ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 29- தேவர்கள் அம்ருதம் அடைந்ததும், அசுரர்கள் வதமும் மோஹினி அவதாரம்

             


            उद्गच्छतस्तव करादमृतं हरत्सु

दैत्येषु तानशरणाननुनीय देवान् ।

सद्यस्तिरोदधिथ देव भवत्प्रभावा-

दुद्यत्स्वयूथ्यकलहा दितिजा बभूवु: ॥१॥


உத்₃க₃ச்ச₂தஸ்தவ கராத₃ம்ருதம் ஹரத்ஸு

தை₃த்யேஷு தாநஶரணாநநுநீய தே₃வாந் |

ஸத்₃யஸ்திரோத₃தி₄த₂ தே₃வ ப₄வத்ப்ரபா₄வா-

து₃த்₃யத்ஸ்வயூத்₂யகலஹா தி₃திஜா ப₃பூ₄வு: || 1||


1. தேவனே! உன் கையில் அம்ருத கலசத்துடன், தன்வந்தரி பகவானாக சமுத்திரத்தில் இருந்து தோன்றியதும், அசுரர்கள் அதை உன்னிடமிருந்து பறித்துச் சென்றனர்.
ஆதரவற்றவர்களாக இருந்த அந்த தேவர்களைச் சமாதானம் செய்து உடனே அங்கிருந்து மறைந்து விட்டாய். உன் மாயையினால் அசுரர்களிடையே அம்ருதத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் கலகம் உண்டாயிற்று.


श्यामां रुचाऽपि वयसाऽपि तनुं तदानीं

प्राप्तोऽसि तुङ्गकुचमण्डलभंगुरां त्वम् ।

पीयूषकुम्भकलहं परिमुच्य सर्वे

तृष्णाकुला: प्रतिययुस्त्वदुरोजकुम्भे ॥२॥


ஶ்யாமாம் ருசா(அ)பி வயஸா(அ)பி தநும் ததா₃நீம்

ப்ராப்தோ(அ)ஸி துங்க₃குசமண்ட₃லப₄ம்கு₃ராம் த்வம் |

பீயூஷகும்ப₄கலஹம் பரிமுச்ய ஸர்வே

த்ருஷ்ணாகுலா: ப்ரதியயுஸ்த்வது₃ரோஜகும்பே₄ || 2||


2. அப்போது நீ, நீல நிறத்துடன், நல்ல யௌவனமாய், பருத்த கொங்கைகளுடன் உள்ள அழகிய பெண் வடிவத்தில் அங்கு தோன்றினாய்.
அசுரர்கள், அம்ருதகலசத்தில் வைத்த ஆசையை விட்டுவிட்டு, உன்னுடைய கலசத்தைப் போன்ற கொங்கைகளில் ஆசை வைத்துத் உன்னிடம் வந்தார்கள்.


का त्वं मृगाक्षि विभजस्व सुधामिमामि-

त्यारूढरागविवशानभियाचतोऽमून् ।

विश्वस्यते मयि कथं कुलटाऽस्मि दैत्या

इत्यालपन्नपि सुविश्वसितानतानी: ॥३॥


கா த்வம் ம்ருகா₃க்ஷி விப₄ஜஸ்வ ஸுதா₄மிமாமி-

த்யாரூட₄ராக₃விவஶாநபி₄யாசதோ(அ)மூந் |

விஶ்வஸ்யதே மயி கத₂ம் குலடா(அ)ஸ்மி தை₃த்யா

இத்யாலபந்நபி ஸுவிஶ்வஸிதாநதாநீ: || 3||


3. “நீ யார்? இந்த அமிர்தத்தைப் பங்கிட்டுக்கொடு” என்று அசுரர்கள் வேண்டினர். காமம் கொண்ட அவர்களிடம், “நான் நல்ல நடத்தையற்றவள். என்னை எப்படி நம்புகிறீர்கள்?” என்று கேட்டாய். அவ்வாறு சொன்னாலும், அவர்கள் மனதில் மோகத்தையும் நம்பிக்கையையும் உண்டாக்கினாய்.


मोदात् सुधाकलशमेषु ददत्सु सा त्वं

दुश्चेष्टितं मम सहध्वमिति ब्रुवाणा ।

पङ्क्तिप्रभेदविनिवेशितदेवदैत्या

लीलाविलासगतिभि: समदा: सुधां ताम् ॥४॥


மோதா₃த் ஸுதா₄கலஶமேஷு த₃த₃த்ஸு ஸா த்வம்

து₃ஶ்சேஷ்டிதம் மம ஸஹத்₄வமிதி ப்₃ருவாணா |

பங்க்திப்ரபே₄த₃விநிவேஶிததே₃வதை₃த்யா

லீலாவிலாஸக₃திபி₄: ஸமதா₃: ஸுதா₄ம் தாம் || 4||

4.அசுரர்கள் அம்ருதகலசத்தைத் உன்னிடம் கொடுத்தனர். மோகினி ரூபத்தில் இருந்த நீ, என் கெட்ட செய்கையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டே, தேவர்களை ஒரு வரிசையிலும், அசுரர்களை ஒரு வரிசையிலும் அமர வைத்தாய். சிருங்கார நடையாலும், விளையாட்டுப் பேச்சுக்களாலும் அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தாய்.


अस्मास्वियं प्रणयिणीत्यसुरेषु तेषु

जोषं स्थितेष्वथ समाप्य सुधां सुरेषु ।

त्वं भक्तलोकवशगो निजरूपमेत्य

स्वर्भानुमर्धपरिपीतसुधं व्यलावी: ॥५॥


அஸ்மாஸ்வியம் ப்ரணயிணீத்யஸுரேஷு தேஷு

ஜோஷம் ஸ்தி₂தேஷ்வத₂ ஸமாப்ய ஸுதா₄ம் ஸுரேஷு |

த்வம் ப₄க்தலோகவஶகோ₃ நிஜரூபமேத்ய

ஸ்வர்பா₄நுமர்த₄பரிபீதஸுத₄ம் வ்யலாவீ: || 5||


5. அசுரர்கள் மன மயக்கத்தில் பேசாமல் இருந்தனர். பக்தர்களுக்கு அருள் புரியும் நீ, அமிர்தத்தை தேவர்களுக்குப் பங்கிட்டு முடித்தாய். பிறகு உன்பகவத்ரூபத்தை எடுத்துக் கொண்டு, தேவர்களுடன் அமர்ந்து கொஞ்சம் அமிர்தம் உண்டுவிட்ட ராகுவின் தலையை வெட்டினாய்.


