பச்சைப்புடவைக்காரி - பகையை வெல்லும் ஆறுபடை -3- 16 பழனி 2 --279
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் பகையை வெல்லும் ஆறுபடை - 3 பழனி 2 (279) 👍👍👍💥💥💥 Happy 2021 👌👌💐💐💐 பழனிக்குள் போவதற்கு முன் உங்கள் எல்லோருக்கும் புத்தாண்டு ஆசிகள் ரவி! இந்த புதிய வருடம் ஆனந்தமாக ஆரோக்கியமாக இருக்கும் கவலைப்படாதீர்கள் கந்தனின் தவம் தொடங்கியது. பிரணவம் அவருள் அடங்கியது. ஞானம் அவர் மூச்சாகியது. அழகும் அறிவும் அவருள் ஒளிவீசியது. இப்போது இறைவன் ஈஸ்வரன், தன் திருக்குமரனின் ஞானத் தவத்தின் பயனை அறிய விரும்பினார். தன் மகனை அழைத்தார். ''ஓம்காரப் பிரணவத்தின் உண்மைப் பொருளை உன் தவத்தால் உணர்ந்து கொண்டாயா?' என்று கேட்டார். ''ஆம் தந்தையே!'' என்றார் ப்ரம்மண்யன். ''எங்கே கூறு பார்க்கலாம்...'' என்றார் ஈஸ்வரன். ஒரு ஆசிரியர் மாணவனைப் பார்த்து 'பத்தும் இரண்டும் எத்தனை?’ என்று கேட்டால், அந்தக் கூட்டல் கணக்கு ஆசிரியருக்குத் தெரியவில்லை என்று அர்த்தமாகாது. மாண...