Posts

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 6

Image
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  பதிவு 8 பாடல் 6 6 – ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய் இதுவோ உனது அருள் அருணாசலா! (அ) ஈன்றிடும் அன்னையின் பெரிதருள் புரிவோய் இதுவோ உனது அருள் அருணாசலா! ரமணர் ஏன் அருணாசலர் மீது இத்துணைப் பிரியத்துடன் இருக்கவேண்டும்? ஒரே காரணம்தான், அவன் தாயைவிடப் பெரிய அருள்புரிகிறானே, வேறென்ன வேண்டும்? பிரசவ வேதனையில் ஒரு பெண் துடித்து க்கொண்டிருக்கும் வேளையில் தன் தாய் அருகில் இல்லையே என்ற மனவருத்தம் காவிரியில் வெள்ளமாக பொங்கிக்கொண்டு வந்தது அந்த பெண்ணிற்கு ...  அம்மா என்று ஒருத்தி அருகில் இருக்க வேண்டும் அந்த தருணத்தில் என்று எல்லா பெண்களுக்கும் ஆசை இருக்கும் ... பிரசவ வேதனை ஒன்றுமே இல்லை என்று ஆகி விடும் ஒரு அன்னை அருகில் இருக்கும்போது என்று உணர்வாள் எந்த பெண்ணும் ... அம்மா அம்மா எங்கே அம்மா இருக்கே .... நீ சுமந்தாய் என்னை சிசுவாக சிசுவிற்கு ஒரு சிசு வரும் நேரம் அம்மா .... நீ இல்லை என்ற சோகம் என் சிசுவிற்கு புரிந்தால் வெளி வர மாட்டான் அம்மா ... கொடும் பாட்டித்தனை கண்ணால் பார்க்கேன் என்றே என் வயிறு தனை உதைப்பான் அம்மா .......

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 5

Image
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  பதிவு 7  பாடல் 5 5 – இப்பழி தப்பு, உனை ஏன் நினைப்பித்தாய் இனியார் விடுவார் அருணாசலா! (அ) இறைவா, இப்படி ஒரு பக்தனை நீ கைவிட்டாய் என்ற பழியிலிருந்து தப்பித்துக்கொள், என்னை நிரந்தரமாக உன்னுடன் சேர்த்துக்கொள்’ என்று கோரும் ரமணர், இனிமேல் நீ என்னை விட்டாலும், நான் உன்னை விடுவதாக இல்லை’ என்கிறார். இவன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறானே என்று நினைக்காதே, எல்லா வற்றுக்கும் காரணம் நீதான், நான் உன்னை நினைக்குமாறு செய்தவன் நீதானே? இதையேத் தான் மாணிக்க வாசகர் ... உன்னை சிக்கென (கெட்டியாக / உறுதியாக) பிடித்து கொண்டு விட்டேன் ... எனக்கு உன்னை விட்டால் யார் கதி? இனி என்னை விட்டு உன்னால் எங்கும் போக முடியாது ஈசனே என்கிறார் ... ரமணர் போன்றவர்களின் பக்தியில் பூர்ண சரணாகதி இருந்தது .. உரிமை இருந்தது ... அதிகாரம் இருந்தது ... நானே நீ, நீயே நான் என்று ஆகி விடும் போது அங்கே பயமோ, பணிவோ தேவை இல்லை ... உயர்ந்த பக்தி ஒன்றே வேண்டும்.

