ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 29- தேவர்கள் அம்ருதம் அடைந்ததும், அசுரர்கள் வதமும் மோஹினி அவதாரம்
उद्गच्छतस्तव करादमृतं हरत्सु
दैत्येषु तानशरणाननुनीय देवान् ।
सद्यस्तिरोदधिथ देव भवत्प्रभावा-
दुद्यत्स्वयूथ्यकलहा दितिजा बभूवु: ॥१॥
உத்₃க₃ச்ச₂தஸ்தவ கராத₃ம்ருதம் ஹரத்ஸு
தை₃த்யேஷு தாநஶரணாநநுநீய தே₃வாந் |
ஸத்₃யஸ்திரோத₃தி₄த₂ தே₃வ ப₄வத்ப்ரபா₄வா-
து₃த்₃யத்ஸ்வயூத்₂யகலஹா தி₃திஜா ப₃பூ₄வு: || 1||
1. தேவனே! உன் கையில் அம்ருத கலசத்துடன், தன்வந்தரி பகவானாக சமுத்திரத்தில் இருந்து தோன்றியதும், அசுரர்கள் அதை உன்னிடமிருந்து பறித்துச் சென்றனர்.
ஆதரவற்றவர்களாக இருந்த அந்த தேவர்களைச் சமாதானம் செய்து உடனே அங்கிருந்து மறைந்து விட்டாய். உன் மாயையினால் அசுரர்களிடையே அம்ருதத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் கலகம் உண்டாயிற்று.
श्यामां रुचाऽपि वयसाऽपि तनुं तदानीं
प्राप्तोऽसि तुङ्गकुचमण्डलभंगुरां त्वम् ।
पीयूषकुम्भकलहं परिमुच्य सर्वे
तृष्णाकुला: प्रतिययुस्त्वदुरोजकुम्भे ॥२॥
ஶ்யாமாம் ருசா(அ)பி வயஸா(அ)பி தநும் ததா₃நீம்
ப்ராப்தோ(அ)ஸி துங்க₃குசமண்ட₃லப₄ம்கு₃ராம் த்வம் |
பீயூஷகும்ப₄கலஹம் பரிமுச்ய ஸர்வே
த்ருஷ்ணாகுலா: ப்ரதியயுஸ்த்வது₃ரோஜகும்பே₄ || 2||
2. அப்போது நீ, நீல நிறத்துடன், நல்ல யௌவனமாய், பருத்த கொங்கைகளுடன் உள்ள அழகிய பெண் வடிவத்தில் அங்கு தோன்றினாய்.
அசுரர்கள், அம்ருதகலசத்தில் வைத்த ஆசையை விட்டுவிட்டு, உன்னுடைய கலசத்தைப் போன்ற கொங்கைகளில் ஆசை வைத்துத் உன்னிடம் வந்தார்கள்.
का त्वं मृगाक्षि विभजस्व सुधामिमामि-
त्यारूढरागविवशानभियाचतोऽमून् ।
विश्वस्यते मयि कथं कुलटाऽस्मि दैत्या
इत्यालपन्नपि सुविश्वसितानतानी: ॥३॥
கா த்வம் ம்ருகா₃க்ஷி விப₄ஜஸ்வ ஸுதா₄மிமாமி-
த்யாரூட₄ராக₃விவஶாநபி₄யாசதோ(அ)மூந் |
விஶ்வஸ்யதே மயி கத₂ம் குலடா(அ)ஸ்மி தை₃த்யா
இத்யாலபந்நபி ஸுவிஶ்வஸிதாநதாநீ: || 3||
3. “நீ யார்? இந்த அமிர்தத்தைப் பங்கிட்டுக்கொடு” என்று அசுரர்கள் வேண்டினர். காமம் கொண்ட அவர்களிடம், “நான் நல்ல நடத்தையற்றவள். என்னை எப்படி நம்புகிறீர்கள்?” என்று கேட்டாய். அவ்வாறு சொன்னாலும், அவர்கள் மனதில் மோகத்தையும் நம்பிக்கையையும் உண்டாக்கினாய்.
