அபிராமி அந்தாதி - பாடல் 69`(1) - தனம் தரும் கல்வி தரும் -
பச்சைப்புடவைக்காரி -511 அபிராமி அந்தாதி பாடல் 69(1) இன்றைய பாடல் எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பாடல் .. அபிராமி அந்தாதியில் இரண்டு பாடல்களை நாள் தோறும் சொல்லி வந்தால் நமக்கு மனக்குறை என்று ஒன்றுமே இருக்காது . இந்த பாடலும் பாடல் 52 ம் ... எல்லாம் தருபவள் என்பதை கண் கூடாக அனுபவிக்கலாம் பாடல் 52 வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்பு முன்பு செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.🙏🙏🙏 பட்டருக்கு சம்ஸ்கிருதம் நன்றாக வரும் ஆனால் பிறரை போல் அதிலேயே பாடாமல் நமக்காக சுத்த தமிழில் பாடியுள்ளார் .. கடாக்ஷம் , கனம் இவைகள் சம்ஸ்கிருத வார்த்தைகள் .. கடாக்ஷம் என்பதை * விழியின் கடை * என்று தமிழில் அழகான சொல்லாய் மாற்றினார் .. கண்ணோட்டம் என்றாலும் கடாக்ஷம் என்று பொருள் தரும் ... இந்தக்காலத்தில் மாண்புமிகு என்று ஒருவரை அழைக்...