கண்ணனின் யசோதை 1

Image
கண்ணனின் யசோதை 1 ஆயர்பாடியே அமர்க்களப்பட்டது அன்று ... கண்ணனை காண வில்லை ... யசோதை கதறினாள் ..  ஓவ்வொரு வீடாக ஓடினாள் ... கண்டீரோ என் கண்ணனை ... கருமை நிறத்தவன்... கற்கண்டுக்குச்சுவை சேர்த்தவன் ...  இடையன் அவன் .. இடையில் வந்தவன் ... என் இடையில் இருந்தான் ... காணவில்லை கண்ணிருந்தும் ....  எல்லோரும் கை விரித்தனர் ... அங்கே பார்த்தாயோ இங்கே தேடினாயோ என்றே கேட்டனர் ...  தேடுவோர் குறைந்தனர் ... பாடுவோர் பறந்தனர் ... வேண்டுவோர் வேடிக்கை பார்த்தனர் .... வேத நாயகன் வர வில்லை .... சென்ற மாடுகள் திரும்பின ... கூட சென்ற நண்பர்கள் கூடிக்கொண்டு அழுதனர் ...  அண்ணன் பலராமன் ... கன்னங்கள் வீங்கியபடி சொன்னான் ... அம்மா இதோ வருகிறேன் என்றே சொன்னான் ... வரவில்லை அம்மா ...  எங்கும் தேடினோம் எதிலும் தேடினோம் காண வில்லை அம்மா ... வந்துவிடுவான்... மாயவன் அவன் ... கவலை வேண்டாம் என்றான் ...  யசோதை இன்னும் அழுதாள் ... இனியும் கண்ணீர் இல்லை என்றே .... யாரோ சொன்னார்கள் ... ராதையை கேட்டீர்களா கண்ணன் எங்கே என்றே .... ?  ராதை யா...

கோதை சொன்ன கீதை 12

Image
கோதை சொன்ன கீதை 12 அர்ச்சகர் கை நடுங்க கோதையிடம் இருந்து மாலையை பயபக்தியுடன்  வாங்கிக்கொண்டார் ...  விஷ்ணு சித்தர் மனம் பரிதவிக்க கண்ணனையும் கோதையையுமே பார்த்துக்கொண்டு நின்றார் ..  கண்ணன் வரும் வாயில் வெறும் காற்று தான் வந்தது ...  கோதை கண்ணா,  மணி வண்ணா உனை சேரும் நாள் வந்து விட்டது ... என்னையும் ஏற்றுக்கொண்டாயே பரந்தாமா என்று குளமான கண்களில் கண்ணனுடன் நீந்திக்கொண்டிருந்தாள் ... கண்ணனின் கழுத்தில் அணிவித்தார் கோதை சூடித்தந்த மாலை தனை .. 11 ஆழ்வார்கள் பாடிய மங்கலாசனம் கோதையுடன் சேர்ந்து அங்கே கோயில் மணி போல் ஒலித்தது ....  மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவளைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தை எய்து வித்த இருடீ கேசா முலையுணாயே. கண்ணன் மார்பில் கோதை தவழ்ந்தாள்.. பார்ப்போர் பரவசம் கொண்டனர் ...  உடைந்து போன புல்லாங்குழல் ஒன்று சேர்ந்து கண்ணனின் கீதத்தை கோயில் முழுதும் பரப்பிக்கொண்டிருந்தன ....  கீழே வி...

கோதை சொன்ன கீதை 11

Image
கோதை சொன்ன கீதை 11 கண்ணா இதோ உன் கோதை ... அவள் மாலையை மட்டும் அல்ல அவளையும் மாலையாக ஏற்றுக்கொள் ...  ஆண்டாள்! பெண்களின் திலகம்.  திருத்துழாய்ச் செடியின் கீழ்க்கிடந்த வைரத்துண்டு!  பெரியாழ்வாருக்குக் கிடைத்த பெருநிதியம்.  கவிஞனின் ரோஜாக்கனவுகள் கூடச் சில வேளைகளில் கலைந்து விடுவதுண்டு.  ஆனால், உள்ளத்தில் ஆழப்பதிந்த கண்ணன் என்னும் கனவு கலையவேயில்லை.  ஆண்டாள் கண்ணனுக்காகவே பிறந்த மானிடப் பிறவியா?  கண்ணனுக்காகவே சமைந்த மரகதச் சிலையா?  கண்ணனையே கரம் பற்றி வாழ்ந்த கற்பகப் பூங்கொம்பா?  ஒரு ஜீவாத்மாவின் பயணம் என்பது போல் இல்லாமல், கண்ணன் எனும் பரமாத்மாவுடனேயே கைகோத்துத் திரிந்தது ஆண்டாள் எனும் ஆத்மா! விண்ணை மண்ணுக்கு இழுத்து வருவது அதிசயம்.  கண்ணனைத் திருவில்லிபுத்தூருக்கே ஆண்டாள் வரச் செய்தது பேரதிசயம் புயலுடன் போராடித் தென்றலைக் கைப்பற்றுவதைப் போல் மானிடக் கனவுகளுடன் போராடி இறைமையைக் கைப்பற்றிய தமிழ்க்கொடி ஆண்டாள்.  கண்ணனைப் பற்றிய வண்ணக் கனவுகள்தாம் காமன் வழிபாடாய் நாச்சியார் திருமொழியின்...