मोदात् सुधाकलशमेषु ददत्सु सा त्वं
दुश्चेष्टितं मम सहध्वमिति ब्रुवाणा ।
पङ्क्तिप्रभेदविनिवेशितदेवदैत्या
लीलाविलासगतिभि: समदा: सुधां ताम् ॥४॥
மோதா₃த் ஸுதா₄கலஶமேஷு த₃த₃த்ஸு ஸா த்வம்
து₃ஶ்சேஷ்டிதம் மம ஸஹத்₄வமிதி ப்₃ருவாணா |
பங்க்திப்ரபே₄த₃விநிவேஶிததே₃வதை₃த்யா
லீலாவிலாஸக₃திபி₄: ஸமதா₃: ஸுதா₄ம் தாம் || 4||
4.அசுரர்கள் அம்ருதகலசத்தைத் உன்னிடம் கொடுத்தனர். மோகினி ரூபத்தில் இருந்த நீ, என் கெட்ட செய்கையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டே, தேவர்களை ஒரு வரிசையிலும், அசுரர்களை ஒரு வரிசையிலும் அமர வைத்தாய். சிருங்கார நடையாலும், விளையாட்டுப் பேச்சுக்களாலும் அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தாய்.
अस्मास्वियं प्रणयिणीत्यसुरेषु तेषु
जोषं स्थितेष्वथ समाप्य सुधां सुरेषु ।
त्वं भक्तलोकवशगो निजरूपमेत्य
स्वर्भानुमर्धपरिपीतसुधं व्यलावी: ॥५॥
அஸ்மாஸ்வியம் ப்ரணயிணீத்யஸுரேஷு தேஷு
ஜோஷம் ஸ்தி₂தேஷ்வத₂ ஸமாப்ய ஸுதா₄ம் ஸுரேஷு |
த்வம் ப₄க்தலோகவஶகோ₃ நிஜரூபமேத்ய
ஸ்வர்பா₄நுமர்த₄பரிபீதஸுத₄ம் வ்யலாவீ: || 5||
5. அசுரர்கள் மன மயக்கத்தில் பேசாமல் இருந்தனர். பக்தர்களுக்கு அருள் புரியும் நீ, அமிர்தத்தை தேவர்களுக்குப் பங்கிட்டு முடித்தாய். பிறகு உன்பகவத்ரூபத்தை எடுத்துக் கொண்டு, தேவர்களுடன் அமர்ந்து கொஞ்சம் அமிர்தம் உண்டுவிட்ட ராகுவின் தலையை வெட்டினாய்.
त्वत्त: सुधाहरणयोग्यफलं परेषु
दत्वा गते त्वयि सुरै: खलु ते व्यगृह्णन् ।
घोरेऽथ मूर्छति रणे बलिदैत्यमाया-
व्यामोहिते सुरगणे त्वमिहाविरासी: ॥६॥
த்வத்த: ஸுதா₄ஹரணயோக்₃யப₂லம் பரேஷு
த₃த்வா க₃தே த்வயி ஸுரை: க₂லு தே வ்யக்₃ருஹ்ணந் |
கோ₄ரே(அ)த₂ மூர்ச₂தி ரணே ப₃லிதை₃த்யமாயா-
வ்யாமோஹிதே ஸுரக₃ணே த்வமிஹாவிராஸீ: || 6||
6. உன்னிடமிருந்து அமிர்தகலசத்தைப் பறித்த அசுரர்களுக்குத் தகுந்த பலனைத் தந்து விட்டு மறைந்துவிட்டாய். உடனே, அசுரர்கள் தேவர்களுடன் சண்டையிட்டனர். பலி என்ற அசுரனின் மாயையால் தேவர்கள் திகைத்தனர். அப்போது, நீ மறுபடியும் அங்கு தோன்றினாய்.
त्वं कालनेमिमथ मालिमुखाञ्जघन्थ
शक्रो जघान बलिजम्भवलान् सपाकान् ।
शुष्कार्द्रदुष्करवधे नमुचौ च लूने
फेनेन नारदगिरा न्यरुणो रणं त्वं ॥७॥
த்வம் காலநேமிமத₂ மாலிமுகா₂ஞ்ஜக₄ந்த₂
ஶக்ரோ ஜகா₄ந ப₃லிஜம்ப₄வலாந் ஸபாகாந் |
ஶுஷ்கார்த்₃ரது₃ஷ்கரவதே₄ நமுசௌ ச லூநே
பே₂நேந நாரத₃கி₃ரா ந்யருணோ ரணம் த்வம் || 7||
7. காலநேமி, மாலி முதலிய பல அசுரர்களை அழித்தாய். பாகன், பலி, ஜம்பன், வலன் என்ற அசுரர்களை இந்திரன் கொன்றான். காய்ந்ததாலும், நனைந்ததாலும் அழிக்கப்பட முடியாத நமுசியை, நுரையினால் அழித்தான். பிறகு, நாரதர் சொன்னதன் பேரில் போர் நிறுத்தப்பட்டது.
