பச்சைப்புடவைக்காரி - ஜொலிக்கும் மாணிக்க மூக்குத்தி
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் ஜொலிக்கும் மாணிக்க மூக்குத்தி கம்ப ராமாயணம் படித்துக்கொண்டிருந்தேன் ... பச்சைப்புடவைக்காரி அருகில் அமர்ந்ததையும் கவனிக்காமல் - எனக்கு நானே பேசிக்கொள்வதை அன்னை கேட்டு ரசித்துக்கொண்டிருந்தாள் இராவண வதம் முடிந்து இராமன் அயோத்தி நோக்கி வந்து கொண்டிருக்கிறான். வருகிற வழியில் பரத்துவாஜ முனிவரை சந்திக்கிறான். அவர், பரதன் நிலை பற்றி இராமனுக்கு கூறுகிறார். வெயர்த்த மேனியன்; விழி பொழி மழையன்; மூவினையைச் செயிர்த்த சிந்தையன்; தெருமரல் உழந்து உழந்து அழிவான்; அயிர்த்து நோக்கினும், தென் திசை அன்றி, வேறு அறியான் பயத்த துன்பமே உருவு கொண்டென்னலாம் படியான் பொருள் வெயர்த்த மேனியன்; = வியர்வை வழியும் மேனியை உடையவன். காரணம், சாமரம் வீசக் கூட ஆள் வைத்துக் கொள்ளவில்லை விழி பொழி மழையன் ; = விழிகள் மழை போல் கண்ணீரை சொரிகின்றன மூவினையைச் = மூன்று வினைகளை, மூழுகின்ற வினைகளை செயிர்த்த சிந்தையன்; = கோபித்த சிந்தையன் தெருமரல் = மன மயக்கத்தால் உழந்து உழந்து அழிவான்; = உழன்று உழன்று அழிவான் அயிர்த்து நோக்கினும் = ஐயம் கொண்டு பார்த்தாலும் தென் திசை அன்றி = தென் த...