ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 27 - sloka 1 to 10 -கூர்மாவதாரம்

 

दुर्वासास्सुरवनिताप्तदिव्यमाल्यं

शक्राय स्वयमुपदाय तत्र भूय: ।

नागेन्द्रप्रतिमृदिते शशाप शक्रं

का क्षान्तिस्त्वदितरदेवतांशजानाम् ॥१॥


து₃ர்வாஸாஸ்ஸுரவநிதாப்ததி₃வ்யமால்யம்

ஶக்ராய ஸ்வயமுபதா₃ய தத்ர பூ₄ய: |

நாகே₃ந்த்₃ரப்ரதிம்ருதி₃தே ஶஶாப ஶக்ரம்

கா க்ஷாந்திஸ்த்வதி₃தரதே₃வதாம்ஶஜாநாம் || 1||


1. தேவலோக மங்கையால் தனக்குக் கிடைத்த மலர் மாலையை, துர்வாச முனிவர் இந்திரனுக்குக் கொடுத்தார். அந்த மாலை, இந்திரனுடைய ஐராவதம் என்ற யானையால் மிதிக்கப்பட்டது. அதனால், முனிவர் கோபம் கொண்டு இந்திரனைச் சபித்தார். உன்னிடமிருந்து தோன்றியவர்களைத் தவிர வேறு எவருக்கும் பொறுமை இருப்பதில்லை.


शापेन प्रथितजरेऽथ निर्जरेन्द्रे

देवेष्वप्यसुरजितेषु निष्प्रभेषु ।

शर्वाद्या: कमलजमेत्य सर्वदेवा

निर्वाणप्रभव समं भवन्तमापु: ॥२॥


ஶாபேந ப்ரதி₂தஜரே(அ)த₂ நிர்ஜரேந்த்₃ரே

தே₃வேஷ்வப்யஸுரஜிதேஷு நிஷ்ப்ரபே₄ஷு |

ஶர்வாத்₃யா: கமலஜமேத்ய ஸர்வதே₃வா

நிர்வாணப்ரப₄வ ஸமம் ப₄வந்தமாபு: || 2||


2. பிறகு, இந்திரன் சக்தி குறைந்தவனாக ஆனான். தேவர்களும் சக்தியை இழந்து அசுரர்களால் ஜயிக்கப்பட்டார்கள். பரமசிவனும், மற்ற தேவர்களும், பிரம்மாவுடன் உன்னை சரணடைந்தனர்.


ब्रह्माद्यै: स्तुतमहिमा चिरं तदानीं

प्रादुष्षन् वरद पुर: परेण धाम्ना ।

हे देवा दितिजकुलैर्विधाय सन्धिं

पीयूषं परिमथतेति पर्यशास्त्वम् ॥३॥


ப்₃ரஹ்மாத்₃யை: ஸ்துதமஹிமா சிரம் ததா₃நீம்

ப்ராது₃ஷ்ஷந் வரத₃ புர: பரேண தா₄ம்நா |

ஹே தே₃வா தி₃திஜகுலைர்விதா₄ய ஸந்தி₄ம்

பீயூஷம் பரிமத₂தேதி பர்யஶாஸ்த்வம் || 3||


3. வரதனே! அவர்களால் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட நீ, அவர்கள் முன்னால் தோன்றினாய். “தேவர்களே! அசுரர்களோடு சமாதானம் செய்து கொண்டு பாற்கடலில் அம்ருதத்தைக் கடையுங்கள்” என்று கட்டளையிட்டாய்.


सन्धानं कृतवति दानवै: सुरौघे

मन्थानं नयति मदेन मन्दराद्रिम् ।

भ्रष्टेऽस्मिन् बदरमिवोद्वहन् खगेन्द्रे

सद्यस्त्वं विनिहितवान् पय:पयोधौ ॥४॥


ஸந்தா₄நம் க்ருதவதி தா₃நவை: ஸுரௌகே₄

மந்தா₂நம் நயதி மதே₃ந மந்த₃ராத்₃ரிம் |

ப்₄ரஷ்டே(அ)ஸ்மிந் ப₃த₃ரமிவோத்₃வஹந் க₂கே₃ந்த்₃ரே

ஸத்₃யஸ்த்வம் விநிஹிதவாந் பய:பயோதௌ₄ || 4||


4. தேவர்களும், அசுரர்களும் சமாதானம் செய்து கொண்டனர். பிறகு, கர்வத்தோடு மந்தர மலையைக் கொண்டு வந்தனர். அப்போது மலை கீழே நழுவியது. அப்போது, நீ அம்மலையைக் கருடன் மீது, இலந்தையைப் போலத் தூக்கி ஏற்றி, பாற்கடலில் வைத்தாய்.