योषावपुर्दनुजमोहनमाहितं ते
श्रुत्वा विलोकनकुतूहलवान् महेश: ।
भूतैस्समं गिरिजया च गत: पदं ते
स्तुत्वाऽब्रवीदभिमतं त्वमथो तिरोधा: ॥८॥
யோஷாவபுர்த₃நுஜமோஹநமாஹிதம் தே
ஶ்ருத்வா விலோகநகுதூஹலவாந் மஹேஶ: |
பூ₄தைஸ்ஸமம் கி₃ரிஜயா ச க₃த: பத₃ம் தே
ஸ்துத்வா(அ)ப்₃ரவீத₃பி₄மதம் த்வமதோ₂ திரோதா₄: || 8||
8. அசுரர்களை மயக்க நீ மோகினி ரூபம் எடுத்ததைக் கேட்ட சிவன், உன்னை அவ்வடிவத்தில் காண ஆசை கொண்டு, பார்வதியுடனும், பூதகணங்களுடனும், உன் இருப்பிடமான வைகுண்டத்தை அடைந்தார். உன்னைத் துதித்து, தன் விருப்பத்தைச் சொன்னார். அப்பொழுதே நீ அங்கிருந்து மறைந்தாய்.
आरामसीमनि च कन्दुकघातलीला-
लोलायमाननयनां कमनीं मनोज्ञाम् ।
त्वामेष वीक्ष्य विगलद्वसनां मनोभू-
वेगादनङ्गरिपुरङ्ग समालिलिङ्ग ॥९॥
ஆராமஸீமநி ச கந்து₃ககா₄தலீலா-
லோலாயமாநநயநாம் கமநீம் மநோஜ்ஞாம் |
த்வாமேஷ வீக்ஷ்ய விக₃லத்₃வஸநாம் மநோபூ₄-
வேகா₃த₃நங்க₃ரிபுரங்க₃ ஸமாலிலிங்க₃ || 9||
9. அங்கு ஒரு தோட்டத்தில் பந்தாடிக்கொண்டு, அழகிய பெண் வடிவில் தோன்றினாய். அழகிய அசையும் கண்களுடன், காற்றினால் மேலாடை நழுவ, மோகத்தைக் கொடுக்கும்படி விளையாடிக் கொண்டிருந்தாய். மன்மதனை வென்ற பரமசிவனே அதைப் பார்த்து மயங்கி, உன்னைத் தழுவ முயன்றார்.
भूयोऽपि विद्रुतवतीमुपधाव्य देवो
वीर्यप्रमोक्षविकसत्परमार्थबोध: ।
त्वन्मानितस्तव महत्त्वमुवाच देव्यै
तत्तादृशस्त्वमव वातनिकेतनाथ ॥१०॥
பூ₄யோ(அ)பி வித்₃ருதவதீமுபதா₄வ்ய தே₃வோ
வீர்யப்ரமோக்ஷவிகஸத்பரமார்த₂போ₃த₄: |
த்வந்மாநிதஸ்தவ மஹத்த்வமுவாச தே₃வ்யை
தத்தாத்₃ருஶஸ்த்வமவ வாதநிகேதநாத₂ || 10||
10. நழுவி ஓடிய மோகினியைப் பின்தொடர்ந்து ஓடிய பரமசிவனின் வீர்யம் நழுவியது. உடனே தெளிவு பெற்றார். நீயும் பரமசிவனைப் போற்றினாய். சிவனும் பார்வதியிடமும், மற்றவர்களிடமும் உன் பெருமையை எடுத்துரைத்தார். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த குருவாயூரப்பா! காக்கவேண்டும்.
=============================================

Comments
கூப்பிட்டால் ஓடி வருபவள் கண்டிப்பாக ஒரு தாயாகத்தான் இருக்க முடியும் ..
மற்றவர்கள் இரு வரேன் என்று ஏதாவது ஜால்ஜாப்பு சொல்வார்கள் ...
தாய் அப்படி இல்லை ..
