Posts

Showing posts from August, 2019

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 .. பாடல் 16

Image
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  பாடல் 16 16. காந்தம் இரும்புபோல் கவர்ந்து எனை விடாமல் கலந்து எனோடு இருப்பாய் அருணாசலா திருமாலை காந்தன் என்று சொல்வார்கள் ஆழ்வார்கள். கலைமுழு தோர்ந்து கரிசெலாம் அறுத்த காந்தனே பருமணி அரவத் தலைகிடந் திமைக்குந் தாத்திரி யதனிற் சாற்றருந் தக்கநன் முயற்சி உலைவறப் புரியா ஒருவனுக் கெங்ஙன் உற்றிடுஞ் செல்வநன் னிலத்தை நிலைபெற உழுது வித்திலான் தனக்கு நீள்பயன் உற்றிடுங் கொல்லோ. கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் வந்து சுகம் தந்த காந்தனே என் காந்தனே முருகனும் காந்தன் தான் என்கிறது இந்த பாடல்.  ஓர் இரும்புத்துண்டு புழுதியில் கிடந்தாலும், காந்தத்தை மேலே காட்டினால் போதும், அந்த இரும்புத்துண்டு காந்தத்தால...

பாமாவின் கண்ணன் 2

Image
பாமாவின் கண்ணன் 2 கண்ணா கண்ணா என்று சொல்லும் பாமாலையில் பாமா கரைந்து போவாள் ...  பார்த்தனுக்கு சாரதி நீ , பசித்தவர்களுக்கு அக்ஷ்ய பாத்திரம் நீ , பாடுவோரின் மாலை நீ ... நீ அணியும் மாலை நான் ... ஏற்றுக்கொள் கண்ணா இந்த பூ மாலையை ...  வனமாலை அணிந்தவனே ,  தனமாலை மார்பில் கொண்டவனே , இனமாலை அறியேன் ...  இடைமாலையாய் என்னை  ஏற்றுக்கொள் .. . அவள் வளர வளர அவள் மனம் கிருஷ்ணன் பால் அதிகம் சென்றது.   அவனைத் தான் மணந்து கொள்ள வேண்டும் என்னும் தீர்மானம் உறுதிப்பட்டது.  அவள் இல்லாமல் கிருஷ்ணன் என்ன செய்வான்? அவளால் தான் அவனுக்கு மகிழ்ச்சியைத் தர முடியும்.  அவளால் மட்டுமே அவனுக்கு ஓர் ஆதர்ச மனைவியாக வாழ்க்கை நடத்த முடியும்.  அவள் இல்லையேல் கிருஷ்ணனுக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை.  இது வரை அவன் வாழ்க்கையில் சந்தித்த எந்தப் பெண்ணும் கொடுக்காத அளவுக்கு மகிழ்ச்சியை மட்டுமின்றி அவனுடைய வேலைகளிலும், மற்றப் பிரச்னைகளிலும் பங்கெடுப்பாள்.  பெருந்தன்மையுடன் அவனைப் பகிர்ந்து கொள்வாள்.  அவன் வாழ்வில் இத...

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 .. a flashback

Image
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  A flashback  ஒரு பின்னோட்டம் 12 to 15 12.ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார் உன் சூதேயிது அருணாசலா 13.ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய் உனை யார் அறிவார் அருணாசலா 14.ஔவை போல் எனக்குன் அருளைத் தந்து எனை ஆளுவது உன் கடன் அருணாசலா 15.கண்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக் காணுவது எவர் பார் அருணாசலா 12 வது பாடலில் நீ ஒருவனே பரமாத்மா, பிரம்மம் -- உன் கண்ணில் படாமல் எதையாவது யாராவது ஒளித்து வைக்க முடியுமா? அல்லது ஒளிந்து கொள்ளத்தான் முடியுமா? நீயாக சூது செய்தாலே ஒழிய இது நடக்கக்கூடிய காரியம் இல்லை அருணாசலா. 13 வது பாடலில் ஓம் எனும் சொல்லின் பொருளாக விளங்கும் உன்னை யார்தான் அறிய முடியும் அருணாசலா - ஹரியும் பிரம்மனும் கூட உன்னை முழுவதும் அறிந்துக்கொள்ள வில்லை -- நாங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது ... 14 வது பாடலில் ஔவையை போல் ஒரு சிறந்த சிவபக்தை இருக்க முடியாது - நீ ஒப்புக்கொண்டால் நானும் சிறந்த சிவ பக்தன்- அவளுக்கு அருள் செய்ததை போல், கருணைக்காட்டியதைப்போல் எனக்கும் காட்டு அருணாசலா என்கிறார். 15வது ...