आधाय द्रुतमथ वासुकिं वरत्रां

पाथोधौ विनिहितसर्वबीजजाले ।

प्रारब्धे मथनविधौ सुरासुरैस्तै-

र्व्याजात्त्वं भुजगमुखेऽकरोस्सुरारीन् ॥५॥


ஆதா₄ய த்₃ருதமத₂ வாஸுகிம் வரத்ராம்

பாதோ₂தௌ₄ விநிஹிதஸர்வபீ₃ஜஜாலே |

ப்ராரப்₃தே₄ மத₂நவிதௌ₄ ஸுராஸுரைஸ்தை-

ர்வ்யாஜாத்த்வம் பு₄ஜக₃முகே₂(அ)கரோஸ்ஸுராரீந் || 5||


5. வாசுகி என்ற பாம்பைக் கடைவதற்கான கயிராக்கி, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர். அப்போது நீ கபடமாக அசுரர்களை வாசுகியின் தலைப்பக்கம் பிடிக்கச் செய்தாய்.


क्षुब्धाद्रौ क्षुभितजलोदरे तदानीं

दुग्धाब्धौ गुरुतरभारतो निमग्ने ।

देवेषु व्यथिततमेषु तत्प्रियैषी

प्राणैषी: कमठतनुं कठोरपृष्ठाम् ॥६॥


க்ஷுப்₃தா₄த்₃ரௌ க்ஷுபி₄தஜலோத₃ரே ததா₃நீம்

து₃க்₃தா₄ப்₃தௌ₄ கு₃ருதரபா₄ரதோ நிமக்₃நே |

தே₃வேஷு வ்யதி₂ததமேஷு தத்ப்ரியைஷீ

ப்ராணைஷீ: கமட₂தநும் கடோ₂ரப்ருஷ்டா₂ம் || 6||


6. கடையும் போது சுழன்ற அந்த மந்தரமலையானது, அதிக கனத்தால் கடலில் மூழ்கியது. தேவர்கள் துயரம் அடைந்தனர். அவர்களின் நன்மையைக் கருதி, நீ கடினமான முதுகை உடைய ஆமையின் வடிவம் எடுத்துக்கொண்டாய்.


वज्रातिस्थिरतरकर्परेण विष्णो

विस्तारात्परिगतलक्षयोजनेन ।

अम्भोधे: कुहरगतेन वर्ष्मणा त्वं

निर्मग्नं क्षितिधरनाथमुन्निनेथ ॥७॥


வஜ்ராதிஸ்தி₂ரதரகர்பரேண விஷ்ணோ

விஸ்தாராத்பரிக₃தலக்ஷயோஜநேந |

அம்போ₄தே₄: குஹரக₃தேந வர்ஷ்மணா த்வம்

நிர்மக்₃நம் க்ஷிதித₄ரநாத₂முந்நிநேத₂ || 7||


7. நீ, லக்ஷ யோஜனை அகலம் கொண்ட சரீரத்துடன், வஜ்ராயுதத்தை விடக் கடினமான முதுகால், மூழ்கிய மந்தரமலையை மேலே தூக்கினாய்.


उन्मग्ने झटिति तदा धराधरेन्द्रे

निर्मेथुर्दृढमिह सम्मदेन सर्वे ।

आविश्य द्वितयगणेऽपि सर्पराजे

वैवश्यं परिशमयन्नवीवृधस्तान् ॥८॥


உந்மக்₃நே ஜ₂டிதி ததா₃ த₄ராத₄ரேந்த்₃ரே

நிர்மேது₂ர்த்₃ருட₄மிஹ ஸம்மதே₃ந ஸர்வே |

ஆவிஶ்ய த்₃விதயக₃ணே(அ)பி ஸர்பராஜே

வைவஶ்யம் பரிஶமயந்நவீவ்ருத₄ஸ்தாந் || 8||


8. மந்தரமலை மேலே வந்ததும், அனைவரும் சந்தோஷத்துடனும், பலத்துடனும் கடைந்தனர். தேவர்களுக்குள்ளும், அசுரர்களுக்குள்ளும், வாசுகியிடத்திலும் நீ பிரவேசித்து, அவர்களது களைப்பைப் போக்கி பலமடையச் செய்தாய்.


