பூதப்றுத் ... நாமத்தின் பெருமை
பூதப்றுத் ... நாமத்தின் பெருமை அவர் ஒரு ஏழை .. உடையிலும் வறுமை .. உள்ளமும் வறுமை ... பெருமை கொண்ட இறைவன் பெயர்கள் பொறுமை இல்லா நெஞ்சமதில் நுழைய வில்லை ... கருமை கொண்ட விழிகள் கருமை நிறத்தழகனை பார்க்க விருப்பம் இல்லாமல் இருந்தன .. அருமையாக பிரசவமாகும் நாட்கள் அவருக்கு அதிகமாக பிரசவ வலியை தந்தன வாழவேண்டுமே என்ற கவலை ஒருபுறம் .. இன்று குழந்தைகளுக்கு கால் வயிறு கஞ்சி கிடைக்குமா ... என்ற கவலை மறுபுறம் ...காஞ்சி வரதன் சிரித்தான் அரங்கனாக .... கஞ்சி வரதப்பா என்று வாயில் வார்த்தை வராதவனுக்கு கஞ்சி தனை தர கொஞ்சம் நாடகம் புரிந்தான் ... தினம் தினம் அரங்கனின் ஆலயம் செல்வார் அவர் .. ரங்கனை வணங்க அல்ல ... ரங்கன் தரும் பிராசதத்தை அதிகமாக பெற்றுக்கொண்டு காத்திருக்கும் பசிக்கு விடை கொஞ்சம் கொடுக்க ... முந்தி அடித்துக்கொண்டு வரிசையில் இருப்பார் .. வாய் விட்டு கேட்பார் .. எனக்கு இன்னும் கொஞ்சம் போடுங்கோ .. இது போதாது ... பார்ப்பவர்கள் முகம் சுளித்தனர்... கேட்பவர்கள் ரங்கா ரங்கா என்ன இது இப்படி ஒரு அல்பத்தை அனுப்பி உ...