அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 13 பதிவு 11
அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 13 பதிவு 11 கேள்வி பதில் நேரம் பதிவு 6 🥇🥇🥇 கேள்வி கேட்பவர் : ஒன்றுமே தெரியாதவன் அதாவது நான். பதில் சொல்பவர் : அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர் . கேள்வி 9 நான் : பட்டரே! காலை வணக்கம் .. பட்டர் சகல கலா வல்லி , களாப மயில் , மகுடன் தலைமேல் பாதம் பதித்த அந்தரி உங்கள் எல்லோருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய அபிராமியை வேண்டுகிறேன் இன்று என்ன கேள்விகள் ? நான் தாங்கள் ஈன்று எடுப்பாள் ஒரு தாயும் இல்லை என்று சொன்னீர்கள் . இதன் தாத்பபரியத்தை இன்னும் கொஞ்சம் அடியேனின் அறிவின் அளவிற்கு புரியும் படி விளக்கி சொல்ல முடியுமா ? 💐💐 பட்டர் சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய சொல் இது ... புரியவில்லை என்கிறாய் ..இறைவனை உணர்வு பூரமாக வழிபட வேண்டும் .. பாவம் ( bhavam) வேண்டும் .. நம்மாழ்வார் கண்ணனுக்கு அமுதம் படைக்கும் போது தனது...