उद्दामभ्रमणजवोन्नमद्गिरीन्द्र-

न्यस्तैकस्थिरतरहस्तपङ्कजं त्वाम् ।

अभ्रान्ते विधिगिरिशादय: प्रमोदा-

दुद्भ्रान्ता नुनुवुरुपात्तपुष्पवर्षा: ॥९॥


உத்₃தா₃மப்₄ரமணஜவோந்நமத்₃கி₃ரீந்த்₃ர-

ந்யஸ்தைகஸ்தி₂ரதரஹஸ்தபங்கஜம் த்வாம் |

அப்₄ராந்தே விதி₄கி₃ரிஶாத₃ய: ப்ரமோதா₃-

து₃த்₃ப்₄ராந்தா நுநுவுருபாத்தபுஷ்பவர்ஷா: || 9||


9. மிக வேகமாகச் சுழற்றப்பட்ட மந்தரமலை, மேலே எழும்பியது. அப்போது, நீ கெட்டியான தாமரைக் கைகளை அம்மலை மேல் வைத்து மேலே கிளம்பாதவாறு செய்தாய். இதைக் கண்ட பிரம்மா, சிவன், முனிவர்கள் முதலியோர் பரவசமாகி வானிலிருந்து பூமாரி பொழிந்து, உன்னை வாழ்த்தினர்.


दैत्यौघे भुजगमुखानिलेन तप्ते

तेनैव त्रिदशकुलेऽपि किञ्चिदार्ते ।

कारुण्यात्तव किल देव वारिवाहा:

प्रावर्षन्नमरगणान्न दैत्यसङ्घान् ॥१०॥


தை₃த்யௌகே₄ பு₄ஜக₃முகா₂நிலேந தப்தே

தேநைவ த்ரித₃ஶகுலே(அ)பி கிஞ்சிதா₃ர்தே |

காருண்யாத்தவ கில தே₃வ வாரிவாஹா:

ப்ராவர்ஷந்நமரக₃ணாந்ந தை₃த்யஸங்கா₄ந் || 10||


10. தேவனே! அசுரர்கள் வாசுகியின் மூச்சுக்காற்றால் தாபத்தை அடைந்தனர். தேவர்களும் கொஞ்சம் தாபமடைந்தனர். நீ கருணையுடன், மேகத்தைக் குவித்து, தேவர்களை நோக்கி மழை பொழியச் செய்தாய். அசுரர்களுக்குப் பொழியவில்லை.


उद्भ्राम्यद्बहुतिमिनक्रचक्रवाले

तत्राब्धौ चिरमथितेऽपि निर्विकारे ।

एकस्त्वं करयुगकृष्टसर्पराज:

संराजन् पवनपुरेश पाहि रोगात् ॥११॥


உத்₃ப்₄ராம்யத்₃ப₃ஹுதிமிநக்ரசக்ரவாலே

தத்ராப்₃தௌ₄ சிரமதி₂தே(அ)பி நிர்விகாரே |

ஏகஸ்த்வம் கரயுக₃க்ருஷ்டஸர்பராஜ:

ஸம்ராஜந் பவநபுரேஶ பாஹி ரோகா₃த் || 11||


11. வெகுகாலம் கடைந்தும், சமுத்திரத்தில் உள்ள உயிரினங்கள் வெளியே வந்தனவேயன்றி, வேறு எதுவும் கிடைக்கவில்லை. அப்போது, நீ ஒருவனாகவே, அந்தப் பாம்பை, உன் இரு கரங்களாலும் இழுக்கத் தொடங்கினாய். குருவாயூரப்பா! நோய்களிலிருந்து என்னை நீ காப்பாற்று.

==============================================

Comments

ravi said…
*Sri Guru Smaranam — Meaning in English*

*Namaste nātha bhagavan śivāya guru rūpine*

Salutations to You, Lord, Divine Shiva, in the form of Guru.

*Vidyāvatāra saṃsiddhyai svīkṛtānekavigraha*

You are the incarnation of supreme Knowledge, the perfection of spiritual attainment, the one accepted through many forms.

*Navāya navarūpāya paramārthasvarūpiṇe*

Your nature is beyond the new (changing) forms;

You are the embodiment of Absolute Reality, beyond all forms.
*Sarvājñānatamobheda bhānave citghañāye te*

To You, whose light is the illumination of all-knowing wisdom, and who is the mass of Consciousness.

*Svatantrāya dayāklupta vigrahāya śivātmane*

You are independent (self-existent), merciful; Your form is indivisible, and You are the Self which is auspicious.

*Paratantrāya bhaktānāṃ bhavyānāṃ bhavyarūpine*

To Those who are devoted to You (bhaktās), You are the ultimate being, in the form of all that is to come; the source of their becoming.