போட்டதை போட்டபடி பரக்க பரக்க ஓடி வருவாள் .
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 1000 நாமங்கள் கொண்டவை
முதல் நாமம் ஸ்ரீ மாதா ...
அபிராமி பட்டரும் தாயே என்றே அபிராமி அந்தாதியை தொடங்கி முடிக்கிறார் ...
ஒரே ஒரு நாமம் சொன்னாலும் மிகவும் பணிவுடன் பக்தியுடன் சொல்ல வேண்டும்
ஸ்ரீ மாத்ரே என்று சொல்லும் போதும் பீஜ மந்திரங்களையும் சேர்த்து சொன்னால் பலன் பல மடங்கு கிடைக்கும்
*ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் மாத்ரே நம :*
ஓம் என்பது மனதிற்கு நிம்மதியை தரவல்லது
*ஐம்* ... மஹா சரஸ்வதியின் பீஜ மந்திரம்
*ஹ்ரீம்* : துர்க்கையின் பீஜ மந்திரம்
*ஸ்ரீம்*
மஹா லட்சுமியின் பீஜ மந்திரம்
மூன்று தாய்களை ஒன்று சேர்த்து அழைக்கும் போது கிடைக்கும் சௌபாக்கியங்களில் குறைவே இருகாது ..
இது சத்தியம் !!👌
ரமண மகரிஷியிடம் அவருடைய பக்தர்கள் சென்று சுவாமி உங்கள் பிறந்த நாளை சொல்ல முடியுமா ?
நாங்கள் ஒரு விழா எடுக்க ஆசைப்படுகிறோம் என்றனர்
உடனே ரமணர் ... என்னுடைய எந்த பிறவியுடைய பிறந்த நாளை கேட்கறீர்கள் ...
நான் எடுத்த எல்லா பிறவிகளும் எனக்குத் தெரியும் ...
வாயடைத்து போய் நின்றனர் அவரை அணுகி கேட்டவர்கள் ...
இதைத்தான் கிருஷ்ணன்
Bg. 4.5 இல்
बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन ।
तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप ॥ ५ ॥
bahūni me vyatītāni
janmāni tava cārjuna
tāny ahaṁ veda sarvāṇi
na tvaṁ vettha paran-tapa
Many, many births both you and I have passed. I can remember all of them, but you cannot, O subduer of the enemy!
ரமணருக்கு தெரியும் இந்த ஆத்மா எத்தனை பிறவிகள் எடுத்தது என்று ஆனால் அவர் பக்தர்களுக்கு அர்ஜுனனைப்போல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
அதன் உண்மை அர்த்தம் என்னவென்று தெரியுமா ?
*அப்பாடி* ... நம் அப்பாவான ஈசன் எப்பொழும் ஆடிக்கொண்டே உலகம் இயங்க வைக்கிறார் ...
அம்மாவான அம்பிகை உலகம் இயங்க ஆடிக்கொண்டே ( *அம்மாடி* ) உயிர்களை உற்பத்தி செய்கிறாள் ...
இவ்வளவு கடினமான வேலைகளை இந்த இனிய தம்பதிகள் ஆனந்தமாக ஆடிக்கொண்டே விளையாட்டாய் செய்து
கொண்டிருக்கிறார்கள் ...
அதனால் தான் வேலை பளு , சுமை , உடல் உபாதைகள் குறைந்தவுடன்
*அப்பாடி , அம்மாடி* என்று சொல்லி நம்மையும் அறியாமல் நன்றி செலுத்துகிறோம் அந்த தெய்வீக தம்பதிகளுக்கு 💐
உனை அன்றி ஓர் தெய்வம் கண்டிலேன்
என் உயிராய் மனமாய்
மணம் வீசுகிறாய்
பொதிகை மலை தென்றலை உணவருந்த கூப்பிட்டேன் ...
உனை மறைத்து அழைத்த காற்றில் கீதமாய் நீ வந்தாய் ..
ஒளி வீசும் கனலை அழைத்தேன் ஓடி விளையாட ...
அக்னியை தரம் இன்றி தழுவிக்கொண்டேன் ...
உனை தீண்டும் இன்பம் தந்தாய் நான் கேட்காமலே
குனிந்து நின்ற வானம் பார்த்தேன் ...
குமரி பெண் போல பரந்து நின்ற அதன் மனம் கண்டேன் ...
மனம் எங்கும் உன் நிறம் கண்டேன் அதில் நிறை கொண்டேன் ..
