அபிராமி அந்தாதி - பாடல் 9 அம்மே வந்து என் முன் நிற்கவே !!
பச்சைப்புடவைக்காரி -450 அபிராமி அந்தாதி பாடல் 9 அம்மே வந்து என் முன் நிற்கவே (அபிராமி அந்தாதி பாடல் 9) கருத்தன,எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின் பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும் முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே கருத்தன எந்தைதன் கண்ணன - கருப்பு நிறம் கொண்டு என் தந்தையாம் சிவபெருமானின் கருத்திலும் கண்ணிலும் நின்று விளங்குவன. வண்ணக் கனகவெற்பின் பெருத்தன - வண்ணமயமான பொன்மலையாம் மேருவை விட பெருத்து நிற்பன. பால் அழும் பிள்ளைக்கு நல்கின - நீ உயிர்களுக்கு எல்லாம் தாய் என்பதைக் காட்டுவது போல் திருஞான சம்பந்தராம் அழும் பிள்ளைக்கு நல்கி நின்றன. பேர் அருள்கூர் திருத்தன பாரமும் - இப்படிப் பெரும் கருணை கொண்ட உன் கனமான திருமுலைகளும் ஆரமும் - அதில் பொருந்தி நிற்கும் மாலைகளும் செங்கைச் சிலையும் அம்பும் - சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும் முருத்தன மூரலும் - ...