பச்சைப்புடவைக்காரி - ஸ்ரீ ருத்ரம் கூறும் சிவலீலை-2 - 221

பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் ஸ்ரீ ருத்ரம் கூறும் சிவலீலை-2 (221) 👍👍👍💥💥💥 ‘‘அப்பனே ஈஸ்வரா, நீயோ உள்ளம் கவர் கள்வன்,என் மனமோ பிறர் பொருளை திருடும் திருடன். ஆகையால் நீ இவனை ஆட்கொண்டு, இவனை திருத்து’’ என்று ஈசனிடம் வேண்டுகிறார் சங்கரர். (சிவானந்த லஹரி - 22) அடுத்து வேத நாயனார் பரமனை சபாபதியாக தரிசிக்கிறார். சபாபதி என்றாலே சிதம்பரநாதர் தான் மனக் கண் முன் வருவார். மனம் என்னும் மேடை, தூய்மை ஆகி வெற்றிடமானால், அதில் ஈசன் நர்த்தனம் ஆடுவான். இதுவே சிதம்பர ரகசியம். சரி சித்தம் வெற்றிடம் ஆவது எப்படி?. அது யோகத்தாலும் சாத்தியம்...