முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும் .சுதாமா 7
முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும். பதிவு 7... சுதாமா மெதுவாக கண்களை திறந்தார் சுதாமர் ... அங்கே அவர் பார்த்த காட்சி அவர் பல ஜென்மங்கள் செய்த பாவங்களை மூட்டை கட்டி பிரவாகம் எடுத்து ஓடும் யமுனையில் தூக்கி எறிந்ததைப்போல் இருந்தது .... பாற்கடலில் படுத்திருக்கும் பரந்தாமன் பட்டு பீதாம்பரத்துடன் , கேசத்தில் விரிந்தாடும் மயில் பீலிகளுடன் , கரங்களில் அமுத கானம் தரும் குழலுடன், நவரத்தினங்கள் பதிந்த கீரிடம் , முத்துக்கள் புன்னகைக்க , வைடூரியம் பலபலக்க , கோமதகங்கள் கோவிந்தா சரணம் என்று முழக்கமிட , பவழம் கண்ணன் உதடுகளில் ஓடிப்போய் அமர்ந்து கொள்ள , மேனி எங்கும் தங்கம் ஜொலி ஜொலிக்க , எல்லா நகைகளும் வெட்கப்படும் படியான புன்னகையுடன் , தேன் சிந்தும் குரலில் , மதுரம் நிறைந்த விழிகளில் , கற்கண்டு எனும் பரிவை கலந்து , வாழ்க்கையில் சுதாமர் பார்த்திருக்காத முந்திரி , திராட்சை , பாதாம் ஏலக்காய் , துவாரகையில் விளைந்த கரும்புகளில் எடுத்த சர்க்கரை, குங்கமப்பூ , பச்சை கற்பூரம் இ...