त्वत्त: सुधाहरणयोग्यफलं परेषु

दत्वा गते त्वयि सुरै: खलु ते व्यगृह्णन् ।

घोरेऽथ मूर्छति रणे बलिदैत्यमाया-

व्यामोहिते सुरगणे त्वमिहाविरासी: ॥६॥


த்வத்த: ஸுதா₄ஹரணயோக்₃யப₂லம் பரேஷு

த₃த்வா க₃தே த்வயி ஸுரை: க₂லு தே வ்யக்₃ருஹ்ணந் |

கோ₄ரே(அ)த₂ மூர்ச₂தி ரணே ப₃லிதை₃த்யமாயா-

வ்யாமோஹிதே ஸுரக₃ணே த்வமிஹாவிராஸீ: || 6||


6. உன்னிடமிருந்து அமிர்தகலசத்தைப் பறித்த அசுரர்களுக்குத் தகுந்த பலனைத் தந்து விட்டு மறைந்துவிட்டாய். உடனே, அசுரர்கள் தேவர்களுடன் சண்டையிட்டனர். பலி என்ற அசுரனின் மாயையால் தேவர்கள் திகைத்தனர். அப்போது, நீ மறுபடியும் அங்கு தோன்றினாய்.


त्वं कालनेमिमथ मालिमुखाञ्जघन्थ

शक्रो जघान बलिजम्भवलान् सपाकान् ।

शुष्कार्द्रदुष्करवधे नमुचौ च लूने

फेनेन नारदगिरा न्यरुणो रणं त्वं ॥७॥


த்வம் காலநேமிமத₂ மாலிமுகா₂ஞ்ஜக₄ந்த₂

ஶக்ரோ ஜகா₄ந ப₃லிஜம்ப₄வலாந் ஸபாகாந் |

ஶுஷ்கார்த்₃ரது₃ஷ்கரவதே₄ நமுசௌ ச லூநே

பே₂நேந நாரத₃கி₃ரா ந்யருணோ ரணம் த்வம் || 7||


7. காலநேமி, மாலி முதலிய பல அசுரர்களை அழித்தாய். பாகன், பலி, ஜம்பன், வலன் என்ற அசுரர்களை இந்திரன் கொன்றான். காய்ந்ததாலும், நனைந்ததாலும் அழிக்கப்பட முடியாத நமுசியை, நுரையினால் அழித்தான். பிறகு, நாரதர் சொன்னதன் பேரில் போர் நிறுத்தப்பட்டது.


योषावपुर्दनुजमोहनमाहितं ते

श्रुत्वा विलोकनकुतूहलवान् महेश: ।

भूतैस्समं गिरिजया च गत: पदं ते

स्तुत्वाऽब्रवीदभिमतं त्वमथो तिरोधा: ॥८॥


யோஷாவபுர்த₃நுஜமோஹநமாஹிதம் தே

ஶ்ருத்வா விலோகநகுதூஹலவாந் மஹேஶ: |

பூ₄தைஸ்ஸமம் கி₃ரிஜயா ச க₃த: பத₃ம் தே

ஸ்துத்வா(அ)ப்₃ரவீத₃பி₄மதம் த்வமதோ₂ திரோதா₄: || 8||


8. அசுரர்களை மயக்க நீ மோகினி ரூபம் எடுத்ததைக் கேட்ட சிவன், உன்னை அவ்வடிவத்தில் காண ஆசை கொண்டு, பார்வதியுடனும், பூதகணங்களுடனும், உன் இருப்பிடமான வைகுண்டத்தை அடைந்தார். உன்னைத் துதித்து, தன் விருப்பத்தைச் சொன்னார். அப்பொழுதே நீ அங்கிருந்து மறைந்தாய்.


आरामसीमनि च कन्दुकघातलीला-

लोलायमाननयनां कमनीं मनोज्ञाम् ।

त्वामेष वीक्ष्य विगलद्वसनां मनोभू-

वेगादनङ्गरिपुरङ्ग समालिलिङ्ग ॥९॥


ஆராமஸீமநி ச கந்து₃ககா₄தலீலா-

லோலாயமாநநயநாம் கமநீம் மநோஜ்ஞாம் |

த்வாமேஷ வீக்ஷ்ய விக₃லத்₃வஸநாம் மநோபூ₄-

வேகா₃த₃நங்க₃ரிபுரங்க₃ ஸமாலிலிங்க₃ || 9||


9. அங்கு ஒரு தோட்டத்தில் பந்தாடிக்கொண்டு, அழகிய பெண் வடிவில் தோன்றினாய். அழகிய அசையும் கண்களுடன், காற்றினால் மேலாடை நழுவ, மோகத்தைக் கொடுக்கும்படி விளையாடிக் கொண்டிருந்தாய். மன்மதனை வென்ற பரமசிவனே அதைப் பார்த்து மயங்கி, உன்னைத் தழுவ முயன்றார்.


भूयोऽपि विद्रुतवतीमुपधाव्य देवो

वीर्यप्रमोक्षविकसत्परमार्थबोध: ।

त्वन्मानितस्तव महत्त्वमुवाच देव्यै

तत्तादृशस्त्वमव वातनिकेतनाथ ॥१०॥


பூ₄யோ(அ)பி வித்₃ருதவதீமுபதா₄வ்ய தே₃வோ

வீர்யப்ரமோக்ஷவிகஸத்பரமார்த₂போ₃த₄: |

த்வந்மாநிதஸ்தவ மஹத்த்வமுவாச தே₃வ்யை

தத்தாத்₃ருஶஸ்த்வமவ வாதநிகேதநாத₂ || 10||


10. நழுவி ஓடிய மோகினியைப் பின்தொடர்ந்து ஓடிய பரமசிவனின் வீர்யம் நழுவியது. உடனே தெளிவு பெற்றார். நீயும் பரமசிவனைப் போற்றினாய். சிவனும் பார்வதியிடமும், மற்றவர்களிடமும் உன் பெருமையை எடுத்துரைத்தார். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த குருவாயூரப்பா! காக்கவேண்டும்.
=============================================


Comments

ravi said…
*The effect of chanting Sri Matre :*

கூப்பிட்டால் ஓடி வருபவள் கண்டிப்பாக ஒரு தாயாகத்தான் இருக்க முடியும் ..

மற்றவர்கள் இரு வரேன் என்று ஏதாவது ஜால்ஜாப்பு சொல்வார்கள் ...

தாய் அப்படி இல்லை ..

போட்டதை போட்டபடி பரக்க பரக்க ஓடி வருவாள் .

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 1000 நாமங்கள் கொண்டவை

முதல் நாமம் ஸ்ரீ மாதா ...

அபிராமி பட்டரும் தாயே என்றே அபிராமி அந்தாதியை தொடங்கி முடிக்கிறார் ...

ஒரே ஒரு நாமம் சொன்னாலும் மிகவும் பணிவுடன் பக்தியுடன் சொல்ல வேண்டும்

ஸ்ரீ மாத்ரே என்று சொல்லும் போதும் பீஜ மந்திரங்களையும் சேர்த்து சொன்னால் பலன் பல மடங்கு கிடைக்கும்

*ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் மாத்ரே நம :*

ஓம் என்பது மனதிற்கு நிம்மதியை தரவல்லது

*ஐம்* ... மஹா சரஸ்வதியின் பீஜ மந்திரம்

*ஹ்ரீம்* : துர்க்கையின் பீஜ மந்திரம்

*ஸ்ரீம்*

மஹா லட்சுமியின் பீஜ மந்திரம்

மூன்று தாய்களை ஒன்று சேர்த்து அழைக்கும் போது கிடைக்கும் சௌபாக்கியங்களில் குறைவே இருகாது ..