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 15

Image
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  பாடல் 15 15 –  கண்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக் காணுவது எவர் பார் அருணாசலா (அ) முதல் பார்த்த வரிகளில் கோபம் இருந்தது, இயலாமை இருந்தது, அதிகாரம், கட்டளை இருந்தது -  உரிமை வார்த்தைகளாக தெளித்தது -- இனி வரு பாடல்களில் இரக்கமும், கெஞ்சுதலுமே இருக்கின்றன ---  பார்க்கமாட்டாயா, வர மாட்டாயா, அவ்வைக்கு கருணை காட்டியதைப்போல் எனக்கும் உன் கருணையை காட்ட மாட்டாயா .... என்று புலம்புகிறார் ரமணர் --  இன்றைய வரிகளில் ஒரு படி இன்னும் மேலே போகிறார் ரமணர். எனக்கு கண்கள் மிகவும் முக்கியம் அருணாசலா -  அவைகள் கொண்டுதான் இந்த உலகைப்பார்க்கிறேன். --- அந்த கண்களுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று நான் இதுவரை நினைத்ததில்லை ---   ஆனால் நீயோ நான் கேட்காமல் அந்த கண்களுக்கு கண்ணாய் இருக்கிறாய் -  கண்களையே பார்க்கும் கண்கள் அருணாசலர் ---  எவ்வளவு அழகாக உணர்ச்சி பூர்வமாக ரமணர் சொல்கிறார் பாருங்கள் ---  இந்த அக கண்கள் உனக்குத்தேவை இல்லை -  இருந்தாலும் உன்னா...

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 14

Image
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  பாடல் 14  14 – ஔவை போல் எனக்குன் அருளைத் தஎது எனை ஆளுவது உன் கடன் அருணாசலா (அ) ஔவையின் மீது ரமணருக்கு தனி அன்பு, பக்தி -- இங்கே ஔவை என்றும் எடுத்துக்கொள்ளலாம், தாயென்றும் எடுத்துக்கொள்ளலாம் ---ஔவை ஈசன் மீது பல பாடல்கள் பாடியுள்ளார்  அவ்வை என்ற பெயரில் நான்கு புலவர்கள்.  அவ்வையார் என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு பெண் பால் புலவர் இருந்துள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் அவ்வையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் இருந்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால அவ்வையார்.  இவர் தொண்டை நாட்டு மன்னர் அதியமானுக்கு நல்ல நண்பர்.  நீண்டநாள் வாழ்வைத் தரும் நெல்லிக்கனியை மன்னர் அதியமான் தான் உண்ணாது அவ்வை நீண்டநாள் வாழவேண்டும் எனக் கருதி கொடுத்தார் என்பது வரலாற்றுக்கதை.  இந்த அவ்வையார் சங்க இலக்கியத்தில் 59 பாடல்களைபாடியுள்ளார். பக்திக்கால இறுதியில் விநாயகர் அகவலைப் பாடியவர் இரண்டாவது அவ்வையார்.  இவர் பாடிய விநாயகர் அகவலைத...

பாமாவின் கண்ணன் 1

Image
பாமாவின் கண்ணன் 1 செல்லும் இடங்களில் எல்லாம் கண்ணன் நிகழ்த்தி வந்த சாகசங்களைக் குறித்து அவள் நிறையக் கேள்விப் பட்டிருந்தாள்.  துவாரகையில் அவற்றைக் குறித்துப் பேசாத நபர்களே இல்லை!  இதைக் குறித்துத் திரும்பத் திரும்பப் பேசிப் பேசி மக்கள் மகிழ்ந்தனர்.  அதிலும் குரு வம்சத்து அரசனான பாண்டுவின் ஐந்து புத்திரர்களையும் ராக்ஷசவர்த்தத்தில் இருந்து கண்ணன் மீட்டுக் கொண்டு வந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.   வாரணாவதத்தில் துரியோதனாதியரால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட ஐவரும் அங்கிருந்து உயிருடன் தப்பிச் சென்றது ஒரு அதிசயம் எனில் அவர்கள் ராக்ஷஸவர்த்தத்தில் உயிருடன் இருந்து தப்பி வந்தது இன்னொரு அதிசயம்.  அதோடு மட்டுமில்லாமல் யாதவர்களின் நீண்ட வருடங்களாக எதிரியான ஜராசந்தனைக் கண்ணன் தனி ஒருவனாக  திரௌபதியின் சுயம்வரத்திலிருந்து விலக வைத்ததும், அவனைக் காம்பில்யத்தை விட்டே ஓட வைத்ததையும் பேசப் பேச அவர்களுக்கு அலுக்கவில்லை.  துருபதனின் அருமையும், பெருமையும் நிறைந்த மகளைக் கரம்பிடிக்கப் பாண்டவர்களுக்கு உதவி செய்தது, இறந்து கொண...