பூமி தனில் நீ பதித்த பாதம் கண்டேன் ...
ஊன் உருக உடல் மெலிய உதடுகள் குவிய உள்ளம்
குதூகலிக்க
பதித்த பாதம் தனில் தடையின்றி புரண்டேன் ...
மேனி தக தக வென்று தங்கம் போல் ஜொலிக்க
என் மதிப்பு விண்ணைத் தொடக்கண்டேன் !!🦚
குயவன் ஒருவன் பானைகளைச்
செய்து கொண்டிருந்தான்.
அங்கு ஏராளமான பானைகள், குடங்கள்,சட்டிகள்
அடுக்கப்பட்டிருந்தன.
அவன் அருகில் ஓர் ஆடும்
கட்டிப் போடப் பட்டிருந்தது.
அவ்வப்போது
அது 'மே..மே..' என்று மே மாதம் மட்டும் இல்லாமல் மற்ற எல்லா மாதங்களிலும்
கத்திக் கொண்டிருந்தது.
அங்கே ஒரு வயதான மகான் ஒருவர் மெல்ல நடந்தே அங்கே வந்தார்.
குயவன் பானை செய்வதைப் பார்த்த படியே தரையில் அமர்ந்தார்.
வந்தவருக்கு ஒரு சிறு மண் கலயத்தில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான் அந்தக் குயவன்.
அதை வாங்கிக் குடித்த குரு, ....
இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா ?
என்று கேட்டார்.
இல்லீங்க சாமி.
இது ஏதோ காட்டாடு.
இந்தப் பக்கமாக வந்தது.
பிடித்துக் கட்டிப் போட்டேன் !
என்றான் குயவன்.
எதற்காக ?
என்று கேட்டார் குரு.
பண்டிகை வரப் போகிறதே !
இறைவனுக்கு பலி
கொடுக்கலாமென்றுதான்....
என இழுத்தான் குயவன்.
பலியா ?
குரு வியப்புடனே வினவினார்.
ஆமாம்சாமி.
தெய்வத்துக்குத் திருவிழா அன்றைக்குப்
பலி கொடுத்தால் விசேஷம்.
தெய்வமும் மகிழ்ந்தே வரம் கொடுக்கும்.
எல்லாமே சுபீட்சமாக இருக்கும்.
இதைக் கேட்ட குரு எழுந்தார்.
தன் கையிலிருந்த குயவன் தண்ணீர் குடிக்க கொடுத்த மண் பானையை ஓங்கித் தரையில் அடித்தார்.
பானை துண்டு துண்டாகச் சிதறியது.
குயவன் திகைத்தே நின்றான்.
துறவியை வெறித்துப் பார்த்தான்.
துறவி,
பின் நிதானமாகத் கீழே குனிந்தார்.
சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்று விடாமல் பொறுக்கி அடுக்கினார்.
பிறகு குயவனிடமே நீட்டினார்.
என்ன சாமி இது ?என்றான் குயவன் கோபமாக.
உனக்குத் தான் பிடிக்குமே அப்பா ?என்றார் குரு.
என்ன சாமி உளறுகிறீர்கள்?
குயவன் குரலில் உஷ்ணம் தெறித்தது.
என்னுடைய பானையை உடைத்து
அடுக்கி என்னிடமே நீட்டுகிறீர்கள்.
இது எனக்குப் பிடிக்கும் என்று வேறு சொல்கிறீர்கள். கேலியா ? கிண்டலா ?
என்னை வம்புக்கு இழுக்கிறீர்களா ?
அல்லது உங்களுக்குப் பைத்தியமா ?
என்றே ஆத்திரப் பட்டான்.
அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா.
உண்மையான அன்புடன் தான்
இதை செய்தேன்.
குரு சிறிதும் பதட்டப்
படாமலே சொன்னார்.
நான் செய்த அந்தப் பானையில் என் கடின உழைப்பு முழுவதும்
அடங்கியிருக்கிறதே !
அதை உடைக்க
நான் எப்படிச் சம்மதிப்பேன் ?
இது எனக்கு பிடிக்கும் என்று யார் உங்களுக்கு சொன்னது ?
சரி,
நல்லது.
ஆண்டவன்
படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று மட்டும் உனக்கு யார் சொன்னது ?
