சிவானந்தலஹரி-30-‘ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு’
சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம் 30 வது ஸ்லோகம் வஸ்த்ரோத்³தூ⁴தவிதௌ⁴ ஸஹஸ்ரகரதா புஷ்பார்சநே விஷ்ணுதா க³ந்தே⁴ க³ந்த⁴வஹாத்மதாঽந்நபசநே ப³ர்ஹிர்முகா²த்⁴யக்ஷதா । பாத்ரே காஞ்சநக³ர்ப⁴தாஸ்தி மயி சேத்³ பா³லேந்து³சூடா³மணே ஶுஶ்ரூஷாம் கரவாணி தே பஶுபதே ஸ்வாமிந் த்ரிலோகீகு³ரோ ॥ 30॥ முந்தின ஸ்லோகத்துல, ‘ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு’ னு சொன்னார். அங்க ‘ லோககுரு’ங்கிறார். இங்க ‘த்ரிலோகீகு³ரோ’ – மூவுலகத்துக்குமே நீதான் குரு என்கிறார். ‘பா³லேந்து³ சூடா³மணே’ – இளம்பிறை சந்திரனை நெற்றியில, மௌலில அணிந்து கொண்டு இருப்பவரே! ‘ பஶுபதே’ – எல்லா உயிர்களுக்கும் தலைவரே! ‘ஸ்வாமின்’ – என்னுடைய தலைவரே! உங்களுக்கு பூஜை பண்ணனும்னு ஆசைப்படறேன். இப்ப தான் சிவராத்திரி ஆச்சு. சிவராத்திரியின் போது மத்த நாளைவிட கொஞ்சம் விமரிசையா நம்ம ஆத்துல ஒரு பூஜை பண்ணி சந்தோஷப் பட்டுப்போம். ஆனா ‘பகவானுக்கு உண்மையான பூஜை எது? அதை பண்ண முடியுமா நம்மால?’ அப்படீன்னு ஆச்சாரியார் வியக்கறார். ‘ வஸ்த்ரோத்³தூ⁴தவிதௌ⁴’ -உனக்கு வஸ்த்ரம் உடுத்தி உபசாரம் பண்ணனும்னா, ‘ஸஹஸ்ரகரதா’ – சூரியனைப் போல ஆயிரம் கைகள் வேணும். ஏன்னா, ...