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 13

Image
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  13.ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய் உனை யார் அறிவார் அருணாசலா இந்த பாடலை பார்க்கும் முன்   மனம் மீண்டும் பின்னோக்கி ஓடுகிறது - ரமணரின் அக்ஷர மாலையில் 6வது பாடலை மீண்டும் ஒருமுறை பார்ப்போமா --?  இன்னொரு தடவை படிக்கும் போது வேறு புதிய விளக்கம் வருகிறது ... ஈன்றிடும் அன்னையின் பெரிதுஅருள் புரிவோய், இதுவோ உனதுஅருள் அருணாசலா. இதில் என்ன சொல்கிறார் ரமணர் --   அருணாசலா என் தாயைக்காட்டிலும் அதிகமாக கருணை காட்டுகிறாய் -  உன்னைப்போல் யார் என்னிடம் பாசமாக இருக்கிறார்கள் என்கிறார் --- ரமணருக்கும் ஆதிசங்கரருக்கும், பட்டினத்தாருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது   இந்த மகா யோகிகள் எல்லாவற்றையும் துறந்தவர்கள் ---  ஆனால் இவர்களால் துறக்கவே முடியாதது ஒன்று இருந்தது -அதுதான் தாய் பாசம் ---  ரமணர் அழகம்மை இறக்கும் வரை தன்னுடனே வைத்திருந்தார் --  ஆதிசங்கரரும் பட்டினத்தாரும் தாயிடம் கடைசி தருணத்தில் ஓடி வந்து கதறி அழுது ஈமக்கடன்களை செய்தனர் --- ஆதிசங்கரரின் மாத்ரு பஞ்ச...

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 12

Image
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 12 12 – ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார் உன் சூதேயிது அருணசலா! (அ) இறைவனை பலர் பக்தி வருவதற்கும் முன் திட்டியுள்ளனர் -  கல்லால் அடித்தும் உள்ளனர், பிரம்பால் அடித்தும் உள்ளனர், பித்தனே, பேயனே என்றும் வசம் மாரி பேசியும் உள்ளனர் --  தேவர்கள் தங்களுக்கு அமுதம் வேண்டும் என்ற ஒரே கொள்கையில் இறைவனை ஆலகால விஷத்தையும் அருந்த சொன்னார்கள் --- தனக்கு சேவகனாக, தூதுவனாக அனுப்பியும் உள்ளனர் ---  பக்தி வந்தபின் தங்கள் இம்சைகளை குறைத்துக்கொண்டனர். ஆனால் அவனிடம் இருந்த உரிமையை குறைத்துக்கொள்ள வில்லை.  -- ரமணரோ வேறு மாதிரி ---  பக்தி அதிகமாக அதிமாக இறைவனை அதிகமாக இந்த அக்ஷர மாலையில் சாடியுள்ளார் -  ஆனால் அதிலே வஞ்சகம் இல்லை, சூதுவாது இல்லை, தனக்கு என்று எதுவுமே அவர் கேட்கவில்லை ---  உண்மையில் அருணாசேஸ்வரர் ரமணர் இன்னும் தன்னை கொஞ்சம் அதிகமாக திட்ட மாட்டாரா என்று தான் ஏங்கினார் முதலில் என்ன சொன்னார்?  எனது மனதை நீ அடக்காவிடில் நீ தான் பழி சுமக்க போகிறாய் என்றார் --  ...

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 flashback 2 பாடல் 7 to 11

Image
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  பதிவு 15  A flashback 2  பாடல் 7 to 11 7.உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல் உறுதியாய் இருப்பாய் அருணாசலா! 8.ஊர் சுற்று உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட உன் அழகைக் காட்டு அருணாசலா! 9.எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில் இதுவோ ஆண்மை அருணாசலா! 10.ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க இது உனக்கு அழகோ அருணாசலா! 11.ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது அகத்தில் நீ இலையோ அருணாசலா! 7 வது பாடலில் பக்தன் என்னதான் இறைவன்மீது அன்பு வைத்தாலும், அவனது இந்திரியங்கள் அவனை விடுமா? வேறு விஷயங்களில் இழுத்துச்செல்லுமே! காற்றில் ஓடும் காகிதத்தின் மீது ஒரு கனமான பொருளை வைத்தால் அது ஓடாதல்லவா? அதுபோல, ‘என் மனத்தில் வந்து உறுதியாக அமர்ந்துகொள்’ என்று அருணாசலேஸ்வரரை   வேண்டுகிறார் ரமணர்.  ‘இல்லாவிட்டால் என் மனம் உன்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிடும், ஊர் எங்கும் சுற்றித் திரியும், அப்படி நிகழாதபடி கருணைகாட்டி என்னைக் காத்திடுவாய்’அருணாசலா என்று கெஞ்சுகிறார். 8வது பாடலில் என் மனம் எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருக்கிறது - என் கட்டுப்பாட்டில்...

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 11

Image
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  பதிவு 14 பாடல் 11 11 – ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும்போது அகத்தில் நீ இலையோ அருணாசலா! (அ) ஆளில்லாத வீட்டில்தான் திருடர்கள் வருவார்கள். ‘ஐம்புலன்களாகிய திருடர்கள் என் உள்ளத்தில் நுழைகிறார்கள் என்றால், அங்கே நீ இல்லையா?’ என்று ஏக்கத்துடன் கேட்கிறார் ரமணர்.  ‘பெருமானே, உனக்கு இணை யாருமில்லையே, உன்னை மறைத்து என் மனத்தில் நுழையக்கூடியவர்கள் யார்? இதெல்லாம் உன்னுடைய சோதனைதானா!’ மாணிக்க வாசகர் பாடும் போது இமைப்பொழுதும் என் நெஞ்சை நீங்காதான் தாள் வாழ்க என்றார் -- என் நெஞ்சத்தில் எப்பொழுதும் இமை மூடும் போதும் இருப்பவன் இறைவன் - ரமணர் இதையே மாற்றி கேட்க்கிறார் - ஐந்து புலன்களும் ஐந்து திருடர்கள் -- இவர்கள் அடங்கினால் மனம் அடங்கும் - மனம் அடங்கினால் மனம் லயிக்கும் - அதை தொடர்ந்து மனம் நாசம் ஆகும் - மனம் நாசம் ஆனால் "நான் யார்?" என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் ----ரமணர் சொல்கிறார் .... புலன்களே கள்வர்களாக இருக்கும் நிலை - முதல் வகுப்பு என்று வைத்துக்கொள்வோம் - அடுத்து வகுப்பு நாம் போவதற்கு இந்த கள்வர்களை அடக்கவேண்ட...

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 10

Image
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  பதிவு 13 பாடல் 10 10 – ஏனிந்த உறக்கம் எனைப்பிறர் இழுக்க இது உனக்கு அழகோ அருணாசலா! (அ) படிப்படியாக இறைவனை கேட்கிறார் - ஏதாவது ஒரு கேள்வியில் அவன் மசிய மாட்டானா என்று - அருணாசலேஸ்வரன் மசியவில்லை - ரமணரின் கேள்விகளும், திட்டல்களும், கெஞ்சலும், அதிகாரமும், கட்டளைகளும், கதறலும் ஓயவே இல்லை ---- எல்லாமே நமக்காகத்தான் இவ்வளவு பாடு படுகிறார் ரமணர் .... என் தாயினும் அதிக அன்பு காட்டுகிறாய் இன்று இப்பொழுதுதான் சொன்னேன் - சொன்ன வார்த்தைகளில் உள்ள ஈரம் காயும் முன்னே நீ உறங்கிப்போய் விட்டாயே அருணாசலா --- என்னை பிறர் இழுக்க இது உனக்கு அழகோ அருணாசலா? -- இங்கே பிறர் இழுக்க என்பது என் மனம், நான் எனும் எண்ணங்கள், அதனால் வரும் மமதை, அகம்பாவம். இவைகள் ஒன்றாக சேர்ந்துகொண்டு இறைவனிடம் நெருங்க விடாமல் இழுக்கின்றன -அதனால் இப்படி சொல்கிறார்.  -- காப்பாற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு தூங்குகிறாயே, என் தாயினும் நீ உயர்ந்தவன் என்று நினைத்தேனே - நீ செய்யும் காரியமா இது?   என் மனதை திருடி (அதற்குத் தெரியாமல்) உன் உள்ளம் எனும் குகையில் கொண்...

கண்ணனின் யசோதை 2

Image
கண்ணனின் யசோதை 2 பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் கோபிகைகளுடன் தோழமை பூண்டு லீலைகள் புரிந்தது பரமாத்மா காதலிப்பதையும் காதலிக்கப்படுவதையும் உணர்த்துகிறது.  இறைவன் ஒருவனே புருஷோத்தமன்.  இதர ஜீவாத்மாக்கள் எல்லாம் பெண் அம்சங்கள்.  இவர்களே கோபிகைகள்.  இவர்கள் நிலையிலிருந்து கடவுளை வழிபடுபவருக்கு அவன் ஒருவனைத் தவிர மற்றவெல்லாம் பெண்மயமாகவே காட்சி தரும்.  கோபிகைகள் கண்ணனைச் சூழ்ந்து புன்முறுவலுடன் ஆடுவதும் பாடுவதும் அன்புக் கடவுளிடம் ஆன்மாக்கள் சேர அடையும் குதூகலம். பக்தர்கள் பகவானைக் காண பரிவுடன் அணுகும்போது, பகவானும் பக்தர்களைத் தன்னிடம் சேர்த்துக் கொள்ளத் தேடுகிறானல்லவா?  கண்ணனுடன் லீலைகளில் ஈடுபட்டிருந்த கோபிகைகளின் தலைவியான உத்தம ஜீவனே "ராதை' என்பது.  ராதையின் கண்மணியாக இருந்தவன் ஸ்ரீகிருஷ்ணன்.  இமைப்பொழுதும் கண்ணனை மனத்தால் பிரியாத பிரேம பக்தி உள்ளவள்தான் ராதை.  ராதையின் பிரேம பக்தியில் கட்டுண்டு, விரும்பி எந்நேரமும் அவள் உள்ளம் புகுந்து உறைபவன் கண்ணன்.  அதனால்தான், பாமா, ருக்மணி ஆகிய இர...

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 a flashback

Image
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  பதிவு 11 flashback இன்றைய வரிகளை அலசும் முன், ஒரு சிறிய flashback -- மீண்டும் மனம் முதல் பாடலுக்கே ஓடுகிறது --- அருணாசலம் என அகமே நினைப்பவர் அகத்தை வேர்அறுப்பாய் அருணாசலா ஏன் அகத்தை (கர்வத்தை, மமதையை) வேருடுன் அழிக்கவேண்டும் என்று ரமணர் அருணாசலத்திடம் வேண்டுகிறார் --- கிள்ளி எறிந்தால் அல்லது பிடுங்கி போட்டால் போதாதா? ஏன் வேருடுன் பிடுங்க வேண்டும்? இரண்டு வரிகள் தான் அக்ஷர மாலை ஆனால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கி உள்ளன - அருணாசலேஸ்வரருக்கும், ரமணருக்கும் மட்டுமே அதன் உள் அர்த்தம் புரியும் -- இருந்தாலும் ரமணர் நமக்கெல்லாம் ஒரு வரத்தை தருகிறார் -- நான் யார் என்று உள்ளுக்குள்ளே தேடு - தேடிக்கொண்டே இரு - ஒரு இடத்தில் நீ தேடுவது நின்று போகும் -- அங்கே உன்னை நீ காண்பாய் சிவமாக என்கிறார் ரமணர் -- அதேபோல் அக்ஷர மாலையை படிக்க படிக்க வேறு வேறு அர்த்தங்கள், விளக்கங்கள் வரும். முடிவில் அங்கே நீ காண்பது ரமணராக நிற்கும் அருணாசலேஸ்வரைத்தான். ஏன் வேருடன் அறுக்கவேண்டும்? -- நமக்குள் இருக்கும் நான் என்ற எண்ணத்தை, மமதையை, அகங்க...