இதை இறைவன் வேறு மகிழ்ந்து ஏற்றுக்
கொண்டு மகிழ்ந்தே வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய் ?
எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக்
கேட்டு சகிப்பாள் ?
அல்லது எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப் படுவதை விரும்புவான்?
குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.
குயவன்
நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.
இறைவனிடம்
என்ன இல்லை ?
உன்னிடம் என்ன உண்டு ?
அவர் எதை கேட்கிறார் ?
எதை நீ கொடுப்பாய் ?
அவன் படைத்த இந்த உலகில் அவனால் படைக்கப்பட்ட நீ அவன் படைத்த பொருட்களை அவனுக்கே படைப்பாயா ?
இறைவனுக்கு
நான் அதைச் செய்தேன்.
இதைச் செய்வேன் என்பதும்,
பதிலுக்கு அவன் அதைச் செய்வான், இதைச் செய்வான் என்பதும் வெறும் ஆத்ம வஞ்சனையே !
தூய எண்ணங்களால் மட்டுமே இறைவனை உணர முடியும்.
மனதால் மட்டுமே இறையுணர்வை
எய்த முடியும்.
அன்பெனும் மலர் எடுத்து
அணுதினமும் பூசை செய்.
*நாம் எல்லா ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி சேர்ந்து வாழ்வதையே*
*இறைவன் எப்போதும்*
*விரும்புகின்றான்..!!*
பால் வெந்நீர் உறங்குவதேன் ?
விழிகள் எனும் கூர் வேல்
பொன்னார் மேனியனை காணும் போது மழுங்குவதேன் ?
காதல் எனும் பூக்கள் பணிமலையில் அதிகம் மலர்வதேன் ?
ஆதவன் இல்லா இருளில் கூட உன் தாமரை பாதங்கள் அழகாய் மொட்டு விரிப்பதேன்...?
உன் கருணை தனை தேன் என்று சொல்லவோ ?
தித்திக்கும் பாகு என்று சொல்லவோ ?
இனிப்பை விழுங்கும் கற்கண்டு என்று சொல்லவோ ...?
காட்டில் விளையும் கரும்பு என்று சொல்லவோ ... ?
தமிழ் போன்ற அமுதம் என்று சொல்லவோ .. ?
இல்லை எங்கள் உயிருக்கும் மேல் என்றே முடிப்பதோ ? 💐💐💐
*ஆன்மீகம் ரசிப்பதற்கா அல்லது சலிப்பதற்கா ?*
போன வருடம் இதே நாளில் ஒரு நண்பர் வீட்டுக்கு உணவு அருந்த சென்றிருந்தேன் ...
தம்பதிகள் இருவரும் ஆன்மீகத்தில் மூழ்கியவர்கள் .
எந்தக்கடவுளையும் விட்டு வைப்பதில்லை ..
கருப்பண்ண சுவாமி முதல் காத்தவராயன் வரை அனைத்து படங்களும் பூஜை அறையில் ...
அவர்களுடைய பூஜை அறை என்றும் எப்பொழுதும் விழா கோலம் பூண்டிருக்கும் ..
இதைத்தவிர பல இலவச இணைப்புக்களுடன் கிடைத்த யந்திரங்கள் குங்கும விபூதி பொட்டலங்கள் ...
ஓவ்வொரு மாதமும் முப்பது நாள் மட்டுமே அந்த நண்பரின் மனைவி விரதம் இருப்பாள் ...
பத்து விரல்களில் சிவப்பு கல் , நீலக்கல் பதித்த மோதிரங்கள் ..
இதைத்தவிர மந்திரித்துக்கட்டி விடப்பட்ட கருப்பு கயிறுகள் தாயத்துக்கள்...
அம்மன் கூட இவ்வளவு அலங்காரங்கள் செய்து கொள்வதில்லை
சாப்பிட உட்கார்ந்தேன் ....
இலை போட்டார்கள் . சாத்வீக உணவு ...
வெங்காயம் , பூண்டு , உப்பு , மிளகாய் , ஊறுகாய் இல்லாத உணவு ...
சாப்பிட்டு பழக்க மில்லை ...
சாப்பிடாமல் எழுந்தால் அவர்களை அவமதித்ததாக போய் விடும் .
வேண்டா வெறுப்பாய் சாப்பிட்டு விட்டு கூசாமல் சாப்பாடு படு ஜோர் என்றேன் ...