இது சத்தியம் !!👌
ravi said…
*எந்த பிறந்த தினத்தை கேட்கிறாய் ?*

ரமண மகரிஷியிடம் அவருடைய பக்தர்கள் சென்று சுவாமி உங்கள் பிறந்த நாளை சொல்ல முடியுமா ?

நாங்கள் ஒரு விழா எடுக்க ஆசைப்படுகிறோம் என்றனர்

உடனே ரமணர் ... என்னுடைய எந்த பிறவியுடைய பிறந்த நாளை கேட்கறீர்கள் ...

நான் எடுத்த எல்லா பிறவிகளும் எனக்குத் தெரியும் ...

வாயடைத்து போய் நின்றனர் அவரை அணுகி கேட்டவர்கள் ...

இதைத்தான் கிருஷ்ணன்
Bg. 4.5 இல்

बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन ।
तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप ॥ ५ ॥

bahūni me vyatītāni
janmāni tava cārjuna
tāny ahaṁ veda sarvāṇi
na tvaṁ vettha paran-tapa

Many, many births both you and I have passed. I can remember all of them, but you cannot, O subduer of the enemy!

ரமணருக்கு தெரியும் இந்த ஆத்மா எத்தனை பிறவிகள் எடுத்தது என்று ஆனால் அவர் பக்தர்களுக்கு அர்ஜுனனைப்போல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
ravi said…
*அம்மாடி ; அப்பாடி* என்று ஒரு வேலை முடிந்தபின் அல்லது உடம்பு உபாதைகள் நீங்கியவுடன் நாம் சொல்கிறோம் அல்லவா ... !

அதன் உண்மை அர்த்தம் என்னவென்று தெரியுமா ?

*அப்பாடி* ... நம் அப்பாவான ஈசன் எப்பொழும் ஆடிக்கொண்டே உலகம் இயங்க வைக்கிறார் ...

அம்மாவான அம்பிகை உலகம் இயங்க ஆடிக்கொண்டே ( *அம்மாடி* ) உயிர்களை உற்பத்தி செய்கிறாள் ...

இவ்வளவு கடினமான வேலைகளை இந்த இனிய தம்பதிகள் ஆனந்தமாக ஆடிக்கொண்டே விளையாட்டாய் செய்து
கொண்டிருக்கிறார்கள் ...

அதனால் தான் வேலை பளு , சுமை , உடல் உபாதைகள் குறைந்தவுடன்

*அப்பாடி , அம்மாடி* என்று சொல்லி நம்மையும் அறியாமல் நன்றி செலுத்துகிறோம் அந்த தெய்வீக தம்பதிகளுக்கு 💐
ravi said…
கண்ணா* ...

உனை அன்றி ஓர் தெய்வம் கண்டிலேன்

என் உயிராய் மனமாய்
மணம் வீசுகிறாய்

பொதிகை மலை தென்றலை உணவருந்த கூப்பிட்டேன் ...

உனை மறைத்து அழைத்த காற்றில் கீதமாய் நீ வந்தாய் ..

ஒளி வீசும் கனலை அழைத்தேன் ஓடி விளையாட ...

அக்னியை தரம் இன்றி தழுவிக்கொண்டேன் ...
உனை தீண்டும் இன்பம் தந்தாய் நான் கேட்காமலே

குனிந்து நின்ற வானம் பார்த்தேன் ...

குமரி பெண் போல பரந்து நின்ற அதன் மனம் கண்டேன் ...

மனம் எங்கும் உன் நிறம் கண்டேன் அதில் நிறை கொண்டேன் ..

பூமி தனில் நீ பதித்த பாதம் கண்டேன் ...

ஊன் உருக உடல் மெலிய உதடுகள் குவிய உள்ளம்
குதூகலிக்க

பதித்த பாதம் தனில் தடையின்றி புரண்டேன் ...

மேனி தக தக வென்று தங்கம் போல் ஜொலிக்க

என் மதிப்பு விண்ணைத் தொடக்கண்டேன் !!🦚
ravi said…
*இறைவன் விரும்புவது என்ன..?.*

குயவன் ஒருவன் பானைகளைச்
செய்து கொண்டிருந்தான்.

அங்கு ஏராளமான பானைகள், குடங்கள்,சட்டிகள்
அடுக்கப்பட்டிருந்தன.

அவன் அருகில் ஓர் ஆடும்
கட்டிப் போடப் பட்டிருந்தது.

அவ்வப்போது
அது 'மே..மே..' என்று மே மாதம் மட்டும் இல்லாமல் மற்ற எல்லா மாதங்களிலும்
கத்திக் கொண்டிருந்தது.

அங்கே ஒரு வயதான மகான் ஒருவர் மெல்ல நடந்தே அங்கே வந்தார்.

குயவன் பானை செய்வதைப் பார்த்த படியே தரையில் அமர்ந்தார்.

வந்தவருக்கு ஒரு சிறு மண் கலயத்தில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான் அந்தக் குயவன்.

அதை வாங்கிக் குடித்த குரு, ....

இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா ?
என்று கேட்டார்.

இல்லீங்க சாமி.
இது ஏதோ காட்டாடு.

இந்தப் பக்கமாக வந்தது.
பிடித்துக் கட்டிப் போட்டேன் !
என்றான் குயவன்.

எதற்காக ?
என்று கேட்டார் குரு.

பண்டிகை வரப் போகிறதே !

இறைவனுக்கு பலி
கொடுக்கலாமென்றுதான்....
என இழுத்தான் குயவன்.

பலியா ?
குரு வியப்புடனே வினவினார்.

ஆமாம்சாமி.

தெய்வத்துக்குத் திருவிழா அன்றைக்குப்
பலி கொடுத்தால் விசேஷம்.

தெய்வமும் மகிழ்ந்தே வரம் கொடுக்கும்.
எல்லாமே சுபீட்சமாக இருக்கும்.

இதைக் கேட்ட குரு எழுந்தார்.

தன் கையிலிருந்த குயவன் தண்ணீர் குடிக்க கொடுத்த மண் பானையை ஓங்கித் தரையில் அடித்தார்.

பானை துண்டு துண்டாகச் சிதறியது.

குயவன் திகைத்தே நின்றான்.

துறவியை வெறித்துப் பார்த்தான்.

துறவி,
பின் நிதானமாகத் கீழே குனிந்தார்.

சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்று விடாமல் பொறுக்கி அடுக்கினார்.
பிறகு குயவனிடமே நீட்டினார்.

என்ன சாமி இது ?என்றான் குயவன் கோபமாக.

உனக்குத் தான் பிடிக்குமே அப்பா ?என்றார் குரு.

என்ன சாமி உளறுகிறீர்கள்?
குயவன் குரலில் உஷ்ணம் தெறித்தது.

என்னுடைய பானையை உடைத்து
அடுக்கி என்னிடமே நீட்டுகிறீர்கள்.

இது எனக்குப் பிடிக்கும் என்று வேறு சொல்கிறீர்கள். கேலியா ? கிண்டலா ?
என்னை வம்புக்கு இழுக்கிறீர்களா ?

அல்லது உங்களுக்குப் பைத்தியமா ?
என்றே ஆத்திரப் பட்டான்.

அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா.

உண்மையான அன்புடன் தான்
இதை செய்தேன்.

குரு சிறிதும் பதட்டப்
படாமலே சொன்னார்.

நான் செய்த அந்தப் பானையில் என் கடின உழைப்பு முழுவதும்
அடங்கியிருக்கிறதே !

அதை உடைக்க
நான் எப்படிச் சம்மதிப்பேன் ?

இது எனக்கு பிடிக்கும் என்று யார் உங்களுக்கு சொன்னது ?

சரி,
நல்லது.

ஆண்டவன்
படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று மட்டும் உனக்கு யார் சொன்னது ?

இதை இறைவன் வேறு மகிழ்ந்து ஏற்றுக்
கொண்டு மகிழ்ந்தே வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய் ?

எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக்
கேட்டு சகிப்பாள் ?

அல்லது எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப் படுவதை விரும்புவான்?

குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவன்
நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

இறைவனிடம்
என்ன இல்லை ?

உன்னிடம் என்ன உண்டு ?

அவர் எதை கேட்கிறார் ?

எதை நீ கொடுப்பாய் ?

அவன் படைத்த இந்த உலகில் அவனால் படைக்கப்பட்ட நீ அவன் படைத்த பொருட்களை அவனுக்கே படைப்பாயா ?

இறைவனுக்கு
நான் அதைச் செய்தேன்.
இதைச் செய்வேன் என்பதும்,
பதிலுக்கு அவன் அதைச் செய்வான், இதைச் செய்வான் என்பதும் வெறும் ஆத்ம வஞ்சனையே !

தூய எண்ணங்களால் மட்டுமே இறைவனை உணர முடியும்.

மனதால் மட்டுமே இறையுணர்வை
எய்த முடியும்.

அன்பெனும் மலர் எடுத்து
அணுதினமும் பூசை செய்.

*நாம் எல்லா ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி சேர்ந்து வாழ்வதையே*
*இறைவன் எப்போதும்*
*விரும்புகின்றான்..!!*
ravi said…
பவழங்கள் பஞ்சு மெத்தை போட்டு பவனி வரும் இதழ்களில்
பால் வெந்நீர் உறங்குவதேன் ?

விழிகள் எனும் கூர் வேல்

பொன்னார் மேனியனை காணும் போது மழுங்குவதேன் ?

காதல் எனும் பூக்கள் பணிமலையில் அதிகம் மலர்வதேன் ?

ஆதவன் இல்லா இருளில் கூட உன் தாமரை பாதங்கள் அழகாய் மொட்டு விரிப்பதேன்...?

உன் கருணை தனை தேன் என்று சொல்லவோ ?

தித்திக்கும் பாகு என்று சொல்லவோ ?

இனிப்பை விழுங்கும் கற்கண்டு என்று சொல்லவோ ...?

காட்டில் விளையும் கரும்பு என்று சொல்லவோ ... ?

தமிழ் போன்ற அமுதம் என்று சொல்லவோ .. ?

இல்லை எங்கள் உயிருக்கும் மேல் என்றே முடிப்பதோ ? 💐💐💐
ravi said…
*உண்மை சம்பவம்*

*ஆன்மீகம் ரசிப்பதற்கா அல்லது சலிப்பதற்கா ?*

போன வருடம் இதே நாளில் ஒரு நண்பர் வீட்டுக்கு உணவு அருந்த சென்றிருந்தேன் ...

தம்பதிகள் இருவரும் ஆன்மீகத்தில் மூழ்கியவர்கள் .

எந்தக்கடவுளையும் விட்டு வைப்பதில்லை ..

கருப்பண்ண சுவாமி முதல் காத்தவராயன் வரை அனைத்து படங்களும் பூஜை அறையில் ...

அவர்களுடைய பூஜை அறை என்றும் எப்பொழுதும் விழா கோலம் பூண்டிருக்கும் ..

இதைத்தவிர பல இலவச இணைப்புக்களுடன் கிடைத்த யந்திரங்கள் குங்கும விபூதி பொட்டலங்கள் ...

ஓவ்வொரு மாதமும் முப்பது நாள் மட்டுமே அந்த நண்பரின் மனைவி விரதம் இருப்பாள் ...

பத்து விரல்களில் சிவப்பு கல் , நீலக்கல் பதித்த மோதிரங்கள் ..

இதைத்தவிர மந்திரித்துக்கட்டி விடப்பட்ட கருப்பு கயிறுகள் தாயத்துக்கள்...

அம்மன் கூட இவ்வளவு அலங்காரங்கள் செய்து கொள்வதில்லை

சாப்பிட உட்கார்ந்தேன் ....

இலை போட்டார்கள் . சாத்வீக உணவு ...

வெங்காயம் , பூண்டு , உப்பு , மிளகாய் , ஊறுகாய் இல்லாத உணவு ...

சாப்பிட்டு பழக்க மில்லை ...

சாப்பிடாமல் எழுந்தால் அவர்களை அவமதித்ததாக போய் விடும் .

வேண்டா வெறுப்பாய் சாப்பிட்டு விட்டு கூசாமல் சாப்பாடு படு ஜோர் என்றேன் ...

மெதுவாக வேறு subjects க்குள் பேச்சு நகர்ந்தது ....

அவர் சாதித்தது அவர்கள் பிள்ளைகள் சாதித்தது என்று பல cup க்களை காண்பித்தார் ...

குறை இல்லாத மனிதர் என்று நினைக்கும்போதே அவர் கண்கள் சற்று கலங்கின ...

மூத்த பெண்ணுக்கு 32 வயது ... திருமணம் தட்டிக்கொண்டே போக அவள் யவ்வனம் மங்கி கொண்டே போனது ...

மூத்த மகனுக்கு வேலை கிடைக்க வில்லை ...

BITS Pilani என்றாலும் கூப்பிட்டு வேலை தருவோர் இல்லை ...

அந்த அம்மாவின் கண்களும் குளமாயின ....

வேண்டாத தெய்வம் இல்லை

செய்யாத பூஜைகளோ பரிகாரங்களோ இல்லை ...

கடவுள் கண் திறக்க வே இல்லை ...

பூஜை அறையில் எவ்வளவு தெய்வங்கள் ஒருவருக்குமா காது கேட்க வில்லை என்றேன் ...

ஆமாம் என்பது அந்த அம்மா அணிந்திருந்த காதணிகள் அசைந்து காட்டின

நான் ஒன்று சொல்லட்டுமா என்று பணிவாக கேட்டேன் ...