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 9

Image
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  பதிவு 11 பாடல் 9 9 – எனை அழித்து இப்போது எனைக் கலவாவிடில் இதுவோ ஆண்மை அருணாசலா! (அ) அருணாசலா ----- எனது என்பது ஒன்றுமே இல்லையே -- எல்லாம் நீ கொடுத்தது --- இதில் நான், எனது என்று எதை சொல்ல முடியும்? ஆனாலும் என் பாழும் மனமோ, நான், எனது என்றல்லவா சொல்லித்திரிகிறது --- அந்த என்னை, நினைக்கும் எண்ணங்களை அழித்துவிடு அருணாசலா --- அழிப்பது மட்டும் உன் வேலை அல்ல --- என்னை, நான், எனது என்று தவறாக நினைக்கும் என் மனதிற்கு தெரியாமல் திருடி உன்னிடத்தில் வைத்துக்கொள் --- அப்படி நீ செய்யாவிட்டால் உனக்கு ஆண்மையே என்று எல்லோரிடமும் போய் சொல்லிவிடுவேன் .... ரமணரின் உரையாடலைகளை பாருங்கள் -- என்ன உரிமை, அதிகாரம், கோபம், தாபம் --- இதுதான் உயர்ந்த பக்தி --- முதலில் அருணாசலா என்று நினைப்பவர்களின் கர்வத்தை வேருடன் அழித்துவிடு என்று உத்தரவிடுகிறார் -- பிறகு அழகும் சுந்தரமும் போல் பிரிக்கமுடியாமல் அபின்னமாய் ஆகிவிடுவோம் - என்று கெஞ்சுகிறார். பிறகு என் மனம் எங்கோ சுத்துகிறதே அதை அடக்கி இறைக்குள் வைத்துவிடு என்று எச்சரிக்கை விடுகிறார்.  ...

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 8

Image
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  பதிவு 10 பாடல் 8 8 – ஊர் சுற்றும் உளம் விடாது உனைக் கண்டு அடங்கிட உன் அழகைக் காட்டு அருணாசலா! (அ) அருணாசலா என் மனம் இருக்கிறதே அது என்றுமே எனக்கு கட்டுப்பட்டது இல்லை.  - நான் ஒன்று செய்ய ஆசைப்பட்டால் அது ஒன்று நினைக்கும் --- எங்கெல்லாமோ சுற்றிவிட்டு மிகவும் அப்பாவியாக எனக்குள் ஓடி வந்து ஒளிந்து கொள்ளும் -- ஒரு குரங்கு செய்யும் அத்தனை விஷமங்களையும் என் மனம் செய்யும் ... ஒருவன் வாழ்வில் எந்த ஒரு காரியத்திலும் சித்தியடைய முதற்கண் அவனது மனம் அவனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஐம்புலன்களின் வழியே நுகரும் பலவிதமான இன்பங்களில் ஈடுபட்டுப் பொழுதைக் கழிக்க மனமே தூண்டுகிறது. அத்தூண்டுதலுக்கு அடிமையாவோர் தம் லக்ஷியங்களிலிருந்து தம்மையறியாமலே விலகி இன்பநாட்டத்தில் ஈடுபட்டுத் தம் பொன்னான காலத்தை வீணடித்துப் பிற்காலத்தில் வருந்துவது நிச்சயம். ஒரு குரங்கு எவ்வாறு மரத்தின் கிளைகளிடையேயும் மரங்களிடையேயும் தாவுகிறதோ அதைப் போலவே மனம் ஆசைகளின் வயப்பட்டு ஒரு நிலையில் நிற்காமல் தாவிடும். ஒரு குரங்கு எவ்வாறு மரத்திலிருக்கும் பழங்கள்...

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 7

Image
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  பதிவு 9 பாடல் 7 7 – உனை ஏமாற்றி ஓடாது உளத்தின் மேல் உறுதியாய் இருப்பாய் அருணாசலா! (அ) பக்தன் என்னதான் இறைவன்மீது அன்பு வைத்தாலும், அவனது இந்திரியங்கள் அவனை விடுமா?  வேறு விஷயங்களில் இழுத்துச்செல்லுமே!  காற்றில் ஓடும் காகிதத்தின் மீது ஒரு கனமான பொருளை வைத்தால் அது ஓடாதல்லவா?  அதுபோல, ‘என் மனத்தில் வந்து உறுதியாக அமர்ந்துகொள்’ என்று சிவனை வேண்டுகிறார் ரமணர் இல்லாவிட்டால் என் மனம் உன்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிடும்,  ஊரில் எங்கும் சுற்றித் திரியும், அப்படி நிகழாதபடி கருணைகாட்டி என்னைக் காத்திடுவாய்!’ இங்கே பாலமுரளி பாடிய ஒரு பாடல் ராமனரின் மனதை அப்படியே பிரதிபலிப்பதைப் போல் உள்ளது.  மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே   ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி  காரியம் தவறானால் கண்களில் நீராகி மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே மனசாட்சியே ரகசியச்சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ  சோதனைக்களம் அல்லவா? நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா? ஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாய...