பாதிரிப்பூவையும் போன்ற வண்ணத்த்தினள் . 67. லலந்திகா லஸத்பாலா பிரகாசிக்கும் திலகத்தை தனது அழகிய நெற்றியில் ஏந்தி புன்னகை பொளியும் முகத்துடன் என்றும் கருணையுடன் இருப்பவள் . 68. லலாட நயனார்ச்சிதா நெற்றிகண்ணுடைய ஈசனால் ஆராதிக்கப்படுபவள் . இப்படியும் எடுத்துக்கொள்ளலாம் - ஞானக்கண் படைத்த யோகிக...