கோதை சொன்ன கீதை 10

Image
கோதை சொன்ன கீதை 10 கோதை கேட்டாள் ... அப்பா என்ன நடந்தது ஆலயத்தில் ? ஏன் உங்கள் உடம்பு இப்படி கொதிக்கிறது ? நடுக்கம் இன்னும் நிற்க வில்லையே ....  அம்மா ... நீ தெய்வம் தாயே .. உன்னை சுட்ட வார்த்தைகள் திரும்பி வந்து என்னை தாக்குகிறது அம்மா ... என் சொற்களால் உன் உடம்பு நடுங்கியது ...  அந்த சொற்கள் திரும்பி வந்து  எனக்கு நடுக்கத்தை தருகிறது தாயே ... என் வினை என்னை சுடுகிறது ...  எவ்வளவு பாசுரங்கள் பாடியுள்ளேன் ... ஆனால் பக்தியில் முதிர்ச்சி வரவில்லையம்மா ...  என் பக்தியே உயர்ந்தது என்று சொல்லிக்கொண்டே ஒரு பூ நாகம் உள்ளே என் மனதில் நுழைவதை பார்க்க வில்லை தாயே ...  நீ புரிந்து கொண்ட அளவிற்கு கண்ணனை நான் புரிந்து கொள்ளாத பாவியாகி விட்டேன் ...  நான் உன் தந்தை என்று சொல்வதை விட நீ என் தாய் என்று சொன்னால் தான் புண்ணியம் ...  அப்பா ... ஒன்றுமே புரியவில்லை .. முதலில் கதருவதை நிறுத்துங்கள் ... வெளியே எல்லோரும் நம்மையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அம்மா .. புதிய மாலையுடன் கோயிலுக்குள் சென்றேன் ... அங்கே கனல் வீசும் கண்களு...

கோதை சொன்ன கீதை 9

Image
கோதை சொன்ன கீதை 9 கதறினார் விஷ்ணு சித்தர் ... கண்ணா இந்த புதிய மாலையை ஏற்றுக்கொள் .. திட்டிவிட்டேனே தவிர கோதை என் மகள் ... குழந்தை உள்ளம் ..  சதா உன் பெயரையே சொல்லும் மகளாக வளர்த்தேன் ... அதிக செல்லம் இன்று என்னையே பழி வாங்கி விட்டது ... மன்னித்து விடு கண்ணா ...  "புதியமாலை மட்டும் என் கழுத்தில் போடு என்ன செய்கிறேன் பார் ...  என்னை ஒருவன் திட்டினால் கூட மன்னிப்பேன் .. என் பக்தனை திட்டுபவர்களை மன்னிக்கவே மாட்டேன் ... " கண்ணன் பொருமிக்கொண்டிருந்தான் அங்கே ...  புதிய மாலை அந்த காலத்து திருமணப்பெண் போல் நாணி கோணி அச்சம் , மடம் கொண்டு கண்ணனிடம் சென்றது ... கண்ணன் கழுத்தில் போட்டார் அர்ச்சகர் ...  டமால் என்று சத்தம் .. மாலை உதிர்ந்து பூக்களாக எங்கும் சிதறி விழுந்தன ...  அவ்வளவு கோபம் கண்ணனுக்கு .... சில பூக்கள்  விஷ்ணு சித்தரின் முகத்தில் விழுந்து தங்கள் ஈரத்தை உமிழ்ந்தன ....  இப்படி ஒரு தெய்வ குற்றம் அந்த கோயிலில் இதுவரை நிகழ்ந்ததில்லை ... அர்ச்சகர் பலமுறை அத்திவரதரை தரிசித்தவர் ...  ஆனால் ஒரு முறை கூட வ...

கோதை சொன்ன கீதை 8

Image
கோதை சொன்ன கீதை 8 விஷ்ணு சித்தரின் கோபம் ஆதிஸேஷனாக படம் விரித்து ஆடியது .. கண்ணனும் கதி கலங்கிப்போனான்..  இவர் எப்படி தன் பக்தி மட்டுமே உயர்ந்தது பிறர் செய்வதில் குறை இருக்கிறது என்கிறார் ...  பெரியாழ்வர் என்பதால் பெரிய பெரிய வார்த்தைகளை உபயோகித்து விட்டாரே ...  என்னாலேயே தாங்க முடியவில்லை பாவம் என் கோதை எப்படி துடித்துப்போவாள்  ... கண்ணன் கழுத்தில் இருந்த துளசி மாலை கம்பளிப்பூச்சிகளாய் மாறி கண்ணனை குடைந்து கொண்டிருந்தன ...  அப்பா உங்களுடன் நானும் வருகிறேன் கோயிலுக்கு ... என் மாலையை அவன் ஏற்க வில்லை என்றால் போகட்டும் என் உயிர் அவன் காலடியில் ..  என்னை இன்னும் அப்பா என்று கூப்பிடாதே ... அப்பாவி நான் .. அப்பன் என் கண்ணனுக்கு ஒரு பாவியாகி விட்டேன் இன்று ...  கோதை கண்ணீர் பன்னீர் போல் அவள் அணிந்த மாலையின் மீது தெளித்தது ... கண்ணா கண்ணா என்ற வார்த்தைகள் அந்த மாலையில் கந்தம் போல் கலந்து நறுமணத்தை அள்ளி வீசியது ... விஷ்ணு சித்தர் கோயிலுக்குள் சென்று தடால் என்று விழுந்தார் ... தரை இரண்டாக பிளந்தது ...  கண்ணா ம...

கோதை சொன்ன கீதை 7

Image
கோதை சொன்ன கீதை 7 கண்ணா ... இதை நான்  வெறும் பூக்கள் உள்ள மாலையாய் பார்க்க வில்லை ..  நீ என் கழுத்தில் போட்ட மூன்று முடிச்சுகளாக பார்க்கிறேன் ...   கண்ணா இந்த பேதையை ஏற்றுக்கொள் ...  அப்பா வரும் சப்தம் கேட்டு மாலையை கழற்றி கூடையில் வைத்தாள் .. கோதை அணிந்ததனால் மாலையின் எடை கொஞ்சம் கூடியது...  கண்ணே ஆண்டாள் ! அந்த மாலையை கொடும்மா ... அரங்கனுக்கு சாத்தி விட்டு வருகிறேன் ....  அப்பா இன்று நானும் உங்களுடன் வரட்டுமா ...  நாளை அழைத்து செல்கிறேன் .. மாலை சாத்தும்  மாலை வந்து விட்டது ...  சரி அப்பா ... இதோ மாலை ...  எடுத்தார் மாலையை கண்ணனுக்கு மட்டுமே தெரிந்த கேசம் ஒன்று அன்று விஷ்ணு சித்தருக்கும் தெரிந்தது ...கண்களிலே ஈசன் வந்து அமர்ந்து கொண்டு தீப்பொறிகளை அனுப்பத் தொடங்கினான் ..  நரசிம்மர் அன்று தன் கோபம் அனைத்தையும் விஷ்ணு சித்தருக்கு தாரை வாத்து கொடுத்தார் ... கோதை  ... அவர் கத்தியது அண்ட சராசரமே கேட்டு நடுங்கியது...  இந்திரன் தன் இருக்க...

