Posts

ஈசன் கேட்ட பாகவதம்

Image
ஈசன் கேட்ட பாகவதம்  கிருஷ்ண பக்தரான பூந்தானம் செய்யும் பாகவத உபன்யாசங்களை மக்கள் மிகவும் நேசித்தார்கள்.  அவர் செய்யும் உபன்யாசங்களில் கண்ணன் வாழ்ந்தான் ..  பக்தி யமுனை போல் பெருக்கெடுத்து ஓடியது ...  கண்ணன் அங்கே யசோதையிடம் திட்டு வாங்கும் போது வெண்ணெய் போல் உருகி போய் விடுவார் ...  கண்ணன் கோபம் கொண்டு எழும் போது இவர் கண்களில் தீப்பொறி பறக்கும் ...  கண்ணன் காதல் வசம் படும்போது இவர் எழுந்து நடனம் செய்வார் ...   கேரளாவில் உள்ள கொட்டியூர் என்னும் ஊரில் உள்ள சிவன் கோவில் வருடத்தில் சில நாட்களுக்கு மட்டுமே திறந்திருக்கும்.  பூந்தானம் கொட்டியூர் சென்று அங்குள்ள குளத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு மிகுந்த சந்தோஷத்துடன் அங்கேயே சில நாட்கள் தங்கினார். தினசரி கோவிலில் சிவன் முன்னால் பாகவத ப்ரவசனம் செய்தார். நூற்றுக்கணக்கான மக்கள் அவருடைய இனிமையான பிரவசனத்தைக் கேட்டார்கள். ஸ்ரீமத் பாகவதத்தில் கிருஷ்ணர் விளையாட்டாக ருக்மிணியிடம், சிசுபாலன், ஜராசந்தன், சால்வன் போன்றோர் இருக்கும்போது என்னை ஏன் திருமணம் ...

தேவகியின் ஏக்கம்

Image
தேவகியின்  ஏக்கம் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர்ந்தவன் கண்ணன். பெற்றவள் தேவகி. வளர்த்தவள் யசோதை.  கண்ணபிரானுடைய குழந்தை விளையாட்டையும் குறும்புத் தளத்தையும் கண்டு களிக்கும் பேறு தேவகிக்குக் கிட்டவில்லை.  அந்தப் பெரும் பேறு பெற்றவள் யசோதை. “மருவும் நின்திரு நெற்றியில் கட்டி அசைதர மணிவாயிடை முத்தம் தருதலும் உன்தன் தாதையைப் போலும் வடிவு கண்டுகொண்டு உள்ளம்உள் குளிர விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும்அவ் வுரையும் திருவி லேன்ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதைபெற்றாளே" முழுவதும் வெண்ணெய் அளைந்து தொட் டுண்ணும் முகிழ் இளஞ்சிறு தாமரைக் கையும் எழில்கொள் தாம்புகொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும் அழுகையும்அஞ்சி நோக்கும் அந் நோக்கும் அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும் தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதிகண் டாளே” என்று ஏங்கினாள் தேவகி கம்சனைக் கொன்று மகாபாரதப் போர் முடித்த பின்பு, கண்ணபெருமான் துவாரகையில் வாழ்ந்து வந்தான். ருக்குமணி, சத்த...

கண்ணனும் கால் தூசும் 2

Image
கண்ணனும் கால் தூசும் 2 ஸ்ரீகிருஷ்ணனிடம் நாரதர், “சாமி! நேரமாகிறது. என்ன செய்யலாம்” என்றார்.  கிருஷ்ணனோ “நாரதா! பிருந்தாவனம் சென்று கோபியர்களிடம் கேட்டுப்பார், ஒருவேளை கிடைக்கலாம்” என்றார். உடனே நாரதர் பிருந்தாவனம் சென்றார்.  கிருஷ்ணனுக்கு வந்துள்ள பிணியையும் அதற்கான மருந்தையும் கோபியர்களிடம் சொன்னார். கோபியரோ நாரதரிடம் கோபித்துக் கொண்டனர். “எங்களோடு கிருஷ்ணர் இருந்தவரை எந்தநோயும் வந்ததில்லை.   நீங்களெல்லாம் அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை, அதனால்தான் நோய்” என்றனர். அந்தப்பெண், “எங்களில் சிறந்த பக்தை யாரென்று சோதிக்க நேரமில்லை” என்று கூறிக் கொண்டே கீழே ஒரு துணியை விரித்தாள்.  எல்லாப் பெண்களையும் அழைத்து “உங்கள் பாதத்தின் துளி இந்தத் துணியில் படுமாறு ஒவ்வொருவரும் நடந்து செல்லுங்கள்” என்றாள். அவள் மேலும், “கிருஷ்ணன் குணமானால் போதும். எங்களுக்குப் பாவம் வந்து சேர்ந்தாலும், நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை” என்று பாதத்துளிகளின் மூட்டையைக் கட்டி நாரதரிடம் கொடுத்தார். கிருஷ்ணன் மூட்டையைப் பிரித்து பிருந்தாவனப் பெண்களின் கால்...

கண்ணனும் கால் தூசும் 1

Image
கண்ணனும் கால் தூசும்  அன்று வைகுண்ட ஏகாதசி ..பரமனை தரிசிக்க பக்தர்கள் படை எடுத்தனர் .  கிருஷ்ணனை தரிசிக்க மகரிஷிகளும் பக்த கோடிகளும் துவாரகை நோக்கிச்செல்லும் ரோட்டில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தார்கள். துவாரகையில் நாரதன், கிருஷ்ணனின் மனைவியரான பாமா, ருக்மணி ஆகியோர் கூட்டம் சேர்வதைப் பார்த்து மலைத்து ” கிருஷ்ண பக்திக்கு அளவேது ! ” என அவர்களாய்ப் புளகாங்கிதம் அடைந்தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் ஒரு நமட்டுச் சிரிப்புடன் சோகமானார். “அய்யோ! தலைவலி, உயிர்போகுதே” என்றார். நாரதனோ “பரந்தாமா! உனக்கா தலைவலி” என்றார்.  மருத்துவர்கள் வரிசையாக நின்றனர், தைலங்கள் அளவில்லாமல் தடவப்பட்டது,  தலைவலி போனதாகத் தெரியவில்லை.  நேரமோ ஆகிக்கொண்டிருந்தது. பக்தர் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. நாரதன் தலைமையில் ருக்மணி, பாமா சென்று, “பரந்தாமா! இந்தத் தலைவலிக்கு மருந்து என்னவென்று கட்டாயம் உனக்குத் தெரியும்.  தயவுசெய்து சொல்லிவிடு. எங்கிருந்தாலும் நாங்கள் கொண்டுவந்து விடுகிறோம்” என்று கேட்டனர். கிருஷ்ணன், “ஆம். எனக்குத் ...

பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி .....4

Image
பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால் கொஞ் சம் நிம்மதி .....4 கண்ணன் சிரித்தான் ... 'என்னிடம் நீ வரமாட்டாயா என்று கெஞ்சுபவர்கள் தான் அதிகம் ... என்னை முதல் முதலாக வெளியே போ என்று சொன்னவன் நீர் ஒருவர் தான் .. ' ஆனால் போரில் உங்களை வென்ற பிறகே குகையை விட்டு போவேன் .. ம்ம் சண்டைக்கு வாருங்கள் ... உங்கள் ராம நாமம் என்னை ஒன்றும் செய்யாது ....  அப்படி கண்ணன் சொல்லிவிட்டானே தவிர உள்ளுக்குள் பயம் வந்து விட்டது.. ராம நாமத்தின் பெருமையை உணராதவனா கண்ணன் ?  மெதுவாக இன்னும் சற்று அதிகமாக ஜாம்பவனின் காதுகளில் விழும் அளவிற்கு அவன் உதடுகள் ராம நாமத்தை உச்சரிக்கத் தொடங்கின ....  ஜாம்பவான் சண்டையை உடனே நிறுத்திக்கொண்டார் ... ராம நாமம் கண்ணன் திருவாயிலிருந்தும் வரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை ... ஓடிப்போய் கண்ணனின் திருவடிகளில் விழுந்தார் ... கண்ணா ... போதும் நாம் சண்டை போட்டது ... ராம நாமத்தை சொல்லும் உன்னிடம் சண்டை போட்டால் நான் மிகப்பெரிய பாவியாகி விடுவேன் .  * ஸ்ரீ ராம ராம ராமா எனும் திருநாமம் அதி உத்தமம் ... ஆயிரம் உயர் நாமங்கள் தரும் பலன் இந்...

பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி .....3

Image
பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி .....3 என்ன சொன்னாய் ..உன் பெயர் கிருஷ்ணனா ? என் ராமனைப்போல் இருக்கிறாய் என்றே கோபப்படாமல் பேசினேன் ..  கரடியாக இருந்தாலும் என் உள்ளே உறங்கி கொண்டிருந்த சுய மரியாதை எனும் சிங்கத்தை தட்டி எழுப்பி விட்டாய் .. புலியாக உன் மீது பாயப்போகிறேன் .. நான் ஒரு மதம் கொண்ட யானை இப்பொழுது .. உன் வாளை எடு .. தடுத்துக்கொள் உன் முடிவை .... இந்த மணி என் ராமனுக்கு மட்டுமே தருவேன் ...  கண்ணன் சிரித்தான் .. ஊதினால் உடைந்து போகும் உடம்பை வைத்துக்கொண்டு சிங்கம் புலி யானை என்று உளருகிறாரே ஜாம்பவான் ...  நானும் ராமனும் ஒருவரே என்று கொஞ்சம் சண்டை போட்ட பின் உணர்த்துவோம் ...  தம்பிகள் எழுவருக்கும் ஏமாற்றம் .. திரும்பி தங்களை அலங்கரித்துக்கொண்டு  வர வேண்டுமே என்று ...  சம்பாதி சொல்லிக்கொண்டது ... அடடா ஜாம்பவனை உடனே பார்ப்போம் என்று ஆசைப்பட்டேன் ..  கண்ணன் ஏமாற்றி விட்டானே ....  சங்கர சுவனன் வந்த இடத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து ராம பாராயணத்துக்குள் சென்று விட்டார் ...  ...

பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி .....2

Image
பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி .....2 கண்ணனின் பீதாம்பரம் மரவுரியாக மாறின ...  கையில் இருந்த சங்கு சக்கரம் பரதன் சத்துருகன் ஆகின ...  கூட வந்த பலராமன் லக்ஷ்மணனாக மாறினான் ..  ஒரு அண்ணன் ஜாம்பவானுக்காக தம்பியாகினான் ... மனதில் உறையும் ருக்மணி சீதையானாள் ....  மார்பில் அணிந்த நகைகள் குகனாக மாறின ...  பாதங்களில் இருந்த காலணிகள் விபீஷனாகவும் சம்பாதியாகவும் மாறின ...  தேனைத் தேடி வரும் வண்டுகள் போல் எங்கிருந்தோ பறந்து அங்கே வந்து சேர்ந்தான் சங்கர சுவனன் ...  கண்ணனின் கோபியர்கள் எல்லோரும் அயோத்தியில் வாழும் மக்களாகினர் ....  ராமனாக தன் உயிர் தோழனை சந்திக்க கண்ணன் ஆயுதமானான் .... ஜாம்பவான் அன்று அளவிற்கு அதிகமாகவே திருநீறு பூசிக்கொண்டிருந்தார் ... விஷ்ணு ரூபம் அங்கே வரும் போது சிவ ரூபம் இல்லாமல் போகுமா ...  *சிவாய விஷ்ணு ரூபாய சிவ ரூபாயை விஷ்ணவே ...* கண்ணன் ஒரு வினாடி யோசித்தான் ... கொஞ்சம் விளையாடி விட்டு ராமராகுவோம்... மீண்டும் அங்கே கண்ணன் பிறந்தான் ......  பொய் கோபத்த...

Lரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 26

Image
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  பாடல் 26 26 –  கௌதமர் போற்றும் கருணை மாமலையே கடைக்கணித்து ஆள்வாய் அருணாசலா (அ) கௌதமர் என்பது விச்வாமித்திரரை குறிக்கும் ---  ஏன் மற்ற முனிகளை விட்டு விட்டு ரமணர் இவரை ஒரு உவமைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் -- இவரோ  அதிகமான கோபம் குணம் உடையவர் --துர்வாசரைப்போல் மூக்கு மேல் கோபமும், சாபமும் வரும் ....  இவர் அருணாசலத்தைப்போற்றினால் என்ன, போற்றாவிட்டால் என்ன?   அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது ---- இவர் சிவனின் மீது அதிக பக்தி கொண்டவர் - துர்வாசரைப்போல் இவரும் ஒரு சிவ அம்சம் ---  ராமாயணத்தில் ராமருக்கும் லக்ஷ்மணருக்கும் "பலா அதிபலா " என்ற மந்திரத்தை சொல்லித்தரும் பொது ராமர் கேட்டாராம் --  இதன் அர்த்தம் என்ன?  இது சக்தி மிகுந்த மந்திரம் --- அன்னை உமையை பற்றியது.  - அரசனாக இருப்பவனுக்கு சக்தி வேண்டும், - எப்பொழுதும் சோம்பலோ களைப்போ இருக்கக்கூடாது ...  - மேலும் எதிலும் எப்பொழுதும் கவனமாக இருக்கவேண்டும் --  அன்னையை வணங்கினால் இவை எல்லாம் கிடைக்கும் என்று சொல்லும...

பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி .....ஜாம்பவதி

Image
பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி ..... இருண்ட குகை ... அங்கே ராம நாமத்தை பரப்பி அதிலே வரும் ரகு வம்சத்தின் ஒளியில் கண்களை மூடிக்கொண்டு உதடுகளை மூடாமல் ராம் ராம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார் ஜாம்பவான் ....  வரும் ஒவ்வொரு நாமமும் அவரின் கண்ணீரில் கங்கையில் குளித்து எழுந்து வருவதைப்போல் உற்சாகமாக வெளி வந்தன ... முதுமை இன்னும் முழுமையாக அவர் உடலை தழுவ விட வில்லை ஜாம்பவான் ... ராம நாமத்தை தவிர அவர் உடம்பை தழுவ எதற்கும் அதிகாரம் இல்லை ... ராமா உன்னை மீண்டும் இந்த யுகத்தில் பார்ப்பேனா ... எவ்வளவு நாட்கள் ஆகி விட்டன ... என் அருமை நண்பன் அனுமார் எங்கிருக்கிறார் என்றே தெரிய வில்லை ... சுக்கிரவன் , சம்பாதி என்னை வா வா சொர்க்கத்திற்கு என்று அழைக்கிறார்கள் ...  உன் நாமம் தரும் சுகம் அந்த சொர்க்கம் தந்திடுமா ராமா ? நீ அடிக்கடி தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவாயே ஜாம்பவதி இன்று எப்படி இருக்கிறாள் தெரியுமா ?  நல்ல கணவன் கிடைத்து விட்டால் உன் நாமம் அதில் கரைந்து விடுவேன் ராமா ...  இதோ என் கையில் என்ன ஜொலிக்கிறது என்று பார் ராமா .. உன்...