மெதுவாக வேறு subjects க்குள் பேச்சு நகர்ந்தது ....
அவர் சாதித்தது அவர்கள் பிள்ளைகள் சாதித்தது என்று பல cup க்களை காண்பித்தார் ...
குறை இல்லாத மனிதர் என்று நினைக்கும்போதே அவர் கண்கள் சற்று கலங்கின ...
மூத்த பெண்ணுக்கு 32 வயது ... திருமணம் தட்டிக்கொண்டே போக அவள் யவ்வனம் மங்கி கொண்டே போனது ...
மூத்த மகனுக்கு வேலை கிடைக்க வில்லை ...
BITS Pilani என்றாலும் கூப்பிட்டு வேலை தருவோர் இல்லை ...
அந்த அம்மாவின் கண்களும் குளமாயின ....
வேண்டாத தெய்வம் இல்லை
செய்யாத பூஜைகளோ பரிகாரங்களோ இல்லை ...
கடவுள் கண் திறக்க வே இல்லை ...
பூஜை அறையில் எவ்வளவு தெய்வங்கள் ஒருவருக்குமா காது கேட்க வில்லை என்றேன் ...
ஆமாம் என்பது அந்த அம்மா அணிந்திருந்த காதணிகள் அசைந்து காட்டின
நான் ஒன்று சொல்லட்டுமா என்று பணிவாக கேட்டேன் ...
ரவி !! நீ என் நண்பன் ...
எங்கள் நலனை விரும்புபவன் ...
தாராளமாய் சொல் ... கேட்கிறோம் என்றனர் ..
அவர்களை அவர்கள் பூஜை அறைக்கு அழைத்துச் சென்றேன் ...
பூஜை அறைக்குள் திருவானைக்
கோயில் சிலந்தி உயிர் பெற்று தன் வலையில் இரை கிடைக்குமா என்று ஏங்கி க் கொண்டிருந்தது ...
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் நான் சொல்லப்போவதை
இதோ பாருங்கள் ... உங்கள் பூஜை அறையை ...
ஆன்மீகம் என்பது ரசிக்க கூடிய ஒன்று. சலிக்க கூடியதில்லை ...
பல நாயன்மார்கள் ஆச்சாரியர்கள் இறைவனை அங்கம் அங்கமாக ரசித்து கவிகள் பாடியுள்ளனர் ..
ஒரே பிரம்மம் தான் பல பெயர்களில் வருகிறது ...
வீட்டில் மூன்று அல்லது நான்கு சுவாமி படங்கள் மட்டும் இருக்கட்டும் ...
மற்ற எல்லாவற்றையும் கோயிலிலோ இல்லை உங்கள் வீட்டு குப்பைத் தொட்டியிலோ போட்டு விடுங்கள் ..
மனம் கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும் ...
சில நல்ல காரியங்கள் மனதிற்கு கொஞ்சம் வலியை கொடுத்த பின்தான் நிறைவேறுகின்றன ...
சின்ன சின்ன சுவாமி போட்டோக்கள் இலவச யந்திரங்கள் எல்லா வற்றையும் தூக்கி எறியுங்கள்
மனதார ... வைத்திருக்கும் குறைவான சுவாமி படங்களுக்கு தினம் சுத்தம் செய்து கோலமிட்டு நெய் விளக்கு ஊதுபத்தி ஏத்துங்கள் ...
அழகாய் வட்டமாய் சந்தன பொட்டு வைத்து குங்குமம் இடுங்கள் ...
எல்லா சாமிக்கும் பொட்டு வைத்து பூஜை ஆரம்பிப்பது என்பது நிச்சயமாய் சலிப்பை உண்டாக்கும்
பூஜை அறை ஒரு குப்பை மேடு அல்ல ...
சுத்தமான இடம் ...
பூஜை அறையையும் சுத்தம் செய்து நம் மனதையும் சுத்தம் செய்து இறைவனை மனதார ஏக பக்தி கொண்டு வணங்குங்கள் ..
நினைக்கும் காரியங்கள் நிச்சயமாய் நிறைவேறும்
அபிராமி அந்தாதியில் சில பாடல்கள்
நான் சொல்வதற்கு அத்தாட்சி
63 வது பாடல் ...
--------
--------
சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயமுண்டென்று கொண்டாடிய வீணருக்கே
90
வருந்தா வகையென் மனத்தாமரையினில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக
44 .......
