அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 43 & 44 பதிவு 37
அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 43 & 44 பதிவு 37 கேள்வி பதில் நேரம் பதிவு 37🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது நான் . பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர். கேள்வி 43 நான் நமஸ்காரம் பட்டரே!! முதல் மூவர் என்று சொன்னீர்கள்.. மூன்று தொழில் என்று தானே சொல்கிறோம் .. அம்பிகை ஐந்து தொழில் செய்கிறாள் என்று எங்கிருந்து வந்தது ... ? விட்டுப்போன அந்த இரண்டு தொழில்களுக்கும் அதிபதி யார் ? கேள்வி 44 ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் எந்த தாத்பரியத்தில் அமைந்துள்ளது ? பட்டர் உண்மை இரண்டு தொழில்கள் விட்டுப்போயின . இந்த இரண்டு தொழில்களும் நம் சொல்லுக்கும் வாக்குக்கும் எட்டாமல் இருப்பவை ... ஜகத் வியாபாரம் என்றால் உனக்கு என்ன என்ற...