பச்சைப்புடவைக்காரி -மாமனும் மருமானும் 2 -416
பச்சைப்புடவைக்காரி🙏🙏🙏 மாமனும் மருமானும் 2 *416* 🏆🏆🏆 எல்லாத் திருக்கோவில்களிலும் வேல் ஏந்தி நிற்கும் முருகப்பெருமான், *ஆவூர்ப் பசுபதீசுரம், திருச்சாய்க்காடு, திருக்கொள்ளிக்காடு, திருவையாறு* போன்ற தேவாரப்பாடல் கண்ட திருத்தலங்களில் வில் ஏந்தும் பெருமானாக நிற்கிறார். எல்லாவற்றையும் விட மாமனைப் போல சங்கு சக்கரம் ஏந்தி, *அரிசில்கரைப் புதூர்* என்ற ஆலயத்தில் காட்சி தருகிறார், முருகக்கடவுள். மாலவன் போலவே மருமகனும் என்பதாகக் காட்டுகிறது.🙏🙏🙏 மாமன் திருமாலையும், மருமகன் முருகனையும் ஒப்பிட்டும் பல பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. அருணகிரிநாதர் வடித்த திருப்புகழ் முதல் பல பாடல்களில்.. குறிப்பாக கந்தர் அலங்காரச் செய்யுள்கள் அதனை மெய்ப்பிக்கின்றன. ‘.......மாவலிபாய் மூவடி கேட்டன்று, மூதண்ட கூட முகடு முட்டச் சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே’ என்கிறது ஒரு பாடல். அதாவது.. ‘மகாபலி மன்னனிடம் மூன்று அடி களைக் கேட்டு உலகளந்து, இப்பெரிய அண்டத்தின் உச்சியைத் தொடும் அளவுக்கு திரிவிக்கிரக அவதாரம் எடுத்து கால் வைத்த மகாவிஷ்ணுவின் மருமகனாகி...