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
27 ....
-----நெஞ்சத்தழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை.....
என் நண்பனுக்கும் அவன் மனைவிக்கும் ஒரே ஆச்சரியம் ...
அவர்களைப் பார்த்தால் மாறுவார்களா என்ற சந்தேகமும் எனக்கு வந்தது ...
நான் மேலும் எதையும் சொல்லாமல் கிளம்பி வந்து விட்டேன் ..
ஒரு மாதம் ஓடியது ....
என் நண்பன் அவன் மனைவியுடன் வந்தான் ..
அவன் மனைவி முற்றிலும் மாறுபட்டவள் போல் தெரிந்தாள்,
விரல்களில் கல் பதித்த மோதிரங்கள் இல்லை
தாயத்துக்கள், கருப்பு கயிறுகள் இல்லை
மிகவும் எளிமையாக தெரிந்தாள்
முகத்தில் சொல்லவொண்ணா புன்னகை ...
ரவி ,, என் பெண்ணிற்கு வரன் கிடைத்து விட்டது ...
வரும் மாதம் திருமணம் ...
நீங்கள் வந்து நடத்திக்கொடுக்க வேண்டும் ..
இன்னொரு good news ...
என் பையனுக்கு google இல் வேலை கிடைத்துவிட்டது ...
Posting at Bangalore ....
நீ சொன்ன மாதிரியே பூஜை அறையை மாற்றி அமைத்தோம் ...
இரண்டு சுவாமி படங்கள் மட்டுமே ...
ஒன்று காஞ்சி பெரியவா
இன்னொன்று திருக்கடையூர் அபிராமி ....
சுத்தம் சோறு மட்டும் போடவில்லை நல்ல வழியையும் அவர்களுக்கு காண்பித்ததற்காக அபிராமிக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தேன் 👍💐
திருவே வந்து மணம் வீசும் தெய்வீகத் திருமணம் ...
திருப்பரங்குன்றம் தனில் தேரோடும் வீதி தனில் பார் போற்றும் பரமனுக்கு இன்று திருமணம்
கண்டதில்லை தேவரும் இப்படி ஓர் திருமணம் ...
கந்தர்வர்கள் பண் இசைத்து யாழ் வார்த்து களிப்பூட்டும் திருமணம்
வானமெங்கும் நட்சத்திர பட்டாசுக்கள்
வட்ட வடிவில் சந்திரன் எனும் கை சக்கரம் ...
இடியும் மின்னலும் இணை பிரியா தோழர்கள்
காற்றும் கனலும் கற்பனையின் வேந்தர்கள்
வானமும் பூமியும் மனம் மாற்றிக்கொண்ட காதலர்கள் ...
ரதியும் மன்மதனும் மலர் எனும் வேல் அம்புகள்
பட்சணங்கள் கோடி அதில் பாகு வெல்லம் அரசாட்சி ...
பாலும் தேனும் நெயும் மேல் நெளியும் பட்டாடைகள் ..
பரிசு பொருட்கள் பூமி தனில் சிதறிய மத்தாப்புக்கள்
புன்னகை பொன் நகையில் பூத்த புது மலர்கள் ...
உள்ளங்கள் தன் பள்ளங்கள் மூடி பவனி வரும் கோலம்
உதவியே அருளும் உமைக்கு வார்த்தைகள் இல்லா மௌனம் ...
தீப்பொறி தந்தவன் கல்யாண மண்டபத்தில் நடமாடும் அதிசயம்
காண பெற்றோர் கண்கள் கோடி வேண்டும் அவசியம்
பிரம்மாவின் வேதங்கள் விண்ணை தொடும் கோஷங்கள்
விஷ்ணுவின் கன்னிகாதானம் கண்ணில் சிந்தும் முத்துக்கள்
தேவானையின் ஐராவதம் அன்று முருகனின் நடையானது ...
முருகனின் மயில் தேவானையின் தோகை ஆனது ...
பள்ளி அறை பாற்கடல் ஆனது ... கிரியா சக்தி அங்கே மஞ்சம் விரித்து கொஞ்ச நேரம் கொஞ்சலாமே என்றே அழைத்தது
கட்டினான் மாங்கல்யம் ... கொட்டின முரசுகள் வெட்டு பட்டன ஊழ்வினைகள்
ஆறுமுகங்கள் ஏருமுகம் காட்டினவே