*Vivekināṃ vivekāya vimarśāya vimarśinām*

To those with discrimination (viveki), You are Discrimination itself; to those who reflect, You are the very act of reflection.

*Prakāśānāṃ prakāśāya jñānināṃ jñānarūpiṇe*

To the luminous ones, You are Light; to the wise, You are Wisdom incarnate.

*Purastāt pārśvayoḥ pṛṣṭhe namaskuryāduparyadhaḥ*

I bow to You at the front, at the sides, behind, and above — in every direction.

*Sadā maccittarūpeṇa vidhehi bhavadāsanam*

Always, in the form of my own mind, establish me at Your divine seat.

*Tvatprasādād ahaṃ deva kṛtakṛtyo’smi sarvadā*

By Your grace, O Lord, I am ever thankful; I am ever in the debt of Your kindness.

*Māyāmṛty*
*umahāpāśāt vimukto’smi śivosmyaham*

Freed am I from the great bonds of illusion, death, and the mighty chain of ego — I am Shiva-like / I am of Shiva.

*Prātaḥ prabhṛti sāyāntaṃ sāyādi prātarantataḥ*

From dawn to dusk, from dusk to dawn — morning, midday, evening, and night — always Your remembrance and worship.

*Yat karomi jagannātha tadastu tava pūjanam*

Whatever I do, O Lord of the universe, let that be Your worship.
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்* 💐

*Sri Gurubhyo nama*
*Sri Mathre nama :* 💐

*May your journey be always guided towards the top .*

*Verse 11*

*Nama-s 27 & 28*

நிஜஸல்லாப மாது⁴ர்ய வினிர்ப⁴த்ஸித கச்ச²பீ ।

மன்த³ஸ்மித ப்ரபா⁴பூர மஜ்ஜத்-காமேஶ மானஸா ॥ 11 ॥

*நிஜஸல்லாப மாது⁴ர்ய வினிர்ப⁴த்ஸித கச்ச²பீ ।*

The sweet melody of Her words defeat the tuneful " Kacchapi" veena of goddess Saraswati

*மன்த³ஸ்மித ப்ரபா⁴பூர மஜ்ஜத்-காமேஶ மானஸா ॥*

The mind of Kameswara is drowned in the overflowing glory of Her sweet smile
ravi said…
*🌸 ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம்*

🕉️ ஹரி ஓம் 🙏

ஸ்ரீ மஹாவிஷ்ணு ப்ரீத்யர்தே ஸஹஸ்ரநாம ஜபே பாராயணே விநியோக: || 23 ||

இந்த விஷ்ணு ஸகஸ்ரநாம ஸ்தோத்திரம் என்ற மஹா மந்திரத்திற்கு பகவான் ஸ்ரீ வேத வியாஸர் ருஷி, அனுஷ்டுப் எனும் சந்தஸ், மஹாவிஷ்ணுவாகிய பரம்பொருள் ஸ்ரீமந் நாராயணன் தேவதை. அம்ருதாம்சூத்பவ: பானு: என்ற நாமங்கள் பீஜம், தேவகீநந்தந: ஸ்ரஷ்டா என்ற நாமங்கள் சக்தி. உத்பவ: க்ஷோபண: தேவ: என்ற நாமங்கள் பரமமான மந்திரம். சங்கப்ருத் நந்தகீ சக்ரீ என்ற நாமங்கள் கீலகம். சார்ங்கதன்வா கதாதர: என்பது அஸ்திரம். ரதாங்க பாணி: அக்ஷோப்ய: என்ற நாமங்கள் நேத்திரம். த்ரிஸாமா ஸாமக: ஸாம என்பது கவசம். ஆனந்தம் பரப்ரஹ என்பது யோநி. ருது: ஸூதர்சன: கால: என்று திக்பந்தம். ஸ்ரீ விச்வரூப: என்று தியானம். ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கு பிரியமாகும் பொருட்டு இந்த ஸஹஸ்ரநாம ஜபம் செய்வதே பயன். (ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் கைங்கர்யமாக அமையும் ஸஹஸ்ரநாம ஜபம் செய்வதே பயன்). 🌿✨

---

🙏 *ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்ரம் பகுதி பகுதியாக பகிரப்படும்.*
*தினமும் படித்து, நம் வாழ்க்கையில் ஸ்ரீ ஹரியின் அருள் பெறுவோம்.* 🌸📿

*ஸ்ரீ மஹாவிஷ்ணு இன்ஃபோ*
https://www.srimahavishnuinfo.org

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை