Posts

சிவானந்தலஹரி-21-என்னுடைய மனமாகிய அழுக்கில்லாத, படுதாவால போட்ட.. ஒரு tent.. ஒரு குடில்

Image
 இன்னைக்கு சிவானந்தலஹரில 21ஆவது ஸ்லோகத்தைப் பார்ப்போம், த்⁴ருʼதிஸ்தம்பா⁴தா⁴ராம் த்³ருʼட⁴கு³ணநிப³த்³தா⁴ம் ஸக³மநாம் விசித்ராம் பத்³மாட்⁴யாம் ப்ரதிதி³வஸஸந்மார்க³க⁴டிதாம் । ஸ்மராரே மச்சேத:ஸ்பு²டபடகுடீம் ப்ராப்ய விஶதா³ம் ஜய ஸ்வாமிந் ஶக்த்யா ஸஹ ஶிவக³ணை: ஸேவித விபோ⁴ ॥ ஹே விபோ! – எங்கும் நிறைந்தவரே, ‘ஸ்வாமிந்’ – ஆண்டவரே, ‘ஸ்மராரே’ மதனனை எரித்தவரே, நீங்கள் என் ‘மச்சேத:ஸ்பு²டபடகுடீம்’ – என்னுடைய மனமாகிய அழுக்கில்லாத, படுதாவால போட்ட.. ஒரு tent.. ஒரு குடில், அதுல, ‘சக்தியா ஸஹ’ – பராசக்தியோடு, ‘ப்ராப்ய’ – வந்து.. நீங்கள் அங்கு விளங்கவேண்டும்..வெற்றியோடு விளங்கவேண்டும் அப்படீன்னு சொல்றார். இந்த tent எப்படி இருக்குன்னா, ‘த்⁴ருʼதிஸ்தம்பா⁴தா⁴ராம் ‘ – த்ருதின்னா உறுதி அல்லது தைர்யம், அதை ஸ்தம்பமா, நடுவுல ஒரு கம்பம் கொடுத்து, அது மேலதான் படுதா போட்டு கயறு வெச்சு கட்டுவா இல்லையா? அப்படி என்னுடைய சிவ பக்திங்கறது என் மனசுல உறுதியா இருக்கு, அது தான் அந்த நடுத் தூண், ‘த்⁴ருʼதிஸ்தம்பா⁴தா⁴ராம் த்³ருʼட⁴கு³ணநிப³த்³தா⁴ம்’ – த்ருடகுணம் அப்படீன்னா.. அந்த பக்தியிலேர்ந்து நழுவாத வைராக்கியம், அது தான் குணம்.. குணம...

சிவானந்தலஹரி-20 -மனமாகிய குரங்கு !!

Image
  அடுத்த ஸ்லோகத்துல ஸதா³ மோஹாடவ்யாம் சரதி யுவதீநாம் குசகி³ரௌ நடத்யாசாசாகா²ஸ்வடதி ஜ²டிதி ஸ்வைரமபி⁴த: । கபாலின் பி⁴க்ஷோ மே ஹ்ருʼத³யகபிமத்யந்தசபலம் த்³ருʼட⁴ம் ப⁴க்த்யா ப³த்³த்⁴வா சிவ ப⁴வத³தீ⁴னம் குரு விபோ⁴ ॥ சிவ  – சிவனே விபோ – எங்கும் நிறைந்தவனே. ஸதா³ மோஹாடவ்யாம் சரதி – எப்பொழுதும் மோகம் என்ற, மதிமயக்கம் என்ற காட்டில் என்னுடைய மனமாகிய குரங்கு சரதி – திரியறது யுவதீநாம் குசகி³ரௌ நடதி – பெண்களுடைய ஸ்தனங்கள் என்ற மலைகள்ல நடனமாடறது.  ஆசாசாகா²ஸ்வடதி – ஆசைங்கிற கிளைகள்ல ஜ²டிதி ஸ்வைரமபி⁴த: – இஷ்டப்படி இங்கேயும் அங்கேயும் குதிக்கிறது. இப்படி இருக்கிற என் மனசுங்கிற குரங்கை, ஒரு குரங்கு பனைமரத்துல ஏறி கள்ளை குடிச்சிட்டு கீழ இறங்கிவரும்போது அதை ஒரு தேளும் கடிச்சிடுத்துன்னா என்னம்மா இருக்குமோ, அந்த மாதிரி நம்ம மனசு இருக்கு.  நம் மனசு ஏற்கனவே குரங்கு போல சஞ்சலமானது. அதுல காமமாகிய கள்ளையும் குடிச்சு க்ரோதமாகிய தேளும் கடிச்சா எப்படி இருக்குமோ அந்த மாதிரி நாம behave பண்ணிண்டு இருக்கோம். இந்த மனசை எப்படித் தான் மீட்கறது?  எப்படித் தான் பகவான் கிட்ட போறதுன்னா கபாலின் பி⁴க்ஷோ ...

சிவானந்தலஹரி-19 -என் தலையில எழுதினதே இருக்கட்டும். அதை அனுபவிக்கட்டும்னு விட்டுட்டியோ??

Image
ஏ பரமேஸ்வரா! தங்கள் திருவடிகளை நான் தரிசனம் ஏது விட்டால் தங்கள் கடாக்ஷம் என்மேல் விழுந்துவிடும். அதற்குமேல் எனக்கு யாதொரு கவலையும் இராது. அந்தத் திருவடிகளில் தரிசனமே அரிதாக இருக்கிறதே! நான் என்ன செய்யலாம் ? என சிவனிடம் அரற்றும் காட்சி இது ! நான் பல ஜன்மாவில் பண்ணிய புண்ணியத்தால் தாங்கள் எண்ணிடமுள்ள கருபையாலோ தாங்கள் என் முன் ஆவிர்பவித்தபோதிலும் தங்கள் தரிசனத்துக்கு போட்டி போட்டுக்கொண்டு எனக்கு முன் நிற்கும் தேவர்களின் வரிசை, நான் தங்களின் சரணங்களை தரிசனம் செய்ய முடியாதபடி என்னை மறைத்து விடுகிறதே, நான் என் செய்வேன்? என்று மனதின் நினைப்பை இங்கு அரற்றுகிரார் !! சுகாஸ்வரோபியான ஏ பரமேஸ்வரா, ஜனங்களுக்கு தாங்கள் ஒருவரே யாவற்றையும் விட சிறந்த மோக்ஷம் என்ற பழத்தைக் கொடுக்கக் கூடியவராவீர்! ஏனென்றால் விஷ்ணு முதலிய தேவர்கள் தங்கள் மூலமாகவே கிடைத்த வைகுண்டம் முதலிய உயர்ந்த ஸ்தானத்தை, பெற்றவர்களாக இருந்து கொண்டு மறுபடியும் தங்களையே வணங்குகிறார்கள் ! தங்களுக்கு பக்தர்களிடையே அபிப்ராயத்தை அனுசரித்து இருக்கும் தன்மைதான் எவ்வளவு ? அடை அளவிடவே முடியாது ! எப்போழுதுதான் , கருணை ததும்பும் விழிகளால் அஹங்காரத...

சிவானந்தலஹரி-18 உன் கருணை நிறைந்த பார்வையினால் என்னைக் காத்தருள்வாய்!!

Image
  த்வமேகோ லோகாநாம் பரமப²லதோ³ தி³வ்யபத³வீம் வஹந்தஸ்த்வன்மூலாம் புனரபி ப⁴ஜந்தே ஹரிமுகா:² । கியத்³வா தா³க்ஷிண்யம் தவ சிவ மதா³சா ச கியதீ கதா³ வா மத்³ரக்ஷாம் வஹஸி கருணாபூரிதத்³ருʼசா ॥ ன்னு ஸ்லோகம். என்ன அர்த்தம்னா பரமேஸ்வரா! த்வமேகோ லோகாநாம் பரமப²லதோ³   – இந்த உலகத்துல எல்லாருக்கும் நீ ஒருவர் தான் பரமபலம்னா மோக்ஷம். அந்த மோக்ஷ பதத்தை உங்க ஒருத்தரால தான் கொடுக்க முடியும்.  ஆனா மத்த பலங்கள் எல்லாமும் நீங்க தான் கொடுக்கறேள் த்வன்மூலாம் – உன்னுடைய அனுக்ரஹத்துனால தி³வ்யபத³வீம் வஹந்த: – தெய்வ பதவிகளை பெற்றவர். விஷ்ணு முதலியவர்கள் ஹரிமுகா:²  – விஷ்ணு பதவி வரைக்கும் எல்லா பதவியையும் சிவன் கொடுத்தது தான். அந்த பதவி வரைக்கும் எல்லா பதவியில இருக்கிறவர்களும் புனரபி ப⁴ஜந்தே – மீண்டும் மீண்டும் உன்னை பஜித்து கொண்டிருகிறார்கள். அந்த பதவி நிலைச்சு இருக்கணும். இன்னும் மேல பதவி கிடைக்கணும்னு உயர்வை நாடி ஜனங்கள் உன்னை பஜிக்கறா. நீ கேட்டதெலாம் கொடுக்கற. ஆசைக்கோர் அளவில்லைன்னு  அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர்! – இந்த பூமிக்கே நீ ராஜான்னு சொன்னா,கடலுக்கு யார் ர...

சிவானந்தலஹரி-17 -கண் கூசும் தேவர்களின் கிரீடங்கள் !!

Image
  சிவானந்தலஹரியில இன்னிக்கு 17 வது 18வது ஸ்லோகம் பார்ப்போம் ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி விபோ⁴ ப்ரஸன்னேऽபி ஸ்வாமின் ப⁴வத³மலபாதா³ப்³ஜயுக³லம் । கத²ம் பச்யேயம் மாம் ஸ்த²க³யதி நம: ஸம்ப்⁴ரமஜுஷாம் நிலிம்பாநாம் ச்ரோணிர்னிஜகனகமாணிக்யமகுடை: ॥ ன்னு ஒருஸ்லோகம். விபோ – எங்கும் நிறைந்திருப்பவனே! ஸ்வாமி – என்னுடைய எஜமானனே. ஸ்வாமின்னா – உடையவன். நம்முடைய எஜமானன் ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி – நான் பண்ண ஏதோ போன ஜன்மத்து புண்யத்துனாலயோ மயி கருணயா வா – என் மேல இருக்கிற கருணையினாலயோ த்வயி ப்ரஸன்னேऽபி – நீங்கள் என் முன் தோன்றி காட்சி கொடுக்கிறீர்கள்,  ஆனாலும் ப⁴வத³மலபாதா³ப்³ஜயுக³லம் – உன்னுடைய தூய்மையான திருவடித்தாமரைகளை யுகளம்னா இரண்டு. திருவடித்தாமரைகள் இரண்டையும் கத²ம் பச்யேயம் – நான் எப்படி தரிசனம் பண்றது?  ஏன் ஸ்வாமியை பார்க்கும் போது பாதத்தை பார்க்க முடியாதான்னா ஸம்ப்⁴ரமஜுஷாம் – உன்னை நமஸ்காரம் பண்ணணும்ங்கிற ஆர்வத்துல நிலிம்பாநாம் ச்ரோணி – தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து உன்னை நமஸ்காரம் பண்ணிண்டு இருக்கா. அவாளுடய நிஜகனகமாணிக்யமகுடை : – அவா தலையில இருக்கி...

சிவானந்தலஹரி-16 ரொம்ப தைன்யமா இருக்கேன் நான். அதுனால ,உங்களோட கடாக்ஷம் எனக்கு கிடைச்சுது,

Image
  விரிஞ்சிர்தீ³ர்கா⁴யுர்ப⁴வது ப⁴வதா தத்பரசிர: சதுஷ்கம் ஸம்ரக்ஷ்யம் ஸ க²லு பு⁴வி தை³ன்யம் லிகி²தவான் । விசார: கோ வா மாம் விசத³ க்ருʼபயா பாதி சிவ தே கடாக்ஷவ்யாபார: ஸ்வயமபி ச தீ³னாவனபர: ॥ பிரம்மாவை வந்து நீங்க கோவிச்சுண்டேளே, தலையை கிள்ளி போட்டேள். இப்ப நான் ஒரு appeal விட்டுருக்கேன். அந்த பிரம்மாதான் என்னை ரொம்ப தொல்லை பண்றார். தலையில ஏதோ எழுதிட்டார்னு சொல்றேன்.  உடனே நீங்க கோவிச்சுண்டு அவருடைய இன்னொரு தலையை ஏதாவது கிள்ளிடாதீங்கோ என்கிறார்  விரிஞ்சிர்தீ³ர்கா⁴யுர்ப⁴வது – விரிஞ்சு தீர்க்காயுசா இருக்கட்டும் ப⁴வதா தத்பரசிர: சதுஷ்கம் ஸம்ரக்ஷ்யம் – அவருடைய பாக்கி நான்கு தலைகளும் உம்மால் காப்பாற்றப்படட்டும்.  அதாவது அதை எல்லாம் நீங்க எடுத்துக் கிள்ளிப் போட்டுடாதீங்கோ ஸ க²லு பு⁴வி தை³ன்யம் லிகி²தவான்  – அவர்தான் என் தலையில எழுதினார். ஆனா தைன்யத்தை எழுதியிருக்கார். அதுல ஒரு லாபம் ஆச்சு. ஏன்னா நீங்க தீ³னாவனபர: – தைன்யமா இருக்கிரவாளை காப்பாத்தணும்னு ஒரு கொள்கை வெச்சிசிண்டிருக்கேள். அதுனால என்ன ஆச்சு?  சிவ –  மங்கள வடிவமான பரமேஸ்வரா, விஷத – நிர்மல ஸ்வரூபியே! எனக்...

சிவானந்தலஹரி-15- சிவக்ருபை இருந்தா விதியை வெல்லலாம்!!

Image
ஆச்சார்யாளோட சிவானந்தலஹரியில 14 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். 13வது 14வது ஸ்லோகத்துல, ‘இந்த சாரமில்லாத ஸம்ஸாரத்துல நான் சுத்தி சுத்தி வந்துண்டு இருக்கேன். எனக்கு உன்னை விட்டா யாரு அடைக்கலம் கொடுப்பா? நீ க்ருபை பண்ணு’ ன்னு சொன்னார். 14 வது ஸ்லோகத்துல ‘ஒரு ஏழை பந்து இருந்தான்னா ஒரு ப்ரபு தயவு பண்ண மாட்டானா? அந்த மாதிரி நான் தான் தைன்யர்களுக்குள்ள ரொம்ப முக்யமானவன். ரொம்ப deserving. என்னை கொஞ்சம் கண்ணெடுத்து பாரு’ ன்னு சொல்றார். இந்த 15 ஆவது ஸ்லோகத்துல உபேக்ஷா நோ சேத் கிம் ந ஹரஸி ப⁴வத்³த்⁴யானவிமுகா²ம் து³ராசாபூ⁴யிஷ்டா²ம் விதி⁴லிபிமசக்தோ யதி³ ப⁴வான் । சிரஸ்தத்³வைதா⁴த்ரம் ந நக²லு ஸுவ்ருʼத்தம் பசுபதே கத²ம் வா நிர்யத்னம் கரனக²முகே²னைவ லுலிதம் ॥ ன்னு ஒரு ஸ்லோகம் ஹே பசுபதே! உனக்கு என் கிட்ட உபேக்ஷை இல்லேன்னு சொல்றே. அதாவது என் மேல வெறுப்பு இல்லை. என்னை உதாசீனம் பண்ணலேன்னு சொல்ற. ஆனா ‘ து³ராசாபூ⁴யிஷ்டா²ம்’ – கெட்ட ஆசைகள் நிறைஞ்சதும் ‘ ப⁴வத்³த்⁴யானவிமுகா²ம்’ உன் த்யானம் பண்ணாமல் வேறே ஏதேதோ விஷயங்களில் இழுத்துண்டு போகிற மாதிரி ஒரு தலையெழுத்தை – ‘விதி⁴லிபி’ – என் தலையில பிரம்மா எழுதியிருக்கார்....