ரவி !! நீ என் நண்பன் ...

எங்கள் நலனை விரும்புபவன் ...

தாராளமாய் சொல் ... கேட்கிறோம் என்றனர் ..

அவர்களை அவர்கள் பூஜை அறைக்கு அழைத்துச் சென்றேன் ...

பூஜை அறைக்குள் திருவானைக்
கோயில் சிலந்தி உயிர் பெற்று தன் வலையில் இரை கிடைக்குமா என்று ஏங்கி க் கொண்டிருந்தது ...

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் நான் சொல்லப்போவதை

இதோ பாருங்கள் ... உங்கள் பூஜை அறையை ...

ஆன்மீகம் என்பது ரசிக்க கூடிய ஒன்று. சலிக்க கூடியதில்லை ...

பல நாயன்மார்கள் ஆச்சாரியர்கள் இறைவனை அங்கம் அங்கமாக ரசித்து கவிகள் பாடியுள்ளனர் ..

ஒரே பிரம்மம் தான் பல பெயர்களில் வருகிறது ...

வீட்டில் மூன்று அல்லது நான்கு சுவாமி படங்கள் மட்டும் இருக்கட்டும் ...

மற்ற எல்லாவற்றையும் கோயிலிலோ இல்லை உங்கள் வீட்டு குப்பைத் தொட்டியிலோ போட்டு விடுங்கள் ..

மனம் கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும் ...

சில நல்ல காரியங்கள் மனதிற்கு கொஞ்சம் வலியை கொடுத்த பின்தான் நிறைவேறுகின்றன ...

சின்ன சின்ன சுவாமி போட்டோக்கள் இலவச யந்திரங்கள் எல்லா வற்றையும் தூக்கி எறியுங்கள்

மனதார ... வைத்திருக்கும் குறைவான சுவாமி படங்களுக்கு தினம் சுத்தம் செய்து கோலமிட்டு நெய் விளக்கு ஊதுபத்தி ஏத்துங்கள் ...

அழகாய் வட்டமாய் சந்தன பொட்டு வைத்து குங்குமம் இடுங்கள் ...

ravi said…
Post office இல் stamp பின் மேல் முத்திரை குத்துவதைப்போல்
எல்லா சாமிக்கும் பொட்டு வைத்து பூஜை ஆரம்பிப்பது என்பது நிச்சயமாய் சலிப்பை உண்டாக்கும்

பூஜை அறை ஒரு குப்பை மேடு அல்ல ...
சுத்தமான இடம் ...

பூஜை அறையையும் சுத்தம் செய்து நம் மனதையும் சுத்தம் செய்து இறைவனை மனதார ஏக பக்தி கொண்டு வணங்குங்கள் ..

நினைக்கும் காரியங்கள் நிச்சயமாய் நிறைவேறும்

அபிராமி அந்தாதியில் சில பாடல்கள்
நான் சொல்வதற்கு அத்தாட்சி

63 வது பாடல் ...

--------
--------

சமயம்

ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்

வேறும் சமயமுண்டென்று கொண்டாடிய வீணருக்கே

90

வருந்தா வகையென் மனத்தாமரையினில் வந்து புகுந்து

இருந்தாள் பழைய இருப்பிடமாக

44 .......

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்

27 ....

-----நெஞ்சத்தழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்

துடைத்தனை.....


என் நண்பனுக்கும் அவன் மனைவிக்கும் ஒரே ஆச்சரியம் ...

அவர்களைப் பார்த்தால் மாறுவார்களா என்ற சந்தேகமும் எனக்கு வந்தது ...

நான் மேலும் எதையும் சொல்லாமல் கிளம்பி வந்து விட்டேன் ..

ஒரு மாதம் ஓடியது ....

என் நண்பன் அவன் மனைவியுடன் வந்தான் ..

அவன் மனைவி முற்றிலும் மாறுபட்டவள் போல் தெரிந்தாள்,

விரல்களில் கல் பதித்த மோதிரங்கள் இல்லை

தாயத்துக்கள், கருப்பு கயிறுகள் இல்லை

மிகவும் எளிமையாக தெரிந்தாள்

முகத்தில் சொல்லவொண்ணா புன்னகை ...

ரவி ,, என் பெண்ணிற்கு வரன் கிடைத்து விட்டது ...

வரும் மாதம் திருமணம் ...

நீங்கள் வந்து நடத்திக்கொடுக்க வேண்டும் ..

இன்னொரு good news ...

என் பையனுக்கு google இல் வேலை கிடைத்துவிட்டது ...
Posting at Bangalore ....

நீ சொன்ன மாதிரியே பூஜை அறையை மாற்றி அமைத்தோம் ...

இரண்டு சுவாமி படங்கள் மட்டுமே ...

ஒன்று காஞ்சி பெரியவா

இன்னொன்று திருக்கடையூர் அபிராமி ....

சுத்தம் சோறு மட்டும் போடவில்லை நல்ல வழியையும் அவர்களுக்கு காண்பித்ததற்காக அபிராமிக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தேன் 👍💐
ravi said…
திருமணமாம் திருமணம் தித்திக்கும் திருமணம் 🐓🦚

திருவே வந்து மணம் வீசும் தெய்வீகத் திருமணம் ...

திருப்பரங்குன்றம் தனில் தேரோடும் வீதி தனில் பார் போற்றும் பரமனுக்கு இன்று திருமணம்

கண்டதில்லை தேவரும் இப்படி ஓர் திருமணம் ...

கந்தர்வர்கள் பண் இசைத்து யாழ் வார்த்து களிப்பூட்டும் திருமணம்

வானமெங்கும் நட்சத்திர பட்டாசுக்கள்

வட்ட வடிவில் சந்திரன் எனும் கை சக்கரம் ...

இடியும் மின்னலும் இணை பிரியா தோழர்கள்

காற்றும் கனலும் கற்பனையின் வேந்தர்கள்

வானமும் பூமியும் மனம் மாற்றிக்கொண்ட காதலர்கள் ...

ரதியும் மன்மதனும் மலர் எனும் வேல் அம்புகள்

பட்சணங்கள் கோடி அதில் பாகு வெல்லம் அரசாட்சி ...

பாலும் தேனும் நெயும் மேல் நெளியும் பட்டாடைகள் ..

பரிசு பொருட்கள் பூமி தனில் சிதறிய மத்தாப்புக்கள்

புன்னகை பொன் நகையில் பூத்த புது மலர்கள் ...

உள்ளங்கள் தன் பள்ளங்கள் மூடி பவனி வரும் கோலம்

உதவியே அருளும் உமைக்கு வார்த்தைகள் இல்லா மௌனம் ...

தீப்பொறி தந்தவன் கல்யாண மண்டபத்தில் நடமாடும் அதிசயம்

காண பெற்றோர் கண்கள் கோடி வேண்டும் அவசியம்

பிரம்மாவின் வேதங்கள் விண்ணை தொடும் கோஷங்கள்

விஷ்ணுவின் கன்னிகாதானம் கண்ணில் சிந்தும் முத்துக்கள்

தேவானையின் ஐராவதம் அன்று முருகனின் நடையானது ...

முருகனின் மயில் தேவானையின் தோகை ஆனது ...

பள்ளி அறை பாற்கடல் ஆனது ... கிரியா சக்தி அங்கே மஞ்சம் விரித்து கொஞ்ச நேரம் கொஞ்சலாமே என்றே அழைத்தது

கட்டினான் மாங்கல்யம் ... கொட்டின முரசுகள் வெட்டு பட்டன ஊழ்வினைகள்

ஆறுமுகங்கள் ஏருமுகம் காட்டினவே
ravi said…
*அம்மா*

காட்டாற்று வெள்ளம் என வரும் உன் கருணை நதியில்

மிதக்கும் முத்துக்கள் எல்லாம் உன் முக்தர்கள் அன்றோ ?

கடல் அலைகள் கவிபாடி கரை வந்து எங்கள் கறை நீக்கும் அழகென்ன !

உன் இசை பாடும் திமிங்கலம் இணை பிரியா நட்பு நாடும் அழகென்ன !

பசை கொண்ட எங்கள் உள்ளங்களில் உன் பாதங்கள் பதிந்து போகும் அழகென்ன !

திசை எட்டும் ஆடையாய் உடுத்தும் ஈசன் உன் வேல் விழியால் தோல்வி அடையும் அழகென்ன ...

உன் மூன்று வேல் விழிகளில் ஒன்று ஈசனை வீழ்த்தவும்

மீதி இரு வேல் விழிகளை குமரனை மயக்கவும்

சீதனமாய் தேவானைக்கும் வள்ளிக்கும் தந்தநையோ அம்மா ? 🙏
ravi said…
தெய்வம் குனியுமோ தேகங்கள் மிளிருமோ ...

தேடித் தேடி நடந்த பாதங்கள் தேய்ந்து போகுமோ

ஓடி ஓடி உரைத்த வார்த்தைகள் காற்றில் கரைந்து போகுமோ

வேண்டி வேண்டி நின்ற கரங்கள் விலை இன்றி ஆசி தருமோ

வேடிக்கை மாந்தர்கள் நடுவே தேடுகின்றேன் தொலைத்த மாணிக்கத்தை ...

தொடும் அளவு தெரிந்தும் தூரத்தில் நிற்பதேன்...

உனை பாடும் பணியே பணியாய் அருள்வாய் ... உனை நாடும் நெஞ்சே நிறைவாய் தருவாய்
ravi said…
யானை முகம் உதவியால் ஆறுமுகம் ஆனந்த கூத்தாடினான் பித்தனுக்கு நிகராய் ...

சித்தம் எல்லாம் தேவானை பக்கம் ..

பன்னிரண்டு கண்களில் பார் காணா பரவசம்

குன்றம் அதில் கல்யாணம் கோகுலம் போல் எங்கும் கோபியர் கூட்டம் ...

மாதவன் இவன் என்றே சொல்லினர் பலர் ...

மன்மதன் என்றே போற்றினர் பலர் ...

மாதவனும் இல்லை மன்மதனும் இல்லை ...

மா தவம் செய்த புண்ணியம் என்றனர் பலர் ....

தேவர்கள் உணர்ந்தனர் சிவ வாசம் துறந்தால் கிடைப்பது சிறை வாசம் என்றே

இந்திரன் தான் வளர்த்த ஐராவதம் மதம் கண்டதில்லை இன்று வரை

தனக்கு ஏனோ பிடித்தது என்றே புலம்பினான்

தேவலோகம் திருவிழா காண

பள்ளி அறையில் நுழைந்தாள் அழகென்னும் ஆரணங்கு ...

பள்ளி அறை சென்று படிக்காத பாடம் பதுமை அவள் கண்டிரா அனுபவம்

பரமன் தோள் மீது படர்ந்தாள் ... சிறகின்றி பறந்தாள் ..

இடம் சிறந்தது என்றே வாதிட்டாள்

முருகன் வலமும் சிறப்படைய என்ன வழி என்றே யோசித்தான் ...

ஆலோலோ பாட்டு ஒன்று அவன் காதில் மட்டும் விழுந்தது ...

தேனும் தினை மாவும் கந்தன் புகழை கூவி கூவி அழைத்தன.....

காக்கை குருவிகள் வந்து வந்து அழைத்தன ...... 🦚🐓
ravi said…
*அம்மா*

அலை பாயும் என் நெஞ்சமதில் உன் கலை பாய வைத்தாய்

நிலை இல்லா இந்த வாழ்வு தனை உலை கொதிக்க வைத்த உணவு தந்தாய்

மலை போல் இடர் வரினும் மழை போல் இளக வைத்தாய்

மாணிக்கம் நீ என்றே உணர்ந்தோர்க்கு தலை காத்து நிமிர வைத்தாய்

வலை போன்ற வாழ்க்கை தனில் சிக்கி மீன் போல் துடிப்போர் வினை தனை வெட்டி விட்டாய்

உனை தினம் நினைப்போர்க்கு உயர்வை என்றும் உரிமை ஆக்கினாய்
ravi said…
Shriram

1st November

*The Bhagavad-Gita is the Mother of all Scriptures*

The Bhagavad-Gita is the mother of all books. It is superior even to the Vedas, because while the latter were the result of God’s exhalation, the former emanated from His own lips. What is the subject of the Geeta? It discusses both the theoretical and practical aspects of philosophical ignorance and its removal. It begins with the misconception that overtook Arjuna: he had a fit of discontentment owing to the pride of doership, and this gave rise to doubts about what to do and what not to. The Geeta ends with the clarification of these doubts; that is, the pleasure and regret both disappeared with the restoration of the knowledge that it is God who is the real doer.

The exposition of the Bhagavad-Gita in the Dnyaneshwari is so masterly that one can only think that the exponent was but a re-incarnation, centuries later, of the Lord Himself. The exposition, no less than the original, was from the same divine source of inspiration. We should try to practice its preaching, which, very succinctly, is that God is the real doer and we have only to act without a feeling of ego and pride.

If a marriageable girl goes to attend the wedding or betrothal of a friend or relative, she watches the ceremony with a mind crowded with hopes and aspirations about herself. Similarly, as we read, or listen to the reading of, a book concerning spiritualism, we should ponder over the descriptions about the various stages of spiritual advancement and how we can attain them.

Prarabdha will take its due course concerning the body and its conditions, but we should maintain a psychological unconcern or mental detachment. In a law suit an advocate pleads vehemently to defend his client’s position, but is mentally unconcerned with the joy or sorrow of winning or losing the case; he may outwardly share the joy or sorrow of the client, but he gets the stipulated fees nevertheless. We should keep a similar attitude.

I behave in a similar way with my disciples in their moments of elation or despondency. Treat prapancha as a game: a win or loss is of little consequence if, all the while, we maintain constant awareness of God. However, we should play the game in all seriousness. This becomes very easy if we continually chant nama. This is why day and night I din into your ears that, come what may, one should never forget nama.

* * * * * * * * * *
ravi said…
*அம்மா*

*ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் மாத்ரே நம :*

அலையோ கடலுக்குச் சொந்தம்

ஆசைகளோ எங்களுக்கு சொந்தம்

உன்னிடம் இல்லாத ஒன்றை நான் உனக்குத் தந்தால்

நீ என்ன தருவாய் எனக்கே என்றே அம்பிகையிடம் கேட்டேன் ஓர் நாள்

சிரித்தாள் சிங்காரி

என்னிடம் இல்லாதது ஒன்றும் இல்லையே ...

எதை எனக்கு நீ தருவாய் என்றாள்

இல்லாமை உன்னிடம் இல்லையே அம்மா ...

என்னிடம் உள்ள இல்லாமை நீ தான் பரம் என்ற உணராமை ....

உன்னிடம் அதை கொடுத்தே எனக்கு பொருந்தாத பொருள் ஒன்றும் இல்லை என்றே வரம் அளிப்பாய்

மீண்டும் சிரித்தாள்

கன்னங்களில் அழகாக குழி விழ அதில் விழுந்து ஆடினேன்

கிடைக்கப்பெற்றேன் சிவானந்தம்
ravi said…
பகவத் கீதையில் ஒரு ஸ்லோகம் 9.26

पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्य‍ा प्रयच्छति ।
तदहं भक्त्य‍ुपहृतमश्न‍ामि प्रयतात्मन: ॥ २६ ॥

patraṁ puṣpaṁ phalaṁ toyaṁ
yo me bhaktyā prayacchati

tad ahaṁ bhakty-upahṛtam
aśnāmi prayatātmanaḥ

If one offers Me with love and devotion a leaf, a flower, a fruit or water, I will accept it.

பூதகி கண்ணனனுக்காகவே விஷத்தை பல நாட்கள் சேர்த்து சேமித்து வைக்கிறாள் ...

கண்ணனை தவிர இந்த விஷம் வேறு எவரையும் கொல்லக் கூடாது என்பதே அவள் எண்ணம் ...

அந்த நாளும் வந்தது ...

தன் மார்பில் அந்த விஷத்தை தடவிக்கொள்கிறாள் ...

அழகிய பெண்ணாய் கோகுலத்தில் நடந்து வருகிறாள் ...

கண்ணனுக்கு தெரியாதா இவளும் நஞ்சு தன் மீது தடவிக்கொண்டதும் நஞ்சு என்று

ஆனால் அவளை காலால் உதைத்து கொல்ல வில்லை ... மாறாக பாலை உறிஞ்சி குடிக்கிறான் ...

ரத்தம் சுண்டி விடுகிறது ...

ஏன் கண்ணன் இப்படி செய்தான் தெரியுமா ?

அந்த விஷம் கண்ணனனுக்காகவே சேமிக்கப்பட்ட ஒன்று ...

மேலே உள்ள ஸ்லோகத்தின் விளக்கம் ...

தனக்காக பக்தியுடன் எதை கொடுத்தாலும் மகிழ்ந்து வாங்கிக் கொள்பவன் கண்ணன் ...

தாய்மை எனும் போர்வை போத்திக்கொண்டு அவள் வந்தாலும்

விஷம் கண்ணனுக்கு என்றே அவன் நினைவு ஒன்றையே மனதில் தாங்கி க்கொண்டு வந்தாள் பாலை அவனுக்கு சமர்ப்பிக்க வேண்டி

தனக்கு ஓர் அன்னையாய் பரசளித்த பால் விஷம் நிறைந்தது என்றாலும் அதை உறிஞ்சி அவளுக்கு மோக்ஷம் கொடுத்தான் கண்ணன் ... *This is what we call walk the talk ....*
ravi said…
Shriram

6th NOVEMBER

*Divine Grace*

Nothing, indeed, counts but divine grace. A girl marries and goes to live in her husband’s family. There, she may get on excellently with everybody except her husband; in that case, she will fail to receive the expected happiness and contentment. Compare her with another who enjoys her husband’s affection in full measure but not that of the others in the family; such a girl will be able to face the situation cheerfully, in the confidence and contentment of her husband’s support. So, too, say in an illness, money, medical help, nursing, everything is at call; and yet, but for His grace, nothing can cure the illness or alleviate the suffering. On the other hand, where He wills it, neither want of money nor of medication will prevent cure. Experience shows that divine grace is required for success in anything; and this grace can only be acquired by constant _nama-smarana_, no matter how meritorious or sinful the person has been in the past.

Actually, divine grace is all-pervading, ever-present. So, it protects us, too; but we realize it only when we firmly believe in it; it is only another aspect of becoming one with God. The calf knows no other source of milk but the mother-cow; we should similarly look on God as our sheet-anchor, ask for nothing but His name. He cannot then hold His grace back. We should not expect the grace in the form of acquiescence to our desire; true grace is a feeling of contentedness with whatever it pleases Him to grant.

If we go to a mountain and shout, we get an echo of the same shout; similarly, if we pray earnestly to God, we get the echo in the form of His grace. Even the _nama_ we utter is a form of His grace. We should always say and believe that we are under the shelter of His grace. The grace is always acting, only we have to ensure that it is not overshadowed by doubt; for doubt often nullifies a lot of achievement. A decision never to quit _nama_ will set all doubt at rest. Those who have real faith in _nama_ will always chant it selflessly and without desire.

_Nama_ is the only _sadhana_ that can be practiced in any times, any circumstances, any state of the mind or body. To pursue _prapancha_ is generally taken as self-interest; real self-interest, however, is to belong to God.

** * * *
ravi said…
Shriram

5th NOVEMBER

*We Must Feel God is Our Mainstay*

God is the sole, Ultimate Reality. Where we go astray is in taking _prapancha_ for reality. Just as oiling the hand is necessary before dressing a jackfruit, oiling in the form of love for God is essential before doing _prapancha_, undertaking any earthly job. Shree Samartha begins his Dasabodha, giving paramount importance to spiritualism, saying that, with it other things may follow. The first wrong step we take is to arrogate doership to ourselves instead of ascribing it to God, to whom it really belongs. We bow to Him at the commencement of the wedding ceremony but forget or overlook Him in pursuing _prapancha_. The temptation of sense-pleasures can do no harm if we do not surrender ourselves to it.

If we do, after all, have to take somebody’s help, why ask somebody who is as much handicapped, limited in authority and resources, as ourselves? So we must seek the aid of God the omnipotent. If we pray to Him for the grant of sense-pleasures, which are basically trifling and transitory, would it not be short-sighted? You know that Duryodhana and Arjuna both approached Lord Krishna for assistance in the impending war. Of the choice offered, Arjuna characteristically chose the lone Lord, while Duryodhana, again characteristically, opted for His vast army. If we ask for some worldly favour, are we not following Duryodhana?

Generally man is oblivious of the ultimate objective, and is guided by considerations of the world’s esteem. One can become truly dedicated to God only when one has abandoned hope or expectations about all other things. We do not yearn for God, but we are careful about what the world will think of us; at the same time we complain that others scandalize us! What I say is, let alone the opinion of people; consider what Rama will have to say about you. The elemental Reality is something imperceptible to the senses; what do we stand to lose if we say everything belongs to it? We do not realize the contentment that this ‘hypothesis’ will bring us. God is like the mythological tree that grants every desire; we are always weighed down by anxiety because we can think of nothing else. If we always ask for bliss, He will surely grant it.

** * * *
ravi said…
Shriram

4th NOVEMBER

*The _Saguna_ Form of God*

A certain gentleman I met said, “I agree that Hinduism is the best of religions. What I fail to see is, how can that God, the attribute-less, formless, Ultimate Reality, be considered approachable through numberless forms, each with its own _upasana_?” Later, a certain person came to meet him. Different persons referred to him by various names. Somebody said, ‘Dada is not at home’; somebody said, ‘Damodar has gone out’; while somebody else said, ’The master will return at such and such an hour’. The concept of the absolute form of God in so many tangible forms is comparable to this. Once one conceives Him in a tangible form, all the laws applicable to material things apply to that tangible entity.

One who denies the tangible forms in favour of an absolute, formless, entity, has simply failed to grasp the real essence of the matter. The Vedas, the _upanishads_, the _Brahmasutras_, and the _Bhashyas_ all talk about the formless, attribute-less, absolute Reality; the saints, as it were, filled details in the outline and painted it; they gave different habitations and names, that the natural devotional tendencies of men may find suitable objects; this, in a nutshell, is _saguna_ _Bhakti_. Such _Bhakti_ or devotion is a _sine_ _qua_ _non_ for attainment of salvation.

_Upasana_ literally means ‘being very close to’, acquiring the special qualities of feeling extreme regard and love for, the particular form that one worships. Saint Tulsidas so deeply venerated and loved his ideal, Rama, as to become identified with Him. Rama never said ‘the world is for me’; on the contrary, He lived for the world. This is true _paramartha_. Extreme faithfulness to His wife, and extreme veracity in speech and action, are prominent traits of His character. Other manifestations, too, have their traits, but Rama’s life stands out as an ideal for man to follow.

To yearn for God is the essence and aim of life. This yearning God Himself cannot create. Only saints can generate it; that is why association with the saints is indispensable. Our natural bent of mind is for sense-pleasures; the saints gradually dissuade us from there and direct it towards God. The day our mind turns to God is truly the most auspicious day in our life.

* * * * *
ravi said…
*ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் மாத்ரே நம :*

*அம்மா*

சித்திரம் ஒன்று வரைந்தேன்

அங்கே சிங்கார வீடொன்று அமைத்தேன்..

நாட்புறமும் சுவர் ஒன்று எழுப்பினேன் ...

சுற்றி முள் வலை பின்னினேன் யாரும் சுவர் ஏறி வாராமல் இருக்க ...

நான்கு வாசல்கள் வைத்தேன்

அங்கே அழகான மாவிலை தோரணம் அணிவித்தேன்

வீட்டுக்குள் மங்கள இசை யின் மணம் எங்கும் நிறைய

விளக்கேற்றி தூபம் காட்டி இருள் சூழ்ந்த இடமதை ஒளி பெறச் செய்தேன் ..

உன் நாமங்கள் சொல்ல சொல்ல என் வீட்டுக்கும் சிறகுகள் முளைத்ததே ...

வானம் அதில் பறக்க வாழ்க்கை இது தான் என்றே என் மனம் கூவ

எண்ணில்லா ஆனந்தம் என்றும் என்னுள் குடி புகுந்ததே !!💐💐💐
ravi said…
Shriram

7th NOVEMBER

*Pursue _Sadhana_ Selflessly and Cautiously*

He is a liberated soul who is never but with God. He who feels that he is entirely God’s is no longer ‘tied’. To forget oneself in the conviction that He alone exists, is liberation. He who lives in the body and yet is unconditioned by it, stands liberated. One who believes that all doership rests with Rama is a liberated one. We become tied, or affected by the body, when we assume ownership of this thing and that; no sooner we cast off this cloak of ‘ownership’ we stand liberated. When the mind stays unmoved, unaffected, and contented under all circumstances, we stand liberated. We assume doership of many things, good and bad, and presume that we are ‘sinners’, and reproach ourselves. We should tell ourselves that we belong to God and none else, and should conduct ourselves in the world as an actor does in a play.

Actually, we are enveloped by _maya_ or delusion. This _maya_ is to God like a shadow to a man; it is and it is not; if we deliver ourselves up to God, we discover that _maya_ has no independent existence. To realize the true nature of _maya_ is spiritual discrimination, _viveka_; while _vairagya_ consists in living contented with God’s dispensation.

_Sadhana_ performed in the spirit of a dilettante will not be of much avail. It must be pursued as a serious undertaking, with full faith in both the means and the goal. It should be undertaken for no mundane purpose. There are always people who manage to corrupt your thinking, intentionally or otherwise; a _sadhaka_ must always be on guard against the possibility, and studiously avoid doing a similar corruption, or misleading the thoughts and convictions of others.

Those who never feel that they have faults and drawbacks to cure belong to the lowest order; those who are aware of their faults but do not seriously care to cure themselves, form the higher category; while the best are those that are aware of their faults and pine to cure them; these last a true _sadhaka_ should emulate.

They are not few who progress half-way along the spiritual path; those who persist to the end are rare, indeed; they need to execute _sadhana_ supported by appropriate reading or guidance.

** * * *
ravi said…
*ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் மாத்ரே நம :*

*அம்மா*

மயில் ஆடும் சோலை வனத்தில்

குயில் பாடும் கோடை மழையில்

கிளி பேசும் மரங்கள் நடுவே ...

கிளை பாயும் மந்திகள் நிலை கொள்ளா நித்திய முக்தர்கள் ...

நிழல் தரும் கதம்ப மரங்கள்

கஸ்தூரி மணம் பரப்பும் புள்ளி மான்கள்

கவிகள் பாடும் பொதிகை தென்றல்

சூல் கொண்ட மேகங்கள் மழையை பிரசவிக்கும் மேடுகள்

நடுவிலே ஓர் ஸ்ரீ சக்கரம் சுத்தி ஓர் ஒளி வட்டம் ...

அது எழில் மிகு வாக் தேவிகள் தேடும் சரணாலயம்

அங்கே ஏற்றம் மிகு அரியணையில் அன்னை நீ கண் உறக்கம் ...

காத்திருந்தேன் விழிகளில் நீர் தேக்கம்

அனைத்தும் நீயே என்றே வந்துவிட்டேன்

அடைக்கலம் உண்டோ அறம் தவறிய இந்த அபலைக்கும் ? 💐

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை