அபிராமி அந்தாதி - பாடல் 85 - என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள்-
பச்சைப்புடவைக்காரி -529 அபிராமி அந்தாதி பாடல் 85 *என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் (பாடல் 85)*🙌🙌🙌 இந்த பாடல் உள்ளத்தில் எழுதிய ஓவியத்தை வெளி உலகக்கு படம் போட்டு காண்பிக்கிறார் . பட்டர் உள்ளத்தில் அவள் ராஜ மாதாவாக ராஜ ராஜேஸ்வரியாய் நவரத்தின சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறாள் ... பட்டர் விவரிக்க விவரிக்க அவள் அவர் வர்ணித்தப்படி வெளி வருகிறாள் நமக்காக🙌🙌🙌 காக்கைச் சிறகினிலே நந்தலாலா என்று தொடங்கி பாரதியார் பாடிய பாடல் நிறைய பேருக்குத் தெரியும். வாசுதேவ ஸர்வமிதி ச மஹாத்மா சுதுர்லப என்று கண்ணன் கீதையில் சொல்லிய படி இறைவனே எல்லாம் இங்கு என்று இருக்கும் மகாத்மாக்கள் ஒரு சிலரேனும் உண்டு இங்கே. 'உண்ணும் சோறும் பருகு நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாமும் கண்ணனே' என்று சொல்லுவார் நம்மாழ்வார். பார்க்கும் திசை தொறும் இறைவியின் திருக்காட்சியையே காண்கிறார் அபிராமி பட்டர். தான் கண்ட காட்சியை நாம் எல்லாம் காண இந்த...