பச்சைப்புடவைக்காரி - தியாகராஜ சுவாமிகள் வரலாறு. -6 (191)
பச்சைப்புடவைக்காரி தியாகராஜ சுவாமிகள் வரலாறு. -6 உபயம் : தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் (191) திருவையாற்றுக்குத் தேவார பதிகங்கள் 18 உண்டு. தேவார மூவரும், மாணிக்கவாசகரும் இத்தலத்தைப் பாடியிருக்கிறார்கள். அப்பர் பெருமான் கயிலை சென்று சிவபெருமானை தரிசிக்கச் சென்றபோது இறைவனால் தடுத்தாள்கொள்ளப்பட்டு, இப்பூதவுடலோடு கைலாயம் செல்வது இயலாத காரியம், ஆகையால் நீர் இந்த பொய்கையில் மூழ்கி எழுவீராக என்று வழியில் சிவபெருமான் முதியவர் வடிவில் வந்து சொல்ல, அப்பரும் அப்படியே மூழ்கி எழும்போது தான் திருவையாற்றில் இருப்பதை உணர்ந்தார். அப்போது ஐயன், அம்மையோடு ரிஷப வாகனத்தில் தோன்றி, இப்பிரபஞ்சத்தின் இயற்கையை விளக்கிக் காட்சி தருகிறார். அப்போது அப்பர் பெருமான் பாடிய பாடல் தேவாரப் பாடல்களில் இன்றியமையா இடத்தைப் பெற்றுவிட்டது....