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 4

Image
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  பதிவு 6  பாடல் 4 4- ஆருக்கா எனை அண்டனை அகற்றிடில் அகிலம் பழித்திடும் அருணாசலா! (அ) நீ என்னை விட்டுவிட்டால், உலகம் உன்னைதான் பழிக்கும்’ என்கிறார்: அருணாசலா நீ தான் என்னை உன்னுடன் சேர்த்துக்கொண்டாய் - சும்மா சிவனே என்று இருந்த என்னை சிறை பிடித்து உன் மனதில் கொண்டு போய் வைத்துவிட்டாய் - சரி இந்த சிறைவாசம் எவ்வளவு நாட்களுக்கு? என்னை யாரும் ஜாமீனில் எடுக்க வர மாட்டார்கள் - அதனால் அவசரப்பட்டு என்னை உன் மன சிறையில் இருந்து விடுவித்து விடாதே - அப்படி ஏதாவது நீ செய்து விட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன் - இந்த உலகமே உன்னை பழிக்கும் படி செய்துவிடுவேன் அருணாசலா நான் பொல்லாதவன் என்று அந்த பொல்லாதவனுக்கே சவால் விடுகிறார் ரமணர்...

கோதை சொன்ன கீதை 6

Image
கோதை சொன்ன கீதை 6  "அம்மா ஆண்டாள் , கோதை கொஞ்சம் இங்கே வா ... இதோ இந்த மாலை அரங்கனுக்கு கட்டி வைத்துள்ளேன் ... " "யாரும் தொடாமல் பார்த்துக்கொள்... கொஞ்ச நேரத்தில் வந்து விடுகிறேன் ..."  "சரி அப்பா போய் வாருங்கள் .. கண்ணனின் மாலையை என் கண்கள் போல் பார்த்துக்கொள்கிறேன் ... " "கண்ணா இந்த பூக்கள் செய்த புண்ணியம் கூட நான் செய்யவில்லையா ?  அழகாக எல்லாம் கோபிகள் போல் ஒன்று சேர்ந்து மாலையாக உன் மேனியில் விழ போகிறதே ...  நானும் தானே என் தோழிகளை ஒன்று சேர்த்து ஒரு திருப்பாவை எனும் மாலையானேன் ...  வாரணம் ஆயிரம் கனா கண்டேன் ...  நான் எந்த வகையில் இந்த மாலையை விட தாழ்ந்து போனேன் கண்ணா ... காலை மாலை என்று பார்க்காமல் கண்ணா உன்னையே நினைக்கிறேனே ...   உன் மார்பை அலங்கரிக்க நான் துடிக்கிறேன்  ..  ஒரு பாம்பு செய்த புண்ணியம் நான் செய்ய வில்லையா ...  அதன் மேல் உறங்குகிறாயே   என் மடி மீது உறங்கக்கூடாதா ? கண்ணா உன் மேனியை தழுவும் இந்த மாலை என்னையும் கொஞ்சம் தழு...

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 3

Image
ரமணரின் ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  பதிவு 5 3 – அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய் அமர்வித்து என்கொல் அருணாசலா! (அ) பக்தரைத் தன்னோடு சேர்த்துக்கொள்ளும் இறைவன், அவர்களுடைய மனத்தினுள் நுழைகிறான், அங்கிருந்து அவர்களைச் சிறைப்பிடித்துக் கொண்டுவந்து, தன் மனத்தில் வைத்துக்கொள்கிறான். இந்த அதிசயத்தை வியக்கும் பாடல் இப்படிச் சொன்ன மறுகணம், அது நிரந்தரச் சிறையா அல்லது அதிலிருந்து தன்னை அவன் விடுவித்துவிடுவானா என்கிற எண்ணம் ரமணருக்கு வருகிறது, ‘நீ என்னை விட்டுவிட்டால், உலகம் உன்னைதான் பழிக்கும்’ என்கிறார்...

கோதை சொன்ன கீதை 5

Image
கோதை சொன்ன கீதை 5  சொல்லலாம் போதேஉன் நாமம்எல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் அல்லற் படாவண்ணங் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளி யானே! கோதை கனவிலும் கண்ணனை தேடினாள் ... நினைவிலும் அவனைத் தேடினாள் ...  கண்ணா உனை காணாமல் போவேனோ ...  உனக்கு அற்பணிக்காத இந்த அழகு எனக்கு எதற்கு கண்ணா .... ? கேள்விகள் கண்ணீரை வீடெங்கும் தெளித்து கோலம் போட்டன ...  மலர்கள் மாலைகளாகி கண்ணன் அவனை கட்டிப்போட்டன ...  தெருவில் யார் சென்றாலும் அது கண்ணனாக இருக்குமோ என்று ஓடி வந்து பார்ப்பாள் ...  பார்ப்பவருக்கு பேதையானாள் இந்த கோதை ...  பித்தா பிறை சூடி என்று சுந்தரர் பாடியதைப்போல் வரதா மறை சூடி என்று பாடினாள் ...  கண்ணன் வளர்ந்தது , மதுரா , துவாரகா வந்தது , மகா பாரதம் போரிட்டது எதுவுமே அவள் மனதில் அமர வில்லை ...  அவளுக்கு தெரிந்தது , புரிந்தது , அறிந்தது எல்லாமே ஆயர்பாடியில் ஓடி விளையாடும் யசோதயின் கண்ணன் மட்டுமே ... அப்பா அப்பா அதோ பார் கண்ணன் அந்த நிலவில் சென...

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பதிவு 4 பாடல் 2

Image
ரமணரின் ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  பதிவு 4 2 – அழகு சுந்தரம்போல் அகமும் நீயும் முற்று அபின்னமாய் இருப்போம் அருணாசலா! (அ) ரமணரின் தாயார் பெயர் அழகம்மை - தந்தையின் பெயர் சுந்தரம் -- தன் தந்தை தாயின் உயர்ந்த தாம்பத்தியத்தை அதைப்போல் ஒரு அன்னியோனத்தை ரமணர் வேறு எங்கும் பார்த்ததில்லை  ---அருணாசலா என் தாய் தந்தையர் எப்படி ஒன்றாக இருவர் அல்ல ஒருவராக வாழ்ந்தாரோ அதைப்போல் என் மனமும் நீயும் அபின்னமாய்         (ஒன்றாக ) இருப்போம் அருணாசலா 🙏 அழகு, சுந்தரம் என்ற இரு சொற்களும் வெவ்வேறாக இருந்தாலும், அவை குறிக்கும் பொருள் ஒன்றுதான். அதுபோல, அருணாசலா, நீயும் நானும் வெவ்வேறாகத் தோன்றினாலும், உண்மையில் ஒன்றே! இதே கருத்தை வலியுறுத்தும் இன்னொரு பாடலும் உண்டு. அதில், ‘நீ வேறு, நான் வேறு என்ற வித்தியாசமே இல்லாதபடி என்னை அணைத்துக்கொள், வாழ்வில் பேரானந்தத்தைப் பெருக்கு’ என்று வேண்டுகிறார் ரமணர்.

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பதிவு 3 பாடல் 1

Image
ரமணரின் ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1  பதிவு 3 1 – அருணாசலம் என அகமே நினைப்பவர் அகத்தை வேரறுப்பாய் அருணசலா! (அ) அருணாசலம் - இது ஒரு மலை அல்ல -- சிவமே   அமர்ந்திருக்கும் ஒரு இடம் நினைத்த மாத்திரத்தில்   முக்தி கிடைக்கும் --- சிவந்து நெருப்பாக இருந்த ஒரு மலை தன் உக்கிரகத்தை குறைத்துக்கொண்டு   கருணை மலையாக மாறியது ....  அதை மாற்றியவர் நம் ரமணர்  ஒருவர் ரமணரை தேடி திருவண்ணாமலைக்கு சென்றார் -  அங்கே ஒரு மரத்தடியில் ஒரு சித்தர்   போல் ஒருவர் அமர்ந்திருந்தார் -  அவரிடம் கேட்டார் --- ரமணர் எங்கே இருக்கிறார்?  அந்த சித்தர் கேட்டார் -  " ஓ அந்த கொலைகாரனைத் தேடுகிறாயா?    அசந்துபோய் விட்டார் அந்த வழிப்போக்கர் -  உலகமே வணங்கும் ஒரு பெரிய பகவானை இவர் போய் கொலைகாரன் என்கிறாரே --- இவருக்கு என்ன பயித்தியமா? " என்று நினைத்தார் -  பிறகுதான் அவருக்கு விளங்கியது --  ரமணர், தான் என்று வரும் குணத்தை உடையவர்களின் மமதையை கொல்கிறார் -  அதனால் அந்த சித்தர் அவரை கொலைகாரன் ...